Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vari Variyaga Siri
Vari Variyaga Siri
Vari Variyaga Siri
Ebook307 pages1 hour

Vari Variyaga Siri

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நகைச்சுவையில் குளிர் காய்வது ஓர் இனிய சுகம். சொற்களை சிக்கிமுக்கிக் கற்களாகத் தட்டி, தெறித்த புன்னகைப் பொறிகளை வேள்வித் தீயாக வளர விடுபவர்கள் மிகச் சிலரே. நகைச்சுவைத் தீயில் 'புகைச்சல்' இருக்காது, நீர் வந்தாலும் கண்கள் எரியாது, சூழ்நிலை மாசுபடாது என்று இருப்பினும்...

...இவ்வாறு ஒரு நகைச்சுவைத் தொகுப்பின் முன்னுரையை ஆரம்பிப்பது ஒரு ஜாலியான தேநீர் விருந்தை ‘கொசகொச' புளி உப்புமாவுடன் தொடங்குவது போலாகும் என்பதால் மேற்படி பாராவை டெலிட் செய்துவிட்டு மெனுவை மாற்றி விடுகிறேன்.

சினிமா தியேட்டரில் ஒருவர் தன் நாயுடன் படம் பார்த்துக் கொண்டிருந்தார். வாலை ஆட்டியும், முனகல் சத்தம் போட்டும் நாய் சினிமாவை ரசிப்பதைப் பார்த்து வாயைப் பிளந்த பக்கத்து சீட்டுக்காரர், “என்ன அதிசயம் சார் உங்க நாய் படத்தை ரசிக்கிறதோ!" என்று கேட்டாராம்.

“எனக்கும் ஆச்சரியமா இருக்கு. இந்த சினிமாவோட கதையை நாவலாகப் படிச்சபோது அதை ஜிம்மி துளிக்கூட ரசிக்கவில்லை.”

படிப்பதைவிடப் பார்ப்பதை விரும்பி நாடும் தற்காலத்தில் நகைச்சுவை எழுத்துக்கு சாமரங்கள் வீசப்படுவது இல்லை. சிரிப்பதையே ஏதோ சாமி குத்தம் போலக் கருதி, விரட்ட வேண்டிய கவலைகளை வளரவிட்டு, முகத்தை காய்ந்த, இஸ்திரி போடாத காடா துணியாகச் சுருக்கிக் கொள்ளும் மனிதர்கள், சிரிப்பு என்கிற செலவில்லாத மருந்தை பாட்டி வைத்திய சுக்கு கஷாயத்தைப் போலப் புறக்கணிப்பது கொடுமை.

சிறு வயதில் சிரிப்பு மூட்டும் விளையாட்டில் சிறுவன் நெம்பர் ஒண்ணு கைகளைக் கட்டி, வாயை சிறு கிறுக்கலாக மூடி, படு சீரியஸாக நிற்க, அவனைச் சிரிக்க வைக்க வேண்டிய சிறுவன் நெம்பர் இரண்டு முகத்தை அஷ்டகோணலாக்கி, மூக்கை நாக்கு நுனியால் தொட்டு, 'வெவ்வெவ்வே' காட்டி முயற்சி செய்வான். விளையாட்டின் ஸப் - ரூல் (3)(ஏ) யின்படி கிச்சு கிச்சு மூட்டக் கூடாது. மிமிக்ரி செய்யக்கூடாது. செஞ்சால் அழுகுணி. அவ்வாறு சிரித்தவர்கள், சிரிக்க வைத்தவர்கள் பெரியவர்கள் ஆனவுடன் சலிப்பு என்கிற முகமூடியை அணிந்து விடுகிறார்கள். சிரிப்பை பாக்கெட் கிழிந்த அரை டிராயரில் தொலைத்து விடுகிறார்களோ?

சிரிப்பது சுலபம். சிரிக்க வைப்பதுதான் கடினம்.

