Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Panaiyolai
Panaiyolai
Panaiyolai
Ebook282 pages1 hour

Panaiyolai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பனைமரத்தின் ஓலைகளைக் கொண்டு பாய், பெட்டி முடையும் ஒரு தாழ்ந்த சமூகத்துப் பையனை, வேறு வர்க்கத்தைச் சார்ந்த ஒரு பெண் காதலிக்கிறாள். சமூகத்தில் வரும் தடைகளைத் தாண்டி இருவரும் காதலில் ஜெயித்தார்களா…? அந்த பையனின் காதலுக்கு எது தடையாக இருந்தது? பனைமரம் சார்ந்து தொழில் செய்யும் ஒரு சமூகத்தினரின் வாழ்வியலையும் வலிகளையும் பதிவு செய்திருக்கும் நாவல்தான் இந்த பனையோலை நாவல்.

Languageதமிழ்
Release dateJun 28, 2023
ISBN6580153309523
Panaiyolai

Read more from Irenipuram Paul Rasaiya

Related to Panaiyolai

Related ebooks

Reviews for Panaiyolai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Panaiyolai - Irenipuram Paul Rasaiya

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    பனையோலை

    Panaiyolai

    Author:

    ஐரேனிபுரம் பால்ராசய்யா

    Irenipuram Paul Rasaiya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/irenipuram-paul-rasaiya

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    வாழ்த்துரை

    A person smiling for the camera Description automatically generated with low confidence

    மறைக்கப்படும், மறக்கப்படும் ஒரு இனத்தின் வாழ்வியலை தூக்கி நிறுத்த போராடும் ஒரு இளைஞனின் வாழ்வியலே இந்த ‘பனையோலை’ நாவல்.

    ஒரு பக்க கதைகள் மூலம் தமிழக அளவில் ஏராளமான வாசகர்களை தன் பக்கம் ஈர்த்துகொண்ட எழுத்தாளர் ‘பால்ராசய்யா’ இயற்கனவே ‘வடலி மரம்’ என்கிற நாவல் மூலம் நாவலாசியராக தன்னை வெளிப்படுத்தினார்.  வாழ்வோடு பயணித்த பலவற்றை,  இழந்து வாழும் ஒரு கொடுமையை போன தலைமுறையினர் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்.

    பனைமரங்களெல்லாம் வெறும் பாடத்தில் படிக்கும் அளவுக்கு இன்றைய தலைமுறைகளுக்கு ஆன நிலையில் அந்த பனைமரங்களின் வாசத்தில், அவைகளின் அன்பில், பயன்பாட்டில் வாழ்ந்த போன தலைமுறையினரின் ஒரு தேடலே இந்த ‘பனையோலை’. பனையோடு சம்மந்தப்படுத்தி கதைகளுக்கு தலைப்பு வைப்பதும், அவற்றோடு புழுங்கிய மக்களின் வாழ்வியலை சித்தரித்து எழுதவும் பால்ராசய்யா நாவல் களத்தை கையில் எடுத்துள்ளார்.

    பழங்குடி மக்களின் அடையாளத்தை மறைத்து பிடிப்பதில் ஆட்சியாளர்கள் வரைக்கும் காட்டும் நிலையை இந்நாவலில் பார்க்கலாம்.

    ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எழுபத்தியேழாம் ஆண்டு இக்கதையில் வரும் இளமதியனுக்கு எட்டு வயது... இந்த எட்டு வயது முதல் முப்பத்திரெண்டு வயது வரையிலும் அவன் வாழ்க்கையின் போராட்டம்; அவன் அனுபவிக்கும் வறுமை, சாதியின் ரீதியான புறக்கணிப்பு, காதல் தோல்விகளென இந்த ஒரு கதாபாத்திரத்தின் வழியாக சகலத்தையும் சொல்லிவிட எத்தனிக்கிறார்... அக்கால  கட்டத்தில் வாழ்க்கையை அனுபவித்தவர்களுக்கு இந்த நாவல் கொடுக்கும் வாழ்வியல் ரசனை மிகவும் சுவையை கொடுக்கும். இக்கால தலைமுறைகள் கண்டிராத வாழ்க்கையின் எதார்த்தங்களில் ஒவ்வொரு வாசகனையும்

    உட்கார வைக்கிறது.

