Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalagakaara Kalaingargal
Kalagakaara Kalaingargal
Kalagakaara Kalaingargal
Ebook175 pages1 hour

Kalagakaara Kalaingargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கலைஞர்கள் என்பவர்கள் வெறும் களிப்பூட்டும் கூத்தர்கள் என்கிற பார்வை எல்லோருக்கும் இருக்கிறது. அதற்குத் தகுந்தாற் போல அவர்களின் சமூகப் பங்களிப்பு என்பது முற்றிலும் விலகியதாகவே இருக்கும். ஆனால் அதையும் மீறி உலகம் முழுக்க திரைத்துறைக் கலைஞர்கள் சமூகத்தில் நிகழும் மக்களுக்கு எதிராக செயல்படும் அதிகார மையங்களை நோக்கி துணிச்சலாகக் குரல் கொடுத்து அதன் காரணமாக் உயிரை இழந்தவர்கள், உடல் உறுப்புக்களை இழந்தவர்கள், அல்லது சிறையில் வாடியவர்கள் இன்னும் பல துயரங்களைச் சந்தித்தவர்கள் என்று ஒரு நீண்ட வரிசையே இருக்கறது அவர்களைப்பற்றி நான் நிழல் காலாண்டு இதழில் தொடர்ந்து பதினாறு வாரங்கள் எழுதிய தொடர்தான் இந்த நூல்.

Languageதமிழ்
Release dateNov 12, 2022
ISBN6580159009224
Kalagakaara Kalaingargal

Read more from Neyveli Bharathikumar

Related to Kalagakaara Kalaingargal

Related ebooks

Reviews for Kalagakaara Kalaingargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalagakaara Kalaingargal - Neyveli Bharathikumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கலகக்கார கலைஞர்கள்

    Kalagakaara Kalaingargal

    Author:

    நெய்வேலி பாரதிக்குமார்

    Neyveli Bharathikumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/neyveli-bharathikumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    கலகக்கார கலைஞர்கள் - நெய்வேலி பாரதிக்குமார்

    கிறிஸ்டியன் பவெடா - எல்சால்வடார்

    ஜாஃபர் பனாஹி - ஈரான்

    பஸ்ஸல் அல் - ஷாடே - சிரியா

    சுஷ்மிதா பானர்ஜி - இந்தியா

    மன்ஹாஸ் மஹம்மதி - (ஈரான்)

    டிம் ஹெதரிங்டன் & க்ரிஸ் ஹோண்ட்ராஸ்

    ஆனந்த் பட்வர்த்தன் - இந்தியா

    ரேமுண்டோ கிளேசியர்

    ஷின் சாங் ஓக் - தென் கொரியா

    செசில் வில்லியம்ஸ் - தென்னாப்பிரிக்கா

    ஜூலியானோ மெர் காமிஸ்

    பியர் பாவ்லோ பசோலினி - இத்தாலி

    மார்லன் பிராண்டோ - அமெரிக்கா

    யில்மாஸ் குனி - துருக்கி

    யுகியோ மிஷிமா - ஜப்பான்

    ஜோன் ரூட் - கென்யா

    முன்னுரை

    கலைஞர்கள் என்பவர்கள் வெறும் களிப்பூட்டும் கூத்தர்கள் என்கிற பார்வை எல்லோருக்கும் இருக்கிறது. அதற்குத் தகுந்தாற்போல அவர்களின் சமூகப் பங்களிப்பு என்பது முற்றிலும் விலகியதாகவே இருக்கும். ஆனால் அதையும் மீறி உலகம் முழுக்க திரைத்துறைக் கலைஞர்கள் சமூகத்தில் நிகழும் மக்களுக்கு எதிராக செயல்படும் அதிகார மையங்களை நோக்கி துணிச்சலாகக் குரல் கொடுத்து அதன் காரணமாக் உயிரை இழந்தவர்கள், உடல் உறுப்புக்களை இழந்தவர்கள், அல்லது சிறையில் வாடியவர்கள் இன்னும் பல துயரங்களைச் சந்தித்தவர்கள் என்று ஒரு நீண்ட வரிசையே இருக்கறது அவர்களைப்பற்றி நான் நிழல் காலாண்டு இதழில் தொடர்ந்து பதினாறு வாரங்கள் எழுதிய தொடர்தான் இந்த நூல்.

