Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indirabai Allathu Indirajala Kallan
Indirabai Allathu Indirajala Kallan
Indirabai Allathu Indirajala Kallan
Ebook601 pages3 hours

Indirabai Allathu Indirajala Kallan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்திராபாய் என்ற இந்நாவல் ஒரு துப்பறியும் நாவல். இதில் உள்ள முக்கிய விஷயம் முஷ்டிக்கரம் என்ற கள்ளனுக்கும் துப்பறியும் கிருஷ்ணாராவுக்கும் உள்ள போராட்டமே. ஆயினும் இந்திராபாய் என்பவள் பன்முறை முஷ்டிக்கரத்தினிடம் மிக்க பிராணாபத்தில் சிக்கிக்கொண்டு அவற்றைத் தைரியத்தோடு சமாளித்ததுமன்றி, அவனைப் பிடிக்கும் முயற்சியை விட்டுவிட்டால் அவனால் நமக்கு ஆபத்து நேராதென்று தெரிந்திருந்தும் முரடர்களான ஆடவர்களெல்லாம் நடுங்கிக்கொண்டிருந்த அத்தகைய கள்ளனுக்குச் சற்றும் அஞ்சாது கடைசி வரையில் அவனைப் பிடித்தே தீர்வதென்ற வைராக்கியத்தை விடாமலிருந்தாள். ஒரு பெண்ணினிடம் உள்ள அத்தகைய தைரிய நடக்கை புகழத்தக்கதே யாதலின் அவளையே கதாநாயகியாய் முதலில் வைத்தோம்.

துப்பறியும் நாவல்கள் பல வெளி வந்திருக்கின்றன. ஆயினும் எல்லாவற்றைக் காட்டிலும் இது மிக்க அபூர்வமானதாகவே இருக்கிறது என்பது இதை வாசிப்போர்க்கு நன்கு விளங்கும். இதில் உள்ள முஷ்டிக்கரம் என்ற கள்ளன் கல்வியறிவோடு, பௌதீக சாத்திரம், இரசாயன சாத்திரம் முதலிய பல சாத்திரப் பயிற்சியடைந்து புதுக் கருவிகளைக் கொண்டு ஒருவரும் கண்டறியக் கூடாத விதமாய்க் குற்றங்களைச் செய்வதும், தன்னிடம் இருப்பவர்கள் கூட தன் உண்மை யுருவை யறியா வண்ணம் மறைத்துக்கொண்டு தன் காரியங்களை நடத்துவதும் வாசிப்போர்க்கு இத்தகைய காலங்களில் இதுகாறும் உண்டாகாத வியப்பையுண்டாக்கும். இந்திராபாய் சிக்கிக்கொள்ளும் ஒவ்வொரு ஆபத்தும் நெஞ்சு திடுக்கிடச் செய்யத்தக்கதே. அவற்றினின்றும் கிருஷ்ணாராவ் அவளை மீட்பதும், முஷ்டிக் கரத்தைப் பிடிப்பதில் அவன் காட்டும் வீரதீரம் பொருந்திய சாமர்த்தியச் செய்கைகளும் கள்ளன் சாமர்த்தியத்திலும் பின்னும் வியப்பையளிக்கும். இவர்கள் இருவர் நடக்கைகளையும் பற்றி ஆழ்ந்த நோக்கத்தோடு அறிவையூன்றி வாசிப்போர்க்கு அனேகம் மேலான படிப்பினைகளும், இலௌகீக ஞானமும், மனப் பயிற்சியும் சித்திக்கும் என்பது உண்மை. மேல் போக்காய்க் கதையை மட்டும் வாசிப்போர்க்கு வெறுங்கதையாகத்தான் தோன்றும். ஆன்றோர் இதில் தோன்றக்கூடிய சொற்பிழை முதலியவற்றைப் பொறுத்து, இதையும் ஆதரிப்பார் களென்றும் நம்புகிறோம்.