    விதவிதமான அழிப்பான்களை பயன்படுத்தும் இக்கால பிள்ளைகளுக்கு பச்சிலைகளால் சிலேட்டு அழித்த ரசனை தெரியாது.  வாழைப்பச்சலை, எலக்குருத்தான் பச்சலை, நவரப்பச்சலை என்கிற பச்சலைகளையே சிலேட்டு அழிக்க பயன்படுத்துவார்கள் என்பதை ‘பனையோலையில்’ வாசிக்கையில் வறுமைக்கிடையில் பிசைந்த அக்கால கல்வியாளர்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை. உடு துணி இல்லாமல், வயிற்றுக்கு உணவு இல்லாமல் வாழ்க்கையை போராட்டமாக கண்டபோதும் இறுதிவரைக்கும் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் இளமதியன் என்கிற கதாப்பாத்திரம் நிஜமான ஒரு மனிதனாக மனதில் பதிந்துபோவதே நாவலின் சிறப்பாக இருக்கிறது.

    குண்டி தெரியும் ஓட்டை நிக்கருகளோடு கொட்டும் மழையில் உற்சாகம் கண்ட பிள்ளைகள் எங்கே போனார்கள்? என்கிற வலி நிறைந்த கேள்வியை எழுப்பியது இந்நாவல். மருச்சினி என்கிற மரவள்ளி கிழங்கின் தோட்டங்கள் நீக்கமறு காட்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவிகிடந்த ஒரு காலமுண்டு. இதன் இலைகளில் பொழிந்துகிடக்கும் பனித்துளிகளில் நனையாமல் அக்கால பிள்ளைகள் வாழ்க்கையை நகர்த்தியிருக்கவே முடியாது. இந்த மரவள்ளி கிழங்கு எப்படி நட வேண்டும்? என்பதை விளக்கி கூறியிருப்பார் கதையாசிரியர். கணினி மயத்தில் ஜெட் வேகத்தில் தங்களை ஒட்ட வைத்த இக்கால பிள்ளைகளுக்கு ஒரு பாரம்பரிய விசயத்தை விளக்கி நிற்கிறது இந்நாவல்.

    கல்வியில் முன்னிடம் பெற்றிருக்கும் இதே குமரி மாவட்டத்தில்தான் வரதட்ணையும் வளமாக வளர்ந்து நிற்கிறது. பேரம் பேசுதலோடு, கொடுக்கல் வாங்கலோடு, கணிசமான தொகை பரிமாற்றங்களோடு நூறு இருநூறு என்கிற நகைகளின் பேச்சோடுதான் இன்றும் கலியாணங்கள் நடக்கின்றன. இதில் பல பழைய விசயங்களை இப்போதெல்லாம் பார்க்க முடியவில்லை. அன்றெல்லாம் வீடுகளின் அருகில் கிடக்கும் விளைப்புறங்களில் பெரை கட்டுபவர்களை அழைத்து கலியாண பெரை அமைத்து, பாட்டுகள் ஒலிபரப்ப அதற்கென்றே இருக்கும் ரேடியோ செட்டுக்காரங்களை அழைத்து, உறவுமுறைகளை ஒரு கிழமைக்கும் முன்னே கூப்பிட்டு சாம்பார் சோறு போட்டு கொண்டாடிய அக்கால விசேசங்களையெல்லாம் கலியாணமண்டபங்கள் உள்வாங்கிக்கொண்டு பறித்தெடுத்து விட்டன. கலியாண வீட்டில் ‘குலை வாழை நாட்டல்’ என்கிற ஒரு அருமையான காட்சி உண்டு. இக்காட்சியை நிலுவையில் கொண்டு வர குடும்பங்களெல்லாம் சேர்ந்து குலை தள்ளிய வாழையை வெட்டும் காட்சியெல்லாம் இன்று குறைந்து போயிருப்பதை நாவலில் காட்டியிருக்கிறார்.

