Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aayargal
Aayargal
Aayargal
Ebook263 pages1 hour

Aayargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனிதர்கள் வேட்டையாடி உணவு சேகரிக்கும் நிலையிலிருந்து, கால்நடைகளைப் பழக்கப்படுத்திப் பயன்பெறும் நிலைக்கு உயர்ந்தனர். கால்நடைகளுக்காக மேய்ச்சல் வெளிகளைத் தேடி இடம் பெயர்ந்த நிலையில், கால்நடைகளைக் கொண்டு, வேளாண்மை ஒருபுறம் வளர்ந்தது. தொடர்ந்து கால்நடைகளை மையமிட்டே தம்முடைய வாழ்வியலை அமைத்துக்கொண்ட மேய்ச்சல் நில மக்கள் குழுக்கள், ஆயர் என்று அழைக்கப்பெற்றனர். ஆயர்கள் என்பது மேய்ச்சல் நில மக்களின் பொதுப்பெயராகும். இவர்கள் வாழ்ந்த மேய்ச்சல்வெளி, காடு முதலானவை முல்லை நிலம் எனப்பட்டது. மனித நாகரிகம் முல்லை நிலத்தில்தான் பல்கிப்பெருகியது. ஆயர்களின் வளர்ச்சியை வாசித்து அறியலாமா...

Languageதமிழ்
Release dateFeb 26, 2022
ISBN6580152308177
Aayargal

Related to Aayargal

Related ebooks

Reviews for Aayargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aayargal - S. Karunakaran

    https://www.pustaka.co.in

    ஆயர்கள்

    (வரலாற்றுப் பார்வை)

    Aayargal

    (Varalatru Paarvai)

    Author:

    சா. கருணாகரன்

    S. Karunakaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-karunakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அறிவு தந்த ஐயன் கவிஞர்

    பாரதிபுத்திரனுக்கு.

    ஆசிரியரைப் பற்றி

    இந்நூலாசிரியர் சா. கருணாகரன் அவர்கள் காயிதே மில்லத் ஆடவர் கல்லூரியின் வாயிலாகக் கணினி அறிவியலில் இளமறிவியல் பட்டத்தையும், சென்னைக் கிறித்தவக் கல்லூரித் தமிழ்த்துறையின் வாயிலாக முதுகலைப் பட்டத்தையும் பெற்றவர். ஆயர் வாழ்வியல் என்னும் பொருண்மையில் முனைவர் சா. பாலுசாமி அவர்களின் நெறிப்படுத்தலின்கீழ் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். பண்பாட்டு மானுடவியல் மற்றும் வாய்மொழி வழக்காறுகளை ஆய்வுக்களங்களாகக் கொண்ட இவர், தூய தோமையார் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகின்றார். இவ்வாய்வு நூல் இவரது முதல் முயற்சியாகும்.

    shanthi.arulalan@gmail.com

    முன்னுரை

    மனிதர்கள் வேட்டையாடி உணவு சேகரிக்கும் நிலையிலிருந்து, கால்நடைகளைப் பழக்கப்படுத்திப் பயன்பெறும் நிலைக்கு உயர்ந்தனர். கால்நடைகளுக்காக மேய்ச்சல் வெளிகளைத் தேடி இடம் பெயர்ந்த நிலையில், கால்நடைகளைக் கொண்டு, வேளாண்மை ஒருபுறம் வளர்ந்தது. தொடர்ந்து கால்நடைகளை மையமிட்டே தம்முடைய வாழ்வியலை அமைத்துக்கொண்ட மேய்ச்சல் நில மக்கள் குழுக்கள், ஆயர் என்று அழைக்கப்பெற்றனர். ஆயர்கள் என்பது மேய்ச்சல் நில மக்களின் பொதுப்பெயராகும். இவர்கள் வாழ்ந்த மேய்ச்சல்வெளி, காடு முதலானவை முல்லை நிலம் எனப்பட்டது. மனித நாகரிகம் முல்லை நிலத்தில்தான் பல்கிப்பெருகியது என்று அறிஞர்கள் இயம்புவர்.

