Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naan Athuvalla
Naan Athuvalla
Naan Athuvalla
Ebook250 pages1 hour

Naan Athuvalla

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் மானுடர்கள் சிறந்த மனிதர்களாக இத்தொகுதியில் உலவுகிறார்கள். சிறுகதைகளின் தரத்தை நிர்ணயிக்க அழகியல் அம்சங்கள் பிரதானத் தீர்மான சக்தியாக அமைகின்றன ஆனால் மனிதநேயம். சமூக நோக்கு, பண்பாட்டு மெய்மை ஆகியவையும் இன்றியமையாதவை. உஷாதீபனின் கதைகள் இவற்றை உள்ளடக்கி, வடிவ அமைதியுடன் விளங்கி, கதைகளின் வெற்றிக்குக் காரணமாகின்றன. படித்தவுடன் மனநிறைவை ஏற்படுத்தும், அசலான வாழ்க்கையைப் பேசும், இத்தொகுதியிலான படைப்புக்கள் அனைத்தும், தமிழ்ச் சிறுகதைகளுக்கு ஒரு சிறந்த சேர்மானம்.

Languageதமிழ்
Release dateNov 23, 2019
ISBN6580129904724
Naan Athuvalla

Read more from Ushadeepan

Related authors

Related to Naan Athuvalla

Related ebooks

Reviews for Naan Athuvalla

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naan Athuvalla - Ushadeepan

    http://www.pustaka.co.in

    நான் அதுவல்ல

    Naan Athuvalla

    Author:

    உஷாதீபன்

    Ushadeepan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ushadeepan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பொக்கிஷம்

    2. நான் அதுவல்ல

    3. தன்னில் கரைந்தவர்

    4. மீண்டும் பஞ்சமி

    5. பின்னோக்கி எழும் அதிர்வுகள்

    6. நிறைவு...?

    7. மேலிருந்து கீழ் வலமிருந்து இடம்

    8. மனக்குப்பை

    9. அடையாளம்

    10. கல்லை மட்டும் கண்டால்

    11. காப்புரிமை

    12. ஸ்ருதி லயம்

    13. வெள்ளாடு

    14. அம்மா அப்பா நான்

    15. பிரகிருதி

    16. காவல்

    17. அவலம்

    18. அசையாச் சொத்து

    19. மனிதர்கள் பல விதம் இவன் ஒரு விதம்

    சமர்ப்பணம்

    உயிரினில்

    கலந்து உணர்வினில் லயித்து

    என்னுள் பெருகி ஓடும்

    விழுமியங்களையும்

    இறையாண்மையையும்

    பாதுகாத்து நிற்கும்

    என் பெற்றோருக்கு!

    என் நெஞ்சார்ந்த நன்றி!

    *****

    என்னுரை

    என் படைப்பனுபவம் குறித்த சில எளிய தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

    படிப்பனுபவத்திலிருந்து தான் படைப்பு அனுபவம் கிடைக்கிறது. எனவே இரண்டையும் பிரிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. தொடர்ந்து வாசிப்பனுபவம் என்பது படைப்பனுபவத்திற்கு ஊக்கமளிக்கிறது.

    ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் இரண்டு விதமான அனுபவங்கள். ஒன்று அவனது சொந்த வாழ்க்கையில் அவன் எதிர்கொள்ளக் கூடியவை. இன்னொன்று அனுபவப்பட்டு முதிர்ந்து, அதனை எழுத்தில் வடித்து வைத்திருக்கும் பெரியோர்களின் எழுத்துக்களை அவர்களது அனுபவங்களைப் படித்தறிதல்.

    இந்தப் பயிற்சியை நாம் தொடர்ந்து மேற் கொண்டோமானால்தான் விஷய ஞானம் என்பது நமக்குக் கை கூடும்.

    அது எப்படிக் கிடைக்கும்? இந்த உலகத்தில் எதுவுமே சும்மா கிடைக்காது. ஒன்று கொடுத்தால்தான் ஒன்று கிடைக்கும். நிறைய படிக்க வேண்டும் என்றால் நம் நேரத்தை அதற்குக் கொடுக்க வேண்டும். மூளையைச் செலுத்திப் படிக்கும் உழைப்பை அதற்கு வழங்க வேண்டும்.

