Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jannal
Jannal
Jannal
Ebook186 pages1 hour

Jannal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பொன் குலேந்திரன் இலங்கை யாழ்ப்பாண இராட்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணம் பரியோவான் (St Johns College)) கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்று, கொழும்பு பல்கலைகத்தில் பௌதிகத்துறையில் சிறப்புப் பட்டம் பெற்று, அதன் பின் தொலை தொடர்பபில் பொறியியல் பட்டம் பெற்று, சந்தை படுத்தலில் (Chartered Institute of Marketing) பிரித்தானியாவில் பட்டம் பெற்றவர்.

பத்து வயதில் சிறு கதைகள் எழுதத் தொடங்கி, அதன் பின் பல கலாச்சர மக்களோடு பழகியதால் இவரது கதைகள் பல பரிமாணத்தில் உருவாக்கப் பட்டவை. அறிவியல் கதைகளும் உருவகக் கதைகளும், மனித உரிமை மீறளோடு தொடர்புள்ள பல சிறுகதைகள் பொன், நல்லூரான். விஷ்வா ஆகிய புனை பெயர்களில் எழுதி வருகிறார்.

ஒன்றாரியோ மாகாணத்தில் வெளிவரும் தமிழ் ஆங்கில பத்திரிகைகளுக்கும் எழுதி வருகிறார்; ஆங்கலத்திலும் தமிழிலும் பல நூல்களும் மின் நூல்களும் வெளியிட்டுள்ளார். பல இணயத்தளங்களுக்கும் எழுதி வரும் இவர் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பீல் பகுதி தமிழ் முதியோர் சங்கத்தின் தலைவராக 4 வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352858408
Jannal

Read more from Pon Kulendiren

Related to Jannal

Related ebooks

Reviews for Jannal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jannal - Pon Kulendiren

    http://www.pustaka.co.in

    ஜன்னல்

    Jannal

    Author:

    பொன் குலேந்திரன்

    Pon Kulendiren

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pon-kulendiren

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    ஆசிரியர் பேனாவில் இருந்து

    1. ஜன்னல்

    2. ஓமானில் இளமை ஊஞ்சலாடுகிறது

    3. முயற்சி

    4. அன்வர் பின் அகமது

    5. தெரு ஓவியன்

    6. ஒரு சம்பவம்

    7. கச்சத்தீவு

    8. கடைத் திருடன்

    9. வடு

    10. பயணம்

    11. அமைதி இல்லம்

    12. விதி

    13. இன்ஸ்பெக்டர் இராஜரத்தினம்

    14. தெரு நாய்

    15. காகித ஓடம்

    16. ஆலமரத்து ஆவி

    17. பேய் வீட்டு மரைக்காயர்

    ஜன்னல்

    (சிறுகதைத் தொகுப்பு)

    பொன் குலேந்திரன் - கனடா

    அணிந்துரை

    ஜன்னல் வழியே உலகைக் கதைத்தல்

    'ஜன்னல் வழியே வெளியைப் பார்ப்பதுதான் சிறுகதை' என்கிறார் எச். ஜி.வெல்ஸ். ஜன்னலின் வழியே எவ்வளவுதான் பார்த்துவிட முடியும்...? அது பார்ப்பவர்களின் பார்வையைப் பொருத்தது. ஒரு சராசரி பார்வையாளனால் கூப்பிடும் தூரம் வரைக்கும் பார்க்கலாம். இன்னும் கொஞ்சம் துருவிப்பார்த்தால் கூப்பிடும் தூரத்தைத் தாண்டி நம்மையும் அறியாமல் குவியும் ஏதேனும் ஓர் ஒற்றைப் புள்ளி வரைக்கும் பார்க்கலாம். அந்த ஒற்றைப் புள்ளி பால்வெளித் திரளின் இன்னொரு சூரிய குடும்பமாகக்கூட இருக்கலாம். ஜன்னல் வழியே விரிந்து பாயும் நம் பார்வை ஓரிடத்தில் குவியவேச் செய்யும். குவிய வேண்டிய பார்வை குவியாமல் விரிந்தே சென்றால், முழு உலகையும் ஜன்னல் வழியே கண்டுவிடலாம். அப்படியாகக் கண்ட உலகை ‘ஜன்னல்' சிறுகதைத் தொகுப்பின் வழியே நம்மையும் காண வைக்கிறார் எழுத்தாளர் பொன்.குலேந்திரன் அவர்கள்.

