Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pulveli Payanangal
Pulveli Payanangal
Pulveli Payanangal
Ebook177 pages1 hour

Pulveli Payanangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த என்னுடைய நாலாவது சிறுகதைத் தொகுப்பில் பதினேழு சிறுகதைகள் இடம் பெறுகின்றன. இதுவும் இதற்கு முந்தைய தொகுதி 'மேலிடங்க’ளும் என்னுடைய பேரன்புக்குரிய நா.சீ.வ. அவர்களின் அங்கீகாரம் பெற்றவை என்று சொல்வதில் மிகை இருக்க முடியாது. படைப்பாளி, கவிஞர் என்பதோடு, வாழ்க்கை நெறிகளையும் மதிப்பீடுகளையும் நன்கறிந்த நல்ல நண்பர் அவர். "சுப்ர. பாலன். இது வேண்டாமே. நல்லா இல்லே..." என்று ஒதுக்கிவிடும் உரிமை பெற்றவர்.

ஒவ்வொரு கதைக்கும் அவர் குறிப்பு எழுதி வைத்திருந்தார். விருப்பு வெறுப்பின்றி எழுதிய அந்தக் குறிப்புக்களை அப்படியே ஏற்று இந்நூலுக்கு முன்னுரையாகப் பெற்றுக் கொண்டேன். என்னில் குறைகளும் உண்டு என்பதை உணர்ந்தவன் நான். அவருக்கு நன்றி.

- சுப்ர. பாலன்

வித்தியாசமாக ஒரு முன்னுரை

‘பீஷமன்' - நா.சீ. வரதராஜன்.

‘புல்வெளிப் பயணங்கள்!' - தலைப்பே புல்லரிக்கச் செய்தது. ஒவ்வொரு கதையைப் படித்ததும் மனத்தில் தோன்றியதை அப்படியே ஒரு சில வாக்கியங்களில் குறித்து வைத்தேன். அந்தக் குறிப்புகளையே இந்தப் புத்தகத்துக்கு முன்னுரையாக நண்பர் 'சுப்ர.பாலன்' ஏற்றுக் கொண்டு விட்டார். இந்தக் குறிப்புகள் ஒரு ரசிகனின் உள்ளுணர்வுகளின் வெளிப்பாடுகளே! முன்னுரை என்று ஏற்றுக் கொண்டதிலும் எனக்கு மகிழ்ச்சி தான்.

புல்வெளிப் பயணங்கள்! - மாறுதலான சிந்தனைப் புல்வெளியில் கூட - அடியில் ஒரு மெளனமான சோக அழுத்தம்! வாழ்க்கையில் 'புல்' போன்ற பிரச்சினைகள் கூட 'முள்’ளாகிக் குத்தத்தான் செய்கின்றன. சுவாரஸ்யமாகக் கதை நடைபோடுகிறது. மீண்டும் ஒரு துவாரகை - படித்துப் படித்து மகிழ வேண்டிய ஒரு நல்ல கற்பனை. கவிதை. அதுவும் நல்ல நளினமான கவிதையைப் படித்த நிறைவு கிட்டுகிறது. அவளுக்கும் ஒரு வாழ்க்கை - நல்ல கதை. யதார்த்தம். சத்திய ஆவேசத்தை அடக்கிக் கொண்டு காட்சி தருகிறது.

மீண்டும் நாம் கூடுகையில் - கதை 'ட்ரமாட்டிக்' (Dramatic) ஆக முடிகிறது. யதார்த்தமாக இல்லை. ஒருவேளை எனக்குத் தான் அப்படித் தோன்றுகிறதோ? தெரியவில்லை.

அட்சதைகளும் கொத்து மலர்களும் - கதைக்கரு பலபேர் பல நிலைகளில் பல கோணங்களில் மென்று துப்பி விட்ட ஒன்று தான். கதை எழுதப்பட்ட விதம் நன்றாக இருக்கிறது.

