Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

20 Vaniga Kadhaigal
20 Vaniga Kadhaigal
20 Vaniga Kadhaigal
Ebook182 pages1 hour

20 Vaniga Kadhaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தொழில்கள் வெவ்வேறு பட்டவை. தொழில் செய்வதற்குப் படித்துப் பட்டம்பெற வேண்டும் என்பதில்லை. வணிகம் செய்வற்கு நேர்மை, கடமை, கண்ணியம். கட்டுப்பாடு, சுயமாக சிந்தித்து முடிவு எடுக்கக்கூடியத் திறமை, நேர்மறையான சிந்தனை, மேலும் சந்தைபற்றி அறிந்து புதுப் புது பொருட்களையும் சேவைகளையும், மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற ஆர்வம், சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உணர்வு, தொழில்நுட்பம் பற்றிய - போன்றவை முக்கியம், இத்துடன் மக்களோடு நல்ல தொடர்புத் திறமை அவசியம்.

இந்தக் கதை கொத்தில் உள்ள 20 கதைகள் யாவும் வணிகம் சார்ந்தவை. வேறுபட்ட தொழில்கள் சார்ந்தவை.

சில கதைகள், நான் அறிந்த கதைகளானாலும் கற்பனையும் நகைச்சுவையும் கலந்தவை. பிரித்தானியாவில் மார்க்கெட்டிங் டிப்ளோமா (CIM-UK) படித்த எனக்குத் தமிழில் சிறுகதைகள் வடிவத்தில் வணிகம் பற்றி வியாபாரிகளுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் என்று புதுமையாக ஏதாவதொன்றை, இலக்கிய வடிவில் செய்ய வேண்டும் என்ற சிந்தனை ஒரு நாள் உதயமாயிற்று. அதன் விளைவே இந்த 20 கதைகள் அடங்கிய வணிகக் கதைக் கொத்து என்ற புதிய இலக்கியப் பொருள். இந்தப் பொருளை ஆர்வமாக வாசியுங்கள், சிந்தியுங்கள், சிரியுங்கள், பகிருங்கள். தேவைப்படின் அதில் உள்ள கருக்களை உங்கள் வியாபாரத்துக்குப் பாவியுங்கள்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352858392
20 Vaniga Kadhaigal

Read more from Pon Kulendiren

Related to 20 Vaniga Kadhaigal

Related ebooks

Reviews for 20 Vaniga Kadhaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    20 Vaniga Kadhaigal - Pon Kulendiren

    http://www.pustaka.co.in

    20 வணிகக் கதைகள்

    20 Vaniga Kadhaigal

    Author:

    பொன் குலேந்திரன்

    Pon Kulendiren

    For more books
    http://www.pustaka.co.in/home/author/pon-kulendiren

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியர் பேனாவில் இருந்து

    கல்யாணத் தரகர் (The Marriage Broker)

    கஸ்டமான கஸ்டமர் (Difficult Customer)

    நேர்மை (Honesty)

    வீடு விற்பனைக்கு (House for Sale)

    ரியல் எஸ்டேட் ஏஜண்ட் (Real Estate Agent)

    அதிகாரம் (Authority)

    பியூன் (Peon)

    அரசாங்க அதிபர் ( Governmnet Agent)

    விடாமுயற்சி (Perseverance)

    மூலைக்கடை (Corner Shopp)

    ஆயுர்வேத வைத்தியர். (Ayurvedic Doctor)

    கூலி (Coolie)

    நாவிதர் (Barber)

    சிவப்பு நாடா (Red Tape)

    அழகு நிலையம் (Beauty Parlor)

    ஊடகவியலாளர் (Journalist)

    செய்யும் தொழிலே தெய்வம்.(The job you do is like god)

    டாக்ஸி டிரைவர் (Taxi Driver)

    நேர்மறையும் எதிர்மறையும் (Positive & Negative thinking)