    கனடா வாழ் எழுத்தாளர் பொன். குலேந்திரன் அவர்கள் எனக்கு பரீச்சையமானது அக்னிக்குஞ்சு இணைய இதழ் வழியே. அதில் அவரது 'விதி' என்கிற சிறுகதையை வாசித்து சக எழுத்தாளர்களுக்கிடையே இருக்க வேண்டிய குறைந்தப்பட்ச விதியை மீறி அக்கதையை நான் விமர்சனம் செய்திருந்தேன். வெறும் புகழ்பாடுதல் இல்லாத அந்த விமர்சனம் எங்களை கண்டம் கடந்து நெருங்க வைத்தது.

    புலம்பெயர்வு எழுத்தாளர்களின் எழுத்துகள் வலியானது. அவர்கள் விட்டுச்சென்ற மண், உயிர் வாழ பற்றிக் கொண்ட மண் இரண்டையும் வேறுபட்ட உராய்வு வெப்பத்துடன் கதையாக்கும் உத்தியால் வாசகர்களின் மனம் கனக்கவே செய்யும். ஆனால் இவரது எழுத்து கனத்துடன் கூடிய மணத்தைக் கொடுக்கிறது. நீரால் பிரிந்து கிடக்கும் மனிதர்களை கண்டங்களைக் கடந்து கதாப்பாத்திரங்களால் துன்பம் மறந்த மெல்ல இழையோடும் இன்ப நூலால் இணைக்கிறார்.

    பதினெட்டு கதைகள் கொண்ட இத்தொகுப்பில் பதினெட்டு கதைகளும் முத்துக்கள். ஒரு கதையின் நீரோட்டம் இன்னொரு கதைக்குள் கசிந்திடவில்லை. ஒரு கதையின் பாத்திரம் இன்னொரு கதைக்குள் அசூசை கொடுக்கவில்லை. பாத்திரப் படைப்பை விடவும் கதையாக்கலின் செய்நேர்த்தி மெச்சும்படியாக இருக்கிறது.

    முயற்சி என்கிற சிறுகதை துபாயில் வேலைப்பார்க்கும் ஒரு கேரள இளைஞனை பற்றிப் பேசுகிறது. அவன் கடும் முயற்சியில் ஒரு ரெஸ்டாரெண்டு தொடங்குகிறான். அக்கடைக்கு பாலக்காடு ரெஸ்டாரெண்ட் எனப் பெயர் சூட்டுகிறான். இக்கதையின் பேசும்பொருள் தூரம் கடந்து கால் பதிக்கும் பாலக்காடு அல்ல. கால் பதிக்க அனுமதிக்கும் துபாய்.

    அன்வர் பின் அகமது என்கிற கதை மொழி, மதம், இனம் கடந்து இரட்சிக்க வைக்கிறது. இக்கதையின் பாத்திரம் நாமாக இருக்கக்கூடாதா.... என்கிற ஏக்கம் நம்மையும் அறியாமல் துளிர்விடச் செய்கிறது. கடை ஊழியனாக வேலைப்பார்க்கும் அவனுக்கு அவனது முதலாளி தன் மகளைத் திருமணம் முடித்து வைத்து அழகுப்பார்க்கிறார். சாதி,மதம்,ஏழை, பணக்காரன், ஜோதிடம், பொருத்தம்.... என்கிற எந்தக் குறுக்கீடும் அவனது வாழ்தலில் இல்லை. இத்தகைய இல்லை சூழ்ந்த வாழ்க்கை கடல் தாண்டி கூடுவது ஆறுதல் தரும்படியாக இருக்கிறது.