    தொலைதலை ஞாபகப்படுத்தி அவ்வாழ்வின் சுவையை மிதமாக விரித்திருக்கிறார் பனையோலையில். இளமதியனோடு பயணப்படும் போதெல்லாம் கொள்கையை விட காதலொன்றும் பெரிது இல்லை என்பதை போலவே தெரிகிறது.

    தான் சார்ந்த பழங்குடி இனத்தின் அடையாளம் வேண்டும் என்று போராடுகையில், அது வழியாக கிடைக்ககூடிய அரசாங்க வேலை இழுத்தடிப்பாகி கொண்டே போகுகையில் நம்பியிருந்த காதலி ஒரு கட்டத்தின் மேல் பிரியாவிடை கேட்கும் போது... ‘வா போலாம்’ என சொல்லாமல் உன் வாழ்க்கையை நீ தீர்மானி என்கிற விடை பெறுதலை கொடுத்து விலகும் இளமதியனை மனம் பார்க்க ஆசைப்படாமல் இல்லை.

    வீடுகளுக்குள்ளே திருகினால் போதும் குழாய் வழியே வெள்ளம் வருமளவுக்கு பணம் மலிந்துவிட்டது இக்காலத்தில். குடிநீரை விலைக்கு வாங்கும் அளவுக்கு ஆகிவிட்ட இன்றைய பிள்ளைகளுக்கு தெரியாது... அன்றெல்லாம் வயல்வெளியோர ஏலாகரைகளில் மண்ணின் இதயத்திலிருந்து ஊற்று பெருகுவது பற்றி...மழைக்காலங்களில் தன்னாலே பெருக்கெடுக்கும் சுனைகளைப் பற்றி... வீட்டுக்கு வீடு கிணறுகள் கிடந்ததைப்பற்றி... இக்கிணறுகளிலிருந்து வெள்ளம் இறைக்க பயன்படுத்தும் பாளைகளைப் பற்றி...இதையெல்லாம் தான் ‘பனையோலை’ மெல்லமாக சொல்லி நிற்கிறது.

    பள்ளியில் பீஸ் கட்டவேண்டிய கட்டாயம் இருக்கையில் வீட்டிலிருந்தெல்லாம் கொடுக்க மாட்டார்கள் அன்று. அந்த பிள்ளைகளே விடுமுறை நாள்களில் கூலி வேலைகளுக்கு போய் கட்டுவார்கள். யாரோ வேண்டாமென்று கொடுக்கும் கழிவு துணிகளைகூட புதிதுபோல் உடுத்திக்கொண்டு வாழ்க்கையை நிலைநிறுத்த துடித்த போராளிகளின் வாழ்க்கையின் ஒரு சாட்சியாக இளமதியனை பார்க்கலாம் இந்நாவலில்...

    முந்திரி பருப்புகளை பறக்கி அவைகளை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டி விற்று அதில் கிடைக்கும் சில்லறைகளை வைத்து தனக்கான தேவைகளை பார்த்துக்கொண்ட தன்மான பிள்ளைகளே அக்கால தலைமுறைகள் என்பதை இந்நாவல் இன்னும் ஆழமாக சொல்லுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அவியல் கூட்டுக்கான ஒரு தனிச்சிறப்பு உண்டு. அவியல் இல்லாமல் ஒரு அவசர வீடை இன்றளவும் கடக்க முடியாது... விரித்து வைத்த வாழை இலையில் அவியல் கூட்டை குமரிகளுக்கென வாரி வைத்து கொடுக்கும் வாலிபர்களின் சேட்டையை ரசித்தேன் அக்கால சூழலுக்கு போய்...

