Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மனம் விரும்புதே உன்னை...
மனம் விரும்புதே உன்னை...
மனம் விரும்புதே உன்னை...
Ebook112 pages37 minutes

மனம் விரும்புதே உன்னை...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெற்றவர்கள் கிளம்பிப் போன பிறகு அவள் பேப்பரைக் கவனமாக ஒரு தடவை படித்த விட்டுத் தன்னுடைய மேக்ரோ எகனாமிக்ஸை எடுத்துக் கொண்டாள்.
 வேகமாகப் பக்கங்களைப்பு ரட்டியபடி எதையும் விடாமல் பார்த்துக்கொண்டாள்.
 'லெனின் அண்ட் ஹிஸ் கான்ட்ரிப்யூஷன் டு ரிவல்யூஷனரி மூவ்மென்ட்' என்கிற தலைப்பில் இருந்த அத்தியாயத்தை இன்னொரு தடவை மனதில் வாங்கிக் கொண்டாள்.
 'ஹ்யுமன் ரிஸோர்ஸ் பேஸ்' பாடத்தில் இருந்த அட்டவணையைப் பார்க்காமல் சொல்லிப் பார்த்துக்கொண்டாள். 'டைவர்ஸிஃபையிங் அவர் அக்ரிகல்ச்சர்' தலைப்பில் இருந்த பாடத்தைப் படிக்கத் தொடங்கிய போது தொலைபேசி அடித்தது.
 "நீ படிம்மா மனோ... நான் எடுக்கறேன்..." சீதம்மா ஈரக்கையைத் துணியால் துடைத்தபடி விரைந்து வந்தாள்.
 "ஹலோ யாரு? ராஜசேகரய்யா வீடு இது," என்றாள் மெல்ல.
 "நான்தான் மாமி பூங்குழலி பேசறேன். மனோ இருக்காளா?" என்றது எதிர்ப்பெண் குரல்.
 "பூங்குழலியா? சௌக்கியமாம்மா? அப்பா, அம்மா எல்லாரும் நன்னா இருக்காளா?"
 "எல்லாரும் ஃபைன் மாமி... நீங்க?"
 "கல்யாணி மாதிரி ராஜசேகரய்யா மாதிரி மனோ மாதிரி பெரிய மனுஷாளாத்துல சமைச்சுப் போடறது என் பாக்கியமில்லையோ? ரொம்ப நன்ன இருக்கேன் பூங்குழலி. இரு மனோகிட்ட தரேன்."
 கார்ட்லெஸ்ஸை எடுத்து வந்து நீட்டியபடி புன்னகையுடன் நின்ற சீதம்மாவை அவள் செல்லக் கோபத்துடன் பார்த்தாள்சமையல் கலை என்கிற அற்புதமான தொழில் உங்கள் கையில் இருக்கிறது. உழைத்துச் சாப்பிடுகிறீர்கள். அண்டிப் பிழைப்பது போல் எதற்காக எங்களையெல்லாம் தூக்கி வைத்துப் பேசுகிறீர்கள்?' என்று பார்வையாலேயே அவள் சொன்னதைப் புரிந்து கொண்டு மாமி உள்ளே போனாள்...
 'ஹலோ பூ! ஹவ் ஆர் யு..." என்றாள் ஸோபாவில் சாய்ந்து.
