Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaalam Thorum Narasingam
Kaalam Thorum Narasingam
Kaalam Thorum Narasingam
Ebook259 pages1 hour

Kaalam Thorum Narasingam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜடாயு 2005ம் ஆண்டுமுதல் இணையத்தில் இந்துமதம், கலாசாரம், வரலாறு, சமகால சமூக அரசியல் போக்குகள் ஆகியவை குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார். தீவிரமான விவாதங்களிலும் பங்கேற்றுள்ளார். கம்பராமாயணத்தில் புலமையும், நவீன இலக்கிய வாசிப்பில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். தமிழ்ஹிந்து (www.TamilHindu.com) இணையத்தளத்தின் ஆசியர் குழு உறுப்பினர். மின்னணு தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுகிறார். தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார்.

இவரது இயற்பெயர் சங்கரநாராயணன்.

Languageதமிழ்
Release dateMay 18, 2017
ISBN6580118902084
Kaalam Thorum Narasingam

Related to Kaalam Thorum Narasingam

Related ebooks

Reviews for Kaalam Thorum Narasingam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaalam Thorum Narasingam - Jataayu

    http://www.pustaka.co.in

    காலம்தோறும் நரசிங்கம்

    Kaalamthorum Narasingam

    Author:

    ஜடாயு

    Jataayu

    For more books
    http://www.pustaka.co.in/home/author/jataayu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    காலம்தோறும் நரசிங்கம்

    (பண்பாட்டுக் கட்டுரைகள்)

    ஜடாயு

    உடலும் உயிரும் உணர்வும் தந்து

    என் வாழ்வில் ஒளியூட்டி வரும்

    மைத்ரேயி - நாராயணன் எனும்

    அன்புத் தாய்தந்தையருக்கு

    முன்னுரை

    கடந்த எட்டு வருடங்களாகப் பல்வேறு சமயங்களில் நான் எழுதியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. 

    இந்து ஞானத்திலும் இந்திய சிந்தனை மரபிலும் மையம்கொண்டு சமூகம், வரலாறு, கலை, கலாசாரம் எனப் பலதளங்களில் விரியும் கட்டுரைகள் இதில் உள்ளன. ஒரு தொகுப்பாகப் பார்க்கையில், இவை எந்த ஒரு தனிப்பட்ட விஷயத்தையும் சார்ந்தவையாக இல்லை.  ராமாயணத்தின் பரிமாணங்கள்,  ஐயப்ப வழிபாட்டின் வேர்கள், சைவசமயம் குறித்த விவாதம், சிற்பக்கலைத் தேடல்கள், ஹிந்துத்துவம், மதமாற்றம், சாதியம், சூழலியல் குறித்த கண்ணோட்டங்கள் என்று வலைப்பின்னலாக இவற்றின் பேசுபொருள்கள் அமைந்திருப்பதைக் காண்கிறேன். நீண்ட நெடிய வரலாறுகொண்ட நமது பண்பாட்டின் கூறுகளையும், நிகழ்காலத்தின் சமூக, கலாசாரப் போக்குகளையும் இணைத்து சிந்திக்கும் பார்வை இவற்றில் உள்ளது.  வியாசரையும் விவேகானந்தரையும், காரைக்காலம்மையையும் பாரதியையும், ஆர்.எஸ்.எஸ்ஸையும் அம்பேத்கரையும், காந்தியையும் கலாமையும் ஒரு சரடாக இணைக்கும் பண்பாட்டு உயிர்ப்பின் நரம்பைத் தொட்டு இவை அடையாளம் காட்டுகின்றன.  ஒரு வகையில், இந்தக் காலகட்டத்தில் என்னை எழுதத் தூண்டிய சிந்தனை இழைகளின் கலவையான வண்ணங்களை ஒரு தூரிகையாக இத்தொகுப்பு வரைந்து காட்டுகிறது என்பது சரியாக இருக்கும்.  

