Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 8
Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 8
Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 8
Ebook153 pages29 minutes

Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 8

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுதந்திரம் வந்துவிட்டது, பாரதி கண்ட கனவு நனவாகிவிட்டது என்று எழுதாத பத்திரிகை இல்லை, பேசாத மக்கள் இல்லை இன்று. எந்தப் பக்கம் திரும்பினாலும் கேட்கிறது “சுதந்திரப் பள்ளு.” பாரதியை, அவர் வாழ்ந்த காலத்தில் அநேக வைதீக விமர்சகர்கள், தற்கால நல உரிமைகளை குறிக்கோளாகக் கொண்டே கவி புனைந்திருக்கிறார் என்று குறை கூறினர்.

இலக்கணம் அறியாத கவிஞன் என்று நன்னூல் பண்டிதர்கள் அகம்பாவ வெறியில் வாய்க்கொழுப்போடு ஆதாரமின்றி அர்த்தமற்றுப் பேசினர், வெறும் தேசியக் கவி என்று பலர் அவமதிப்போடு பார்த்தனர். பெண் விடுதலைப் பித்தன் என்று சிலர் ஆத்திரப்பட்டனர். கஞ்சாப் புலவன் என்று இளக்காரமாக ஏசினவர்களும் உண்டு. அவர் காலஞ்சென்றபின், கொஞ்ச காலத்திற்கு முன்கூட, பாரதி மகாகவியா அல்லவா என்ற விவாதம் அமர்க்களப்பட்டது எழுத்தாளர்களிடையில்.

Languageதமிழ்
Release dateMar 11, 2023
ISBN6580162509563
Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 8

Read more from Thozhar P. Jeevanandham

Related to Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 8

Related ebooks

Reviews for Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 8

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 8 - Thozhar P. Jeevanandham

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    தோழர் ப. ஜீவானந்தம் படைப்புகள் - தொகுதி 8

    Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 8

    Author:

    தோழர் ப. ஜீவானந்தம்

    Thozhar P. Jeevanandham

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thozhar-p-jeevanandham

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    சமதர்ம உலகம்

    காலுக்குச் செருப்பும் இல்லை

    மூலதனம் பொது

    புரட்சி வேண்டும்

    சொல்லும் நா சமதர்மமே

    ஜன சமூகத் தேவை

    கொள்கைப் பிடிப்பு

    சமதர்மக் கொடி

    பொதுவுடைமை அறிக்கை

    சுத்த சமதர்மம்

    கூடி வருவீர்

    புதுவாழ்வினை ருசித்தேன்

    சமதர்மக் கிளிக்கண்ணி

    பணத்திமிர் வீழ்க

    அமுதநெறி

    உத்தமர்க்கே பிழைப்பு உண்டு

    மறக்கிலேன்

    லெனின் வழியிலே

    பேடிகள்

    இந்தியாக் கண்ணிகள்

    புரட்சி வீரர்

    சோவியத் வாழ்வு

    சோவியத் படிப்பினை

    சோவியத் வாழ்வு

    பாடுபடுவோர் தேசம்

    அக்டோபர் புரட்சி

    பாட்டாளித் தோழா

    புது வாழ்வு

    நானோர் தொழிலாளி

    கோடிக்கால் பூதம்

    வர்க்க போதம்

    ஒற்றுமையே வெற்றி

    தொழிலாளி தன்நிலை கூறல்

    விழிப்படைந்த தொழிலாளி

    பாட்டாளியும் - நடைமுறை மதமும்

    என்ன கொடுமை!

    போலித் தலைவர்கள்

    தொழிலாளர் அவலநிலை மாற

    தேச சுதந்திரம்

    புரட்சி செய்வோம்

    கூட்டணி

    பூரண சுயேச்சை

    அடிமை வாழ்வு ஏன் பிறந்தது?

    நிமிர்ந்து சண்டைபோடு!

    வழி மறைத்திருக்குதே

    தேசிய வாழ்வு

    என்றைக்குச் சுதந்திரம்?

    ஒன்றுபட்டால்…

    இது தகுமா

    வாரீர்! தோழரே!

    மத அபின்

    ஏமாற வேண்டாம்

    கொள்ளைச் சிரிப்பு

    ஒரு சேதி

    கடவுள் ஏன் இல்லை?

    இடி விழுந்தது

    பிதற்றாதே

    நம்மைப் பிடித்த சனி

    ‘மிகவும் கெட்டோம்’

    பெண் விடுதலை

    மாதரசி

    அழைப்பு

    ஆறுதல் உண்டா?

    பெண் விடுதலைக் கிளிக்கண்ணி

    மாதர் சுதந்திரம்

    பொன் புவி கண்டேன்

    பாசிசம்

    பாசிசப் பேய்களெல்லாம்

    ஏ மனிதா!