"உங்களுக்குக் கலகலப்பாக, நகைச்சுவையாக எப்படி எழுத வருகிறது?" என்று கேட்டபோது பழம் தின்னும் (உள்ளங்களை) தேட்டை போட்ட சீனியர் சிரிப்பு எழுத்தாளர் ஒருவர் அமர்த்தலாகச் சொன்னார். "ரொம்ப ஈசி. வெத்துப் பேப்பர் பேனாவுடன் உட்கார வேண்டியது. மோட்டு வளையை ஆராய வேண்டியது. நெத்தியில் முத்து முத்தா ரத்தம் அரும்பும் வரை சிந்திச்சா, தானே ஹ்யூமர் எழுத வருது கழுதை. நீங்களும் முயற்சி பண்ணிப் பாருங்களேன்."

- ஜே.எஸ்.ராகவன்

Languageதமிழ்
Release dateOct 4, 2019
ISBN6580127204622
Vari Variyaga Siri

Read more from J.S. Raghavan

Related to Vari Variyaga Siri

Related ebooks

Related categories

Reviews for Vari Variyaga Siri

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vari Variyaga Siri - J.S. Raghavan

    http://www.pustaka.co.in

    வரி வரியாகச் சிரி

    Vari Variyaga Siri

    Author:

    ஜே. எஸ். ராகவன்

    J.S. Raghavan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/js-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. கேள்வியும் நானே! பதிலும் நானே!

    2. சஞ்சல நாராயணன்

    3. 'வாஸ்து'வமா பார்க்கணுமா?

    4. ‘அளவில்லா’ ஆனந்தம்

    5. சாம்பார் முழுக்கு

    6. கிலி ஜோஸ்யம்

    7. தொடாதே! புஸ்தகத்தைத் தொடாதே!

    8. வெற்றிலை 'செல்லம்'

    9. நகைச்சுவை சம்பத்து!

    10. நைட் வாட்ச்மேனின் விழிப்புணர்ச்சி

    11. 'ஆன்ட்டி’ டெடானஸ்

    12. அறுசுவை அடியார்கள்

    13. பூனைகள் முகாம்

    14. புள்ளி (விவர) ராஜாவுக்கு...

    15. 'ஆபிச்சுவரி' அய்யாசாமி

    16. எலக்ட்ரிகல் சூப்பர்மேன்!

    17. கிண்டியில் கஞ்சி

    18. நான் அப்பவே சொன்னேன்...

    19. சின்னத்திரை ‘மாமியார்’

    20. சைகை சக்ரபாணி

    21. 'புக்'ககம்

    22. தேங்காய் உடைக்க ஒரு மெஷின்!

    23. மவுனத்தைப் பற்றி சிறிது சத்தம்!

    24. ஷேக்ஸ்பியரா? ஷேர்பிரியரா?

    25. எருமையா? சிறுமையா?

    26. பாத்திரகாளி

    27. முடியாதோர் இல்லம்

    28. 'கண்டலன்ஸ்' குப்புசாமி

    29. 'ஆரோ, இவர் யாரோ'

    30. நம்ம ஊரு ஷாம்பெயின்!

    31. மின்(ரயில்) துயில்!

    32. ஆகாய ஜட்கா!

    33. இங்கித கலாநிதி!

    34. மிஸ்டர் கிளிகேசி

    35. மெனு-மீனு-ஜானு!

    36. புத்தாண்டு ஹரிச்சந்திரன்

    37. சுவரை மறந்து சித்திரமா?

    38. மெகா சீரியல் மனைவி

    39. தொன்னையில் ஐஸ்க்ரீம்

    40. 'பெளடர்மேன்'

    41. அமெரிக்க பாலாஜி

    42. அமெரிக்க புஷ்வாணம்

    43. பேபி ஷவர்

    44. உணவு மியூஸியம்

    45. அமெரிக்காவில் வெஞ்ச்சு

    46. அருவியில் இரு குருவிகள்

    47. அருள்மிகு பச்சையம்மன்

    48. சில அமெரிக்க தமாஷ்கள்

    49. லாஸ் வேகாஸ் கல்யாணம்

    50. மூன்று 'சீரியல்கள்'

    51. மீண்டும் பௌடர்மேன்

    52. ஜெட் லாக்

    53. தலைக்கு வருவது

    54. அமெரிக்க அரிசி

    முன்னுரை

    நகைச்சுவையில் குளிர் காய்வது ஓர் இனிய சுகம். சொற்களை சிக்கிமுக்கிக் கற்களாகத் தட்டி, தெறித்த புன்னகைப் பொறிகளை வேள்வித் தீயாக வளர விடுபவர்கள் மிகச் சிலரே. நகைச்சுவைத் தீயில் 'புகைச்சல்' இருக்காது, நீர் வந்தாலும் கண்கள் எரியாது, சூழ்நிலை மாசுபடாது என்று இருப்பினும்...

