Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nee Thana Andha Kuyil
Nee Thana Andha Kuyil
Nee Thana Andha Kuyil
Ebook122 pages28 minutes

Nee Thana Andha Kuyil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மேலங்கலம் நீலி அம்மன் கோவில் வளாகத்தில் ஒரு கொலை நடக்கிறது. அந்தக் கொலையை துப்பறிய வரும் இன்ஸ்பெக்டர் அருண் பாண்டியனுக்கு அது சவாலாகவே இருக்கிறது, காரணம் அந்தக் கொலையை மனிதன் செய்யவில்லை அந்தக் கோவிலில் இருக்கும் நீலி ஆத்தா தான் செய்கிறாள் என்று ஊர் மக்கள் நம்புகிறார்கள். கோவில் பூசாரியும் அதுதான் உண்மை என்கிறார். அருண் பாண்டியனுக்கு அதில் நம்பிக்கை இல்லை அவன் சந்தேகம் பூசாரி மேல் விழுகிறது. அதன்பிறகு அந்த ஊர் பெரியவர் அண்ணாச்சி ஆறுமுகத்தின் மீதும் அவனது அடியாள் காளியப்பன் மீது விழுகிறது. விசாரணைகள் தொடர்கிறது அந்த நேரத்தில் மீண்டும் ஒரு கொலை நடக்கிறது விசாரணை விரிகிறது குற்றவாளி யார் என்று தெரியாமல் குழம்புகிறார்கள். இறுதியில் அருண்பாண்டியன் குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்தாரா இல்லையா என்பதை சொல்லும் நாவல் தான் நீதானா அந்த குயில்.

Languageதமிழ்
Release dateJul 30, 2022
ISBN6580153308692
Nee Thana Andha Kuyil

Read more from Irenipuram Paul Rasaiya

Related to Nee Thana Andha Kuyil

Related ebooks

Related categories

Reviews for Nee Thana Andha Kuyil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nee Thana Andha Kuyil - Irenipuram Paul Rasaiya

    pustaka_logo-blue_3x

    https://www.pustaka.co.in

    நீ தானா அந்தக் குயில்

    Nee Thana Andha Kuyil

    Author:

    ஐரேனிபுரம் பால்ராசய்யா

    Irenipuram Paul Rasaiya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/abibala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் -1

    அத்தியாயம் -2

    அத்தியாயம் -3

    அத்தியாயம் -4

    அத்தியாயம் -5

    அத்தியாயம் -6

    அத்தியாயம் -7

    அத்தியாயம் -8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் -10

    அத்தியாயம் – 11

    அத்தியாயம் – 12

    அத்தியாயம் – 13

    அத்தியாயம் -14

    அத்தியாயம் -15

    அத்தியாயம் -16

    அத்தியாயம் -17

    அத்தியாயம் -1

    இருள் இறுகத்துவங்கியது. கும்மிருட்டு குளிரை இலவசமாக தந்துகொண்டிருந்தது. பரந்து விரிந்த மடத்துக் குளத்தின் கரை வரை தண்ணீர் தளும்பிக் கிடந்தது.

    குளத்தைத் தாண்டி இருநூறு அடி தள்ளி மடத்துக் கோவில் இருந்தது. வெள்ளிக்கிழமை நாட்களில் சிறப்பு பூஜையும், மற்ற தினங்களில் சாதாரண பூஜைகள் நடப்பது வழக்கம்.

    இரவு எட்டு மணிக்கு கோவில் நடையைச் சாத்திவிட்டு திரும்பினால் மனித நடமாட்டமே இருக்காது.

    கோவிலின் கிழக்குப் பகுதியில் புதுக்கடை நோக்கி புறப்படும் சாலை குண்டும் குழியுமாகக் கிடந்தது.

    அந்த சாலையின் இடது பக்கம் இரண்டு மாடிக் கட்டிடமாக உயர்ந்து நின்றது அண்ணாச்சி ஆறுமுகத்தின் வீடு.

    அவரது வீட்டில் எரியும் மின் விளக்குகள் பிரகாசமாய் எரிந்தாலும் ஐநூறு அடி தள்ளியிருக்கும் மடத்து கோவிலுக்கு வெளிச்சம் போய் சேர்வதில்லை.