    இத்தகைய சிந்தனைத் தடத்தில் என்னைச் செலுத்தியதில் உற்ற நண்பரும் வழிகாட்டியுமான அரவிந்தன் நீலகண்டனின் பங்கு முக்கியமானது. எனது முதல் புத்தகம் வெளிவரும் இத்தருணத்தில் அவருக்கு எனது அன்புகூர்ந்த நன்றியறிதலைப் பதிவு செய்கிறேன். தொடர்ந்து எழுதுமாறு எனக்குத் துணிவும் ஊக்கமும் அளித்த இலக்கிய ஆசான் ஜெயமோகன், தமிழ்ஹிந்து இணையத்தளத்தின் சக ஆசிரியர் குழு உறுப்பினர்கள் மற்றும் எனது பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து பாராட்டுக்களையும் எதிர்வினைகளையும் தரும் இணைய வாசகர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். இப்புத்தகத்தை சிறப்பாக வடிவமைத்துக் கொண்டுவரும் இனிய நண்பர் ஹரன்பிரசன்னாவுக்கும் தடம் பதிப்பகத்திற்கும் நன்றி. 

    அன்புடன்,

    ஜடாயு.

    பெங்களூர்,

    நவம்பர் 11, 2015. 

    பொருளடக்கம்

    வாழும் பிள்ளை

    அம்பலவாணரும் அமெரிக்க ஆப்பிள்களும்

    காந்தியின் (கி)ராம தரிசனம்

    திரெளபதியின் கேள்வி

    சாமி சரணம்

    சேவை என்ற பெயரில்...

    பேயம்மை

    ஹிந்து என்னும் சொல்

    ஹிந்து: பன்மையின் பாதுகாப்பு அடையாளம்

    ஹிந்துத்துவம்: ஒரு கண்ணோட்டம்

    காலம்தோறும் நரசிங்கம்

    நமது பண்பாட்டின் ஊற்றுமுகம் ராமாயணம்

    ஆர்.எஸ்.எஸ், மனு, அம்பேத்கர்

    நிலமென்னும் நல்லாள்

    பரிபூரணத்தின் அழகுவெளி: லலிதா சகஸ்ரநாமம்

    வியாசன் எனும் வானுயர் இமயம்

    அப்துல் கலாம் நினைவில்

    படிவங்கள் எப்படியோ?

    ஒரு மணப்பெண்ணும் தேவதைகளும் திராவிட பகுத்தறிவும்

    வேதநெறியும் தமிழ்ச்சைவமும்: ஒரு விவாதம்

    வாழும் பிள்ளை

    அம்மா அப்பாவுக்கு நடுவில் இருவரையும் அரவணைத்து நெருக்கி உட்கார்ந்திருக்கிறான் அந்தப் பிள்ளை. அம்மாவிடம் ஒரு முத்தம் கொடு என்று கேட்கிறான். ஆசையுடன் உதட்டைக் குவித்துக்கொண்டு அம்மா அருகில் வர, உடனே சட்டென்று நகர்ந்து விடுகிறான். பிறகு நடப்பதைப் பார்த்து மெலிதாகச் சிரிக்கிறான்.

    மும்மைப் புவனம் முழுதீன்ற முதல்வியோடும் விடைப்பாகன்

    அம்மை தருக முத்தம் என அழைப்ப, ஆங்கே சிறிதகன்று

    தம்மின் முத்தம் கொளநோக்கிச் சற்றே நகைக்கும் வேழமுகன்

    செம்மை முளரி மலர்த்தாள் எம் சென்னி மிசையிற் புனைவாமே.

    இப்படி எதிர்பாராத நேரத்தில் எல்லாருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் அந்தக் குறும்புக்கார வேழமுகனின் பாதங்களைத் தலைமேல் சூடுகிறேன் என்று பாடுகிறார் புலவர். நந்திக் கலம்பகம் என்ற நூலின் காப்புச் செய்யுளாக வரும் பாடல் இது.

    பிள்ளையார் என்றால் குறும்புக்குப் பஞ்சமா என்ன? அவரது திருவுருவத்தைக் கண்டவுடன் எப்பேர்ப்பட்ட சிடுமூஞ்சிகளுக்கும் முசுடுகளுக்கும்கூட சட்டென்று முகத்தில் ஒரு புன்னகையும் மலர்ச்சியும் வந்து விடுவதைப் பார்க்கிறோம். ப்ரஸன்ன வதனம் என்று சொன்னது பொருத்தமானதுதான்.

