Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aalavattam
Aalavattam
Aalavattam
Ebook126 pages45 minutes

Aalavattam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலகால் இருபதாம் நூற்றாண்டில் கண்டறியப்பட்ட தலைசிறந்த சிந்தனையாளர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி (ஜே.கே). அவரது சிந்தனைகளும், போதனைகளும் பேதமற்ற மானுடத்திற்கு சொல்லப்பட்டது. ஜாதியால், மதத்தால், வர்க்கத்தால் வேறுபட்டிருக்கும் மானுடத்திற்கு நல் வழி காட்டுபவை அவரது போதனைகள். அன்பின் வழியிலான அவரது ஞானமார்க்கம் மானுடப் பொது என்றாலும் அவர் வாழ்ந்த காலத்திலும் இன்றும் அது கற்றறிந்த மேட்டுக்குடிக்கு மட்டுமே சொந்தம் எனும் நிலைதான் உள்ளது. அவர் ஆங்கிலத்தில் அறியப்பட்ட அளவு தமிழில் அறியப்படவில்லை. அவரைப் பற்றிய சரியான அறிமுகம் தமிழ் மண்ணில் கீழ் தட்டு மக்களுக்கு, கிராமப் புரவாசிகளுக்கு நிகழவில்லை. திருப்பூவணம் எனும் சிற்றூரில் வாழும் நந்து எனும் சிறுவனின் வாழ்வில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி எப்போது, எப்படி அறிமுகமாகிறார் என்பதே இந்நூல். சுயசரிதை போல் படும் இந்நூல் புதினமற்ற நடை என்றாலும், அழகிய கவிதைகள் இணைக்கப்பட்டுள்ளன. ஜேகேயின் ஆக்கபூர்வமான சிந்தனைகள் கிளப்பிய அலையில் உதித்தவை இக்கவிதைகள். ஜேகே பற்றி அறிமுகப்படுத்தும் இம்மாதிரி நூல்கள் அதிகமில்லை. இதுவே முன்மாதிரி. எடுத்தால் படித்து முடித்து வைக்கத் தோன்றும் நடை. வாழ்க!

Languageதமிழ்
Release dateMay 14, 2022
ISBN6580155208487
Aalavattam

Read more from Na. Kannan

Related to Aalavattam

Related ebooks

Reviews for Aalavattam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aalavattam - Na. Kannan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஆலவட்டம்

    Aalavattam

    Author:

    நா கண்ணன்

    Na. Kannan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/na-kannan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    சென்ற நூற்றாண்டில் உலகளவில் சிந்தனைத் தாக்கம் செய்த ஓர் சிந்தனைச் சிற்பி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி (ஜெகே) ஆவார். சுயம் என்பது முற்றும் நீக்கப்பெற்ற சுத்த ஜீவன் என்று பிரம்மஞான சபையினரால் அடையாறு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டவர் ஜெ கே. தன் தாய் தந்தையரிடமிருந்து அகற்றப்பட்டு தன் ஒரே துணையாக நித்யா எனும் தம்பியோடு அயலகம் சென்றவர் ஜெகே. இவரது புனிதமறிந்து இவரொரு அவதார புருஷரென அறிவிக்கப்பட்டு இவருக்கென கிழக்கின் தாரகை எனும் தேவாலயம் அமைக்கப்பட்ட போது அதை நிராகரித்து, வாய்மை வழித்தடமில்லா பெரு நிலம் என அறிவித்து உலகிலிருக்கும் அனைத்து மார்க்கங்களிருந்தும் மனிதனை நிபந்தனையற்ற விடுதலைக்கு உள்ளாக்குவதே தன் வாழ்வின் குறிக்கோள் என தனி நடை போட்ட மாமனிதர் ஜெகே. இவர் தனது தேவாலயத்திலிருந்து விலகினாலும் தேவாவலயம் இவரைத் தொடர்ந்தது. இவரது செவிலித்தாயான அன்னிபெசண்ட் இவரோடு துணை இருந்தார். உலகின் ஆகச்சிறந்த அறிஞர்களெல்லாம் இவரோடு கலந்துரையாடல் செய்து தெளிவு பெற்றனர். இவர் எவ்வித ஆன்மீக பிம்பமும் தன்னிடம் அண்டக்கூடாது என எவ்வளவு கவனமாக இருந்தாலும் இவர் மைத்ரேய புத்தரின் அவதாரமென இவரை உலகம் கண்டது. இவரது போதனை, கல்வி என்பது அனைத்துத் தளைகளிலிருந்தும் விடுதலை என்று இருந்தாலும் நூலகங்களில் இவரது நூல்கள் ஆன்மீகத்தத்துவப் பிரிவில்தான் அடைக்கலம் புகுகின்றன.

