Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poomuthira Pazhamuthira Kayuthira
Poomuthira Pazhamuthira Kayuthira
Poomuthira Pazhamuthira Kayuthira
Ebook103 pages35 minutes

Poomuthira Pazhamuthira Kayuthira

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"பூமுதிர பழமுதிர காயுதிர" என்னும் இந்நாடக நூல், இரண்டு ஓலைச்சுவடிகளில் காணப்பட்ட இருவேறு பாடல்களின் அடிப்படையில் அரங்கேற்றம் செய்யப்பட்ட நாடகநூலாகும்.

Languageதமிழ்
Release dateApr 6, 2024
ISBN6580177010842
Poomuthira Pazhamuthira Kayuthira

Related to Poomuthira Pazhamuthira Kayuthira

Related ebooks

Reviews for Poomuthira Pazhamuthira Kayuthira

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poomuthira Pazhamuthira Kayuthira - Dr. Guru. Shunmuganathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பூமுதிர பழமுதிர காயுதிர

    (நாட்டுப்புறப்பாடல் - நாடகம் - திறனாய்வு - இனவரைவியல்)

    Poomuthira Pazhamuthira Kayuthira

    Author:

    முனைவர். குரு. சண்முகநாதன்

    Dr. Guru. Shunmuganathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/guru-shunmuganathan

    பொருளடக்கம்

    தோரணவாயில்

    அணிந்துரை

    1. பூமுதிர - பழம் உதிர

    2. பூமுதிர – பழமுதிர

    3. பூமுதிர பழமுதிர - நாட்டுப்புறப்பாடல்

    4. பூமுதிர பழமுதிர - திறனாய்வு

    5. பழமுதிர காயுதிர

    6 பழம் உதிர காயுதிர

    7. பழமுதிர காயுதிர - நாட்டுப்புறப்பாடல்

    8. பழமுதிர -காயுதிர

    9. இனவரைவியல்

    தோரணவாயில்

    பூமுதிர பழமுதிர காயுதிர என்னும் இந்நாடக நூல், இரண்டு ஓலைச்சுவடிகளில் காணப்பட்ட இருவேறு பாடல்களின் அடிப்படையில் அரங்கேற்றம் செய்யப்பட்ட நாடகநூலாகும்.

    இந்நூலில்,

    பூமுதிர பழமுதிர

    பழமுதிர காயுதிர

    என்னும் இருவேறு நாடகங்கள் இடம் பெற்றுள்ளன.

    இவ்விரு நாடகங்களிலுமே பழமுதிர என்னும் சொல் இடம் பெறுவதால், அச்சொல் பொதுச் சொல்லாகக் கருத்தாக்கத்திற்கொள்ளப்பட்டு நூலின் பெயர் பொதுவா ஒரே பெயராக

    பூமுதிர பழமுதிர காயுதிர

    என்றவாறு வடிவாக்கம் செய்யப்பட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறோம்.

    முன்ஏர் சென்றவழிச் செல்லும் பின்ஏர் என்றாற்போல நமக்குக் கிடைக்கப்பெற்ற ஓலைச்சுவடிகளில் காணப்பெற்ற நாட்டுப்புறப் பாடல்களை வழக்கம்போல் இந்நூலில் பதிவு செய்தோம்.

    ஆனால் அத்துடன் அமையாமல், ஓலைச்சுவடிகள் பதிப்பு முறையில் முன் உதாரணமாகவும். முதல் உதாரணமாகவும் திகழ்ந்திடும் வகையில் இவ்விரு ஓலைச்சுவடிகளில் காணப்பெற்ற இரு பாடல்களையும் இரு நாடகங்களாக வடிவமைத்து இந்நூலிலேயே உங்கள் முன்னிலையில் அரங்கேற்றம் செய்தோம் என்ற கருத்தினைப் பகிர்ந்துகொள்வதிலும் மகிழ்கிறோம்.

    அன்றியும் இப்பாடல்களின் மீதான திறனாய்வுக் கருத்துக்களையும், இப்பாடலிகளில் சுட்டிக்காட்டப்பட்ட மொத்தமுள்ள இரு சமுதாயத்தினர் குறித்து இனவரைவியலையும் மேலும் மேலும் வளர்ந்திடும் இளம் ஆய்வாளர்களுக்குப் பயன்படும் எனும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் படம் பிடித்துக்காட்டியுள்ளோம் என்பதையும் பாங்குறப் பகர்வதில் பெரிதும் மகிழ்கிறோம்.

    இந்நூலுக்கு அழகியதோர் அணிந்துரை நல்கி உதவிய ஆற்றல் சால் பேராசிரியர் முனைவர் கட்டளைக் கைலாசம் (தமிழ்த்துறைத்தலைவர்(ப.நி)மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி - திருநெல்வேலி) அவர்களுக்கு என்றென்றும் நன்றிக் கடப்பாடுடையோம் என்பதில் பெரிதும் மகிழ்கிறோம்.

    ஆசிரியர்.

    அணிந்துரை

    முனைவர். வே. கட்டளை கைலாசம் M.A.,(பொருளியல்எம்.எஸ்.ஸி.(யோகா) M.Ed.,M.Phil., Ph.d., தமிழ்த்துறைத் தலைவர் (ப.நி.) ம.தி.தா. இந்துக்கல்லூரி, திருநெல்வேலி - 10

    பூமுதிர பழமுதிர காயுதிர (நாட்டுப்புறப்பாடல் - நாடகம் திறனாய்வு -இனவரைவியல்) என்னும் இந்நூல் தமிழ் வரலாற்றில் வியப்பூட்டும் வண்ணம் எழுதப்பட்டுள்ள முதல் முயற்சியாகும். தமிழ் உலகிற்குக் கிடைத்துள்ள இந்நூல் தனித்துவம் வாய்ந்தது.