    இந்தியத் துணைக்கண்டத்தில் பல்வேறு பிரிவினராகக் கிளைத்து நிற்கும் மக்கள் குழுக்களுள், கால்நடைகளை மட்டுமே நம்பியுள்ள மேய்ச்சல் நில மக்களின் வாழ்வியல், தனித்துவமானதாகும். ஒரு நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சியையும், அறுபடாத மரபையும் கொண்டுள்ள மக்கள் குழுக்களுள், ஆயர் குழுக்கள் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

    ஆயர்கள் குறித்த ஆய்வு, மாந்த இனத்தின் தோற்றுவாயோடு தொடர்புடையதாகத் திகழ்கிறது. இந்திய நிலப்பரப்பில் வரலாற்றுக் காலத்திலிருந்து ஆயர்கள் குறித்த பதிவுகள் சேகரிக்கப்பெற்று, வரலாற்றாய்வாளர்களின் மேற்கோள்களோடு அவர்தம் வரலாற்றை இந்நூல் சுருக்கமாக உரைக்கின்றது.

    பண்டைய தமிழ் நிலப்பரப்பில் வாழ்ந்த ஆயர், கோவலர், இடையர், அண்டர், குடவர், பூழியர், பொதுவர், வடுகர் முதலான மேய்ச்சல் நிலப்பழங்குடிகளின் வாழ்வியலைச் சங்க இலக்கியங்கள் விரிவாகப் பதிவுசெய்துள்ளன. அப்பதிவுகளின் மூலம் தமிழக ஆயர்களின் பண்பாட்டு வாழ்வியலை உணர முடிகின்றன. மேலும், சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பெறும் அண்டர் குடியும், வட இந்தியப் பகுதியில் வாழ்ந்த ஆபிரக் குடியும் கண்ணன் என்னும் தொன்மத்தின் மூலம் இணையுமாற்றையும், கண்ணன் வழிபாடு, தமிழக ஆயர்களின் மால் வழிபாட்டோடு இணைக்கப்பெற்றதையும் இந்நூல் விவாதிக்கிறது.

    தற்காலத் தமிழ் நிலப்பில் வாழும் ஆயர்களையும், அவர்களுடைய உட்பிரிவுகளையும், வாழிடங்களையும் சுருக்கமாகக் குறிப்பிடுவதோடு, இந்திய ஆயர் குழுக்களுள் அஹீர்கள், கதிகள், தங்கர்கள், கதரியாக்கள், குரும்பர், கொல்லாக்கள், கோபால் முதலானோர் குறித்த அறிமுகங்களை இந்நூல் வழங்குகிறது.

    சா. கருணாகரன்

    அணிந்துரை

    மக்கள் சமுதாயம் சார்ந்த ஆய்வுத்துறைகளில், இன்று பெரு முக்கியத்துவம் பெறுவன பண்பாட்டு மானுடவியலும் அதன் முக்கியப் பிரிவாக அமையும் இனவரைவியலும் ஆகும்.

    இனவரைவியல் என்னும் ஆய்வுச்செயற்பாடு, ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகவோ அல்லது பெருஞ்சமுதாயத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாகவோ வாழும் சமுதாயத்தின் வாழ்வியல் கூறுகள் அனைத்தையும் ஆய்ந்து, அவற்றின் மூலத்தையும் வளர்சிதை மாற்றங்களையும் காரணகாரியங்களோடு முன் வைத்து அடையாளப்படுத்துகிறது.

    ஒரு சமூகம் வாழும் புவிச்சூழல், அதன் சுற்றுச்சூழல் குடியிருப்பின் நிலைகளையும் பொருள்சார் பண்பாடு, குடும்ப அமைப்பு, திருமணமுறை, மணவிலக்கு முதலியனவற்றையும் உறவுமுறைகளையும் விவரிக்கிறது அவ்வாய்வு. அது அச்சமூகத்தின் அடித்தளமான பொருளாதாரம் குறித்து விரிவாக ஆய்கிறது; உற்பத்தி முறை, உற்பத்திக் கருவிகள், நுகர்வு முறை என்பனவற்றை அலசுகிறது. மேலும் தொழில்கள் தொடர்பாகவும் சமுதாய அமைப்பின் அரசியல், நிர்வாகம் குறித்தும் சமுதாயச் சட்டத்திட்டங்கள் குறித்தும் கட்டுப்பாடு, தண்டனைகள் குறித்தும் ஆய்கிறது.

