Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poovey Unnai Nesithean
Poovey Unnai Nesithean
Poovey Unnai Nesithean
Ebook103 pages40 minutes

Poovey Unnai Nesithean

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உயரங்கள் எப்பொழுதும் அருகாமையிலேயே இருக்கிறது அந்த உயரங்களை அடைவதற்கு படும் பாடு இருக்கிறதே சொல்லி மாளாது.

சாதி மதம் கடந்து வரும் காதலில் மோதல்கள் வெடிக்கின்றன. அந்த மோதல்களில் சிக்கிய காதலர்கள் வென்றார்களா? சமூகத்தின் கண்கள் அவர்களை எவ்வாறு பார்க்கிறது.

போராட்டங்களை வென்று காதலில் வாகை சூடினாலும் வாழ்க்கையில் வாகை சூடினார்களா? அடைக்கப்பட்ட கதவுகள் அடைந்தே கிடந்தனவா? அல்லது அது எப்பொழுதாவது திறந்து கொண்டதா? திறந்து கொள்வதற்கு என்ன தகுதிகள் வளர்த்துக் கொண்டார்கள் என்பவை உள்ளடங்கிய ஒரு சுகந்தமான காதல் கதை தான் பூவே உன்னை நேசித்தேன்.

இந்த நாவலில் பனை மரத்தின் மட்டையிலிருந்து நார் உரித்து நாருப்பெட்டி முடையும் சமூகத்தினரின் வாழ்வியலும் வலியும் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளும் காதலும் அந்த காதலில் ஜெயிக்க முடிந்ததா? வாழ்க்கையில் ஜொலிக்க முடிந்ததா? என்பதுதான் பூவே உன்னை நேசித்தேன் நாவல் வாசியுங்கள். ஒரு அழகிய கிராமத்து காதல் உங்கள் கண்களில் நுழைந்து கொள்ள நாவலை நீங்களும் நேசிப்பீர்கள்.

Languageதமிழ்
Release dateDec 11, 2023
ISBN6580153310225
Poovey Unnai Nesithean

Read more from Irenipuram Paul Rasaiya

Related to Poovey Unnai Nesithean

Related ebooks

Reviews for Poovey Unnai Nesithean

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poovey Unnai Nesithean - Irenipuram Paul Rasaiya

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பூவே உன்னை நேசித்தேன்

    Poovey Unnai Nesithean

    Author:

    ஐரேனிபுரம் பால்ராசய்யா

    Irenipuram Paul Rasaiya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/irenipuram-paul-rasaiya

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் – 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 1

    தக்கலை ஆர்.டி.ஓ அலுவலகம் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. ஆர்.டி.ஓ அஞ்சனா பொலோரோ ஜீப்பில் வந்து இறங்கி நேராக அவள் அலுவலக அறைக்கு நடந்தாள்.

    அலுவலக வராந்தாவில் போட்டிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்த ஆட்கள் எழும்பி நின்று மரியாதை செய்தார்கள்.

    அஞ்சனா புன்னகைத்தபடியே இருக்கைக்கு வந்தாள். அவள் கையெழுத்து இடவேண்டிய டாக்குமெண்ட் ஃபைலை மேசை மீது வைத்தான் பீயுண். ஐந்து நிமிட இடைவெளியில் அனைத்து கடிதங்களிலும் கையெழுத்திட்டு முடித்தாள் அஞ்சனா.

    வெளியில வெயிட் பண்ணுறவங்கள ஒவ்வொருத்தரா உள்ளே அனுப்புங்க

    சரியிங்க என்று சொல்லிக்கொண்டு வெளியே வந்து நின்றிருந்தவர்களில் முதலாவது வந்த ஆளை உள்ளே போகும்படி சொன்னான்.

    மூன்று நிமிடம் உள்ளே அஞ்சனாவிடம் மனு குறித்து பேசிவிட்டு வெளியேறிய போது ஐந்து பேர்கள் ஒன்றாக உள்ளே நுழைந்தார்கள்.

