Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anantha Aarathanai
Anantha Aarathanai
Anantha Aarathanai
Ebook145 pages4 hours

Anantha Aarathanai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Mekala Chitravel
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466770
Anantha Aarathanai

Read more from Mekala Chitravel

Related authors

Related to Anantha Aarathanai

Related ebooks

Reviews for Anantha Aarathanai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anantha Aarathanai - Mekala Chitravel

    1

    நிலவுப் பெண் இடுப்பிலிருந்த மேகக் கூடையிலிருக்கும் நட்சத்திரப் பூக்களைக் காற்று இளைஞன் வானத்தோட்டமெங்கும் அள்ளி வீசும் - பின்மாலைப் பொழுது...

    செல்வபுரம் கூட்டுச் சாலைப் பேருந்து நிறுத்தத்தில் தனியாய் இறங்கினாள் கண்ணம்மா. சுற்றும் முற்றும் விழிகளை ஓட்டிக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். மனித நடமாட்டத்தையே காணோம். சிணுங்கும் சிறு விளக்கோடு ஒரே ஒரு பெட்டிக் கடை மட்டும் தென்பட்டது.

    கடைக்காரர் அவளைப் பார்த்துப் பரிதாபப்பட்டார்.

    அடடா... செல்வபுரத்துக்குப் போற கடைசிப் பேருந்து அரை மணிக்கு முன்னாலேயே போயிட்டுதுங்களே... இதோட நாளைக் கருக்கல்லுக்குத்தான் வண்டி. ஊர் இங்கேயிருந்து ஐந்து கிலோ மீட்டர் நீங்க பாதைக்குப் புதுசு. பூச்சி, பொட்டுங்க இருக்கும். சமயத்தில் நரி கூட ஓடுங்க. இந்த இருட்டு நேரத்தில் போக முடியாதுங்களே...

    கண்ணம்மா யோசித்தாள்.

    இப்போது என்ன செய்வது?

    கடைக்காரர் மீண்டும் கேட்டார்.

    நீங்க செல்வபுரத்தில் யார் வீட்டுக்குப் போகணும்?

    எனக்கு அங்கே யாரையும் தெரியாதுங்க. நான் அங்கே இருக்கிற மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிய வந்திருக்கேன்.

    கடைக்காரர் பேச்சில் மரியாதை கூடியது.

    சென்னையிலிருந்து வரப்போற டாக்டரம்மா நீங்கதானா? உங்களுக்காக இவ்வளவு நேரம் பண்ணை வீட்டு ஆளுங்க வண்டியோட காத்திருந்தாங்க. கடைசி வண்டி போனதுக்கப்புறம் போயிட்டாங்க. இப்ப என்ன செய்யிறது?

    கண்ணம்மா, பரவாயில்லை. எனக்குப் பயம் ஒண்ணும் இல்லை. நான் போயிக்கிறேன். நீங்க வழி மட்டும் சொல்லுங்க. கை விளக்கு வச்சிருக்கேன்.

    பட்டணத்தில் படிச்சவங்களாச்சே. பயம் இருக்குமா? வழி என்ன வழிங்க? வண்டிப் பாதை வழியா போக வேண்டியதுதானுங்க. நானே உங்ககூடத் துணைக்கு வருவேங்க. ஆனால், கடையை மூடிட்டு வரணும். அதுதான் பார்க்கிறேன்.

    எனக்காக நீங்க சிரமப்பட வேண்டாம். நான் வரேன்... தோள் பையை மாட்டிக் கொண்டாள். பெட்டியைத் தூக்கிக்கொண்டு நடக்கத் தொடங்கினாள்.

    ‘இராத்திரி நேரத்தில் இந்தப் பொண்ணு... இப்படித் தனியா போகுதே... இந்தக் காலத்துப் பொண்ணுங்களுக்குத் துணிச்சல் அதிகம்.’ கடைக்காரர் தனக்குள் வியந்தார்.

    அதிக இருட்டும் இறங்காமல், வெளிச்சமும் நழுவாமல் பொழுது கண்ணாமூச்சியாடிக் கொண்டிருந்தது. பாதையின் இருபுறமும் வாழைத் தோப்புகளும், தென்னந்தோப்புகளும் காணப்பட்டன. கொஞ்சம் தாண்டினதும் வயல் பரந்து கிடந்தது. ‘செல்வபுரம்’ பெயருக்கு ஏற்றாற் போல் வளமாகவே இருந்தது. ஆனால் மனித நடமாட்டம்தான் இல்லை. நடையை எட்டிப் போட்டாள்.