    அவ்வினத்தின் சமய நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள், சடங்குகள், விழாக்கள், இசை முதலியவற்றை அது உணர்த்துகிறது. பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கை வட்டச் சடங்குகள் அனைத்தையும் உற்றுநோக்கி விவரிக்கிறது.

    சுருங்கச் சொன்னால், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் ஒட்டு மொத்த வாழ்வியலையும் இனவரைவியல் கணக்கில்கொள்கிறது

    இவ்வாய்வில் கள ஆய்வு பெறும் இடம்தான் விதந்து குறிப்பிடத்தக்கது. ஓர் இனத்தின் இத்தகுக் கூறுகள் குறித்த உண்மையான, தெளிவான, விரிவான தகவல்கள் கள ஆய்வின் மூலமே திரட்டி, வகைதொகை செய்து, ஆராயப்பட வேண்டும். உற்றுநோக்கல், விளக்கம் பெறுதல், உசாவல்முறை எனப் பல்வேறு உத்திகளையும் பயன்படுத்தித் தகவல் திரட்டப்படவும், சரிபார்க்கப்படவும் வேண்டும். அவ்வகையில் இரண்டு கூறுகள் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன. ஒன்று, ஆய்வாளன் ஆய்வுக்களத்தில் வாழ்ந்து, அனுபவித்து, அறிய வேண்டியிருப்பது. இரண்டு, இது முற்றிலும் அறிவியல்பூர்வமான அணுகுமுறைகளைக் கொண்டிருப்பது.

    கடினமான பேருழைப்பும், பல்லோர் உதவியும், பொருட்செலவும் கொண்ட இவ்வாய்வே மனிதகுலத்தை விளங்கிக்கொள்ளவும் வரலாற்றை முன்னெடுக்கவும் உறுதுணை புரிகிறது.

    ***

    ‘ஆயர் வாழ்வியல்’ என்னும் பொருண்மையில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர் சா. கருணாகரன். இந்த ஆய்வின் தொடர்சியாக உருவாக்கப்பட்ட எட்டுக் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ளன.

    தமிழக ஆயர்கள் குறித்த இவ்வாய்வுக் கட்டுரைகள் அவர்தம் வரலாறு, அவர்கள் குறித்த தமிழ் இலக்கியப் பதிவுகள், ஆபிரர் என்ற இனக்குழுவுக்கும் கண்ணனுக்கும் தமிழக ஆயர்களுக்கும் உள்ள உறவுகள், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆயர் சமுதாயங்கள் குறிப்பாக, வடுக ஆயர்கள் போன்ற பொருண்மைகள் குறித்து இந்நூல் அமைந்துள்ளது.

    வேட்டைச் சமுதாயமாகத் தொடங்கிய மனிதகுலத்தின் வாழ்க்கை, மேய்ச்சல் நிலத்தோடும், கால்நடை வளர்ப்போடும் தொடர்பு ஏற்பட்ட பின்னர், எவ்வாறெல்லாம் நாகரிக வளர்ச்சி பெறத் தொடங்கியது என்பதையும் அச்சமுதாயத்தின் வாழ்வே எவ்வாறு ஆநிரைகளை மையமிட்டு அமைந்தது என்பதையும் ஆய்வாளர் விரிவாக விளக்கியுள்ளார்.