 "சிவியரா படிச்சிட்டிருக்கிற நேரத்துல என்ன போன் இது? முடிச்சுட்டியா எல்லா சாப்ட்டரையும்?"
 "இல்லடி மனோ, இனிமேத்தான் ரிவிஷனே ஆரம்பிக்கணும்."
 "வாட்..." என்றாள் திகைத்துப்போய்.
 "முன்னூறு பக்கம்! இனிமேத்தான் ஆரம்பிக்கப் போறியா? என்னடி சொல்றே பூக்காரி?"
 "உண்மையைச் சொல்றேன்டி மனோ. கிண்டல் பண்ணக் கூடாது."
 "கிண்டலா? என்னடி சொல்றே பூ?"
 "இப்பதான்டி மனோ ஒரு கும்பல் வந்துட்டுப் போகுது, என்னைப் பொண்ணு பார்த்துட்டு..."
 "என்னது?"
 "நம்ப முடியலே இல்லே? எனக்குந்தான்டி மனோ..."
 பூங்குழலியின் குரலில் புதிதாக ஒரு கிறக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.
 "முகேஷ்னு பேரு. கனடால கெமிக்கல் இன்ஜினீயர். முக்கியமா எங்கப்பாவோட தூரத்து அக்கா பையன். ஷேக்ஸ்பியர் சொல்வாரே, சென்றேன் கண்டேன் வென்றேன்னு. அதே மாதிரி ஆகிப் போச்சுடி மனோ. திடீர்னு வந்தார். பார்த்தார். தலையாட்டிட்டார். ஐப்பசியில் கல்யாணம்னு டேட் கூட ஃபிக்ஸ் பண்ணியாச்சு. மொதல்ல உனக்குதான் சொல்றேன்."
 கதை கேட்பது போலத்தான் இருந்ததே தவிர கொஞ்சம் கூட நம்பமுடியவில்லை. நேற்று வரை ஒன்றாக வளர்ந்து, விளையாடி, படித்து, பரீட்சை எழுதியவள் இப்போது மணமகளாக நிற்கிறாள். அதுவும் கொஞ்சம் கூட எதிர் பார்க்காத நாளில்! கடைசிப் பரீட்சையை இன்னும் பாக்கி வைத்துக் கொண்டு!"என்ன மனோ! எதுவுமே பேச மாட்டேங்கறே! டெல் மீ ஸம்திங் மனோ..."
 "உனக்கு இஷ்டம்தானா பூங்குழலி?"
 "தெரியலே மனோ..."
 "அப்படின்னா?"
 "அப்பா பத்திதான் தெரியுமே உனக்கு. சி.எம். கூட அப்பாகிட்ட ஆர்க்யுமென்ட் வெச்சுக்க மாட்டாரே. அவ்வளவு கண்டிப்பு. பொதுப்பணித்துறை அமைச்சர்க்கு செக்ரெட்டேரியட் எப்படி நடுங்குமோ எங்க வீடும் அப்படித்தான் மனோ. அப்பா போட்ட கட்டளை இது. பரீட்சை முடிஞ்சப்புறம் முகூர்த்தம்னு சொன்னாரே. அதுவே எனக்குக் கெடைச்ச கன்செஷன்தான். தவிர..." பூங்குழலி நிறுத்தினாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 6, 2023
ISBN9798223207559
மனம் விரும்புதே உன்னை...

