Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maanikka Manimaalai
Maanikka Manimaalai
Maanikka Manimaalai
Ebook346 pages1 hour

Maanikka Manimaalai

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

இதிலுள்ள கட்டுரைகளில் மாணிக்கவாசகர், மூவர் முதலிகள், ஔவையார், சேக்கிழார், கம்பர், பாரதியார் போன்றோரும் இடம்பெற்று, ஆன்மிக உலகுக்கு ஒளி பாய்ச்சியதுடன் இக்கட்டுரைகளுக்கும் ஒளிகூட்டி அழகு சேர்த்துள்ளனர். மேலும், தமிழ்மொழி, அகம் – புறம் பற்றிய செவ்வியல் இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், தினமணி-தமிழ்மணி நாளிதழ், இணையதளம் ஆகியவை இடம்பெற்றுள்ளதால் இது ஒரு கதம்ப மாலைபோல, அதுவும் மாணிக்கப் பரல்கள் கோக்கப்பட்ட ஒளிவீசும் கதம்ப மாலைபோல அமைந்துவிட்டதால் இத்தொகுப்பே மாணிக்க மணிமாலை

Languageதமிழ்
Release dateJul 30, 2022
ISBN6580156008622
Maanikka Manimaalai

Read more from Edaimaruthour Ki Manjula

Related to Maanikka Manimaalai

Related ebooks

Reviews for Maanikka Manimaalai

Rating: 2 out of 5 stars
2/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 2 out of 5 stars
    2/5
    Again, some weird spelling in my mother tongue.
    I think the Thamizh books here cannot be recommended to anyone !

Book preview

Maanikka Manimaalai - Edaimaruthour Ki Manjula

C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

https://www.pustaka.co.in

மாணிக்க மணிமாலை

(பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகள்)

Maanikka Manimaalai

(Pannaattu Karutharanga Katturaigal)

Author:

இடைமருதூர் கி. மஞ்சுளா

Edaimaruthour Ki Manjula

For more books

https://www.pustaka.co.in/home/author/edaimaruthour-ki-manjula

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

முன்னுரை

1. காதல் மகளிர் எழுவர்

2. இதழியல் துறையில் கம்பர்

3. ‘மகாகவி' பாரதியின் மொழிப்பற்று

4. மூவர் முதலிகளின் பெரும்பணி

5. கம்ப காவியத்தில் தெய்வீக ஞானம்!

6. கருதாக் கருத்துடைக் கடவுள்!

7. பெண்ணின் பெருமைக்கு ஔவையே இலக்கணம்

8. சுதந்திரப் போராட்டம் மற்றும் இதழியல் வரலாற்றில்

9. சேக்கிழார் போற்றிய வல்வினையாளர்கள்

10. கோலின் தன்மையும் வேலின் வெம்மையும்!

11. பண்சுமந்த தமிழால் முக்தி இன்பமும் வீடுபேறும்!

12. திருச்சிற்றம்பலக்கோவையாரில்

13. திருக்கோவையார்: இயற்கைப் புணர்ச்சியில்

14. மணிவாசகரின் அகத்திணை மரபுகளும்

15. மணிவாசகரின் அகமரபு வழி

16. திருக்கோவையார்:

17. சமூக வலைதள ஆங்கிலச் சொற்களைத்

முன்னுரை

என்னை அப்பா அஞ்சல்! என்பவர் இன்றி நின்று எய்த்து அலைந்தேன்

மின்னை ஒப்பாய் விட்டிடுதி கண்டாய் உவமிக்கின் மெய்யே!

உன்னை ஒப்பாய் மன்னும் உத்தரக்கோச மங்கைக்கு அரசே!

அன்னை ஒப்பாய்! எனக்கு அத்தன் ஒப்பாய்! என் அரும்பொருளே!