    பனை ஓலையில் செய்த பயன்பாட்டு பொருள்களே அன்றைய முக்கிய பயன்பாட்டு பொருள்கள். அரி பெட்டி, நாரு பெட்டி, கடவம் என்பதெல்லாம் வாழ்க்கையோடு கிடந்த எதார்த்தங்கள். இந்த பொருள்களை வாழ்விலிருந்து பிரித்து கூட பார்க்கமுடியாத அளவுக்கு கிடந்தன. மீன் வாங்க போனால், அரிசி வாங்க போனால், சருவு பறக்க போனால், பச்சரியை இடித்து வைத்தால், எங்குமே ஓலையால் செய்த பெட்டிகளே. ஆனால் இன்றோ நெகிழிகளால் நெரிக்கப்பட்டு கிடக்கிறது பூமி...

    பனை ஓலையால் செய்த பட்டையில், சூடு கஞ்சியை குடிக்கும் போது அந்த கஞ்சியை விட ஓலையிலிருந்து எழும்பும் மணம் இருக்கே... அந்த கஞ்சியும் ஓலையும் இப்போதும் வேண்டும் போலவே ஆசையை எழுப்பிவிட்டது பனையோலை.

    இட்டக வேலி கோயிலின் பின்புறம் கணியான்கள் வீடுகள் இருந்தன; இங்கிருக்கும் கணியான்கள்தான் கோயில் பூஜை செய்யும் பொறுப்பை ஏற்றிருந்தார்கள். உலகத்தின் வேறு எந்த கோவிலிலும் நடைபெறாத சம்பவமாகவே இது இருந்தது. வேறு ஒன்றிரண்டு கோயில்களில் கணியான்கள் பூசாரிகளாக இருந்தார்கள். காலப்போக்கில் அந்த உரிமை அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. காப்புக்காடு வெள்ளச்சி விளை கோயிலில் கரையன்குளத்தைச் சேர்ந்த தாம்சன் என்பவர்தான் பூசாரியாக இருந்தார். பிறகு அவர் பூஜை செய்ய அனுமதிக்கப்படவில்லை (பக் 119)

    பணமும் நிலமும் உடைய உயர்சாதி நாயர்கள் தங்களுக்கு அடிமை வேலை செய்ய அவர்களை (கணியான்களை) அடிமையாக வாங்கி சேரிகளில் அமர்த்தியது போல உயர்சாதி நாடார் இன மக்களும், அடிமை வேலை செய்ய கணியான் இன மக்களை பல தலைமுறைகளுக்கு முன்பாக வாங்கி அமர்த்தியிருக்கிறார்கள் (பக் 169)

    இப்படியாக காலாகாலமாக அமர்த்தப்பட்ட அடிமை வாழ்விலிருந்து ஐந்தாம் தலைமுறையில் வந்த இளமதியன் இந்த நிலையை கல்வியால் மட்டுமே மாற்ற முடியுமென்று கல்விக்காக போராடுவதை வெளிப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர்.

    தன் இன அடையாள மீட்டெடுப்புக்காக ஐரேனிபுரம், தேங்காய் பட்டணம், அஞ்சுக்கண்ணுகலுங்கு, வாறுவிளாகம், உதச்சிக்கோட்டை, பேப்பிலாவிளை, மாராயபுரம், பாக்கோடு, கரையங்குளம், பேமாடம், காப்புக்காடு, குறுமத்தூர், கழுவந்திட்டை, மேல்புறம், அண்டுகோடு, உத்திரம்கோடு, கட்டைக்காடு, மஞ்சாலுமூடு, மாலைக்கோடு, இடைக்கோடு, மலாமாரி, ஈந்திக்காலை, மூவோட்டுக்கோணம், கூட்டிலிகோணம், இளஞ்சிறை, கந்நூமாமூடு, காரைக்கோணம் என பல ஊர் பெயர்களை அடையாளப்படுத்தி இவர்களெல்லாம் சேர்ந்து போராடும் காட்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    இந்நாவலில் பல இடங்களில் பல கதைகள் வைக்கப்பட்டுள்ளன. கொல்லாங்கோடு தூக்கம் பற்றிய பதிவு, பேய் கதைகளென பல திக் திக் பதிவுகளை நம்பிய அக்கால பிள்ளைகளின் மனோபாவம் இடம் பெறுகிறது. சருக்கை சந்தையின் ஆரவாரம் வாசித்து முடித்த பிறகும் கேட்டுக்கொண்டே இருக்கும்.