    ...இவ்வாறு ஒரு நகைச்சுவைத் தொகுப்பின் முன்னுரையை ஆரம்பிப்பது ஒரு ஜாலியான தேநீர் விருந்தை ‘கொசகொச' புளி உப்புமாவுடன் தொடங்குவது போலாகும் என்பதால் மேற்படி பாராவை டெலிட் செய்துவிட்டு மெனுவை மாற்றி விடுகிறேன்.

    சினிமா தியேட்டரில் ஒருவர் தன் நாயுடன் படம் பார்த்துக் கொண்டிருந்தார். வாலை ஆட்டியும், முனகல் சத்தம் போட்டும் நாய் சினிமாவை ரசிப்பதைப் பார்த்து வாயைப் பிளந்த பக்கத்து சீட்டுக்காரர், என்ன அதிசயம் சார் உங்க நாய் படத்தை ரசிக்கிறதோ! என்று கேட்டாராம்.

    எனக்கும் ஆச்சரியமா இருக்கு. இந்த சினிமாவோட கதையை நாவலாகப் படிச்சபோது அதை ஜிம்மி துளிக்கூட ரசிக்கவில்லை.

    படிப்பதைவிடப் பார்ப்பதை விரும்பி நாடும் தற்காலத்தில் நகைச்சுவை எழுத்துக்கு சாமரங்கள் வீசப்படுவது இல்லை. சிரிப்பதையே ஏதோ சாமி குத்தம் போலக் கருதி, விரட்ட வேண்டிய கவலைகளை வளரவிட்டு, முகத்தை காய்ந்த, இஸ்திரி போடாத காடா துணியாகச் சுருக்கிக் கொள்ளும் மனிதர்கள், சிரிப்பு என்கிற செலவில்லாத மருந்தை பாட்டி வைத்திய சுக்கு கஷாயத்தைப் போலப் புறக்கணிப்பது கொடுமை.

    சிறு வயதில் சிரிப்பு மூட்டும் விளையாட்டில் சிறுவன் நெம்பர் ஒண்ணு கைகளைக் கட்டி, வாயை சிறு கிறுக்கலாக மூடி, படு சீரியஸாக நிற்க, அவனைச் சிரிக்க வைக்க வேண்டிய சிறுவன் நெம்பர் இரண்டு முகத்தை அஷ்டகோணலாக்கி, மூக்கை நாக்கு நுனியால் தொட்டு, 'வெவ்வெவ்வே' காட்டி முயற்சி செய்வான். விளையாட்டின் ஸப் - ரூல் (3)(ஏ) யின்படி கிச்சு கிச்சு மூட்டக் கூடாது. மிமிக்ரி செய்யக்கூடாது. செஞ்சால் அழுகுணி. அவ்வாறு சிரித்தவர்கள், சிரிக்க வைத்தவர்கள் பெரியவர்கள் ஆனவுடன் சலிப்பு என்கிற முகமூடியை அணிந்து விடுகிறார்கள். சிரிப்பை பாக்கெட் கிழிந்த அரை டிராயரில் தொலைத்து விடுகிறார்களோ?

    சிரிப்பது சுலபம். சிரிக்க வைப்பதுதான் கடினம்.

