Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nagulanin Maathangi
Nagulanin Maathangi
Nagulanin Maathangi
Ebook173 pages1 hour

Nagulanin Maathangi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Mekala Chitravel
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466879
Nagulanin Maathangi

Read more from Mekala Chitravel

Related authors

Related to Nagulanin Maathangi

Related ebooks

Reviews for Nagulanin Maathangi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nagulanin Maathangi - Mekala Chitravel

    1

    வானக் குளத்தில் நீந்தி விளையாட நட்சத்திரக் குழந்தைகள் மேக வீடுகளிலிருந்து வெளிவரக் கிளம்பிய பின்மாலைப் பொழுது.

    பங்களாவின் வெளி வராந்தாவில் உட்கார்ந்திருந்த தரகர் ஒருமுறை சுற்றிப் பார்த்தார். ஆடம்பரமாக அதே நேரம் கண்களை உறுத்தாத வகையில் இருந்தது பங்களா. சுற்றிலும் அழகழகான பூச்செடிகள். மல்லிகைக் கொடிகள். கேட்டின் அருகில் இரண்டுபுறமும் மகிழம்பூமரங்கள். பின்பக்கம் எலுமிச்சை, மாமரங்கள், வாழை, தென்னை என்று மரங்களின் வரிசை. வீட்டுத் தேவைக்கு முட்டைக் கோழிகளும் பால் மாடும் இருந்தன. பணக்கார வீடுகளின் அடையாளமான பெரிய அல்சேஷன் நாய்கள் இரண்டு உண்டு. ஒரு காரும் வேனும் நின்றிருந்தன.

    ‘ஒருகாலத்தில் இந்த வீட்டுத் தாயாரம்மா இருந்தநிலை என்ன? அவளுக்கு வந்த புது வாழ்வு என்ன? எதுக்கும் அதிர்ஷ்டம் வேணுமில்லே? நமக்குதான் மழை பெய்தா உப்புவிக்கவும், காத்தாடிச்சா மாவு விக்கவுமில்லை விதிச்சிருக்கு? அப்புறம் பணமாவது பங்களாவாவது?’ பெருமூச்சுடன் தரகர் நிமிரவும், வைரங்கள் டாலடிக்க தாயாராம்மா வரவும் சரியாக இருந்தது. தரகர் மரியாதையாக எழுந்தார்.

    உட்காரு... உட்காரு... இதெல்லாம் மட்டும் சரியா செய்வே... இப்பவாவது நான் சொன்னபடி பொண்ணுங்க படம் கொண்டு வந்தியா? இல்லை... போன தரமாட்டம் பணக்காரி, படிச்சவ... வேலைக்குப் போறவள்னு ஒரு குப்பைக் குவியலை வாரி தூக்கிட்டு வந்திருக்கியா? தாயாரம்மா உறுமினாள்.

    இல்லைம்மா இல்லை. போனதரம் செய்த தப்பை திரும்பவும் செய்வேனா? நீங்க சொன்னதுபடியே கொண்டு வந்திருக்கேன்... அம்மா என்னை மன்னிக்கணும்... ஒரு சின்ன சந்தேகம் கேக்கலாமா? தரகர் தயங்கினார்.

    கேக்கறதை சீக்கிரம் கேட்டுட்டு கிளம்பற வேலையைப்பாரு. தம்பி இன்னிக்கு போன் பண்ற நாளு. தாயாரம்மா சிடுசிடுத்தாள்.

    தரகர் வார்த்தைகளை கவனமாக பேசினார். ஏதாவது தப்பாக இருந்து விட்டால் தாயாரம்மா தயிர் கடைந்து விடுவாள்.

    இல்லைம்மா... நம்ம வீடு இப்ப பழைய மாதிரி இல்லை. ரொம்ப பெரிய இடமாயிட்டுது. உங்களுக்கு இருக்கிற பணத்துக்கு ஏத்தா மாதிரி பெரிய பணக்கார வீட்டுல படிச்ச பொண்ணா பார்க்கலாமேம்மா... நம்ம தம்பிக்குப் பொண்ணு கொடுக்க கியூவரிசையில நிக்கறாங்க. நீங்க என்னடான்னா பஞ்சைப் பராரி கூட்டத்தில இருக்கற படிக்காத... பார்க்க சுமாரா இருக்கற பொண்ணைப் பார்க்க சொல்றீங்க... அது எதுக்குன்னும் உங்க எண்ணம் என்னவா இருக்கும்னும் எனக்குப் புரியலைம்மா... தரகர் சொன்னதைக் கேட்டு தாயாரம்மா சிரித்தாள்.

