Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Koreayavin Tamil Rani
Koreayavin Tamil Rani
Koreayavin Tamil Rani
Ebook158 pages50 minutes

Koreayavin Tamil Rani

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த நூலில் எளிய மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையிலான எழுத்து நடையுடன் கட்டுரைகள் அமைந்துள்ளன. தமிழுக்கும் கொரிய மொழிக்கும் இடையினான தொடர்பினை அறியும் ஆய்வில் நாம் இன்னமும் ஆரம்ப நிலையில்தான் இருக்கின்றோம் என்பது மறுப்பதற்கு இடமில்லை. ஆக இத்துறையில் ஆய்வுகள் தொடரப்பட வேண்டும் தமிழக பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் இம்முயற்சியில் ஆர்வத்துடன் இணைந்து செய்லபடத் தொடங்கினால் கொரிய மொழியில் உள்ள தமிழ் வரலாற்றுத் தொடர்பினை தக்கச் சான்றுகளுடன் உலகறியச் செய்யலாம்.

Languageதமிழ்
Release dateJan 6, 2024
ISBN6580155210470
Koreayavin Tamil Rani

Read more from Na. Kannan

Related to Koreayavin Tamil Rani

Related ebooks

Reviews for Koreayavin Tamil Rani

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Koreayavin Tamil Rani - Na. Kannan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கொரியாவின் தமிழ் ராணி

    Koreayavin Tamil Rani

    Author:

    நா கண்ணன்

    Na. Kannan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/na-kannan

    பொருளடக்கம்

    அணிந்துரை

    மதிப்புரை

    நூற்றாண்டுகள் தவறிப்போன ஓர் உறவின் மீட்சி

    முன்னுரை

    பகுதி 1

    பகுதி 2

    பகுதி 3

    பகுதி 4

    பகுதி 5

    பகுதி 6

    பகுதி 7

    பகுதி 8

    பகுதி 9

    பகுதி 10

    பகுதி 11

    பகுதி 12

    பகுதி 13

    பகுதி 14

    பகுதி 15

    அணிந்துரை

    தமிழ்மொழியின் சிறப்பினை உலகறியச் செய்தல் வேண்டும் என்ற நோக்கத்தில் ஆராய்ச்சிகள் பல நிகழ்ந்து வருகின்றன. அவற்றுள் பல, தமிழ் மேல் கொண்ட ஆழ்ந்த பற்றினால் ஆர்வத்தின் அடிப்படையில் மட்டுமே எழுந்துள்ள ஆய்வுகளாக அமைந்து விடுகின்றன. இத்தகைய ஆய்வுகளில் ஈடுபடுவோர். தமிழ் மொழியை உலகின் தாய் என்றும், தெய்வம் என்றும் வர்ணித்து தங்கள் ஆராய்ச்சிகளை தாம் விரும்பும் முடிவுகளை நோக்கி நகர்த்திய வண்ணம் இருக்கின்றனரே அன்றி தமது ஆய்வுகளில் சரியான ஆராய்ச்சி நெறிமுறையைப் பயன்படுத்தியிருக்கின்றோமா, ஆதாரத்தன்மை கொண்ட தரவுகளை தருகின்றோமா எனப்பார்ப்பதில்லை. இத்தகைய ஆய்வுகளினால் உலக அளவில் தமிழ் மொழியின் சிறப்பினை ஏனைய மொழி வல்லுனர்கள் பயன்படுத்தி தொடர் ஆய்வுகள் நிகழ்த்தக்கூடிய வகையிலான வாய்ப்புக்கள் நிகழ வாய்ப்பில்லாமல் போய்விடக்கூடிய நிலை ஏற்படுவதோடு, பொய்யான தகவல்களை வழங்கி விடும் அபாயமும் இருக்கின்றது.

    தமிழ் மொழி ஆராய்ச்சி என்பது பன்முகத் தன்மை கொண்டது. இலக்கிய இலக்கண நூல்களை ஆராய்வது ஒரு வகை; வரலாற்றுச் சான்றுகளைத் தேடி, அவற்றின் வழி தமிழ் மொழி பயன்பாட்டினை அறிந்து கொள்வது ஒரு வகை; மானுடவியல் ஆராய்ச்சித் தளத்தில் நின்று மக்களின் அன்றாட வாழ்வியல் கூறுகளை அவதானித்து, மக்கள் பன்னெடுங்காலமாக தொடர்ச்சியாகப் பாதுகாத்துக் கொண்டு வரும் சமூகப் பண்பாட்டு விழுமியங்களை ஆராய்ச்சித் தரவுகளாக உட்படுத்துவது என்பது ஒரு வகை.

