Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rambaiyum Naachiyaaryum
Rambaiyum Naachiyaaryum
Rambaiyum Naachiyaaryum
Ebook191 pages1 hour

Rambaiyum Naachiyaaryum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அசலான இலக்கியம் என்பது அறிவுரை கொடுப்பது இல்லை. அது மனிதனை - தன்னைத்தானே அறிந்து கொள்ளத் தூண்டுவதுதான். அவனுக்கு அவனே வழிகாட்டி. அவனே தனக்கு விளக்காகவும் ஒளியாகவும் இருக்கிறான். பணம் சம்பாரிக்கவில்லை, பெரிய வேலைக்குப் போகவில்லை என்பதால் அவன் சின்னவன் இல்லை. பெரிய வேலை பார்க்கிறவன் அறிவாளி இல்லை. ஞானமும் அறிவும் ஒன்று கிடையாது.

புத்திசாலித்தனத்தால் எழுதப்படுவது படைப்பே இல்லை. மூன்றாம் தரம் என்றுகூட அவற்றைச் சொல்லமுடியாது என்று படைப்பு எழுத்தாளர்கள், சகோதர எழுத்தாளர்கள் பலரைப் பற்றி அபிப்பிராயம் சொல்கிறார்கள். அது பொறாமையால் - இயலாமையால் சொல்லப்படுகிறது என்பது இல்லை. சொல்ல வேண்டியதை மற்றவர்கள் சொல்லப் பயப்படுவதை படைப்பு எழுத்தாளன் சொல்கிறான்.

தமிழில் ஒரு நாற்றாண்டு காலமாக சிறுகதைகள் உரைநடையில் எழுதப்படுகின்றன. பத்திரிகைகள் பலவும் சிறுகதைகளை வெளியிட்டன. தமிழ்ச் சிறுகதைகளின் வீச்சு என்பது கூடிக் கொண்டே வருகிறது. வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில் வாழ்ந்தவர்கள் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார்கள். சொந்த வாழ்க்கையை எழுதியவர்கள், அடுத்தவர்கள் வாழ்க்கையை எழுதியவர்கள்; மக்களை மேன்மைப்படுத்த எழுதியவர்கள்; தங்களின் அவலத்தை எழுதியவர்கள்; மற்றவர்கள் கொடூரம், சூழ்ச்சி, வஞ்சகம் என்பதையெல்லாம் எழுதியவர்கள், மன ஆசா பாசங்களை எழுதியவர்கள் - என்று பலரையும் - அவர்கள் எழுதிய கதைகளை வைத்துக்கொண்டு சொல்லிவிடலாம். ஆனால் கதையென்ற அளவில் எதுவும் பூரணம் பெற்றது இல்லை. பூரணத்தில் இருந்து பூர்ணம் என்பது எல்லாம் தத்துவமாகச் சொல்லிக் கொள்ளலாம். இலக்கியத்தில் பூரணம் என்பது வாழ்க்கைதான். அது வாழ்வது. வாழும் வாழ்க்கையைச் சொல்லச் சொல்ல நழுவிக் கொண்டே போகிறது. அதாவது சொல்லி முடித்துவிட முடியாது என்று தோன்றுகிறது. அதுவே எழுத வைக்கிறது.

புதுமைப்பித்தன் பெரிய எழுத்தாளர்; மெளனி சர்வதேச எழுத்தாளர்; ஜி. நாகராஜன் சொல்லத்தகாதது என்று சொல்லி ஒதுக்கி வைத்திருந்தவர்களின் வாழ்க்கையைத் துணிந்து சொன்னவர்; சமூக அவலத்தை சாட்டையால் அடித்துச் சொன்னவர் விந்தன் என்று சொல்லிக் கொண்டாலும் - அது சரித்திரம். நிகழ்ந்தது இருக்கிறது. ஆனாலும் புதிதாக எழுதவும் - படிக்கவும் இலக்கியம் தேவையாக இருக்கிறது. ஆனால் சமூகத்தில் பெரும்பான்மையானவர்கள் இலக்கியம் படிப்பது இல்லை. அது அவர்களுக்குத் தேவை இல்லை. இலக்கியம் படிப்பதால் அவர் பெறுவதும் - இழப்பதும் ஏதுமில்லை என்று பெரிய பெரிய படிப்பாளிகள் சொல்லிக்கொண்டும் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அறியவில்லை என்பதால் இலக்கியம் அவர்களிடம் இல்லை என்பது கிடையாது. அது படிப்பு சம்பந்தப்பட்டது இல்லை, படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இலக்கியத்தில் கிடையாது.

மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இலக்கியமாகவே வாழ்ந்து வருகிறார்கள். மொழியில் அவர்கள் வாழ்க்கை இலக்கியமாகச் சொல்லப்படுகிறது. படித்துத் தன்னைத் தானே அறிந்துகொள்ள முடியாமல் போய்விடுகிறது என்பது குறைபாடு இல்லை. அறிவது முக்கியம் இல்லை. வாழ்வதுதான் சிறப்பானது. அப்படிச் சிறப்பாக வாழ்ந்தவர்களில் சிலரின் வாழ்க்கைக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. சொல்லப்பட்ட கதையின் வழியாகச் சொல்லப்படாத பலரின் கதைகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது என்பதே எழுதுவதற்கு ஆதாரமாக அமைகிறது.

ஐம்பதாண்டு காலமாக எழுதிவரும் எழுத்தின் தொடர்ச்சி தான் ரம்பையும் நாச்சியாரும். எல்லோரும் இருக்கிறார்கள் என்பது அவர்கள் எப்போதும் இருக்கக்கூடியவர்கள் என்பதால்தான், அவர்கள்தான் உலகம்; மானிட சமூகம் என்பது அவர்களை வைத்துக்கொண்டுதான் சொல்லப்படுகிறது. ஏனெனில் அவர்கள் சொன்னதைவிட சொல்லாதது அதிகம்; செய்ததைவிட செய்யாதது கூடுதல் என்பது படிக்கையில் தெரிகிறது. அதுதான் படைப்பு என்பதை ஜீவிதமாக வைத்துக் கொள்கிறது

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125104121
Rambaiyum Naachiyaaryum

Read more from Sa. Kandasamy

Related to Rambaiyum Naachiyaaryum

Related ebooks

Reviews for Rambaiyum Naachiyaaryum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rambaiyum Naachiyaaryum - Sa. Kandasamy

    http://www.pustaka.co.in

    ரம்பையும் நாச்சியாரும்

    Rambaiyum Naachiyaaryum

    Author:

    சா.கந்தசாமி

    Sa. Kandasamy

    For more books

    http://pustaka.co.in/home/author/sa-kandasamy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. இவர்கள்

    2. வனம்

    3. மேபிள் வனம்

    4. இருக்க ஓரிடம்

    5. அறிவழகன்

    6. ரம்பையும் நாச்சியாரும்

    7. சினிமா கதை

    8. தர்மத்தின் வாழ்வு

    9. செல்லூர் ராணி

    10. சொல்லப்படாத கதை

    11. காத்திருப்பு

    12. கதிஜா

    13. குயில்களும் காக்கைகளும்

    14. வெண்கரடி

    ரம்பையும் நாச்சியாரும்

    சா கந்தசாமி

    சா. கந்தசாமி

    தமிழின் தனித்துவமான படைப்பாளியான சா. கந்தசாமி, 1940 ஆம் ஆண்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையில் பிறந்தார். கடந்த ஐம்பதாண்டு காலமாகச் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். ஆவணப் படங்கள், குறும்படங்கள் எடுப்பதிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறவர். இவரின் 'தமிழக சுடுமண் சிலைகள்' என்ற ஆவணப் படம் சர்வதேச விருது பெற்றது.

