Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thalaimuraigal
Thalaimuraigal
Thalaimuraigal
Ebook83 pages29 minutes

Thalaimuraigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பொன் குலேந்திரன் இலங்கை யாழ்ப்பாண இராட்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணம் பரியோவான் (St Johns College)) கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்று, கொழும்பு பல்கலைகத்தில் பௌதிகத்துறையில் சிறப்புப் பட்டம் பெற்று, அதன் பின் தொலை தொடர்பபில் பொறியியல் பட்டம் பெற்று, சந்தை படுத்தலில் (Chartered Institute of Marketing) பிரித்தானியாவில் பட்டம் பெற்றவர்.

பத்து வயதில் சிறு கதைகள் எழுதத் தொடங்கி, அதன் பின் பல கலாச்சர மக்களோடு பழகியதால் இவரது கதைகள் பல பரிமாணத்தில் உருவாக்கப் பட்டவை. அறிவியல் கதைகளும் உருவகக் கதைகளும், மனித உரிமை மீறளோடு தொடர்புள்ள பல சிறுகதைகள் பொன், நல்லூரான். விஷ்வா ஆகிய புனை பெயர்களில் எழுதி வருகிறார்.

ஒன்றாரியோ மாகாணத்தில் வெளிவரும் தமிழ் ஆங்கில பத்திரிகைகளுக்கும் எழுதி வருகிறார்; ஆங்கலத்திலும் தமிழிலும் பல நூல்களும் மின் நூல்களும் வெளியிட்டுள்ளார். பல இணயத்தளங்களுக்கும் எழுதி வரும் இவர் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பீல் பகுதி தமிழ் முதியோர் சங்கத்தின் தலைவராக 4 வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580120202333
Thalaimuraigal

Read more from Pon Kulendiren

Related to Thalaimuraigal

Related ebooks

Reviews for Thalaimuraigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thalaimuraigal - Pon Kulendiren

    http://www.pustaka.co.in

    தலைமுறைகள்

    Thalaimuraigal

    Author:

    பொன் குலேந்திரன்

    Pon Kulendiren

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pon-kulendiren

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ***

    தலைமுறைகள்

    (ஒரு தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் கதை)

    பொன் குலேந்திரன் - கனடா

    செப்டெம்பர் 1- 2016

    பொருளடக்கம்

    குறு நூவலாசிரியர் குறிப்பு

    அத்தியாயம் 1 மண்பாடு வீரசாமி

    அத்தியாயம் 2 கண்ணன் (கண்ணுசாமி)

    அத்தியாயம் 3 இலங்கைப் பயணம்

    அத்தியாயம் 4 யாழ்ப்பாணத்தில் கண்ணன்

    அத்தியாயம் 5 புலூம்பீல்ட் தேயிலைத் தோட்டம்

    அத்தியாயம் 6 செல்லச்சாமியும், வள்ளியம்மாவும்

    அத்தியாயம் 7 அத்தியடி ராஜேந்திரன்

    அத்தியாயம் 8 வேலுச்சாமி

    அத்தியாயம் 9 பட்டதாரி வேலுச்சாமி

    அத்தியாயம் 10 தாரகா

    அத்தியாயம் 11 சூரியஉதயம் திட்டம்

    அத்தியாயம் 12 ராமசாமி

    அத்தியாயம் 13 தலைமுறைகளைத் தேடி

    ***

    குறு நூவலாசிரியர் குறிப்பு

    தலைமுறைகள்

    இக்கதை 1860இல் ஆரம்பித்து ஐந்து தலைமுறைகள் வரை செல்கிறது. இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப கொத்தடிமைகளாக தமிழ்நாட்டில் இருந்து கூலிகளாக கொண்டு வரப்பட்ட தமிழர்கள் எவ்வாறு குளிரிலும் அட்டைக்கடியிலும் நல்ல வீடு வசதியில்லாது வாழ்ந்தார்கள் என்பதை, தினமும் தேனீர் குடிக்கும் அனைவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். நம்பிக்கை, அறிவு, கடும் உழைப்பு, குறிக்கோள் ஆகியவை எப்படி ஒருவனை உயர்ந்த மனிதனாக்குகிறது என்பதை இக்கதை சித்தரிக்கிறது. அத்தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்.