    மடத்து கோவில் ஸ்டாப் என்று ஒரு பஸ்நிறுத்தம் இருந்தது. தினமும் நான்கு முறை மட்டுமே வந்து செல்லும் ஒரே ஒரு பஸ் மட்டுமே இருக்கும் குக்கிராமமாகவே இருந்தது மேலங்கலம் கிராமம்.

    கோவையிலிருந்து காலையில் புறப்பட்ட தினேஷ் நாகர்கோவில் வந்து அங்கிருந்து மார்த்தாண்டம் வந்து மேலங்கலம் மடத்து கோவில் ஸ்டாப் வந்து சேர்ந்தபோது இரவு மணி ஏழரையாகியிருந்தது.

    இவ்வளவு லேட் ஆகுமென்று தினேஷ் நினைக்கவில்லை. மாலை நான்கு மணிக்கெல்லாம் வந்து விடலாம் என்ற நற்பாசையில் பயணத்தை துவங்கி பின்பு பயணம் காலதாமதமாகி விட்டது.

    தினேஷ்சும் விதுலாவும் கோவையில் ஒன்றாக பி.எட் படிக்கும்போதே மனதை மாற்றிக் கொண்டவர்கள். படிப்பு முடிந்த பிறகு காலம் காதலர்களை பிரித்து வைத்து வேடிக்கை பார்த்தது.

    விதுலாவைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை தினேஷ்க்கு.. அவளை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற வாஞ்சையை அவளிடம் அலைபேசியில் சொன்னான். அவள் ஒத்துக்கொள்ளவில்லை.

    அவளது தந்தை அண்ணாச்சி ஆறுமுகம் பெரிய பணக்காரர் மட்டுமல்ல, கட்டப் பஞ்சாயத்து, அடிதடி, அரசியல் என்று அந்த மேலங்கலம் கிராமத்துக்கே நன்கு பிரபலம்.

    அவரை எப்படியும் சமாளிக்கலாம் அவரது அடியாள் காளியப்பன் அடங்கமாட்டான். இவர்களைப் பற்றி எல்லாம் விதுலா தினேஷ்சிடம் நிறையவே சொல்லியிருக்கிறாள்.

    விதுலாவிடம் சொல்லாமல் கொள்ளாமல் பஸ் ஏறி வந்து அவள் முகவரி தேடி கண்டுபிடித்து அவள் வீட்டின் முன் நின்று கொண்டு அலைபேசியில் அவளை அழைத்து அவளுக்கு சர்ப்பிரைஸ் கொடுக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் வந்து நின்றான் தினேஷ்.

    தன் வீட்டின் முன் வந்து நின்ற தினேஷைப்பார்த்ததும் மிரண்டு அவன் கையைப் பிடித்து இழுத்து யாரும் பார்க்காமல் மடத்துக் கோவில் பஸ் நிறுத்தத்துக்கு வந்தாள் விதுலா.

    விதுலா சொன்னாக்கேளு,… இண்ணைக்கு ஒருநாள் மட்டும் இங்க தங்கீட்டு நாளைக்கு காலையில போயிடுறேன், பிளீஸ் தினேஷ் கெஞ்சினான்.

    காலையில போயிடுவியா? நீ எதுவும் பேசாத, இதுதான் மடத்துக் கோவில் பஸ்ஸ்டாப்பு, எட்டரை மணிக்கு கடைசி பஸ் வரும், அந்த பஸ்ஸப்பிடிச்சி மார்த்தாண்டம் போற, அங்கிருந்து நாகர்கோவில் போய் அரசு பஸ்ஸயோ இல்ல பிரைவெட் பஸ்ஸயோ புடிச்சி கோயம்பத்தூர் போற, மறுபடியும் செல்றேன், எட்டரை மணிக்கு வர்ற பஸ் தான் கடைசி பஸ், அத மிஸ் பண்ணீன… அப்பறம் ராத்திரி பூரா நீ இந்த மடத்துக்கோவில்ல தான் தூங்க வேண்டியதிருக்கும்,

