Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vizhithiraiyil Nirkkum Piramozhi Thiraipadangal
Vizhithiraiyil Nirkkum Piramozhi Thiraipadangal
Vizhithiraiyil Nirkkum Piramozhi Thiraipadangal
Ebook331 pages1 hour

Vizhithiraiyil Nirkkum Piramozhi Thiraipadangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'விழித்திரையில் நிற்கும் பிறமொழித் திரைப்படங்கள்' என்னும் இந்த நூலில், பிறமொழித் திரைப்படங்கள் பற்றியும், அதில் நடித்திருக்கும், நடிகர்கள் மற்றும் அதன் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ஒளிபதிவாளர்களின் வியக்க வைக்கும் திறமைகளை பற்றியும் தொகுக்கப்பட்டுள்ளது. வாருங்கள் நாமும் அவற்றைப் பற்றி வாசித்து வியப்படைவோம்.

Languageதமிழ்
Release dateJan 21, 2023
ISBN6580159009230
Vizhithiraiyil Nirkkum Piramozhi Thiraipadangal

Read more from Neyveli Bharathikumar

Related to Vizhithiraiyil Nirkkum Piramozhi Thiraipadangal

Related ebooks

Reviews for Vizhithiraiyil Nirkkum Piramozhi Thiraipadangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vizhithiraiyil Nirkkum Piramozhi Thiraipadangal - Neyveli Bharathikumar

    http://www.pustaka.co.in

    விழித்திரையில் நிற்கும் பிறமொழித் திரைப்படங்கள்

    Vizhithiraiyil Nirkkum Piramozhi Thiraipadangal

    Author:

    நெய்வேலி பாரதிக்குமார்

    Neyveli Bharathikumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/neyveli-bharathikumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஜன்னலுக்கு வெளியே...

    1. ‘THE DIVING BELL AND THE BUTTERFLY’ (பிரெஞ்சு மொழி)

    2. THE POPE’S TOILET (ஸ்பானிஷ் மொழி)

    3. IN THIS WORLD (பெர்சியன் மற்றும் ஆங்கிலம்)

    4. THE STORY OF WEEPING CAMEL (மங்கோலிய மொழி)

    5.THE KILLING FIELDS (ஆங்கிலம் மற்றும் கெமர்)

    6. KHUDAKAYLIYE (பஸ்தோ மற்றும் உருது)

    7. HEART BEAT DETECTOR (பிரெஞ்சு மொழி)

    8. APOCALYPTO (மாயன் மொழி)

    9. THE GREEN MILE (ஆங்கிலம்)

    10. AUGUST RUSH (ஆங்கிலம்)

    11. PEEPLI (LIVE) (இந்தி)

    12. FARENHEIT 451 (ஆங்கிலம்)

    13. GOOD BYE CHILDREN (பிரெஞ்சு மற்றும் ஜெர்மன்)

    14. LOOKING FOR COMEDY IN MUSLIM WORLD (ஆங்கிலம்)

    15. U – 571 (ஜெர்மன் மற்றும் ஆங்கிலம்)

    16. BLACK BOARDS (குர்தீஷ்)

    17. A SHORT FILM ABOUT KILLING (போலந்து)

    18. TSOTSI (தென் ஆப்பிரிக்கா)

    19. லெமன் ட்ரீ (இஸ்ரேல்)

    20. THE BRIDGE ON THE RIVER KWAI (ஆங்கிலம்)

    21. 127 HOURS (ஆங்கிலம்)

    22. PLANES, TRAINS, AUTOMOBILES (ஆங்கிலம்)

    23. HIROSHIMA (ஜப்பனிய மொழி மற்றும் ஆங்கிலம்)

    24. KUNDUN (ஆங்கிலம்)

    25. PAPILON (ஆங்கிலம்)

    26. CAST AWAY (ஆங்கிலம்)

    27. Close - Up (ஈரான்)

    28. INNOCENT VOICES (ஸ்பானிஷ்)

    29. SECRET BALLET (ஈரான்)

    30. CAMERA BUFF (போலந்து)

    ஜன்னலுக்கு வெளியே...

