Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadaloora Kanavugal
Kadaloora Kanavugal
Kadaloora Kanavugal
Ebook127 pages48 minutes

Kadaloora Kanavugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பள்ளிக்கூடம் பயிலும் ஒரு மீனவ குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் வாழ்வில் போராட்டங்கள் குதிக்கின்றன. அவள் உயிருக்குயிராய் நேசித்த காதலன் உண்மையற்றவன் என தெரிந்த போது காதலை வேரறுக்கிறாள். கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த அவளின் தந்தை இறந்தபோது உலகமே இருண்டு போனது. தனக்குப் பின்னால் பிறந்த இரு தங்கைகள் நலனுக்காக அவர்களே உலகம் என்று நம்பி தன் படிப்பை நிறுத்திவிட்டு பாட்டியோடு மீன் வியாபாரம் செய்து குடும்பத்தை தலை நிமிர்ந்துகிறாள்.

ஒரு தங்கைக்கு திருமணம் செய்து வைத்து விழி பிதுங்கியபோது இன்னொரு தங்கை காதலனோடு ஓடிவிட்டு வீட்டை விற்று அவள் பங்கை தர வேண்டும் என்று கேட்டாள். தங்கைகளுக்காக உழைத்ததில் அவளது திருமணம் அக்கால பள்ளத்தில் விழுந்தது. அவள் வாழ்வில் பட்ட வலிகள் எல்லாம் தங்கைகள் பார்த்துக் கொள்வார்கள் என்று மனக்கணக்கு போட்டால் எல்லாமே திசை மாறிப் போனது. அந்த புயல் காற்றில் அவள் எங்கு அடித்துச் செல்லப்பட்டாள் என்பதுதான் இந்த கடலோர கனவுகள் நாவல்.

Languageதமிழ்
Release dateJul 1, 2023
ISBN6580153309963
Kadaloora Kanavugal

Read more from Irenipuram Paul Rasaiya

Related to Kadaloora Kanavugal

Related ebooks

Reviews for Kadaloora Kanavugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadaloora Kanavugal - Irenipuram Paul Rasaiya

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கடலோரக் கனவுகள்

    Kadaloora Kanavugal

    Author:

    ஐரேனிபுரம் பால்ராசய்யா

    Irenipuram Paul Rasaiya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/irenipuram-paul-rasaiya

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் – 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் – 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் – 12

    அத்தியாயம் – 13

    அத்தியாயம் – 14

    அத்தியாயம் - 1

    அரசினர் துவக்கப்பள்ளியின் சத்துணவு கூடத்தின் வராந்தாவில் அழுக்குத் துணியை கழுத்துவரைப் போர்த்தி நீண்ட உறக்கத்தில் இருந்தாள் ஸ்டெல்லா.

    தினமும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து பக்கத்து டீக்கடையில் டீ சாப்பிட்டு வந்தபொழுது விடியக் காத்திருக்கும் ஸ்டெல்லாவுக்கு இன்று ஏனோ ஆழ்ந்த நித்திரை அவளை ஆட்கொண்டிருந்தது.

    காலை ஒன்பது மணிக்கெல்லாம் சிறுவர் சிறுமியர்களின் ஆரவாரச் சத்தங்கள் அவள் காதுகளைத் துளைத்தபோதும், தூக்கம் அவளைவிட்டு விலகாமல் அடர்ந்திருந்தன.

    சத்துணவு சமைக்கும் ஆயா அமிர்தம் அவள் படுத்திருப்பதை ஆச்சரியமாய் பார்த்தாள்.

    ஸ்டெல்லா... இன்னுமா தூங்குற... ஸ்கூலுக்கு புது ஹெட்மாஸ்டர் வரப்போறாங்க, பார்த்துட்டா பிரச்சனை ஆயிடும் எந்திரி அமிர்தம் உரக்கச் சத்தம்போட்ட பிறகும், ம் என்று முனகினாளே தவிர எழுந்திருக்கவில்லை.

    அவளது கீழ்தாடையில் மூன்று பற்களும் மேல்தாடையில் இரண்டு பற்களும் இறந்து விழுந்ததில் அவள் வாய் பள்ளம் விழுந்த பொக்கை வாய் ஆகியிருந்தது. மேலும் சில பற்கள் பேசும்போது ஆடிக்கொண்டிருந்தது.