    கட்டற்ற விடுதலைக்கு முதல் படி மொழிச்சாயம் எனவறிந்து ஆங்கில மொழியையே மாற்றி எழுதியவர் ஜெகே. எனவே இவரைப் புரிந்து கொள்ள நிற்கும் முதல் தடை பரிட்சயமான மொழி. மனிதனின் அத்தனை பிரச்சனைகளுக்கும் மூல காரணம் அகங்காரம், சுய அடையாளம், ஈகோ எனச் சொல்லும் ஜெகே, அதிலிருந்து மார்க்கங்களற்ற, அணுகுமுறைகள் அற்ற வழியில் எப்படி விடுதலை அடைவது எனக் காட்டுகிறார். அதுவே அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் கல்வி (teaching). அவர் இல்லாத காலங்களில் நமக்குத்துணை அவர் இருந்த காலங்களில் பேசிய பேச்சுக்கள், கலந்துரையாடல்கள், ராஜகோபாலன் துணையோடு வெளியிட்ட 300 மேற்பட்ட நூல்கள். எவ்வித இடைத்தரகரும், பூசாரிகளும் வந்து போதனையின் புனிதத்தைக் கெடுத்துவிடக்கூடாது என்பதை அழுத்திச் சொல்லும் ஜெகே, நேரடியாக என்னுரையோடு பயணியுங்கள். தெளிவு பெறுவீர்கள் என்று சொல்கிறார். இவர் என்றும் தன்னைக் குரு என்று சொல்லிக் கொள்ளாததால் இவருக்கு வியாக்கியானம் செய்யும் ஆச்சார்யர்கள் கிடையாது. மார்க்கங்களை முற்றும் முழுவதுமாக நிராகரிப்பதால், இவரது போதனைகளே நமக்கு வழித்துணை. வழித்தடம் இல்லாத பயணம் என்பது பருந்தின் ஆலவட்டம்தான்.

    மார்க்கங்கள், சம்பிரதாயங்கள், மரபுகள் நிரம்பிய உலகில் அதை நிராகரிக்கும் இற்றையியல் துணை ஜெகே. போதிதருமர் சீனா போனவுடன், சீன அரசர் மகிழ்வுடன் உபசரித்து, தன்னிடமுள்ள பௌத்த நூல்களைப் பெருமையுடன் காட்டி, இவைதான் எம் துணை என்றாராம். அதற்கு போதிதருமர், முதலில் அவைகளைச் சுட்டெரியுங்கள். உங்கள் பளுவே அதுதான். வாய்மையை நேரடியாக சந்தியுங்கள், இடைத்தரகர்கள் இல்லாமல் என்றாராம். இந்த ஜென்னின் மொத்த உரு ஜெகே என்றால் மிகை ஆகாது.