    நெய்வேலி பாரதிக்குமார்

    இளம் பருவத்தில் ஒருமுறை பாலக்காடு மாவட்டத்தின் பரம்பிக்குளம் மலைப்பகுதிக்குப் பயணித்தேன். சூரியன் உள்ளே நுழையக் கூசியபடி தூரவே நின்று வனப்பகுதியின் எழிலை இரசித்துக் கொண்டிருந்தது. மெல்லிய சாரல் உடலை நனைத்தபடி பெய்து கொண்டிருந்தது. விரல்மீது படும் ஒவ்வொரு இலையிலும் ஒரு துளி நீர் சொட்டிக்கொண்டே இருக்கும். ஒரே மாதிரியான இறுக்கமான முகங்கள், கிசுகிசுத்த குரலில் மென்மையான உரையாடல் என்று அது வேறொரு உலகமாக இயங்கிக் கொண்டிருந்தது. பரந்த உலகின் விரிந்த பரப்பில் அந்த இடம் ஒரு சிறிய புள்ளிதான்.

    இந்தியாவில்தான் இது சாத்தியம். சில நூறு கிலோமீட்டர் தூரம் பயணித்தால் நீங்கள் வேறொரு கிரகத்தில் உலவுவது போன்றதொரு பின்னணியை இயற்கையும் மனிதர்களும் தந்து கொண்டே இருப்பார்கள்.

    பயணங்கள் வழியே தரிசிக்கப்படும் இவ்வுலகம் அதி அற்புதமானது. அதே பூமி, அதே சூரியன் ஆனால் வெவ்வேறு வாழ்க்கை, வெவ்வேறு பிரச்சினைகள், வெவ்வேறு உணர்வுகள் என்று கலைத்துப் போடப்பட்ட கலைடாஸ்கோப்பின் கண்ணாடித் துண்டுகள் போல் இரசிக்க ஆயிரம் வர்ணங்களை விரிக்கும் இந்த உலகம் எத்தனை உன்னதமானது...!

    ஆனாலும் பயணங்கள் எல்லோருக்கும் சாத்தியப்படுகிறதா என்ன? கலைகளின் வழியேதான் இந்த தரிசனங்கள் சாத்தியப்படுகின்றன. குறிப்பாக, திரைப்படங்கள், எளிய பார்வையாளருக்கும் இந்த அற்புத தரிசனத்தை அருளுகின்றன.

    பிறமொழித் திரைப்படங்களைக் காண்கிற வாய்ப்பு, டிவிடிக்கள் வந்த பிறகு எல்லோருக்கும் சுலபமாக அமைந்து விட்டது. விஞ்ஞானத்தின் பிரம்மாண்ட வளர்ச்சியில் உலகம் நம் வரவேற்பறையில் கண்ணெதிரே உலவிக் கொண்டிருக்கிறது. அவ்வரிய தரிசனங்களின் வழியே எனக்கு அறிமுகமானவர்கள் எத்தனை பேர்...!

    கண்ணிமைச் சிமிட்டலில் ஒரு புத்தகத்தையே எழுதிய ழீன் டொமினிக், க்வாய் நதி பாலத்தில் மரண இரயில் பாதையில் புதைந்து போன சக தமிழன், தனித்து விடப்பட்ட தீவில் ஒவ்வொரு நாளையும் போராடியே கழித்த டாம் ஹாங்க்ஸ், கரும்பலகையை சுமந்து கொண்டு ஈராக்கின் எல்லைப் பகுதியில் நடந்து போன ஆசிரியன், தான் ஈன்ற கன்றுக்கு பால் தர மறுத்த ஒட்டகம் என அவர்களோடு நெருங்கி அவர்களின் உணர்வுகளோடு கலந்து விட்ட அனுபவங்களை பிறமொழித் திரைப்படங்களே எனக்குத் தந்தன.