    தொடர் எழுத ஊக்குவித்து நிழல் பத்திரிகையில் சிறப்பான இடமளித்து வெளியிட்ட நிழல் காலாண்டு இதழின் ஆசிரியர் திரு நிழல் திருநாவுக்கரசு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் அவரது அறிமுகம் நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி வழியாகத்தான் கிடைத்தது. நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி குரும்படப்போட்டியை நடத்தும் குழுவில் தொடர்ந்து பத்தாண்டுகளாக நான் இடம் பெற்றேன் அப்பொழுது தேர்வு செய்யும் நடுவர்களில் ஒருவராக நிழல் திருநாவுக்கரசு அவர்கள் இடம் பெற்றார்கள் அவர் மூலம்தான் இயக்குனர் வசந்த பாலன்,இயக்குனர் சொர்ணவேல், சினிமா ஆய்வாளர் சந்தானக்கிருஷ்ணன் இயக்குனர் அருண்மொழி, ரவிசுப்பிரமணியன் ஆகியோர் அறிமுகமானார்கள் குழுவின் தலைவராக இருந்து ஒருங்கிணைத்த திரு கலைநேசப்பிரபு அவர்களையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.

    இந்த நூலை வெளியிடும் புஷ்தகா நிறுவனம் திரு ராஜேஷ், மற்றும் சனா, சசிகலா ஆகியோருக்கும் அவர்களை அறிமுகம் செய்த கவிஞர் சுமதி சங்கர் ஆகியோருக்கும் புத்தகத்தை வடிவமைப்பு செய்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    என் துணைவியார் ஆதிலட்சுமி, பிள்ளைகள் பிருத்வி மதுமிதா மாப்பிள்ளை அஸ்வின் பிரகாஷ் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    நான் பணியாற்றும் என்.எல்.சி நிறுவனம், மற்றும் எனக்கு தமிழூட்டிய தமிழாசிரியர்களுக்கும் என் சுவாசமாக விளங்கும் தமிழுக்கும் என் வணக்கங்கள்.

    வாசிக்கும் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி

    E9, பெருமாள் கோயில் தெரு,

    வட்டம் -27

    நெய்வேலி – 607803

    9442470573

    8825753498

    sbharathikumar@gmail.com

    www.bharathikumar.blogspot.com

    மிக்க அன்புடன்

    நெய்வேலி பாரதிக்குமார்

    அக்டோபர் 19, 2022

    நூல் சமர்ப்பணம்

    நிழல் காலாண்டு இதழின் ஆசிரியர் நிழல் திருநாவுக்கரசு அவர்களுக்கு...

    கலகக்கார கலைஞர்கள் - நெய்வேலி பாரதிக்குமார்

    கலவர பூமியில் ஒரு பத்திரிகையாளனோ, புகைப்படக் கலைஞனோ பயணிப்பது என்பது பசி மிகுந்த சிங்கத்தின் குரல்வளைக்கு கீழே பயணிப்பது போல.... எப்போது வேண்டுமானாலும் அது விழுங்கிவிடும்...

    நம் இந்தியச் சூழலில் ‘கலகம்' என்ற சொல் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. ‘புரட்சி' என்ற சொல் தவறாக கையாளப்பட்டுக்கொண்டிருக்கிறது. இங்கே அமைதியான எந்த சூழலையும் குலைக்க நினைப்பவர்களை ‘கலகக்காரர்கள்' என்றே அடையாளப்படுத்துகிறார்கள். உண்மையில் நிகழ் சமூகம் ஒட்டுமொத்தமாக அநீதியாக காணப்படும்போது அதனை அப்படியே புரட்டிப்போடுவது ‘புரட்சி' என்றும், அசந்தர்ப்பமான சூழலில், அதன் கால நிலை கருதி எழும் எதிர் குரலை ‘கலகம்' என்றும் புரிந்துகொள்வோம்.

    எங்கெல்லாம் மனசாட்சிக்கு எதிரான சம்பவங்கள் நிகழ்கின்றனவோ, அங்கெல்லாம் தங்களுக்கு ஏதுவான வழியில் எதிர்ப்பை பதிவு செய்பவர்கள் அனைவரும் கலகக்காரர்களே.அந்த வகையில் பெரும்பாலான படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் எப்படியாகிலும் எதிர்குரலை பதிவு செய்தபடிதான் இருக்கிறார்கள்.