    1968 ஆம் ஆண்டில் நண்பர்களுடன் சேர்ந்து 'கோணல்கள்' - என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். கோணல்களில் உயிர்கள் உட்பட இவரின் மூன்று சிறுகதைகள் இடம்பெற்றிருந்தன. கோணல்கள் சிறுகதைத் தொகுப்பு தமிழ்ச் சிறுகதைகளில் ஏற்பட்டிருந்த தேக்கத்தை உடைத்து முன்னே எடுத்துச் சென்றது என்று க. நா. சுப்ரமண்யம் எழுதினார்.

    தக்கையின் மீது நான்கு கண்கள், இரணிய வதம், எங்கள் ஊர், மாயவலி, சாந்தகுமாரி, கிழக்குப் பார்த்த வீடு - என்று பல மிகச்சிறந்த சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரின் சிறுகதைகள் ஆங்கிலம், இந்தி உட்பட பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார்.

    ‘தக்கையின் மீது நான்கு கண்கள்' - வசந்த் இயக்கத்தில் குறும்படமாக எடுக்கப்பட்டு தேசிய விருது பெற்றது.

    1998 ஆம் ஆண்டில் 'விசாரணைக் கமிஷன்' - நாவலுக் காக சாகித்ய அகாதமி விருது பெற்றார். தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.

    முன்னுரை

    கதைகள் எழுதும் படைப்பு எழுத்தாளனுக்கு உள்ள பிரச்சனை முன்னுரை எழுதுவதுதான், கதையும் - முன்னுரையும் எழுத்து தான் என்றாலும் இரண்டும் ஒன்று இல்லை. கதை என்பது படைப்பு. அதில் இருந்து வேறுபட்டது முன்னுரை. கதையில் சொன்னதைவிடச் சிறப்பாக எதையும் முன்னுரையில் சொல்லிவிட முடியாது என்றாலும் எழுத்தாளன் தன் படைப்புகளுக்கு முன்னுரை எழுதிக்கொண்டே இருக்கிறான். காரணம் படைப்பை வெளியில் இருந்து பார்க்கும் மனநிலைதான். எழுதப்பட்ட பின்னர் அவன் படைப்பில் இருந்து அன்னியனாகி விடுகிறான். அவனே எழுதியது என்றாலும் எழுதப்பட்ட பின்னர் அவனும் ஒரு வாசகன்தான். அதற்கு மேல் அதில் அவனுக்குச் சம்பந்தம் இல்லை. அவன் எழுத்து எல்லோருக்கும் பொதுவாகி விடுகிறது. அதற்கு மொழியில்லை, தேசம் கிடையாது.

    எந்த மொழியில் மொழிபெயர்த்து எந்த தேசத்தில் படித்தாலும் அது படிக்கிறவன் கதைதான். அதுதான் கதை என்பதின் உண்மையான அர்த்தம். அதன் பொருட்டே கதைகள் அறிந்தும் அறியாமலும் எழுதப்படுகின்றன. அதில் அறிந்து எழுதுகிறவன் சிறந்த படைப்பாளி என்றும், அறியாமல் எழுதியவன் மகா பெரிய படைப்பாளி என்றும் கொண்டாடப்படுகிறான். அறிவு படைப்பு ஆகாது; மொழியின் புலமை சிறந்த படைப்பை உருவாக்குவது இல்லை என்பது படைக்கப்பட்டிருப்பதை எல்லாம் படிக்கையில் தெரிகிறது.