    வணக்கம்மா அனைவரும் கோரசாகச் சொன்னார்கள்.

    வணக்கம், உட்காருங்க... அனைவரும் இருக்கைகளில் அமர்ந்தார்கள்.

    நாங்க கிள்ளியூர் கிருஷ்ணன் கோவில் கமிட்டி மெம்பர்ஸ், கோவில் வளாகத்துல ஒரு கல்யாண மண்டபம் கட்டி இருக்கோம், அடுத்த மாசம் அஞ்சாம் தேதி திறப்பு விழா, மண்டபத்த திறந்து வைக்கிறதுக்கு மாவட்ட ஆட்சியாளர கூப்பிட்டோம், அவருக்கு அண்ணைய்க்கு வேற புரோகிராம் இருக்கிறதனால உங்கள் வந்து பார்க்கச் சொன்னார்., நீங்க அவசியம் திறப்பு விழாவுக்கு வரணும், அதான் உங்கள அழைக்கிறதுக்கு வந்தோம்

    சாரி... என்னால வரமுடியாது

    அப்பிடிச் சொல்லாதீங்க மேடம், நீங்க வந்தா ரொம்ப நல்லா இருக்கும்

    அஞ்சனா அவளது டைரியை எடுத்து அவர்கள் சொன்ன ஐந்தாம் தேதியைப் பார்த்தாள். பெர்சனல் என்று மட்டும் தான் எழுதப்பட்டிருந்தது.

    அண்ணைய்க்கு பெர்சனல்ன்னு தான் எழுதியிருக்கேன், என்னன்னு எனக்கு ஞாபகம் இல்ல, வீட்டில பேசிகிட்டு முடிவ சொல்றேன், உங்க ஃபோன் நம்பர குடுத்திட்டு போங்க

    சரியிங்க... ரொம்ப சந்தோஷம் சொல்லிவிட்டு அலைபேசி எண்ணைச் சொன்னார் பிரசிடெண்ட்.

    அனைவரும் மகிழ்ச்சி தழும்ப அறையை விட்டு வெளியேறினார்கள்.

    அன்று மாலை நாகர்கோவிலில் இருக்கும் தனது வீட்டிற்கு அஞ்சனா வந்து சேர்ந்த போது இரவு மணி எட்டாகியிருந்தது.

    அவளது அம்மா மேகலா புன்னகையோடு அவளை எதிர்கொண்டு காபி போடவா என்று கேட்டாள்.

    வேண்டாம்மா... குளிச்சிட்டு வந்து சாப்பிடுறேன், அடுத்த மாசம் அஞ்சாம் தேதி நம்ம சொந்த விஷயமா எங்கயாவது போறோமா?

    ஆமா... பணக்குடியில இருக்குற நம்ம சொந்தக்காரங்க வீட்டு கல்யாணம், நீயும் வர்றதா சொன்னியே

    ஆ... ஞாபகம் வந்திடிச்சி, இந்த நாள்ல கிள்ளியூர் கிருஷ்ணன் கோவில் திருமண மண்டபம் திறப்புவிழாவுக்கு கூப்பிட்டாங்க, டைரியில பெர்சனல்ன்னு எழுதியிருந்துது அப்போ ஞாபகத்துக்கு வரல, சரி அங்க போக வேணாம், நாம கல்யாணத்துக்குப் போவோம் கேட்ட மேகலாவின் முகம் ஆச்சரியமானது.

    எந்தக் கோவில் திருமண மண்டபம் திறப்புவிழான்னு சொன்ன...?

    கிள்ளியூர் கிருஷ்ணன் கோவில்ம்மா

    சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு நாலாம் தேதி சாயங்காலம் போய்ட்டு வந்துடலாம் அஞ்சாம் தேதி கண்டிப்பா நாம திருமண மண்டப திறப்பு விழாவுக்கு போகணும்

    என்னம்மா சொல்ற

    ஆமாம்மா அந்த கோவில் திருமண மண்டப திறப்பு விழாவுக்கு நாம அவசியம் போகணும் தீர்க்கமாய் சொன்ன தனது தாயை வினோதமாகப் பார்த்தாள் அஞ்சனா.