    திரைப்படத்துறை என்பது பெருமளவில் பணமும், புகழும் புரளும் இடம் என்பதால் அங்கே பலரும் தங்கள் உணர்வுகளை அழுத்திக்கொண்டு எல்லாவற்றோடும் இயைந்தே இருப்பார்கள். ஆனால் மெய்யான கலைஞர்கள் எல்லா கட்டுக்களையும் மீறி கலகக்காரர்களாக இயங்குவார்கள். அதன் காரணமாக தங்கள் உயிரை, வாழ்வை, உறுப்புகளை இழந்தவர்கள் அனேகம். அப்படியான கலைஞர்கள் சிலரை பற்றிய எளிய அறிமுகமே இந்த நூல்.

    கிறிஸ்டியன் பவெடா - எல்சால்வடார்

    2009-ஆம் ஆண்டு செப்டெம்பர் 2-ந்தேதி எல்சால்வடார் நாட்டின் தலைநகர் சான்சல்வடாரிலிருந்து பத்து மைல் தொலைவிலுள்ள டான்கேட்பேவிலிருந்து கிறிஸ்டியன் பவெடா தனியே காரில் திரும்பிக்கொண்டிருந்தார். அவரது ஆவணப்படம் ‘லா விடா லோகா' அன்றுதான் டான்கேட்பேயில் திரையிடப்பட்டிருந்தது.

    ஏற்கனவே அவருக்கு கொலை மிரட்டல்கள் இன்னபிற அச்சுறுத்தல்கள் இருந்த சூழலில் அவர் அவ்வாறு தனியாக பயணித்திருக்கக்கூடாது. ஆனால் கிறிஸ்டியன் பவெடாவுக்கு இது பழக்கமான ஒன்றாகிவிட்டது. ‘லா விடா லோகா' ஆவணப்படத்தின் படபிடிப்பைக் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு இடையேதான் அவர் முடிக்க வேண்டியிருந்தது. ஆனால் படபிடிப்பு சமயங்களில் அவரது பயணத்திட்டம், படபிடிப்புத்தளங்கள் ஆகியன வேறு யாராலும் யூகிக்க முடியாத அளவு ரகசியமாகவே இருந்தது. ஆனால் படம் வெளிவந்ததும் அவர் அசாத்திய துணிச்சலுடன் எல் சால்வடார் எங்கும் பயணிக்க தொடங்கிவிட்டார். ஆனால் எதிரிகள் அந்த சந்தர்ப்பத்தை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டார்கள்.

    டான்கேட்பேவிலிருந்து தனியே திரும்பிக்கொண்டிருந்த அவரை அடையாளம் தெரியாத சிலர் சூழ்ந்துகொண்டு சுட்டுக்கொன்றார்கள். தலையில் பலமுறை சுடப்பட்ட நிலையில் காரில் பிணமாகக்கிடந்தது சில மணி நேரங்களுக்குப்பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. அவரது ஆவணப்படம் ‘லா விடா லோகா' எல் சால்வடாரில் கோலோச்சிக் கொண்டிருந்த ‘மரியா சல்வாருச்சா' என்ற குழுவினர் நடத்திய படுகொலைகள், பலாத்காரங்கள், ஆள் கடத்தல்கள், போதைப்பொருள் கடத்தல்கள் பற்றி வெளிச்சமிட்டுக்காட்டியதுதான் அவரது கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    ‘மரியா சல்வாருச்சா' எனப்படும் M.S 13 என்ற குழு உண்மையில் எல் சல்வடாரில் துவக்கப்படவில்லை. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்சில் 80-களில் துவங்கி அமெரிக்கவின் 37 மாநிலங்களில் கிளைத்த அபாயகரமான விடலைக்குழு. அது துவங்கப்பட்ட காரணத்தை பற்றி அறிந்து கொள்ள சில வருடங்கள் நாம் பின்னோக்கி பயணிக்க வேண்டும்...

    எல் சால்வடார் நம் தமிழகத்தின் மக்கள் தொகை அளவே கொண்ட மிகச்சிறிய நாடு (2009 மக்கள் தொகை கணக்குப்படி 5 கோடியே 77 லட்சம் பேர்தான்)

