Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ellaigalatra Vaanam
Ellaigalatra Vaanam
Ellaigalatra Vaanam
Ebook99 pages38 minutes

Ellaigalatra Vaanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு பெண் வீட்டுக்கு ஒரு சமையல்காரியாகவும் குழந்தை பெற்றுத் தரும் மெஷின் ஆகவும் மாமியார் மாமியாரை கவனிக்கும் ஒரு வேலைக்காரியாகவும் தான் இருக்க வேண்டும். அவளுக்கு என்று தன்மானமோ, சுயமரியாதையோ கூடாது என்று நினைப்பவர்கள் தான் அதிகம். இதில் கணவன் தனக்கு துரோகம் செய்து விட்டான் என்று அறிந்து, அவனை உதறி, விவாகரத்து வாங்கி துணிந்து நிற்கும் மங்கை பலருடைய பேச்சுக்கும் ஏளனத்திற்கும் ஆளாகிறாள்.

உனக்கு என்ன தெரியும் என்ற கணவரின் பேச்சை உதறித் தள்ளி வாழ்க்கையில் உயர்கிறாள். அப்பா மாதிரி உன்னிடம் காசு இல்லை நீ எனக்கு என்ன செய்ய முடியும் என்று விவாகரத்தின் போது அப்பாவிடமே தங்கி விடுகிறாள் பெண் அபர்ணா. மகன் மட்டும் இவளுடன் வருகிறான். தறி கெட்டுப் போன பெண் அபர்ணா வாழ்க்கையில் வழுக்கி விழுந்த சமயத்தில், அவள் காதலனின் தங்கையை எழில் திருமணம் செய்து கொண்டால் அபர்ணாவையும் ஏற்றுக் கொள்வதாக காதலன் வீடு சொல்ல மறுத்து விடுகிறாள் மங்கை.

நீ செஞ்சது தப்பு. உன்னுடைய ஒழுக்கம் கெட்ட நடவடிக்கைக்கு நீ தான் பதில் சொல்ல வேண்டுமே தவிர இன்னொருவர் வாழ்க்கையை அழிக்கும் உரிமை உனக்கு கிடையாது என்று கூறி விடுகிறாள். பெண் வாழ்க்கை திருந்தியதா? எழில் ஆசைப்பட்ட பெண்ணை மணம் செய்து கொடுத்தாளா? மங்கைக்கு உதவியாக இருந்த ஜெகா, மேனகாவுடன் சேர்ந்து என்னென்ன சாதனைகள் செய்தாள் என்று எல்லைகளற்ற வானம் கதையில் தெரிந்து கொள்ளலாம்.

எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு பெண் நியாயம் இல்லாத, ஒழுக்கக் குறைவான விஷயங்களை செய்யக்கூடாது. தன்மானமும் சுயமரியாதையும் தைரியமும் மிக முக்கியம் என்பதை விளக்குகிறாள் மங்கை.

Languageதமிழ்
Release dateDec 30, 2023
ISBN6580101010600
Ellaigalatra Vaanam

Read more from Ga Prabha

Related to Ellaigalatra Vaanam

Related ebooks

Reviews for Ellaigalatra Vaanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ellaigalatra Vaanam - GA Prabha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    எல்லைகளற்ற வானம்

    Ellaigalatra Vaanam

    Author:

    ஜி.ஏ.பிரபா

    GA Prabha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    குளிர் நிறைந்த மார்கழி மாதம்.

    பனி சாலை எங்கும் பூமழை தூவியிருந்தது. கால் வைக்கும் இடமெல்லாம் ஜில் என்று பனியின் குளுமை உள்ளே ஊடுருவியது. குளிர் எலும்புகளை நடுங்க வைத்தது.

    தெருவின் இருபுறங்களிலும் மரங்கள் பனிப் போர்வை போர்த்தியிருந்தது. கொன்றை, வாதநாராயணப் பூக்கள் நிறம் தெரியாமல் அதிகாலை இருட்டில் பனியை மீறியும் ஜொலித்தது. பனி விலகாத அந்த அதிகாலை இருட்டிலும் வீடுகளில் விளக்கு எரிந்தது.

    "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்.

    நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்"

    திருப்பாவையை மெதுவாகப் பாடியபடி மங்கை நடந்து கொண்டிருந்தாள்.

    அந்த அரை இருட்டிலும் கையில் எண்ணெய்க் கிண்ணம், பிரசாதங்களுடன் பெண்கள் கோவில் நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். வேகமாக ஒரு பெண் டூ வீலரில் பறந்தாள். கோவிலுக்குப் போய் விட்டு அலுவலகத்துக்கோ, கல்லூரிக்கோச் செல்ல வேண்டி இருக்கும்.

    ஆனால் மங்கை நிதானமாக நடந்தாள்.

    இப்படிப் பரபரப்பு இல்லாமல், அமைதியாக சுற்றுப்புறத்தை வேடிக்கைப் பார்த்தபடிச் செல்வது பிடிக்கும். இந்த அமைதி, நிதானம் புத்தியைத் தெளிவாக சிந்திக்க வைக்கிறது. தெளிவான முடிவே மன நிறைவைத் தந்து விடுகிறது.

    சில விஷயங்களை மாற்ற முடியாது எனும்போது, அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டாம் என்றுதான் மங்கை நினைப்பாள். எல்லாப் பிரச்சினைகளையும் விட இயற்கை அழகானது. அதை ரசிக்கலாம். மற்ற எல்லாமே கடந்து போகக் கூடியது.