Languageதமிழ்
Release dateJun 17, 2020
ISBN6580129105501
Indirabai Allathu Indirajala Kallan

Related to Indirabai Allathu Indirajala Kallan

Related ebooks

Reviews for Indirabai Allathu Indirajala Kallan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indirabai Allathu Indirajala Kallan - Arani Kuppuswamy Mudaliar

    http://www.pustaka.co.in

    இந்திராபாய் அல்லது இந்திரஜாலக் கள்ளன்

    Indirabai Allathu Indirajala Kallan

    Author:

    ஆரணி குப்புசாமி முதலியார்

    Arani Kuppuswamy Mudaliar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/arani-kuppuswamy-mudaliar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முகவுரை

    1-வது அத்தியாயம்

    2-வது அத்தியாயம்

    3-வது அத்தியாயம்

    4-வது அத்தியாயம்

    5-வது அத்தியாயம்

    6-வது அத்தியாயம்

    7-வது அத்தியாயம்

    8-வது அத்தியாயம்

    9-வது அத்தியாயம்

    10-வது அத்தியாயம்

    11-வது அத்தியாயம்

    12-வது அத்தியாயம்

    13-வது அத்தியாயம்

    14-வது அத்தியாயம்

    15-வது அத்தியாயம்

    16-வது அத்தியாயம்

    17-வது அத்தியாயம்

    18-வது அத்தியாயம்

    19-வது அத்தியாயம்

    20-வது அத்தியாயம்

    21-வது அத்தியாயம்

    22-வது அத்தியாயம்

    23-வது அத்தியாயம்

    24-வது அத்தியாயம்

    25-வது அத்தியாயம்

    26-வது அத்தியாயம்

    27-வது அத்தியாயம்

    28-வது அத்தியாயம்

    29-வது அத்தியாயம்

    30-வது அத்தியாயம்

    31-வது அத்தியாயம்

    32-வது அத்தியாயம்

    33-வது அத்தியாயம்

    34-வது அத்தியாயம்

    35-வது அத்தியாயம்

    36-வது அத்தியாயம்

    37-வது அத்தியாயம்

    38-வது அத்தியாயம்

    39-வது அத்தியாயம்

    40-வது அத்தியாயம்

    41-வது அத்தியாயம்

    42-வது அத்தியாயம்

    43-வது அத்தியாயம்

    44-வது அத்தியாயம்

    45-வது அத்தியாயம்

    46-வது அத்தியாயம்

    47-வது அத்தியாயம்

    முடிவு

    முகவுரை

    இந்திராபாய் என்ற இந்நாவல் ஒரு துப்பறியும் நாவல். இதில் உள்ள முக்கிய விஷயம் முஷ்டிக்கரம் என்ற கள்ளனுக்கும் துப்பறியும் கிருஷ்ணாராவுக்கும் உள்ள போராட்டமே. ஆயினும் இந்திராபாய் என்பவள் பன்முறை முஷ்டிக்கரத்தினிடம் மிக்க பிராணாபத்தில் சிக்கிக்கொண்டு அவற்றைத் தைரியத்தோடு சமாளித்ததுமன்றி, அவனைப் பிடிக்கும் முயற்சியை விட்டுவிட்டால் அவனால் நமக்கு ஆபத்து நேராதென்று தெரிந்திருந்தும் முரடர்களான ஆடவர்களெல்லாம் நடுங்கிக்கொண்டிருந்த அத்தகைய கள்ளனுக்குச் சற்றும் அஞ்சாது கடைசி வரையில் அவனைப் பிடித்தே தீர்வதென்ற வைராக்கியத்தை விடாமலிருந்தாள். ஒரு பெண்ணினிடம் உள்ள அத்தகைய தைரிய நடக்கை புகழத்தக்கதே யாதலின் அவளையே கதாநாயகியாய் முதலில் வைத்தோம்.