புஷ்பக விமானத்தில் போனவள். ஓர் அமானுஷ்யமான கற்பனை. சுவாரசியமாகக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. இந்த விசித்திரக் கற்பனை கதை வடிவில் திரைப்படமாகிவிடுகிறது. காட்சி அழகு மனக்கண்ணில் நிலைத்து விடுகிறதே! மைலா - இதுவும் அருமையான சிறுகதை. மைலா நாளைக்கு என்ன ஆனால் என்ன? இன்று உயர்ந்து நிற்கிறாளே!

இதுவும் ஒரு யோகம் - ஒரு வித்தியாசமான கற்பனை. இப்படிக் கூட இருப்பார்களா? இப்படி ஒரு மன பேதலிப்பா? என்று நினைக்கத் தோன்றினாலும் கதை ஒரு நிஜவாழ்க்கையை நம்முன் நிறுத்தி, இந்தக் கேள்விகளைப் பொய்யாக்கிவிடுகிறது.

நாய் வால் - வேடிக்கையான கதை. நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. கற்பனை சமயத்தில் நிஜமாகவும் இருக்கும் தான்!

தேடல் - ஒரு புதிய கனவுலகக் காட்சி தான் இதுவும். ஆனால் முடிவு மனத்தில் எந்தவித பாதிப்பையும் தராமல் புதிர் போல நிற்கிறதே!

பிற்பகலில் - 'சங்கர மூர்த்திகள்' இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதிர்ச்சி வைத்தியங்கள் அவர்களைப் பூரணமாக மாற்றிவிடுகின்றனவா என்ன? ஆனால் ஒன்று... அவர்கள் இந்தக் கதையைப் படிக்கும் போது ஏற்படும் 'சுருக்' அவர்களைச் சிந்திக்க வைக்கலாம்.

உயரங்கள் - ஓர் அருமையான தம்பதிகளின் 'அந்தி நேரம்' செம்மையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. நெஞ்சைத் தொடும் வரிகள் நிறைந்திருக்கின்றன. தலைவர்கள் - கதை மிக இயல்பாக நடைபோடுகிறது. முடிவில் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைவதைத் தவிர்க்க முடிந்திருந்தால் நல்லது.

இரண்டாம் வனவாசம் - இராமாயணம். எத்தனையோ கதாசிரியர்களுக்குப் பலவிதமான ஊகங்களுக்கும் கற்பனைக்கும் இடமளித்து வந்திருக்கிறது: வருகிறது! சுப்ர. பாலனின் கற்பனையில் சீதையின் அகத்தைப் புரிந்து கொண்ட தமஸா நதியின் சிலிர்ப்பைத் தமிழ்ச் சொற்கள் ஏந்தி வந்து நம்மையும் அந்த அனுபவத்தைப் பெற வைத்துவிடுகின்றன. நல்ல கதை.

முடிவாக –

சுப்ர.பாலனின் நாலாவது சிறுகதைத் தொகுதி இது. வித்தியாசமாகவே இவர் சிந்தனைகள் படர்ந்தாலும் மனித இயல்பின் கரையை மீறி விடாமல் இருப்பது எத்தனை நிறைவு தருகிறது!

எங்கெங்கோ வாழும் எத்தனையோ மனிதர்களுடன் நெருக்கமாகப் பழகிவிட்டு வந்த அனுபவம். புத்தகத்தைப் படித்து முடித்ததும் கிடைக்கிறதே! அந்த சுகத்திற்காக சுப்ர.பாலனுக்கு நான் நன்றி கூறியாக வேண்டும்.

நீங்களும் கூறுவீர்கள்.
பீஷ்மன்.