    உங்களுக்குக் கலகலப்பாக, நகைச்சுவையாக எப்படி எழுத வருகிறது? என்று கேட்டபோது பழம் தின்னும் (உள்ளங்களை) தேட்டை போட்ட சீனியர் சிரிப்பு எழுத்தாளர் ஒருவர் அமர்த்தலாகச் சொன்னார். ரொம்ப ஈசி. வெத்துப் பேப்பர் பேனாவுடன் உட்கார வேண்டியது. மோட்டு வளையை ஆராய வேண்டியது. நெத்தியில் முத்து முத்தா ரத்தம் அரும்பும் வரை சிந்திச்சா, தானே ஹ்யூமர் எழுத வருது கழுதை. நீங்களும் முயற்சி பண்ணிப் பாருங்களேன்.

    ஜே.எஸ்.ராகவன்

    *****

    1. கேள்வியும் நானே! பதிலும் நானே!

    கேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் கிடைப்பதில்லை என்ற வேதாந்தப் புலம்பல் ஒரு பக்கம் இருந்தாலும், 'கேட்கப்படும் கேள்விக்கெல்லாம் பதில்கள் தெரிவதில்லை’ என்ற மாணவர்களின் அங்க வாய்ப்பை மனத்தில் கொண்டு, 'கேள்வியும் நானே, பதிலும் நானே' என்ற ரீதியில் புனையப்பட்ட ஒரு ஜாலியான பொது அறிவுக் கேள்விகளின் அவியல் இதோ!

    (குறிப்பு: இம்மி அளவுகூட மூளையை உபயோகித்து அதைப் பழசாக்க விரும்பாத மாணவர்கள் இந்த கேள்வி வங்கிக்குள் நுழைய வேண்டாம்.)

    1. தேசத் தந்தை மகாத்மா காந்தியின் சுயசரிதத்தை எழுதியவர் யார்?

    2. கர்நாடக சங்கீத வித்வான் கான கலாதர மதுரை மணி - ஐயரின் சொந்த ஊர் எது?

    3. பிரபல அமெரிக்க 'நியூஸ் வீக்' பத்திரிகை வார இதழா? மாத இதழா?

    4. காமெடி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி எந்தத் தமிழ்ப் படத்தில் முதலில் தோன்றினார்?

    5. ஹென்ரி ஃபோர்டு தயாரித்த காரின் பெயர் என்ன?

    6. ஸ்டேட் தி நேம் ஆஃப் எ பாங்க் இன் இண்டியா?

    7. மகாராஜா ஆஃப் பாட்டியாலா ஆண்ட சமஸ்தானத்தின் பெயர் என்ன?

    8. சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்படும் நிஜாமுதீன் ராஜ தானி எக்ஸ்பிரஸ் போய்ச் சேரும் ஊர் பெயரைக் குறிப்பிடுக.

    9. முதுகெலும்பு உடம்பின் எந்தப் பகுதியில் உள்ளது?

    10. ஒரு மியூசியத்தில் இரண்டு மண்டை ஓடுகளைக் காட்டி, முதலாவது கிளியோபாட்ரா சிறுமியாக இருந்தபோது, இரண்டாவது அவள் பெரியவளானபோது என்று ஒரு கைடு சொன்னார். இது சரியா? தவறா?

    11. அதிகாலையில் கோழிக்கோட்டில் மலையாளிகளை உரக்கக் கூவி எழுப்பும் பறவை எது?

    12. வாயில்லாப் பூச்சி 'டிர்ர்ர்'ரென்று சத்தம் போடுமா? போடாதா?

    13. இரண்டு எதிரி நாடுகளின் எல்லைக் கோட்டின் மேல் ஒரு விமானம் விழுந்து நொறுங்கினால், உயிர் பிழைத்தவர்கள் எந்த நாட்டில் அடக்கம் செய்யப்படுவார்கள்?

    14. மூன்று முறை உலகம் சுற்றி வந்த கொலம்பஸ் எந்தச் சுற்றின் போது உயிர் துறந்தார்?

    15. வரும் 2008 லீப் வருடத்தில் கிருத்துவர்களின் புனித நாளான 'குட்' ஃப்ரைடே எந்தக் கிழமையில் வரும்

    16. எப்போதும் புற்றிலேயே சுருண்டு இருக்கும் பாம்புக்குப் புற்றுநோய் வருமா?

