Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Boogola Rambai
Boogola Rambai
Boogola Rambai
Ebook185 pages56 minutes

Boogola Rambai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சில மாணவர்களுக்கு பூகோளத்தில் கண்டம்.

தூந்திரப் பிரதேசம். ஊசியிலைக் காடுகள், பீடபூமி, வியாபாரக் காற்று, அட்ச, தீர்க்க பூமத்திய ரேகைகள் போன்ற பதப் பிரயோகங்கள் எலுமிச்சை ஊறுகாய் உடன் உறை குளிர்ந்த தயிர் சாதத்தை டிபன் பாக்ஸிலிருந்து மதிய உணவாக சாப்பிட்டு விட்டு, தூங்கு மூஞ்சி மரங்கள் சாமரம் வீசும் வேளையில் காதில் விழுந்தால் பூகோளத்தின் மேல் காதலா வரும்? தூக்கம்தான் வரும். ஆனால், பூகோள ஆசிரியருக்குக் கோள மயிலாக அதாவது கோல மயிலாக ரம்பை ரேஞ்சில் ஒரு குமரி இருந்தால்? கோணம் மாறி விடும் அல்லவா?

நகைச்சுவையை நம்முடன் கைகோர்த்து உலவி வரத் தயாராக இருக்கும் ஒரு துடிப்பான அழகிய இளம் பெண்ணாக பாவித்து பூலோகத்தில் நடை போட்டால் செயல்பாட்டில் ஒரு துள்ளல் வராதா? வரும் என்கிற நினைப்போடு எழுதப்படும் தமாஷா வரிகளின் அடுத்த தொகுப்பு இது.

தொடர்ந்து 325 வாரங்களாக அண்ணா நகர் மற்றும் மாம்பலம் டைம்ஸில் வெளிவந்து கொண்டிருக்கும் தமாஷா வரிகள் பத்தியின் சமீபத்திய 36 கட்டுரைகளைத் தாங்கி வரும் இந்த நூல் நடப்பு பணவீக்க காலத்தில் அத்தி பூத்தாற் போல புன்னகை பூக்கும் பலரை அடிக்கடி சிரிக்க வைக்கும் என்று நம்புகிறேன்.

'ஆரம்பியுங்கள், தானே எழுத வரும்,' என்று ஆதியில் எனக்கு ஊக்கம் அளித்த அவ்வேடுகளின் ஆசிரியர் ராமகிருஷ்ணன் அவர்களையும், நேரத்தில் முளைக்கும் அழகிய பூக்களைப் போலக் கட்டுரைகளுக்கு வேண்டிய படங்களை வரைந்து அளித்துக் கொண்டு இருக்கும் ஓவியர் நடனத்தையும், கட்டுரைகளைப் படித்துவிட்டு பாராட்டுதல்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கும் அன்பு வாசகர்களையும் நான் படித்த பூகோளத்தை மறந்தது போல் எளிதில் மறக்க முடியுமா?

- ஜே. எஸ். ராகவன்

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580127204428
Boogola Rambai

Read more from J.S. Raghavan

Related to Boogola Rambai

Related ebooks

Related categories

Reviews for Boogola Rambai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Boogola Rambai - J.S. Raghavan

    http://www.pustaka.co.in

    பூகோள ரம்பை

    Boogola Rambai

    Author:

    ஜே. எஸ். ராகவன்

    J.S. Raghavan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/js-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பூகோள ரம்பை!

    2. 'லேடன்' கண்ணப்பா!

    3. புத்தகம் சரணம் கிச்சாமி!

    4. சுஜாதாவுக்கு பதில்?

    5. யூகலிப்டஸ் ஹவுஸ்!

    6. ரசிகர் ரங்கராஜூ!

    7. ஒரு ரீமிக்ஸ் கதை!

    8. குடும்ப பட்ஜெட் உரை!

    9. 'உன்னை ஏலத்தில் எடுத்தேன்!'