    நல்ல புத்தகங்களைத் தேர்வு செய்து, அதனைக் காசு கொடுத்துத் தயங்காமல் வாங்கிப் படித்திட வேண்டும்.

    ஒரு நல்ல எழுத்தாளனாக இருப்பதைவிட, ஒரு நல்ல வாசகனாக இருப்பது மிகவும் கடினம். அது மிகப் பெரிய விஷயமும்கூட.

    தேர்ந்த வாசகர்கள் மிகப் பெரிய அரிதான விஷயங்களை உள்ளடக்கியவர்களாக இருப்பார்கள். அவர்களை, நமக்கு மட்டுமேதான் தெரியும் என்கிற நோக்கில் அப்படி எளிதாக ஏமாற்றி விட முடியாது.

    நான் இலக்கிய வாசகன் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுவது ஒரு முக்கியமான தன்னுணர்வு. நான் பொழுதுபோக்கிற்காகப் படிப்பவனல்ல. வாழ்க்கையை அறிவதற்காகப் படிப்பவன். நான் வாசிப்பை உழைப்பாக எடுத்துக்கொள்ள அஞ்சாதவன் என்ற எண்ணம் வேண்டும்.

    இலக்கிய வாசிப்பு என்பது ஓர் இலக்கியப் படைப்பானது மொழியின் வழியாக வாசகனின் ஆழ் மனதுடன் தொடர்பு கொள்ளும் முறையாகும். இது அக மனத்தை முன்னிறுத்தி நடத்தப்படுவது. வாசிப்புப் பயிற்சி என்பது அக மனத்தை வாசிப்புக்குப் பழக்கப்படுத்துவதுதான்.

    வாசிப்பு மனித குலத்திற்கு மட்டுமே வாய்த்த பெரும் பேறு. வாசிப்பு மூலம் மிகப் பெரிய விவேகத்தை அடைந்தவர்கள் இருக்கிறார்கள். ஆழ்ந்த வாசிப்பு நம் சலசலப்பைப் போக்கி மௌனத்தைத் தருகிறது. புத்தகங்களை மட்டுமல்ல, மனிதர்களையும், மரம், செடி கொடிகளையும், சகல உயிரினங்களையும் வாசிக்கக் கற்றுக் கொள்பவன்தான் மேலான வாசகன். இது மறைந்த முதுபெரும் படைப்பாளி திரு. சுந்தரராமசாமி அவர்களின் கூற்று.

    இந்தப் படிப்பனுபவத்திலிருந்து. படைப்பனுபவம் கிடைக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. மிகச் சிறந்த படைப்புகளைப் படிக்கும்போது இது போல நம்மாலும் எழுத முடியுமா? என்ற ஆதங்கம் தோன்றுகிறது. இந்த ஆதங்கம் தான் படைப்பை உருவாக்கும் சக்தியாகப் பரிணமிக்கிறது.

    குடும்பச் சூழலில் அடக்கு முறைக்கு ஒடுங்கிப் போன வருத்தமும், கோபமும், நம் மனதில் படிந்து கிடக்கின்றன. அவை நம் நெறிபிறழாத ஒழுக்கமும், செம்மையுமான வாழ்க்கைக்கு அடிநாதமாக அமைந்தன என்பதை மறுக்க முடியாதுதான்.

    ஆனாலும் அடிமனதில் படிந்து போன கோபங்களும், வருத்தங்களும், நமது இருப்பையும், சுதந்திரத்தையும், நிலைநாட்டி விட வேண்டும் என்ற ஆவேசத்தை நமக்கு ஊட்டி விடுகின்றன.

    இதற்கு உகந்ததாக, மனித குலத்தின் நன்மையை ஒட்டு மொத்தக் குறிக்கோளாகக் கொண்டிருந்த சிந்தனைகள் என் மனதை வெகுவாகக் கவர்ந்தன. அச்சிந்தனை சார்ந்த கனவுகளும், அந்தக் கனவுகளிலிருந்த தர்க்கங்களும், என் எதார்த்த மனதுக்கு இசைவாக இருந்தன.