இந்நூலில் இடம்பெற்றுள்ள ஆய்வுக் கட்டுரைகளுள் பெரும்பாலானவை முனைவர் சு.சதாசிவம் அவர்களால் வெளியானவை என்பதை முதற்கண் கூறி, இத்தகைய வாய்ப்பை எனக்கு நல்கிய அவருக்கு என் முதல் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதிலுள்ள கட்டுரைகளில் மாணிக்கவாசகர், மூவர் முதலிகள், ஔவையார், சேக்கிழார், கம்பர், பாரதியார் போன்றோரும் இடம்பெற்று, ஆன்மிக உலகுக்கு ஒளி பாய்ச்சியதுடன் இக்கட்டுரைகளுக்கும் ஒளிகூட்டி அழகு சேர்த்துள்ளனர். மேலும், தமிழ்மொழி, அகம் – புறம் பற்றிய செவ்வியல் இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், தினமணி-தமிழ்மணி நாளிதழ், இணையதளம் ஆகியவை இடம்பெற்றுள்ளதால் இது ஒரு கதம்ப மாலைபோல, அதுவும் மாணிக்கப் பரல்கள் கோக்கப்பட்ட ஒளிவீசும் கதம்ப மாலைபோல அமைந்துவிட்டதால் இத்தொகுப்பிற்கு மாணிக்க மணிமாலை என்பதே பொருத்தமாக இருக்கும் என எண்ணினேன். அதுமட்டுமல்ல, இதிலுள்ள கட்டுரைகள் பலவும் மணிவாசகரின் மதுரத் தமிழின் பெருமை பேச எழுந்தவை என்பதாலும்தான்.

மணிவாசகப் பெருந்தகை என் மானசீக குருநாதர். திருவாசகம் என் வழிபடு நூல். மாணிக்கவாசகரே இம்மாணிக்க மணிமாலைக்குச் சொந்தக்காரர். இந்நூலில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் மாணிக்கவாசகரின் மாணிக்கத் தமிழ்தான்.

இந்நூலை என் மானசீக குருநாதரான மணிவாசப் பெருமான் திருவடிகளுக்கும், என் உபாசனா மூத்தியான நடராசப் பெருமானின் திருவடிகளுக்கும் இன்ப அன்போடு அடைகலப் படுத்துகிறேன்.

பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கில் எனக்கு வாய்ப்பளித்த அனைத்து நிறுவனங்களுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும், தமிழ்ச் சங்கங்களுக்கும், கம்பன், பாரதி போன்ற கழகங்களுக்கும், இலக்கிய மாத இதழ்கள் அனைத்திற்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும்.

"வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் …

நான் யார்? என் உள்ளம் யார்?

ஞானங்கள் யார்? என்னை யாரறிவார்?

இன்ப அன்புடன்

இடைமருதூர் கி.மஞ்சுளா

1. காதல் மகளிர் எழுவர்

(ஆதி உலா – ஞான உலா)

முன்னுரை

கி.பி.600 முதல் கி.பி. 1200 வரையுள்ள காலம் சைவ சமயத்தின் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. இக்காலத்தை (கி.பி.600-850) பல்லவர்கள் ஆண்டு வந்தனர். இவர்களது ஆட்சிக் காலத்தில்தான் சைவம், வைணவம் என்ற இருபெரும் சமயங்கள் தத்தம் சமயங்களை வளர்த்தோடல்லாமல் தமிழையும் தழைத் தோங்கச் செய்தன. இவற்றுள் சைவ சமயச் சான்றோர்கள் படைத்தப் பக்திப் பனுவல்கள் ஏராளம். இதனால் பக்தி இலக்கியங்களும், தமிழ் மொழியும் ஒருசேர தழைத்தோங்கின.

சைவர்களின் வழிபாட்டு நூலான-தமிழ் மறையான பன்னிரு திருமுறை என்ற நூலில், பதினோராம் திருமுறையில் நாற்பது நூல்கள் உள்ளன. இவற்றை பன்னிரண்டு அருளாளர்கள் அருளிச் செய்துள்ளனர். இதை ஒரு தொகை நூல் என்றும் கூறுவர். இந்த நாற்பது நூல்களுள் சுந்தரரின் தோழரான சேரமான் பெருமாள் நாயனார் என்ற அருளாளர் அருளிச் செய்த பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, திருக்கயிலாய ஞான உலா ஆகிய மூன்று நூல்களும் அடங்கும்.