    பொன் குலேந்திரன் - கனடா

    செப்டெம்பர் 1 2016

    ***

    அத்தியாயம் 1

    மண்பாடு வீரசாமி

    வீரசாமி உயர்ந்த, ஆஜானுபாகுவான, திடகாத்திரமான தோற்றமுள்ளவன். மிடுக்கான நடை. தான் செய்யும் தொழிலே தெய்வமாகக் கருதுபவன். அதிகம் பேசமாட்டான். தானும் தன்கருமமும் என்று வாழ்பவன். வீரத்தின் பிரதிபலிப்பாக அவனுக்கு ஒரு மீசை வேறு. வீரசாமியின் முன்னோர் சிவகங்கையில் வாழ்ந்த மறவர்களான தேவர் குலத்தவர்கள். அவன் உடன்குடியில் வாழ்ந்த தன் தங்கை மகள் முத்துநாச்சியாரைத் திருமணம் செய்தவன். தேவர் குலத்தவர்கள் பலர் வீரபாண்டிய கட்டப்பொம்மனின் படையில் இருந்தவர்கள். புலித்தேவரோடு சேர்ந்து பிரித்தானிய ஆட்சிக்கு எதிராகப் போர்புரிந்தவர்களென வீரசாமி பெருமையாக அடிக்கடி சொல்லிக் கொள்வான்.

    வீரசாமி 1860 ஆம் ஆண்டு பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடியில் இருந்து அறுபது கி.மீ தூரத்தில் உள்ள மண்பாடு என்ற கடலோரக் கிராமத்தில் பிறந்தவன். வீரசாமியின் தந்தைபெயர் சின்னசாமி. ஒரு விவசாயி. வீரசாமியின் பாட்டனார் மாடசாமி கட்டப்பொம்மன் படையில் போர்வீரனாக இருந்து போரில் இறந்த மறவன்.

    பெயருக்கு ஏற்ப கடல் மணல் நிறைந்த கிராமம் மண்பாடு. இக்கிராம மக்களின் முக்கிய தொழில் மீன் பிடித்தலும், முத்துக்குளிப்புமேயாகும். சரித்திர வரலாறு படைத்த கிராமமது. கடல் அலையில் சறுக்கி விளையாடுவதற்கு ஏற்ற இடமாகக் கருதி மண்பாட்டுக்கு வெளிநாட்டவர்கள் வருவார்கள். ஒரு காலத்தில் சோழர்களின் துறைமுகமாக இருந்த குலசேகரப் பட்டணத்திலிருந்து சில கிமீ தூரத்தில் அமைந்த கடலோரக் கிராமம் மண்பாடு.

    1535ஆண்டில் போர்த்துக்கேயர்கள் இக்கிராமத்தில் காலடி வைத்தனர். மீன் பிடி தொழிலில் ஈடுபட்ட முஸ்லீம் பரவர்களுக்கும் இந்து பரவர்களுக்கும் இடையேலான சச்சரவை 1542ஆம் ஆண்டு அக்கிராமத்துக்கு கோவாவிலிருந்து வந்த பிரான்சிஸ் சேவியர் என்ற கத்தோலிக்கப் பாதிரியார் தீர்த்து வைத்தார். பிரதி உபகாரமாகப் பல இந்து மீன்பிடி தொழிலாளர்களை கத்தோலிக்கர்களாக மதமாற்றம் செய்தார் சேவியர்.

    மண்பாட்டில் வாழும் மக்கள் அனேகர் கத்தோலிக்கர்கள். இக் கிராமத்தில் 'பரிசுத்த சிலுவை' என்ற பெயரில் புராதன கத்தோலிக்க தேவாலயம் ஒன்றுண்டு. இக்கிராமத்து மணலும், வீசும் காற்றும், இசை போன்று தோற்றுவிப்பதால் கிராமத்துக்கு மண்பாடு எனப் பெயர் வந்ததாக ஊர்வாசிகள் விளக்கம் கூறுவார்கள்.

    முத்துக் குளிக்கும் வீரசாமி தன் உயிரைப்

    Enjoying the preview?
    Page 1 of 1