Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - April 2018
Kanaiyazhi - April 2018
Kanaiyazhi - April 2018
Ebook214 pages1 hour

Kanaiyazhi - April 2018

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

April month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateDec 21, 2021
ISBN6580109502916
Kanaiyazhi - April 2018

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - April 2018

Related ebooks

Reviews for Kanaiyazhi - April 2018

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - April 2018 - Kanaiyazhi

    http://www.pustaka.co.in

    கணையாழி, ஏப்ரல் 2018

    மலர்: 53 இதழ்: 01 ஏப்ரல் 2018

    Kanaiyazhi April 2018

    Malar: 53 Idhazh: 01 April 2018

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    எப்போது நடக்கும் இன்னொரு பெருவெடிப்பு?

    பெரு வெடிப்பும் கருந்துளையுமாகப்

    பிரபஞ்ச வாழ்க்கை!

    கடவுள் படைத்ததாகச் சொல்லும்

    பிரபஞ்சத்தில்

    கடத்தலுக்கும் கலப்படத்துக்கும்

    கடவுளும் தப்பவில்லை!

    வழிபாட்டுச் சிலைகள்

    எல்லைகள் கடந்து

    அருங்காட்சியகங்களில்!

    பழநி முருகனும் காஞ்சி நாதனும்

    பஞ்ச உலோகத்திற்குப் பதிலாக

    பஞ்ச உலகத்தில்!

    தமிழகத் தெருக்களில்

    இரத யாத்திரை!

    கடவுள் இருந்தால் சும்மா இருப்பாரா?

    இருக்கிறாரா? இல்லையா?

    என்பது கேள்வி இல்லை.

    என்ன செய்துகொண்டிருக்கிறார்?

    கண்ணகி கேட்டாரே

    "தெய்வமும் உண்டுகொல்?

    தெய்வமும் உண்டுகொல்?"

    அண்ட முட்டையின்

    பெருவெடிப்பில்

    காலமும் வெளியும்

    தீப்பற்றிக் கொண்டன.

    இரண்டாவது விநாடியில்

    ஈர்ப்பு விசை!

    30 கோடி ஆண்டுகளுக்குப்பின்

    விண்மீன்கள்!

    500 நூறு கோடி ஆண்டுகளுக்குமுன்

    சூரிய மண்டலம்!

    பெரிய விண்மீன் மரணத்தில்

    பெருவெடிப்பு!

    கருந்துளைகளைக்

    காட்டிக் கொடுக்கிறது ஈர்ப்புவிசை!

    எல்லைக்குள் வரும் எதையும்.

    இழுத்துப் போட்டுக்கொள்ளும்.

    தப்ப முடியாது;

    வெளியில் இருந்து அறிய முடியாது.

    உள்ளே வந்த எதையும்

    வெளியே விடாது.

    இன்மையா?

    இன்மைக்கு மாற்றாக ஏதோ ஒன்றா?

    என்ன நடக்கிறது இங்கே?

    அதிகாரம் எல்லாம்

    பெருவெடிப்பா?

    கருந்துளையா?

    அறிவியலின் பெருவெடிப்பான

    ஸ்டீபன் ஹாக்கிங் இப்போது

    மரணக் கருந்துளைக்குள்!

    காலம் எனும் பெருவெடிப்பு

    கருந்துளைக்குள் இப்போது.

    ஆயுள்ரேகை பற்றிய

    மருத்துவ சோதிடங்களைப்

    பொய்யாக்கினார்!

    ஆயுளுக்கு எல்லை சொல்லப்பட்டவர்

    பிரபஞ்சத்தின் எல்லைகளைத் தேடினார்.

    இரண்டு மூன்றாண்டுதான்

    வாழ்க்கை என்று

    காலம் குறிக்கப்பட்டவர்

    காலத்தின் தொடக்கப் புள்ளியைத்

    தேடிப் பயணித்தார்.

    தன் ஆயுட் காலத்தைப்

    பின்நோக்கி ஓடச் செய்தார்.

    காலத்தைப் பின்நோக்கி ஓட்ட

    மொழி வேண்டியிருக்கிறது.

    மொழி இல்லாமலும்

    உடலசைவுகளால் உலகத்தோடு

    உரையாடிக் கொண்டிருந்தார்.

    அவரது அசைவுகளே

    அறிவியல் இலக்கியங்கள் ஆகின.

    மொழிகளுக்கு எல்லைகள் இருக்கலாம்

    இலக்கியங்களுக்கு?

