Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Complex!
Complex!
Complex!
Ebook75 pages39 minutes

Complex!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அம்மாவின் அரவணைப்பில் அம்மா பிள்ளையாக வளர்ந்தவன் ஜானி. ஜானியின் அம்மாவுக்கு எதிர்பாராதவிதமாக என்ன நேர்ந்தது? சூரீஸ் என்றவளால் ஜானியின் வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றம் என்ன? சந்தேகம் மனிதர்களிடத்தில் வந்துவிட்டால் பந்தம் பாசம் எல்லாம் மறந்து போய்விடுவதை காம்ப்ளக்ஸில் வாசிப்போம்.

Languageதமிழ்
Release dateOct 22, 2022
ISBN6580100608143
Complex!

Read more from Devibala

Related to Complex!

Related ebooks

Reviews for Complex!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Complex! - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காம்ப்ளெக்ஸ்!

    Complex!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    தனது எம்.காம் இறுதித் தேர்வை ஜானி எழுதி முடித்து விட்டான்! அப்பாடா என்றிருந்தது.

    ஹாஸ்டலை அன்றைக்கே காலி செய்யும் உத்தேசம் யாருக்குமே இருக்கவில்லை!

    இத்தனை நாள் தேர்வு ஜுரம்.

    எல்லாம் முடித்ததும் ஜாலியாக ரெண்டு நாள் இருந்து விட்டுத்தான் ஊர் திரும்ப வேண்டும் என்று முடிவே செய்து கொண்டான் ஜானி!

    ஜானிக்கு வயது இருபத்தி ரெண்டு!

    ஓரளவு பணக்கார இளைஞன்தான்.

    மைக்கேல் என்றால் தமிழ்நாட்டில் வர்த்தக வட்டாரத்தில் ஓரளவுக்கு எல்லோருக்குமே தெரிந்திருக்கும். கடந்த பத்து வருடங்களாக அவரது பெயர் பரவலாக அடிபட்டு வருகிறது.

    அரசியல் வட்டாரத்திலும் அடிக்கடி பேசப்படுபவர்! ஜானி அவரது ஒரே மகன்!

    படிப்பை முடித்துவிட்டு அவன் வந்ததும் பொறுப்புகளில் கணிசமான ஒரு பகுதியை அவனிடம் ஒப்படைக்கக் காத்திருந்தார் மைக்கேல்!.

    ஜானிக்கு அயல்நாடு போக வேண்டும். கொஞ்சம் தொழில் ரீதியாக ஏதாவது படிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் பரவலாக உண்டு!

    அதையெல்லாம் அப்பாவிடம் சொல்லிவிட்டான்.

    அவர் தற்சமயம் சம்மதிக்கவில்லை!

    நேரம் வரும்போது அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார்.

    ஹாஸ்டலில் நண்பர்கள் சேர்ந்து விட்டார்கள்.

    இன்னிக்கு என்னங்கடா புரோக்ராம்?

    ஒரு காப்ரே டான்ஸ் இருக்கு. நான் ஆளைப் புடிச்சு வச்சிருக்கேன். போகலாமா?

    அடப்போடா! இப்ப சினிமாவுல காட்டாததையா காப்ரேவுல காட்டிடப் போறான்? வேண்டாம்டா! வேற ஐடியா சொல்லுங்க!

    எல்லோருமா ஒக்காந்து தண்ணி போடலாம். தண்ணியடிச்சு ரொம்ப நாளாச்சு

    இல்லைப்பா! ஏதாவது பீச் ரிசார்ட் போய் காட்டேஜ் எடுக்கலாம்!

    எடுத்து? மன்மத லீலையா?

    அதில் கூடவா!

    ஆள், ஆளுக்கு ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருக்க, ஜானி மட்டும் மௌனமாக இருந்தான்.

    ஜானி! நீ ஏண்டா பேசலை?

    எனக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை! ஆனா உங்க ஐடியாக்கள் எதுவுமே நல்லா இல்லையேனு பார்த்தேன்!

    நீ பொம்பளைடா!

    நாலு பேர் சிரித்தார்கள்.

    எனிவே, என்னால் உங்க யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. நான் சமாளிச்சுக்கறேன்!

    இறுதியில் பீச் ரிசார்ட் போனால், பல விதங்களில் கொட்டம் அடிக்கலாம் என முடிவு செய்தார்கள்.

    ஜானி இப்போது ஹாஸ்டலில் தங்கிப் படிப்பது சென்னையில், ஜானியின் ஊர் ஊட்டி!

    மைக்கேலின் வர்த்தகம் முழுக்க கோவை - நீலகிரி மாவட்டத்தை பின்புறமாகக் கொண்டதுதான்!

    டேய்... எல்லோருமா ஊட்டிக்குப் போகலாம்டா! நம்ம ஜானி ஊர் அது!

    வாங்கடா! எல்லா வசதிகளையும் நான் பண்ணித்தர்றேன். எங்களுக்கு பெரிய பங்களா, டீ எஸ்டேட்ஸ், பேக்டரி எல்லாம் இருக்கு! ஜாலியா நீங்கள்லாம் பொழுதைக் கழிக்கலாம்!

    "எல்லாம் ஜோடியோட வந்தா, அந்தக் குளிர் ஊருக்குள்ளே கொஞ்சம்

    Enjoying the preview?
    Page 1 of 1