    அந்த அனுபவங்களை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பினை எனக்கு வழங்கிய, தனது சிற்றிதழில் தொடர் கட்டுரையாக வெளியிட்ட மறைந்த சகோதரர் செளந்தர சுகன் இதழ் ஆசிரியர் திரு. சரவணன் எனப்படும் சுகனையும் அவரது குடும்பத்தாரையும் நன்றியோடு இந்த தருணத்தில் நினைத்துக் கொள்கிறேன்.

    பிறமொழித் திரைப்பட டிவிடிக்களை நான் கேட்கும்போதெல்லாம் எனக்குத் தந்துதவிய திரைப்பட ஒளிப்பதிவாளர் அன்புக்குரிய சகோதரர் திரு.சி.ஜெ. இராஜ்குமார் அவர்களுக்கும், அவர்மூலம் எனக்கு அறிமுகமான இயக்குநர் பாரதிராஜாவின் உதவி இயக்குனர் திரு வேல்முருகன் அவர்களுக்கும், என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

    மறைந்த ஆவணப்பட இயக்குநர் சேலம் ஆண்டோ அவர்களும், அவரிடம் இருந்த சில நல்ல திரைப்படங்கள் மற்றும் அவரது குறும்படங்கள் ஆகியவற்றை சிரமம் பாராமல் அனுப்பி வைத்தார். அவரது ஆன்மா எப்பொழுதும் நேர்த்தியான கலைப்படங்களை நேசித்துக் கொண்டே இருக்கும். அவருடைய நினைவைப் போற்றுவதில் நெகிழ்கிறது நெஞ்சம்.

    இந்த கட்டுரைத் தொடர் ‘செளந்தர சுகனில்’ வெளிவந்த சமயம் தவறாமல் உடனுக்குடன் வாசித்து எனக்கு ஊக்கமும் ஆதரவும் நல்கிய பரமக்குடி பா. உஷாராணி, வெற்றிப் பேரொளி, அரூர் இரவீந்திர பாரதி, சக்தி அருளானந்தம், கிருஷ்ணப்ரியா இன்னபிற சுகன் வாசகர்களுக்கும் எனது நன்றிகள்.

    என் நூல்கள் வெளிவரும்தோறும் அவற்றுக்கு ஒரு விமர்சன அரங்கை அமைத்துத் தருகிற செஞ்சி குறிஞ்சி இலக்கிய வட்டத் தோழர் ஜெ. ராதாகிருஷ்ணன், அவரது நண்பர்கள் செந்தில்பாலா, நினைவில் வாழும் செல்வன், இயற்கை சிவம், பேராசிரியர் நெடுஞ்செழியன், தமிழினியன், செந்தில் வேலன் ஆகியோருக்கும் என் நன்றிகள்.

    இந்த கட்டுரைத் தொடர் நூலாக வெளிவர முயற்சி எடுத்தபோது எவ்வித ஆட்சேபமும் சொல்லாமல் உடன் சம்மதித்த தோழி தேவகி அவர்களின் உற்சாகமான வார்த்தைகளை என்றும் நெஞ்சில் கொள்வேன். அவரது பங்களிப்பும் ஒத்துழைப்பும் மகத்தானது.

    அவரை முன்னிறுத்தி பெருமிதத்துடன் அழகு பார்க்கும் மதிப்பிற்குரிய எம்.ஆர் அவர்களது பெருந்தன்மையான பண்புக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள். இந்த இருவரையும் எனக்கு அறிமுகம் செய்த பல்லவி குமாருக்கு பிரத்தியேகமான நன்றிகள்.