    காலம் எல்லைகளை

    உடைக்கும் மாற்றும்

    இலக்கியங்களைப் போல!

    தான் இருக்கும் இடத்தின் வடிவமே

    தன்வடிவமென இருக்கும் தண்ணீர்.

    ஆனாலும்

    பஃறுளி ஆற்றுப் பன்மலை அடுக்கத்துக்

    குமரிக் கோடும் கொடும்கடல் கொண்டதால்

    தமிழத்தின் எல்லைகள் மாறிப் போயினவே!

    தனக்கென வடிவமற்ற தண்ணீர்

    பொங்கி எழுகிற போது

    தரையின் வடிவத்தை மாற்றுகிறது.

    அணுக்கள் பிரியப் பிரிய ஆற்றல்

    தண்ணீர் சேர, சேர வெள்ளம்

    மக்களைப் போல.

    தூத்துக்குடியில்

    ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து

    மக்களின் உயிர் காப்புப் போராட்டங்கள்!

    ஜனநாயக உரிமைப் பறிப்பில்

    பணம் சேர்க்கப் பாடுபடும்

    ஆட்சி அதிகாரங்கள்!

    உலகம் வளைக்கும்

    முகநூல் தில்லுமுல்லுகள்!

    உடைக்கப்படும் மக்களின் நம்பிக்கைகள்!

    தீர்வு என்ன?

    காலமும் வெளியும்

    காவலற்றுப் போகுமோ?

    மதவாதிகள் சொல்கிறார்கள்

    "பெருவெடிப்பு

    கடவுள் இருப்பைக் காட்டுகிறதாம்."

    ஸ்டீபன் ஹாக்கிங் சொல்கிறார்,

    "பிரபஞ்சத்தில்

    கடவுளுக்கு வேலை இல்லையாம்."

    அப்படியென்றால்

    இனி மக்களின் பெருவெடிப்பில்தான்

    காலமும் வெளியும்!

    அதுசரி

    எப்போது நடக்கும்

    இன்னொரு பெருவெடிப்பு?

    அன்புடன் ம.ரா

    ***

    உள்ளடக்கம்

    கட்டுரை - கணபதி சுப்பிரமணியம்

    கவிதை – அபிமானி

    சிறுகதை - க. வீரபாண்டியன்

    ஏன் எழுதினேன்? - சரவணன் சந்திரன்

    கவிதை - கெளந்தி. மு

    கட்டுரை - கவிதைக்காரன் இளங்கோ

    கவிதை - இலக்கியா நடராஜன்

    குறுநாவல் - சித்துராஜ் பொன்ராஜ்

    கட்டுரை - மு. இராமசுவாமி

    கவிதை – வைதீஸ்வரன்

    நேர்காணல் - தமிழில் : பாரதிராஜா

    கட்டுரை - எஸ். சுவாமிநாதன்

    நினைக்கப்படும் - மரன்

    கவிதை - லாவண்யா சுந்தரராஜன்

    கவிதை - கெளசல்யா ரங்கநாதன்

    கட்டுரை - மது ஸ்ரீதரன்

    எதிர்வினை - ப. முகமது ஜமாலுதீன்

    கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி

    ***

    கட்டுரை - கணபதி சுப்பிரமணியம்

    ஒரு கணம் ஒரு யுகம்

    2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நான் அமெரிக்காவின் சான் பிரான்ச்சிஸ்சோ பகுதியில் வாழ்ந்துகொண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துகொண்டு இருந்த சமயம், நெருங்கிய நண்பன் ஒருவன் தொலைபேசியில் அழைத்து, வருகிற வெள்ளிக்கிழமை மாலை வேலையெதுவும் இருக்கிறதா? என்று கேட்டான், எதுவும் இல்லையென்றதும், அப்படி ஏதாவது இருந்தாலும் அதை ஒத்திப்போட்டுவிடு, நாம் அன்று ஒரு நிகழ்ச்சிக்கு செல்லப்போகிறோம், என்று சொல்லிவிட்டு என்ன நிகழ்ச்சியென்றும் கூறினான், அதை கேட்டுவிட்டு, உண்மையில் என்னால் என் காதுகளை நம்பமுடியவில்லை.

