Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bharathi Pathupaattum Bharathidasan Pathirtrupathum
Bharathi Pathupaattum Bharathidasan Pathirtrupathum
Bharathi Pathupaattum Bharathidasan Pathirtrupathum
Ebook134 pages34 minutes

Bharathi Pathupaattum Bharathidasan Pathirtrupathum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாரதியார் கவிதைகளை - அவரது எழுத்துக்களை ஆய்ந்து, அனுபவித்து தமிழ்த்தாய் பார்வையில், பாரதமாதா பார்வையில், பராசக்தி பார்வையில், பாஞ்சாலி பார்வையில், கண்ணன் பார்வையில், புதுமைப்பெண் பார்வையில், பாப்பா பார்வையில், குயில் பார்வையில், சித்தர் பார்வையில், பாரதி பார்வையில், என பத்து பார்வைகளில் பாரதியாரை முத்து முத்தான கவிதை வரிகளால் படம் பிடித்திருக்கிறார் கவிஞர். பாரதியை அங்கங்கே அனுபவித்தவர்கள் முழுமையாய், நீள் கவிதையாய் அனுபவிக்க ஒரு வாய்ப்பு இந்த நூல்.

பாவேந்தரின் நூல்களை பத்து தலைப்புகளில் எடுத்துக் கொண்ட கவிஞர் பத்து பத்து பாடல்களாக எழுதி இருக்கிறார். பா வகைகள் பற்றி அவசியம் குறிப்பிட வேண்டும். பாவேந்தர் எண்சீர் விருத்தத்தில் பாண்டியன் பரிசைப் பாடினார் என்றால் அதைப்பற்றி இவரும் எண்சீர் விருத்தத்தில் பாடுகிறார். அழகின் சிரிப்பு அறுசீர்விருத்தம் என்றால், இவர் பாடுவதும் அறுசீர்விருத்தம். மணிமேகலை வெண்பா எனில், தாமும் வெண்பா பாடுகிறார். எதிர்பாராத முத்தம் சிந்துநடை என்றால் இவரும் அதையே தொடர்கிறார்.

Languageதமிழ்
Release dateSep 10, 2022
ISBN6580157708956
Bharathi Pathupaattum Bharathidasan Pathirtrupathum

Related to Bharathi Pathupaattum Bharathidasan Pathirtrupathum

Related ebooks

Reviews for Bharathi Pathupaattum Bharathidasan Pathirtrupathum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bharathi Pathupaattum Bharathidasan Pathirtrupathum - K.P. Arivanantham

    http://www.pustaka.co.in

    பாரதி பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப்பத்தும்

    Bharathi Pathupaattum Bharathidasan Pathirtrupathum

    Author:

    கே.பி. அறிவானந்தம்

    K.P. Arivanantham

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kp-arivanantham

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பாரதி பத்துப்பாட்டு

    அணிந்துரை

    முகவுரை

    1. தமிழ்த்தாய் பார்வையில் பாரதி

    2. பாரதமாதா பார்வையில் பாரதி

    3. பராசக்தி பார்வையில் பாரதி

    4. பாஞ்சாலி பார்வையில் பாரதி

    5. கண்ணன் பார்வையில் பாரதி

    6. குயில் பார்வையில் பாரதி

    7. புதுமைப்பெண் பார்வையில் பாரதி

    8. பாப்பா பார்வையில் பாரதி

    9. சித்தர் பார்வையில் பாரதி

    10. பாரதி பார்வையில் பாரதி

    பாரதிதாசன் பதிற்றுப்பத்து

    அணிந்துரை

    1. பாரதிதாசன் கவிதைகள்

    2. பாண்டியன் பரிசு

    3. எதிர்பாராத முத்தம்

    4. தமிழச்சியின் கத்தி

    5. குடும்ப விளக்கு

    6. இருண்ட வீடு

    7. அழகின் சிரிப்பு

    8. மணிமேகலை வெண்பா

    9. குறிஞ்சித் திட்டு

    10. பாரதிதாசன் இசைப்பாடல்கள்

    பாரதி பத்துப்பாட்டு
    நன்றி!