    சொந்தக்காரங்க திருமணத்த விடவும் திருமண மண்டப திறப்பு விழாவுக்கு அவசியம் போகணும்ன்னு அடம் புடிக்கிறீங்களே, பாட்டியோட ஊர் பக்கத்தில இருக்குங்கிறதினாலயா...? அங்க இப்போ யாருமே இல்ல, சொந்தக்காரங்க கூட யாரும் தொடர்பில இல்ல, பிறகு எதுக்கும்மா அந்த திருமண மண்டப திறப்பு விழாவுக்கு போக ஆசப்படுற...

    அந்தக் மண்டப திறப்பு விழாவுக்கு நாம கண்டிப்பா போறோம், என் பேச்ச தட்டாம சம்மதம் சொல்லிடு

    சரிம்மா... போலாம் சம்மதித்து விட்டு அலைபேசியில் சேமித்திருந்த கமிட்டித் தலைவர் எண்ணுக்கு டயல் செய்து திறப்புவிழாவுக்கு வருகிறேன் என்று தகவல் சொன்னாள் அஞ்சனா.

    ஐந்தாம் தேதி காலை பத்தேகால் மணி.

    கிள்ளியூர் கிருஷ்ணன்கோவில் காவி கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கொடிக் கம்பத்தில் இருந்து புறப்பட்ட கொடி நூல்கள் மைதானத்தை வட்டமிட்டு கட்டப்பட்டிருந்தன.

    சாலையில் முகப்பு அலங்கார வளைவுகள் சிவப்பு நிறம் ஏற்று பிரம்மாண்டமாய் வைக்கப்பட்டிருந்தது. சப் கலெக்டர் அஞ்சனாவும் அவளது அம்மா மேகலாயும் பொலோரோ ஜீப்பில் வந்திறங்கினார்கள்.

    அஞ்சனாவும் அவளது அம்மா மேகலாயும் நடைவாசலுக்கு நடந்தார்கள். மேகலா கண் எடுக்காமல் நடை வாசலைப் பார்த்தபடியே நடந்தாள். அவள் முகத்தில் சட்டென்று ஒரு இனம் புரியாத சோகம் நிழலாடியது.

    நடைக்கதவு திறந்தே இருந்தது. அருகில் சமய வகுப்பு மாணவிகள் பன்னீர் தெளித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்க காத்திருந்தார்கள்.

    அஞ்சனாவின் பின்னால் பெரும் கூட்டம் நடந்தது. வீடியோக்காரர்களும், புகைப்படக்காரர்களும் முழுவீச்சில் பதிவு செய்து கொண்டிருந்தார்கள்.

    இருவரும் நடைக்கதவின் அருகில் வந்ததும் சமய வகுப்பு மாணவியர்கள் பூங்கொத்து கொடுக்க அந்த நிகழ்வை பல கோணங்களில் புகைப்படமெடுத்தார்கள். அனைவர் தலைகளிலும் பன்னீர் மழை தூறல் விழுந்தது.

    கிருஷ்ணன் கோவிலின் இடது பக்கம் பிரம்மாண்டமாய் கட்டப்பட்டிருந்தது கிருஷ்ணா திருமண மண்டபம்.

    அதன் வாசல் கதவை ஒட்டி போட்டிருந்த டேபிளில் கத்திரிக்கோல், சாக்லேட்ஸ் வைத்திருந்தார்கள், சரியாக காலை பத்தரை மணிக்கு ரிப்பன் வெட்டி திறப்பு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    பஞ்சாயத்துத் தலைவர், வார்டு மெம்பர்கள், முக்கிய விஐபிகள், பேச்சாளர்கள் அம்சி

    Enjoying the preview?
    Page 1 of 1