    10. எஸ்.எம்.எஸ். ஊடல்!

    11. சரஸ்வதி டீச்சர்!

    12. பிக் ஷாப்பி!

    13. நகைச்சுவை அஸ்திரம்!

    14. ஸ்லெட்ஜிங் கோச்!

    15. அகல்-யா!

    16. ஆமாம்! ஆமாம்! இல்லே!

    17. பஜனா சுண்டெலி!

    18. கோலா-கோலம்!

    19. காப்பி, காபி, கல்யாணி!

    20. தரனனா கதைகள்!

    21. ஆயிரம் பேரை...!

    22. டூ வீலருக்கு டா(ட்)டா!

    23. நானோ? நீயோ?

    24. மஞ்சப் பந்து மஞ்சுநாதன்

    25. ஆயிரம் குறை கண்டவர்

    26. 'மாலே' மணி வண்ணா!

    27. அவன் ஒரு டைப்!

    28. தமாஷா தம்புடு!

    29. லாஃபிங் புத்தா!

    30. பஜ்ஜியும் அறையும்!

    31. இடம் கொடுக்கலாமா?

    32. தமாஷா பதில்கள்!

    33. அவுட் கோயிங்கா?

    34. கிலி அடையாத கிளி!

    35. அறுசுவை ஆண்டாளுவின் பதில்கள்!

    36. பாட்டு டீ(டார்)ச்சர்!

    முன்னுரை

    சில மாணவர்களுக்கு பூகோளத்தில் கண்டம்.

    தூந்திரப் பிரதேசம். ஊசியிலைக் காடுகள், பீடபூமி, வியாபாரக் காற்று, அட்ச, தீர்க்க பூமத்திய ரேகைகள் போன்ற பதப் பிரயோகங்கள் எலுமிச்சை ஊறுகாய் உடன் உறை குளிர்ந்த தயிர் சாதத்தை டிபன் பாக்ஸிலிருந்து மதிய உணவாக சாப்பிட்டு விட்டு, தூங்கு மூஞ்சி மரங்கள் சாமரம் வீசும் வேளையில் காதில் விழுந்தால் பூகோளத்தின் மேல் காதலா வரும்? தூக்கம்தான் வரும். ஆனால், பூகோள ஆசிரியருக்குக் கோள மயிலாக அதாவது கோல மயிலாக ரம்பை ரேஞ்சில் ஒரு குமரி இருந்தால்? கோணம் மாறி விடும் அல்லவா?

    நகைச்சுவையை நம்முடன் கைகோர்த்து உலவி வரத் தயாராக இருக்கும் ஒரு துடிப்பான அழகிய இளம் பெண்ணாக பாவித்து பூலோகத்தில் நடை போட்டால் செயல்பாட்டில் ஒரு துள்ளல் வராதா? வரும் என்கிற நினைப்போடு எழுதப்படும் தமாஷா வரிகளின் அடுத்த தொகுப்பு இது.

    தொடர்ந்து 325 வாரங்களாக அண்ணா நகர் மற்றும் மாம்பலம் டைம்ஸில் வெளிவந்து கொண்டிருக்கும் தமாஷா வரிகள் பத்தியின் சமீபத்திய 36 கட்டுரைகளைத் தாங்கி வரும் இந்த நூல் நடப்பு பணவீக்க காலத்தில் அத்தி பூத்தாற் போல புன்னகை பூக்கும் பலரை அடிக்கடி சிரிக்க வைக்கும் என்று நம்புகிறேன்.

    'ஆரம்பியுங்கள், தானே எழுத வரும்,' என்று ஆதியில் எனக்கு ஊக்கம் அளித்த அவ்வேடுகளின் ஆசிரியர் ராமகிருஷ்ணன் அவர்களையும், நேரத்தில் முளைக்கும் அழகிய பூக்களைப் போலக் கட்டுரைகளுக்கு வேண்டிய படங்களை வரைந்து அளித்துக் கொண்டு இருக்கும் ஓவியர் நடனத்தையும், கட்டுரைகளைப் படித்துவிட்டு பாராட்டுதல்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கும் அன்பு வாசகர்களையும் நான் படித்த பூகோளத்தை மறந்தது போல் எளிதில் மறக்க முடியுமா?

