Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maha Kavi Bharathiyar Patri Ariya Uthavum Noolgalum, Katturaigalum Part - 2
Maha Kavi Bharathiyar Patri Ariya Uthavum Noolgalum, Katturaigalum Part - 2
Maha Kavi Bharathiyar Patri Ariya Uthavum Noolgalum, Katturaigalum Part - 2
Ebook204 pages1 hour

Maha Kavi Bharathiyar Patri Ariya Uthavum Noolgalum, Katturaigalum Part - 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாரதியார் காலத்தை வென்ற மஹாகவி. அவரது சரித்திரம் ஆதாரபூர்வமாக, முழுமையாக இன்னும் வெளி வரவில்லை. ஆனால் அவரது மனைவி, மகள், அவருடன் பழகியவர்கள், அவரை நேசித்தவர்கள், அவரை அறிந்தவர்கள், அவரது நூல்களைப் படித்தவர்கள் அவ்வப்பொழுது பல செய்திகளைக் கட்டுரைகள் வாயிலாகவும் நூல்கள் வாயிலாகவும் தெரியப்படுத்தி வந்துள்ளனர். இந்த பாரதி இலக்கியம் பற்றிய கட்டுரைகளையும் நூல்களையும் படித்தால் அது பாரதியாரை அறிவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

Languageதமிழ்
Release dateApr 9, 2022
ISBN6580151008340
Maha Kavi Bharathiyar Patri Ariya Uthavum Noolgalum, Katturaigalum Part - 2

Read more from S. Nagarajan

Related to Maha Kavi Bharathiyar Patri Ariya Uthavum Noolgalum, Katturaigalum Part - 2

Related ebooks

Reviews for Maha Kavi Bharathiyar Patri Ariya Uthavum Noolgalum, Katturaigalum Part - 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maha Kavi Bharathiyar Patri Ariya Uthavum Noolgalum, Katturaigalum Part - 2 - S. Nagarajan

    http://www.pustaka.co.in

    மஹாகவி பாரதியார் பற்றி அறிய உதவும் நூல்களும், கட்டுரைகளும் பாகம் – 2

    Maha Kavi Bharathiyar Patri Ariya Uthavum Noolgalum Katturaigalum Part - 2

    Author :

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயங்கள்

    31. ஸ்ரீ அரவிந்த தரிசனம் – அமுதன் நினைவு அஞ்சலி!

    32. ஸ்ரீ கபாலி சாஸ்திரி ஸ்ரீ அரவிந்தரை தரிசனம் செய்ய உதவிய மஹாகவி பாரதியார்!

    33. புதுவை வாழ்க்கை – 1

    34. பாரதியாரின் தம்பி - பரலி சு. நெல்லையப்பரின் வாழ்க்கைச் சித்திரம்

    35. மஹாத்மாவும் மகா கவியும்! - கல்கியின் கட்டுரைகள்!

    36. பாரதிதாசன் கவிதைகள்!

    37. நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை கவிதைகள்!

