Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tamil, Samskirutha Kalvettugal Tharum Suvaiyana Seithigal
Tamil, Samskirutha Kalvettugal Tharum Suvaiyana Seithigal
Tamil, Samskirutha Kalvettugal Tharum Suvaiyana Seithigal
Ebook153 pages54 minutes

Tamil, Samskirutha Kalvettugal Tharum Suvaiyana Seithigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுவையான விஷயங்களை முதலில் சொன்னால், பள்ளிக்கூடத்தில் வரலாறு பிடிக்காதவர்களும், படிக்காதவர்களும்கூடக் காது கொடுத்துக் கேட்பார்கள் என்பதை பி.பி.சியில் நான் ஒலிபரப்பிய ‘வினவுங்கள் விடை தருவோம்’ என்ற கேள்வி பதில் நிகழ்ச்சி மூலம் அறிந்தேன் இந்த நூலைப் படித்தவுடன் உங்களுக்கும் கல்வெட்டுகளைப் படிப்பதிலும், பாதுகாப்பதிலும் ஆர்வம் பிறக்கும் என்று நம்புகிறேன்.

Languageதமிழ்
Release dateSep 17, 2022
ISBN6580153509039
Tamil, Samskirutha Kalvettugal Tharum Suvaiyana Seithigal

Read more from London Swaminathan

Related to Tamil, Samskirutha Kalvettugal Tharum Suvaiyana Seithigal

Related ebooks

Related categories

Reviews for Tamil, Samskirutha Kalvettugal Tharum Suvaiyana Seithigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tamil, Samskirutha Kalvettugal Tharum Suvaiyana Seithigal - London Swaminathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தமிழ், சம்ஸ்க்ருத கல்வெட்டுகள் தரும் சுவையான செய்திகள்

    Tamil, Samskirutha Kalvettugal Tharum Suvaiyana Seithigal

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1.அடர்ந்த காட்டுக்குள் மூலவர்மன் கல்வெட்டு

    2. பூர்ணவர்மனின் 4 சுவையான கல்வெட்டுகள்

    3. பர்மா, மலேயாவில் சம்ஸ்கிருத கல்வெட்டுகள்

    4.உலகத்திலேயே மிகப்பெரிய கல்வெட்டு!

    5. திருப்பதியில் அதிசயம் - உலகிலேயே அதிகமான கல்வெட்டுகள்

    6. 500 ஆண்டு வரலாறு கூறும் அற்புத ருத்ரதாமன் கல்வெட்டு!

    7. அலகாபாத் கல்வெட்டில் அதிசய சம்ஸ்கிருதம்

    8. 800 கல்வெட்டுக் கவிஞர்கள்!

    9. பஞ்சாப்பில் திராவிட பிராமணர்

    10. கலியுகம் பற்றிக் கூறும் தமிழ்க் கல்வெட்டு

    11. வரலாற்றுப் புதிரும் 2 புதிய கல்வெட்டுகளும்

    12. 38,000 கல்வெட்டுகளில் 1100 சுவையான வானியல் செய்திகள்

    13. தமிழ்நாடு பற்றி அசோகர் கல்வெட்டுகள் தெரிவிக்கும் அரிய விஷயங்கள்

    14. அகஸ்தியர் பற்றி தென் கிழக்காசிய நாடுகளில் கல்வெட்டுகள்

    15. பாண்டிய கல்வெட்டு அதிசயம்

    16. லெய்டன் செப்பேட்டில் கோட்டையூர் பிராமணன் அனந்த நாராயணன்

    17.ராஜஸ்தான் கல்வெட்டில் மன்னர் எழுதிய பாட்டு

    18. மேலும் சில சுவையான கல்வெட்டுக் கவிதைகள்

    19. கல்வெட்டில் சொற்சிலம்பம்; திரிபுவன பாலனின் கவிதைகள்

    20. உதயாதித்யனின் சர்ப்ப – கத்தி பந்த கல்வெட்டு

    21. காலசூரி வம்ச அரசர் மீது சீனிவாசன் எழுதிய கவிதைக் கல்வெட்டு

    22. அனுமதி தேவி புகழ்பாடும் பீஹார் கல்வெட்டு

    23. நேபாளத்தில் ‘சதி’ – கணவனுடன் மனைவி எரிப்பு

    24. 800 சம்ஸ்க்ருதக் கல்வெட்டுப் புலவர்கள்- மேலும் சுவையான செய்திகள்

    25. சமண சமய அறிஞரின் 70 பாடல் கல்வெட்டு காணவில்லை

    26. கல்வெட்டில் மறைந்து கிடக்கும் கவிஞன் சோமேஸ்வர தேவன்

    27. மேலும் சில சுவையான கல்வெட்டுக் கவிதைகள்

    28. கல்வெட்டில் ஒரு ஸ்தோத்திரம்- ஹலாயுத ஸ்தோத்திரம்

    29. அரச்சலூர் இசைக் கல்வெட்டில் ஒரு அற்புதம்! (Post No.4095)