    ‘மனது கட்டுக்கடங்காமல் அலைபாய்ந்து குழப்பமாக இருக்கும் நேரங்களில் அப்படியே தெருவில் நடந்துபோய் ஒன்றிரண்டு பிள்ளையார்களைப் பார்த்துவிட்டு வருவேன். மனது தெளிந்து நிர்மலமாகிவிடும்’ என்று சொல்வாராம் ஜெயகாந்தன். ‘நான் நாத்திகன். ஆனால் பிள்ளையாரைப் பிடிக்கும். நான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் முன் பிள்ளையாரை நினைப்பேன்’ என்றும் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். நாத்திகவாதிகள் அடுத்த சில நாட்கள் இதற்காக அவரை வறுத்தெடுத்து வசைபாடித் தள்ளிவிட்டார்கள். ஆனால் பிள்ளையாருக்கு ஒன்றுமில்லை. அறிவித்துக்கொண்ட நாத்திகரையும் பிள்ளையார் நிச்சயம் தன் தும்பிக்கையால் அரவணைப்பார். அதில் சந்தேகத்திற்கே இடமில்லை.

    பிள்ளையார் என்ற பெயரே கள்ளமில்லாத குழந்தைத்தனமான வெள்ளை மனதைத்தான் குறிக்கிறது. அளவில் சிறிதாக இருந்தாலும் பெருமையிலும் ஞானத்திலும் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. எவ்வளவு பெரியவரானாலும் அவரிடம் அந்தக் குழந்தைத்தனம் அப்படியே இருக்கிறது. அதனால்தான் குழந்தைகள் பெரியவர் எல்லாருக்குமே பிள்ளையாரைப் பிடித்திருக்கிறது.

    வழக்கம் போல இந்த வருடமும் பிள்ளையார் விசர்ஜனத்துக்காக அல்சூர் ஏரிக்கரைக்குப் போயிருந்தபோது அதை நேரடியாக உணர்ந்தேன். பல்வேறு தரப்பட்ட மக்கள் இணைந்து வாழும் எங்கள் காஸ்மாபாலிடன் பெங்களூர் நகரம் விநாயக சதுர்த்தியின்போதுதான் உண்மையிலேயே கலாசார ரீதியாக திருவிழாக் கோலம் பூணுகிறது. மற்றவை எல்லாம் உள்ளீடற்ற வணிகமயக் கொண்டாட்டங்களே.

    விதவிதமான மக்கள், அதற்கேற்ப விதவிதமான விநாயகர்கள். திருவள்ளுவரும் அம்பேத்கரும் விவேகானந்தரும் வீரசிவாஜியும் இணைந்திருக்கும் பேனர் முதல் பிரபாகரன் டி-ஷர்ட் போட்டு காவிக்கொடி பிடிக்கும் தமிழீழ ஆதரவு இளைஞர் வரை எல்லாரையும் இணைக்கிறார் பிள்ளையார். எங்கும் ஒரே ஆரவாரம் ஆர்ப்பாட்டம். இருந்தாலும் எல்லார் முகத்திலும் புன்சிரிப்பு, நிறைவு, அமைதி.

    மக்கள் வீடுகளுக்குள் தெய்வ வழிபாடாக செய்துவந்த விநாயக பூஜையை பாலகங்காதர திலகர் சமூக விழாவாக மாற்றியமைத்து மகாராஷ்டிரத்தில் பெரியதொரு தேசிய விழிப்புணர்வை உண்டாக்கினார். பின்னர் அது பாரத தேசமெங்கும் பரவியது.

    கணபதி ராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்

    குணமுயர்ந்திடவே விடுதலை கூடி மகிழ்ந்திடவே

    என்று பாரதியாரும் தனது பாட்டில் விடுதலை வேட்கைக்கு பிள்ளையார் சுழி போடுகிறார்.