    வாழும் அய்ன்ஸ்டைனாக பாவிக்கபட்டும், ஐசாக் நியூட்டன் அமர்ந்த கேம்ப்ரிட்ஜ் பகலைக்கழக கணித இருக்கையில் அமர்ந்துகொண்டும் சம காலத்திலேயே உலகப்புகழடைந்த விஞ்ஞான பிரபலம் ஸ்டீபன் ஹாக்கிங்(Stephen Hawking) அன்று சொற்பொழிவு நிகழ்த்துகிறார் என்பதே என் நண்பன் கூறிய அந்த மகிழ்ச்சியான செய்தி. அவருடைய 'தி பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம்' எனும் நூலை மிகுந்த ஆர்வத்துடன் கல்லூரி நாட்களில் படித்திருந்தேன்.

    அந்த வெள்ளிக்கிழமை மாலை, கூபெர்டினோவிலுள்ள ‘டி அன்சா’ கல்லூரியில் அமைந்துள்ள பிளின்ட் நிகழ்கலை மையம் (Flint Center for the Performing Arts) நோக்கி நண்பர்கள் நாங்கள் மூன்று பேர் பயணித்தோம். ‘ஆல் ரோட்ஸ் லீட் டு ரோம்’ என்று கூறுவது போல அன்று சிலிகான் வேலி வாழ் மக்கள் அனைவருமே அந்த இடத்தை நோக்கி செல்வது போலத் தோன்றியது. ஒரு சினிமா பிரபலத்தின் வருகையினை மிஞ்சிய கூட்டம் அன்று அங்கே கூடியிருந்தது.

    ஆயிரத்திற்கும் மேலாக அங்கே வந்திருந்த அனைவரும், அரங்கத்திற்குள் சென்று அமர்ந்து அரங்கம் அமைதியடைய, அனைவரின் பார்வையும் ஒளிபாய்ச்சப்பட்டிருந்த அந்த மேடை மீதே இருந்தது. அதிர்ஷ்டவசமாக முன் சில வரிசைகளிலேயே எங்களுக்கு இருக்கை கிடைத்தது, நாங்களும் பேராவலுடன் காத்திருந்தோம்.

    நேரம் சரியாக மாலை 8 மணி ஆனவுடன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், பல பீடிகைகளுடன், ஹாக்கிங்கின் கூறும் சரிதையினை முன்வைத்து, அவருடைய பங்களிப்புகளை பற்றிய குறிப்பினையும் தந்து, ஹாகிங்கை வரவேற்றார். மேடையின் திரை மறைவிலிருந்து சக்கர நாற்காலி ஒன்று மெல்ல மேடைக்குள் ஊர்ந்து வரத்தொடங்கியது, அதில் அமர்ந்திருந்த மிக மெல்லிய உருவத்தினை கண்டதும் அரங்கமே அதிர்ந்துவிடும் அளவுக்கு கரகோஷம் எழுப்பி அவரை அன்புடன் வரவேற்றது.

    அந்த நாற்காலியில் பொருத்தப்படிருந்த ஒரு கணினியிடம், தன் உடலில் தன்னால் இயக்கமுடிந்த மிகசில பகுதிகளில் ஒன்றான தன்னுடைய விரலினை கொண்டு சிமிங்க்ஞைகளை அளித்து, ‘தி யூனிவெர்ஸ் இன் எ நட்ஷெல்’ (மணிச்சுருக்கத்தில் பிரபஞ்சம்) எனும் தலைப்பில் அவர் உரையாற்றத் தொடங்கினார். தன்னுடைய உடலின் பெரும்பாலான இயக்கத்தையும் பேசும் திறனையும் ALS எனும் கொடிய நோயிடம் இழந்துவிட்ட ஹாகிங், விரல் மூலம் அந்த கணினிக்கு உத்தரவுகளைப் பிரப்பிக்க, அவர் சொல்ல நினைத்ததையெல்லாம் நமக்கு பரிச்சயமான அந்தக் குரலில் ஒரே தொனியில் தட்டையாக ஒலிபெருக்கியின் மூலம் அது அறிவிக்கதொடங்கியது.

    ஹாக்கிங் இந்த பிரபஞ்சத்தினைப் பற்றி பேசத்தொடங்கினார். நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் இந்தப் பிரபஞ்சம் புரிந்துகொள்ளுவதற்கு நாம் எண்ணுவது போல அவ்வளவு எளிதல்ல, அதன் அடிப்படை கூறுகளான காலமும், வெளியும் மிகவும் விசித்திரமானவை என்று கூறினார்.