    மங்கை தன்னைச் சுற்றியும் வேடிக்கை பார்த்தபடி நடந்தாள். வானம் மெல்ல நிறம் மாறிக் கொண்டிருந்தது தலைக்குப் பூசிய சாயம் மறைவது போல். வீடுகளில் அழகான கோலம் மலர்ந்து கொண்டிருந்தது. தாமரை, கிளி, மயில் என்று வித விதமாக தெருவை அடைத்துக் கோலம்.

    பளீர் வெண்மையில் கோலமும், நடுவில் பரங்கிப் பூவும் வைத்தக் கோலங்களைப் பார்க்கும் போதே மனமும் அதுபோல் மலர்ந்து விடுகிறது.

    அபார்ட்மென்ட் பெருகி விட்ட இந்தக் காலத்தில், இப்படிக் கோலமும், தனி வீடுகளையும் பார்ப்பது ஆசையாக இருக்கிறது. மங்கை இருப்பது நாலு வீடுகள் கொண்ட ஒரு காம்பவுண்டில். கீழே ஒரு வீட்டில் மங்கையும், மகன் எழிலும். மற்றொரு வீட்டில் அண்ணா. மேல் வீட்டில் இரண்டு குடும்பங்கள். நாலு வீடும் அண்ணாவுடையதுதான்.

    அண்ணாவை நினைக்கும்போது மனது நெகிழ்ந்தது. அவன் அன்ப எப்படித் திருப்பிக் கொடுப்பது. அன்பு என்பது திருப்பி அளிக்கக் கூடியதா? அப்பாவை விட மேலானவன். அப்பா இல்லாத குறையை தீர்ப்பவன். அண்ணி அதற்கும் மேல். அன்பு என்பதைத் தவிர எதுவும் தெரியாதவர்கள்.

    இல்லை என்றால் என்ன செய்வது என்று திகைத்து நின்ற சமயத்தில், தைரியமாக நான் இருக்கிறேன் வா என்று அண்ணாவால் அழைத்திருக்க முடியாது. அவளும் வந்திருக்க மாட்டாள்.

    ஆஹா என்ன நடை, என்ன நடை - பின்னால் குரல் கேட்டது. சீனிவாசன் சார். ஒய்வு பெற்ற வங்கி மேனேஜர்.

    பாட்டை மாத்திப் பாடறீங்க.

    காலைல பிரசாதம் வாங்கப் போற நேரத்துல மெல்ல நட, மெல்ல நடன்னு பாட முடியுமா?

    எவ்வளவு வேகமாப் போனாலும் கிடைக்கற பிரசாதம்தான் கிடைக்கும்.

    அம்மாடி தத்துவம் பேசாதே. அம்மு பாட்டி எனக்கு மிளகு பொங்கல் தனியா எடுத்து வைக்கிறேன்னு சொல்லியிருக்கா.

    இதான் டிபனா?

    சேச்சே. இது கொறிக்க. வீட்டுல தனியா ஆகுது.

    இன்னைக்கு என்ன பாகற்காய் அல்வாவா?

    உன்னை நான் அப்புறமா வந்து கவனிச்சுக்கறேன்.- சீனிவாசன் வேகமாய்க் கடந்து போனார். சிரித்தபடி நடந்தாள் மங்கை.

    தெருவின் நீள அகலம் எவ்வளவு? சுப்பு தாத்தா.

    நீளம் ஒரு கிலோமீட்டர், அகலம் அம்பது அடி?

    வெரிகுட். காவேரிக்கரைன்னு சொல்றே.

    காவேரித் தண்ணீர்ல ஊறின உடம்பு.

    அதான் திமிர், கொழுப்பு அதிகமா இருக்கு.

    அதை ஏன் திமிர்னு சொல்றீங்க? தன்மானம்.

    என்னவோ. அதனால்தான் இருபத்தி அஞ்சு வருஷம் கழிச்சு டைவர்ஸ் வாங்குறியா?- சட்டென்று ஊசி குத்தினார்.

    தாத்தா, உங்க மூக்கை கொஞ்சம் தள்ளி வைங்க. என் உரிமைல தலையிட உங்களுக்கு அதிகாரம் கிடையாது.

    என்ன உரிமை? பொண்ணுகளுக்கு அடக்கம், பொறுமை வேணும். இருபத்தி ரெண்டு வயசுல ஒரு பொண்ணு இருக்கா. இருபத்தி அஞ்சு வயசுல பையன் இருக்கான். இப்போ டைவர்ஸ் தேவையா?

    மங்கை அவரை நில்லுங்க என்று நிறுத்தினாள்.

    இதே கேள்வியைப் போய் மிஸ்டர் மாதவன் கிட்ட கேளுங்க. ஏன்னா டைவர்ஸ் வேணும்னு கேட்டது அவர்தான். அடுத்து, உங்க வீட்டுல உங்க பொண்ணு வந்து உக்கார்ந்திருக்காள்ல? அவகிட்டப் போய், உன் புருஷன் எத்தனை பெண்களை வச்சிருந்தாலும், அவன் கூடத்தான் நீ வாழணும்னு அட்வைஸ் பண்ணுங்க. சரியா?

    தாத்தாவின் முகம் சுருங்கியது. சட்டென்று திரும்பிப் பார்க்காமல், நடந்தார்.

    இவ்வளவு பொறுமை கூடாது- பின்னால் பவானி வந்து இணைந்து கொண்டாள்.

    கிழத்துக்கு என்ன ஒரு திமிர். எல்லா அட்வைசும் பெண்களுக்குத்தானா? தப்பு பண்றவன் கிட்டப் போய்ப் பேசச் சொல்லு. இதே வந்து வீட்டில் என்கிட்டே வழியுது.- பவானி வெறுப்புடன் பேசினாள்.

    மங்கை பதில் சொல்லாமல் நடந்தாள். எல்லா மனிதர்களும் ஒன்று போல்

    Enjoying the preview?
    Page 1 of 1