    டீச்சர் (The Teacher)

    20 வணிகக் கதைகள்

    ஆசிரியர் பேனாவில் இருந்து

    தொழில்கள் வெவ்வேறு பட்டவை. தொழில் செய்வதற்குப் படித்துப் பட்டம்பெற வேண்டும் என்பதில்லை. வணிகம் செய்வற்கு நேர்மை, கடமை, கண்ணியம். கட்டுப்பாடு, சுயமாக சிந்தித்து முடிவு எடுக்கக்கூடியத் திறமை, நேர்மறையான சிந்தனை, மேலும் சந்தைபற்றி அறிந்து புதுப் புது பொருட்களையும் சேவைகளையும், மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற ஆர்வம், சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உணர்வு, தொழில்நுட்பம் பற்றிய - போன்றவை முக்கியம், இத்துடன் மக்களோடு நல்ல தொடர்புத் திறமை அவசியம்.

    இந்தக் கதை கொத்தில் உள்ள 20 கதைகள் யாவும் வணிகம் சார்ந்தவை. வேறுபட்ட தொழில்கள் சார்ந்தவை.

    அரசில் உயர் பதவியில் இருக்கும் போது கிடைக்கும் அதிகாரம் ஊழல் செய்யத் துணை போகிறது. கிடைக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் திரும்பவும் அந்தச் சந்தர்ப்பம் திரும்பி வருமா என்பது சந்தேகம். தொழில் செய்யும் போது சாதி, மதம், இனம், பெருமை, அந்தஸ்து மூட நம்பிக்கை போன்றவற்றிற்கு இடம் கொடுக்கக் கூடாது. முக்கியமாக, சக ஊழியர்களை மனிதாபிமானத்தோடும், கண்டிப்போடும் நடத்த வேண்டும். எனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற மனப்பான்மை இருக்கக்கூடாது. சக ஊழியர்கள் சொல்வதற்கு மதிப்பு அளிக்கவேண்டும் செய்யும் தொழிலே தெய்வம் எனக் கருதவேண்டும். போட்டியாளர்கள் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கவேண்டும். திட்டமிடலும் நிதி பரிபாலனமும் மிக முக்கியம். இக் கதைகள் இதுபோன்ற பல வகையான கருத்துகளை உள்ளடக்கியவையாகும்.

    சில கதைகள், நான் அறிந்த கதைகளானாலும் கற்பனையும் நகைச்சுவையும் கலந்தவை. பிரித்தானியாவில் மார்க்கெட்டிங் டிப்ளோமா (CIM-UK) படித்த எனக்குத் தமிழில் சிறுகதைகள் வடிவத்தில் வணிகம் பற்றி வியாபாரிகளுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் என்று புதுமையாக ஏதாவதொன்றை, இலக்கிய வடிவில் செய்ய வேண்டும் என்ற சிந்தனை ஒரு நாள் உதயமாயிற்று. அதன் விளைவே இந்த 20 கதைகள் அடங்கிய வணிகக் கதைக் கொத்து என்ற புதிய இலக்கியப் பொருள். இந்தப் பொருளை ஆர்வமாக வாசியுங்கள், சிந்தியுங்கள், சிரியுங்கள், பகிருங்கள். தேவைப்படின் அதில் உள்ள கருக்களை உங்கள் வியாபாரத்துக்குப் பாவியுங்கள்.