    "அட முட்டாளு... ஏன்யா... என்னை என்ன ஒண்ணும் தெரியாத லூசுன்னு நினைச்சியா? மெத்தப் படிச்சவளை மருமகளாக் கொண்டு வந்து வீட்டில விட்டா என்னாய்யா ஆவும்? அவ பாட்டுக்கு வேலைக்குப் போறேன்னு ஒரு கால்க் குழாயையும் கையில்லா பனியனையும் மாட்டிக்கிட்டு ஒரு கைப்பையைத் தோளில் மாட்டிக்கிட்டுக் கிளம்பி போயிடுவா. விடிய விடிய வேலை பார்த்திட்டு விடியற நேரம் வந்து ஏ.ஸி.யைப் போட்டுக்கிட்டு நாளெல்லாம் தூங்குவா. அவ எப்ப எழுந்திருப்பாள்னு சமையல் பண்ணி வைச்சிட்டு நான் காத்திருக்கணும். அவ அவிழ்த்துக் கடாசிட்டுப் போன அழுக்குத் துணியை துவைச்சி வைக்கணும். புள்ளை பெத்துக் குடுத்தா அதை வளர்க்கணும். அவளுக்காக இல்லேன்னாலும் அவ கொண்டு வர்ர சம்பளப்பணத்துக்கு சலாம் போடணும். அடைகாக்கற கோழி மாதிரி எப்பப் பார்த்தாலும் அவளையே சுத்திக்கிட்டு நிக்கணும். எதுக்குய்யா எனக்கு இந்தத் தீராதத் தொல்லை?

    பணக்காரின்னா ரொம்ப கர்வியா திமிர் பிடிச்சவளா இருப்பா. நாம ஒரு வார்த்தை பேசறதுக்கு முன்னால நூறுவார்த்தை பேசி இம்சிப்பா. மதிக்கமாட்டா...

    அதே நேரம் வக்கு வகையில்லாத பொண்ணுன்னு வை. தனக்கு வாழ்வு குடுத்ததுக்காக என்னைத் தரையில் நடக்கவிடாம தலையில் தாங்குவா. நான் அவளை அதிகாரம் பண்ணிக்கிட்டு மகாராணியாவே இருந்திடுவேன். உனக்கு ஏன்யா அந்தக் கவலை எல்லாம்? சொன்ன வேலையை செய்திட்டு காசு வாங்கிட்டுப் போறவழியைப் பாருய்யா... இடிச்ச புளி மாதிரி அசையாம உட்காராம போட்டோவைக் காட்டுய்யா..." தாயாரம்மா சொன்னாள்.

    அவளுடைய அளவுக்கு மீறின எச்சரிக்கை உணர்வு தரகருக்கு பெரு வியப்பைக் கொடுத்தது. எதையாவது பேசினால் தாயாரம்மா அதற்கொரு மகாபாரதம் பாடுவாள். வீணாக வாயைக் கொடுக்க அவர் விரும்பவில்லை. புகைப்படங்களை எடுத்துப் பணிவுடன் அவளிடம் நீட்டினார்.

    அதை இடது கையால் அலட்சியமாக வாங்கிய தாயாரம்மா ‘மடமட’ வெனத்தள்ளி ஒன்றை எடுத்துப் பார்த்துவிட்டு தரகரிடம் நீட்டினாள். அதைப் பார்த்த தரகர் தயங்கினார். இது ரொம்ப ரொம்ப சாதாரண குடும்பத்துப் பொண்ணுங்கம்மா. படிப்பு வெறும் எட்டாவதுதான். ஆளும் மாநிறமாத்தான் இருக்கும். ஆனா வீட்டு வேலையெல்லாம் ரொம்ப நறுவிசா செய்யும். ஒரு வேளை சாப்பிட்டா மறுவேளை இல்லாத குடும்பம். அதனால... எதுவுமே எதிர்பார்க்க முடியாது. அம்மா, வீட்டு வேலைக்காரங்க சாதாரணமாக உடுத்திக்கற சேலையை - கல்யாணங்களுக்கு உடுத்திக்கிட்டுப் போற குடும்பம். இது நமக்கு வேணாம்மா. வேற ஏதாவது பாருங்கம்மா... தரகர் கெஞ்சினார்.