    தலைமுடியில் ஆங்காங்கே சில முடிகள் மட்டும் தன் நிறத்தை இழக்காமல் கருப்பாகவே இருந்தது. அவள் வலது கால் வளைந்து இழுத்து இழுத்து நடப்பது சிறுவர் சிறுமியர்களுக்கு வேடிக்கையாக இருக்கும்.

    அவள் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு எங்கிருந்து வந்தாள் என்ற தகவல் அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை. வராந்தாவில் படுத்துக்கிடப்பதற்கு நன்றிக்கடனாக பள்ளிக்கூடத்தை சுற்றி வளரும் புற்களை வெட்டுவதும், சத்துணவு ஆயாவுக்கு கூடமாட ஒத்தாசை செய்துகொடுப்பதும், செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதும் என அவளால் இயன்ற வேலைகளைச் செய்து வந்தாள்...

    அதற்கு கூலியாக பகல் நேர உணவு, இரவு நேர உணவு அவளுக்குக் கிடைத்ததில் அவள் பசி அறியாது இருந்தாள்.

    தலைமை ஆசிரியை அந்தப் பள்ளிக்கூடத்திற்கு மாற்றலாகி வந்ததும், பள்ளிக்கூட வளாகத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு இறுதியாக சத்துணவுக் கூடத்திற்கு வந்தாள். ஸ்டெல்லா தூக்கம் கலையாமல் படுத்திருந்தாள்.

    யார் இது...? மிடுக்காய் கேட்டார்கள் தலைமை ஆசிரியை...

    பேரு ஸ்டெல்லா. ரொம்ப வருஷமா இங்கதான் படுத்துகிறா. எனக்கு சமையல் பண்றதுக்கு ஒத்தாசையா இருப்பா, புல் வளர்ந்தா வெட்டி சரிபண்ணுவா, செடிகளுக்குத் தண்ணி ஊத்துவா, இதுக்கு முன்னால இருந்த ஹெட்மாஸ்டர் சம்பளம் வாங்குற அண்ணைக்கி செலவுக்கு எதையாவது கொடுப்பாங்க. அமிர்தம் சொல்லி முடித்தபோது, தலைமை ஆசிரியை அவள் முகத்தை ஒருமுறைகூட உற்றுபார்த்தாள்.

    உடம்பு சரி இல்லையா...?

    தெரியல டீச்சர்.

    இவளுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா அப்புறம் நாம பதில் சொல்ல வேண்டியதிருக்கும், இவள தட்டி எழுப்பி ஒரு ஆட்டோ பிடிச்சு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோக ஏற்பாடு பண்ணுங்க. ஆட்டோ காசு நான் தர்றேன், அப்பறம் இனிமே இங்க வந்து படுத்துக்கக்கூடாதுன்னும் சொல்லணும். சொல்லிவிட்டு அலுவலக அறை நோக்கி நடந்தாள் தலைமையாசிரியை.

    அமிர்தம் முகம் வாடியது, தனக்கு ஒத்தாசையாக இருக்கும் ஸ்டெல்லாவை படுக்கக்கூடாதுன்னு சொல்றாங்களே... அவள் தடுமாறி ஸ்டெல்லாவின் உடம்பைத் தொட்டு உலுக்கினாள். ஸ்டெல்லா கண் திறந்து மேலும் கீழும் பார்த்தாள்.

    உடம்புக்கு முடியலையா ஸ்டெல்லா கேட்டாள் அமிர்தம். ஸ்டெல்லா மிகுந்த சிரமத்தோடு எழுந்து அமர்ந்தாள்.

    புதுசா வந்த ஹெட்மாஸ்டர் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுபோகச் சொன்னாங்க கிளம்பு.

    அது ஒண்ணும் வேண்டாம், என்னமோ தெரியல உடம்பு அசதியா இருந்தது. ராத்திரி வேற தூக்கம் வரல. விடியக்காலையிலதான் தூங்கி இருக்கேன். நான் போய் ஒரு டீ சாப்பிட்டு வர்றேன் ஸ்டெல்லா எழுந்து தளர்ந்து இருந்த உடையை இறுகக் கட்டிவிட்டு டீக்கடையை நோக்கி நடந்தாள். அமிர்தத்திற்கு ஆறுதலாக இருந்தது. டீச்சர் சொன்ன விஷயத்தை பிறகு சொல்லலாம் என்று விட்டுவிட்டாள்.