    30. பூர்வ, தக்ஷிண, பச்சிம, உத்தர சதுச் சமுத்ராதிபதி கிருஷ்ண தேவ மகாராயர்

    31. ஸ்ரீரங்கம், திருவண்ணாமலையில் ஸம்ஸ்க்ருதக் கவிதைக் கல்வெட்டுகள்

    32. கல்வெட்டுகளில் ஜோதிடமும் சங்கீதமும்!

    33. கடல் போர், கடல்பயணம் 6 பற்றிய கல்வெட்டுகள்

    34. தமிழ்க் கல்வெட்டுகளில் விநோதப் பெயர்கள்

    (தாய்லாந்து, கம்போடியக் கல்வெட்டுகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கனவே வெளியான எனது தாய்லாந்து, வியட்நாம், கம்போடியாவில் தமிழ் முழக்கம் என்ற நூலில் உள்ளன.)

    முன்னுரை

    காஞ்சி பரமாசார்ய சுவாமிகளின் உபன்யாசங்கள் அந்தக் காலத்தில் காஞ்சிமடத்தின் சிறு பிரசுரங்களாக வரும். அவைகளை என் தந்தை தினமணி வெ.சந்தானம் வாங்கி வீட்டில் வைத்திருந்தார். அப்பொழுது அவைகளைப்ப படிக்கும் பேறு கிடைத்தது.இப்பொழுது அவை அனைத்தும் தெய்வத்தின் குரல் என்ற புஸ்தகமாக ஏழு தொகுதிகளாக வந்துள்ளன. அந்த சிறு நூல்களைப் படித்தகாலத்திலிருந்து வரலாற்றிலும் மொழி இயலிலும் ஆர்வம் பிறந்தது.பின்னர் மதுரைக்கு வந்த உலகப் பேரறிஞர், தொல்பொருட் துறை டைரக்டர், வரலாற்று வல்லுநர் டாக்டர் இரா. நாகசாமியைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அதோடு சிதம்பரம் முதல் திருவனந்தபுரம் வரை பள்ளி ஆசிரியர்களுக்கான கல்வெட்டுப் பயிற்சிக் குழுவுடன் பயணிக்கும் வாய்ப்பும் கிட்டியது; அந்தக் கோச்சில் ஆசிரியர் அல்லாத -- ஆனால் தினமணிப் பத்திரிகை உதவி ஆசிரியர் ஆன -- ஒருவன் நான்தான். அனுமதி கேட்ட அடுத்த நொடியிலேயே பஸ்ஸில் வாருங்கள் என்று சொன்ன டாக்டர் இரா. நாகசாமிதான் வாலாற்றில் எனக்கு குருநாதர். அவருக்கு இந்த நூல் சமர்ப்பணம். அவர் எங்களுக்கு பிராமி முதலிய லிபியைப் படிப்பதில் பயிற்சி கொடுத்தார். ஒவ்வொரு இடத்திலும் பஸ்ஸை நிறுத்தி சொற்பொழிவும் ஆற்றினார். அப்பொழுது வரலாற்றில் பிறந்த ஆர்வம் காரணமாக மதுரைப் பல்கலைக் கழக பகுதி நேர வகுப்பில் சேர்ந்து வரலாற்றில் எம்.ஏ. பட்டமும் பெற்றேன்; டாக்டர் இரா. நாகசாமி, லண்ட னுக்கு வருகை தந்த போதெல்லாம், நான் வேலைபார்த்த பி.பி.சி. தமிழோசை ஒலி பரப்பு மூலம் அவரைப் பேட்டி கண்டும் ஒலிபரப்பினேன். அவர் தந்த ஊக்கத்தால் நிறைய வரலாற்றுப் புஸ்தகங்களை லண்டன் பலகலைக் கழக நூலகத்தில் இருந்தும் பிரிட்டிஷ் லைப்ரரியில் இருந்தும் எடுத்து ஆங்கிலத்திலுள்ள முக்கிய நூல்களில் கண்ட விஷயங்களைக் கட்டுரைகளாக எழுதினேன். அவற்றில் கல்வெட்டு பற்றிய விஷயங்களே ஒரு நூல் அளவுக்குப் பெருகிவிட்டன. ஏனைய வரலாற்று விஷ்யங்களைத் தனித் தனி நூல்களாகத் தருகிறேன். முன்னர் வெளியான உலகம் முழுதும் பாம்பு வழிபாடு என்ற என்னுடைய நூலிலும் வரலாற்றுக்கு கட்டுரைகள் உள்ளன. சுவையான விஷயங்களை முதலில் சொன்னால், பள்ளிக்கூடத்தில் வரலாறு பிடிக்காதவர்களும், படிக்காதவர்களும்கூடக் காது கொடுத்துக் கேட்பார்கள் என்பதை பி.பி.சியில் நான் ஒலி பரப்பிய ‘வினவுங்கள் விடை தருவோம்’ என்ற கேள்வி பதில் நிகழ்ச்சி மூலம் அறிந்தேன் இந்த நூலைப் படித்தவுடன் உங்களுக்கும் கல்வெட்டுகளைப் படிப்பதிலும், பாதுகாப்பதிலும் ஆர்வம் பிறக்கும் என்று நம்புகிறேன்.