    மனிதர்கள் அறிந்து கொண்டிருப்பதை விட மகத்தான ஞானம் பெற்று இருக்கிறார்கள், அது அவர்கள் பேச்சு, எழுத்து, வாழ்க்கைமுறை வழியாகத் தெரிவதை விட தெரியாமல் இருப்பதுதான் அதிகம். அதனையே ஒவ்வொரு தலைமுறையிலும் தங்களுக்கு எட்டிய வரையில் சொல்லிப் பார்க்கிறார்கள். சொல்லப் பயன்படுத்தப்படும் மொழியும் அதனை எழுதும் எழுத்தும் மனித அறிவால் கண்டுபிடிக்கப்பட்டது என்பதால், மனித ஞானத்தைப் பூரணமாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் அதனைச் சொல்லிப் பார்க்கும் ஆர்வம் என்னவோ குறையவே இல்லை. எனவே தொடர்ந்து எழுதிக்கொண்டே வருகிறார்கள். எத்தனையோ மகா ஞானிகள் ஏதோ கொஞ்சம் சொல்லி இருக்கிறார்கள் என்பது சொல்லப்பட்டதின் வழியாகத் தெரிகிறது. அது வாழ்க்கையைச் சொல்லமுடியும் என்று நம்பிக்கை அளிக்கிறது. அதனால் ஏற்கனவே சொல்லப்பட்டது, அங்கீகரிக்கப்பட்டது என்பதை எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு மனுஷியும் புதிது; அவர்கள் பேசும் பேச்சும், செய்யும் காரியங்களும் அவர்களையே சார்ந்தது. அவர்களுக்கு அவர்களே வழிகாட்டி, படித்தது: கேட்டது எல்லாம் அவர்களைப் பொறுத்தவரையில் பயனற்றது. அவர்கள் வாழ்க்கையை அவர்களே வாழ்ந்து வருகிறார்கள். அதற்கு இன்னொருவர் பங்களிப்பு என்பது ஏதும் கிடையாது. ஆனால் அதனை அறிவதும் அறிந்த விதமாக எழுதுவதும் இலக்கியமாக இருக்கிறது.

    அசலான இலக்கியம் என்பது அறிவுரை கொடுப்பது இல்லை. அது மனிதனை - தன்னைத்தானே அறிந்து கொள்ளத் தூண்டுவதுதான். அவனுக்கு அவனே வழிகாட்டி. அவனே தனக்கு விளக்காகவும் ஒளியாகவும் இருக்கிறான். பணம் சம்பாரிக்கவில்லை, பெரிய வேலைக்குப் போகவில்லை என்பதால் அவன் சின்னவன் இல்லை. பெரிய வேலை பார்க்கிறவன் அறிவாளி இல்லை. ஞானமும் அறிவும் ஒன்று கிடையாது.

    புத்திசாலித்தனத்தால் எழுதப்படுவது படைப்பே இல்லை. மூன்றாம் தரம் என்றுகூட அவற்றைச் சொல்லமுடியாது என்று படைப்பு எழுத்தாளர்கள், சகோதர எழுத்தாளர்கள் பலரைப் பற்றி அபிப்பிராயம் சொல்கிறார்கள். அது பொறாமையால் - இயலாமையால் சொல்லப்படுகிறது என்பது இல்லை. சொல்ல வேண்டியதை மற்றவர்கள் சொல்லப் பயப்படுவதை படைப்பு எழுத்தாளன் சொல்கிறான்.

    தமிழில் ஒரு நாற்றாண்டு காலமாக சிறுகதைகள் உரைநடையில் எழுதப்படுகின்றன. பத்திரிகைகள் பலவும் சிறுகதைகளை வெளியிட்டன. தமிழ்ச் சிறுகதைகளின் வீச்சு என்பது கூடிக் கொண்டே வருகிறது. வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில் வாழ்ந்தவர்கள் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார்கள். சொந்த வாழ்க்கையை எழுதியவர்கள், அடுத்தவர்கள் வாழ்க்கையை எழுதியவர்கள்; மக்களை மேன்மைப்படுத்த எழுதியவர்கள்; தங்களின் அவலத்தை எழுதியவர்கள்; மற்றவர்கள் கொடூரம், சூழ்ச்சி, வஞ்சகம் என்பதையெல்லாம் எழுதியவர்கள், மன ஆசா பாசங்களை எழுதியவர்கள் - என்று பலரையும் - அவர்கள் எழுதிய கதைகளை வைத்துக்கொண்டு சொல்லிவிடலாம். ஆனால் கதையென்ற அளவில் எதுவும் பூரணம் பெற்றது இல்லை. பூரணத்தில் இருந்து பூர்ணம் என்பது எல்லாம் தத்துவமாகச் சொல்லிக் கொள்ளலாம். இலக்கியத்தில் பூரணம் என்பது வாழ்க்கைதான். அது வாழ்வது. வாழும் வாழ்க்கையைச் சொல்லச் சொல்ல நழுவிக் கொண்டே போகிறது. அதாவது சொல்லி முடித்துவிட முடியாது என்று தோன்றுகிறது. அதுவே எழுத வைக்கிறது.