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580127904541
Pulveli Payanangal

Read more from Subra Balan

Related to Pulveli Payanangal

Related ebooks

Reviews for Pulveli Payanangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pulveli Payanangal - Subra Balan

    http://www.pustaka.co.in

    புல்வெளிப் பயணங்கள்

    Pulveli Payanangal

    Author:

    சுப்ர. பாலன்

    Subra Balan

    For more books

    http://pustaka.co.in/home/author/subra-balan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    வித்தியாசமாக ஒரு முன்னுரை

    1. புல்வெளிப் பயணங்கள்

    2. மீண்டும் ஒரு துவாரகை

    3. அவளுக்கும் ஒரு வாழ்க்கை

    4. மீண்டும் நாம் கூடுகையில்...

    5. அட்சதைகளும் கொத்து மலர்களும்...

    6. புஷ்பக விமானத்தில் போனவள்

    7. மைலா

    8. நாளைக் காலையில்

    9. இதுவும் ஒரு யோகம்

    10. நாய்வால்

    11. தேடல்

    12. பிற்பகலில்

    13. உயரங்கள்

    14. தலைவர்கள்

    15. பற்றுக்கோல்

    16. சமன் செய்து சீர்தூக்கும்...!

    17. இரண்டாம் வனவாசம்

    என்னுரை

    இந்த என்னுடைய நாலாவது சிறுகதைத் தொகுப்பில் பதினேழு சிறுகதைகள் இடம் பெறுகின்றன. இதுவும் இதற்கு முந்தைய தொகுதி 'மேலிடங்க’ளும் என்னுடைய பேரன்புக்குரிய நா.சீ.வ. அவர்களின் அங்கீகாரம் பெற்றவை என்று சொல்வதில் மிகை இருக்க முடியாது. படைப்பாளி, கவிஞர் என்பதோடு, வாழ்க்கை நெறிகளையும் மதிப்பீடுகளையும் நன்கறிந்த நல்ல நண்பர் அவர். சுப்ர. பாலன். இது வேண்டாமே. நல்லா இல்லே... என்று ஒதுக்கிவிடும் உரிமை பெற்றவர்.

    நூல்வடிவம் பெற வேண்டிய என் கதைகளை ஒரு கொத்தாகக் கொண்டுபோய் அவரிடம் பார்வையிடக் கொடுத்தேன். ஒரு பத்துக் கதைகளை. இவை தொகுப்புக்கு வேண்டாம் என்று அவர் ஒதுக்கிவிட்டார். மீதமிருந்த முப்பத்து நாலில் இந்த இரு தொகுதிகள் வெளியாகியுள்ளன.

    ஒவ்வொரு கதைக்கும் அவர் குறிப்பு எழுதி வைத்திருந்தார். விருப்பு வெறுப்பின்றி எழுதிய அந்தக் குறிப்புக்களை அப்படியே ஏற்று இந்நூலுக்கு முன்னுரையாகப் பெற்றுக் கொண்டேன். என்னில் குறைகளும் உண்டு என்பதை உணர்ந்தவன் நான். அவருக்கு நன்றி.

    இந்தச் சிறுகதைகளைத் தம் இதழ்களில் வெளியிட்ட ஆசிரியர்கள், ஓவிய மெருகு ஊட்டிய நண்பர்கள் அனைவரையும் நன்றியோடு நினைவு கூறுகிறேன்.

    சுப்ர. பாலன்.

    வித்தியாசமாக ஒரு முன்னுரை

    ‘பீஷமன்' - நா.சீ. வரதராஜன்.

    ‘புல்வெளிப் பயணங்கள்!' - தலைப்பே புல்லரிக்கச் செய்தது. ஒவ்வொரு கதையைப் படித்ததும் மனத்தில் தோன்றியதை அப்படியே ஒரு சில வாக்கியங்களில் குறித்து வைத்தேன். அந்தக் குறிப்புகளையே இந்தப் புத்தகத்துக்கு முன்னுரையாக நண்பர் 'சுப்ர.பாலன்' ஏற்றுக் கொண்டு விட்டார். இந்தக் குறிப்புகள் ஒரு ரசிகனின் உள்ளுணர்வுகளின் வெளிப்பாடுகளே! முன்னுரை என்று ஏற்றுக் கொண்டதிலும் எனக்கு மகிழ்ச்சி தான்.