    நூலை வெளியிட்டு சிறப்பித்த நயவுரை நம்பி, வைணவச்செம்மல் முன்னாள் மத்திய அமைச்சர் திருமிகு. டாக்டர். ஜெகத்ரட்சகன் அவர்களுக்கும்,

    நூலைப் பெற்றுக்கொண்டு சிறப்பித்த திருமிகு. டாக்டர் வெ. முத்துமாணிக்கம், அவர்களுக்கும் நன்றி!

    அணிந்துரை

    பாரதி சுராஜ்

    தலைவர், பாரதி கலைக்கழகம்

    திரு. கலைமாமணி கே.பி. அறிவானந்தம் அவர்களை, நாடகக் காவலர் திரு. மனோகருக்காக ‘இந்திரஜித்’ போன்ற நாடகங்களை எழுதித்தரும் நாடகாசிரியராக, ஆன்மிக, இலக்கிய, பட்டிமன்றப் பேச்சாளராக, சின்னத்திரை தொடர்களின் வசனகர்த்தாவாக நான் அறிவேன். அவர் நல்ல கவிஞர் என்பதையும், என் மனம் கவர்ந்த மகாகவி பாரதியாரிடம் மிகுந்த ஈடுபாடு உள்ளவர் என்பதையும் அறியும் வாய்ப்பு எனக்குச் சமீபத்தில் ஏற்பட்டது.

    பாரதி பத்துப்பாட்டு என்ற தலைப்பில், எழுதிய குறுங்காவியத்தை என்னிடம் தந்து, அதற்கு ஒரு முன்னுரையும் எழுதும் வாய்ப்பையும் எனக்கு அளித்தார், கவிஞர் அறிவானந்தம்.

    ‘பத்துப்பாட்டு’ தமிழ் இலக்கியமறிந்த அனைவரும் அறிந்ததொரு தொடர். பத்து வெவ்வேறான நூல்களின் தொகுப்புக்கு வழங்கும் பெயர் அது.

    பாரதியார் கவிதைகளை - அவரது எழுத்துகளை ஆய்ந்து அனுபவித்து, தமிழ்த் தாய் பார்வையில், பாரதமாதா பார்வையில், பராசக்தி பார்வையில், பாஞ்சாலி பார்வையில், கண்ணன் பார்வையில், புதுமைப்பெண் பார்வையில், பாப்பா பார்வையில், குயில் பார்வையில், பாரதி பார்வையில் எனப் பத்து பார்வைகளில் பாரதியாரை முத்து முத்தான கவிதை வரிகளால் படம் பிடித்திருக்கிறார் கவிஞர்.

    ‘தமிழ்த்தாய் பார்வையில்’ பகுதியில் தமிழ்மொழியின் வரலாற்றையே சுருக்கமாகத் தருகிறார் கவிஞர்.

    பாரதி பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப்பத்தும்

    ‘வள்ளுவனின் குறள் உலகினுக்கே எனும்

    வாக்கு இந்நாளினில் பலித்ததுவே

    தெள்ளிய மொழிகள் அத்தனையும் – அதைத்

    தேர்ந்தெடுத்தே தமதாக்கினவே’

    வள்ளுவன் குறள் பற்றித் தமிழன்னை பெருமிதம் கொள்கிறாள்.

    தேசமும் தெய்வமும் பாரதியின் இரு விழிகள்.

    ‘பாரத மாதா பார்வையில்’ கவிஞரின் தேசபக்தியைக் காட்டுகிறது.

    "நிரந்தரச் சமாதானம் என்பதேற்று

    நிம்மதியாய் ஒரு போதும் வாழ்ந்ததில்லை"

    பாரத அன்னையின் பழம் வரலாறு நமக்குக் காட்டுவது இதைத்தானே?