    38. பாரதி பற்றிய கட்டுரைகள் - ரா.பி.சேதுப்பிள்ளை

    39. காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - சீனி.விசுவநாதன்

    40. மகாகவி பாரதி - சில புதிய உண்மைகள் - சீனி.விசுவநாதன்

    41. சுப்பிரமணிய பாரதி - பிரேமா நந்தகுமார்

    42. ஆஷ் கொலை வழக்கு - ரகமி

    43. மகாகவி பாரதியார் (கட்டுரை) - விஜயா பாரதி

    44. வரகவி பாரதியார் - பண்டித வித்துவான் தி.இராமானுசன்

    45. மகாகவி பாரதியார் - எஸ்.திருச்செல்வம்

    46. பாரதியார் - வரலாறும் கவிதையும் - ப.மீ.சுந்தரம்

    47. பாரதியும் உலகமும் - ம.ப.பெரியசாமித் தூரன்

    48. பாரதி யுகம் - ப.கோதண்டராமன்

    49. இரு மகா கவிகள் - க.கைலாசபதி

    50. பாரதி ஆய்வுகள் - க.கைலாசபதி

    51. பாரதி சபதம் - மது.ச.விமலானந்தம்

    52. பாட்டும் சபதமும் - மது.ச.விமலானந்தம்

    53. புதுமைப்புலவன் பாரதி - சுகி சுப்பிரமணியன்

    54. பாரதி வழி - ப.ஜீவானந்தம்

    55. பாரதி பாடம் - ஜெயகாந்தன்

    56. பாரதி கண்ட சித்தர்கள் - சி.எஸ்.முருகேசன்

    57. பாஞ்சாலி சபதம் - ஒரு திறனாய்வு - சா.தாசன்

    58 பாரதியார் கவிதைகளில் அணிநலம் (1) – (2) சிவ. மாதவன்

    59. வீர வாஞ்சி - ரகமி

    60 வழி வழி பாரதி - சேக்கிழார் அடிப்பொடி டி.என்.இராமச்சந்திரன்

    என்னுரை

    பாரதியார் காலத்தை வென்ற மஹாகவி. அவரது சரித்திரம் ஆதாரபூர்வமாக, முழுமையாக இன்னும் வெளிவரவில்லை. ஆனால் அவரது மனைவி, மகள், அவருடன் பழகியவர்கள், அவரை நேசித்தவர்கள், அவரை அறிந்தவர்கள், அவரது நூல்களைப் படித்தவர்கள் அவ்வப்பொழுது பல செய்திகளைக் கட்டுரைகள் வாயிலாகவும் நூல்கள் வாயிலாகவும் தெரியப்படுத்தி வந்துள்ளனர்.

    இந்த பாரதி இலக்கியம் பற்றிய கட்டுரைகளையும் நூல்களையும் படித்தால் அது பாரதியாரை அறிவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

    சுமார் அறுபது ஆண்டுகளாகப் பாரதியைப் பயில்பவன் நான். அவருடைய கதைகள், கட்டுரைகள், கவிதைகளைச் சேர்த்து வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவரைப் பற்றி வந்த கட்டுரைகளையும், கவிதைகளையும், நூல்களையும் சேர்த்து வருகிறேன்.

    அவரைப் பற்றி போற்றிப் பாடிய கவிதைகள் ஆயிரத்தைத் தொகுத்து பாரதி போற்றி ஆயிரம் என்று ஒரு தொடரில் அவற்றை வெளியிட்டேன்.

    பாரதியார் பற்றிய நூல்கள் என்ற தலைப்பில் www.tamilandvedas.com இல் ஒரு தொடரில் அவரை அறிமுகப்படுத்தும் முக்கிய கட்டுரைகள் மற்றும் நூல்களையும் எழுதி வந்தேன். அவற்றில் முதல் முப்பது அத்தியாயங்களின் தொகுப்பு முதல் பாகமாக வெளியிடப்பட்டது. அடுத்த 30 அத்தியாயங்கள் இரண்டாம் பாகமாக மலர்கிறது.

    முதல் பாகம் போலவே இந்த இரண்டாம் பாகமும் பாரதி அன்பர்கள் விரும்பும் நூலாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

    இதை வெளியிட்ட லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.

    இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக!

    இந்தத் தொடர் வெளி வந்த போது ஏராளமான பாரதி அன்பர்களும் தமிழ் இலக்கியத்தில் பற்றுக் கொண்டோரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் பாராட்டுகளை நல்கினர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி.

    பாரதியைப் பயில உதவும் இலக்கியத்தில் அவரை உரிய விதத்தில் அறிமுகப்படுத்த இருக்கும் மேலும் பல நூல்களை இந்த இரண்டாம் பாகத்தில் காண வாருங்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். நன்றி.

    பங்களூர் ச.நாகராஜன்

    21-3-2022

    31. ஸ்ரீ அரவிந்த தரிசனம் – அமுதன் நினைவு அஞ்சலி!

    மஹாகவி பாரதியாரைப் பற்றி நன்கு அறிய விரும்பும் அன்பர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய ஒரு நூல் அரவிந்த ஆசிரமத்தைச் சேர்ந்த அமுதன் எனப்படும் ஸ்ரீ அமிர்தா எழுதிய நூலான ஸ்ரீ அரவிந்த தரிசனம் – அமுதன் நினைவு அஞ்சலி.

    இந்த நூல் கிடைக்குமிடம்

    ஸ்ரீ அரவிந்த ஆசிரமம், புதுச்சேரி – 605002

    இதன் முதல் பதிப்பு 1985ஆம் ஆண்டிலும் இரண்டாம் பதிப்பு 1998ஆம் ஆண்டிலும் வெளியிடப்பட்டது. நூலின் விலை பற்றியும், அது இப்போது கிடைக்கப் பெறுமா என்பதையும் அன்பர்கள் முதலில் விசாரித்து விட்டுப் பின்னர் ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்திலிருந்து இந்த நூலைப் பெறுதல் நலம்.

    நூலின் பக்கங்கள் 122.

    ***

    மஹாகவி பாரதியாருடன் மிகவும் நெருங்கிப் பழகியவர் அமுதன்.