    கதை 1

    கல்யாணத் தரகர் (The Marriage Broker)

    ஒரு கையில் அரச சேவையின் சின்னமான கறுத்த தோல் பை . நெற்றியில் வியர்வையினால் உருமாறிய திருநீற்றுக் குறியும் சந்தனப் பொட்டும். மறு கையில் புண்களுக்கு பிளாஸ்திரி போட்ட மாதிரி பல ஒட்டுகளுடன் கூடிய மான் மார்க்குடை. காலில், நடந்து நடந்து தேய்ந்து போன பாட்டா செருப்பு. அரைக் கை வெள்ளை ஷேர்ட். தன் வெள்ளை நிறத்தைப் பல காலப் பாவிப்பினால் இழந்த தன் பரிதாப கதையை வெளிக்காட்டும் காவியேறிய வேட்டி. இவைகள் தரகர் தம்பிப்பிள்ளையின் இலச்சனைகள். சங்கரப்பிள்ளையின் வீட்டுப் படலையைத் கீச்சென்ற சத்தத்துடன் திறந்தார் தரகர் தம்பர். அடிவளவில் இருந்த வீட்டுநாய் ஜிம்மி தொடர்ந்து குரைத்து தனது கடமையைச் செய்தது.

    தரகர் தம்பர், ஊர்வாசிகள் அவருக்கு வைத்த தொழிலுடன் இணைந்த பெயர்... பேருக்கும் தொழிலுக்கும் நல்ல பொருத்தம். கோடை வெய்யிலில் அவர் போட்டிருந்த ஷேர்ட்டின் முதுகு பக்கம் வியர்வையால் தோய்ந்து உடம்புடன் ஒட்டிப் போயிருந்தது. உள்ளெ அவர் போட்டிருந்து கிழிந்த பெனியன் தன் பரிதாப நிலையை வெளி உலகுக்குப் பிரகனப்படுத்தியது. குடையைக் கவனமாக மடக்கினார். அப்படியிருந்தும் குடைக் கம்பி குடைத் துணியைப் பதம் பார்க்க வேண்டுமென்று தகாராறு கொடுத்தது. நெற்றியில் இருந்த வியர்வையைத் தன் கையால் வழித்தெடுத்து நிலத்தில் சுண்டியபடி இந்த கோடை வெய்யில் என்ன கொளுத்து கொளுத்துது என்று அலுத்தபடி சங்கரப்பிள்ளையின் வீட்டு வாசல் கதவைத்தட்டினார்.

    ஆர் அது? ஒரு பெண்குரல் உள்ளே இருந்து கேட்டது.

    அது சங்கரப்பிள்ளையின் ஏக பத்தினி செல்லம்மாவின் குரல் என்று கண்டுபிடிக்கத் தம்பருக்கு அதிக நேரம் எடுக்க வில்லை.

    அது நான் தரகர் தம்பர் வந்திருக்கிறன்

    ஓ தரகரே? அவர் இப்பத்தான் குளிச்சுப் போட்டு சாமி கும்பிடுகிறார். கதவு திறந்து தான் இருக்கு. தள்ளித் திறந்துகொண்டு உள்ளை வந்திரும். அடுப்பிலை மீன் குளம்பு கொதிக்குது. இறக்கி வைச்சிட்டு வாறன். இல்லாட்டால் அடிப்பிடிச்சுப் போயிடும். அடுப்படியில் இருந்து செல்லம்மாவின் பதில் வந்தது. செல்லம்மாவும் தம்பரும் கதைத்ததைக் கேட்டு எதோ தெரிந்தவர்தான் வீட்டுக்கு வந்திருக்கிறார் என்று ஜிம்மி குரைப்பதை நிறுத்தியது. அறிவுள்ள மிருகம்.

    நல்ல காலம் இரண்டு பேரும் வீட்டிலை இருக்கினம். கல்யாணத்தை இண்டைக்கே பேசி முடிச்சிடாலாம் என நினைத்தவாறு கதைவைத்திறந்து கொண்டு கூடத்துக்குள் இருந்த கதிரை ஒன்றில் போய் அமர்ந்தார் தரகர் தம்பர்.