    புல்வெளிப் பயணங்கள்! - மாறுதலான சிந்தனைப் புல்வெளியில் கூட - அடியில் ஒரு மெளனமான சோக அழுத்தம்! வாழ்க்கையில் 'புல்' போன்ற பிரச்சினைகள் கூட 'முள்’ளாகிக் குத்தத்தான் செய்கின்றன. சுவாரஸ்யமாகக் கதை நடைபோடுகிறது.

    மீண்டும் ஒரு துவாரகை - படித்துப் படித்து மகிழ வேண்டிய ஒரு நல்ல கற்பனை. கவிதை. அதுவும் நல்ல நளினமான கவிதையைப் படித்த நிறைவு கிட்டுகிறது.

    அவளுக்கும் ஒரு வாழ்க்கை - நல்ல கதை. யதார்த்தம். சத்திய ஆவேசத்தை அடக்கிக் கொண்டு காட்சி தருகிறது.

    மீண்டும் நாம் கூடுகையில் - கதை 'ட்ரமாட்டிக்' (Dramatic) ஆக முடிகிறது. யதார்த்தமாக இல்லை. ஒருவேளை எனக்குத் தான் அப்படித் தோன்றுகிறதோ? தெரியவில்லை.

    அட்சதைகளும் கொத்து மலர்களும் - கதைக்கரு பலபேர் பல நிலைகளில் பல கோணங்களில் மென்று துப்பி விட்ட ஒன்று தான். கதை எழுதப்பட்ட விதம் நன்றாக இருக்கிறது.

    புஷ்பக விமானத்தில் போனவள். ஓர் அமானுஷ்யமான கற்பனை. சுவாரசியமாகக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. இந்த விசித்திரக் கற்பனை கதை வடிவில் திரைப்படமாகிவிடுகிறது. காட்சி அழகு மனக்கண்ணில் நிலைத்து விடுகிறதே!

    மைலா - இதுவும் அருமையான சிறுகதை. மைலா நாளைக்கு என்ன ஆனால் என்ன? இன்று உயர்ந்து நிற்கிறாளே!

    நாளைக் காலையில் ஏதோ புதிர் போல இருக்கிறது. படிக்கும் போது வயிற்றைக் கலக்குகிறது. ஆனாலும் இந்த அதீதக் கற்பனையில் ஏதோ ஒரு நெருடல் - என்ன வென்று சொல்ல முடியாத ஒரு குழப்பம் என்னைக் குமைக்கிறது!

    இதுவும் ஒரு யோகம் - ஒரு வித்தியாசமான கற்பனை. இப்படிக் கூட இருப்பார்களா? இப்படி ஒரு மன பேதலிப்பா? என்று நினைக்கத் தோன்றினாலும் கதை ஒரு நிஜவாழ்க்கையை நம்முன் நிறுத்தி, இந்தக் கேள்விகளைப் பொய்யாக்கிவிடுகிறது.

    நாய் வால் - வேடிக்கையான கதை. நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. கற்பனை சமயத்தில் நிஜமாகவும் இருக்கும் தான்!

    தேடல் - ஒரு புதிய கனவுலகக் காட்சி தான் இதுவும். ஆனால் முடிவு மனத்தில் எந்தவித பாதிப்பையும் தராமல் புதிர் போல நிற்கிறதே!

    பிற்பகலில் - 'சங்கர மூர்த்திகள்' இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதிர்ச்சி வைத்தியங்கள் அவர்களைப் பூரணமாக மாற்றிவிடுகின்றனவா என்ன? ஆனால் ஒன்று... அவர்கள் இந்தக் கதையைப் படிக்கும் போது ஏற்படும் 'சுருக்' அவர்களைச் சிந்திக்க வைக்கலாம்.

    உயரங்கள் - ஓர் அருமையான தம்பதிகளின் 'அந்தி நேரம்' செம்மையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. நெஞ்சைத் தொடும் வரிகள் நிறைந்திருக்கின்றன.