    இந்நூலாசிரியர் சிறைத்துறையில் மண்டல நன்னடத்தை அதிகாரி பணி, சிறந்த கல்லூரியொன்றில் தமிழியற்புலத்தில் பணி, உயர் நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியர் பணி, போன்ற பல்வேறு பணிமுகங்களைக் கொண்ட பண்பாளர். பன்முகப் பான்மையாளராகிய வித்வான் முனைவர். கு. சண்முகநாதன் M.A., M.Sc.,M.Phil., Ph.d., அவர்களின் அரிய படைப்புகளில் ஒன்றாக இந்நூல் திகழ்கிறது.

    சிறந்த நூல்களுக்கான தமிழக அரசின் விருதினை ஏற்கனவே சித்தமருத்துவம் நாட்டுப்புறவியல் ஆகியன தொடர்பான தமது நூல்களுக்கு இவர் பெற்றுள்ளார்.

    இவரது இருபத்தி ஒன்றாவது நூலான இந்நூலுக்கு அணிந்துரை வழங்குவதில் நான் பெரிதும் மகிழ்கிறேன்.

    சிற்றூர்களிலிருந்தும், பேரூர்களிலிருந்தும் ஓலைச்சுவடிகளைத் தேடிக் கண்டறிவதிலும், செப்பேடுகளைத் தேடி ஒடுவதிலும் உள்ள பேரளவிலான சிரமங்களை நான் முற்றிலுமாக நன்கு உணர்வேன் ஏனெனில் நான் அரிய பலவகை ஓலைச்சுவடிகள், சில செப்பேடுகள் ஆகியவற்றைக் கண்டறிந்து அவற்றைப் பதிப்பித்து நூல்களாக வடிவமைத்து வெளியிட்டுள்ளேன்.

    ஓலைச்சுவடிகள், செப்பேடுகள் ஆகியன குறித்த நிலை இவ்வாறிருக்க, இந்நூலாசிரியர் இரு ஓலைச்சுவடிகளை வியப்பின் விளிம்பில் நின்றிடும் வண்ணம், அடிப்படையில் ஒரு பொருள் குறித்த இருவேறு ஓலைச்சுவடிகளைக் கண்டறிந்துள்ளார். அவ்வோலைச்சுவடிகளில் காணப்பட்ட நாட்டுப்புறப்பாடல்களுடன், அப்பாடற்கருத்துக்களை நாடக வடிவில் உலவவிட்டு அத்துடன் அவைகுறித்த திறனாய்வையும் ஆய்வுநோக்கில் தீட்டியுள்ளார். இந்த ஓலைச்சுவடிகளில் காணப்பட்டோர் குறித்த இனவரைவியலையும் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

    இவ்வாறான நூலாக வெளியிட்டுள்ளமை தமிழக நூல்கள் வரலாற்றில் முதல் உதாரணமாகவும் முன் உதாரணமாகவும் அமைந்து அணி பெற்றுத்திகழ்வது பெரிதும் பாராட்டுதற்குரியது.

    பூவுலகில் காணப்படும் இயற்கை நியதிகளில் மாற்றங்கள் தோன்றும் வண்ணம், மீண்டும் தேவலோகத்திலிருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளைகள். அவ்வாறே முறையாக நிறைவேற்றப்படாமல், முறையே தன்முனைப்பு மற்றும் வறுமை ஆகியன காரணமாக மானிடர்களால் மாற்றம் பெற்றன என்றும், ஆதலின் பூவுலகில் காணப்படும் இயற்கை நியதிகள் மாற்றமின்றி இயல்பாய் நிலைபெற்றன என்னும் ஆசிரியரின் திறனாய்வுக் கருத்தினையறிந்து பெரிதும் மகிழ்கிறேன்.

    பெரிதும் மனநிறைவு தருவதாய் அமைந்துள்ள, பணி நிறைவுபெற்ற சிறைத்துறை அதிகாரியின் சீரிய இலக்கியத்தொண்டு இன்றுபோல் என்றென்றும் சுடர்விட்டு ஒளி வீசிட இனிய நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

    முனைவர்.வே. கட்டளை கைலாசம்

    1. பூமுதிர - பழம் உதிர

    (நாடகச்சுருக்கம்)

    1. பூமியைச் சுமந்து தோள் வலித்ததால், பூபாரத்தைக் குறைக்கும்படி பூமாதேவியிடம் ஆதிசேடன் வேண்டுகிறான்.

    2. பூமாதேவி பிரம்மாவிடம் வேண்ட, பிரம்மா தேவேந்திரனிடம் ஆதிசேடனின் விண்ணப்பத்தை மாற்றி விடுகிறார்.

    3. தேவேந்திரன், வைகுண்டத்திலுள்ள வீரபாகனை வரவழைக்கிறார்.

    4. பூலோகம் சென்று அறுபதினாயிரம் வீதிகளிலும் ‘பூமுதிர பழம் உதிர’ என்று பறையடிக்கச் சொல்கிறார்.

    5. வீரபாகன் கேட்டபடி, பறைக்குத் தேவையான தோல், குச்சி போன்றவை காராம் பசு வழி பெறப்படுகிறது.

    6. காராம் பசுவின் இறைச்சி, கோமயம், சாணம்,

    Enjoying the preview?
    Page 1 of 1