    துப்பறியும் நாவல்கள் பல வெளி வந்திருக்கின்றன. ஆயினும் எல்லாவற்றைக் காட்டிலும் இது மிக்க அபூர்வமானதாகவே இருக்கிறது என்பது இதை வாசிப்போர்க்கு நன்கு விளங்கும். இதில் உள்ள முஷ்டிக்கரம் என்ற கள்ளன் கல்வியறிவோடு, பௌதீக சாத்திரம், இரசாயன சாத்திரம் முதலிய பல சாத்திரப் பயிற்சியடைந்து புதுக் கருவிகளைக் கொண்டு ஒருவரும் கண்டறியக் கூடாத விதமாய்க் குற்றங்களைச் செய்வதும், தன்னிடம் இருப்பவர்கள் கூட தன் உண்மை யுருவை யறியா வண்ணம் மறைத்துக்கொண்டு தன் காரியங்களை நடத்துவதும் வாசிப்போர்க்கு இத்தகைய காலங்களில் இதுகாறும் உண்டாகாத வியப்பையுண்டாக்கும். இந்திராபாய் சிக்கிக்கொள்ளும் ஒவ்வொரு ஆபத்தும் நெஞ்சு திடுக்கிடச் செய்யத்தக்கதே. அவற்றினின்றும் கிருஷ்ணாராவ் அவளை மீட்பதும், முஷ்டிக் கரத்தைப் பிடிப்பதில் அவன் காட்டும் வீரதீரம் பொருந்திய சாமர்த்தியச் செய்கைகளும் கள்ளன் சாமர்த்தியத்திலும் பின்னும் வியப்பையளிக்கும். இவர்கள் இருவர் நடக்கைகளையும் பற்றி ஆழ்ந்த நோக்கத்தோடு அறிவையூன்றி வாசிப்போர்க்கு அனேகம் மேலான படிப்பினைகளும், இலௌகீக ஞானமும், மனப் பயிற்சியும் சித்திக்கும் என்பது உண்மை. மேல் போக்காய்க் கதையை மட்டும் வாசிப்போர்க்கு வெறுங்கதையாகத்தான் தோன்றும். ஆன்றோர் இதில் தோன்றக்கூடிய சொற்பிழை முதலியவற்றைப் பொறுத்து, இதையும் ஆதரிப்பார் களென்றும் நம்புகிறோம்.

    ஆரணி - குப்புசாமி முதலியார்

    சென்னை

    1-10-1922

    1-வது அத்தியாயம்

    இப்பூவுலகில் காலத்திற்குத் தக்கபடி சம்பவங்கள் நேர்கின்றன. நமது மதநூலில் கூறியபடி யுகதர்மத்திற்குத் தக்கபடி யாவும் மாறுபடுகின்றன. மதத்துவேஷத்தால் நமது மதத்தைக் குறை கூறுகிறவர்கள் கூறட்டும். எவ்வளவோ காலத்திற்கு முன் நமது முன்னோர்கள் அபூர்வமான தங்கள் ஆத்ம சக்தியால் கூறிய யாவும் தவறாமல் நடந்து வருவது பிரத்தியட்சம்.

    நான்கு யுகங்களில் இது கலியுகம். இக்கலியுகத்தில் தருமம் ஒரு பாதமும் அதர்மம் மூன்று பாதமுமாக இருக்குமென்று நமது நூல்களில் கூறப்பட்டது போல் நடப்பதை நாம் பிரத்தியட்சமாகக் காணலாம். மெய் பொய்யாகவும், பொய் மெய்யாகவும் பிரகாசிக்கின்றன. கல்வி கற்றவர்களும், அரசன் விதித்த சட்டங்களை நன்குணர்ந்து உண்மையை வெளிக்குக் கொண்டு வந்து நீதியை நிலைநிறுத்தவென்று ஏற்பட்டவர்களுமே, பொய்யை மெய்யாகவும் மெய்யைப் பொய்யாகவும் சாதிக்கக் கூலி பெற்றுக் கொண்டு முன் வருகிறார்கள். அத்தகையோர் தொழில் மிக்க கௌரவமான தொழிலாகவே கருதப்படுகிறது. கலியில் வன்மைக்கு இதைவிட வேறு திருட்டாந்தம் வேண்டுமோ!