    பின்புறத்தில் ‘படபட’வென மோட்டார் சைக்கிள் ஒலி கேட்டது. நடை சற்றுத் தடைபட நின்றாள். வண்டி அவள் அருகில் வந்து நின்றது.

    நீங்கதான் கடைக்காரர் சொன்ன புது டாக்டரம்மாவா? - நான் செல்வபுரத்துக்குத்தான் போகிறேன். வாங்க... உங்களை மருத்துவமனைக் குடியிருப்பில் விட்டு விடறேன்... முன்னே பின்னே அறிமுகம் இல்லாதவன் கூப்பிடறானேன்னு பார்க்கிறீங்களா? பயப்படாதீங்க. ஒருத்தருக்கு ஒருத்தர் செய்துக்கிற சின்ன உதவிதான். இருட்டில் தனியா நடந்து போவது யாருக்கும் துன்பம்தானே?

    சிறிது நேர தயக்கத்துக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தாள்.

    ‘ஏறிப் போவோமே... என்ன செய்து விடுவான்? வம்பு செய்தால் கல்லூரியில் கற்ற தற்காப்புக் கலை கராத்தே எதற்கு இருக்கிறது?’

    ஆலோசித்து முடிந்தாயிற்றா? புறப்படலாமா? அவன் மீண்டும் புன்னகை புரிந்தான்.

    மடியில் பெட்டியை வைத்துக்கொண்டு அமர்ந்தாள்.

    வண்டி கிளம்பியது.

    அவன் பேச்சைத் தொடங்கினான்.

    "உங்களைப் பார்க்க எனக்குப் பாவமாக இருக்கு. செல்வபுரத்தைப் பற்றி எதுவுமே தெரியாதா உங்களுக்கு? இது ரொம்ப மோசமான ஊர். பிடிக்கலைன்னா உயிரோட கொளுத்திடுவாங்க. அது மட்டுமில்லே... ஒவ்வொரு கொசுவும் எருமை மாடு அளவுக்கு இருக்கும். கடித்தால் பத்து நாளைக்கு வீக்கம் குறையாது. மனுசங்களைவிடப் பாம்பு அதிகம். ஒருநாள் இல்லை ஒரு நாளைக்குப் புடலங்காய் கூட்டுன்னு பாம்பு கூட்டு சாப்பிடப் போறீங்க பாருங்க.

    காபி குடிப்பீங்களா? அப்ப தொலைஞ்சீங்க. பசும்பாலே கிடைக்காதுங்க. அதுக்குப் பதிலா கழுதைப் பால் இங்கே ரொம்பப் பிரசித்தம். கழுதைப் பால் காபிதான் குடிக்கணும்.

    அடிக்கடி மின்சாரம் நின்னுப் போகும். மின் விளக்கு, விசிறி வேலை செய்யாது. உங்க மருத்துவர் குடியிருப்பில் கழிவறை வசதி கிடையாதுங்க. கேட்டாலே பயமா இருக்கு இல்லே? பேசாம திரும்பிப் போயிடுங்களேன்.

    நாளைக்குக் காலையில் நானே உங்களைப் பேருந்து ஏத்தி விட்டிடறேன். ஒழுங்கா முழுசாப் பெத்தவங்களுக்குப் பெண்ணா வீடு போய்ச் சேருங்க."

    அதற்குமேல் பொறுமையாக இருக்க முடியாத கண்ணம்மா, "போதும் நிறுத்துங்க சார்... விட்டால் ஒரேயடியாய் பேசிக்கிட்டே போறீங்களே... சேவை செய்யப் புதுசா ஊருக்கு வர்றவங்களை நல்லதைச் சொல்லி வரவேற்கணும். அன்பா உபசரிக்கணும்...

    அதை விட்டுவிட்டு இப்படிப் பேசறீங்களே... உங்க ஊரையே மட்டப்படுத்திப் பேச வெட்கமா இல்லே? உங்களைப்போல ஊருக்கு ஒருத்தர், ரெண்டு பேர் இருந்தால் எப்படி சார் கிராமங்கள் முன்னேறும்?

    பட்டணத்தில் இருக்கிற பெரியவங்க, கிராமத்துக்குப் போங்கன்னு எங்களைத் துரத்தறாங்க. நீங்க என்னடான்னா வர்றவங்களைத் திருப்பித் துரத்தறீங்க. உங்க வண்டி சவாரி வேண்டாம். நான் நடந்தே போயிக்கிறேன் வண்டியை நிறுத்துங்க..."