    இந்த நூலுக்கான அணிந்துரைக்காக நடிகர் திரு இராஜேஷ் அவர்களை தொடர்பு கொண்டோம். இதற்குமுன் அவரை சந்தித்ததில்லை. அலைபேசி வழியேதான் பேசினோம். போக்குவரத்து நெரிசலில், சரியில்லாத சாலையில் பயணித்தமையால் அரைமணி நேரம் தாமதித்துதான் அவரது இல்லம் சேர்ந்தோம். வேறொரு நிகழ்வுக்காக செல்ல இருந்த அவர் எங்களுக்காக காத்திருந்தார். அவரோடு உரையாட அரைமணி நேரம் கூடுதலாக ஒதுக்கியதோடு மடை திறந்த வெள்ளம் போல வெளிப்படையான அவரது பேச்சு எங்களை ஆச்சர்யப்படுத்த வைத்தது. அவர் பார்த்திருந்த அயல்மொழி திரைப்படங்கள் குறித்தும், ஆன்மீகம் மற்றும் அவருக்கு விருப்பமான ஜோதிடம் குறித்தும் அவரது ஆர்வமான உரையாடல் எங்களை அவரோடு இன்னும் நெருக்கமாக்கியது. அவரது இயல்பான இணக்கமான பண்பு அவரை ஒரு சகோதரனாக அடையாளப்படுத்தியது. அவருக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்.

    அன்பின் அம்மா சாந்தாவுக்கும், எனது எல்லா இலக்கிய செயல்பாடுகளுக்கும் துணை நிற்கும் எனது மனைவி ஆதிலட்சுமி என்கிற நிலாமகளுக்கும், எனது பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய எனது மகள் பிருத்வி மதுமிதா, எனது உயிருக்கும் மேலான எனது மகன் சிபிக்குமார், எனது தோழர்கள் அய்யப்பன், பாலு, பாபு, புகைப்படக் கலைஞர் என். செல்வன், எழுத்தாளர் மாலா உத்தண்டராமன், ரிஷபன், தயாளன், நிழல் திருநாவுக்கரசு இன்னபிற நண்பர்களுக்கும்...

    நான் பணியாற்றும் என்.எல்.சி. நிறுவனத்துக்கும், எனக்கு தமிழூட்டிய ஆசிரியர் பெருமக்களுக்கும், எனை உயிர்ப்போடு வைத்திருக்கும் என் இனிய தமிழுக்கும் என் இதயம் நெகிழ்ந்த நன்றிகள்...

    மிக்க அன்புடன்

    பாரதிக்குமார்

    நெய்வேலி

    9442470573

    sbharathikumar@gmail.com

    www.bharathikumar.blogspot.com

    1. ‘THE DIVING BELL AND THE BUTTERFLY’ (பிரெஞ்சு மொழி)

    வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமானது! அதன் புதிர் முடிச்சுகளில் அவிழ்க்கப்படாமல் எத்தனை புதையல் மூட்டைகள் அமிழ்ந்து கிடக்கின்றன! ஒவ்வொரு பொழுது விடியும் போதும் நம் கற்பனைக்கும் எட்டாத அதிசய விஷயங்களை நம் முன் இந்த உலகம் கொட்டிக் கவிழ்க்கிறது.

    இயற்கைக்கும் மனிதனுக்குமான விளையாட்டு, யாராலும் யூகிக்க முடியாத வினோதமான அலைகழிப்புகளில், மனிதனைப் புரட்டிப் போட்டபடியிருக்கிறது. இருப்பினும், மனிதர்கள் அசாதாரணமான எந்தச் சூழலையும் வென்று, அசாத்தியமான சாதனைகளைப் படைத்தபடி இருக்கின்றனர்.

    ‘ழீன் டொமினிக்’ எனும் பிரெஞ்சு எழுத்தாளர் எப்போதும் உற்சாகமான, கொண்டாட்டமான மனநிலையுடையவர். பத்திரிகையாசிரியரும்கூட. விளம்பரங்களுக்கான மாடல்களைப் படம்பிடித்து அவர்களைப் பற்றிய தகவல்களை எழுதக்கூடியவர். செலின் என்கிற மனைவியும், மூன்று குழந்தைகளுமாக கவலையேதுமின்றி நாட்களை நகர்த்திக் கொண்டிருப்பவர்.