    பாரதியாரின் புதுச்சேரி வாழ்க்கையைப் பற்றியும் சென்னையில் அவர் மஹாத்மா காந்திஜியைச் சந்தித்தது உள்ளிட்ட முக்கியமான நிகழ்வுகளையும் தன் நினைவிலிருந்து அவர் தொகுத்துத் தந்திருக்கிறார். இந்த நூலை திருத்தம் செய்ய அவருக்கு நேரம் கிடைக்கவில்லை போலும். அவரது குறிப்புகள் அப்படியே பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

    அற்புதமான இந்த புத்தகத்தைப் படிக்கும் போது ஸ்ரீ அரவிந்தருடன் பாரதியாரின் நட்பு எத்தகைய உயர்ந்த அளவில் தெய்வீக நட்பாகவும் ஆத்மார்த்த நட்பாகவும் அமைந்திருந்தது என்பதை நன்கு அறிய முடிகிறது.

    இந்த நூலில் 23 அத்தியாயங்கள் உள்ளன. 1) ஸ்ரீ அரவிந்தர் வருகை 2) ஸ்ரீ அரவிந்தர் வீடு 3) ஸ்ரீ அரவிந்தரும் பாரதியாரும் 4) பாரதியாரும் நானும் 5) கொடியாலம் இரங்கசாமி ஐயங்கார் 6) வ்.ரா.வும் நானும் 7) ஆகஸ்ட் 15, 1913-19 8) புது வீடு 9) வ.ரா. போகிறார் 10) விஜயகாந்தன் உதவி 11) நான் கண்ட காட்சி 12) சாமீப்யம் 13) மெட்ரிகுலேஷன் பரிட்சை 14) ஸ்ரீ அன்னை 15) ஆர்யா 16) சென்னை வாசம் 17) சென்னை நண்பர்கள் 18) பாரதியார், இராஜாஜி, மஹாத்மா காந்தி 19) வ.ரா. வின் மாற்றம் 20) மகாத்மா காந்தி 21) குடுமி பறி போன கதை 22) ரொட்டிக்கார பையன் கதை 23) பாரதியார் பிறந்த நாள்

    அத்தியாய தலைப்புகளிலிருந்தே எத்தைகைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சம்பவங்களை இந்த நூல் அதிகாரபூர்வமாக வழங்குகிறது என்பதை அறியலாம்.

    ***

    நூலின் பதிப்புரையில் அமுதனைப் பற்றிய சில குறிப்புகள் மிகவும் சுருக்கமாக வழங்கப்பட்டுள்ளது.

    அமரர் அமுதன் ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ அன்னையின் பிரதம சீடர்களுள் ஒருவர். அரவிந்தரால் இடப்பட்ட பெயரான அமிர்தா என்ற பெயருக்கேற்ப இனிமையான சுபாவம் படைத்தவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரவிந்த ஆசிரம நிர்வாகியாகப் பணியாற்றியவர்.

    இந்த நூலை அவர் தொடர்ந்து விரிவாக எழுதியிருந்தால் ஒரு அற்புதமான பொக்கிஷத்தை முழுமையாகப் பெற்றிருப்போம்.

    இருந்தாலும் இப்போது கிடைத்ததை வைத்து திருப்திப்பட வேண்டியது தான்.

    இந்த நூலை முழுமையாகப் படித்து இன்புறுவதே சரி. அதை வாங்கி நம் வீட்டு நூலகத்தில் இடம் பெறச் செய்து படிக்க வேண்டியது தான். என்றாலும் இந்தத் தொடரின் நோக்கம் கருதி சில முக்கிய பகுதிகளை மட்டும் அவர் சொற்களிலேயே பார்ப்போம்.

    ***

    மஹாகவி பாரதியார் பற்றி அவர் குறிப்பிடுபவை: 1920-1924

    ஸ்ரீ அரவிந்தரைத் தஞ்சம் அடைவதற்கும், உள்ளத்தில் நான் விரிவைப் பெறவும் பழைய சம்ஸ்காரங்களாகிய என் தளைகளை அவிழ்க்கவும், என் எண்ணங்களுக்கு ஒரு தூய்மையையும் புத்துணர்ச்சியையும் தரவும் பாரதியார் மிகவும் உதவியவர். தம்முடைய சொல்லாலும், செயலாலும், வாழும் வாழ்க்கையாலும், பாரதியார் ஸ்ரீ அரவிந்தரிடத்து மிக நெருங்கிய பழக்கம் கொண்டிருந்தவராகையாலும் அவர் ஸ்ரீ அரவிந்தரிடத்து அளவு கடந்த மதிப்பும் பக்தியும் வைத்திருந்ததனாலும் எனக்கு பாரதியாரிடத்து இன்னதெனச் சொல்லி எனக்கு விளக்கிக் கொள்ள முடியாத ஓர் பெருங் கவர்ச்சி ஏற்பட்டு விட்டது.

