Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ezhu Swarangal Paadum Kathaigal
Ezhu Swarangal Paadum Kathaigal
Ezhu Swarangal Paadum Kathaigal
Ebook164 pages1 hour

Ezhu Swarangal Paadum Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'ஏழு ஸ்வரங்கள் பாடும் கதைகள்' என்ற இப்புத்தகம் ஏழு சிறுகதைகளின் தொகுப்பு. தத்துவத்திலும், நூல்களிலும், ஆன்மீகத்திலும் அறிவியலிலும் ஏதோ ஒரு வகையில் ‘ஏழு’ சேர்ந்துக் கொள்கிறது. ஆகையால் நானும் அதே கணக்கை எடுத்துக் கொண்டு உங்களுக்கு ஏழு சிறுகதைகளை சொல்ல விரும்புகிறேன். ஏழு கதைகளின் பெயர்களின் முதற் எழுத்து ஏழு ஸ்வரங்களின் எழுத்தாய் அமைத்து கதைகளை எழுத்திருக்கிறேன்.

நித்திரைத்துவம் - 'நி'

பரிதாபம் - 'ப'

தவம் - 'த'

மனிதம் - 'ம'

கதையும் காரணமும் - 'க'

ரிப்போர்ட் கார்டு - 'ரி'

ஸம்ரக்ஷணம் - 'ஸ'

எப்படி ஒவ்வொரு ஸ்வரமும் ஒவ்வொரு ராகத்தின் அடிநாதமாக விளங்குகிறதோ அதே போல் இந்த ஏழு கதைகளும் வித்யாசமாய் பல மனித உணர்ச்சிகளுக்கு அடிநாதமாக அமையும் என்று நம்புகிறேன்.

Languageதமிழ்
Release dateFeb 18, 2023
ISBN6580161309498
Ezhu Swarangal Paadum Kathaigal

Related to Ezhu Swarangal Paadum Kathaigal

Related ebooks

Reviews for Ezhu Swarangal Paadum Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ezhu Swarangal Paadum Kathaigal - Aravindh Subramanian

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    ஏழு ஸ்வரங்கள் பாடும் கதைகள்

    Ezhu Swarangal Paadum Kathaigal

    Author:

    அரவிந்த் சுப்பிரமணியன்

    Aravindh Subramanian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/aravindh-subramanian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஏழு ஸ்வரங்கள் பாடும் கதைகள்…

    1. ஸ்வரம்: நி

    நித்திரைத்துவம்

    2. ஸ்வரம்: ப

    பரிதாபம்

    3. ஸ்வரம்: த

    தவம்…

    4. ஸ்வரம்: ம

    மனிதம்

    5. ஸ்வரம்: க

    கதையும் காரணமும்

    6. ஸ்வரம்: ரி

    ரிப்போர்ட் கார்டு

    7. ஸ்வரம்: ஸ

    ஸம்ரக்ஷணம்

    சமர்ப்பணம்…

    மாதா பிதா குரு தோழன் தெய்வம்…

    கீழே விழுந்தாலும் மேலே எழுந்தாலும் கை கொடுத்து உதவி, கை தட்டி உற்சாகமூட்டி அன்பும், ஆதரவும் தரும் பெற்றோர் திருமதி. சிவஞானம், திரு. சுப்பிரமணியன், தமையன் திரு. அர்ஜுன் மற்றும் குடும்பத்தார்,

    அறியாமை போக்கும் குருவாய் திருமதி. லட்சுமி சுதா,

    பின்னின்று ஊக்கமளித்து, நல்ல இலக்கினை அடையும் பாதைகளை காண்பித்து தோள் கொடுக்கும் தோழமை திரு. ந. கார்த்திகேயன்,

    பிறப்பையும், இறப்பையும் கொடுத்து அதற்கிடையில் அனுபவத்தையும் கொடுக்கும் தெய்வத்துக்கும் இந்த எழுத்து சமர்ப்பணம்.