    தரகர் தம்பர் செய்து முற்றாக்கிய கலியாணங்கள் பல. அரசாங்க கிளரிக்கல் சேர்வீசில் முப்பது வருஷ அனுபவம். தம்பர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றபின் அவரின் முழு நேரமும் கலியாணங்கள் பேசி முடிப்பதிலேயே சென்றது. ஆங்கிலத்தில் S Thambipillai (The Marriage Broker) அதன் கீழ் தமிழில் கலியாண ஆலோசகர் என்ற தூய மொழிபெயர்ப்பு செய்து மஞ்சள் நிறத்தில் பிஸ்னஸ் கார்ட் அடித்து வைத்திருந்தார். எழுத்துக்கள் குங்கும நிறத்திலிருந்தன. மஞ்சள் குங்குமத்துக்கும் அவர் செய்யும் தரகர் தொழிலுக்கும் தொடர்புண்டு என்பதை அவரின் பிஸ்னஸ் கார்ட் பிரதிபலித்தது. கிளாக்கர் பதவியிலிருந்து பெருமையாகச் சொல்லக் கூடிய கொன்சல்டன்ட் என்ற ஆலோசகர் பதவி உயர்வைத் தானே வைத்துக்கொண்டார். பிஸ்னஸ் கார்டில் மாலையுடன் தம்பதிகளின் படம் ஒன்றைத் தன் பிஸ்னஸ் லோகோ வாக வரைந்திருந்தார். ஒரு கலியாணம் செய்து வைத்தால் இரண்டு பகுதிகளிடமிருந்தும் சீதனத்தில் ஆட்களின் வசதிக்கு ஏற்றமாதிரி 2 அல்லது 3 விகிதம் கொமிஷன் வாங்கிவிடுவார். சில மாதங்களுக்கு முன்னர் கனடா சிட்டிசன் மாப்பிள்ளை ரவியை, சங்கரப்பிள்ளையின்றை அண்ணர் இரும்புக் கடை இளையதம்பியின் மகளுக்கு பொருத்திவைத்து இரண்டு பகுதியிலை யிருந்து கிட்டதட்ட ஐம்பதாயிரம் கறந்துவிட்டார். இப்ப பேசிக் கொண்டு வந்தது அவுஸ்திரேலிய மாப்பிள்ளை. கொம்பியூட்டர் என்ஐனீயர் வேறு. நல்ல சம்பளம். சொந்த அப்பார்ட்மெண்டுக்கு சொந்தக்காரன். முற்றாக்கினால் குறைந்தது எழுபத்தைந்தாயிரம் தேறும். அடைவில் இருக்கும் மனுசியின்றை நகைகளை திருப்பிவிடலாம். பாவம் அவள். எத்தனை நாளைக்குத் தான் கலியாணங்களுக்கு போகைக்கை பக்கத்து வீட்டு பாக்கியத்தின்றை நகைகளை இரவல் வாங்கி போட்டு கொண்டு போவது. அவள் பாக்கியமும் சும்மாப் பட்டவளே. நகைகளுக்கு மணித்தியால வாடகைக் கணக்கு போட்டு காசை சுளையாக வாங்கிப் போடுவாள். அடைவு வைச்ச நகைகளை மீட்டால் இனி பாக்கியத்துக்கு குடுக்கிற காசு மிச்சம். இப்படி கிடைக்கிற கொமிஷன் காசை எப்படி செலவு செய்ய வேண்டும என்று கணக்கு போட்டுக் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை, என்ன தம்பர், கன நேரம் காக்க வச்சிட்டன் போல" கணீர் என்ற சக்கரப்பிள்ளையின் குரல் கேட்டுச் சுயநிலைக்கு வந்தார்.

    அதொண்டுமில்லை என்ஜினியர். கலியாணத் தரகு வேலை எண்டால் உதெல்லாம் எதிர் பார்க்க வேண்டியது தான். என்றார் கதிரையில் மரியாதைக்காக அரைகுறையாக எழும்பியபடி தம்பா.