    மேலான வாசகனாக இருத்தல் மேன்மையான படைப்புகளுக்கு வழிவகுக்கும் என்று சொன்னேன். வாழ்க்கைச் சூழல்கள் எல்லோருக்கும் மிதமான முறையில் அமைந்தால் தானே இது சாத்தியம்?

    படிக்க வேண்டும் என்றால் நல்ல குடும்பச் சூழல் அமைய வேண்டும். மன அமைதி, இட அமைதி, சுமூக நிலை இருந்தால் தான் இது சாத்தியம். இவை எல்லாவற்றிற்கும் மேலாகப் பொருளாதார நிலை என்ற ஒன்றும் வெகு முக்கியமான ஒன்றாக அமைந்து போகிறதல்லவா?

    எழுத்தாளர்களும் சராசரி நடப்பியல்புகளுக்கு உட்பட்டவர்கள்தான். ஆனாலும் சற்றே வித்தியாசப் பட வேண்டாமா? அதுதானே நியாயம்?

    இந்தச் சமுதாயத்திற்குச் செய்தி தரக்கூடியவன், மனித மனங்களை ஆட்டிப் படைக்கக் கூடியவன், மனிதச் சிந்தனைகளை மேம்படச் செய்யக் கூடியவன், சக மனிதனை, அவனது மென்மையான உணர்வுகளை, அவன் நெஞ்சின் ஈரப் பகுதியை, ஆழப் புதைந்திருக்கும் நன்னெறிகளை, சிறிதளவேனும் தட்டி எழுப்பிட வேண்டும்தானே? ஒரு படைப்பின் நோக்கம், அதுவாகத்தானே இருக்க முடியும்? இருக்க வேண்டும்? அதுதானே ஒரு படைப்பாளியின் அடையாளம்?

    என் அடையாளம் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை இலக்கியம் என்பது அதுதான். இலக்கினை இயம்புதல், அந்த இலக்கு மனித வாழ்க்கைக்குப் பயன் தரத்தக்கதாக அமைய வேண்டும்.

    வாழ்க்கையில் மனிதர்கள் வெகு சகஜமாகக் காட்சியளிக்கிறார்கள். இலக்கியம் என்கிற கற்பனையின் ஊடாக வாழ்க்கையை வெளிப்படுத்தும்போது அதன் மீது மாயத்திரை ஒன்று படிந்து விடுகிறது. இந்த மாயத் திரையின்றி நம்மால் இலக்கியத்தை நேசிக்க முடியுமா?

    வாழ்க்கைக்கு இல்லாத பூச்சை இலக்கியத்துக்குத் தந்து, அதை நேசிப்பது வாழ்க்கையை நேசிப்பதுதானே? குணங்களுடனும், குறைகளுடனும் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையை ஆழ அறிந்து அதனுடன் உறவு வைத்துக் கொள்வதே நேசம். இந்த நேசத்தை உருவாக்குவது இலக்கியம்.

    வாழ்க்கையின் அர்த்தத்தைச் சொல்லுவது தத்துவம். வாழ்க்கையைச் சொல்லுவது, அதன் இரசனையைச் சொல்லுவது இலக்கியம்.

    இது புதுமைப்பித்தன் கூற்று.

    ரசனையைச் சொல்லுவது என்பது இலக்கியத்திற்கு மிகவும் அவசியம்தான். ரசனை இல்லையென்றால் ஒருவன் எழுத்தாளனாக முடியாது. ஆழ்ந்த ரசனைதான் ஒரு படைப்பாளியை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.

    ஒரு சாமான்யர் ஒரு விஷயத்தைப் பார்ப்பதற்கும், அதையே ஒரு படைப்பாளி பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

    ஒரு பூவைப் பார்த்ததும் அதைப் பறிக்க நினைப்பவன், பறிப்பவன் சாமான்யன். ஆனால் அதைச் செடியிலேயே வைத்து, பச்சைப் பசுந்தளிர்களுக்கு நடுவே பட்டுப்போன்ற பளபளப்புடன் மலர்ந்து சிரிப்பதைக் கண்டு மயங்கி நிற்பவன் படைப்பாளி.