    ஸ்டெல்லா டீக்கடையில் டீ குடித்துவிட்டு சாலையில் நடக்க ஆரம்பித்தாள். அவளது பயணம் பெரும் தொலைவு நோக்கி இருந்தது. அவள் தினமும் படுத்துறங்கும் அந்தப் பள்ளிக்கூட சத்துணவு கட்டிடத்தின் வராந்தா நினைவுக்கு வந்தது.

    முன்பிருந்த ஹெட்மாஸ்டர் ரிட்டயர் ஆகிப் போகும்போதே அவள் மனம் தளர்ந்தது. அந்த தங்கமான டீச்சரை இனி வாழ்நாளில் எப்பொழுதாவது பார்ப்போமா என்றுகூட மனதில் தோன்றியது.

    ஆயா அமிர்தம் இரவுக்கும் சேர்த்து அன்னமிட்டவள். யாரிடமாவது சொல்லிவிட்டு கிளம்பலாம் என்றால் பிரிவின் சங்கடத்தில் அழுகை வந்து மனபாரமாகும். சொல்லாமல் கொள்ளாமல் போவதுதான் நல்லது என்று தோன்றியது.

    ஸ்டெல்லா நடந்துகொண்டே இருந்தாள். வாழ்க்கையின் நடந்த நிகழ்வுகள் நினைவுகளாய் வந்திறங்கியது. அப்பொழுது ஸ்டெல்லாவுக்கு பதினேழு வயது. வாலிபம் உடலில் தங்கியிருந்த காலம்.

    அத்தியாயம் - 2

    தேங்காய்பட்டணம் கடற்கரை திறந்தவெளியாக கிடந்தது. ஊருக்குள் வந்துவிட வேண்டுமென்று அலைகள் ஆர்ப்பரிப்போடு உயர்ந்து எழுந்து கரையை நோக்கி வந்து கொண்டிருந்தது.

    மணலை வாரி எறிவதைப்போல, கடல் அலைகளை வாரி எறிந்து கொண்டிருந்தது. சுனாமி வந்த பிறகு அலைகளை தடுத்து நிறுத்த கருங்கற்கள் கொட்டப்பட்டிருந்ததால், நுரைபோல் எழுந்த அலைகள் கற்களில் ஆவேசமாய் மோதி அடிவாங்கி திரும்பிச் சென்றன. இருந்தாலும் மோதல் தொடர்ந்துகொண்டே இருந்தது.

    நீல வானமும், கடலும் தூரத்தில் இணைந்திருந்தன. திறந்த கடற்கரை வெளியில் காற்று மோதிக்கொள்ள மரங்களின்றி சுதந்திரமாய் சுற்றித் திரிந்தது. ஆங்காங்கே நெடு நீளமாய் உயர்ந்து வளர்ந்து நின்ற தென்னை மரங்களில் விரிந்த தென்னங்கீற்றுகளில் நுழைந்த காற்று இசைஞானியின் இசைக்கு சவால்விடும் அளவிற்கு மெல்லியதாய் ஒரு இசையை எழுப்பிவிட்டுச் சென்றது.

    கடற்கரையை விட்டு தள்ளி கால் கிலோமீட்டர் தூரத்தில் தார்போட்ட சாலை ஒன்று பொழியூருக்குப் போய்க்கொண்டிருந்தது. இருபதடி அகலம் உள்ள அந்த சாலையில் எதிர் எதிரே கான்கிரீட் வீடுகள், முற்றங்கள் இல்லாமல் இருந்தது.

    சூசை தேங்காய்பட்டணம் பஸ்சில் வந்து இறங்கினான். அவன் காலாற கடற்கரையை நோக்கி நடந்தான்.

    கரை முழுக்க திரையரங்குகளில் இருசக்கர வாகனங்களை வரிசையாக நிறுத்தி வைத்ததுபோல சிறிதும் பெரிதுமான விசைப் படகுகளும், கட்டுமரங்களும் வரிசையாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. கடல் நீண்டு பரந்துகிடந்தது.

    சிறைக் கைதிகள் தப்பிச் செல்ல முடியாத அளவிற்கு உயரமாய் சுவர்கள் இருப்பதுபோல, அலைகள் தப்பிச்

    Enjoying the preview?
    Page 1 of 1