    செங்கொடி

    சிவப்பு ஜண்டா

    புது உலகக் கனவு

    தியாகமே வாழ்வு!

    ஏங்காதெழுந்திரடா!

    மனிதராய் வாழ்வது

    விழிகண் குருடு!

    வாழ்வினிலே எழும் கீதம்

    எப்படி வாழ்ந்தனரோ?

    வந்திடாதோ!

    மாநிலம் சகித்திடுமோ!

    ஆற்றுவாரில்லை

    நித்தம் நரகம்

    வைதீக நீலிக்கண்ணீர்

    எங்கள் கட்சி

    இண்டர்நேஷனல்

    முன்னுரை

    சுதந்திரப் போராட்ட வீரர், இலக்கியப் பேராசான், தோழர் ப. ஜீவானந்தம் கம்பராமாயணத்தின் மானுடநேயக் கருத்துக்களை மக்களிடம் எளிய தமிழில் கொண்டு சென்றவர்.

    எல்லாரும் தேசியக்கவி மட்டுமே என்று குறுக்கிய காலத்தில் பாரதியை உலக மகாகவி என்று அங்கீகரிக்க விவாதங்கள் மூலமாக வென்று அவரைப் போற்றி பெருமை சேர்த்தவர்களில் முதன்மையானவர் ஜீவா. மேலும் பாரதியின் கருத்துக்களை மக்களிடத்தில் பாரதி வழி ஜீவா என்ற நூலின் மூலம் கொண்டு சென்றார்!

    பெண்களின் சமூக விடுதலைக்காகவும் பெண்கள் சமூகத்தில் சம ஊதியம் பெறவும் புதுமைப் பெண் என்ற நூலினை எழுதி மக்களிடத்தில் புரட்சிக்கு வித்திட்டவர்.

    ஜீவாவின் மொழிபெயர்ப்புத் திறமையைப் பறைசாற்றும் பகத்சிங்கின் நான் நாத்திகன் ஏன்? என்ற மொழிபெயர்ப்புப் புத்தகம் இன்றுவரை சிறப்பாகப் போற்றப்படுகிறது.

    இலக்கியத்தில் உள்ள சோசலிசக் கருத்துக்களை மக்களிடத்தில் இலக்கியச் சுவை என்ற நூலின் மூலம் கொண்டு சென்றார். சாதி சமய வேறுபாடுகளைக் களைந்து ஏற்றத்தாழ்வுகளற்ற சமுதாயம் அமைக்க மற்ற பாதையை விட அதாவது (மற்ற மாடல்களை விட) பொதுவுடைமைப் பாதையே சிறந்தது என முழங்கியவர்!

    சுதந்திரத்திற்காக இந்தியாவில் பல தலைவர்கள் போராடினாலும் ஜீவா ஒருவர்தான் வாய்ப்பூட்டுச் சட்டம், நாடு கடத்தல், ஊரை விட்டு வெளியில் நடமாடத்தடை போன்ற வெள்ளை அரசின் அடக்குமுறைக்கு ஆளானவர்.

    அப்பேர்ப்பட்ட மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் இலக்கியப் பேராசான் ப. ஜீவா அவர்கள் எழுதிய நூல்கள் பல பதிப்புகள் வந்திருந்த போதும் அனைத்தும் விற்றுத் தீர்ந்த நிலையில் தற்கால இளைஞர்கள், மேடைப் பேச்சாளர்கள், இலக்கியவாதிகள், பொதுவுடைமைத் தோழர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், பெண்ணுரிமைப் போராளிகள் என அனைவரும் கற்றுணர ஜீவாவின் நூல்களே முதன்மையானவை என்ற வகையில் இனி எந்தக் காலத்திலும் நினைத்தவுடன் நினைத்த இடத்தில் படிக்கும் வண்ணம் மின்னூலாகவும் ஆடியோ புத்தகமாகவும் அச்சுப் பிரதியாகவும் எது தேவையோ அது எளிதாக தங்கு தடையின்றிக் கிடைக்கும் வண்ணம் மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கான ஓர் அரிய முயற்சியின் முன்னோட்டமே இந்தப் பதிப்பு.

    அந்த வகையில் தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் எழுதிய நூல்களை மறுபதிப்புச் செய்து மக்களிடத்தில் கொண்டு செல்வதில் பெருமிதம் கொள்கிறோம். மேலும், ஜீவா அவர்களின் இதுவரை கிடைக்கப் பெறாத நூல்கள் கிடைத்தால் எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.

    Enjoying the preview?
    Page 1 of 1