Read more from V.Usha

Related to மனம் விரும்புதே உன்னை...

Related ebooks

Related categories

Reviews for மனம் விரும்புதே உன்னை...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மனம் விரும்புதே உன்னை... - V.Usha

    1

    மனோ கண் விழித்தாள்.

    தன் எதிரில் சுவர் ஓவியம் பளிச்சிட்டது. நுரை பொங்க இறங்கி ஓடிவரும் காட்டருவி...

    வழுவழுப்பான பாறைகளில் மறைந்தும் மறையாமலும் தெரியும் சூரிய வெளிச்சம். இளம் வெளிர் வர்ண மலர்களைத் தழுவிக் கொண்டு ஓடும் காட்டாறு.

    இயற்கை மனிதனுக்கு அளித்த அழகுக் குவியலைப் பார்த்தபடி எழுந்து மனத்திற்குள் நினைத்துக் கொண்டாள்.

    ‘லீவு விடும்போதெல்லாம் கோவில், குளம் என்று யாத்திரை கிளம்பி விடுகிற அப்பா அம்மாவிடம் இந்தத் தடவை கண்டிப்பாகச் சொல்லிவிட வேண்டும். இறுதியாண்டுப் பரீட்சை முடிந்த அடுத்த நாளே மலைப்பிரதேசம் ஒன்றிற்குக் கிளம்பி விட வேண்டும். பனி நிறைந்த மலைப் பிரதேசம் என்றால் இன்னும் பிரமாதம். பாஷை தெரியாது, புது உணவு ஒத்துக் கொள்ளாது. குளிர் தாங்காது என்று வழக்கம்போல அப்பா சாக்குச் சொல்ல,. அம்மா தலையாட்டுவாள். இருபது வயது இளம்பெண் நான் இருக்கிறேன். இந்தியில் ராஷ்ட்ரபாஷா முடித்திருக்கிறேன். ஜெர்கின், உல்லன் குல்லா என்று சமாளித்து விடலாம். கிளம்புங்கள் முதலில் என்று ஒரேயடியாய்ச் சாதித்துவிட வேண்டியதுதான்.

    தன் அறையின் வலது பக்கக் குளியலறையை நோக்கி நகர்ந்த போது ஜன்னல் வழியாகத் தோட்டம் தெரிந்தது.

    பாரிஜாத மரம் தான் முதலில் கண்ணில் பட்டது. அப்படியே நின்றாள் மனோ.

    தரையே தெரியாதபடி மலர்களைக் கொட்டி வெள்ளையும் சிவப்புமான காம்பினேஷனில் பூப்படுக்கை விரித்து நாணிக் கோணி நின்றது மரம்.

    வாவ்... வாட் எப்யூட்டி...! வகை பால்

    அவள் வியந்து போய் வாய்விட்டுச் சொன்னாள்.

    ‘என்னையும் கவனியேன் மனோ!’ என்பது போல் வலது பக்க ரோஜாப் பாத்திகளிலிருந்து பெங்களூர் ரோஜாக்கள் மஞ்சளிலும் செக்கச்செவேல் நிறத்திலும் ஆடி ஆடி அசைந்தபடி மாடியையே பார்த்தன. பெங்களூரிலிருந்து பிரத்யேகமாகத் தருவிக்கப்பட்ட செம்மண்ணை மெல்ல மெல்லச் சரித்தபடி கூர்க்கா தேஷ்முக் தரையைச் சமன்படுத்திக் கொண்டிருக்க, ‘எல்லாம் இந்தப் பூமியே போதும் எங்களுக்கு!’ என்பது போலப் பன்னீர் ரோஜாக்கள் மண்ணின் மகள்களாக அழகு கூட்டிக் கொண்டிருந்தன.

    மாமரத்துக்கிளையிலிருந்து திடீரென்று ஒரு ஜோடிக் கிளிகள் சேர்ந்தாற்போல் பறந்து போய்த் தேக்குமரத்துப் பெரிய இலைகள் மேல் உட்கார, ஏற்கெனவே அங்கே இருந்த கறுப்புக் குயில் ஒன்று இசைத்தபடி வானில் பறந்தது

    தாங்க் யு மை டியர் அப்பா அண்ட் அம்மா... என்று எப்போதும் போல் அவள் சொல்லிக் கொண்டாள்.

    இயந்திர மயமாகிவிட்ட இருபதாம் நூற்றாண்டின் பரபரப்பான சென்னையில் வாழ வேண்டி இருந்தாலும், சற்றே தள்ளி நகர்ப்புறத்தில் இப்படிப் பதினைந்து கிரவுண்டில் பங்களா கட்டியதற்கும், பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்களுக்கும் முத்துப் போல நிலாவொளிக்கும் கானம் பாடும் பறவைகளுக்கும் குறைவில்லாத கவிதைத்தனத்தைக் கொடுத்ததற்கும் நன்றி...

    கொஞ்சும் மைனாக்களே, கொஞ்சும் மைனாக்களே... என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்... என்று அவள் மிகவிரும்பும் பாடலைப் பாடியபடி வேலைகளை முடித்தாள். அறையை விட்டு வெளியே வந்து கீழே இறங்கி ஹாலை அடையும் போது கவனித்தாள்.

    பரபரப்பாக அப்பாவும் அம்மாவும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். தங்கச் சரிகை போட்ட பட்டுப் புடவை, பட்டு ரவிக்கை, காசுமாலை, கல்லட்டிகை என்று அம்மாவும், பட்டு வேஷ்டி, பட்டு ஜிப்பா என்று அப்பாவும் பளபளப்பாக இருப்பதைப் பார்த்தபடி அவள் அப்படியே நின்றாள்.