    இரும் இரும். கொளுத்திற வெய்யிலிலை நடந்து, களைச்சுப் போய் வந்திருக்கிறீர். செல்லம் ஏதும் குடிக்க அவ தந்தவவே? கரிசணையுடன் கேட்டார் சங்கரப்பிள்ளை.

    அது பரவாயில்லை. அவ குசினியிலை கை வேலையாய் இருக்கிறா போல… என்றார் இழுத்தபடி தம்பர்.

    இங்காரும்... தம்பருக்கு நல்ல குளிர்மையாய் கொஞ்சம் வெங்காயம் மிளகாய் வெட்டிப் போட்டு மோர் ஒரு கிளாஸ் மோர் கொண்டு வாரும் மனுசிக்கு நினைப்பூட்டனார்.

    அதைத் தான் நான் செய்து கொண்டிருக்கிறன். நீங்கள் அவரோடை கதைச்சுக் கொண்டிருங்கோ. இரண்டு நிமிசத்திலை கொண்டுவாறன்.

    சங்கரப்பிளளையருக்கு தன்னை என்ஜனியர் என்று கூப்பிட்டால் மனதுக்குள் நல்ல சந்தோஷம். பி டபிள் யூ டீ (PPWD) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் பொதுசன வேலைத்த திணக்களத்தில் பிரதம என்ஜனியராகயிருந்து ரிட்டயர் ஆனவர். நாட்டின் பாதைகளை பராமரிப்பதும் புது பாதைகளை உருவாக்கவதும் அத்திணக்களத்தின் பொறுப்பு. வடபகுதியில் இருந்த ஓவசியர்மார் எல்லோரும் அவருக்கு நல்ல மரியாதை. கவர்ணமேந்து சேர்விசிலை இருக்கும் ஓவர்சியர்மார் தயவிலை நல்லாய் உழைத்தவர். பளையிலை ஜம்பது பரப்பிலை தென்னம் தோட்டம், கிளிநொச்சியிலை வயல். யாழ்ப்பாணம் டவுனிலை இரண்டு

    கடைகள். வீடு வாசல். இப்படி பல சொத்துக்களுக்கு அதிபதி. முதுசமாய் தன் தாய் வழியிலை கொண்டு வந்த உரும்பிராயில் காணி நிலங்கள் வேறு. ஊரிலை முதல் முதலிலை ஒஸ்டீன் கேம்பிரிட்ஐ கார் வைத்திருந்த பெருமை அவருக்கு. கலியாணங்களின் போது மாப்பிள்ளை பொம்பிளையை ஏற்ற அவருடைய் கார் ஊர்வாசிகளால் பாவிக்கப்பட்டது.

    கறக்க வேண்டிய இடத்திலை கறக்க வேண்டும் என்று தீர்மானித்து அன்று தம்பர் வந்திருந்தார். என்ஜினியரின் ஒரே மகள் ஜானகி கொழும்பிலை சார்டட் அக்கௌண்டனாக வேலை. அவளுக்கு வெளிநாட்டிலை மாப்பிள்ளை பார்க்கும் படி என்ஜனியரும் மனைவியும் கேட்டுக் கொண்டதுக் கிணங்க நல்ல சாதகம் ஒன்றுடன் வந்திருந்தார் தம்பர்.

    என்ன தம்பர் கையிலை சாதகத்தோடை?

    சேர் எல்லாம் உங்கடை மகளுக்குத்தான். நல்ல மாப்பிள்ளை ஒன்று கிடைத்திருக்கிது. பெடியன் அவுஸ்திரேலியன் சிடிசன். கொம்பியூட்டர் என்ஜினியர். கை நிறையச்சம்பளம். வடிவானவன். மகளுக்கு எற்ற உயரம். இரண்டு சாதகங்களும் ஓரளவுக்கு பொருந்திது. அதுதான் உங்களுக்கு விருப்பம் எண்டால்.. வார்த்தைகளை விழுங்கினார் தம்பர்

    "பெடியன்

    Enjoying the preview?
    Page 1 of 1