    கோபத்தில் மூச்சு இறைத்தது.

    அவனுக்குச் சிரிப்பும் பொங்கியது.

    அடேயப்பா... உங்களுக்கு இத்தனை கோபம் வருதே... என்னை நம்பி வந்தவங்களைப் பாதியிலே இறக்கி விட்டுப் போகும் பழக்கம் எனக்கில்லை. இதோ உங்க மருத்துவர் குடியிருப்பு...

    குடியிருப்புப் பகுதியில் பைக் சத்தம் கேட்டதும் இரும்புக் கதவுகள் திறக்கப்பட்டன. மூன்று பேர் ஓடி வந்தனர். இவர்கள் இறங்கினதும் வண்டியை வாங்கிக் கொண்டார்கள்.

    கண்ணம்மாவோடு வந்தவன் சொன்னான்.

    முருகா... இவங்கதான் புதுசா வந்திருக்கிற டாக்டரம்மா. பாவம் அலுத்துக் களைச்சு வந்திருக்காங்க. அவங்கக் குடியிருப்பைக் காட்டு. குளிக்க ஏற்பாடு செய். காத்தாயிகிட்ட சூடா சாப்பாடு தயார் பண்ணச் சொல். காலையில் பார்க்கலாம். டாக்டரம்மா... நிம்மதியா சாப்பிட்டுட்டுத் தூங்குங்க... குட்நைட்...

    வேறு வீட்டுக்குள் சென்று மறையும் அவனை வியப்பு மாறாமல் பார்த்த கண்ணம்மா, இவர் யாரு? என்று கேட்டாள்.

    என்னம்மா இது வியப்பா இருக்கு? அவர்கூடவே வண்டியில் வந்து இறங்கி இருக்கீங்க. அவரை யாருன்னு எங்களைக் கேட்கிறீங்களே... இந்தச் சுத்துப்பட்டிக்கும் தெய்வமே அவர்தான் அம்மா. டாக்டர் ஐயா, பேரு ஆனந்தன்.

    2

    "என்ன பார்க்கிறீங்க? வாங்க நான்தான் ஆனந்தன். இதுதான் உங்க இருக்கை. காலைப் பலகாரம் முடிஞ்சுதா? கழுதைப் பால் காபி ரொம்ப அட்டகாசமா இருந்திருக்குமே... உங்களுக்காகவே தனியாகக் குட்டிக் கழுதையில் இருந்து கறந்தது..."

    கண்ணம்மா நிமிர்ந்து பார்த்தாள்.

    சிரிப்பின் முதல் ரேகை கூட முகத்தில் தென்படவில்லை.

    ஆனந்தன் ஒரு நிமிடம் அவளைப் பார்த்தான்.

    "என்னடா இவன் இப்படிப் பேசறானே என்றுதானே நினைக்கிறீங்க...? இவன் மனித மருத்துவனா இல்லை கால்நடை மருத்துவனான்னுகூடச் சந்தேகம் வருமே... அப்படித்தானே?

    இரவும் பகலும் நோயாளிகளுடன் நம்ம பொழுது கழியுது. மருந்து வாசமும், இரத்த வாடையும், அழுகையும் ஓலமும்தான் நம் வாழ்க்கை என்று ஆகிப் போச்சு.

    நாளாக, நாளாக இந்தச் சூழ்நிலையின் இறுக்கம் மனதுக்குள் புதைந்துக் கொள்ளும். குமுறிக் குமைந்து தாங்கமுடியாமல் போகும். அந்த நேரம், தொட்டதுக்கெல்லாம் கண்டதுக்கெல்லாம் வெறுப்பும் கோபமும் வரும். சிடுமூஞ்சித்தனம் முகத்தில் ஒட்டிக் கொள்ளும். அந்த நேரத்தில் நாம் முயன்றாலும் நம்மை மாற்றிக்கொள்ள முடியாது.

    அதனால்தான் இந்தச் சிரிப்பு. கிண்டல் பேச்செல்லாம். இப்ப உங்களையே எடுத்துக்குங்களேன். நேற்றைய பயணக் களைப்பு... அலுப்பு. புது இடத்தைப் பற்றின பயம் எல்லாம் பறந்தே போயிருக்குமே.

    கழுதைப் பாலில் காபி போட முடியுமா? என்று ஆராய மட்டும்தான் தோணியிருக்கும். இல்லேன்னா சிரிக்கலாமான்னு தோணும்? சிரிப்புதான் எல்லாத்துக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1