    எல் சால்வடாரின் மக்களை பூர்வகுடி அமெரிக்கன்கள், ஐரோப்பிய குடியேறிகள் என இரண்டு பிரிவாக சுருக்கிவிடலாம். சால்வடாரின் இயற்கை வளங்கள், மற்றும் முன்னேற்றத்துக்கு தடையாக அவ்வப்போது குமுறும் எரிமலைகள் காரணமாக இருந்தன. எனவே அடிப்படை வேலைவாய்ப்புகள், கல்வி, தொழிற்சாலைகள் இல்லாமை காரணமாக பெரும்பாலானோர் அமெரிக்காவை நோக்கி இடம் பெயரத்தொடங்கினர். அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினரில் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் மூன்றாவது இடத்தில் சால்வடேரியன்கள் இருக்கின்றனர். அமெரிக்காவில் இருக்கும் பிற நாட்டினரிடமிருந்து தங்களை பாதுகாப்பதற்காககூறித்தான் மரியா சால்வருச்சா குழு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் 13 வது தெருவில் துவங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குழுவின் செயல்பாடுகளுக்காக தேவைப்படும் நிதியைத்திரட்ட வாகனத்திருட்டு, ஆள்கடத்தல், போதை மருந்து கடத்தல், ஆயுதக்கடத்தல் ஆகியவற்றில் ஈடுபடத்துவங்கினர். ஆனால் நாளடைவில் கேளிக்கைகள், மற்றவர்கள் பயந்து விலகிச் செல்வதில் கிடைக்கும் குரூர திருப்தி காரணமாக வேலையற்ற இளைஞர்கள் பலர் அதில் சேர்ந்து பல வன்முறைச் செயல்களில் ஈடுபட்டனர்.

    அமெரிக்கவில் துவங்கப்பட்ட இந்த குழு கனடா, ஹோண்டுராஸ், மெக்ஸிகோ, குவாதிமாலா, ஆஸ்திரேலியா என பரவத்தொடங்கினர். அமெரிக்காவின் குடியேற்றத்துறை அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியாக மாறிப்போன அவர்களை தேடி அமெரிக்க அதிகாரிகள் வேட்டையாடத்தொடங்கினர். கைதானவர்களை எல் சால்வடாருக்கு திருப்பியனுப்பினர். அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய அவர்கள் தங்கள் குற்றச்செயல்களை சொந்த நாட்டிலும் அரங்கேற்றினர்.

    தங்கள் முகத்திலும், கைகளிலும் டாட்டூஸ் எனப்படும் வினோத உருவங்களை பச்சைக்குத்திக்கொண்ட அவர்கள் கொலை, கொள்ளை, கடத்தல் போன்றவற்றை இரக்கமற்ற முறையில் நடத்தினர். போதாதற்கு 90-களில் அதே லாஸ் ஏஞ்சல்ஸ்-சில் துவக்கப்பட்ட மாரா18 என்ற குழுவும் அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பது போல வன்முறை வெறியாட்டங்களை சல்வடாரிலும், அமெரிக்கவிலும் நிகழ்த்தினர். குறிப்பாக 13லிருந்து 20 வயது வரையிலான இளம்பிராயத்தினர்தான் அதிகம் இந்த குழுக்களில் சேரத் தொடங்கினர். கல்வி கற்க வேண்டிய வயதில் அவர்களை அந்த குழுக்கள் ஈர்த்த காரணம்... போதைமருந்துகள், எந்த வேலைக்கும் போகாமலேயே கையில் புரளும் பணம், கட்டுப்பாடுகளற்ற பாலியல் தொடர்புகள், எல்லாவற்றுக்கும் மேலாக அடுத்தவர்களை மிரட்டுவதில் கிடைக்கும் அளவற்ற ஆனந்தம் ஆகியவையே... மற்றபடி இந்த குழுக்கள் வேறு எந்த உயர்ந்த லட்சியங்களையும் முன் வைக்கவில்லை...

    ஒருகட்டத்தில் மாதத்திற்கு 300 கொலைகள் வீதம் நடந்ததாக கூறப்படுகிறது. அதாவது சராசரியாக தினம் 10 கொலைகள். பவெடா கொலையில் சம்மந்தப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவன், கொஞ்சமும் அச்சமின்றி இன்றைய 10 பேர் பட்டியலில் பவெடாவின் பெயரும் இருந்திருக்கிறது போலும் என்று சொன்னானாம்... எனில் எல்சால்வடாரின் அன்றைய கொடூரமான சூழலை கற்பனை செய்து பார்க்கலாம்... வேடிக்கை என்னவென்றால் எல் சால்வடார் என்றால் அவர்களது பாரம்பரிய மொழியில் பாதுகாப்பான தேசம் என்று பொருளாம்...

    கிறிஸ்டியன் பவெடாவுக்கு இந்தச் சூழல் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக இருந்தது... ஒட்டு மொத்தமாக ஒரு தலைமுறையே

    Enjoying the preview?
    Page 1 of 1