Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

W.P.A Soundrapandian
W.P.A Soundrapandian
W.P.A Soundrapandian
Ebook274 pages1 hour

W.P.A Soundrapandian

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.

டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.

குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.

திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124003763
W.P.A Soundrapandian

Read more from Kulashekar T

Related authors

Related to W.P.A Soundrapandian

Related ebooks

Reviews for W.P.A Soundrapandian

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    W.P.A Soundrapandian - Kulashekar T

    http://www.pustaka.co.in

    டபிள்யு. பி. ஏ. சௌந்திரபாண்டியன்

    வாழ்க்கை வரலாறு

    W.P.A Soundrapandian

    Life History

    Author:

    தி. குலசேகர்

    T. Kulashekar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kulashekar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    மூலவருக்கான நினைவு கூரல்

    1. சௌந்திரபாண்டியன் ஒரு விரிவான பார்வை

    2. நீதிக்கட்சியும் சௌந்திரபாண்டியனும்

    3. பெரியாரும் சௌந்திரபாண்டியனும்

    4. நீதிக்கட்சியின் முக்கிய சாதனை

    5. சுயமரியாதை இயக்கமும் சௌந்திரபாண்டியனும் சுயசிந்தனையின் நீட்சி

    6. முதல் சுயமரியாதை இயக்க மாநாடு தலைமை

    7. சௌந்திரபாண்டியன் பற்றி பெரியார்

    8. மாணவர் சங்க கருத்தரங்கில் ஆற்றிய உரை

    9. நிறைவுப் பகுதி

    10. சௌந்திரபாண்டியன் பற்றி பிற தலைவர்கள்

    11. நினைவிடங்கள்

    நூலாசிரியர் ஓர் அறிமுகம்

    கவிஞர் மீராவிற்கு இவர் மீதும், இவரது படைப்பின் மீதும் பிரத்யேக பாசம் உண்டு. அவரது 'அன்னம் பதிப்பகம்' தான் இவரது சிறுகதைத் தொகுப்பு நு£ல்களை பிரசுரித்திருக்கிறது. இவரின் ஒட்டுமொத்த சிறுகதைகளை தொகுத்து தி.குலசேகர் கதைகள் என்கிற பெயரில் 'சந்தியா பதிப்பகம்' வெளியிட்டிருக்கிறது. மேலும் உலகின் தலைசிறந்த திரைக்கதைகளின் நாவல் வடிவங்களாக இவரது ஐந்து குறுநாவல்களை வெளியிட்டிருக்கிறது. 'ஆழி பதிப்பகம்' இவரது ஐந்து காதல் குறுநாவல்களை வெளியிட்டிருக்கிறது. 'கண்மணி' இதழில் ஐந்து குறுநாவல் எழுதியிருக்கிறார். 'பிளாக்ஹோல் மீடியா பதிப்பகம்' இவரது 'சார்லி சாப்ளின் ஒரு தரிசனம்' என்கிற நூலை வெளியிட்டிருக்கிறது.

    இவரது 'ஒரு சிநேகிதிக்காக' நூலில் இடம் பெற்றிருக்கிற கதைகள் வங்கமொழியில் டாக்டர் முத்தையா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு, பிரேமாந்தர் இதழில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. 'வானம்பாடி' நூல் குறித்த கட்டுரையை 'எனக்குப் பிடித்த புத்தகம்' என்கிற தலைப்பில் 'தினமணிக்கதிரில்' பூர்ணம் விஸ்வநாதன் எழுதியிருக்கிறார். இவரது 'மனதில் ஒரு பிரார்த்தனை' சிறுகதை பேராசிரியர் சண்முகசுந்தரம் தொகுத்த 'நெல்லைச் சிறுகதைகள்' தொகுப்பு நூலில் இடம் பெற்றிருக்கிறது.

    இயக்குநர் சந்தோஷ் சிவனின் 'டெரரிஸ்ட்' 'மல்லி' ஆகிய திரைப் படைப்புகளுக்குத் தேர்ந்த எழுத்து வடிவம் கொடுத்து நூலாக்கியிருக்கிறார். தாமரை இதழில் இவர் எழுதிய திரை விமர்சனங்கள் நுட்பம் மிகுந்தவை.