    பத்தாண்டுகளுக்கும் மேலாக எனது பிளாக்குகளில் இந்தக் கட்டுரைகள் வெளியான தேதியும் கட்டுரை எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

    இந்த நூலில் உள்ள தகவல் பற்றி உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவலாக உள்ளேன். தொடர்பு முகவரிகள் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. படியுங்கள்! மகிழுங்கள்!!

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்

    செப்டம்பர் 2022

    1. அடர்ந்த காட்டுக்குள் மூலவர்மன் கல்வெட்டு

    Date: 10 JUNE 2018;Post No. 5096

    இந்தோநேஷியா என்பது உலகிலேயே பெரிய முஸ்லீம் நாடு. அந்த நாட்டின் ஒரு பகுதியான போர்னியோ (BORNEO) தீவு உலகில் மிகப்பெரிய தீவுகளில் ஒன்று. அதில் அடர்ந்த மழை வனக்காடுகள் (RAIN FORESTS) உள்ளன. அந்த காட்டுக்குள் இது வரை மனிதர்கள் காலடியே பட்டதில்லை—இது கன்னி கழியாத காடுகள் (VIRGIN FORESTS) என்று உள்ளே நுழைந்த ஆராய்ச்சியாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தது சில சம்ஸ்ருதக் கல்வெட்டுகள்!

    இதெல்லாம் நடந்து நூறு ஆண்டுகள் ஆயிருக்கும்; ஆயினும் இக் கல்வெட்டுகளின் பெருமையை இப்பொழுதுதான் உலகம் உணரத் துவங்கியுள்ளது.

    1950-ஆம் ஆண்டுகளில் காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள் நடத்திய சொற்பொழிவுகளில் இது பற்றிய அபூர்வ விஷயங்களைத் தொட்டுக் காட்டினார். ஆயினும் முழு விவரங்கள் கிடைக்கவில்லை. ஏனெனில் அவர் நடத்தியது வரலாற்றுச் சொற்பொழிவு அல்ல. அது சமயச் சொற்பொழிவு.

    அடர்ந்த காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்டது ஏழு யூப ஸ்தம்பங்களாகும். மன்னர்கள் யாக யக்ஞங்கள் செய்கையில் பிராஹ்மணர்கள் இப்படி யூப ஸ்தம்பங்களை நட்டு அதில் மன்னன் பெருமை, அவர் அளித்த தான தருமங்களைச் சொல்லுவது மரபு.

    யூப நெடுந்தூண், வேள்வித்தூண் எனபன சங்க இலக்கிய நூல்களிலும் காணப்படுகிறது. முது குடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் அஸ்வமேதம் முதலிய யாகங்களைச் செய்தான்; கரிகால் சோழன் பருந்து வடிவ யாக குண்டங்கள் செய்து யாகம் செய்தான். சோழ மன்னன் பெருநற்கிள்ளி ராஜ சூய யாகம் செய்தான். சேர மன்னன் ஒருவன் பார்ப்பனீயப் புலவரின் வேண்டுகோளுக்கிணங்க பத்து வேள்விகள் இயற்றி பத்தாவது முறையில் பார்ப்பனப் புலவரையும் பார்ப்பனியையும் அப்படியே உடலுடன் சொர்க்கத்துக்கு அனுப்பி மாயமாய் மறைய வைத்தான். இவை எல்லாம் புறநானூற்றிலும் பதிற்றுப் பத்திலும் உள. திருவள்ளுவரும் திருக்குறளில் யாக யக்ஞங்களைப் புகழ்ந்து தள்ளுகிறார். ஆக தமிழர்கள் மிகப் பழைய புறநானூற்றுப் பாடலில் யூபம் என்னும்

    Enjoying the preview?
    Page 1 of 1