    கவிஞரின் கவிவீச்சுக்கு இது ஒன்றே உதாரணம்.

    "காலம் தனது தேவைக்கேற்பக்

    கவிஞன் தன்னை உருவாக்கும்

    காலக் கவிஞன் ஆனதனாலே

    காலம் கடந்து வாழ்ந்திட்டாய்"

    பாரத அன்னை பாரதியாரிடம் கூறுகிற வார்த்தைகள் நெஞ்சை நெகிழ்விக்கின்றன.

    "முடிவே இல்லாத மதஇன சாதியாம்

    விலங்குகள் இந்நாளில் பூட்டி விட்டார்

    கடின முயற்சிகள் அதனிலும் தேவையாய்க்

    கழற்ற முடியாமல் திணறுகிறேன்."

    பாரதி தன்னைச் ‘சக்திதாசன்’ என்றே அழைத்துக் கொண்டவன்.

    ‘பராசக்தி பார்வையில்’ பகுதியில்

    "சக்தி என்புகழ் பாடிய நூல்கள்

    சாற்றும்படி இல்லை

    இக்கணம் வரையில் எனக்கோர் காவியம்

    ஏனோ எழவில்லை"

    என்ற வரிகள் சிந்தனைக்குரியவை. தோத்திர நூல்கள் தனிப்பாடல்கள் உண்டு. ஆனால் தனியே ‘சக்தி காவியம்’ வேண்டும் என்ற அன்னையின் குரல் கட்டாயம் ஒரு பெருங்காவியம் வரச் செய்யும். நமது கவிஞர்கள் பார்வையில் இவ்வரிகள் விழும்!

    "காணி நிலந்தனையே – தனக்குக்

    கருத்துடன் கேட்டாலும்

    பேணி இவ்வையகத்தைப் – பாட்டால்

    பாலிக்க நினைத்தாயடா"

    அழகான வரிகள்.

    ‘பாஞ்சாலி பார்வையில்’ கவிஞரின் வேகத்தை - பெண் விடுதலைக் குரலை இப்பகுதி தாங்கி நிற்கிறது. பாஞ்சாலி அக்னியில் - வேள்வியில் தோன்றியவள்.

    "தீயவை யாவையும் தீய்த்திட வந்ததால்

    தீயினில் தோன்றி வந்தேன்"

    என்கிறாள் பாஞ்சாலி.

    பாஞ்சாலி சபதத்தின் உட்கருத்தை அருமையாக வெளியிடுகிறார் கவிஞர்.

    "பாரதத்தை என்னுருவில் பார்த்திட்டாயோ

    பாஞ்சாலி பாரத மாதா என்றே

    சாரமுடன் உன்மனதில் தேர்ந்திட்டாயோ"

    பாஞ்சாலி சபதத்தைப் பாரதியார் பாடும்போது துச்சாதனன் கை சோர்ந்து விழுகையில்,

    "தேவர்கள் பூச்சொரிந்தார் – ஓம்

    ஜயஜய பாரதசக்தி யென்றே"

    என்று பாரதியார் எழுதுகிறார். கவிஞரின் ஆழ்ந்த பார்வையை வெளியிடும் வரிகள் மேற்சொன்னவை.

    கண்ணன் பாரதியாருக்கு மட்டுமல்ல, எனக்கும் பிடித்தவன். ‘வாசமிகு துழாய்த்தாரன் கண்ணனடி மறவாத மனத்தான்’ என்று தம்மை அழைத்துக்கொண்டார் பாரதி. கண்ணன் பார்வையில் வரும் கவிதை வரிகள் இவை.

    "எந்த இடத்திருப்பேன் – நான்

    எங்கெதைச் செய்வேன் - எவர் அறிவார்"

    "சேவகன் எனநீயும் என்னைச்

    செப்பிட முயல்கையில் நான் வியந்தேன்"

    குயில் பார்வையில்,

    பாரதியின் குயில்தான்

    Enjoying the preview?
    Page 1 of 1