    17. 'வளையாபதி வாளா இல்லாமல் வாள், வாள் என்று கத்திச் சண்டை போட்டான்' என்ற வாக்கியத்தில் மிளிரும் சிலேடையை விளக்குக.

    18. கணக்கில் ஒரு மாணவன் பதினேழுக்கு ஸைபர் மார்க் வாங்கியிருந்தால் நூற்றுக்கு எவ்வளவு?

    19. இருபத்தி ஒன்பது நாள்கள் மட்டுமே உள்ள ஸ்ரீ சுபானு வருட கார்த்திகை மாதத்தில், அமாவாசைக்கு அடுத்த எந்த நாளில் மூன்றாம் பிறை தோன்றும்?

    20. 'பத்து, ஒன்பது, எட்டு...' என்று கௌன்ட் டெளன் செய்யப் படும் ஏவுதளத்தில் எந்த நெம்பர் வந்தவுடன் ராக்கெட் மேலே கிளம்பும்?

    21. 'ஒரு நாள் போதுமா?' என்ற திருவிளையாடல் பட ராகமாலிகைப் பாடலில் 'மோகனச் சுவைதானன்றோ... என்ற வரி எந்த ராகத்தில் பாடப்பட்டுள்ளது?’

    22. காதணிகள், காலணிகள், கையுறைகள் எங்கெங்கே அணியப் படுகின்றன?

    23. குதிரைக்கும் வரிக்குதிரைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை ஒரே வரியில் எழுதவும்.

    24. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் விளையும் முக்கியமான தானியம் எது?

    25. வளர்பிறையின் முடிவில் வருவது அமாவாசையா? அல்லது பவுர்ணமியா?

    26. பகலில் நட்சத்திரங்கள் சூரிய ஒளியால் தெரிவதில்லையே? அவை எங்கே போகின்றன?

    27. பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான் கூலியாகப் பெற நினைத்தது எதை?

    28. சிவபெருமானின் வாகனத்தின் பெயர் என்ன? தூய தமிழில் விடை கூறவும்.

    29. பரத நாட்டியத்தில் தில்லானா மோகனாம்பாள் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்த ஆட்டத்தின் பெயர் என்ன?

    30. தசாவதாரங்களில் எந்த அவதாரம் ஒரு பிரபல வாரப் பத்திரிகையின் பெயரில் அமைந்துள்ளது?

    31. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மீண்டும் கைப்பற்றிய பாண்டிய நாட்டின் தலைநகர் எது?

    32. 'வீரகேசரி சூளுரைத்தார்', 'ரயில் பாதை அருகில் சப்பாத்திக் கள்ளிகள் மண்டியிருந்தன', 'நந்தனார் தில்லையை அடைந்தார்', 'பெரியச்சாமியின் பூரிப்பு முகத்தில் தெரிந்தது’ இச்சொற்றொடர்களில் ஒளிந்துள்ள டிஃபன் ஐட்டங்கள் யாவை?

    33. 'தலைவர் அடிபட்ட ஊர் செங்கல்பட்டு, என்ற செய்தியில் தலைவர் எவ்வாறு அடிபட்டார் என்ற விவரம் சூசகமாகச் சொல்லப்பட்டுள்ளது. அது என்ன?

    34. முச்சந்தி, நாற்சந்தி என்று குறிப்பிடப்படும் இடங்களில் எவ்வளவு சாலைகள் சந்தித்துக் கொள்கின்றன?

    35. நீராவி எஞ்சினை இயக்கிச் செலுத்தும் சக்தி எது?

    36. புள்ளி வைத்துப் போடப்படும் கோலங்களில் முதலில் போடப்படுவது புள்ளிகளா? கோடுகளா?

    37. சென்னையிலிருந்து பெங்களூர் 340 கிலோமீட்டர் தூரம். பாதி வழியில், 'பெங்களூர் 170 கிலோமீட்டர்’ என்று எழுதப் பட்டுள்ள மைல் கல்லின் பின்னால் சென்னை எவ்வளவு தூரம் என்று எழுதப்பட்டிருக்கும்?

    38. மயிலாப்பூர் அறுபத்தி மூவர் உற்சவத்தின்போது வீதி உலா வரும் சுவாமிகளின் சரியான எண்ணிக்கை எவ்வளவு?