    ஏழு ஸ்வரங்கள் பாடும் கதைகள்…

    இந்த உலகமும், பிரபஞ்சமும், அறிவியலும், ஆன்மிகமும் ஏதோ ஒரு வகையில் ஏழோ ஏழின் தொகுதியையோ நமக்கு கணக்கு காட்டிக் கொண்டிருக்கிறது.

    1. வானவில்லில் ஏழு.

    கோபம், காமம், க்ரோதம், ஆத்திரம், ரத்தம் காட்டும் சிவப்பு.

    சமநிலை, குணமாதல் காட்டும் செம்மஞ்சள்,

    அறிவு, ஞானம், வெளிச்சம். கொடை, மங்களம் காட்டும் மஞ்சள்,

    சுபிக்க்ஷம், வளர்ச்சி, பசுமை, ஜனனம் காட்டும் பச்சை,

    புவனம், முடிவின்மை, காதல், நினைவு, அமைதி, நிம்மதி காட்டும் நீலம்.

    விழிப்புணர்வு, உள்ளுணர்வு, ஆன்மீக சிந்தனை, இறப்பு சொல்லும் கருநீலம்.

    படைப்பாற்றல், கற்பனை, ஆடம்பரம் காட்டும் ஊதா.

    2. வாரநாட்கள் ஏழு.

    3. ஆத்மா, உடல் மற்றும் மனமானது, நம் உடலில் இருக்கும் சக்கரங்கள் தரும் ஆற்றலைக்கொண்டு இயங்குகிறது. நாம் உயிர்வாழ்வதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் முக்கிய காரணியாக திகழ்வது இந்த சக்கரங்கள்தான். இந்த ஏழு சக்கரங்கள் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்னா சக்கரம், சகஸ்ரஹாரம்.

    4. இந்தியாவின் தாஜ்மஹாலை கொண்ட உலக அதிசயங்கள் ஏழு.

    5. நவீனயுகத்தில் வட, தென் அட்லாண்டிக் பெருங்கடல்கள், வட, தென் பசிபிக் பெருங்கடல்கள், இந்தியப் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல் ஆகிய பெருங்கடல்கள் ஏழு.

    6. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

    எழுமையும் ஏமாப் புடைத்து - குறள்

    ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்புக்கு மட்டும் அல்லாமல் அவனின் ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை கொண்டது என்று ஏழு பிறப்பினை கூறும் வள்ளுவம்.

    தேவராய் மக்களாய் விலங்காய் பறவையாய் ஊர்வனவாய் நீர்வாழ்வனவாய் தாவரமாய் ஏழு பிறப்பினைப் பற்றி ஆன்மீக நூல்கள் சொல்வதுண்டு.

    7. சிறுபாணாற்றுப்படையில்,

    மயிலுக்குப் போர்வை அளித்த பேகன்,

    முல்லைக்குத் தேர் தந்த பாரி,

    ஈர நன்மொழி கூறிய காரி,

    நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வனுக்கு (குற்றாலநாதருக்கு) அணிவித்த ஆய்,

    நெல்லிக்கனியை ஔவைக்கு அளித்த அதியமான்,

    நண்பர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நல்கிய நள்ளி,

    தன் குறும்பொறை நாடு முழுவதையும் கோடியர்க்கு (யாழ் மீட்டும் பாணர்க்கு) அளித்த ஓரி

    இவர்கள் கடையெழு வள்ளல்கள்.

    (சிறுபாணாற்றுப்படையில் அதிகன் எழுவரில் ஒருவனாகத் தொகுக்கப்பட்டுள்ளான். புறநானூற்றில் எழினி எழுவரில் ஒருவனாகத் தொகுக்கப்பட்டுள்ளான்)

    8. குமணன், சகரன், சகாரன், செம்பியன் (சிபிச் சக்கரவர்த்தி), துந்துமாரி, நளன், நிருதி ஆகிய எழுவரைத் தலையெழு வள்ளல்கள் எனத் தொகுத்துக் காட்டுவர்.

    9. சூரியன் தன் ஒற்றை சக்கர தேரில் பூட்டப்பட்ட குதிரைகள் ஏழு.