    சாலையில் நடந்து செல்கிறோம். இருபுறமும் வானளாவிய மரங்கள். அந்த மரங்களைப் பார்க்கும் போது இவனுக்கு இவன் மூதாதையர்களைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது என்னும் பொழுது அங்கே படைப்பாளி நிற்கிறான்.

    இதைத்தான் கலைத் தன்மை என்கிறார்கள். மிகுந்த ரசனையின்பாற்பட்ட விஷயம் இது.

    கதைகளின் உள்ளடக்கம் முற்போக்காக இருந்தாலும், அவற்றின் கலைத் தன்மை வலுவாக இருந்தால்தான் அவை வாசகனைச் சென்றடையும்.

    இந்தக் கலைத் தன்மை, படைப்பின் நேர்த்திக்கு, வாசிப்பு அனுபவத்துக்கு, அதன் கட்டுக் கோப்புக்கு உதவும் என்கிற நிலையில், எழுத்தின் பயன் என்ன? எழுத்தாளனின் திறமை வெளிப்பட்டால் போதுமா? எழுத்தின் பயன்பாடு என்னாவது?

    அங்கேதான் எழுத்துக்கான அவசியம் அதிகமாகிறது. என் படைப்புகளின் அடிநாதம் அங்கேதான் ஜனிக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

    இலக்கியம் மனிதனை நெறிப்படுத்துவதாக அமைய வேண்டும். அப்படித்தான் நான் என் கதையுலகுக்கு வந்தேன்.

    என்னை எழுதத் தூண்டியது எனது அனுபவங்கள். என் தாய் தந்தையரோடு இயைந்த என் வாழ்க்கை.

    என் படைப்புகள் முன்னிறுத்துவது மனித நேயம். என்னைப் பாதிக்கும் விஷயங்களை நான் எழுத முனைகிறேன். எழுதுவது போலவே இருக்கவும் முயல்கிறேன்.

    எந்தவொரு நிகழ்வையும் அன்பு, கருணை, உண்மை, நேர்மை, நியாயம் என்ற வட்டத்திற்குள்ளிருந்துதான் என்னால் பார்க்க முடிகிறது. மனிதர்கள் அதிலிருந்து பிறழும் போது என் மனம் புழுங்குகிறது. உள்ளுக்குள் நான் கோபம் கொள்கிறேன். மனசுக்குள் அழுகிறேன். எனது கோபத்தின், சோகத்தின் வெளிப்பாடாகவே அவற்றின் வடிகாலாகவே எனது படைப்புகள் உருவாகின்றன.

    எனது இந்த அனுபவங்கள் அன்றாட வாழ்வில் எதிர்ப்படும் சக மனிதர்களிடமிருந்துதான் எனக்குக் கிடைக்கிறது. அவர்களை நீங்களும் சந்தித்திருப்பீர்கள். ஆகையால் எனது கதையுலகம் வாசகனுக்கு மிக எளிமையாய் அமையும்.

    சக மனிதர்களின் பாலான நேசமும், நிதானப் போக்கும், வாசகர்களிடம் மேம்படுமாயின் அதுவே எனக்குக் கிடைத்த வெற்றி.

    எப்பொழுதுமே எனது எழுத்தில் நான் அதிக முக்கியத்துவம் அளிப்பது மனிதர்களின் மன உணர்வுகள் பற்றியே, உள்ளார்ந்த நெறிகள் பற்றியே. இவை எப்படியெல்லாம் ஒரு சராசரி மனிதனிடம் வெளிப்படுகின்றன. அந்த வெளிப்பாடு ஒருவனின் உணர்வுகளோடு, ரத்தத்தோடு கலந்து போன நன்னெறிகளின் அடையாளமாக எப்படியெல்லாம் பரிணமிக்கின்றன என்பதையே மையப்படுத்த முனைகின்றேன்.