    புதிய பார்வை நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றிருக்கிறார். ஆறுதல் பரிசு, மூன்றாம் பரிசு, முதல் பரிசு என தினமலர் நடத்திய டி.வி.ஆர் நினைவு சிறுகதைப் போட்டியில் தொடர்ந்து மூன்று முறை பரிசுகள் பெற்றிருக்கிறார். நேசங்களுடன்' சிறுகதைத் தொகுப்பு நூலுக்கு லில்லி தேவசிகாமணி நினைவு இலக்கிய சிறப்புப் பரிசு" பெற்றிருக்கிறார்.

    அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை ரசாயனம் படித்துக் கொண்டிருக்கையில், தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் பணி கிடைத்து சிறிதுகாலம் பணியாற்றினார். அங்கே பணியாற்றிய காலத்தில் உலகத் திரைப்படங்கள் மற்றும் இலக்கியப் பரிட்சயமேற்பட்டு, படித்தும், எழுதியும் கொண்டிருந்தவர், பின் திட்டமிட்டபடி திரைப்படத்துறைக்கு வந்து தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

    ஆவணப்படங்களில் பணியாற்றியிருக்கிறார். இணையதளத் தொலைக்காட்சிக்காக அற்புதமான பல மனிதர்களின் பேட்டியை ஆழமான படைப்புத் தரத்துடன் இயக்கியிருக்கிறார்.

    இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா, ரேவதி, வஸந்த் ஆகியோரிடம் துணை இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். ரா. பார்த்திபனிடம் இணைஇயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். திரை மொழியின் மீது தீராத காதல் கொண்டிருப்பவர். அந்த அடர்த்தியான காதல், புருவம் உயர்த்த வைக்கிற படைப்புகளை நிச்சயம் வழங்கச் செய்யும்.

    பாக்யராஜிடம் திரைக்கதையின் நுட்பத்தையும், வசந்த்திடம் அழகியல் மற்றும் எக்ஸ்பிரஷனை வெற்றிகரமாக நடிகர்களிடமிருந்து வரவழைக்கிற உத்தியையும், ராஜன் சர்மா டி.எஃப்.டி.யிடம் திரைமொழியின் இலக்கணத்தையும், ரேவதியிடம் மனது விட்டுப் பாராட்டும் பாங்கையும், ரா.பார்த்திபனிடம் அதீத சுறுசுறுப்பை, வெளிப்படைத்தன்மை மற்றும், மனியநேயத்தையும், இலக்கியத்தின் மூலம் வாழ்வின் சூட்சுமத்தையும் கற்றுக்கொண்டு இருப்பதாக கூறுகிறார்.

    குலசேகரின் படைப்புகளில் நிறைந்திருக்கும் அனுபவங்களின் அருகாமை, மானுட நேயம், சிநேக ராகம், நேசிப்பின் சொக்கம், அன்பு இழையோடல் இப்படி எங்கும் மென்மையை ஸ்பரிசிக்கிறேன். இவரது படைப்புகளை வாசிக்கும்போது அதனோடேயே ஒன்றி விடுவதால், நாமே அந்த பாத்திரங்களாகிப் போகிற உணர்வு. ததும்பும் நேசத்தில் மனது நிறைந்து கொள்கிறது. அதை எண்ணும்போது எழுகிற சிலிர்ப்புத் தாங்க முடியவில்லை.

    ஆச்சர்யக்குறியின் அர்த்தம்

    இந்த வரலாற்று நூலை எழுத வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு சௌந்திரபாண்டியன் அவர்கள் பற்றி அறியஅறிய கூடிக் கொண்டேயிருந்தது. அந்த ஆர்வத்திற்குள் ஆயிரம்ஆயிரம் ஆச்சர்யக்குறிகள், மிகுந்த மரியாதையோடும், சிலிர்ப்போடும் நீந்திக்கொண்டிருந்தன. பட்டிவீரன்பட்டி என்கிற கிராமத்திற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே ஒரு வரலாற்று அடையாளம் தந்திருப்பவர் சௌந்திரபாண்டியன் என்பதை அவை உணர்த்திய வண்ணம் இருந்தன. அவரை இன்றைய தலைமுறை ஆழமாக புரிந்து கொண்டிருக்கவில்லை என்று சொல்வதைவிட அதற்கான சூழல் இங்கே ஏற்படுத்தித் தரப்படவில்லை என்று சொல்லலாம். மறக்கடிக்கப்பட்ட மாமனிதர்களில் ஒருவராகவே இன்றும் இருக்கிறார் என்கிற எண்ணம் அவரைப் பற்றி நிறைய படிக்கப்படிக்க, கேள்விப்படப்பட அந்த எண்ணம் வலுத்துக் கொண்டே போனது. அதன் பிறகு தான் இந்த நூலை எழுதுவதெனத் தீர்மானித்தேன்.