96 வகை சிற்றிலக்கியங்களுள் உலா இலக்கியமும் ஒன்றும். ஆதியுலா என்றும், ஞான உலா என்றும் போற்றப்படும் இவ்வுலா நூல் பற்றிய சிறப்பை விளக்குவதே இவ்வாய்வுக் கட்டுரையின் தலையாய நோக்கம்.

சைவ சமயத்தின் தொன்மை:

வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட தொன்மையை உடையது. சைவ சமயம். கிறிஸ்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிவ வழிபாடு இருந் திருக்கிறது என்று புதைபொருள் ஆய்வறிஞர் சர்ஜான் மார்ஷல் குறிப் பிட்டுள்ளார். சைவம் வரலாற்றுக்கு முற்பட்ட சமயம். அது ஆரியர்கள் இந்தியாவிற்குள் வருவதற்கு முற்பட்ட காலத்திலிருந்தே வழக்கில் இருந்து வந்தி ருக்கிறது என்று ஆங்கில அறிஞர் ஜி.யு.போப் பாதிரியார் கூறியுள்ளார். இதிலிருந்து சைவத்தின் தொன்மையை அறிய முடிகிறது. சிந்துவெளி நாகரிகக் காலத்திற்கு முன்பிருந்தே சிவ வழிபாடு இருந்துள்ளதை வரலாற்று ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.

சைவம் என்பது சிவம் என்னும் செந்தமிழ்ச் சொல்லின் அடியாகப் பிறந்தது. சிவனோடு தொடர்பு உடையது சைவம். சமையம் என்ற சொல், சமயம் என்று மருவியது. அச்சொல் நெறி (System) என்னும் பொருளைத் தருவது. எனவே சைவ சமயம் என்பது செம்மை+நெறி=நெந்நெறி என்ற பொருளைத் தருவதாகும்.

சமயமும் மதமும்:

சமயம் வேறு; மதம் வேறு. மதம் என்னும் சொல், கொள்கை என்னும் பொருளில் வழங்கி வருகிறது. மணிமேகலை என்ற காப்பியத்தில் சமயம் என்ற சொல் வருகிறது. மதம் என்ற சொல்லாட்சி அக்காப்பியத்தில் இல்லை. தொல்காப்பியம் என்னும் பழந்தமிழ் இலக்கண நூலில் மதம், சமயம் என்ற இரு சொற்களுமே இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"சமயவாதிகள் தத்தம் மதங்களே

அமைவ தாக அரற்றி மலைந்தனர்" (4.போற்றி 52,53)

என்று திருவாசகம், போற்றித் திருவகவலில் இரு சொற்களுமே இடம் பெற்றுள்ளன. மணிவாசகரின் திருவாக்கிலிருந்து இச்சொற்கள் வெளிப்பட்ட தனால், மதம் என்ற சொல் கொள்கையை மட்டுமே குறிக்கும் பொதுச்சொல் என்பதும், சமயம் என்ற சொல் கொள்கையை மட்டுமின்றி அதற்கும் மேலான ஒரு நெறிப்பாட்டைக் காட்டும் சிறப்பை உடையது என்பதும் புலப்படும். எனவே சைவ சமயம் ஒரு நெறிப்பட்ட, நெறிப்பாடுடைய சமயம் என்பது நன்று விளங்கும்.

சயமும் தமிழும்:

பக்தி என்பது மனிதனை சாந்தப்படுத்துவது; சமநிலைப்படுத்துவது; மனத்தில் அமைதியை ஏற்படுத்துவது; அறியாமை இருளை அகற்றி ஞான விளக்கை ஏற்றுவது. தன்னை உணரச் செய்வது. சங்ககால மக்கள் இயற்கையை வழிபட்டு, இறையச்சம் கலந்த பக்தி செய்து வந்தனர். பிற்காலத்தில் சமயங்களை நிறுவி அதனதன் வழித்தோன்றல்களாகிய தெய்வங்கள் மீது பக்தி செலுத்தினர். ஆன்மாக்கள் பழவினைகள் ஒழிய மல மாசு நீங்கப்பெற்று, முக்திபெற உதவுவதே பக்தி நெறி. வெறும் உணர்ச்சி அல்லது நெஞ்சக் கனிவு என்பதொன்றே பக்தி யாகிவிடாது. உயிரைப் பற்றியிருக்கும் வினைகள் விட்டு நீங்குவதற்கு வேண்டிய சிவத்தொண்டும், மலத்தைச் சுட்டெரிக்கவல்ல சிவஞானமும் இரண்டு இறக் கைகளாகக்கொண்டு ஆன்மாவை இறைவனை நோக்கி மேலேற்றுவதே பக்தி. 6ஆம் நூற்றாண்டு சமயமும், சமய எழுச்சியும், சமய இலக்கியங்களும் தோன்றி, சமயத்தையும், தமிழையும் ஒருசேர வளர்த்தன. நாயன்மார்களும், ஆழ்வார்களும் பக்திப் பாடல்களைப் பண்ணோடு பாடி, சமயமும் தமிழும் வளர்த்ததோடு நின்றுவிடாமல் இசைக்கலையும் நடனக்கலையும் வளர துணை செய்தனர். பக்தி இயக்கப் பெரியோர்களால் தமிழ் இலக்கியமே புத்துயிர் பெற்றுப் பொலியத்த தொடங்கியது. பக்தி இலக்கியங்கள் இல்லாமல் சங்க இலக்கியங்களுக்குப் பெருமை இல்லை என்று கூறும் அளவிற்கு பக்தி இலக்கியங்கள் தமிழையும் தமிழர்தம் பண்பாட்டையும் தழைத்தோங்கச் செய்தன.

முதல் உலா – ஆதி உலா:

யாப்பு எனும் சொல் தனிச் செய்யுளையும், தொடர்நிலைச் செய்யுளையும் குறிக்கும். பிற்காலத்தில் எழுந்த சிற்றிலக்கியம், தொல்காப்பியம் கூறும் விருந்து என்பதனுள் அடங்கும். இதை வடமொழியில் பிரபந்தம் (சிற்றிலக்கியம்) என்பர். பெருங்காப்பியத்தில் உலா, தூது, குறம் முதலியன அதன் உறுப்புகளாக இடம்பெறும் இவ்வுறுப்புகளின் வளர்ச்சியாகவே சிற்றிலக்கியங்கள் எழுந்துள்ளன. இவை கி.பி.8ஆம் நூற்றாண்டு முதல் வளறத் தொடங்கின எனத் தெரிகிறது. 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று உலா. உலா, தூது முதலியன தொடர்நிலைச் செய்யுள்களாக அமைந்த சிற்றிலக்கியங்கள். ஆதி உலா என்றும், ஞான உலா என்றும் கருதப்படுவது பதினோராம் திருமுறை ஆசிரியர்களுள் ஒருவரான சேரமான் பெருமாள் நாயனார் அருளிச்செய்த திருக்கயிலாத ஞான உலா. இவ் வுலாதான் பிற்காலத்தில் தோன்றிய பிற உலா இலக்கியங்களும் முன் னோடியாகும்.இது தமிழில் தோன்றிய முதல் உலா என்ற சிறப்பையும் பெறுகிறது. இதை ஆதி உலா, உலாப்புறம் என்றும் கூறுவர். 394 அடிகள் கொண்டு அகப் பொருள்பட கலிவெண்பாவால் பாடப்பட்டுள்ளது.

ஆதி உலா ஆசிரியரும் – அரங்கேறிய இடமும்:

சேரநாட்டின் தலைநகரான கொடுங்கலூரில், அழற்குல மன்னர் மரபில் அவசரித்தவர் சேரமான்பெருமாள் நாயனார். இவரது இயற்பெயர் பெருமாக் கோதையார். இவர் இளம் பருவத்திலிருந்தே சிவத்தைக் காதலித்து கொடுங்கலூர் அருகிலுள்ள திருவஞ்சைக்களம் (கேரளம்) புகுந்து பரமனை வழிபட்டவர். இவரை கழறிற்றிவார் நாயனார் என்கிறது பெரியபுராணம்.