    நான் வளர்ந்த சூழ்நிலை, பார்த்த, பழகிய மனிதர்கள், அவர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த அனுபவங்கள் இவைதான் எனக்குக் கதையைத் தருகின்றன.

    என் படைப்புகளில் பாவனை இல்லை. பகட்டு இலலை. ஆடம்பரமில்லை. படாடோபமில்லை. என் மனமொழி நடையே எவ்வித ஒப்பனையுமில்லாமல் நேர்மையுடன் வெளிப்படுகிறது.

    மன உலகம் கதையுலகமாக விரிகிறது. அன்றாட அனுபவ எல்லைக்குள், மனசுக்குள் பதிவாகிற நிகழ்வுகளே கதைகளாயிருப்பவை. அதனாலேயே நேர்மையும், மன உண்மையும் வாசகனுக்கு மரியாதையை ஏற்படுத்தும்.

    ஆனால் எனது அனுபவ எல்லைக்குட்பட்ட ஒரு சம்பவத்தை, சம்பவத் துளியை மட்டுமே சிறுகதையாக்குவது. உலுத்தாத மொழி நடை, வாசக மனதில் சிந்தனைப் பொறியைத் தெறிக்கச் செய்தல், சிறிய அழுக்கைத் துடைத்தல், சிறிய சோகம் கவிழச் செய்தல், வெளிச்ச நினைவு மின்னி மறைதல், என எல்லாச் சிறுகதைகளும் மனித நேயம் என்கிற உயர் பண்பை உயிர் வடிவமாகக் கொண்டிருத்தல். மத்திய தர வர்க்க மனிதரின் மனித நேயம், அதிலிருந்து பிறக்கிற கருணை, பரிவு இவையே என் கதைகளின் வழித்தடம். இனி நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

    இச்சிறுகதைகள் என்னை வெவ்வேறு தளங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றன என நான் நம்புகிறேன். உங்களுக்குத் திருப்தியானால் சொல்லுங்கள். நன்றி.

    அன்பன்,

    உஷாதீபன்

    *****

    1. பொக்கிஷம்

    கிருஷ்ணமூர்த்தி அந்த டப்பாவைக் கவிழ்த்துக் கொட்டி அதில் அது கிடக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்தார். ஒன்றிரண்டு கிடந்ததாக நினைவு. எதெதிலோ போட்டு வைத்திருந்தோம். காணவில்லையே!

    கொட்டிய வேகத்தில் ரெண்டு மூன்று பூச்சிகள் விருட்டென்று ஓடின. ஒரு மாதிரி மக்கிய வாடை வந்தது டப்பாவிலிருந்து. விரலால் ஒவ்வொன்றாக விலக்கி, விலக்கி அவர் தேடும் அந்தப் பேன்ட் கிளிப் கண்ணுக்குத் தென்படவேயில்லை.

    காலங்கார்த்தால இதுக்கு இந்தப் பாடா? இப்பொழுதெல்லாம் சின்னச் சின்ன வேலைகள் கூட மலைப்பாகத் தோன்றுகிறது. வயதானாலே அப்படித்தான் போலும்! உடல் தளர்கிறது. கூடவே மனமும் தளர்கிறது. கனத்த சட்டை போடப் பிடிக்கவில்லை. லேசான துண்டு மட்டும் தோளில் கிடந்தால் போதும். ராத்திரி அதை நீட்டி விரித்து நெடுஞ்சாண்கிடையாகச் சாய்ந்தால் போதும். அத்தனை ஆசுவாசம் உடலுக்கு வேண்டியிருக்கிறது. எளிமையாய் இருப்பதில் தான் எத்தனை சுகம். வயசு இருக்கும் காலத்தில் இது தெரியாமல் போகிறதே?

    கைகள் அளைகின்றன. ‘ஸ்க்ரூக்கள், நட்டுக்கள், சட்டை பட்டன்கள், கோலிக் குண்டுகள், வெண்கலத்தினாலான பகடை, சோழிகள், சுவிட்சுகள், ப்ளக்குகள், வொயர்கள், துருப்பிடித்த குண்டூசிகள், சாவிகள், சின்னச் சின்ன பென்சில்கள், ப்யூஸ் கம்பிச் சுருள், இன்னும் என்னென்னவோ சம்பந்தா சம்பந்தமில்லாமல்...’

