Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kavithaiye Kanalagi..
Kavithaiye Kanalagi..
Kavithaiye Kanalagi..
Ebook148 pages57 minutes

Kavithaiye Kanalagi..

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாற்றிசைகளிலும் உயிர்கள் பரிமளிக்க நான்முகக் கடவுள் காரணமாக இருப்பதாக புராணங்களில் கூறியுள்ளதைப் போல. எண் திசைகளிலும் விடுதலையுணர்வு என்னும் கனலை கவிதையால் ஊதிப் பெரிதாக்க. தென்திசையில் ஒரு மகாகவி தோன்றினார்.

இப்பூவுலகில் அவர் வாழ்ந்த காலம் சிறிதாக இருந்தாலும் அவர் தன் கவித் திறனால் அடிமைப்பட்டுக் கிடந்த இந்த சமூகத்தைத் தட்டி எழுப்ப அவர் படைத்தகனல் தெறிக்கும் கவிதைகள் பெரியவை.

நாட்டை ஆண்ட கிழக்கிந்திய வெள்ளையர்களின் அச்சுறுத்தல் தொடர்ந்தபோதும் அச்சமின்றி தன் வாழ்நாள் முழுதும் பத்திரிக்கையாளராக கவிஞராக கட்டுரையாளராக கார்டூனிஸ்ட்டாக விடுதலை வீரராக எனத் தன் திறமையை பல பரிமாணங்களில் வெளிப்படுத்த அவரிடமிருந்த மொழிவளமே காரணம். ஏறத்தாழ பதினொரு மொழிகளைக் கற்றது மட்டுமல்ல எல்லா மொழித் தலைவர்களிடமும் அரசியல் வாழ்வில் அச்சமின்றி உரையாடத் துணையாக இருந்தன.

பட்டை தீட்டப்பட்ட வைரத்தை திருப்பும் போது தன் ஒளியை திருப்பும் திசையெல்லாம் வெளிப்படுத்தும். அதைப் போல எண்திசைகளிலும் தன் அக்னிச் சிறகுகளை விரித்துப் பறந்தது இந்த கானக்குயில்!

'பிரமமே யானெனப் பேசுக!' என்று தன் ஞான விதையை மக்கள் மனத்தில் விதைத்து விட்டு, அவ்விதை வளர்ந்து செடியாகி மரமாகி கனி தரும் வேளையில் அதைப் பார்க்க இயலாது மறைந்த ஒரு மகாகவியை அப்போது இருந்த அடிமை சமுதாயம் உணரவில்லை. அந்த மகாகவியின் கனவு நனவாகி நடைமுறையில் வரும் போது மக்கள் விடும் சுதந்திர மூச்சு அந்தக் கவிக்கு நிச்சயம் அஞ்சலியாக அமையும்.

அந்த மகாகவியின் பலபரிமாணங்களை வெளிப்படுத்தும் கட்டுரை தொகுப்பின் தோரண வாயிலில் கட்டியம் கூறும் காவலனாக மட்டுமே நான் உங்கள் முன் நிற்கிறேன்.

அவரது ஆளுமையை வாசியுங்கள் ஆத்மார்த்தமாக உங்கள் அஞ்சலியைச் செலுத்துங்கள்.

- கே. எஸ். ரமணா

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580140406527
Kavithaiye Kanalagi..

Read more from K.S.Ramanaa

Related to Kavithaiye Kanalagi..

Related ebooks

Reviews for Kavithaiye Kanalagi..

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kavithaiye Kanalagi.. - K.S.Ramanaa

    http://www.pustaka.co.in

    கவிதையே கனலாகி...

    Kavithaiye Kanalagi..

    Author:

    கே.எஸ்.ரமணா

    K.S.Ramanaa

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ks-ramanaa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பாரதி - யார்

    2. பாரதியும், பொது வாழ்வும்

    3. பன்முகப் பார்வையில் பாரதி

    4. பத்திரிகையாளராக...