    எவரும் எதிர்பாராத வேளையில், திடீரென ஒருநாள் அவரது மூளையையும், முதுகெலும்பையும் இணைக்கும் நரம்புகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ‘கோமா’ நிலைக்குத் தள்ளப்படுகிறார். மூன்று வாரம் அதே நிலையிலிருப்பவர், கண்விழிக்கும்போது தலையிலிருந்து கால் வரை எந்த உறுப்பும் இயங்காமல் போய்விடுகிறது. Locked in Syndrome எனும் முடக்குவாத நோய் காரணமாக இந்த நிலைக்கு ஆளாகிறார். இடது கண்விழியும் இமையும் மட்டும் அசைகின்றன. காதுகள் கேட்கும் சக்தியை இழக்கவில்லை. பிரான்சின் கடற்கரை நகரமான ‘பெரக் சூ மெர்’-ன் அதிநவீன மருத்துவமனையில் அவருக்காக மருத்துவக் குழுவொன்று போராடிக் கொண்டிருக்கிறது. அவரது மூளை எல்லாவற்றையும் கவனிக்கிறது; உள்வாங்குகிறது. ஆனால் மூளையின் கட்டளைக்கு உறுப்புகள் எதுவும் (இடது கண் விழி மற்றும் இமைகள் தவிர) கீழ்படிவதில்லை.

    பேச்சுப் பயிற்சிக்காக ‘ஸ்பீச் தெரபிஸ்ட்’ இருவர் மிகுந்த முயற்சி எடுக்கின்றனர். பேச்சுப் பயிற்சியினால் அவரோடு உரையாட ஒரு வழிமுறையைக் கண்டடைகின்றனர். ‘ழீனி’டம் இயங்கும் ஒரு கண்ணை வைத்து அவரிடம் பேசியாக வேண்டுமென்பதால், அவருக்குத் தேவையானவற்றைக் கேள்விகள் வடிவில் கேட்பது; ‘ஆம்’ என்பதற்கு ஒரு முறை கண்ணிமைக்கவும், ‘இல்லை’ என்பதற்கு இருமுறை கண்ணிமைக்கவும் பயிற்சியளிக்கின்றனர். இது ஓரளவு பலனளிக்கிறது.

    அதற்கடுத்த முயற்சியாக ஆங்கிலத்தில் அதிகம் பயன்படக்கூடிய எழுத்துகளை ஒரு ப்ளாஸ்டிக் பலகையில் பொறித்து ஒவ்வொரு எழுத்தாக ஒருவர் வாசிப்பது; ழீன் மனதில் உள்ள வார்த்தையின் எழுத்து வரும்போது ஒருமுறை கண் இமைக்குமாறு பழக்குகின்றனர். ஆக, அதுவரை கேட்ட கேள்விக்கு ஆம், இல்லை என்பதற்கு மட்டும் பதில் என்கிற நிலையிலிருந்து சிறுசிறு வார்த்தைகளால் ஆன கேள்விகளைக் கேட்டுப் பதிலடையும் நிலைக்கு முன்னேற்றமடைகிறார். முதலில் வாழ்க்கையை வெறுத்து விரக்தியுடன் பேசும்(!) ழீன், கொஞ்சம் கொஞ்சமாக தன்னம்பிக்கையடைந்து மனதை உறுதியாக்கிக் கொள்கிறார்.