    பேய்வீட்டு மரைக்காயர் என்கிற சிறுகதை துப்பறியும் நாவல் அளவிற்கு இருக்கிறது. எத்தளம் போனாலும் புத்தளம் போகாதே என்கிற பழமொழிக்கு கொடுக்கும் விளக்கம் புதுமையானது. கதைக்குள் சோழர்களின் பாத்திரம் வருகிறது.அது கதைக்கு அடர்த்தியையும் விறுவிறுப்பையும் கொடுக்கிறது. இக்கதை நாவலாக வேண்டிய ஒன்று.

    தெரு ஓவியன் கதை புலம்பெயர்ந்தவர்களின் கீற்றுக் கனவு. ஆப்பிரிக்க இளைஞனான அவனைப் பற்றிய சித்திரமும் அவனது ஓவிய வடிப்பும் ஓவியத்திற்குள் பொதிந்திருக்கும் ஏக்கமும் கதையின் முடிவும் அவன் தீட்டிய ஓவியத்திற்கும் வலிக்கவே செய்யும்.

    ஆலமரத்து ஆவி என்கிற கதை பகலில் வாசிக்கையில் அமாவாசையின் நடுநிசி அச்சத்தை மூட்டுகிறது. கதையை அவர் மூட நம்பிக்கையை நோக்கி நகர்த்திச்சென்று பிற்பகுதியில் பிரமாதப்படுத்திவிட்டார். கதையின் இடையில் வரும் மொனிக்கா பாத்திரம் மொத்த ஆலமரமாக மாறுகிறது. ஆலமரத்தின் ஒவ்வொரு விழுதிலும் கிளையிலும் பேய்கள் தொங்கும் காட்சியைத்தரும் இக்கதை பொடியா வீழ்வதில் சமநிலைப் பெறுகிறது. சபாஷ்...! போட வைக்கிறது.

    இத்தொகுப்பின் தலைப்பிடப்பட்ட சிறுகதை மிக முக்கியமான சிறுகதை.

    சென்னையில் அப்பலோ மருத்துவமனை போன்று கனடாவில் டிரிலியம் மருத்துவமனை. ஏழை,மத்தியவாழ்வர், பணக்காரர்கள் எனப் பலரும் மருத்துவ வசதி பெறும் மருத்துவமனையாக அது இருக்கிறது.

    தோமஸ், ஒலிவர் இருவரும் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். தோமஸ் புற்று நோயாளி. அவருக்கு ஜன்னலோர படுக்கை கிடைக்கிறது. அவர் எழுத்தாளரும் கூட. அவர் ஜன்னல் வழியே இயற்கைக்காட்சிகளை வர்ணித்து ஓலிவர் உடன் பகிர்ந்து கொள்கிறார். ஓலிவர் தனக்கு ஜன்னலோர படுக்கை கிடைக்கவில்லையே என ஏங்குகிறான்.

    அன்றைய தினம் விடிந்து பார்க்கையில் தோமஸ் படுக்கை காலியாக இருக்கிறது. செவிலியிடம் விசாரிக்கையில் அவர் இரவு இறந்துவிட்டது தெரியவருகிறது. ஓலிவர் ஜன்னல் படுக்கைக்கு மாறுகிறான். ஜன்னல் வழியே பார்கையில் சுவர் மட்டுமே தெரிகிறது.

    தோமஸ் இயற்கைக்காட்சிகளை வர்ணித்து இருந்தாரே என செவிலியிடம் கேட்கிறான். செவிலி சொல்கிறார். தோமஸ்க்கு கண் தெரியாது. அவரொரு எழுத்தாளர் என்பதால் கற்பனையாக சொல்லிருக்கலாம் என்கிறார்.மிகை அலங்காரத்துடன் எழுதப்படாத இக்கதை தொகுப்பிற்கு சுகமான கனம்.