    பழந்தமிழகத்தில் ஆயர்கள் முல்லை நிலத்தில் வாழ்ந்ததையும், அவர்தம் பல்வேறு வாழ்வியல் கூறுகளையும், சங்கப்புலவர்கள் தம் இலக்கியங்களில் பதிவிட்டுள்ளனர். அப்பதிவுகளே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆயர்கள் வாழ்வின் உண்மைச் சான்றாதாரங்களாகத் திகழ்கின்றன. அவற்றினை மையமாகக் கொண்டே கால ஓட்டத்தில் நிகழ்ந்த மாற்றங்களை மதிப்பிட இயலுகிறது. தமிழகத்தில் தொடர்ச்சியான வரலாறு கொண்ட ஆயர் சமுதாயம் குறித்து, அடுத்து வந்த இலக்கியங்களும் சான்றாதாரங்களை நல்குகின்றன. அவை அனைத்தையும் முனைவர் சா. கருணாகரன் தொகுத்துத் தந்துள்ளார்.

    வடபுலத்திலிருந்து தென்புலம் நோக்கிவந்த வேளிர்களுக்கும் ஆயர்களுக்குமான உறவு நிலைகளையும் பல்வேறு அறிஞர்களின் கருத்தாக்கங்களுடன் விரிவாக வழங்கியுள்ளார்.

    குறிப்பாக, கண்ணன்-பலராமன் வழிபாடு சங்க காலந்தொட்டே தமிழகத்தில் நிலவியதற்கும் குடிபெயர்ச்சிக்குமான உறவினைச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். தெலுங்கு ஆயர்களான வடுக ஆயர்களின் வாழ்வியலையும் விரிவாக ஆய்வு செய்துள்ளார்.

    ***

    இந்திய ஆயர் குழுக்களில், வகை மாதிரிகளைத் தேர்ந்தெடுத்து ஒப்பீட்டு நிலையில் ஆய்வு மேற்கொள்ளும்போது பண்டைய இந்தியச் சமுதாயத்தில் ஒரு பெரும் பகுதியின் வாழ்வியலையும் வளர்ச்சி நிலைகளையும் நுணுகி அறிந்திட இயலும். ஏன்? ஆயர், கோவலர், இடையர், அண்டர், குடவர், பூழியர், பொதுவர் போன்ற பெயர்களின் காரணங்கள் மேலும் ஆராயும்போது ஆயர்களின் வகைமைகளில் பெரும் தெளிவு கிட்டும். ஆயர் என்னும் ஆய்வுக்களம் பரந்து விரிந்தது; தொன்மையானது.

    ஆழமான வரையறை செய்திடத் தேவையான எல்லையற்ற ஈடுபாடும், அயராத உழைப்பும் ஆய்வு அர்ப்பணிப்பும் முனைவர் சா. கருணாகரனிடம் இயல்பாகவே மிகுதியாக உண்டு.

    முனைவர் பட்ட ஆய்வுக்காக ஆயர்களோடு ஆறு திங்கள்களுக்கு மேலாகச் சென்று உடன்வாழ்ந்தார். அவர்களோடு மேய்ச்சல் நிலங்களுக்கும் நாள்தோறும் சென்று வந்தார். அவர் உணர்ந்து வெளிப்படுத்தியுள்ள உண்மைகள், இனவரைவியல் ஆய்வு மிகுதியாக வற்புறுத்தும் கள ஆய்வில் பெறப்பட்டவையே ஆகும்.

    முனைவர் கருணாகரன் தமிழ் ஆய்வுலகில் அரிதாக நிகழும் நிகழ்வு!

    சா. பாலுசாமி

    நூன்முகம்

    உலகம் முழுவதும் பண்பாட்டு மானுடவியல் குறித்தான ஆய்வுகள் நவீன ஆய்வு முறைகளோடு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாய்வு முடிவுகள் பொதுவெளியில் பெரிதும் பேசப்படக் கூடியதாகவும் கொண்டாடப்படக் கூடியதாகவும் விளங்குகின்றன. மாந்த பல்இனத்தின் தொட்டிலாக விளங்கும் இந்தியாவிலும் இவ்வாய்வுகள் சீரிய முறையில் முன்னெடுக்கப்படுவதோடு, மனித இனத்துக்குத் தேவையான பல்வேறு செய்திகள் வெளிக்கொணரப்படுகின்றன. மானுடவியல் ஆய்வாளர்கள், இந்தியச் சமூகங்களின் உயர்வான கருத்துகளையும், செயல்பாடுகளையும், பன்முகத்தன்மைகளையும் உலகறியச் செய்துவருகின்றனர்.