    கோவில்ல தூங்குறதா?... என்மேல கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா? உன்னப் பார்க்காம எவ்வளவு நாள் கஷ்டப்பட்டிருக்கேன் தெரியுமா? பிரிவு தான் அன்ப அடர்த்தியாக்குமுன்னு சொல்வாங்க, உன்ன பிரிஞ்சிருந்த நாள்ல உன்ன பார்க்காம என்னால இருக்க முடியல, அதான் உன் ஊருக்கே புறப்பட்டு வந்திட்டேன், ஆனா நீ என்ன திருப்பி அனுப்புறியே, சலித்தபடியும் சங்கடத்தோடும் சொன்னான் தினேஷ்.

    திருப்பி அனுப்புறதுக்கும் காரணம் இருக்கு, இப்போ சூழ்நிலை ரொம்ப மோசம், என் அப்பா ஆளுங்க யாராவது உன்னப் பாத்தா ஏதாவது ஆபத்து வந்துடுமோன்னு தான் பயப்படுறேன், எனக்கு மட்டும் உன்னப் பார்க்க ஆசை இல்லையின்னு நினைக்கிறியா? நானும் உன்ன நினைக்காத நாளில்ல, என் அப்பா ஆளுங்கள கண்டாலே எனக்கு பயம்.

    உன் அப்பா ஆளுங்களப் பாத்து இண்ணைக்கு பயப்படுற, இன்னும் கொஞ்ச நாள்ல நீயும் நானும் கல்யாணம் பண்ணிகிட்டா அப்புறம் உன் அப்பா ஆளுங்களப் பாத்து பயப்பட முடியுமா?

    பயந்துதான் ஆகணும், நான் புறந்த இந்த மேலங்கலம் கிராமம் ரொம்ப மோசம், இந்த கிராமத்துல ஒருத்தர ஒருத்தர் காதலிக்கிறது ரொம்ப தப்பாம், அப்படி காதலிச்சா அது ஆத்தா துரோகமுன்னு நம்புறாங்க, இன்னும் கொஞ்ச நாள்ல என் அப்பாகிட்ட நம்ம காதலச் சொல்லி சம்மதம் வாங்கியிடுவேன், அதுக்கப்பறம் நாம சந்தோஷமா கோயம்புத்தூர்ல வாழ்ந்திடலாம், இப்போதைக்கு யார் கண்ணிலயும் படாம புறப்படு அவள் கெஞ்சி கேட்டுக்கொண்டிருந்தாள்.

    உள்ளுக்குள் ஒரே பயம். அந்த இரவு நேரத்தில் அப்பா ஆட்கள் யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற பயம் அவளைப் பாடாய் படுத்தியது.

    வீட்டில் வேறு அப்பா இருக்கிறார் வயசுப்பெண் இரவில் வீட்டை விட்டு வெளியேறியதை அறிந்தால் அவ்வளவுதான்.

    வீட்டு முற்றத்தில் கட்டியிருந்த ஊஞ்சலில் ஆடியபடி நாவல் படித்துக் கொண்டிருக்கிறாள் என்று தான் அவள் அப்பா நினைத்துக் கொண்டிருக்கிறார்.

    அந்த இருட்டில் குளிருக்கு பயந்து கறுப்பு சால்வையை உடல் முழுக்கப் போர்த்தி விட்டு சிகரெட் பிடித்தபடி அவர்கள் எதிரில் வந்து நின்றான் காளியப்பன்.

    யாருடா நீ காளியப்பன் கனத்த குரலில் கேட்டான்.

    ஹலோ கொஞ்சம் மரியாதையா பேசுங்க,

    மரியாதையா? உனக்கா? உனக்கு மரியாதை கேக்குதா? எங்கடா வந்த? எங்க அண்ணாச்சி பொண்ணுகிட்ட என்னடா பேச்சுவார்த்த, இந்த காளியப்பன் கண்ணு முன்னாடி மீச வெச்ச எந்த ஆம்புளயும் எங்க ஊரு பொண்ணுகிட்ட பேசினது இல்ல, மீறி பேசினா பேசுறதுக்கு நாக்கு இருக்காது.

    Enjoying the preview?
    Page 1 of 1