    அட, எழுந்துட்டியாம்மா மனோ!... வெரி குட் மார்னிங்!... அப்பா சின்னப் பையன் மாதிரி சல்யூட் அடித்துச் சிரித்தார்.

    நானே வந்து எழுப்பலாம்னு இருந்தேன். கல்யாணத்துக்குப் போகணுமே, பெரிய இடத்துக் கல்யாணமாச்சே! முகூர்த்த நேரத்துக்கு முன்னாடியே போகணுமே... காபி குடிச்சியா மனோ? அம்மா அவள் தலையைக் கோதியபடி கேட்டாள்...

    இதோ காபி... சீதம்மா ட்ரேயில் காபி கோப்பைகளை எடுத்து வந்து நீட்டிவிட்டு, மரியாதையுடன் பின்னால் தள்ளி நின்றபடி கேட்டாள்.

    மனோவுக்குச் சமைக்கணுமா? இல்லே... குழந்தையும் கல்யாணத்துக்கு வராளா?

    இல்லை மாமி... மனோவைக் கூட்டிட்டுப் போகலே... உங்களுக்கும் அவளுக்கும் சமையலை முடிச்சுக்குங்க. என்னம்மா மனோ, உனக்குப் பிடிச்ச வாழைக்காய்ப் பொடிமாசும், கீரைக் குழம்பும் பண்ணச் சொல்லட்டுமா?... தேஷ்முக் காலைலதான் பறிச்சுக் கொடுத்தான், தோட்டத்துல இருந்து... அம்மா செல்லமாக மகளின் கைவிரல்களை நீவினாள். கெட்டியாக

    மாமிக்கு எது ஈசியோ, அது பண்ணட்டும் அம்மா... என்று அவள் சொல்லிவிட்டு, பேப்பரைக் கையில் எடுத்துக் கொள்ள, சீதம்மா பாசத்துடன் பார்த்தபடி நகர்ந்தாள்.

    இதுதான் என் பொண்ணுங்கறது... அப்பா பெருமிதத்துடன் அவளைப் பார்த்தார்.

    எவ்வளவு சிம்பிள் பார்த்தியா கல்யாணி! அவியல் பண்ணு, அல்வா பண்ணுன்னு ஒரு நாளாவது கலாட்டா பண்ணியிருக்காளா! எவன் கொடுத்து வெச்சிருக்கானோ இப்படி ஒரு ரத்தினம் மாதிரி பொண்டாட்டி கெடைக்க...

    இன்னிக்கே பார்த்துடலாமே அவனை... நீங்கதான் வேண்டாம்னு பிடிவாதமா நிக்கறீங்க...

    என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பது போல அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

    ஆமா... வேண்டாங்கறேன்... ஏன்?... பெரிய இடத்துக் கல்யாணம்... பெரிய குடும்பங்கள் வரப் போற இடம். நாம மொதல்ல பையன்களைப் பார்க்கலாமே. யாரை ரொம்ப பிடிச்சிருக்கோ மேலப்ரொஸீட் பண்ணலாமே... அதை விட்டுட்டு மனோவை அழைச்சுட்டுப் போனா உடனே கியூல வந்து நின்னுடுவாங்களே... சரியா எடை போட முடியாம போயிடுமே... மொதல்ல நாம ஒரு பையனை செலக்ட் பண்ணுவோம் கல்யாணி. அப்புறம் பார்க்கலாம். என்ன சொல்றேம்மா மனோ?

    ஒண்ணும் சொல்லலேப்பா... நாளைக்குக் கடைசிப் பரீட்சை. கொஞ்சம் ரிவிஷன் பண்ண வேண்டியதிருக்கு... நாளைக்குச் சாயங்காலம் வந்து சொல்றேன்...

    என்னம்மா?

    லீவு விட்டதும் காஷ்மீருக்குப் போகணும்...

    என்னது? அப்பா திடுக்கிட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1