    ‘காதல் ஒன்றும் சாதி பார்த்து வருவதில்லையே; அது பற்றிக்கொள்ளவும், படர்ந்துகொள்ளவும் துணையைத்தானே பார்க்கிறதே தவிர சாதி பார்ப்பதில்லை’ என்ற தத்துவம் இடிந்துபோய் நிற்கிறது இந்நாவலில்... இனத்தின் அடையாளத்தை மீட்க தனியே நிற்கும் இளமதியனோடு வாசகர்கள் துணை நிற்கட்டும். ‘பனையோலையின்’ வாசம் தமிழன்னையை மீட்டட்டும்.

    பல்வேறு தரப்புகளை ஒரே கதாபாத்திரத்தில் கொண்டு நிறுத்த போராடியிருக்கிறார் நூலாசிரியர். இதில் விசயங்கள் இருக்கின்றன...இன்னுமான வாசிப்பும் செழுமையும் இவரை நாவல் உலகத்தில் ஆழப்படுத்தட்டும்...

    என்றும் இனிய வாழ்த்துகளுடன்

    எ. மலர்வதி

    (சாகித்ய அகாதமி விருதாளர்)

    வாழ்த்துரை

    A person with a mustache Description automatically generated with medium confidence

    முனைவர்.

    இரா. சுரேஷ் சுவாமியார் காணி,

    நிறுவனத்தலைவர், பழங்குடி பாரதம்,

    தடிக்காரன் கோணம்,

    கன்னியாகுமரி மாவட்டம்.

    பாமர மக்களின் வாழ்வியலை நாவலாக்குவதில் ஐரேனிபுரம் பால்ராசய்யா நிகரற்ற ஆளுமை மிக்கவர்.

    இவரது சிறுகதைகள், ஒரு பக்க கதைகள், நாவல்கள், நாடகங்கள் என அனைத்து படைப்புகளிலும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வலியும், வேதனையும் இழையோடுவதை நான் கவனித்திருக்கிறேன்.

    இவர் ஒரு நல்ல கவிஞர், நடிகர், நாடக ஆசிரியர், எழுத்தாளர் என்ற அனைத்து திறமைகளையும் கடந்து சிறந்த மனிதர் என்பதே இவரது முதல் தகுதியாக நான் பார்க்கிறேன்.

    பனையோலை என்ற இந்த நாவலில் இளமதியன் என்ற மனிதன் சாதிய ஏற்றத்தாழ்வும், தீண்டாமை எனும் பெருங்கொடுமையும் சூழ்ந்த இந்த சமூக அமைப்பில் எத்தகைய பிரச்சனைகளை எதிர்கொண்டான் என்பதை இரத்தமும், சதையுமாக அப்படியே எடுத்துரைக்கிறார்.

    ஐரேனிபுரம் அருகிலுள்ள காடுபுரையிடம் என்னும் கிராமத்திலிருந்து கதை நகருகிறது. இளமதியன்  புட்டுக்கடைக்கு போகிறான்.

    புட்டுக்கடைக்காரர் காலதாமதம் செய்கிறார்.

    நான் பள்ளிக்கூடம் போகணும் கொஞ்சம் சீக்கிரமா புட்டு தாங்க என்று இளமதியன் கேட்கிறான்.