    இத்தகைய யுகத்தில் உலகில் அநீதங்கள் நடப்பது வியப்பல்ல. இக்காலத்தில் நாகரீகம் என்பதும் தலைகீழான அர்த்தமுடையதாக இருக்கிறது. எல்லா நீதிகளும் சட்டங்களும் ஏட்டிலிருக்கின்றனவேயன்றி அனுபவத்தில் இல்லை. இத்தகைய காலத்தில் கொலை களவு செய்வோரும் மிக்க நாகரீக வழியாகவே தங்கள் பாதகத் தொழில்களைச் செய்கிறார்கள். அவர்கள் தாங்கள் மிக்க நாகரீகம் அடைந்தவர்களாகப் பெருமை பாராட்டிக் கொள்கிறார்கள். ஆகையால் இப்போது நாம் கூறும் சம்பவங்கள் மிக்க அக்கிரமமானவைகளாகவும், நெஞ்சு நடுங்கத் தக்கவைகளாகவும் இருந்தாலும் இதை வாசிப்போர் மிக்க வியப்படையக் காரணமில்லை. இச்சம்பவங்கள் உலகில் மிக்க நாகரீகமும் செல்வமும் பொருந்தியதாகக் கருதப்படும் ஒரு இராச்சியத்தின் தலைநகரமாகிய இந்திரபுரியில் நடந்தன.

    இந்திரபுரி மேற்கு நாட்டிலுள்ள ஒரு பெரிய நகரம். அந்நகரம் செல்வத்திலும், நாகரீகத்திலும், தந்திர சாமர்த்தியங்களிலும், புத்தி நுட்பமான காரியங்களிலும் உலகில் இணையற்றதெனப் பிரசித்தி பெற்றது. நாம் முன் கூறிய கலியுக ரீதிப்படி நாகரீகமும் இருப்பதால், அங்கு நடக்கும் தீஞ்செயல்களும் யாவரும் வியக்கத்தக்கனவாகவும், மிக்க சாமர்த்தியமானவைகளாகவுமே யிருக்கும்.

    அத்தகைய நகரத்தில் ஒரு காலத்தில் சில அபூர்வ சம்பவங்கள் நிகழ்ந்தன. பலவிடங்களில் திரண்ட செல்வந்தர்கள் கொல்லப்பட்டு பெருந்தொகைகள் களவாடப்பட்டன. கொலை நடப்பதிலோ மிக்க தந்திரமும், புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட இரசாயன சாமர்த்தியமும், அபூர்வமான புத்தி சாமர்த்தியமும் உபயோகப்படுத்தப்பட்டன. போலீஸார் எத்தகைய சாமர்த்தியங்களை உபயோகித்தும் சற்றும் எள்ளளவேனும் பயன்படவில்லை. ஆனால் இத்தகைய குற்றம் நடந்த விடங்களிலெல்லாம் ஒன்றிற்போல் எல்லா விடங்களிலும் முஷ்டி பிடித்த கரத்தைப் போன்ற குறி வைக்கப்பட்டிருந்தது. எங்கும் இது பெருவியப்பை உண்டாக்கியது.

    இத்தகைய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கையில் இந்திரபுரி நகரில் பிரசுரிக்கப்படும் பத்திரிகைகளில் பிரசித்தி பெற்ற பத்திரிகையாகிய நக்ஷத்திரம் என்னும் பத்திரிகையின் காரியஸ்தரும் பத்திரிகாசிரியருமானவர், தமது பத்திரிகைக்குச் சமாசாரம் திரட்டியனுப்பும் ஜகதீசன் என்பவனை நோக்கி, ஜகதீசன்! இதோ! இச்சமாசாரத்தைப் பார். நீ இதை ஆராய்ச்சி செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன் என்று கூறிக் கொண்டே அன்று மாலைப் பிரசுரத்திலிருந்து கத்தரித்தெடுக்கப்பட்ட ஒரு துண்டை அவனிடம் அளித்தார். ஜகதீசன் அதை வாங்கி ஆவலோடு வாசித்தான். அதன் தலைப்பில்,