    ஜே. எஸ். ராகவன்

    *****

    1. பூகோள ரம்பை!

    பூந்தமல்லி குமாரசாமி சாரின் இதயத்தில் குடி கொண்டவை லட்டு, ரவா லட்டு, கடலை உருண்டை போன்ற உருண்டை வடிவத் தின்பண்டங்களே என்ற ஒரு கேலிக் கருத்து எங்கள் உள் வட்டத்தில் உலவி வந்தது. அதன் காரணம் அவர் பூகோளப் போதகராக இருந்து கற்பித்த உலகம், உருண்டையாக இருப்பதால்தான் என்ற ஒரு பாமர விளக்கமும் அளிக்கப்பட்டது.

    'அவர் கிட்டே டியூஷன் போரேன்டா,' என்று பூரிப்புடன் சிவு சொன்ன போது திகைத்தோம். கணக்கு, இங்கிலீஷ், சயின்ஸுக்கு ஓகே. டப்பா அடிக்க வேண்டிய பூகோளத்துக்குமா டியூஷன்? என்னய்யா இது? என்று வியந்தோம்.

    அதன் காரணம் புவி ஈர்ப்பு சக்தி மாதிரி பூகோள சார் வீட்டில் சுமி ஈர்ப்பு என்கிற காந்த சக்தி ஒன்று சிவுவை இழுத்து டியூஷன் என்கிற கண் துடைப்பில் அவளைக் கண்களில் தென்பட வைத்துக் கொண்டு இருக்கிறது என்று, நாணா ஒரு அறிக்கையை விடுத்தான்.

    பரந்த ஆஸ்திரேலியா கண்டம் மாதிரி குமாரசாமி சார் அகன்று விரிந்து இருந்தாலும் அருகில் இருக்கும் டாஸ்மைனியாவாகச் சிறிய உருவத்தில் இருந்த சுமி, அழகில் ரம்பையா, திலோத்தமையா அல்லது ஊர்வசியா என்று அவர்களைக் காணாத காரணத்தினால் சொல்ல முடியாது என்றாலும். பூலோக ரம்பை என்பதை சிறிது மாற்றம் செய்து பூகோள ரம்பை என்று அவளுக்குக் காரணப் பெயர் சூட்டியிருப்பதாகவும் நாணா தன் அறிக்கையில் மேலும் தெரிவித்திருந்தான்.

    'பசிபிக் கடலாகத் தளும்பிய தன் ஆழ்ந்த பூகோள அறிவை பாற்கடலாக நினைத்து சிவு அறிவுத் தாகத்துடன் பருக வந்திருக்கிறான்' என்று, மனப்பால் குடித்துக் கொண்டிருந்த குமாரசாமி சாருக்கு, சுமி தன் பரந்த முதுகின் பின்னால் நின்று கொண்டு சிவு ஒளிபரப்பும் காதல் சிக்னல்களை வாங்கி கிரகித்துக் கொள்கிறாள் என்கிற விவரம் தெரியாமல் போனது. இமயமலை போன்ற உருவம் கொண்ட அவரால் சட்டென்று ஓரிரு டிகிரிகளில் கூடத் திரும்ப முடியாததின் காரணத்தினால் தான் என்று சிவுவே படு ரகசியமாகச் சொன்னதாக நாணா எங்கள் எல்லோரிடமும் பகிரங்கமாகச் சொன்னான்.