    39. 98.3 ரேடியோ மிர்ச்சியின் ஒலிபரப்பு மீட்டர் யாது?

    40. சரக்கு மாத்திரம் ஏற்றிச் செல்லும் கார்கோ விமானத்தில் ஜன்னல்கள் உண்டா? இல்லையா? ஏன்?

    41. 'அகராதி' என்ற சொல்லின் சரியான பொருள் அறிய எந்தப் புத்தகத்தை நாட வேண்டும்?

    42. பதினெட்டாம் பெருக்கு ஆடி மாதத்தில் எந்தத் தேதியில் கொண்டாடப்படுகிறது?

    43. ஏசுகிறிஸ்து பிறந்தது கி.மு.விலா? கி.பி.யிலா?

    44. கிருஷ்ணர் உண்பதற்காகத் தன் கணவர் குசேலர் மூலம் சுசீலை, ஒரு சிறு மூட்டையைக் கொடுத்து அனுப்பினாள், 'அவள்' கொடுத்த பொருள் யாது?

    45. 'வழுக்கைப் பிரச்னை தலை விரித்து ஆடுகிறது' என்ற பிரயோகத்தில் தொக்கி நிற்கும் முரண்பாடு எது?

    *****

    2. சஞ்சல நாராயணன்

    சங்கரநாராயணன் என்ற தன் பெயரை சஞ்சல நாராயணன் என்று சிலர் திரித்துக் குறிப்பிடுவதாக அறிந்த அவர், 'இதை மறுப்பதா? கண்டிப்பதா? ரசிப்பதா? கோபப்படுவதா? அல்லது கண்டும் காணாமல் விட்டு விடுவதா?’ என்ற சஞ்சலத்துடன் குழம்பியது உண்டு.

    கருவிலேயே திருவுடையவரான சங்கரநாராயணன் பிறக்க எடுத்துக் கொண்டது பன்னிரண்டு மாதங்கள் என்றும் அவரைக் கேலி செய்வதுண்டு. இப்போ பிறக்கலாமா? அப்புறம் பார்த்துப் பிறக்கலாமா? நாள் நட்சத்திரம் நல்லாயிருக்கா? இன்னிக்கு வேண்டாமே. நாளைக்கு ஆகட்டுமே என்ற குழம்பிய சிந்தனையுடன் இருந்தவர் அன்னையின் வயிற்றைக் கீறிக் கட்டாயமாக வெளிக் கொணரப்பட்டார் என்றும் சிலர் கூறுவர்.

    வெளியே வந்த சிசு சங்கரநாராயணன், பிறந்த குழந்தைகளைப் போல அழலாமா? வேண்டாமா? கபகபன்னு சிரிக்கலாமா? இல்லாவிட்டால் மவுனமாக இருந்து விடலாமா? என்ற சஞ்சலத்துடன் சத்தம் போடாமல் இருந்தபோது, பிரசவம் பார்த்த மருத்துவர் அவசர அவசரமாகப் பின்பக்கம் இரண்டு தட்டு தட்டியதின் வலியால் தன் குழப்பத்தை மீறி வீல் என்று ஆரம்பித்து, நீளமாக சங்கிலி கோர்த்த மாதிரி அழாமல், தொடர்ந்து அழலாமா? வேண்டாமா? என்ற அடுத்த குழப்பத்துடன் விட்டுவிட்டு அழுததாகவும் அவரை சதாய்ப்பது உண்டு.

    ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் வெட்கிக், குனியும் வகையில் குழப்பத் திலகமாக வாழ்க்கையில் குழம்பி வந்த சங்கர நாராயணன், சிறு வயதிலேயே இயற்கையின் உந்துதல் ஏற்பட்டால்கூட உடனே உந்துதலின் தீவிரத்தைப் பொறுத்து மற்றவர்கள் போல் பாத்ரூமுக்குள் மின்னலாக ஓடியோ, நத்தையாக நடந்தோ நுழையாமல், 'இப்போதே போகலாமா? இன்னும் தள்ளிப் போடலாமா?’ என்று தீவிரமாக சிந்தனை வயப்படுவான்.