    தலைவர்கள் - கதை மிக இயல்பாக நடைபோடுகிறது. முடிவில் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைவதைத் தவிர்க்க முடிந்திருந்தால் நல்லது.

    பற்றுக்கோல் - ஆமாம். இன்றைக்கு நேர்மையாக வாழ்பவனைத் தான் குற்றவாளியாக்க உலகம் திரண்டு கொண்டிருக்கிறது. இயல்பான கதை! அந்தச் சிந்தூரன் கட்டாயம் வென்று விடுவான். வெல்ல வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.

    சமன் செய்து சீர்தூக்கும் கோல் - மாவன்னாவின் 'அந்தரங்க சுத்தி' கதையில் விரிவாகக் கூறப்படவில்லை தான். என்றாலும் என்ன? மாவன்னா நிமிர்ந்து நிற்கிறாரே!

    இரண்டாம் வனவாசம் - இராமாயணம். எத்தனையோ கதாசிரியர்களுக்குப் பலவிதமான ஊகங்களுக்கும் கற்பனைக்கும் இடமளித்து வந்திருக்கிறது: வருகிறது! சுப்ர. பாலனின் கற்பனையில் சீதையின் அகத்தைப் புரிந்து கொண்ட தமஸா நதியின் சிலிர்ப்பைத் தமிழ்ச் சொற்கள் ஏந்தி வந்து நம்மையும் அந்த அனுபவத்தைப் பெற வைத்துவிடுகின்றன. நல்ல கதை.

    முடிவாக –

    சுப்ர.பாலனின் நாலாவது சிறுகதைத் தொகுதி இது. வித்தியாசமாகவே இவர் சிந்தனைகள் படர்ந்தாலும் மனித இயல்பின் கரையை மீறி விடாமல் இருப்பது எத்தனை நிறைவு தருகிறது!

    எங்கெங்கோ வாழும் எத்தனையோ மனிதர்களுடன் நெருக்கமாகப் பழகிவிட்டு வந்த அனுபவம். புத்தகத்தைப் படித்து முடித்ததும் கிடைக்கிறதே! அந்த சுகத்திற்காக சுப்ர.பாலனுக்கு நான் நன்றி கூறியாக வேண்டும்.

    நீங்களும் கூறுவீர்கள்.

    பீஷ்மன்.

    1. புல்வெளிப் பயணங்கள்

    எங்கேயடி...? அப்பாவைக் காணல்லே?

    தோட்டத்திலே போய்ப்பாரு… படு மும்முரமாய்ப் புல் வெட்டியாறது!

    வேண்டுமென்றே, இவன் காதுகளில் விழட்டும் என்றே தாயும், மகளும் உரையாடுவது ஒன்றும் புதிதில்லை. இந்த வீட்டுக்குக் குடிவந்த நாள் முதல் வாடிக்கையாகிவிட்ட ஒன்று தான் இது. சீண்டுகிற தொனி அதில் வேண்டுமென்றே சேர்க்கப்பட்டிருக்கும்.

    இவன் தனக்குள் சிரித்துக் கொண்டான். இன்னும் சற்றுப் பொறுத்தால், கையில் சுடச்சுடக் காப்பித் தம்ளரோடு தாயோ, மகளோ வரிந்து கட்டிக் கொண்டு வரக்கூடும்.

    உங்களுக்கு வேறெ பொழைப்பே இல்லியா? மழை வேறே தூறிண்டே இருக்கு... உடம்புக்குத் தான் ஆகுமா? சீக்கிரம் காப்பியைக் குடிச்சிட்டுத் தாங்கோ. அடுப்புலே என்னமோ தீய்ஞ்சு போறாப்பலே இருக்கு. உங்க பெண் அதையெல்லாம் எங்கே கவனிப்பா...?