    புதுமைப்பித்தன் பெரிய எழுத்தாளர்; மெளனி சர்வதேச எழுத்தாளர்; ஜி. நாகராஜன் சொல்லத்தகாதது என்று சொல்லி ஒதுக்கி வைத்திருந்தவர்களின் வாழ்க்கையைத் துணிந்து சொன்னவர்; சமூக அவலத்தை சாட்டையால் அடித்துச் சொன்னவர் விந்தன் என்று சொல்லிக் கொண்டாலும் - அது சரித்திரம். நிகழ்ந்தது இருக்கிறது. ஆனாலும் புதிதாக எழுதவும் - படிக்கவும் இலக்கியம் தேவையாக இருக்கிறது. ஆனால் சமூகத்தில் பெரும்பான்மையானவர்கள் இலக்கியம் படிப்பது இல்லை. அது அவர்களுக்குத் தேவை இல்லை. இலக்கியம் படிப்பதால் அவர் பெறுவதும் - இழப்பதும் ஏதுமில்லை என்று பெரிய பெரிய படிப்பாளிகள் சொல்லிக்கொண்டும் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அறியவில்லை என்பதால் இலக்கியம் அவர்களிடம் இல்லை என்பது கிடையாது. அது படிப்பு சம்பந்தப்பட்டது இல்லை, படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இலக்கியத்தில் கிடையாது.

    மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இலக்கியமாகவே வாழ்ந்து வருகிறார்கள். மொழியில் அவர்கள் வாழ்க்கை இலக்கியமாகச் சொல்லப்படுகிறது. படித்துத் தன்னைத் தானே அறிந்துகொள்ள முடியாமல் போய்விடுகிறது என்பது குறைபாடு இல்லை. அறிவது முக்கியம் இல்லை. வாழ்வதுதான் சிறப்பானது. அப்படிச் சிறப்பாக வாழ்ந்தவர்களில் சிலரின் வாழ்க்கைக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. சொல்லப்பட்ட கதையின் வழியாகச் சொல்லப்படாத பலரின் கதைகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது என்பதே எழுதுவதற்கு ஆதாரமாக அமைகிறது.

    ஐம்பதாண்டு காலமாக எழுதிவரும் எழுத்தின் தொடர்ச்சி தான் ரம்பையும் நாச்சியாரும். எல்லோரும் இருக்கிறார்கள் என்பது அவர்கள் எப்போதும் இருக்கக்கூடியவர்கள் என்பதால்தான், அவர்கள்தான் உலகம்; மானிட சமூகம் என்பது அவர்களை வைத்துக்கொண்டுதான் சொல்லப்படுகிறது. ஏனெனில் அவர்கள் சொன்னதைவிட சொல்லாதது அதிகம்; செய்ததைவிட செய்யாதது கூடுதல் என்பது படிக்கையில் தெரிகிறது. அதுதான் படைப்பு என்பதை ஜீவிதமாக வைத்துக் கொள்கிறது

    சா. கந்தசாமி

    1. இவர்கள்

    கோடைகாலம். இரவு ஏழுமணி. மழை தூறலாக விழுந்து கொண்டிருந்தது. கிழக்குக் கடற்கரை சாலையிலிருந்து கீழே இறங்கி கடலுக்குச் செல்லும் பாதையில் சவுக்கு மரங்களுக்கிடையில் இரண்டு கார்கள், சசிமேனன் பண்ணை வீட்டை நோக்கிச் சென்றன.