    புதுவையில் வாழ்ந்த காலத்தில் தவறாமல் மணக்குள விநாயகர் கோயிலுக்குச் சென்று பிள்ளையாரை வழிபட்டு வந்தார் பாரதியார். விநாயகர் நான்மணி மாலை என்ற அற்புதமான நூலை இந்த விநாயகரை முன்வைத்து இயற்றியுள்ளார். வெண்பா, விருத்தம், கலித்துறை, அகவல் என்ற நால்வகைப் பாக்களையும் கலந்து தொடுக்கப்பட்ட தெய்விக மணம் வீசும் கவிதை மலர்மாலை இது. பாரதியார் மறைந்த பிறகு, 1929ம் ஆண்டு, கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டு பதிப்பிக்கப் பெற்றது.

    கற்பக விநாயகக் கடவுளே, போற்றி!

    சிற்பர மோனத் தேவன் வாழ்க!

    வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!

    ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!

    என்று விநாயகரை வாழ்த்தித் தொடங்குகிறது நூல்.

    ஒரு சம்பிரதாயமான பக்திப் பாடலாக மட்டுமின்றி, தெய்விகம், தேசபக்தி, அன்பு, கருணை, அக எழுச்சி, மனிதநேயம் ஆகிய உன்னத கருத்துகளைப் பேசும் உயர்நூலாக இது விளங்குகிறது. விநாயகரை தியானிக்கும்தோறும் இந்த நற்பண்புகளையும் இலட்சியங்களையும் நாம் தியான மந்திரங்களாகக் கொள்ளும் வண்ணம் பாரதியார் இதைப் பாடியிருக்கிறார்.

    கணபதி தாளைக் கருத்திடை வைத்தால், என்ன கிடைக்கும்?

    உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்;

    அக்கினி தோன்றும்; ஆண்மை வலியுறும்;

    திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்.

    விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்

    துக்கமென்று எண்ணித் துயரிலாது இங்கு

    நிச்சலும் வாழ்ந்து நிலைபெற்றோங்கலாம்...

    எந்தத் தொழிலையும் தொடங்குவதற்கு முன்னால், தடைகள் அகல விநாயகரை வேண்டித் தொழுவது நமது பண்பாடு. இந்தப் பண்பாட்டின்படியே தனது தொழில் அபிவிருத்திக்காக பாரதியாரும் வேண்டுகிறார்.

    நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்,

    இமைப் பொழுதும் சோராதிருத்தல்...

    இதையே தொழிலாகச் செய்து கொண்டிருந்தால், பிறகு வாழ்க்கைப்பாட்டை யார் கவனிப்பார்கள்?

    ... உமைக்கினிய

    மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான்;

    சிந்தையே இம்மூன்றும் செய்.

    தேசத்திற்காக உழைப்பவருக்கு தெய்வம் துணை செய்யும் என்ற நம்பிக்கையில் பாரதிதான் எவ்வளவு உறுதியாக இருந்திருக்கிறார்!

    எத்தனையோ இடர்ப்பாடுகளுக்கும் நிராகரிப்புகளுக்கும் இடையில் வறுமையில் வாழ்ந்தபோதும், வாழ்க்கைத் துன்பங்களுக்கு நடுவிலும் அதன் சாரமான இன்பத்தை உள்ளூர உணர்ந்தவர் பாரதி. அதனால்தான் ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய்’ என்றும் ‘கணபதி இருக்கக் கவலை ஏன்’ என்றும் அவரால் பாட முடிந்தது.

    வானமுண்டு, மாரி யுண்டு;

    ஞாயிறும் காற்றும் நல்ல நீரும்

    தீயும் மண்ணும் திங்களும் மீன்களும்

    உடலும் அறிவும் உயிரும் உளவே;

    தின்னப் பொருளும் சேர்ந்திடப் பெண்டும்,

    கேட்கப் பாட்டும், காண நல்லுலகும்,

    களித்துரை செய்யக் கணபதி பெயரும்

    என்றும் இங்குளவாம்; சலித்திடாய்; ஏழை

    நெஞ்சே வாழி! நேர்மையுடன் வாழி!

    வஞ்சகக் கவலைக்கு இடங்கொடேல் மன்னோ!