    இந்த நூலில் சௌந்திரபாண்டியன் ஒடுக்கப்பட்ட, தான் வழி வந்த சமுதாயத்தின் உரிமைகளுக்காகப் பாடுபடுவதில் துவங்கி, படிப்படியாய் இந்த உலகெங்கும் நிறைந்து பரந்துபட்டுக் கிடக்கிற மனிதநேயம் என்கிற அச்சாணியில் இயங்கும் சுயமரியாதைச் சித்தாந்தத்தை, தன்மானவுணர்வை, சமூக நீதியை அனைத்து மக்களுக்கும் கொண்டு சென்று சேர்க்கிற செயல் வீரராய் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆக்ரோசத்துடன் செயல்பட்டிருந்திருக்கிறார் என்பது படிக்கப் படிக்கப் பிரமிப்பூட்டுபவையாக இருக்கும்.

    அவர் ஒரு சமுதாயத்திற்கு மட்டுமே ஆனவர் அல்ல. அவரின் தன்னலமற்ற, துணிச்சலான, தன்னம்பிக்கை, சுயமரியாதைச் சிந்தனைகள், செயல்பாடுகள் அத்தனையும் மனிதநேயம் என்கிற ஒற்றைச் சொல்லின் அடிப்படையில் பின்னப்பட்டவை. அவர் ஒரு பொதுச்சொத்து.

    ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருமித்த குரல். அந்தப் பார்வையோடே அவரைப் பற்றிய அனைத்து விசயங்களையும் அணுகினேன். உண்மையும் அப்படித்தான் இருந்தது. அதனைச் சரியாகக் கொண்டு வருவதன் மூலம் தன்னலமிக்க அந்த மாவீரரை, சமூகநீதிக் காவலரை தமிழ்ச் சமுதாயத்திற்கு முடிந்தவரை முழுமையாய் கொண்டுபோய்ச் சேர்க்கிற சமூகக் கடமையை ஆற்ற முடியும் என்று திண்ணமாக நம்பினேன். அதனாலேயே இந்த முயற்சி.

    மேலும் ஓர் எழுத்தாளனாக படைப்பாளனாக இருக்கிறபடியால் சுவாரஸ்யமான, எளிய நடையில் அவரின் வாழ்க்கை வரலாற்றினை, அவரின் ஊர், குடும்பம், தனிமனித வாழ்வு, சமூக வாழ்வு, அவரின் சமூகச் சித்தாந்தம், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத்தோடான அவரது செயல்பாடு, மிகச் சிறந்த அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களோடான நட்பு என இந்த நு£லில் ஓர் ஆரம்பமாய்ப் பல விசயங்கள் பதிவு செய்திருக்கிறேன். இந்த உண்மைச் செய்திகள் உங்களுக்கு மறக்கவே முடியாத யதார்த்தமான ஓர் உலகத் தரமான திரைப் படத்தினைப் பார்த்த நிறைவினை வழங்கும் என முழுமனதோடு நம்புகிறேன்.

    என் தந்தை டபிள்யு.பி.கே.எஸ். திருவரங்கமூர்த்தி சுயமரியாதை இயக்கத்தோடு ஈடுபாடு கொண்டவர். அம்மா கனகாம்புஜம். அவர்களோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட திருமண வைபவப் புகைப்படத்தில் கூட, அம்மாவைப் பொட்டு வைத்துக் கொள்ள அவர் இசையவில்லையாம். சௌந்திரபாண்டியன் வழி வந்தவர்கள் சுயமரியாதை இயக்கத்தோடு கொண்டிருந்த ஈடுபாட்டின் வெளிப்பாட்டுக்கு இது ஒரு சிறுதுளி மாதிரி. பொட்டு வைக்காமலேயே அம்மா அழகாகத் தான் இருக்கிறார் அந்த புகைப்படத்தில். அந்த நாளிலேயே நவநாகரிக யுவதியாய் அம்மாவை வாழச் செய்திருக்கிறார். மனிதநேயம் தவிர வேறு எந்தச் சடங்கு சம்பிரதாயங்களையும் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்பதைப் புரிய வைத்திருக்கிறார். சுயசிந்தனைப்படி அலசி ஆய்ந்து தத்தமது சுயமுடிவினைப் பின்பற்ற சுதந்திரமும் வழங்கியிருக்கிறார்.