    சசிமேனன் சவூதி அரேபியாவில் ஓட்டல் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறான். அதோடு காய்கறி, பழங்கள், இறைச்சி வகைகள், மீன் விற்கும் இரண்டு சூப்பர் மார்க்கெட்டுகள் வைத்திருக்கிறான். முப்பத்து நான்கு வயதாகி விட்டது. கல்யாணம் ஆகவில்லை, சினிமா, நாடகம், நாட்டியத்தில் அதிகமான ஈடுபாடு.

    அவன் பிரிய சிநேகிதி சியாமளா பரமேஸ்வரன். பூர்வீகம் பாலக்காடு, அவள் அப்பா பரமேஸ்வர ஐயர் பிழைப்புத் தேடி மும்பை சென்றார். ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி உள்ளூர் கிருஷ்ண ஐயர் வீட்டில் சமையல்காரனாக ஏழாண்டுகள் இருந்தார். பின்னர் அந்தேரி பகுதியில் சின்னதாக ஒரு சைவ ஓட்டல் ஆரம்பித்தார். அவர் மூன்றாவது பெண் சியாமளா, அவளுக்கு சிறுவயதில் இருந்தே இசையிலும், நடனத்திலும் ஈடுபாடு இருந்தது. ஐந்து வயதில் நடனம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தவள் பதினேழு வயதில் மும்பை சண்முகானந்தா அரங்கில் மேயர் கங்குபாய் பண்டேக்கர் தலைமையில் அரங்கேற்றத்தில் ஆடினாள். அசல் பரத நாட்டியம்; கண்டுகளிக்க மனம் வேண்டும் என்று மும்பை மெயில் இரண்டு வண்ணப் படங்கள் வெளியிட்டு எழுதியது. ஒரே நாளில் சியாமளா பிரபல்யமாகி விட்டாள். மும்பை தொலைக்காட்சியில் மராத்தியில் பேசினாள். மும்பை மண்ணின் மகள் என பிரகடனப் படுத்திக் கொண்டாள். மும்பை நகராட்சி அவளுக்கு ஓராண்டு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்த இடம் கொடுத்து, நிதி உதவியும் செய்தது. மத்திய கலாச்சார அமைச்சகத்து நிதி ஆணையாளர் அனந்தபத்மநாப ஐயர், அவள் அமெரிக்க பாஸ்டன் மியூசியத்தில் ஆனந்தகுமாரசுவாமி நினைவு அறக்கட்டளை சார்பாக 'சதிர் நாட்டியத்தின் அடிப்படை அம்சங்கள்' என்ற ஆய்வுக்காக அமெரிக்கா அனுப்பி வைத்தார்.

    எட்டாண்டுகளில் சியாமளா பரமேஸ்வரன் புகழ்பெற்ற பரதநாட்டியமணியாகி விட்டாள். மொரீசியஸ் பிரதமர் இந்தியாவுக்கு வந்த போது ஜனாதிபதி அளித்த விருந்தின் ஒரு பகுதியாக அவள் நாட்டியம் இருந்தது. மொரீசியஸ் பிரதமர் அவள் ஆடும் ஆட்டத்தையும், பேசும் ஆங்கிலத்தையும் பார்த்து வியந்து தன் நாட்டிற்கு வந்து கலை நிகழ்ச்சிகள் நடத்த அழைப்பு விடுத்தார். அவள் ஆங்கிலம் மட்டுமல்ல இந்தி, மராட்டி, தமிழ், மலையாளம், வங்காளம், ஸ்பானிஷ் என பல மொழிகளில் பேசவும், எழுதவும் கற்றுக் கொண்டு இருந்தாள்.

    அரேபியாவில் பாலக்காடு ஆர்ட்ஸ் அகாதமியின் சார்பில் நான்கு நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு திரும்பி வரும் போதுதான் சசிமேனனை சந்தித்தாள். குறுந்தாடி வைத்துக் கொண்டிருந்த அவன் தான் திருவனந்தபுரம் என்றும்,

    Enjoying the preview?
    Page 1 of 1