    ‘இந்நூல் புதுவை மணக்குளப் பிள்ளையாரை உத்தேசித்துச் --செய்திருப்பினும் ஷண்மதங்களுக்குள் காணாபத்திய (அதாவது பரம்பொருளை கணபதியாகத் தொழும்) முறையைத் தழுவியிருக்கிறது’ என்று பாரதி பிரசுராலயத்தார் வெளியிட்ட முதற்பதிப்பின் முன்னுரை கூறுகிறது. அதன்படியே பல இடங்களில் கணபதியை சகல தேவ சொரூபமாகவும் அனைத்தும் கடந்த பரம்பொருளாகவும் கண்டு சிலிர்க்கிறார் பாரதி.

    விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய்,

    நாரா யணனாய், நதிச்சடை முடியனாய்...

    என்று தொடங்குகிறார்.

    பிறநாட் டிருப்போர் பெயர்பல கூறி,

    அல்லா யெஹோவா எனத்தொழுது அன்புறும்

    தேவரும் தானாய்...

    என்று பிற நாட்டு தெய்வங்களையும், அந்த தெய்வங்களைக் கூறிய மதங்களின் இறையியல் கொள்கைகள் பாரதியின் பரம்பொருள் தத்துவத்துடன் பொருந்தாதபோதும், பரந்த மனத்துடன் அரவணைக்கிறார்.

    ... திருமகள், பாரதி,

    உமை எனும் தேவியர் உகந்த வான்பொருளாய்

    உலகெலாங் காக்கும் ஒருவனைப் போற்றுதல்...

    என்று பாடிச் செல்கிறார்.

    விநாயகப் பெருமானைக் குறித்த தொன்மங்களும் புராணக் கதைகளும் ஆழ்ந்த உட்பொருள் கொண்டவை. பார்வதியின் அன்பு மகனாக உருவெடுத்து சிவகணங்களுடனும் சிவபிரானுடனுமே போர் செய்து ஆனைமுகனாக வடிவுகொள்வது ஒரு தொன்மம். இறைவனும் இறைவியும் களிறும் பிடியுமாகிக் கலந்து ஆனைமுகன் அவதரிப்பது மற்றொரு தொன்மம். மாதங்கர்கள் என்ற பழங்குடிகள் வழிபட்ட புராதன யானைமுகக் கடவுள்தான் விநாயகராக ‘ஆரிய மயமாக்கப்பட்டு’விட்டார் என்பது சில சமூக வரலாற்று ஆய்வாளர்கள் கூறும் நவீன தொன்மம். ரிக்வேத மந்திரங்களில் புகழப்படும் பிரகஸ்பதி, பிரமணஸ்பதி ஆகிய தெய்வங்களின் இயல்பான பரிணாம வளர்ச்சியே கணபதி என்பது வேத ஆராய்ச்சியாளர்கள் கூறும் கருத்து.

    எப்படியானாலும், இந்தத் தொன்மங்களின் தொகுப்பாகவும், இவை அனைத்தையும் உள்ளடக்கி அவற்றையும் கடந்து நிற்கும் பேரொளியாகவும் திகழ்கிறார் கணநாதர். வேதாந்தத்தின் ஒளியால் சுடர்விடும் தத்துவத் தெய்வமாகவும், எளிய மக்களின், பழங்குடி மக்களின், விளிம்புநிலை மாந்தரின் இயற்கைத் தெய்வமாகவும் அவரே அருள்பாலிக்கிறார். இதனை பாரதியும் எடுத்துரைக்கிறார்.

    இறைவி இறைவன் இரண்டும் ஒன்றாகித்

    தாயாய்த் தந்தையாய், சக்தியும் சிவனுமாய்

    உள்ளொளி யாகி உலகெலாம் திகழும்

    பரம்பொருளேயோ பரம்பொருளேயோ!

    ஆதி மூலமே! அனைத்தையும் காக்கும்

    தேவதேவா சிவனே கண்ணா

    வேலா சாத்தா விநாயகா மாடா

    இருளா சூரியா இந்துவே சக்தியே

    வாணீ காளீ மாமகளேயோ!

    ஆணாய்ப் பெண்ணாய் அலியாய், உள்ளது

    யாதுமாய் விளங்கும் இயற்கை தெய்வமே!

    வேதச் சுடரே, மெய்யாங் கடவுளே...