    இதோ பாருய்யா தரகரே... இந்தப் பொண்ணு வேணும் வேணாம்னு முடிவு செய்ய வேண்டியது நான்தானே தவிர நீயில்லை. பொண்ணைப் பத்தி நீ சொன்னதைக் கேட்டதும் இந்த வீட்டுக்கு ஏத்தவ இவதான்னு நான் முடிவு பண்ணிட்டேன். எனக்கு சீரும் வேணாம். தேரும் வேணாம். இவளையே பேசி முடி. என்றாள் தாயாரம்மா.

    பேசிடலாம்மா... அது பெரிசில்லை... ஆனா இஞ்சினீயர் படிப்பு படிச்சி வெளிநாட்டில் நல்ல வேலையில இருக்காரு உங்க பையன்-பார்க்கறதுக்கும் ஆளு ராஜா மாதிரி இருப்பாரு. அவரு இப்படிப்பட்ட இடத்துக்கு ஒத்துக்குவாரா? எதுக்கும் இது விஷயமா அவருகிட்டே ஒரு வார்த்தை கேட்டுடறது நல்லதுன்னு எனக்கு தோணுதும்மா. நாம பாட்டுக்கு இங்க எல்லா ஏற்பாடுகளையும் செய்திட்டுக் காத்திருந்தா அவர் ஏரோப்பிளேனில் வந்து இறங்கி ரொம்ப சுலபமா-முடியாதுன்னு மறுத்திட்டா பெரிய பிரச்சினையாகிடுமேம்மா... பாவம் அந்த ஏழைங்க மனசில ஆசையை வளர்த்திட்டு ஏமாத்தறாமாதிரி இருக்குமே... எத்தனை சினிமாவுல பார்க்கலை? எத்தனை விவரம் பத்திரிகையில் படிக்கலை? தரகரின் குரலில் தயக்கம்.

    ‘அட அற்பப்பதரே...’ என்பது போல ஒரு எகத்தாள சிரிப்புடன் அவரைப் பார்த்தாள் தாயாரம்மா. மத்த தறுதலைப் பிள்ளைங்க மாதிரின்னு நினைச்சியா என்பிள்ளையை? என் வளர்ப்பே தனிய்யா... என் பிள்ளை நான் உட்காருன்னா உட்காருவான்... நில்லுன்னா நிப்பான். நான் ஒரு கோடு கிழிச்சிட்டேன்னா அதை என் அனுமதியில்லாம தாண்டவேமாட்டான். இதுதான் பொண்ணு, கட்டுடா தாலியைன்னு ஒரு கழுதையைக் கொண்டு வந்து நிறுத்தினாக்கூட எதிர்த்துப் பேசாம சரிம்மான்னுட்டு தாலியைக் கட்டுவான். வீணா எதைப்பத்தியும் பின்னி பின்னி பேசிக்கிட்டிருக்காம காலையில் முதல் வேலையா அந்தப் பொண்ணு வீட்டுல போய் பேசிட்டு வந்து சேரு... என்று சொல்லிவிட்டு தாயாரம்மா எழுந்து விட்டாள்.

    தன்னுடைய தரகர் தொழிலில் இதைப்போல எத்தனையோ அம்மாமார்களையும் பையன்களையும் பார்த்தவர் அவர். தலையாட்டிவிட்டு எழுந்து நடந்தார்.

    ‘பெற்றவர்களோடு எல்லா விஷயத்திலும் ஒத்துப்போகும் மகன்கள் கல்யாண விஷயம் என்றால் நிச்சயம் மாறிப் போகிறார்கள். காசு பணத்தைக் கருத்தில் கொண்டு பெற்றவர்கள் பார்க்கும் பெண்களை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அதுவும் படிக்காத பெண்கள் என்றால் இந்த காலத்துப்பையன்கள் ஓட்டம் பிடித்து விடுகிறார்கள். பெண்டாட்டியும் வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தாயாரம்மா சவால் விடுகிறாள். இந்தப் பேச்சுவார்த்தை எப்படி முடியுமோ தெரியவில்லை. கல்யாணத்தில் முடிந்தால் அந்தப் பெண்ணுக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைக்கும்... பொண்ணு பிறந்தா மாப்பிள்ளை பிறக்கிறான்? இல்லையே... மாப்பிள்ளை பிறந்துதானே காத்திருக்கிறான்... பார்க்கலாம்...’ தரகர் தனக்குள் நினைத்தபடி நடந்தார்.