    அதற்கு புட்டுக்கடைக்காரர் ஆமா... இவன் பள்ளிக்கூடம் போயி... படிச்சு கிழிச்சிருவான் என்று ஏளனம் செய்கிறார் இது ஏளனம் மட்டுமல்ல, ஒரு ஆதிக்க சாதியின் வன்மம்.

    இளமதியன் போன்ற ஒரு தாழ்த்தப்பட்ட சிறுவன் சீருடை அணிந்து, புத்தகம் ஏந்தி பள்ளிக்கு படிக்கச் செல்வதை ஏற்க மறுக்கிற சாதிய மனோபாவம்.

    அது இன்றைய காலத்திலும் பூசாரி தொடங்கி புட்டுக்கடைக்காரன் வரை வியாபித்திருக்கிறது.

    பொட்டக்குளத்தில் குளிக்கவும், பொது கிணறுகளில் தண்ணீர் இறைக்கவும், பொது பாதைகளில் நடக்கவும் கூட உரிமை மறுக்கப்பட்ட ஒரு சமூக கட்டமைப்பில்தான் இளமதியன் வளர்ந்து கொண்டிருந்தான்.

    கண்ணாடிப் பெட்டியிலிருந்த குச்சிமிட்டாய்களை உற்றுப் பார்த்ததற்காக முறுக்கான் கடைக்காரன் வர்க்கி ஒரு செம்பு தண்ணீரை கொரி மூஞ்சியில் அடித்து அவனது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்ட போதும் அழுது தொலைப்பதைத் தவிர இளமதியனால் வேறு எதுவும் செய்ய இயலவில்லை.

    பனை ஓலைகளை அறுத்து வந்து அழகாக கூடை முடையும் தனது அத்தை சாறாவிடம், மாமி எனக்கும் கூடை முடைய கற்றுத்தாங்க என்று இளமதியன் கேட்டான்.

    நாடார் மக்களின் தோட்டங்களில் நிற்கும் பனைமரத்தின் இளங்குருத்துகளை சேகரித்து வந்து கைவினைப்பொருட்களைச் செய்து அவைகளை சருக்கை சந்தையில் விற்பது இளமதியனின்  தாய் லைசாவுக்கும், அத்தை சாறாவுக்கும் தொழிலாகவே இருந்தது.

    பனை ஓலை இம்மக்களுக்கு பல நிலைகளில் படியளந்தது என்றால் மிகையில்லை. என்றாலும் வறுமை துரத்திக்கொண்டே இருந்தது.

    ஒரு காலகட்டத்தில் இளமதியன் டீச்சர் வீட்டில் வேலைக்கு சேர்ந்தான்.

    கடுமையாக உழைத்தான், மாடுபோல உழைத்து ஓடுபோல தேய்ந்தான். ஒரு நாள் மாட்டுக்கு புல் வெட்டும்போது அருகில் நின்ற நாரந்தி மரத்திலுள்ள பிஞ்சொன்றை பறித்து சாப்பிட்டதற்காக  டீச்சரின் மகன் வெஸ்லி கம்பால் அடித்து காயப்படுத்தினான். டீச்சர் இளமதியனை கள்ளன் என்றும், திருடன் என்றும், சொல்லால் அடித்து படுகாயப்படுத்தினாள்.

    ஊரைக்கூட்டி அவமானப்படுத்தினாள். அப்படி இளமதியனின் இளமைக்கால அவமானங்களை பட்டியலிடுகிறார் பால்ராசய்யா.

    கதை ஓட்டம் மிகவும் சிறப்பு. பக்கத்துக்கு பக்கம் பரபரப்பு. இளமதியனின் கல்லூரி நாட்களும், வாலிப துள்ளலும் அருமை.

    தனது டியூசன் மாணவியே தன் காதலைச் சொல்ல மாணவி காதலி ஆகிறாள்.

    காதலின் இன்பமும், வலியும் அவனை புரட்டி எடுக்கிற கதைப்பாங்கு மிகவும் இனிமை.