    இவரதுவழி தனி வழியாக அமைந்து விட்டதால், இவரை எப்படி அணுகுவது எனத்தெரியாத பாமரன் விலக, மேட்டுக்குடி ஒரு கௌரவமாக இவரை அணைத்துக் கொண்டது. நந்து கிராமத்தில் வளர்ந்த பிள்ளை. நடுத்தர குடும்பம். அன்றாட பிரச்சனைகள் ஆயிரம். ஐந்து பெண்ணைப் பெற்றவன் ஆண்டி எனும் சூழலில் ஐந்து தமக்கையரோடு வளர்ந்தவன் நந்து. இந்த நந்துவின் பள்ளிப் பருவத்தில் யாரும் ஜெகே பற்றிப் பேசவில்லை, அமெரிக்க மெருகு கொண்ட அமெரிக்கன் கல்லூரியிலும் யாரும் பேசவில்லை, பல்கலைக் கழகத்தில் மேட்டுக்குடி சகவாசத்தால் முதன் முறை கேள்விப்படுகிறான் இவரைப் பற்றி. ஆனால் ஜெகேயைப் புரிந்து கொள்ளும் தனிமை, அவகாசம், சூழல் இவனுக்கு இந்தியாவில் கிட்டவே இல்லை. இவன் வெளிநாட்டில் இவரை அறிந்த பின் இவன் வாழ்வே மாறிவிடுகிறது.

    சுயசரிதையாகச் செல்லும் இக்குறுநாவல், ஏன் கிருஷ்ணமூர்த்தி அறியப்படவில்லை என ஆதங்கத்தோடு கேட்கிறது. பிற்காலத்தில் இவன் வாழ்வின் ஓர் அங்கமாகப் போகும் போதனைகள் ஏன் இவன் இளமைப் பருவத்தில் கிடைக்கவில்லை என்பதை ஆராய்கிறது இந்நாவல். ஒரு லெட்பீட்டர், அன்னிபெசண்ட் இல்லையென்றால் ஜெ.கிருஷ்ணமூர்த்தியும் ஓர் நந்துவாக இருந்திருப்பார் என்று யூகிக்கிறது இந்நாவல். இது நாவல்தானா? என்றும் தெரியவில்லை. சுயமுகமில்லாத ஏதும் நிற்பதில்லை என்பது நிலவியல் விதி. ஆனால் முகமற்ற சக்திகளே அவன் வாழ்வின் கதியை தீர்மானிக்கின்றன என்பது நிதர்சனம். இந்த முரண்பாடுகளுக்கிடையில் பயணிக்கிறது இந்நூல். இதில் பின்னால் வரும் கவிதைகளும் சேர்த்தி. நாவலில் கவிதையைச் சேர்க்கலாமெனத் தெரியவில்லை. ஆனால் கவிதையில் ஜெகே இருக்கிறார். என்ன செய்ய?

    மேட்டுக்குடி சகவாசம் வாழ்வியல் முறைமை ஆன பின் ஜெகேயின் உலகை நுணுக்கமாக நந்து தரிசிக்கிறான். அதிலுள்ள முரண்கள் இவனுக்கு முரண்நகை ஆகிறது. எப்படி ஜெகேயின் நினைவுகள் சில நேரம் விலை போகின்றன என்றும் காண்கிறான் நந்து. சமரசமற்ற விடுதலையின் சுவை கண்ட பின் நந்துவிற்கு சமகால வாழ்வு பசப்பலின் களமாகப் படுகிறது. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் உலகம் நந்துவை அந்நியப்படுத்துகிறது. போலித்தனம் இம்சை பண்ண நந்து உள்ளூர ஓர் ஜெகே ஆகிறான். ஆனால் அதை சொல்லக்கூடாது. சொன்னால் விபரீதமாகும். எனவே ஜெகேயுடனான ரகசிய உறவில் நடமாடுகிறான் நந்து. அவன் கவிதைகளே அதற்கு சாட்சி.

    இந்த வித்தியாசமான உரைநடை உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தரலாம். வாழ்த்துகள்.

    நா. கண்ணன் Ph.D.

    செங்கல்பட்டு

    ஜூன் 20, 2020

    A person wearing glasses Description automatically generated

    இது நாவலா அல்லது சுயசரிதையா என்ற கேள்வியுடன்தான் இந்த நூலின் ஆரம்பமே அமைகிறது. ஏதோ ஒன்றாக நாம் பாவித்துக் கொண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1