    பாதி மிரட்டல், பாதி சிணுங்கல், கொஞ்சம் பரபரப்பு என்கிற மாதிரி அவள் விரைந்து இடம் பெயர்கிறாள். மழைத் தூறலில் நனைவதை விடவும் இது போன்ற சிணுங்கல் சீறல்களில் நனைவது இவனுக்கு மிகவும் பிடிக்கும்.

    இலேசாக இருந்த மழைத்தூறல் இப்போது நன்றாக வலுத்தது. இனியும், மழை ஒய்கிறவரை, நிலத்தில் தண்ணீர் சற்று வடிகிறவரை. இவனால் புல்லைத் தொட முடியாது. நசநசவென்று கை கால்களெல்லாம் மண் மரமரத்தது. விரல் நகக் கண்களில் மணல் குருணைகள் ஏறி ஆழமான ஒரு வேதனை.

    இரண்டு மாதங்களாய் இப்படியே பொழுது போகிறது. உடல் நலம் சீராக இல்லை என்று அலுவலகத்துக்கு லீவு போட்டு விட்டு வந்தாகிவிட்டது. இனி மேல் அடுத்த 'காவடி' எங்கேயோ? கவர்ச்சியான அரசாங்க உத்தியோகம் என்று 'வேர் பிடித்து' முப்பது ஆண்டுகளான பின்னரும் நிலையாக ஓரிடத்தில் இருக்க முடியாமல் பெட்டி தூக்க நேர்கிறது.

    லீவு முடிந்து மீண்டும் பணியேற்க உத்தரவு வரும் போது சமாளித்தாக வேண்டிய எத்தனையோ பிரச்னைகளை இப்போதே நினைத்து என்ன பயன்? இங்கே தோட்டத்தில் புல்களைவதில் உள்ள நிறைவு கூட அலுவலகக் குப்பைகளோடு புழங்குவதில் கிடைப்பதில்லை என்பது இவனுடைய இப்போதைய கணிப்பு.

    ஆனால் அலுவலகத்துக்குப் போய் வேலையில் மூழ்கிவிட்டால் அதுதான் சுகம், சொர்க்கம் எல்லாம்!

    ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தில் அரசாங்க வீட்டை விட்டு வெளியே வந்தாகி விட்டது. அவசரத் தேவைக்கு இந்த வீடு கிடைத்தது. வாடகை கைக்கு மீறியதாக இருந்தாலும் வீடும், சுற்றிலும் இருந்த புல்வெளியும் இவனுடைய மனசுக்கு மிகவும் பிடித்துப் போயின. நகரச் சந்தடிகளில், அடுக்கு மாடித் தீப்பெட்டி அறைகளிலேயே புழுங்கி வந்த காலம் போய், இப்படி ஒரு சொகுசான வீட்டை இவன் சொந்தத்தில் கட்டியா அனுபவிக்கப் போகிறான்? வாடகை வீடே இவனுக்குப் படுஉற்சாகமாக இருந்தது.

    அநாவசியமான அடைசல் இல்லாமல் தோட்டம் துப்புரவாக இருக்கட்டுமே என்கிற ஆசையில், நேரம் கிடைக்கிறபோதெல்லாம் இப்படிப் புல் களைந்தாகிறது.

    கூலிக்குப் புல் அறுக்கிறவங்களை விட்டால், பத்தோ இருபதோ கூலியும் வாங்கிக் கொண்டு 'நுனிப்புல்' அறுத்துவிட்டுப் போவார்கள். புல் கட்டோடு அவர்கள் வெளியேறும் முன்பே, இங்கே வேர் சிலிர்த்து மறுபடி முளைத்துத் துளிர்விடும்.

    ஈரம் உலராத மழை மண்ணில், வேர் அறுந்து போகாமல், கொத்தாகப் புல் கைக்கு வரும். கொஞ்சம் தரை ஈரம் உலர்ந்து விட்டாலும், மண் கெட்டிப் பட்டு விடும். வேர் அசைந்து கொடுக்காது. புல்

    Enjoying the preview?
    Page 1 of 1