    மதுரைக்கு செல்லும் இரண்டு பேருந்துகளுக்கிடைய காதலர் சந்திப்பும் தவிப்பும் புதுமை.

    ஒரு காதல் திரைப்படத்துக்கான காட்சியமைப்பு பிரமாதம்

    சாதி சான்றிதழ் கேட்டு இளமதியன் நடத்தும் சட்ட போராட்டம் இன்றும் தொடருகிறது.

    இன்றும் கணியான் இன மக்களுக்கு பழங்குடியினர் ST சான்றிதழ் வாங்க முடியாத நிலையுள்ளது.

    சான்றிதழ் கிடைத்ததா...?

    காதல் ஜெயித்ததா...? என்பது மீதி கதை.

    படிக்க படிக்க தேனாக சுவைக்கிறது கதைப் பக்கங்கள்.

    வாங்கிப்படியுங்கள்... பயன்பெறுங்கள்...

    பால்ராசைய்யாவுக்கு வாழ்த்துக்கள்.

    நன்றி

    என்னுரை

    A person with a mustache smiling Description automatically generated with medium confidence

    ஐரேனிபுரம் பால்ராசய்யா

    வடலிமரம் நாவல் தந்த வெற்றி இன்னொரு நாவலை எழுதத் தூண்டியது. மீண்டும் பனை மரத்திலிருந்து வெட்டப்படும் பனையோலைகளைக் கொண்டு பாய், பெட்டி  முடையும் கணியான் சமூகத்தினரின் வாழ்வியலை, வலிகளை, கலாச்சாரத்தை, பண்பாடுகளை அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை, எதிர்கொள்ள போகும் பிரச்சனைகள், சாதிய ஏற்றத்தாழ்வுகளால் மெல்ல மெல்ல விலகிச் செல்லும் ஒரு காதலையும், ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகம் தங்களை கணியான் என்று சொல்லிக்கொண்டு அரசை நம்ப வைத்து சான்றிதழ்கள் பெற்றுக் கொண்டதும், கணியான் சமூகத்தினரை வஞ்சித்த நிகழ்வுகளை இந்த நாவல் விவரிக்கிறது.

    இந்த நாவல் பல வருடங்களுக்கு முன்பு இருந்து துவங்கி இன்று வரை தீர்வுகள் கிடைக்காத பிரச்சனைகளை சுமந்து திரியும் கணியான் இனத்தவரின் வாழ்வியல் தான் இந்த பனையோலை நாவல்.

    வஞ்சிக்கப்பட்ட கணியான் இனத்தவருக்கு நீதி வேண்டும் என்று போராடுவதே நாவலின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

    இந்த நாவலுக்கு அழகியதோர் வாழ்த்துரைகள் வழங்கிய இரா. சுரேஷ் சுவாமியார் காணி அவர்களுக்கும்,  சாகித்திய அகாதமி விருதாளர் மலர்வதி அவர்களுக்கும், இந்த புத்தகத்தை அழகிய முறையில் அச்சிட்ட  புஸ்தகா டிஜிட்டல் மீடியா நிறுவனத்தாருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

    ஐரேனிபுரம் பால்ராசய்யா

    68 A, தெக்குக்கரை

    ஐரேனிபுரம் அஞ்சல்

    குமரிமாவட்டம் – 629 162

    9746486845, 9791820195

    email: paulrasaiya6@gmail.com

    1

    மார்கழி மாத பனித்துளிகள் மரிச்சினி இலைகளில் தங்கி மரணப்பட தயாராகிக் கொண்டிருந்தன. பாதையின் இருபுறமும் மரிச்சினி கம்புகளிலிருந்து விரிந்த இலைகள் பனித்துளிகளைச் சுமந்து கொண்டு அந்த ஒற்றையடிப் பாதையை வழி மறித்து நின்றன.

    காற்று

    Enjoying the preview?
    Page 1 of 1