    தமிழர்கள் பன்னெடுங்காலமாக கடலோடிகளாகத் திகழ்ந்துள்ளனர். கப்பல் கட்டும் கலை என்பதோ, கடலில் நீண்ட தூரம் பயணித்து புதிய நிலங்களைத் தேடி அங்கு வணிக முயற்சிகளில் ஈடுபடுவது என்பதோ தமிழர்களுக்குப் புதியதல்ல. பண்டைய தமிழக வணிக துறைமுக நகரங்களாகத் திகழ்ந்த முசிறி, கொற்கை மற்றும் அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர், கொடுமணல், அழகன்குளம், கீழடி போன்ற இடங்களில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் துறையினரின் அகழ்வாய்வுகள் கப்பல்களில் பல வகை இருந்தமையையும், தமிழர்கள் வணிகர்களாக தூர நாடுகளுக்குச் சென்றமையாமையும், அயல் நாட்டினராகிய யவனரும், அரேபியரும், சீனர்களும், மற்றும் பலரும் தமிழகத்திற்கு வந்து தங்கியிருந்து வணிகம் செய்து சென்றதற்கான தக்க சான்றுகளை நமக்கு எடுத்தியம்புகின்றன.

    பல நாடுகளிலிருந்து மக்கள் போக்கு வரத்து நிகழ்வதும் தமிழர்கள் அத்தூர நாட்டு வணிகர்களின் நாடுகளுக்குத் தமிழகத்திலிருந்து வணிகப் பொருட்களை எடுத்துக் கொண்டு கடல் வழிப்பயணமாகச் சென்ற நிகழ்வுகள் நடந்துள்ளன, இதனால் தான் இன்று நாம் ஐரோப்பாவில் பண்டைய தமிழ் எழுத்து பொறித்த பானை ஓடுகளைக் காண முடிகின்றது; சீனாவில் தமிழகம் பற்றிய கல்வெட்டினைக் காண முடிகின்றது; ஏறக்குறைய அனைத்து கிழக்காசிய நாடுகளிலும் தமிழகத்தின் பண்பாட்டுக் கூறுகளைத் தெள்ளத் தெளிவாகக் காண முடிகின்றது. இவ்வகையில் தமிழர்கள் தமிழ் நிலத்தை விட்டு வணிகத்திற்காகவோ, பௌத்த மதத்தைப் பரப்பும் நோக்கத்துடனோ சென்றமையினால் இன்று கிழக்காசிய நாடுகள் பெரும்பாலானவை பௌத்த சமயத்தைச் சார்ந்த நாடுகளாகத் திகழ்கின்றன. கால ஓட்டத்தில் ஏற்பட்ட பற்பல மாற்றங்களினாலும் பல்வேறு தாக்கங்களினாலும் பண்பாட்டுக் கூறுகளிலும் மொழிக்கூறுகளிலும் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் கூட தமிழ் மொழிக்கும் ஏனைய பிற மொழிக்கும் உள்ள ஒற்றுமையையும், பண்பாட்டுக் கூறுகளில் காணப்படும் ஒற்றுமைகளையும் தக்க ஆதாரங்களைக் கொண்டு உறுதிபடுத்தும் தரமான ஆய்வுகளைத் தர வேண்டிய கடமை தமிழ் மொழி துறை சார்ந்த ஆய்வாளர்களுக்கு இருக்கின்றது.

    அண்மைய காலமாகத் தமிழகத்திற்கும் கொரியாவிற்கும் உள்ள மொழி, பண்பாட்டு தொடர்புகளை ஆராயும் முயற்சிகளைப் பற்றிய செய்திகளை நாம் ஊடகங்களில் காண்கின்றோம். அந்த வகையில், ஆழமான தமிழ் மொழி பின்புலத்துடனும் கொரியாவிலும் ஜப்பானிலும் பல ஆண்டுகள் வாழ்ந்த நேரடி அனுபவத்தினாலும், அடிப்படையில் ஆய்வுத்துறை பயிற்சி பெற்ற ஒரு விஞ்ஞானி என்ற கூடுதல் சிறப்புக்களோடும் தமிழ் - கொரிய மொழி இரண்டிற்கும் உள்ள தொடர்புகளை ஆராய்ந்து அது பற்றி கடந்த பல்லாண்டுகளாக பேசியும், எழுதியும், உரைகளாற்றியும் வருகின்ற பேராசிரியர் முனைவர் நா. கண்ணன் இவ்வாய்வுத்துறையில் மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர்.

    நா. கண்ணன் அவர்களுடனான எனது நீண்ட கால நட்பில் ஆரம்பகாலம் தொட்டு. தமிழ்ப் பண்பாடு, மொழி ஆகியவற்றோடு ஜப்பானிய மொழிக்கும் கொரிய மொழிக்கும் உள்ள தொடர்பினைப் பற்றிய தமது ஆச்சரியம் கலந்து கண்டுபிடிப்புக்களை அவர் பலமுறை பகிர்ந்து கொண்ட நிகழ்வுகள் பல.

    தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின்தமிழ் மடலாடற் குழுமத்தில் தனது ஆய்வுக் கருத்துக்களைத் 2006 முதல் அவர் தமது எழுத்துக்களின் வழி பகிர்ந்து வந்துள்ளார். இதன் காரணமாகத் தமிழகத்தில் இருமொழி தொடர்பு பற்றி ஆர்வமும் ஈடுபாடும் பெருகி வருவதை இன்று காணக்கூடியதாக இருக்கின்றது. மின்தமிழ் மடலாடர் குழுமத்தில் நா. கண்ணன் அவர்களின் தலைமையில், ஏனைய உறுப்பினர்களின் ஆழமான ஆர்வத்தினாலும் இந்த ஆய்வு பல கோணங்களில் விரிவடைந்தது. இதன் அடிப்படையில் 2015ம் ஆண்டு தமிழுக்கும் கொரிய மொழிக்கும், அதன் பண்பாட்டிற்கும் உள்ள தொடர்பினை ஆராயும் வகையில் ஒரு ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பினை தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூலாக வெளியீடு செய்தோம். இன்று அதன் தொடர்ச்சியாக இந்த நூல் வெளி வருவது ஆய்வுலகத்தில் காலத்தின் கட்டாயம் என்று நம்புகிறேன்.

    இந்த நூலில் பேராசிரியர். முனைவர். நா. கண்ணன் அவர்கள் மானுடவியல் மற்றும் சமூகவியல் பார்வையில் தமது அவதானிப்புக்களையும் அவை எழுப்பிய சிந்தனைகளையும் அச்சிந்தனைகளை உறுதிபடுத்தும் சான்றுகளையும் பற்றி மிக எளிமையாகவும், தம் வாழ்வில் நிகழ்ந்த இயல்பான விசயங்களைக் குறிப்பிட்டுச் சுவாரசியமாகவும் படிப்படியாகக் கூறிச் செல்கின்றார். தாம் சந்தித்த மனிதர்களுடனான கலந்துரையாடல்களை விளக்கும் போது, அவர்கள் முன்னரே பார்த்தும் யோசித்தும் திகைத்தும் உள்வாங்கியிருந்த தகவல்களை வாசிப்போருக்கு, ஈடுபாட்டுடன் அவர்கள் தொடர்ந்து வாசிக்கும் வகையில் வழங்கியிருக்கின்றார். தமிழ் மொழியும் பௌத்தமும் இரு நாடுகளுக்கான வணிக மற்றும் அரச தொடர்புகளினால் தமிழகத்திலிருந்து சென்றிருக்கக்கூடிய வரலாற்றுப் பார்வையை முன் வைப்பதோடு இக்கருத்துக்கு வலிமை சேர்க்கும் பல செய்திகளையும் வழங்கியிருக்கின்றார்.

    இந்த நூலில் எளிய மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையிலான எழுத்து நடையுடன் கட்டுரைகள் அமைந்துள்ளன. தமிழுக்கும் கொரிய மொழிக்கும் இடையினான தொடர்பினை அறியும் ஆய்வில் நாம் இன்னமும் ஆரம்ப நிலையில்தான் இருக்கின்றோம் என்பது மறுப்பதற்கு இடமில்லை. ஆக இத்துறையில் ஆய்வுகள் தொடரப்பட வேண்டும் தமிழக பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் இம்முயற்சியில் ஆர்வத்துடன் இணைந்து செய்லபடத் தொடங்கினால் கொரிய மொழியில் உள்ள தமிழ் வரலாற்றுத் தொடர்பினை தக்கச் சான்றுகளுடன் உலகறியச் செய்யலாம்.

    நூலாசிரியரின் இந்த முயற்சிக்கு நல்வாழ்த்துகள்!

    அன்புடன்

    முனைவர். சுபாஷிணி

    தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை (www.tamilheritage.org)

    ஜெர்மனி, 03.11.2017

    மதிப்புரை

    கொரிய ஆதி அரசி ஒரு பௌத்த பெண்

    இந்தியாவின் வரலாறு அடிமை மனநிலையின் வெளிப்பாடு என்கிற ஐயம் எனக்கு நீண்ட காலமாகவே உண்டு. இந்திய மரபில் வரலாற்றை எழுதுதல் என்கிற முறை கிடையாது. மாறாக வரலாற்றினைப் புனைதல் மட்டுமே நீண்ட காலமாக நிலவி வரும் ஒரு முறை. இதில் மாற்றத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் வைதீக மரபுகளுக்கு எதிராக தோன்றியவர்கள். குறிப்பாக பௌத்தர்கள் மற்றும் சமணர்கள். நாளடைவில் இவற்றிலும் புனைவாக்கம் என்பது உள்வாங்கப்பட்டது என்பது வேறு. அதேபோது, முகலாயர்கள் காலத்தில் வரலாற்றினைப் பதிவு செய்யும் பழக்கம் உருவானதுதான் மத்தியக்கால போக்கு. அதற்குப் பிறகு ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள்,

    Enjoying the preview?
    Page 1 of 1