    இந்திரபுரியின் மாயக் கள்ளன் மறுபடியொரு பூரண வேட்டையாடிவிட்டான் என்றிருந்தது. அவன் அதை வாசிப்பதற்குள் பத்திரிகாசிரியர், இதோ பார்! பிரபல பாங்கி வியாபாரியாயிருந்து திரண்ட செல்வம் சம்பாதித்த பல்லவராயர் கொல்லப்பட்டார். பரிதாபம், மிக்க கோரமான கொலை. எத்தகைய உளவும் அகப்படவில்லை. அந்த மகா மர்மமான முஷ்டி பிடித்த கரத்தின் குறி கையொப்பமாக வைக்கப்பட்ட ஒரு கடிதம் வந்திருப்பது தவிர வேறு எள்ளளவும் உளவுமில்லை. கடந்த வாரம் சௌகார் ஹீரோஜி ராவ் கொல்லப்பட்டார். அவருடைய அபாரமதிப்புள்ள நவரத்தினங்கள் களவாடப்பட்டன. அப்போதும் அதே முஷ்டிக் கரத்தின் குறியேயிருந்தது. பிறகு சாரங்கம் பிள்ளையின் மிக்க கோரமான படுகொலை. அவர் எஃகுத் தொழிற்சாலையில் கஷ்டப்பட்டு சம்பாதித்த திரண்ட செல்வத்தில் பெரும்பாகம் களவாடப்பட்டது. அப்போதும் அதே முஷ்டிக் கையின் குறி தவிர வேறு எள்ளளவும் உளவும் கிடைக்கவில்லை. இந்த நாட்டில் இதுகாறும் நடந்திராத அதியாச்சரியமும் நெஞ்சே திடுக்கிடக்கூடியதுமான இச்சம்பவங்கள் நடக்கின்றன. இந்த அநாசாரமான முஷ்டிக்கை தவிர வேறெவ்வித உளவுமில்லை என்று கூறிவிட்டு இரண்டொரு நிமிடங்கள் பேசாமலிருந்து மறுபடி கூறத்தொடங்கி,

    ஏன்? இந்தப் படுபாவியாகிய சண்டாளன் மிக்க குரூரமான கொலைகள் செய்வதிலும், பிறரை இம்சிப்பதிலும், அளவுகடந்த பேராசையோடு கொள்ளையடிப்பதிலும் மிக்க ஆவல் கொண்டவன் என்றும் அவனுக்கு அவையொரு பெரும் பித்தாயிருக்கின்றன வென்றுமே நினைக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய பேய்த் தொழிலே அவனுக்கு மிக்க சந்தோஷத்தை அளிப்பதாகத் தெரிகிறது. அடடா! என்ன கோரம் என்று கூறிக்கொண்டே தன் நாற்காலியில் சாய்ந்து பெருமூச்சு விட்டுவிட்டு,

    இப்போதும் ஒரு சங்கதி எனக்கு எட்டியிருக்கிறது. அதாவது, கொலை செய்யப்பட்ட பல்லவராயர், ஹீரோஜி ராவ், சாரங்கம் பிள்ளை இவர்கள் மூவரும் நமது நகரிலிருக்கும் ஜீவாதார நிதியில் சேர்ந்துள்ள அங்கத்தினர்கள் என்று தெரிகிறது. ஆகையால் நீ போய் அந்நிதியின் தலைவரான தங்கராஜுப் பிள்ளையிடம் சென்று இதைப் பற்றி பேசி எவ்வளவு சமாசாரம் கிரகிக்கக் கூடுமோ அவ்வளவு வரையில் கிரகித்து வந்தால் மிக்க நலம் என்று உத்தேசிக்கிறேன் என்று கூறினார்.