    10. பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹர்லோகம், ஜனோலோகம், தபோலோகம், சத்யலோகம், அதலலோகம், விதலலோகம், சுதலலோகம், தலாதலலோகம், மகாதலலோகம், ரஸாதலலோகம், பாதாளலோகம் என ஏழின் தொகுதியாய் உலகங்கள் ஈரேழு.

    11. நாலாயிர திவ்வியப் பிரபந்தம்:

    பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து

    பேரேன் என்று, என் நெஞ்சு நிறையப் புகுந்தான்

    கார் ஏழ், கடல் ஏழ், மலை ஏழ், உலகு உண்டும்

    ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே

    பொருள்: "திருப்பேர் நகரில் உள்ள பெருமான் இன்று வந்து நின்று என் உள்ளத்தில் புகுந்து இதைவிட்டுப் போகேன் என்று உறைகின்றான்.

    ஏழு மேகங்கள், ஏழு கடல்கள், ஏழு மலைகள் உள்ள இந்தப் பூமியை அப்படியே உண்டும், வயிறு நிறையாத, வயிற்றை உடைய அப்பெருமானை நான் உள்ளத்தில் சிறைப்படுத்திவிட்டேன்" என்று நம்மாழ்வார் ஏழைப் பாடுகிறார்.

    12. பிரம்மரின் நேரடி வழித்தோன்றல்கள் எழுவர். உலகம் தோன்றிய காலத்திலிருந்து உயிரினங்களை தோற்றுவிக்க படைப்பின் கடவுளான பிரம்மாவிற்கு உதவி புரிந்தவர்கள் இந்த எழுவர். இந்து சமயத்தில் அத்திரி, பாரத்துவாசர், ஜமதக்கினி, கௌதமர், காசியபர், வசிச்டர், விஷுவாமித்ரர் ஆகிய இவர்கள் சப்தரிஷி எனப்படுவோர்.

    13. யோகேசுவரி, மகேசுவரி, பிராம்மி, நாராயிணி, இந்திராணி, கௌமாரி, வராகி, சாமுண்டி என சக்தியின் அம்சங்கள் கொண்ட சப்த கன்னியர் ஏழு.

    கம்பனில், சுக்ரீவனுக்கு தன் வீரத்தை காட்டும் பொருட்டு, அண்டத்திற்கு மேலேழுந்த ஏழு மாமரங்களை ஒரே அம்பில் ஊடுருவி வீழ்த்தினான் ராமன்.

    14. பண்டைய யூதர்களுக்கு பழக்கம் ஒன்று உண்டு. மனதில் எழும் சஞ்சலத்துக்கு தங்கள் புனித நூலின் ஏதேனும் ஒரு பக்கத்தை திறந்து, தன் கண்ணில் படும் பாட்டிலிருந்து ஏழு பாடல் தள்ளி வரும் பாட்டில் ஏழாவது வரியை படிக்கும் நம்பிக்கை உண்டு. தன் மனக் கேள்விக்கு அந்த வரி ஒரு தீர்வையோ அல்லது தீர்விற்கான சாவியாகவோ இருக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை.

    15. கிரிக்கெட்டில் நம்பர் எழில் ஆடும் மகேந்திர சிங் தோனியை தெரியாதவர்கள் இருப்பார்களா என்ன?

    எல்லாவற்றிக்கும் மேல் இந்த உலகமும் பிரபஞ்சமுமே இயங்குவது ஒரு இசையிலும், தாளத்திலுந்தான். ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல், எத்தனை ராகம்.

    தத்துவத்திலும், நூல்களிலும், ஆன்மீகத்திலும் அறிவியலிலும் ஏதோ ஒரு வகையில் ‘ஏழு’ சேர்ந்துக் கொள்கிறது. ஆகையால் நானும் அதே கணக்கை எடுத்துக் கொண்டு உங்களுக்கு ஏழு சிறுகதைகளை சொல்ல விரும்புகிறேன்.

    ஏழு கதைகளின் பெயர்களின் முதற் எழுத்தை, ஏழு ஸ்வரங்களின் எழுத்தாய் அமைத்து கதைகளை எழுதியிருக்கிறேன்.