இவர் திருநாவலூரில் தோன்றி தமிழும், சைவமும் வளர்த்த தம்பிரான் தோழராகிய சுந்தரரின் சமகாலத்தவர். தோழர், சுந்தரரின் சமகாலத்தவர் என்பதால் இவரது காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டு. சேரன் செங்கோற்பொறையன் துறவு பூண்டபின் இறைவன் இசைவு பெற்று அரசப் பதவியை ஏற்றவர். தம் எதிரே வந்த சலவைத் தொழிலாளியின் வெண்மைக் கோலம் (திருநீறு பூசிய மேனி) கண்டு அடிச்சேரன் என்று சொல்லி வணங்கியவர். இதன் பிறகு அந்த அரசப் பதவியையும் துறந்து, இறையின்பத்தில் திளைத்தவர். திருநீறு அணிந்தவரிடம் பேரன்பு கொண்டவர். நாளும் தாம் புரிந்த சிவ வழிபாட்டின் நிறைவில் ஆடல்வல்லானின் சிலம்பொலி கேட்டும் பேறும் பெற்றவர். இரையருளால் இந்த உலகத்து வாழ்வோ, அரச அதிகார இன்பமோ நிலையானதல்ல என்ற தெளிவு பெற்றவர்.

சுந்தரரின் தோழரானதன் பயனாய், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு முன்பாக, குதிரையின் காதில் ஐந்தெழுத்து மந்திரம் ஓதிய உடனே திருக்கயிலாயத்தை அடைந்தார். அங்கு சிவபெருமான் முன்னிலையில், திருவுலா ஒன்றைப் பாடி யுள்ளேன். அதைத் தாங்கள் செவிசாய்த்து அருள வேண்டும் என்று வேண்ட இறைவனார் கூறு என்று மொழிந்ததும், சிவலோகநாதன் முன்பு ஞான உலாவை அரங்கேற்ற, அதை இறைவன் செவிமடுத்தருளினான். அன்று திருக்கயிலையில் இதை செவிமடுத்த மாசாத்தா என்பவர், திருப்பிடவூர் என்ற தலத்தில் அந்த ஞான உலாவை வெளிப்படுத்தினார் என்பது சேரமான்பெருமாள் நாயனார் பற்றிய புராண, வரலாற்றுச் செய்தி.

உலா இலக்கணம்:

நாட்டை ஆளும் மன்னனோ, காதல் தலைவனோ வீதியில் உலா வந்தால் அவன் அழகைக் கண்டு பருவ மகளிர் எழுவரும் காதல் கொள்வதாக அமைத்துப் பாடுவது உலா இலக்கியம். இவ்வாறு காதல் கொள்ளுதல் பரத்தையர்க்கன்றி குலமகளிர்க்குக் கூறப்படாது என்று உரையாசிரியர் நச்சினார்க்கினர் விளக்கியுள்ளார். பெருங்கதை என்ற காப்பியமும்,

"உத்தம மகளிர் ஒழிய மற்றைக்

கன்னியர் எல்லாம் காமம் துறந்த

கணையுளம் கழியக் கவினழிவு"

எய்தி வருந்தியதாகக் கூறும். எனவே, தலைவன் உலா வருவது கண்டு காதல் கொள்ளும் மகளிர் குலமகளிர் அல்லர் என்பது தெளிவாகிறது.இவ்விலக்கியத்தில் பாட்டுடைத் தலைவனின் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடைசூழ தன் ஊர்தியில் (காளை வாகனம்) ஏறி உலா வருதல் ஆகியவற்றை உலாவின் முன்னிலை எனவும், ஏழு பருவ மகளிர் கூடித் தனித்தனியாகக் கூறுவன உலாவின் பின்னிலை எனவும் கூறுவர். உடலுக்கு நாயகனான் காதல் தலைவன் உலா வந்தாலே அவனது அழகைக் கண்டு மயங்கி, காதல் கொள்ளும் மகளிர் உள்ளபோது, உயிர்க்கு நாயகனாம் ஆத்மநாயகன், சிவபெருமான் உலா வந்தால் கேட்டகவும் வேண்டுமோ? ஆம்! இவ்வுலாவின் பாட்டுடைத் தலைவன் திருக்கயிலாயநாதன் சிவபெருமான். ஆதி உலா என்று கருதப்படும் இவ்விலக் கியத்தில் உலாவின் முழு இலக்கணமும் அமைந்துள்ளதைக் காணலாம்.