    ஜகதீசன் அவ்வாறே செய்வதாய்க் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான். ஜகதீசன் சாதாரணமாகப் பத்திரிகைகளுக்கு நிகழ்ந்த சம்பவங்களைத் திரட்டியனுப்பும் ஆட்களில் ஒருவனே யாயினும் இத்தகைய விஷயங்களில் மிக்க சிரத்தையெடுத்துக் கொண்டு உண்மையான உளவுகளையும் மறைந்திருக்கும் அத்தாட்சிகளையும் ஆராய்ந்து கண்டு பிடித்து வெளிக்குக் கொண்டு வருவதில் மிகச் சாமர்த்தியவான். அவனுக்கும் துப்பறியும் சிங்கமென்று பிரக்கியாதி பெற்ற கிருஷ்ணாராவ் என்பவனுக்கும் மிக்க சினேகம்.

    ஜகதீசன் முதலில் கிருஷ்ணாராவிடம் சென்று அவனிடம் இதைப்பற்றி கலந்து பேசி அவன் ஆலோசனைப்படி நடக்கலாமாவென்று சிந்தித்தான். ஆனால் அச்சமயம் அப்படிச் செய்ய அவகாசமில்லை. ஆகையால் சமீபத்திலுள்ள டெலிபோன் இருக்குமிடத்திற்குச் சென்று தங்கராஜுப் பிள்ளை வீட்டிலிருக்கிறாரா என்று விசாரித்தான். வீட்டிலில்லையென்று தெரிந்தது. அவர் செல்லும் ஹோட்டலில் விசாரித்ததில், அங்கு மில்லையென்று தெரிந்தது. அப்போது மிக்க நேரமாகிவிட்டிருந்தாலும் அவர் தமது காரியாலயத்தில் தான் இருப்பாரென்று தீர்மானித்துக் கொண்டு அங்கு சென்றான்.

    ஜகதீசன் தங்கராஜுப் பிள்ளையின் காரியாலயத்திற்குச் சென்று கதவைத் தட்டியபோது ஒரு வேலைக்காரன் வந்து கதவைக் கொஞ்சம் திறந்து யாரது? என்ன வேண்டும் என்றான்.

    ஜகதீசன், நான் தங்கராஜுப் பிள்ளை ஒரு முக்கியமான விஷயமாகக் கண்டு பேசவேண்டும் என்றான்.

    வேலைக்காரன், ஐயா அய்யா! ஒரு விசேஷ வேலையில் இருப்பதால் இச்சமயம் ஒருவரும் அவரைக் காண முடியாது என்றான்.

    ஜகதீசன் தன்னாலான வரையில் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் இந்த விடத்தில் அவரைக் கண்டு பேசவே முடியாதென்று வேலைக்காரன் ஒரே பிடிவாதமாகக் கூறிக் கதவை மூடித் தாளிட்டுக்கொண்டான். அது என்ன விஷயம் என்பதை ஜகதீசன் பிறகே அறிந்து கொண்டான். அப்போது இரவு மணி ஒன்பதாயிற்று. ‘சரி, எப்படியாயினும் இவன் தன் வீட்டிற்குச் சென்றே தீரவேண்டும் ஆகையால் நாம் இவன் வீட்டு வாயிலில் காத்திருந்து இவனைக் கண்டு பேசுவதே சரி. இதற்காக விடியுமட்டும் வேண்டுமாயினும் இவன் வீட்டு வாயிலில் காத்திருப்பதே சரி’ என்று ஜகதீசன் தனக்குள் தீர்மானித்துக் கொண்டான்.