    பேச்சுப் பயிற்சி நிபுணர் மெண்ட்லில்-ன் சலிப்பற்ற உரையாடலில் உற்சாகமாகி, இழந்த தன்னம்பிக்கையைப் பெற்ற ழீன், தான் ஒரு புத்தகம் எழுத விரும்புவதாகவும், அதற்கு உதவ முடியுமா என்றும் கேட்கிறார். மெண்ட்லில் அதற்குச் சம்மதித்து, ஏற்கனவே ழீனுடன் ஒரு புத்தகத்துக்காக ஒப்பந்தம் போட்டிருந்த பதிப்பாளரிடம் பேசி அவர்களையும் சம்மதிக்கச் செய்கிறார். புத்தகம் எழுதும் பணி துவங்குகிறது. மெண்ட்லில் ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்து ழீனின் இமையசைவை வைத்து வார்த்தைகளைக் கோர்த்து வரிகளாக, பத்தியாக, பக்கமாக புத்தகம் உருவாகிறது. கிட்டதட்ட இரண்டு இலட்சம் எழுத்துகள், ஒவ்வொரு எழுத்துக்கும் அதிகபட்சம் ஐந்து நிமிடம் என்கிற காலக்கணக்கில் மெண்ட்லினின் பொறுமையான ஒத்துழைப்பினால் ‘Diving Bell and the Butterfly’ என்ற தலைப்பில் நூல் வெளியானது. Diving bell என்பது உருளும் விழிகளையும் Butterfly என்பது படபடக்கும் இமைகளையும் குறிப்பதாக ழீன் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடும்.

    புத்தகம் வெளிவந்த பத்து நாட்களில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ழீன், இறந்து விடுகிறார். பிரான்சில் நடந்த இந்த உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து ழீன் எழுதிய நூலின் தலைப்பையே கொண்டு படமாக வெளிவந்துள்ளது.

    கதை ஒரு அசாதாரண, அசாத்திய நிகழ்வென்றாலும், அதைப் படமாக்குவதும் ஒரு சுவாரஸ்யமற்ற முயற்சிதான். ஆனால் வெகு சாமர்த்தியமான திரைக்கதை, படமாக்கிய நுட்பம், அற்புதமான ஒளிப்பதிவு, சிறந்த நடிப்பு இவற்றின் மூலம் உலகின் மிகச்சிறந்த படங்கள் என்று ஒரு பட்டியல் தயாரித்தால், அதில் நிச்சயம் இடம்பெறக்கூடிய படமாக இது அமைந்திருக்கிறது.

    படத்தின் துவக்கக் காட்சிகள் மங்கலாக, தெளிவற்றுத் தெரிகின்றன. ஒரு மருத்துவமனையில் மருத்துவர்களும் ஊழியர்களும் பரபரப்பாக அங்குமிங்குமாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக காட்சி தெளிவாகி, கிட்டதட்ட நம் முகத்துக்கு அருகில் வந்து மருத்துவர்கள் ஏதோ கேட்பது போல, அத்தனை நெருக்கமான மிக அண்மைய காட்சிகள் (Tight close-up shots). அதாவது, ழீனின் கண்கள் வழியே புறக்காட்சிகள் நம்முன் காட்டப்பட்டிருக்கின்றன. மருத்துவர்களின் கேள்விகளுக்கு ழீன் பதில் சொல்வதுபோல் ஒரு குரல் வருகிறது. ஆனால் அது மருத்துவர்களின் காதுகளில் கேட்பதில்லை. உண்மையில் அது ழீன், தான் பேசுவதாக நினைக்க, அது அவரின் ‘மனம்’ பேசுகிற குரலென்பது சிறிது நேரத்துக்குப் பின்னே நமக்குப் புரியும். படம் துவங்கியபின் 37-வது நிமிடத்தில் தான் ழீனின் முழு உருவம் திரையில் தெரியும். அதுவரை படமாக்கப்பட்ட அத்தனைக் காட்சிகளும் ழீனின் பார்வைக் கண்ணோட்டத்தில் அல்லது பார்வை மையத்தில் இருந்து (Point of View) படமாக்கப்பட்டிருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் நீங்கள் ழீன் ஆக மாறியிருப்பீர்கள். தன்னம்பிக்கையோடு ழீன் தனது புத்தகத்துக்கான முதலெழுத்தை அடையாளப்படுத்தும் காட்சியில்தான் ழீனின் முழு உருவம் தெரியும் படி இயக்கியிருக்கும் படத்தின் இயக்குநர் ஜூலியன் உத்தி அபாரமானது.

    ழீனிடம் நோய் வந்தபிறகு எஞ்சியவை மூன்றே விஷயங்கள்தான்.