    சீராக முன் சென்றுகொண்டிருக்கும் காலம் நமக்கு மிகவும் பரிச்சயமானது, இருப்பினும் அதற்கும் ஒரு தொடக்கபுள்ளி என்று ஒன்று உள்ளது, அதுபோலவே நாம் மிகவும் சுலபமாக உணர்ந்துவிடும் வெளியும் அதே புள்ளியிலிருந்தே உதித்தது, அதற்கு முன் காலமும் இல்லை, வெளியும் இல்லை என்று மிக முக்கிய கோட்பாடான சிங்குலாரிட்டி(Singularity) பற்றி விளக்கினார்.

    நமக்கு ஏற்படும் நேரிடையான காலம் மற்றும் வெளியிலான அனுபவங்கள், விஞ்ஞான ரீதியில் ஆராயப்படும் பொழுது மிக விசித்திரமாக இயங்கதொடங்குகின்றன, பிளாக் ஹோல்(Black Hole) எனும் தீவிரமானதிண்மை கொண்ட நட்சத்திரம், வெளியினையே வளைத்துவிடுகின்றது, அதனருகே செல்லும் ஒளியினையுமேகூட வளைத்துவிடும் என்றும், நிகழ் காலத்திலிருந்து எதிர்காலத்தினை நோக்கி ஒரே திசையில் பயணிக்கும் காலம் எனும் கருத்துருவம், நிகழ் காலத்திலிருந்து கடந்த காலத்தை நோக்கி பின்னோக்கிய பயணம் மேற்கொள்ள விஞ்ஞானத்தில் எந்தத் தடையும் இல்லை என்பது போன்ற ஆச்சரியமூட்டும் தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

    இந்தப் பிரபஞ்சத்தினைப் பற்றி ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு மிகச்சிறிய பகுதியும் எவ்வாறு இயங்குகின்றது? என்று கேட்கமுடிந்த நம்மால் ஏன் என்ற கேள்விக்கு விடைகாண முடியாது என்று இனிமையாக முடித்தார்.

    சுமார் அரை மணிநேரம் நீடித்திருக்கும் அந்தப் பேச்சின் முடிவில், கேள்வி பதில் பகுதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, மிகுந்த ஆர்வத்துடன் பலரும் கேள்விகளை எழுப்பினார்கள், அவற்றில் சிலவற்றைத் தேர்வுசெய்து, தன்னுடைய கணினியின் மூலமாக பதில்களையும் விளக்கங்களையும் பொறுமையுடன் கூறினார்.

    அந்த அருமையான சொற்பொழிவு நிறைவுபெற்றுவிட, அவரை அருகில் சென்று நேருக்கு நேர் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பெரிய வரிசை விரைவில் கூடிவிட, அதனைக் கடந்து சென்று அவர் பக்கத்தில் நின்றபொழுது அந்தக் கணம் ஒரு யுகம் போலவே தோன்றியது. கண்களால் நம்மை பார்க்கிறார் ஆனால் அவர் பார்க்கிறாரா என்பதற்கான எந்த சிமிங்க்ஞயும் இல்லை, அந்த அசாதாரண மேதையின் முகத்தையும் அவர் உடலினையும் மிக அருகே கண்டபொழுது, உலக பிரசித்தி, அறிய கண்டுபிடிப்பு, பெரும் விஞ்ஞானி என்பதையெல்லாம் கடந்து, மனித மனதின் உறுதியும், நாளை என்ற ஒன்றினை எதிர்நோக்கிய அதன் நம்பிக்கையும் என்னை வியக்கவைத்தது.

    தன்னுடைய 21ஆவது வயதிலேயே மருத்துவம் அவர் வாழ்க்கைக்கு கெடுவைத்துவிட்ட நிலையில் அதன் பின் 50ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பாதிப்பினை எதிர்கொண்டு தொடர்ந்து உற்சாகத்துடன் செயல்பட்டு கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி, இது போல சொற்பொழிவுகளில் உலகம் முழுக்க பங்கெடுத்துவந்த ஹாக்கிங் நமக்கு கொடுத்த மிகப்பெரிய படிப்பினை அவர் தன்னுடைய ஆர்வத்தினை பின்தொடர்ந்து அவர் மேற்கொண்ட புரிதல்களை நோக்கிய பயணம் என்றே தோன்றுகிறது..

    gpathy@yahoo.com

    ***

    கவிதை – அபிமானி

    Enjoying the preview?
    Page 1 of 1