    2

    இருந்ததை பங்கிட்டுத் தின்றுவிட்டு வெளி முற்றத்தில் உட்கார்ந்து கிடந்தது குமரேசன் குடும்பம். பக்கத்து வீட்டு தொலைக்காட்சியில் தொடர்பார்த்து விட்டு வந்த அக்கா தங்கை மூன்று பேரும் புலம்பிக் கொண்டிருந்தார்கள். இந்தி தொடரையெல்லாம் தமிழ்படுத்திக் காட்டி நம்மைத்தான்டி வயிறெரியவைக்கிறானுங்க. அதில வர்றவளுங்கள்ளாம் என்னா மாதிரி புடவைங்க கட்டிக்கறாளுங்க.... யப்பா... அந்த கலருங்களும் அந்த டிசைனுங்களும்... நாம கனவுலகூட கட்டிக்க முடியாது... என்று வனிதா சொன்னாள்.

    நீ வேற... அந்த நகைகளைப் பார்த்தியா? எவ்வளவு டிசைன்கள்... எவ்வளவு விதங்கள்... இன்னிக்கு பார்த்தியா... கதாநாயகியோட தங்கையா வர்றவ போட்டிருந்த தோடும்... தொங்கட்டானும். ரொம்ப சூப்பரா இருந்துது இல்லே? என்று சவிதா சொன்னதை ஒப்புக்கொண்டாள் சின்னவள் ரஞ்சனி... இந்த தொடரையெல்லாம் பார்க்காட்டா இப்படி புடவைகளும் நகைகளும் இருக்கும்னே நமக்குத் தெரியப்போறதில்லை... அதையெல்லாம் போட்டுக்க முடியாது. ஆனா கண்ணால பார்த்துக்கலாம்.

    ஏண்டி எப்ப பார்த்தாலும் புடவை, நகை பத்தின பேச்சுதானா? இப்படி அலையறதாலத்தான் எதுவுமே இல்லாத குடும்பத்தில வந்து பொறந்திருக்கீங்க. வாயை மூடிக்கிட்டு உள்ள போங்கடி... என்று அத்தை கத்தினாள்.

    இந்த பேயாடி கத்தத் தொடங்கிட்டுதா? இந்தக் குடும்பத்தோட மொத்த கதையையும் கத்தித் தீர்த்திடுமே... ஏண்டி அதோட வாயில விழறீங்க? என்று குந்திதேவி தன் பங்குக்கு கத்தினாள்.

    அதையெல்லாம் எருமைகள் மீது விழுந்த மழைத்துளிகள் போல மூன்றும் உதறிவிட்டு உள்ளே போனது.

    டேய்... குமரேசா... இதுகளை எப்படி விலையாக்கப் போறியோ தெரியலியே... நினைச்சாலே எனக்கு பக்குங்குதுடா... உடம்பு வளையாம மூணும் திரியுமே. ஏதாவது கம்பெனிகளில் வேலைக்கு அனுப்பேண்டா... தின்றதுக்காவது சம்பாதிக்கட்டும்... மீண்டும் அத்தை புலம்பினாள்.

    ஏங்க... உங்க அக்காவோட பேச்சை அடக்கவே மாட்டீங்களா? கல்யாணம் கட்டிக்கிட்டு வந்த நாளா என்னைத்தான் வறுத்து வாயிலப் போட்டுக்கிட்டாங்க. இப்ப என் பொண்ணுங்களையும் இப்படியே பேசினா என்ன பண்றது? சின்ன வயசுப் பிள்ளைங்க... பார்த்ததைப் பத்தி பேசி ஆத்துப்போவுதுங்க. வாங்கிக் குடுங்கன்னா கேக்குதுங்க? சொல்லுங்க... எல்லாருக்கும் அவங்க அவங்க நிலமை தெரியும்... குந்திதேவி சொன்னதைக் கேட்ட குமரேசன் அவளை கேலியாக நோக்கினார்.

    எங்கக்கா பேசறதைப் பத்தி மட்டும் சொல்றியே தவிர அவ யாரைப் பத்தி பேசறான்னு புரியலியே உனக்கு? வம்பு பேசறதுகளை மட்டும்தானே பேசறா? என்னிக்காவது பெரியவ மாதங்கியைப்பத்தியோ சின்னவன் ராகுலைப்பத்தியோ பேசறாளா? வீட்டுல வயசான பெரியவங்க இருந்தா இப்படித்தான்... ஏதாவது பேசத்தான் செய்வாங்க. அதை நீயே பெரிசு பண்ணி எடுத்துக்கட்டினா... உன் பொண்ணுங்களும் அப்படியே செய்யுங்க... விடு...

    வாதப்

    Enjoying the preview?
    Page 1 of 1