    அவர் சௌந்திரபாண்டியன் பற்றி நிறையச் செய்திகள் சொல்லியிருக்கிறார். என் தந்தையாரின் பாட்டையா குற்றாலிங்கம், சௌந்திரபாண்டியனின் பாட்டையா அருணாசலம் இருவரும் உடன் பிறந்தவர்கள். சௌந்திரபாண்டியன் எனக்கு ஒன்று விட்ட பெரியப்பா. என் தந்தைக்குள் சுயமரியாதைச் சிந்தனை துளிர்த்த இடத்திற்கான மூலம் சௌந்திரபாண்டியனிலிருந்து தானா அல்லது அவர்கள் மூதாதையர்களில் யாரும் பகுத்தறிவுச் சிந்தனையோடு இருந்திருக்கிறார்களா என்பது மரபணுவியல் குறித்த ஆய்விற்குரியது.

    இதில் சௌந்திரபாண்டியன் என்கிற மனிதரை நடுநிலையோடும், நேர்மையோடும் பதிவு செய்திருக்கிறேன். சௌந்திரபாண்டியன் தன் அபாரமான செயல்பாடுகளினால் ஒரு புதிய சமுதாயத்தின் அடிநாதமாக வாழ்ந்திருக்கிறார். அவர் பற்றிய சேதி அறியும்பொருட்டு தேடத்தேட ஆச்சர்யம் கூடிக்கொண்டே போகிறது. அது தோண்டத்தோண்ட வற்றாத ஆச்சர்யச் சுரங்கம். அத்தனை அபாரமான சம்பவங்கள் சற்றும் எதிர்பார்த்திராத கோணத்தில் அவரின் வாழ்க்கை நெடுகிலும் விரவிக் கிடப்பதை உணர முடிந்ததில் உணர்வு கூச்செறிகிறது. அவரின் மனிதநேயப் பண்பை, அதை செயல்படுத்த அவர் பயன்படுத்திய சூட்சுமத்தை மனது ஆய்ந்து நோக்குகையில் இதயம் சிலிர்க்கிறது. சிலிர்க்கும். படித்துப் பாருங்கள்.

    நட்புடன்,

    தி. குலசேகர்

    மூலவருக்கான நினைவு கூரல்

    நீதிக் கட்சி ஆங்கிலேயர் காலத்திலேயே ஆட்சிப் பொறுப்பேற்று, சமூகநீதிக் கொள்கைகளை பிரதானப்படுத்தி, தமிழகத்தில் பல சமூக மாற்றங்களைக் கொண்டு வந்தார்கள். அப்போதைய சென்னை மாகாணம் என்பது தென்னிந்தியா முழுவதுமான ஒன்றுபட்ட ஒரு பகுதி யாக இருந்தபடியால், திராவிட மொழிகள் அனைத்துமே நீதிக் கட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்தன.

    நீதிக் கட்சி பெண்களுக்கான ஓட்டுரிமை, ஒடுக்கப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு எனப் பல சாதனைகளைச் செய்திருந்தபோதிலும், அதிலிருந்த சாதிய பேதம் மட்டும் ஓரளவிற்கு மேல் களைய முடியாதவொரு நிலை இருந்தது. அதற்குக் காரணம் மத்திய ஆசியாவிலிருந்து ஊடுருவிய ஆரியர்கள் இங்கே வந்ததும் புகுத்திய அமானுசிய சித்தாந்தங்கள். அதன் தலைமைப் பண்பாய் அவர்கள் சித்தரித்து நம்ப வைத்த மாயக் கடவுள். அதன் நேரடி தூதர்கள் தாங்களே என்று தந்திரமாய் நம்ப வைத்து பூர்வகுடியாம் திராவிட இன மக்களை அறியாமையில் மூழ்கடிக்கச் செய்தார்கள். அதன் கிளைகள் அவ்வப்போது வெட்டப்பட்டாலும் வேறோடிப் போயிருந்த அறியாமைப் புதைவை வெட்டி எடுத்தெறிவதென்பது சிரமமான காரியம் என்கிற அளவிற்கு சூழ்ச்சி வேர் பதிக்கப்பட்டிருந்ததே அதற்குக் காரணமான மூலவேர்.