    காதலர்கள் பாதை சமீபத்தில் போட்ட சிமென்ட் ரோடு போன்று வழவழவென்று இல்லாமல் கரடுமுரடாகத்தான் இருக்கும் என்பது கவிகளின் கூற்று. இதன்படி சிவுவின் காதலுக்கு வில்லனாக வந்தது கரடு முரடான விஷயம் அல்ல. தின்னும் போது கடுக் முடுக்கென்று சப்த ஜாலங்களை எழுப்பும் நமுக்காதத் தின்பண்டம் ஒன்றுதான். அதை நாணாவே சிவு சொன்னபடி விவரித்தான்.

    சனிக்கிழமை அன்று டியூஷனுக்கு வந்த சிசுவின் சட்டைப் பை துருத்தி இருந்ததைப் பார்த்து குமாரசாமி சார் கேட்டாராம்.

    'சொக்கா பாக்கட்டிலே என்னடா?'

    'தட்டை சார்.'

    'எங்கே? எடு? பார்ப்போம்?'

    சிவு காண்பித்த தட்டை பொன்னிறத்தில் மொறுமொறு என்று கடிக்கப் பதமான நிலையில் தயார் நிலையில் இருந்தது. தட்டையின் விஸ்தீரணத்தின் இடையில் ஓரிரு கறிவேப்பிலை இலைகள் மரகதக் கற்களாகப் பதிக்கப்பட்டு டிஸைனர் தட்டையாகக் காட்சி அளித்தது. அதைப் பார்த்த பூகோள சாரின் முகம் ஆப்பிரிக்கக் கண்டம் காங்கோ காடாக இருண்டது.

    'சுமி இங்கே வாடீ!' என்று உடனே கர்ஜித்தாராம்.

    தயங்கி வந்த சுமியை விழித்துப் பார்த்து, 'மேலாக்கை உதறுடி' என்று உறுமினாராம்.

    மேலாக்கு உதறலுடன் உதறப் பட்டது. அங்கிருந்து விழுந்த இரண்டு தட்டைகளை சிலம்புகளாகப் பார்த்து, ஒரு கண்ணகியின் சீற்றத்துடன், 'இது ஏது? பாண்டி ஆட வந்த புவனா குடுத்ததா பொய் சொன்னியே? இவன் கொடுத்ததா?’

    ‘ஆமாம்பா எனக்கு தட்டைன்னா பிடிக்கும். தட்டைதான் எனக்கு உலகம்' என்று சுமி வழிந்தபடி சொன்னாளாம். 'எனக்கும் சார்,' என்று, சிவு வழிமொழிந்து சைடு எடுத்தானாம்.

    'என்னது தட்டைதான் உலகமா? முட்டாள்களா. உலகம் தட்டை இல்லேடா... இல்லேடி. உருண்டை' என்று கத்தி விட்டு, 'ஏண்டா? தட்டையைக் குடுத்து பெண்ணை மயக்கப் பாக்கிறயா? பர்வதம், பூண் போட்ட வாக்கிங் ஸ்டிக்கைக் கொண்டு வாடி. பீரோ பின்னாடி இருக்கு' என்று, சமையலறையைப் பார்த்து குரல் கொடுத்தவுடன் சிவு ஓட்டம் பிடித்தானாம்.

    மறு வாரம் நாணாவின் அப்பாவிடம் குமாரசாமி சார் பேசிக் கொண்டிருந்தாராம்.

    'எங்க சார், நாலு நாளாக் காணும்.'

    'பெண்ணை மயிலாப்பூர்லே தம்பி வீட்டில் விட்டுட்டு வந்தேன். அங்கே கேர்ள்ஸ் ஸ்கூலில் சேத்துட்டேன். நம்மூரில் கோ எஜுகேஷன் ஸ்கூல் தானே?’

    'பருவ நிலை மாற்றங்களுக்கு கோ எஜுகேஷன் ஸ்கூல் தோதுப் படாது இல்லையா?' என்று பூகோளத்துடன் பொருந்தும் சிலேடையுடன் கேட்டாராம்.

    குமாரசாமி சார் நாணாவின் அப்பாவை முறைத்துப் பார்த்து விட்டு 'ஆமாம்'

    Enjoying the preview?
    Page 1 of 1