Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Gnabagankal Thaalaattum
Gnabagankal Thaalaattum
Gnabagankal Thaalaattum
Ebook144 pages55 minutes

Gnabagankal Thaalaattum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காதல் மோதலாகி அண்ணன்களால் காதல் பிரிக்கப்பட்டு நீ யாரோ நான் யாரோ என்று வேறு வேறு திசைகளில் வாழும் காதலர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் வேறு வேறு ஆட்களை திருமணம் செய்துகொண்டு மனதில் தேங்கி இருந்த ஞாபகங்களை மட்டுமே நினைவூட்டி வாழும் வாழ்க்கையில் காதலியின் தலையில் அடிபட்டு நிகழ்கால ஞாபகங்களை தொலைத்து இளமைக்கால ஞாபகங்கள் வந்தால் எப்படி இருக்கும்

நிகழ்கால கணவன் குழந்தைகளை விட்டுவிட்டு இளமைக்கால காதலனை தேடி அலையும் கதை நாயகிக்கு அவள் ஞாபகங்கள் வந்து தாலாட்டினால் எப்படி இருக்கும் என்பதை உணர்த்தும் ஒரு உணர்ச்சிக் குவியல்தான் ஞாபகங்கள் தாலாட்டும் நாவல்.

இந்த நாவலில் காதல் உணர்வுகள் பொங்கி வழியும் நிகழ்வுகள் படிக்கும் இதயங்களை இளகச் செய்யும் வாசியுங்கள் ஞாபகங்களில் தாலாட்டில் தூங்கிப் போவீர்கள்

Languageதமிழ்
Release dateFeb 26, 2022
ISBN6580153308184
Gnabagankal Thaalaattum

Read more from Irenipuram Paul Rasaiya

Related to Gnabagankal Thaalaattum

Related ebooks

Reviews for Gnabagankal Thaalaattum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Gnabagankal Thaalaattum - Irenipuram Paul Rasaiya

    https://www.pustaka.co.in

    ஞாபகங்கள் தாலாட்டும்

    Gnabagankal Thaalaattum

    Author:

    ஐரேனிபுரம் பால்ராசய்யா

    Irenipuram Paul Rasaiya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/irenipuram-paul-rasaiya

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 1

    வானம் வழக்கத்திற்கு மாறாக பகல் இரண்டு மணிக்கு வெளிச்சமின்றியே கிடந்தது... காற்று பெரும் இரைச்சலோடு சுழன்றடித்துக் கொண்டிருந்தது. மேகங்கள் கட்டியிருந்த வெள்ளாடையின் நிறம் மாறி கறுப்பாகியிருந்தது.

    வானத்தில் மேகங்கள் திரண்டு செல்வது படையெடுத்துச் செல்லும் படை வீரர்களைப் போலவே இருந்தது.

    மழை வருவதற்கான அறிகுறி தெரிந்ததும் மொட்டை மாடியில் காயப் போட்டிருந்த துணிகளை எடுக்க வேகமாய் படியேறினாள் விதுலா.

    வயது நாற்பது என்பது அவளது பெர்த் சர்டிபிகெட் சொல்லும் உண்மை, ஆனால் பார்ப்பவர்கள் பத்து வயதை தாராளமாகவே குறைப்பார்கள்.

    வில்லேஜ் ஆபீசர் எனும் அரசாங்க உத்யோகம். காட்டன் புடவையில் அவளது மிடுக்கான நடை.

    அதிக நகைகள் இருந்தும் அளவான நகைகள் அணியும் பழக்கம், எப்பொழுதும் புன்னகையோடு இருக்கும் முகம்.

    ஒரு அரசு அதிகாரி என்ற கர்வம் துளியளவும் இல்லாமல் எல்லோரிடமும் அன்பொழுக பேசும் குணம்.

    அவளது கணவன் ரகுவுக்கு வங்கியில் வேலை. மூத்த மகள் ரம்யா கல்லூரியில் பி.இ முதலாமாண்டு படித்து வருகிறாள்.

    இளைய மகன் சரண் பத்தாம் வகுப்பு பரீட்சை எழுத தயாராகிக் கொண்டிருக்கிறான்.

    மாராயபுரத்தில் அழகான வீடு, அன்பான கணவன், அன்பு காட்டும் குழந்தைகள், இருவருக்கும் அரசாங்க உத்யோகம் என அந்த வீடு ஆனந்தங்களால் நிறைந்திருந்தது.

    அன்று ஞாயிற்றுக்கிழமை. காலையில் தனது கணவன் ரகுவோடு இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு விட்டு மன நிறைவோடு வீடு திரும்பியிருந்தாள்.