    நீதிக் கட்சியின் தலைவராய் பெரியார் வந்ததும், அதைச் சுயமரியாதை இயக்கத்தோடு இணைத்துத் திராவிடர் கழகமாகப் பரிணாம வளர்ச்சி கொள்ளச் செய்து, சமூக மறுமலர்ச்சிக்காக, சமூக நீதிக்காக எந்தவிதப் பேதமுமின்றிப் பரந்துபட்ட மனிதநேயம் காக்கப் பாடுபடும் சமூக இயக்கமாக்கினார்.

    அவரும், அவர் வழி வந்தவர்களும் தமிழகத்திற்குச் செய்திருக்கும் மகத்தான சமூக நீதி பற்றி முழுமையாய் அறிந்து கொள்ள வேண்டுமானால், ஒரு முறையேனும் வடஇந்திய

    கிராமங்களுக்குள் பிரவேசித்து விட்டு வர வேண்டும். அங்கு இன்னமும் நடைமுறையில் இருக்கும் சாதிய துவேசம், அடக்குமுறையின் உச்சபட்ச வன்மத்தைக் கண்கூடாகப் பார்க்க நேரிடுகையில் தான், இங்கே தமிழகத்தில் நாம் எத்தனை அற்புதமான சுதந்திரத்தை அனுபவித்து வருகிறோம் என்பதை உணர முடியும்.

    இந்தச் சமத்துவ சமுதாயம் ஓரளவேனும் இங்கே சாத்தியப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு முழுமுதற் காரணம் பெரியார். சிந்தித்ததோடு, சாதித்தும் காட்டிய பகுத்தறிவுப் பகலவன் பெரியாரினால் தான் இங்கே ஓரளவேனும் சமூக நீதி, சமத்துவ நிலை, கல்வியில் ஒடுக்கப்பட்டிருந்தோரின் முன்னேற்றம், சுயசிந்தனை மூலம் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடச் செய்தல், சுயமரியாதை, அறிவியல்பார்வை, மனிதநேய நோக்கு போன்ற பண்புகள் கௌரவத்துடன் தப்பிப் பிழைத்திருக்கின்றன.

    பெரியாரின் பார்வை மிகமிக பரந்து பட்டது. உலகத்தையே ஒரு குடைக்குள் வைத்துப் பார்க்கும் உயரிய பார்வை அது. அதேசமயம் அந்தப் பார்வையைச் சுயமாய் சிந்தித்துப் புரிந்து கொண்டவர் களாலேயே அந்தக் குடைக்குள் அடைக்கலம் பெற இயலும்.

    அவரவர் விருப்பத்திற்கேற்ப எத்தனை மொழியும் கற்று மொழியறிவை விருத்தி செய்யலாம். அதே சமயம் தாய் மொழியை எந்தச் சூழ்நிலையிலும், எத்தனை ஞாபக மறதி நோய்க்கு ஆட்பட நேர்ந்தாலும்கூட மறந்து விடாமல் உயிராய் உணர்வில் பற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார். காரணம் எளிமையானது. அனைவரும் அவரவர் தாய்மொழியில் தான் சிந்திக்கிறோம். ஆகவே நமது எண்ணங்களை முழுமையாய் வெளிப்படுத்த தாய்மொழி மீதான ஆளுமை அத்தியாவசியம். தாய்மொழி என்பது தாய்,தந்தை நமக்கான அடையாளம்போல ஓர் இனத்தின் அடையாளம் அது.