பருவ மகளிர் எழுவர்:

இவ்வுலாவின் தலைவனான சிவபெருமான், உருத்திரக் கன்னியர் வீதி வழியாக வரும்போது பேதை முதல் பேரிளம் பெண் ஈராக ஏழு பருவ மகளிர் அவன் மீது காதல் கொள்கின்றனர்.இவ்வெழுவகைப் பருவ மகளிரது பருவத்திற்குத் தகுந் தாற்போல அவர்களது உடல் மற்றும் மன மாறுபாடுகளை, காதலின் தவிப்பு களைக் கண்முன் படம் பிடித்துக் காட்டுகிறார் சேரமான்பெருமாள் நாயனார். அக இலக்கியத்திற்கே மகுடம் சூட்டிய்து போல் அமைந்துள்ளது இச்சிற்றிலக்கியம்.

பேதை (5 முதல் 7 வயது வரை):

காதல் என்பது இன்னதென்று அறியாதவள். மண் பாத்திரத்தில் வெண்மையான மணலால் சிறு சோறு சமைத்து விளையாடும் பருவம். இடையாலும், உடையாலும், நடையாலும், முலையாலும், நோக்காலும், வாக்காலும், குழலாலும், தோளாலும் ஆடவர்க்குக் காம நோயை விளைவிக்காத இளம்பெண் ஒருத்தி, பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறாள்.

அப்போது சிறுமியின் தாயும், தோழியும் அங்கு வருகின்றனர். பொம்மையைப் பார்த்துத் தோழி, இந்தக் குழந்தைக்குத் தாய் இவள் என்றால், தந்தை யார்? என்று கேட்க, அதற்கு அச்சிறுமியின் தாய், ஈசன்தான், அழலாடும் பெருமான் தான் என்று கூற, இக்குரலைக் கேட்டு தலை நிமிர்கிறாள் அப்பேசைப் பெண்.

அப்போது இவளது வீதி வழியாக உலா வந்த விமலன் விடைமேல் தோன்றினான் அப்பதுமைக்குத் தாய் இவள்ச தந்தை சிவபிரான் என்ற தன் தாயின் மொழியில் அப்பரமனுக்கு உரிய தேவி தான் என்ற பொருள் அமைந்திருத்தலை அறிய இயலாது அவள், உலா பொருட்டு வந்த பரமனைக் கண்டதும், காம நூல்களில் சிறிது நாள் தான் பழகினவள் போல நிமலனை வியந்து நோக்கியவாறே நின்றாள். அவளது உள்ளத்தில் ஒருவரை மாற்றம் நிகழ்கிறது. இறைவன் அன்புக்காக அவளும் ஏங்கினாள்.

"காய்சினமால் விடைமேல் கண்ணுற்றுத் – தாய் சொன்ன

இக்கணக்கு நோக்காள் இவள் போல்வாள் காமன் நூல்

நற்கணக்கின் மேற்சிறிதே நாட்செய்வாள்" (கண்ணி-83-85)

பேதைப் பருவப் பெண்கள் உலகம் அறியாத எத்துணை இளம் பருவத்தினர் என் பதை திருப்பூவணநாதர் உலா விரிவாக விளக்குகிறது.

பெதும்பை (7 வயது முதல் 11 வயது வரை):

இப்பருவம் மேனியில் புதியதொரு பேரொளியைத் தோற்றுவிப்பதால், பேரொளி சேர் பெதும்மபைப் பிராயத்தாள் என்கிறார். காம சாத்திரத்தில் சிறிது நாள் பழகி யுள்ளதால், மணலில் அமர்ந்து காமன் உருவம் தோன்ற சித்திரம் வரைகிறாள். அப்போது பெருமான் அவளுக்கு அண்மையில் செல்கிறான். சிறிது தலை நிமிர்ந்து நோக்குகிறாள். உடனே ஒருதலைக் காதல் மிக, நலனும், நாணமும், அறிவும் நிறைவுடைமையும், வழிவிலக தன்னை மறந்து நிற்கிறாள்.