    நித்திரைத்துவம் - ‘நி’

    பரிதாபம் - ‘ப’

    தவம் - ‘த’

    மனிதம் - ‘ம’

    கதையும் காரணமும் - ‘க’

    ரிப்போர்ட் கார்டு - ‘ரி’

    ஸம்ரக்ஷணம் - ‘ஸ’

    எப்படி ஒவ்வொரு ஸ்வரமும் ஒவ்வொரு ராகத்தின் அடிநாதமாக விளங்குகிறதோ அதேபோல் இந்த ஏழு கதைகளும் வித்யாசமாய் பல மனித உணர்ச்சிகளுக்கு அடிநாதமாக அமையும் என்று நம்புகிறேன்.

    எழுத்தின் விமர்சனங்களை writingtoarvii@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    1. ஸ்வரம்: நி

    நித்திரைத்துவம்

    பயணிகளின் கனிவான கவனத்திற்கு வண்டி எண் ஒன்று இரண்டு ஆறு ஆறு ஒன்று சென்னை எழும்பூரிலிருந்து மதுரை வழியாக செங்கோட்டை செல்லும் பொதிகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆறாவது பிளாட்ஃபார்மிலிருந்து எட்டு மணி நாற்பது நிமிடத்திற்கு புறப்படும்

    என்று சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சங்கீதம் பாடிக் கொண்டிருந்த சமயமும் நான் உள்ளே வருவதும் சரியாக இருந்தது.

    ரயில் நிலையத்துக்கே உண்டான வாசமும், நாற்றமும் நாசிகளுக்குள்ளே ஊடுருவி மனதையும், உடம்பையும் ஏதோ செய்தது. வெள்ளையும் அரக்குமாய் ஹோவென்று நிற்கும் ரயில் நிலையம் ஒரு பிரமிப்புதான். வெறிச்சோடி போன இடமாக இதை நான் பார்த்ததேயில்லை. ரயில் பயணமென்றால் ஓர் அலாதிதான். எப்போது இங்கு வந்தாலும் பால்ய வயது ரயில் பிராயணமெல்லாம் மனதுக்குள் புகையாய் பரவுவதுண்டு. ஜன்னல் கம்பிகளின் வழியே கை வைத்து ரயில் காற்றை சுவாசித்து வேடிக்கை பார்ப்பதும், எதிரே போகும் ரயிலையும், ரேஸ் ஓடும் ரயிலையும், ரயில் தாண்டும் பாலங்களையும், தனியாய் ஓடும் தண்டவாளங்களுக்கு துணை தோழனாய் இன்னொன்று வந்து சேர்வதை பார்ப்பதெல்லாம் பால்ய சுகம்.

    நேரம் மணி 8 காட்ட, அம்மாவுக்கும் நான் ரயில் நிலையம் வந்ததாய் தகவலும் சொல்லியாயிற்று. ரயில் எனக்காக காத்துக்கொண்டிருந்தது. நான் ஏசி 3-டயரில் டிக்கெட் எடுத்திருந்தேன். டீ கடை, குளிர்பானக் கடை, புத்தக ஸ்டால்லென ரயில் நிலையத்துக்குரிய அடையாளங்கள் அழிப்பானில் அழிந்திடாத பென்சில் கவிதையாய் பிளாட்ஃபாரத்தில் தென்பட்டது. வழி நெடுக தொகுதியாய் ஜனம். ஆங்காங்கே போடப்பட்ட இரும்பு அமர்வரிசையில் அடக்கத்திற்கு அதிகமாய் ஜனம் நெருங்கி, பிதுங்கி, கீழேயும் மேலேயுமாய் பெட்டியும் படுக்கையுமாய் அமர்ந்திருந்தார்கள்.

    ஒரு மாமி, செவிட்டுக்கு தன் தொண்டையை கிழித்துக் கொண்டிருந்தது.

    "எத்தினி தரம் சொன்னேன், டிக்கெட்டை நல்லா பாருங்கோ பாருங்கோன்னு. நாளை எடுக்க வேண்டிய

    Enjoying the preview?
    Page 1 of 1