    5. விடுதலைக் கவியாக...

    6. நாட்டுப் பற்றுள்ள தொண்டராக...

    7. பத்திரிகைக் கட்டுரைகளும், விமர்சனங்களும்

    8. கவிக்குயில் பாரதியும் கானம் பாடிய குயில்களும்

    9. மகாகவியின் மனித நேய சிந்தனை

    10. பாரதி என்னும் சுடரொளி

    தோரண வாயில்

    நாற்றிசைகளிலும் உயிர்கள் பரிமளிக்க நான்முகக் கடவுள் காரணமாக இருப்பதாக புராணங்களில் கூறியுள்ளதைப் போல. எண் திசைகளிலும் விடுதலையுணர்வு என்னும் கனலை கவிதையால் ஊதிப் பெரிதாக்க. தென்திசையில் ஒரு மகாகவி தோன்றினார்.

    இப்பூவுலகில் அவர் வாழ்ந்த காலம் சிறிதாக இருந்தாலும் அவர் தன் கவித் திறனால் அடிமைப்பட்டுக் கிடந்த இந்த சமூகத்தைத் தட்டி எழுப்ப அவர் படைத்தகனல் தெறிக்கும் கவிதைகள் பெரியவை.

    நாட்டை ஆண்ட கிழக்கிந்திய வெள்ளையர்களின் அச்சுறுத்தல் தொடர்ந்தபோதும் அச்சமின்றி தன் வாழ்நாள் முழுதும் பத்திரிக்கையாளராக கவிஞராக கட்டுரையாளராக கார்டூனிஸ்ட்டாக விடுதலை வீரராக எனத் தன் திறமையை பல பரிமாணங்களில் வெளிப்படுத்த அவரிடமிருந்த மொழிவளமே காரணம். ஏறத்தாழ பதினொரு மொழிகளைக் கற்றது மட்டுமல்ல எல்லா மொழித் தலைவர்களிடமும் அரசியல் வாழ்வில் அச்சமின்றி உரையாடத் துணையாக இருந்தன.

    பட்டை தீட்டப்பட்ட வைரத்தை திருப்பும் போது தன் ஒளியை திருப்பும் திசையெல்லாம் வெளிப்படுத்தும். அதைப் போல எண்திசைகளிலும் தன் அக்னிச் சிறகுகளை விரித்துப் பறந்தது இந்த கானக்குயில்!

    'பிரமமே யானெனப் பேசுக!' என்று தன் ஞான விதையை மக்கள் மனத்தில் விதைத்து விட்டு, அவ்விதை வளர்ந்து செடியாகி மரமாகி கனி தரும் வேளையில் அதைப் பார்க்க இயலாது மறைந்த ஒரு மகாகவியை அப்போது இருந்த அடிமை சமுதாயம் உணரவில்லை. அந்த மகாகவியின் கனவு நனவாகி நடைமுறையில் வரும் போது மக்கள் விடும் சுதந்திர மூச்சு அந்தக் கவிக்கு நிச்சயம் அஞ்சலியாக அமையும்.

    அந்த மகாகவியின் பலபரிமாணங்களை வெளிப்படுத்தும் கட்டுரை தொகுப்பின் தோரண வாயிலில் கட்டியம் கூறும் காவலனாக மட்டுமே நான் உங்கள் முன் நிற்கிறேன்.

    அவரது ஆளுமையை வாசியுங்கள் ஆத்மார்த்தமாக உங்கள் அஞ்சலியைச் செலுத்துங்கள்.

    அன்புடன்

    கே. எஸ். ரமணா

    *****

    அர்ப்பணிப்பு

    உயிர் மூச்சிலும் உணர்விலும் இரண்டறக் கலந்துள்ள

    என்னை ஈன்ற தாய் தந்தைக்கு...