    மதிய உணவை ரகுவோடும் பிள்ளைகளோடும் சேர்ந்து சாப்பிட்டு முடித்து விட்டு நாளிதழை விரித்த போது தான் மழை வரும் அறிகுறி தெரிந்து மாடிப்படியேறினாள்

    மழையின் முதல் துளிகள் தரையில் விழுந்து மண் வாசனை எழுந்தது. சட்டென்று மின்னல் வந்து போனது யாருக்கும் தெரியவில்லை.

    அதன்பிறகு வந்த இடிச்சத்தம் பெரும் சத்தமாய் கேட்டது. பலரது புருவங்களையும் உயர்த்தியது.

    மழை நின்று பெய்தது. விதுலா ஜன்னலைத் திறந்து வைத்து மழையை வேடிக்கைப் பார்த்தாள்.

    மழைத்துளிகள் வேகமாய் தரையில் விழுவதும், தரையில் விழுந்த தண்ணீர் திரண்டு ஓடும் மெல்லிய சத்தமும், ஆக மழையின் இசை அவள் மனதை வருடியது.

    ஜன்னலுக்கு உள்ளே தெறித்த சாரல் துளிகளும் அதன் ஈரமும் ரசித்தாள். அந்த நண்பகல் மழை விதுலாவின் மனதுக்கு இதமாக இருந்தது.

    மூத்த மகள் ரம்யா நேற்றிரவு அதிக நேரம் படித்த களைப்பில் தூங்கிக் கொண்டிருந்தாள். மழை ஓவென பெய்த இரைச்சலில் அவளது தூக்கம் காணாமல் போக, மொஃபைலில் முகபுத்தகம் பார்த்தாள்.

    இளையவன் சரண் சாப்பிட்டுவிட்டு அருகிலிருந்த கிரவுண்டில் கிரிக்கெட் மட்டையோடு விளையாடப் போயிருந்தான்.

    மழை வருவதை தெரிந்து கொண்டு விளையாட்டை பாதியில் நிறுத்திவிட்டு வீடு திரும்பியிருந்தான். மாடியில் அவன் அம்மாவைப்போலவே அவனும் மழை ரசித்தான்.

    இரண்டு மணிநேரம் நின்று பெய்த மழை பிறகு யார் சொல்லிக் கேட்டதோ தெரியவில்லை மழை சுத்தமாக நின்றிருந்தது.

    காற்று அடர்ந்திருந்த போதிலும் அது இல்லையென்றே உணர்ந்தாள் விதுலா. மரங்கள் அசையாமலேயே நின்றிருந்தது வேடிக்கையாக இருந்தது.

    மழைக்கு முன்பு மரங்கள் எல்லாம் என்ன ஆட்டம் போட்டன. நடன நிகழ்ச்சியில் பாடல் முடிந்ததும் நடனம் தானாய் நின்று விடுவதைப்போல, மரங்கள் காற்றின் வரத்தின்றி ஆடாமல் அசையாமல் நின்றிருந்தன.

    இலைகளில் தங்கியிருந்த தண்ணீர் பனித்துளிகள் உருகி வடிவது போல தரையில் விழுந்து கொண்டிருந்தன. அவை எழுப்பிய சத்தம் மழை நின்று போன அடையாளமாக இருந்தது.

    வீட்டு முற்றத்தில் நின்றிருந்த தென்னை மரத்தில் சுற்றியிருந்த முல்லைச் செடிகளின் வள்ளிகளில் முத்து முத்தாய் முல்லைப்பூக்கள் விரிந்து புன்னகைத்துக் கொண்டிருந்தன.

    பூக்களிலிலிருந்து ஈரம் வடிந்து கொண்டிருந்தது. விரிந்த பூக்களின் தண்டுகளில் ஈரம் நிரம்பி பூக்களின் எடை கூடியிருந்தது.

    வீட்டு முற்றத்தின் கான்கிரீட் தரையில் மழை பெய்து முடிந்த போதிலும் அதன் ஈரம் இன்னும் உலராமலேயே கிடந்தது.

    வீட்டு முற்றம் பள்ளத்தில் இருந்ததால் மழைத்தண்ணீர் இழுத்து வந்த மண் முற்றத்தில் படிந்திருந்தன.

    விதுலாவின் பார்வை பூத்திருந்த முல்லைப்பூக்களில் பதிந்தது. பூக்களின் அழகு அவளை வசீகரித்தது.

    விரிந்தும் விரியாத முல்லைப்பூக்களின் வாசம் அவளை வலிய வந்து இழுத்துக் கொண்டிருந்தது.

    முற்றத்து தரையில் ஒரு அடி எடுத்து வைத்தாள். கால் நீளமாய் வழுக்கி பின் தலை தரையில் அழுத்தமாய் இடித்து ணங்ங் என்று சத்தம் எழுந்தது.