"… ….. நலந்தோற்று நாண்தோற்று

நின்றறிவு தோற்று நிறைதோற்று நன்றாகக்

கைவண்டும் கண்வண்டும் ஓடக் கலையோட

நெய்விண்ட பூங்குழலா ணின்றொழிந்தாள்" (கண்ணி-98-99)

மங்கை (12-13 வயது வரை):

இப்பருவத்தினள் உலா வரும் தலைவனை நேரே கண்டதும் மனம் மயங்குவாள். அவனது அழகையும் நோக்கி, தன் அழகையும் நோக்குவாள். அவ்வண்ணலுக்கும், தனக்கும் பொருத்தம் உள்ளதோ என்று ஆராய்வாள் போல அவன் அணிந்துரை மாலையை நோக்குவாள். உள்ளம் உருகுகிறது. உருகிய உள்ளத்திலிருந்து நீங்குதல் இல்லாத காதல் என்னும் வெள்ளம் பெருகுகிறது. அவ்வெள்ளத்தில் அழுந்திவிட்டதால், அவன் தொடர்பின்றி இனி உய்ய வழியில்லை என்பதை அவள் விடும் வெப்பமான மூச்சுக்காற்று வெளிப்படுத்துகிறது. இவளும் பரமனைக் கண்ட மாத்திரத்தில் தன்வயமிழந்து மயங்குவாள்.

"… …. மம்மர் மனத்தளாய் – சூழொளியான்

தார்நோக்கும் தன்தாரும் நோக்கும்; அவனுடைய

ஏர்நோக்கும் தன்ன தெழில் நோக்கும்; பேரருளான்

தோள் நோக்கும் தன்தோளும் நோக்கும்; அவர்மார்பின்

நீள்நோக்கம் வைத்து நெடிதுயிர்த்து – நாண் நோக்காது

உள்ளம் உருக ஒழியாத வேட்கையாம்

வெள்ளத்திடை அழுந்தி வெய்துயிர்த்தாள்" (கண்ணி-108-110)

மடந்தை (14 முதல் 19 வயது வரை):

விடைமேல் வரும் விமலனை நோக்கி, நோக்கிய உடனே, தோழியர் கூட்டத்தில் இருக்கும் அவளது நடை தளர்ந்தன; உடல் நடுங்கியது; கண்கள் நீரை வார்த்தன. நான் இனி தலைவன் இணக்கமின்றி உய்யேன் என, தான் உற்ற காதல் நோயைத் தோழியரிடம் வாய்விட்டுச் சொல்லிச் சொல்லிப் புலம்புவாள். இப்பருவத்தை தீந்தமிழின் தெய்வ வடிவினளான மடந்தைப் பருவம் எனச் சான்றோர் குறிப்பர்.

"சொல்லலுறுஞ் சரணம் கம்பிக்குந் தன்னுறு நோய்

சொல்லலுறுஞ் சொல்லி உடைசெறிக்கும் – நல்லாகம்

காணலுறுங் கண்கள் நீர்மல்கும் காண்பார்முன்

நாணலுறும் நெஞ்சம் ஒட்டாது – பூணாகம்

புல்லலுறும் அண்ணல்கை வாரானென் றிவ்வகையே

அல்லலுறும் அழுந்தும் ஆழ்துயரான் – மெல்லியலாள்

தன்னுருவம் பூங்கொன்றைத் தார்கொள்ளத் தான் கொன்றைப்

பொன்னுருவம் கொண்டு புலம்ப லுற்றாள்" (கண்ணி – 129-132)

அரிவை (20 முதல் 24 வயது வரை):

நோக்கியவுடன் காதல் கைம்மிகுந்ததாகலின், பக்கத்தில் தோழியர் உளரா, இலரா என்பதையும் ஆராயமாட்டாள். அவனைக் கொள்ளேனாயின், இப்பெண்மைப் பிறப்பால் பயன் இல்லையே என்று பித்தம் கொண்டவள் போல் பிதற்றுவாள். கை குவித்து அண்ணலைக் கும்பிடுவதால் அவளது கை வளையல்கள் கழல வில்லை என்றாலும், மேகலை அவிழ்ந்து தன் கோலம் கெட்டதை அறியாத வளாய், நலமனைத்தும் இழந்தவளாய் காதலால் வாடித்

Enjoying the preview?
Page 1 of 1