    அத்தனையும் அவர் சேமிப்பு. எப்பொழுதாவது பயன்படும் என்று போட்டு வைத்தது. அவ்வாறு எதையும் வீணாக்காமல், தூர எறியாமல் எதற்கும் கிடக்கட்டுமே என்று வைத்திருப்பது. சிறு வயது முதலே இந்தப் பழக்கம். எங்கிருந்து தனக்கு இது தொற்றிக் கொண்டது என்றெல்லாம் அவர் நினைத்துப் பார்த்தது இல்லை. வீட்டிலுள்ள பெரியோர்களைப் பார்த்துப் பார்த்து வந்த பழக்கமாயிருக்கலாம். நாலு முழ வேட்டியை கடைசிக் கோவணமாய் பயன்படுத்துவதுவரை உபயோகப்படுத்திய அப்பாவைத்தான் அவர் அடிக்கடி நினைவு கூறுவார். அதென்ன கேவலமா என்ன? ஒரு பொருள் அதன் முழுப் பயன்பாட்டை எய்த வேண்டாமா? கணக்கெழுதும் பொழுது அப்பா தன் மரப் பெட்டியைத் திறக்கையில் உள்ளே பார்த்திருக்கிறார் அவர். அடேயப்பா! காலத்துக்கும் கதை பேசும் அரிதான பொக்கிஷங்கள் அவை.

    அதிலும் ஒரு ஓலைச் சுவடியும், பெரிய யானைப்பல் ஒன்றும் வைத்திருப்பார் அப்பா. அதுதான் இவர் கவனத்தை விடாமல் ஈர்க்கும். அதை ஒரு நாள் கூடத் தொட அனுமதித்ததில்லை பாட்டி. அப்பா பெட்டியைத் திறந்திருக்கையில் பாட்டி அருகிலேதான் இருந்திருக்கிறாள். கண்கொத்திப் பாம்பாய்ப் பார்த்துக் கொண்டிருப்பாள் பாட்டி. குழந்ததானேம்மா... பார்த்திட்டுப் போகட்டுமே... என்பார் அப்பா. பாட்டி கேட்டால்தானே? தன்னைத் தவிர பிறர் தொட்டால் அதன் மகத்துவம் குன்றிப் போய்விடுமோ என்னவோ?

    அவ்வப்போது நூல் பிரிப்பதும், ஏடு ஏடாகப் பிரித்து எதையோ படிப்பதும், பிறகு ஒன்றாகச் சேர்த்து நூல் சுற்றி உள்ளே வைப்பதுமாக... அப்படி அதில் என்னதான் ரகசியமோ... அம்மாதான் சொன்னாள் ஒருநாள். அதில உங்களோட ஜாதகமெல்லாம் இருக்குடா... தாத்தா எழுதிக் கொடுத்ததாக்கும்...

    ஜாதகம்னா அதில் என்னவெல்லாம் இருக்கும்...? ஒரு நாள் எடுத்துப் பிரித்துப் பார்த்தே விட்டார் இவர். ஒன்றுமே புரியவில்லை. என்ன பாஷையில் அது எழுதப்பட்டிருக்கிறது என்பது சரியாகத் தெரியவில்லை இவருக்கு. ஏதோ ஒன்றிரண்டு எழுத்துக்கள் தமிழில் இருப்பதாய்த் தோன்றின.

    இவரை அதிகமாக ஈர்த்தது அந்த யானைப் பல்தான். தேய்ந்து தேய்ந்து போய் இப்பொழுது இருக்கும் இந்த சைஸே இத்தனை பெரிதென்றால், முழுசாக அது எத்தனை பெரியதாக இருந்திருக்கும்? அப்பொழுதெல்லாம் இந்தப் பெட்டிக்குள் அது கொண்டதா? இல்லை

    Enjoying the preview?
    Page 1 of 1