    டேய் சங்கு, பாத்ரூம் இப்போ போகலாமா, வேண்டாமா? நேரம் நன்னா இருக்கா இல்லையா?ன்னு பஞ்சாங்கத்தைப் பார்த்து முடிவெடேண்டா. ஆனா அதிலேயும் பெரிசா ஒரு குழப்பம் இருக்கில்லையா? எந்தப் பஞ்சாங்கத்தைப் பார்க்கிறது? பாம்புப் பஞ்சாங்கமா? மடத்துப் பஞ்சாங்கமா? மருத்துவக்குடிப் பஞ்சாங்கமா? இல்லே சீரங்கம் வாக்யப் பஞ்சாங்கமா...? என்று அவன் அம்மா சலித்துக் கொள்வாள்.

    முடிவு எடுப்பது என்பது சங்கு என்கிற சங்கரநாராயணனுக்கு முடியாத காரியம். எந்தப் பெண்ணின் கையைப் பிடிப்பது என்பதில் எதிலேயும் பளிச் பளிச்சென்று முடிவெடுப்பவர்களே திணறும்போது, சங்கரநாராயணன் குழம்பித் தத்தளித்துக் கல்யாணம் செய்துகொண்டது நாற்பது வயதில், அதுவும் அவர் எடுத்த முடிவால் அல்ல.

    உறவுக்காரப் பெண்ணின் கல்யாணத்தின்போது சம்பந்தி சண்டையால் திருமணம் தடைப்பட, மாலையும் கண்ணீருமாக இருந்த அந்தப் பெண்ணுக்கு சங்கரநாராயணனை மனையில் அமுக்கி உட்கார வைத்துத் தாலிகட்ட வைத்து விட்டனர். பிறந்தவுடன் அழுவதா? சிரிப்பதா? என்ற குழம்பிய நிலையில் இருந்தது போல், மணமேடையில் அழுவதா? சிரிப்பதா? என்று குழம்பிய சங்கரநாராயணனுக்கு, பெரிய மாமா பிரசவ அறை மருத்துவரைப் போல அவர் முதுகில் தட்டிய வேகத்தில் கண்களிலிருந்து நீர் வந்தது. ஒரே புகை என்று ஹோமத்தின் மேல் பழியைப் போட்டு சங்குவின் அம்மா சமாளித்தாள்.

    ஆமை வேகத்தில் செயல்புரியும் அரசாங்க அலுவலகத்தில் பணி புரிந்து வந்த சங்கரநாராயணன் மேற்படி ஆமையை வயது முதிர்ச்சியாலும், கால்களில் வந்த வாயுப் பிடிப்பினாலும் மாமூலான வேகத்தில் தொண்ணூறு விழுக்காடுகள் குறைந்தது போலச் செயல்பட வைத்தார். "ஒரு ஃபைலைச் சுற்றி 'அர்ஜென்ட்' என்கிற வெளிர் சிவப்பு நாடாவைக் கட்டலாமா? அல்லது 'ஆர்டினரி’ என்கிற ரத்தச் சிவப்பு நாடாவைக் கட்டி அடுத்த டேபிளுக்கு அனுப்பலாமா? என்று சங்கரநாராயணன் யார் முடிவெடுப்பதற்குள்ளேயே மாசங்கள் ஓடிவிடும்' என்று ‘டீ சாப்பிடலாமா? அல்லது காப்பி சாப்பிடலாமா? என்று நிமிடங்களாக குழம்பிய நிலையில் இருக்கும் அவரைப் பார்த்து பியூன் பங்காரு பக்தி கலந்த மரியாதையுடன் வியப்பான்.’

    ‘சங்கரநாராயணனிடம் வந்த பெர்த் சர்டிபிகேட் அப்ளிகேஷனை அவர் நன்றாக ஆராய்ந்து, அலசி, 'கொடுக்கலாம்' என்று முடிவு எடுப்பதற்குள் அந்த சர்டிபிகேட்டின் நாயகன் அல்லது நாயகிக்கு டெத்

    Enjoying the preview?
    Page 1 of 1