    1. அவரது நினைவுகள்

    2. அவரது கற்பனைகள்

    3. அசையும் இமைகள்

    இவற்றை மட்டுமே வைத்து ஒரு படத்தை உருவாக்குவது அத்தனை சுலபமல்ல.

    இம்மாதிரியான கதைக்குப் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் அதிகம் பயன்படுத்துவதுதான் இயக்குநருக்கு இருக்கும் ஒரே உபாயம். ஆனால், ழீனை நோய் தாக்கிய அன்று நடந்த சம்பவம், தந்தையுடனான அவரது நெருக்கத்தை உணர்த்தும் ஒரு காட்சி, மனைவி மற்றும் குழந்தைகளுடனான ஒரு காட்சி இவை தவிர பெரும்பாலும் முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்ட பின்னர் வரும் நிகழ்வுகளை வைத்தே மொத்தக் கதையையும் காட்சிப்படுத்துவது மிகப்பெரிய சவால். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் இயக்குநர் ஜூலியன் ஸ்நாபெல்.

    ழீன் மூன்று வார கோமா படுக்கையிலிருந்து கண் விழிக்கும் படத்தின் துவக்கக் காட்சிகள், நீர் நிலைக்குப்பின் தெரியும் பிம்பங்கள் போல கலங்கலாகத் தெரியும்போது, ‘என்னப்பா கேமரா பண்ணியிருக்கிறான்’ என்ற அபவாதத்தை பலரும் சொல்லியிருக்கக்கூடும். அதுவும், ழீன் இமை சிமிட்டி பதிலளிக்கும் காட்சியில், திரை ஒருமுறை இருண்டு பின் ஒளிர்கிறது (Blink) குறைந்த நொடிதானென்றாலும், எடிட்டிங் பிழையென அதனை சிலர் கருதக்கூடும். இத்தனைக் கூக்குரல்களையும் ஈடுசெய்யும் விதத்தில், ழீன் புத்தகம் துவங்கும் காட்சியில் அலைபுரளும் கடற்கரையில் இயற்கையை அள்ளி இறைத்தும், ழீன் மனைவியின் கூந்தல் மற்றொரு காட்சியில் காற்றின் வீச்சுக்கு ஏற்ப ஆடுவதைப் படமாக்கிய காட்சியிலும் பிரமாதப்படுத்தி விடுகிறார்கள் ஒளிப்பதிவாளரும், எடிட்டரும்!

    ழீன் தனது தந்தையின்மீது அதீத பாசமும் நெருக்கமும் கொண்டவர். 92 வயதில் மனம் சோர்ந்து, உடல் சோர்ந்து முதுமை காரணமாக நடக்க முடியாமல், அடுக்ககம் ஒன்றின் மாடி வீட்டில் குடியிருக்கிறார். ழீன் அவரை உற்சாகப்படுத்த முகச்சவரம் செய்து, முத்தமிட, நெகிழ்கிறார் அவரது அப்பா. (ஃப்ளாஷ்பேக்)

    ழீன் முடக்குவாதத்தில் மருத்துவமனையில் கிடக்க, அடுக்ககத்திலிருந்து அவர் வரமுடியாத சூழலில் (94 வயதில்) மெண்ட்லிலின் உதவியோடு தொலைபேசியில் தன் அன்பைத் தெரிவிக்கும் காட்சி எவரையும் உருக வைக்கும் உணர்ச்சிப் பிழம்பான ஒன்று. ழீன், உன் நிலையும் என் நிலையும் இப்போது ஒன்றுதான். உனது ஆன்மாவை உன்னுடல் அடைத்துப் பூட்டி விட்டது... நகர முடியாமல்... என்னை... இந்த அடுக்கக வீடு... என்று கண்ணீர் ததும்பக் கூறுமிடத்தில் எவர் மனமும் கரைந்துவிடும்.

    பிரார்த்தனைக்கு ழீனை ஒரு தேவாலயத்துக்கு சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்கிறார் மெண்ட்லில். பாதிரியாரும் வந்து விடுவார். ழீன், தனக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1