    பாரதியார் ஒவ்வொரு நாளும் மாலையில் இருட்டிய பிறகே ஸ்ரீ அரவிந்தர் இல்லம் செலவது வழக்கம். இருட்டுவதற்காக பாரதியார் காத்திருந்தது யாரும் தான் ஸ்ரீ அரவிந்தர் கிருகத்துக்குப் போவதைப் பார்க்கக் கூடாது என்ற கருத்தால் அல்ல. ஸ்ரீ அரவிந்தர் மாலை சுமார் ஏழு மணிக்குப் பிறகே தன் அறையை விட்டு வெளியே வந்து நண்பர்களை வரவேற்பது வழக்கம். அத்தியாவசியமான காலங்களில் பாரதியார், ஸ்ரீனிவாஸாச்சாரியார் போன்ற ஆப்த நண்பர்கள் எந்த வேளையிலும் அவரைப் போய்ப் பார்க்கலாம் என்ற விதி விலக்கும் இருந்தது.

    ***

    பாரதி முதலானோர் இரவு எட்டரை ஒன்பது மணிக்கு வீடு திரும்பும் போது ஏதோ திவ்ய சம்பத்தின் ஓர் அம்சத்தை அவரவர் தகுதிக்கேற்றவாறு தத்தம் உள்ளத்தில் கனிவோடு ஏந்திச் சென்றதாகக் கேட்டிருக்கிறேன்.

    ***

    மாலையில் பாரதியார் ஸ்ரீ அரவிந்தரைப் பார்க்காதிருந்த நாளே கிடையாதெனலாம். தினசரி பத்திரிகைகளில் படித்த விஷயங்கள், செய்திகள் அக்கம் பக்கத்து சமாசாரங்கள் முதலிய எல்லாவற்றைப் பற்றியும் அரவிந்தரிடத்தில் சொல்லி விடுவதில் பாரதியாருக்கு ஒரு திருப்தி. மேலும் தான் கேட்ட விஷயங்களில் ஏதாவது ஒன்றிரண்டிற்கு ஸ்ரீ அரவிந்தர் விளக்கம் தந்து விட்டாலோ பாரதியாருக்கு அளவு கடந்த மகிழ்ச்சி.

    ஸ்ரீ அரவிந்த தரிசனம் – அமுதன் நினைவு அஞ்சலி – 2

    அமுதனாரின் வார்த்தைகளில் அவரது நினைவு அஞ்சலி தொடர்கிறது...

    பாரதியார் வீட்டிலோ அல்லது மடுக்கரை ஏரி முதலிய இடங்களிலோ பந்தி போஜனம் நடக்கும் போது எவ்வித வித்தியாசமும் இல்லாது பறையன், பள்ளி, பார்ப்பனன் என்று சொல்லப்படும் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம். இது இன்று சகஜமாகத் தோன்றலாம். அன்றோ எங்களில் பலர் இப்படி நடந்ததை வீட்டில் சொல்லவே மாட்டோம்.

    ***

    சில சில வேளைகளில் பாரதியார் சக்தி உபாஸனை பற்றி ஸ்ரீ அரவிந்தரிடம் கேட்டதாகச் சொல்லுவார்.

    ***

    ‘ஆர்யா’ பத்திரிகை வெளி வரப் போவதைப் பற்றி புதுவையில் அப்போதிருந்து வந்த தமிழ்க்கவி பாரதியார், அவர் நண்பர்கள் முதலியோரிடையே கனத்த பேச்சு வார்த்தைகள் நடந்தன. ஒரு நவயுகம் உதயமாகப் போவதாகவும், அதுவும், முக்கியமாக மனித வர்க்கத்துக்கே அந்த நவயுகம் எனவும், அதற்கு ரிஷி ஸ்ரீ அரவிந்தர் என்றும் வதந்தி அந்நாளில் உலவியது. அவ்வதந்திக்கு மூல புருஷர் பாரதியார் தான்.

    ***

    சுப்பிரமணிய பாரதியார் மகாத்மா காந்தியைத் தான் பார்க்கப் போவதாகவும் என்னைத் தன்னுடன் வரும்படியும் அழைத்தார். அந்த சமயம் வ.ரா., ஸ்ரீ இராஜகோபலாச்சாரியார் இல்லத்தில் வாஸம்.

    1919 ஆம்

    Enjoying the preview?
    Page 1 of 1