    இந்தியச் சமூகங்களில் குறிப்பிடத்தக்க சமூகமாகத் திகழும் ஆயர் சமூகம் நெடிய வரலாறுடையதாகும். மனித நாகரிகமே ஆயர்கள் வாழ்ந்த-வாழுகின்ற முல்லை நிலத்தில்தான் முகிழ்த்தது என அறிஞர்கள் இயம்புகின்றனர். ஆதிகால மனித வரலாறோடும், தொல்குடி விழுமியங்களோடும், பண்பாட்டுத் தொடர்ச்சியையும், நெடிய மரபையும் கொண்ட குழுக்களாக இந்திய ஆயர் குழுக்கள் விளங்கி வருகின்றன.

    வேட்டைச் சமூக நிலையிலிருந்து முன்னேறி, மேய்ச்சல் நிலங்களில் தழைத்துப் பெருகி, கால்நடைகளைப் பழக்கப்படுத்தி உரிமையாக்கிக்கொண்ட இந்திய மேய்ச்சல் நில மக்கள் குழுக்களின் வரலாறு, மனித இனத்தின் வரலாற்றோடு இணக்கமான தொடர்புடையதாகத் திகழ்கிறது. தொல்குடி பழமையை முழுவதும் விட்டுவிடாமல், அரை பழங்குடி நிலையில் வாழும் ஆயர் குழுக்கள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பரந்து வாழ்ந்து வருவதைத் தற்போதும் காண முடிகிறது.

    நாடோடி வாழ்வியலையும் அரை நாடோடி வாழ்வியலையும் இந்திய ஆயர்கள் கொண்டுள்ளனர். இவர்கள் பற்றிய ஆய்வு என்பது, கள ஆய்வோடும், தொல் வரலாற்று அணுகுமுறைகளோடும், பழங்குடித் தன்மைகளோடும் இணைந்திருக்கிறது.

    வரலாற்று ரீதியில் ஆயர் குழுக்களை அணுகும்போது வேண்டிய சான்றுகளைக் கண்டறிவதும் தொகுப்பதும் பெரும் பணியாகும். அது நூல்களை ஆராய்வதோடும் தொகுப்பதோடும் நின்றுவிட முடியாது. ஆயர்களோடு நெருங்கிப் பழகும் சூழலில்தான் வேண்டிய தகவல்கள் முழுமையடையும்.

    அவ்வகையில், தமிழகத்தில் வாழும் ஆயர்கள் குறித்தத் தகவல்களைப் பெறுவதற்கு என்னுடைய நெறியாளரும், சென்னைக் கிறித்தவக் கல்லூரித் தமிழ்த்துறையின் மேனாள் தலைவருமான முனைவர் சா. பாலுசாமி அவர்களின் வழிகாட்டலில், தமிழக அளவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் கள ஆய்வுகள் மேற்கொண்டேன். குறிப்பாக, தமிழக ஆயர்கள் பேரளவிலான ஆநிரைகளோடு வாழ்ந்துவரும் தேனி, மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தஞ்சை, சிதம்பரம், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் ஒருசில ஆயரூர்களைத் தேர்ந்தெடுத்து, அதிகபட்சமாக மூன்று வாரங்கள் வரை தங்கியிருந்து கள ஆய்வில் ஈடுபட்டேன்.

    பழங்குடிச் சமூகங்களுக்கே உரிய அரவணைப்பையும், அன்பையும் ஆயர் குடிகளிடம் உணர முடிந்தது. அவர்களோடு பழகுவதற்கு எந்தத் தடையும் எனக்கிருக்கவில்லை. அவர்களோடே மாட்டினங்களையும் ஆட்டினங்களையும் நெடுந்தொலைவுச் சென்று மேய்த்து வந்தேன். ஒன்றாக உணவருந்தினேன். திருவிழாக்களிலும், வீட்டுச் சடங்குகளிலும், விசேசங்களிலும் பங்குகொண்டேன்.