    இப்படியாக ஒவ்வொரு கதைகளுக்குள்ளும் கலைடாஸ்கோப்பின் பிம்பத்தை கொண்டு வந்து நிறுத்துகிறார்.

    பொன்.குலேந்திரன் கண்டம் கடந்து வாழ்பவராக இருக்கிறார். என் அருகில் அவர் வாழ்பவராக இருந்தால் அவரது கையை இறுகப் பிடித்து குலுக்குபவனாக இருந்திருப்பேன்.

    ஜன்னலைத் திறந்தால் காற்றுதான் வரும். இத்தொகுப்பைத் திறக்கையில் காற்றுடன் கூடிய உலக மணம் வருகிறது. திரை கடந்து இந்நூல் வாசிக்கப்பட எனது வாழ்த்துகள்.

    தோழமையுடன்....

    அண்டனூர் சுரா

    தமிழ்நாடு

    9585657108

    ஆசிரியர் பேனாவில் இருந்து

    ஜன்னல் என்ற இந்த மின்னூல் தொகுப்பு 18 சிறுகதைகளை உள்ளடக்கியது. ஜன்னல் ஊடாக பல காட்சிகளைக் கண்டு இரசித்து. விமர்சித்து நாம் மகிழ்வது உண்டு. அதே போல் இந்த மின் நூல் வித்தியாசமான கருக்களைக் கொண்ட கதைகளை கொண்டது. இக்கதைகள் இலங்கை, இந்தியா. கனடா, துபாய், ஓமான், பிரித்தானியா ஆகிய நாடுகளில் எனது அனுபவ வாயிலாக, அந்தச் சூழலில், நான் சந்தித்த மனிதர்களைக் கருவாக வைத்து எழுதப்பட்டவை. வாழ்க்கைமுறை, பிரச்சனைகள், கலாச்சாரம் நாட்டுக்கு நாடு வேறுபட்டவை. இக்கதைகளில் அவற்றை காணலாம்.

    வாசியுங்கள். இரசியுங்கள். விமர்சியுங்கள்.

    நன்றி

    பொன் குலேந்திரன்

    ஒன்டாரியோ

    கனடா

    1. ஜன்னல்

    கனடா ஒன்டரியோவில் உள்ள மிசிசாகா டிரிலியம் அரச வைத்தியசாலையானது, இருதையம், சிறு நீரகம், கண், புற்று நோய் சம்பந்தபட்ட நோய்கள் ஆகியவற்றிற்கான மருத்துவத்துக்கு பிரசித்தம் பெற்றது. வட அமெரிக்காவிலும், ஆசியாவிலும் உள்ள டீரிலியம் மலரானது மூன்று இலைகளையும், இதழ்களையும் சமச்சீராகக் கொண்டது. இம்மலரேயே இவ்வைத்தியசாலை சின்னமாகக் கொண்டது. சென்னையில் உள்ள அப்பலோ வைத்தியசாலையின் பெயர் தேகநலத்தைப் பாதுகாக்கும் கிரேக்க தெய்வமான அப்பலோவின் பெயரைக் கொண்டது. அதே போல் கனடா ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள மிசிசாகா நகரில், டிரிலியம் வைத்தியசாலைக்கு அம்மலரை சின்னமாக தெரிந்தெடுத்தற்கு காரணமும் உண்டு. மூன்று இதழ்களில் ஒவ்வொன்றும் மனித உணர்வு(Consciousness), உடலோடு இணைவு(Embodiment), பரஸ்பர உறவு(Mutuality) ஆகியவற்றைப் பிரதிபலிக்கும்.

    கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் ஒன்றாறியோ தேகநல காப்புறுதி திட்டத்தின் கீழ் வைத்தியம் பெறுவது இலவசம். அதிக செலவாகும் இருதைய சத்திர சிகிச்சை, சிறு நீரக மாற்றம், சிறு நீரக டயாலிசிஸ், எம் ஆர் ஐ (MRI) போன்றமருத்துவ பரிசோதனைகளின் செலவும் ஓகிப் (OHIP) என அழைக்கப்படும் காப்புறுதி அட்டையை வைத்திருப்பவர்களுக்கு வைத்திய சேவையும, பல மருந்துகளும் இலவசம். அமெரிக்கா போன்ற நாட்டோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது பணவசதியில்லாத,சாதாரண கனேடிய குடிமகனுக்கு ஒன்றாரியோ மாகாணத்தில் வைத்தியத்துக் தேவையான செலவு அனேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். அதுவும் முதியோர்கள் என்றால் பல சலுகைகள் உண்டு. இதை கனடாவுக்கு புலம் பெயர்ந்தவர்கள் மனதில் கொள்வதில்லை.

    ******

    டிரிலியம் ஆஸ்பத்திரியில்,நாலாவது மாடியில் உள்ள வார்டில், 403 ஆம் அறையில் இருந்த இரு நோயாளிகளும் கனேடியப் பிரஜைகள். அதில் ஒலிவர் என்பவர் இருதைய சத்திர சிகிச்சை செய்தவர். நுரையீரலில் நீர். இருப்பதால் அவருக்கு மூச்சு விடுவது சிரமமாக இருந்தது. நேராக நீட்டி நிமிர்ந்து படுககையில் தூங்குவது கடினம். சற்று நிமிர்ந்து இருந்தவாறே தூங்குவார். ஒலிவர் திருமணமாகி சில வருடங்களில் மனைவியை புற்று நோயால் இழந்தவர். இரண்டாம் தடவை தன் பிஸ்னசில் வேலை செய்த எமிலி என்ற பெண்ணைத் திருமணம் செய்தவர். அவருக்குப் பீட்டர் என்ற ஒரு மகன் மட்டுமே. ஓலிவர் பண வசதி படைத்தவர். அவருக்கு நாலறை அறைகள் கொண்ட பங்களா, பிஎம்டபுல்யூ கார். விலை கூடிய வீடுகள் உள்ள வீதியான மிசிசாகா வீதியில் உண்டு. அடிக்கடி அவர் மனைவி எமிலியும் மகன் பீட்டரும் தினமும் வந்து ஒலிவரை பார்த்துப் போவார்கள். ஒலிவர் பிறந்து வளர்ந்தது மிசிசாகாவில்.

    மற்ற நோயாளியின் பெயர் தோமஸ். பாங்கொன்றில் பல ஆண்டுகள் வேலை செய்தவர். இவர் பிறந்தது மிசிசாகாவுக்கு அருகாமையில உள்ள மில்டன் நகரில். எண்பது வயதைத் தாண்டிய தோமஸ, தனிமை காரணமாக தொடர்ந்து புகைபிடித்ததால் நுரையீரலில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர். திருமணமாகி சில வருடங்களுக்குள் மனைவியை விவாகரத்து செய்தவர். பிள்ளைகள கிடையாது. முதியோர் இல்லத்தில் வாழ்பவர். அவரை ஒருவரும் பார்க்க வருவதில்லை.

    ஒலிவரும் தோமசும் ஒரே தினத்தன்று வார்டில் உள்ள அறைக்கு வந்தவர்கள். என்றுமே அறிமுகமாகாத இருவரும் அறைக்குள் வந்து அரை மணி நேரத்துக்குள் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டார்கள்.

    தோமசுக்கு அறையில் உள்ள ஜன்னலுக்கு அருகே படுக்கை கொடுக்கப்பட்டது. அறையில் உள்ள நோயாளிகளுக்கு போழுது போக டிவி வசதி உண்டு ஆனால் அந்தச் சேவைக்கான செலவை தினமும்

    Enjoying the preview?
    Page 1 of 1