    அடக்குமுறைகளற்ற சுதந்திரமான வாழ்க்கை, உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசாத தன்மை, மனிதநேயம், சமத்துவம், உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமென்கிற வேட்கை, சுயசிந்தனை, தன்மானம், வாய்மை, எளிமை, கல்வி, காதல் வாழ்வு, அறிவியல் வழிவந்த பகுத்தறிவு போற்றுதல், பழையன விலக புதிய சிந்தனைகளை வரவேற்றல், சாரம் மறந்து சக்கையாகப் பின்பற்றப்படும் சடங்கு சம்பிராதயங்களைப் புறங்கையால் அப்புறப்படுத்துதல் என்று உயிரிலிருந்து முழங்கிய முழக்கம் மற்றும் பிரபஞ்ச அன்பு இவற்றுடன் கனிவும், ஈரமும் விட்டு மசியப் பிசைந்து சீராக உருவாக்கினால் மனதில் தெரிகிற அடையாளம் தான் பெரியார்.

    சிலரிடம் ஒரு கருத்து நிலவி வருகிறது. பெரியார் நாத்திகர் என்று. யார் சொன்னது? மிகச் சிறந்த முதல் ஆத்திகர் என்றால் அது பெரியார்தான். அவருக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் கடவுள் என்பது யார் என்பதில்தான் அவர் மாறுபடுகிறார். மனிதநேயமே அவர் அறிந்த கடவுள்.

    தந்திரமாய் தங்களின் ஆளுமையை நிறுவத் திட்டம் தீட்டிய அயலில் இருந்து வந்தவர்கள், பூர்வகுடிகளின் இயற்கையை வழிபட்டுக் கொண்டிருந்த நடைமுறையில் நஞ்சு து£வித் தங்களை உயர்ந்தவர்களாய் காட்டிக் கொள்ளும் பொருட்டு, அவர்கள் உருவாக்கித் தந்த விசயம் தான் கடவுள் சித்தாந்தம்.

    அவன் மாயத்தன்மை கொண்டவன். மந்திரத்தன்மை கொண்டவன். மேலேயிருந்து எல்லோரையும் கண்கொத்திப் பாம்பாய் கவனித்துக் கொண்டிருக்கிறான். நாங்கள் சொல்கிற சித்தாந்தப்படி நடக்கவில்லை என்றால் உடனே ஏதாவது ஒரு வழியில் தண்டித்து விடுவான் என்று கற்பிதம் செய்தார்கள். இயற்கைச் சீற்றம் பற்றியும் மற்றும் இறப்பு என்பது செல்களின் தேய்வுப்புள்ளி என்கிற அறிவியல் அறியாத மக்களின் அச்சத்தை மூலதனமாக்கி, அமானுசியம், மாந்திரீகம், மனிதபேதங்கள், போன்றவற்றைக் கதை வடிவில் சொல்லி பதிய வைத்தார்கள்.

    அவர்கள் உருவாக்கிய கதைகளில் மறைமுகமாய் ஆரியர்களை தேவலோகத்தவர்கள் என்றும், திராவிடர்களை அசுரர்கள் என்றும், திராவிடர்களை வில்லாதி வில்லர்களாகவும், ஆரியர்களை கதாநாயகர்களாகவும், சீலர்களாகவும் சித்தரித்து அந்த மாயையைத் திரும்பத்திரும்ப பிரசங்கம் செய்து நிஜமோ எனத் தோன்றும்படிச் செய்து எளிய இதயங்களில் அந்த நம்பிக்கையைப் பதிய வைத்தார்கள்.

    அவர்கள் கற்பித்த கடவுள், மனிதர்களில் பேதம் உண்டு என்கிறது. ஏன் என்று யாரேனும்

    அறிவுப்பூர்வமாய் கேள்வி கேட்டால் தீர்த்து விடுவேன் என்கிறது. சுயமரியாதையோ, சுயசிந்தனையோ துளியும் இருக்கக் கூடாது என்கிறது. இறந்த பிறகு மறுபிறவி என்று கற்பனைக் கதை சொல்கிறது. அறிவு இயலின் கூற்றுப்படி இல்லாத ஒன்றை எப்படித் தேடிக் கண்டுபிடிக்க முடியும்?

    விஞ்ஞானம் ஆன்மா என்று ஒன்று தனியாக இயங்க முடியாது. மனது என்பது மூளையின் இயக்கம் இருக்கிறவரை

    Enjoying the preview?
    Page 1 of 1