    வீட்டுக்குள்ளேயிருந்த அவளது கணவன் ரகு, படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை விட்டுவிட்டு வெளியே ஓடி வந்தான்.

    வீட்டு முற்றத்தில் நெடுஞ்சாண்கிடையாக படுத்திருந்த மனைவியைப் பார்த்ததும் அய்யோ என்ற அவனது குரல் அலறியது.

    மாடியில் முகபுத்தகம் பார்த்துக்கொண்டிருந்த ரம்யாவும், மழை ரசித்தபடி இருந்த சரணும் பதறியபடி இறங்கி ஓடி வந்தார்கள்.

    ரகு விதுலாவின் தலையை நிமிர்த்தி உயர்த்த அவள் அவன் மார்பில் குழைந்து சரிந்தாள்.

    மூவரும் விதுலாவை தூக்கி போர்டிகோவில் உட்கார வைத்து முகத்தில் தண்ணீர் தெளித்தார்கள்.

    விதுலா கண் திறக்கவே இல்லை. சட்டென்று கார் எடுத்து விதுலாவை அமரவைத்து பதட்டத்துடன் காரை ஓட்டினான் ரகு. மார்த்தாண்டம் மஞ்சு ஆஸ்பத்திரி நுழையும் வரை மயக்கம் தெளியாமல் மயங்கியே கிடந்தாள்.

    ஐ.சி யூ வார்டில் விதுலா அடைக்கப்பட்டு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு சுவாசம் தரப்பட்டது. விதுலாவின் மார்புகள் ஏறி இறங்கிக்கொண்டிருந்தது.

    வெளியில் வருத்தம் படிய தலை குனிந்தபடி அமர்ந்திருந்தான் ரகு. அவனருகில் சோகமாய் இருந்தார்கள் ரம்யாவும் சரணும்.

    செய்தியறிந்து விதுலாவின் சகோதரர்கள் விஜயனும், செல்வாவும் அரக்கப்பரக்க ஓடி வந்து ஐசியூவின் கண்ணாடி வழியே எட்டிப்பார்த்து கண் கலங்கினார்கள்.

    எப்பிடி ஆச்சு...? விதுலாவின் அண்ணன் விஜயன் கேட்டான். ரகு பதிலெதுவும் சொல்லாமல் அழுதான்.

    அழாதீங்க மாப்பிள... விதுலாவுக்கு எதுவும் ஆயிடாது...!

    ஐசியூவிலிருந்து நர்ஸ் வெளியேறினாள். விதுலாவின் அண்ணன் விஜயன் அவள் பின்னால் சென்று விபரம் கேட்டான்.

    இன்னும் நினைவு திரும்பல... ரெண்டு மூணு நாள் கூட ஆகலாம்! சொல்லிவிட்டு மருந்துகள் அடுக்கி வைத்திருக்கும் ஸ்டோர் றூமில் சென்று மாத்திரைகள் தேடிக்கொண்டிருந்தாள்.

    மூச்சு விட எந்த தடையும் இல்லாததால் வென்டிலேட்டரின் வசதி தேவையில்லை என்று நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. நினைவு தான் திரும்பாமலேயே இருந்தது.

    விதுலா நினைவுக்கு வராமல் கால்களை உதறுவதும், சட்டென்று கட்டிலை விட்டு எழும்புவதுமாக இருந்தாள்.

    அவள் கைகளில் பொருத்தியிருந்த டியூப் வழியாக குளுக்கோஸ் செல்வது தடைபட்டுக்கொண்டிருந்தது. ரகு அவள் அருகில் இருந்து கைகளைப் பிடித்துக் கொண்டான்.

    மறுநாள் விதுலாவை ஐசியூ யூனிட்டிலிருந்து தனி அறைக்கு மாற்றியிருந் தார்கள். அவளை பக்கத்தில் இருந்து கவனித்துக்கொண்டான் ரகு.

    ரம்யாவும், சரணும் விதுலாவின் அக்கா மாலாவின் வீட்டில் நின்று கொண்டு கல்லூரிக்கும் பள்ளிக்கூடத்துக்கும் சென்று கொண்டிருந்தார்கள்.

    மாலா தினமும் வீட்டிலிருந்து சமையல் செய்து எடுத்து வருவாள். மாலை நான்கு மணி வரை இருந்து பார்த்துக்கொள்வாள்.

    ரம்யா கல்லூரி முடிந்து நேராக ஆஸ்பத்திரிக்கே வந்து சேர்வாள்... சரணும் அதுபோல வந்து அம்மாவைப்

    Enjoying the preview?
    Page 1 of 1