    அவர்தம், வாழிடங்கள், வாழ்வியல் முறைகள், கால்நடை மேய்ப்பு, வளர்ப்பு முறைகள், வாழ்க்கை வட்டச் சடங்குகள், மருத்துவம், வழிபாட்டு முறைகள், வழிபடு தெய்வங்கள், தொழில் முறைகள், பஞ்சாயத்துமுறை, உணவுப் பழக்கங்கள், வாய்மொழி இலக்கியங்கள் முதலான தரவுகளை உடனிருந்து சேகரித்தேன். அவற்றைப் பண்பாட்டு மானுடவியல் ஆய்வுக்குட்படுத்தி முனைவர் பட்ட ஆய்வுக்கான கருதுகோளை மெய்ப்பிக்க முயற்சி செய்தேன்.

    இந்நூலில், முனைவர் பட்ட ஆய்வின்போது கண்டறிந்த வேறு சில கருதுகோள்களை முன்வைத்து எழுந்த கட்டுரைகள் கோக்கப் பெற்றிருக்கின்றன. ஆயர்தம் வரலாற்றை வரலாற்று நோக்கில் அணுகுவதற்கான முயற்சிகளாக இக்கட்டுரைகளைக் கொள்ளலாம்.

    வரலாற்றுக் காலத்துக்கும் அதற்கு முன்பும் மக்கள் குழுக்களின் வாழ்வியலைப் பல்வேறு அறிஞர்கள் தொல்லியல் தரவுகளோடு ஓரளவு கணித்துள்ளர். மனிதர்களைப் பற்றிய எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் கிடைக்கத் தொடங்கும் காலத்தை வரலாற்றுக்காலம் என்கிறோம்.

    இந்நூலில், இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றுக்காலமாக ரிக் வேதம் தொடங்கி, பிற்கால இலக்கியங்கள் வரை கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. வரலாற்றுக்காலத்தில் இந்திய நிலப்பரப்பின் வடபகுதியிலும் தென்பகுதியிலும் நிலவிய மேய்ச்சல் பழங்குடிகளின் தடங்கள் சேகரிக்கப்பெற்றுள்ளன. அவை குறித்த அறிமுகங்கள் இங்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

    தமிழின் பழம்பெரும் இலக்கியங்களான சங்க இலக்கியங்கள், மேய்ச்சல் பழங்குடிகளைப் பற்றிய துல்லியமான பார்வையை அளிக்கின்றன. ஆயர், கோவலர், இடையர், அண்டர், குடவர், பூழியர், பொதுவர், வடுகர் முதலான மேய்ச்சல் நிலக்குழுக்களின் பண்பாட்டு வாழ்வியலைப் பதிவுசெய்துள்ளன. பிற்கால இலக்கியங்களும் ஆயர்கள் குறித்த பதிவுகளை அளிக்கின்றன. இத்தகவல்கள் இந்நூலில் நிரல்படுத்தப் பெற்றுள்ளன.

    இந்திய நிலப்பரப்பு முழுவதும் அறிமுகமாகியுள்ள கிருஷ்ண வழிபாடும், கிருஷ்ணன் யார் என்பதும், தமிழகத்தில் கிருஷ்ண வழிபாடு கால்கொண்ட விதமும் அறிஞர்களின் மேற்கோள்களோடு விவாதிக்கப்பெற்றுள்ளன.

    தற்போதைய தமிழக ஆயர்கள், அவர்தம் உட்குலங்கள், தமிழகத்தில் வாழும் வடுக ஆயர்கள் குறித்தத் தரவுகள் சேகரிக்கப் பெற்றுள்ளதோடு, இந்திய ஆயர் குழுக்களில் அஹீர்கள், கதிகள், தங்கர்கள், கதரியாக்கள், குரும்பர், கொல்லாக்கள், கோபால் ஆகிய குழுக்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளும் இந்நூலில்

    Enjoying the preview?
    Page 1 of 1