    ஓமெனும் நிலையில் ஒளியாத் திகழ்வான்

    வேத முனிவர் விரிவாய்ப் புகழ்ந்த

    பிருஹஸ் பதியும் பிரமனும் யாவும்

    தானே யாகிய தனிமுதற் கடவுள்,

    ‘யான்’ ‘எனது’ அற்றார் ஞானமே தானாய்

    முக்தி நிலைக்கு மூலவித்தாவான்,

    சத்தெனத் தத்தெனச் சதுர்மறை யாளர்

    நித்தமும் போற்றும் நிர்மலக் கடவுள்...

    இத்தகைய சத்திய வடிவான கடவுளிடம் உலகியல் வெற்றியையும், ஆன்மிக அருள் சக்தியையும் ஒருங்கே வேண்டித் தொழுகிறார் பாரதி.

    அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன்

    நோவு வேண்டேன் நூறாண்டு வேண்டினேன்

    அச்சம் வேண்டேன் அமைதி வேண்டினேன்

    உடைமை வேண்டேன் உன்துணை வேண்டினேன்

    வேண்டா தனைத்தையும் நீக்கி

    வேண்டிய தனைத்தையும் அருள்வதுன் கடனே.

    நல்வாழ்க்கையையும், வெற்றியையும், அன்பையும் அருளையும் தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும், தன் நாட்டுக்காகவும் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும் அனைத்து உயிர்களுக்கும் புல்பூண்டுகளுக்கும் அருளுமாறு விநாயகரை வேண்டுகிறார்.

    பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்;

    கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்;

    மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,

    விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள்

    யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே,

    இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே

    செய்தல் வேண்டும், தேவதேவா!

    ஞானாகாசத்து நடுவே நின்று நான்

    பூமண்ட லத்தில் அன்பும் பொறையும்

    விளங்குக! துன்பமும், மிடிமையும் நோவும்

    சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்

    இன்புற்று வாழ்க’ என்பேன்! இதனை நீ

    திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி,

    ‘அங்ஙனே யாகுக’ என்பாய், ஐயனே!

    பாரதி கண்ட விநாயக தத்துவம் இத்தகு உயர்ந்த விழுமியங்களையும், வாழ்க்கை நெறிகளையும் உள்ளடக்கியது. விநாயக சதுர்த்தியை நாட்டிலும் வீட்டிலும் கொண்டாடும் நன்மக்கள் இதனை உணரவேண்டும்.

    ரசாயன வண்ணங்களால் படாடோபமான கண்ணை உறுத்தும் விநாயக வடிவங்களுக்கு மாற்றாக இயற்கை வண்ணங்களால் கலாபூர்வமாக, அழகுணர்வுடன் விநாயக வடிவங்களைச் செய்து வணங்க வேண்டும். வங்க மக்களின் துர்கா பூஜைத் திருவுருவங்கள் இதற்கு நல்லதோர் முன்னுதாரணமாக இருக்கின்றன. கலாசார சீரழிவுக்கு வழிவகுக்கும் பாடல்களை மக்களைத் தொந்தரவு செய்யும் வகையில் அலற விடாமல், இனிய மெல்லோசையில் அமைந்த தெய்வபக்தி, தேசபக்திப் பாடல்களையே ஒலிக்கச் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு நம் கலாசாரத்தையும் நற்பண்புகளையும் போதிக்கும்வண்ணம் கூட்டு நிகழ்ச்சிகளையும் போட்டிகளையும் நடத்தலாம். விநாயக சதுர்த்தி விழாவை முகாந்திரப்படுத்தி நல்ல கலை, இலக்கியத்தை மக்களிடம் அறிமுகம் செய்யலாம். சமூக விழிப்புணர்வையும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் உருவாக்கலாம். சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் இணைந்து, குறிப்பாக தாழ்த்தப்பட்ட சகோதரர்களையும் அரவணைத்து அன்போடு கொண்டாடும் விழாவே விநாயகனுக்கான உண்மையான வழிபாடு ஆகும். அப்போதுதான் திலகரும், பாரதியும் கண்ட

    Enjoying the preview?
    Page 1 of 1