    *****

    *****

    1. பாரதி - யார்

    பாரதியைப் பாவலனாகப் பார்த்தவர் பலர்; பாரதியை வேதாந்தியாகப் பார்த்தவர் சிலர். பாரதியின் பரிமாணங்களை கவிஞராக, பத்திரிக்கையாளராக, விடுதலைக் கவியாக, சமூக சீர்திருத்த சிற்பியாக, ஆன்மிக தத்துவார்த்த எழுச்சியாளராக எதிர்காலத்தை உணர்த்திய சித்தராக, சுதந்திரத்தின் விடிவெள்ளியாக எனப் பார்த்த நாம் அவர் தமிழகத்திலே தோன்றி, வாழ்ந்து அமரரான காலம் மிகச் சிறியது - என்பதை உணர வேண்டும்.

    1882ம் ஆண்டு பிறந்து 1921ம் ஆண்டு ஏறக்குயை 39 ஆண்டுகள் இத்தமிழகத்தில் வாழ்ந்த மகாகவி அவர். அவர் வாழ்ந்த காலத்தில் சமூக அவலங்கள், பெண்ணடிமை, ஆள்வோருக்கு அடிமையென இருந்த மக்களைப் பார்த்து பாரதி நெஞ்சம் நெகிழ்ந்தார். தான் படித்த வேதங்களின் சாரத்தையெல்லாம் பிழிந்து, எளிய பாடல்கள், வசனம் மூலம் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மைகளை எளிய தனது நடையில் பாமரர் வரை போய்ச் சேர ஒரு ஞான ரத சாரதியாக இருந்தார் என்பதை இச்சிறு நூல் மூலம் வாசிப்போர் உணர்ந்திருப்பார்கள். பாரதி அமரராகி ஏறக்குறைய இருபத்தியாறு ஆண்டுகளுக்குப் பின் இந்தியா சுதந்திரம் அடைந்தது. ஆனால் அப்போதே பாரதி ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாடியவர் அவர். அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த அடிமை மக்கள் பாரதியின் பெருமை தெரியாது அவரைப் புகழ்ந்தவர் பலர்; நிந்தித்தவர் சிலர்; துவேஷித்தவர் சிலர்; மதித்தவர் சிலர் என அவரது உயரிய நோக்கம் புரியாத மந்தைச் சமூகத்தினர் அவரைப் புரிந்து கொண்ட போது அவர் நம்மிடமில்லை. அவரது அழியாப் படைப்புகள் தான் நம்மிடம் உள்ளது. இவ்வளவு பெரிய மகாகவி அமரத்துவம் அடைந்து அவரது இறுதி ஊர்வலத்தில் முப்பது பேருக்கும் குறைவாகவே கலந்து கொண்டனர் என்ற செய்தியே, பாரதியின் மேன்மையைப் பற்றி அறிய தூண்டுகோலாகி இந்நூல் தோன்றக் காரணமாயிருந்தது.

    பாரதி காலத்தில் வாழ்ந்த, பார்த்த, பழகிய அவர் தம் படைப்புகளைப் படித்த அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்த்தால் பாரதி - யார்? என்று உங்களின் மனதிற்கே புரியும்.

    பாரதி வாழ்ந்த காலத்தில் அவர் கூட வாழ்ந்தவர் கவியோகி சுத்தானந்த பாரதியார். பாரதி பற்றியும், பாரதி கவிதை பற்றியும் வெயிட்ட கருத்து:

    "பாரதியார் கவிதை மின்சாரம். சொல்லின் அருவி பாரதி வாக்கு பராசக்தி வாக்கு. அதன் ஆற்றலுக்கு எல்லையில்லை. காலம் உள்ளளவும் பாடிக் கொண்டிருந்தாலும் பாரதி பாடல் தெவிட்டாது. விறுவிறுப்பு ஆத்ம கனலும் உண்டாகும். பாரதியாரின் உடல் பஞ்ச பூதங்களுடன் கலந்து விட்டது. எனினும் அவருடைய ஜீவன் சொல்லுருவாக நம்மிடமே இருக்கிறது. இன்றுள்ள தமிழ்நாடு என்ற பெயர் பாரதி பாடலில் சொல்லிய 'செந்தமிழ் நாடெனும் போதினிலே' என்ற பாட்டிலிருந்து பிறந்தது தான்! அவர் சொல் ஈகைக் கருட நிலை ஏற்றியது. சிறுமையைச் சீர்மையாக்கியது. அடிமைத்தளையை முறிக்க ஆண்மையைத் தந்தது. அச்சப் பேயை அடித்து விரட்டி நம்மைத் தலை நிமிர்ந்து நடக்கச் செய்தது. தேசாவேசமும், தெய்வக்கனலும், முன்னேற்ற எழுச்சியும் அளித்தது.

    பாரதியார் கவி கட்டியதும் இனிய குரலில் பாடினார். அவர் பாட்டை அவரே பாடிக் கேட்க வேண்டும் 'ஜய பேரிகை கொட்டடா' என்று அவர் பாடினால் நம் செவியில் ஜெய பேரிகை முழங்கும். எங்கள் முத்து மாரியம்மாவைப் பாடினால் தேச முத்துமாரியம்மா நேரே நின்று நடம்புரிவாள். ‘சுற்றி நில்லாது போ பகையே துள்ளி வருகுது வேல்' என்று ஒரு தாவு தாவினால், வேலே வருவது போலிருக்கும், ‘முருகா முருகா' என்று பாடினால் மயில் மேல் முருகன் வந்து எதிரே நடமாடுவது போலிருக்கும் ‘பாரத சமுதாயம்' பாடினாலோ, பொதுவுடைமைக் கனல் பறக்கும். அவர் கவிஞர் மட்டுமல்ல; இனிய குரலுடன் ஆழ்ந்த உணர்ச்சியுடன் பாடும் குயில்."

    1907ம் ஆண்டு பாரதி இந்தியா பத்திரிகையில் பணிபுரிந்த போது சென்னை காங்கிரஸ் மிதவாதிகளின் தலைவர் வி. கிருஷ்ணசாமி அய்யர் பாரதியாரின் கடுமையான விமர்சனங்களுக்கு ஆட்பட்டவர். இருப்பினும் அவர் பாரதி மேல் உள்ள அன்பால் பாடக் கேட்டு இன்புற்றவர். அவர் கூறுகிறார்:

    இவரைப் போன்ற தமிழ்க் கவியை நான் கண்டதில்லை. இக்காலத்துக்குத் தக்கவர் இவர் தான். இவர் பாடல்களை அச்சிட வேண்டும். பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு மாணவனும் நன்குணர்ந்து பாடும்படி செய்து தேசபக்தி உண்டாக்க வேண்டும்

    இந்தியா பத்திரிகையின் ஆசிரியரும் பாரதி புதுச்சேரியில் இருந்த போது அவருக்குப் பல உதவிகள் செய்தவருமான மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியின் புதல்வி யதுகிரி பாரதி நினைவுகளை நினைவு கூர்கிறார்:

    "பாரதியார் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து விடுவார். எந்தக் கவிதையானாலும் பாட்டானாலும், தான் கவனம் செய்தவுடன் பாடிக்காட்டி ஆனந்தப்படுவார். பாரதியார் எந்தப் பாடலையும் மிகவும் கம்பீரமாகவும் உணர்ச்சி ததும்பும்படியும் பாடுவார். கேட்பவர்களுக்கு மெய் சிலிர்க்கும். சில பாடல்களில் அவர்தம் வாழ்க்கையையே சித்தரித்திருக்கிறார். எவ்வளவோ பெரிய பாடகர்கள் பாரதி பாடல்களை பல ராகங்களில் பலவர்ண மெட்டுக்களில் அருமையாகப் பாடுகிறார்கள் என்னும் பாரதி நேரில் பாடிக் கேட்டவர்களுக்கு திருப்தி ஏற்படாது. அவரது

    Enjoying the preview?
    Page 1 of 1