    ஐந்தாவது இலக்க வீதியில் தங்கராஜுப் பிள்ளையின் வீடு இருக்கிறது. ஜகதீசன் அதன் வாயிற்படி யருகில் சேர்ந்ததும் உள்ளே விடுவார்களோ விடமாட்டார்களோ என்ற பெரிய சந்தேகத்தோடு மணியடிக்கும் கயிற்றைப் பிடித்திழுத்தான். அந்த வீடு பழைய வீடாயினும் ஒரு கம்பீரமான மாளிகைபோலவே இருந்தது. ஜகதீசன் கயிற்றையிழுத்ததும் கதவு திறக்கப்பட்டது. நீண்ட நாசியையுடைய ஒரு பரிசாரகன் வந்து யாரையா என்றான். ஜகதீசன் நான் எஜமானரைக் காண வந்தேன் என்றதும் பரிசாரகன் அய்யா! அவர் வீட்டிலில்லை. எந்த நிமிடமும் வருவாரென்று எதிர்பார்க்கப்படுகிறது என்றான்.

    வீட்டில் காலை வைத்த வரையில் தன் காரியத்தை முடித்துக் கொள்ளாமல் ஜகதீசன் சுலபமாக வெளியில் செல்கிறவனல்ல. தங்கராஜுப் பிள்ளைக்கு இந்திராபாய் என்ற ஒரு புத்திரியுண்டு. அவள் பேரழகு வாய்ந்தவள். ஜகதீசன் அவளைக் கண்டு பேசுவோம் என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டு பரிசாரகனை நோக்கி நான் தங்கராஜுப் பிள்ளையின் புத்திரியைக் கண்டு பேச வேண்டும். இச்சீட்டை அந்தம்மாளிடம் கொடு என்று கூறிக்கொண்டே தன் ஜேபியிலிருந்து தன் பெயர் அச்சடிக்கப்பட்ட சீட்டையெடுத்து அதனடியில் நான் முஷ்டிக் கரத்தைப்பற்றிய விஷயமாக உன் தந்தையிடம் பேச வேண்டும் என்று எழுதி அச்சீட்டைப் பரிசாரகனிடம் அளித்தான்.

    பரிசாரகன் சீட்டையெடுத்துக்கொண்டு உள்ளே தாழ்வாரத்தின் வழியே செல்லும் போது, ஜகதீசன் துணிவோடு அவனைப் பின் தொடர்ந்து சென்றான். பரிசாரகன் அங்குள்ள ஒரு அறையின் கதவைத் திறந்த போது ஜகதீசன் உள்ளே அக்கன்னிகையிருப்பதைக் கண்டான். இந்திராபாய் நல்ல அழகு வாய்ந்தவளாக இருந்ததோடு தேக பலமும் உடையவள். கல்வியிலும், சங்கீதம் பந்தயங்கள் முதலியவற்றிலும் நல்ல பயிற்சியுள்ளவள். அவள் கூந்தல் கருத்து செழித்து வளர்ந்து மிக்க நீளமாக இருந்தது. நெற்றி மிக்க பளபளப்பாய் மூன்றாம் பிறைச் சந்திரன் போல பிரகாசித்தது. வில் போன்ற கரிய புருவங்களின் கீழிருந்த கண்கள் அகன்று காதளவும் நீண்டு மிக்க பிரகாசம் பொருந்தியவைகளாக இருந்தன. அக்கண்களில் புத்திப் பிரகாசமும் மனோ வல்லமையும் பிரகாசித்துக் கொண்டிருந்தன. அவள் அதரங்கள் மெருகெண்ணெய் தடவிய செவ்வரக்கு போலும் மெருகிட்ட பவளம் போலும் இருந்தன. பற்களோ தந்தத்தையும் நித்திலத்தையும் பழிக்கத் தக்கவைகளாய் முல்லை யரும்புக் கோவை போல் பிரகாசித்தன. அவள் எப்போதும் சந்தோஷமான மனமுடையவளானதால் சதா புன்னகையுடையவளாகவே இருந்தாள்.

    இந்திராபாயின் பக்கத்தில் ஒருவன் உட்கார்ந்திருந்தான். அவன் பெரியசாமிப் பிள்ளையென்ற ஒரு வக்கீல். வயது சுமார் முப்பத்திரண்டிருக்கும். நல்ல அழகுடையவன். யாவரிடமும் இனிமையாகப் பேசக் கூடியவன். முன்னமே தன் தொழிலில் முன்னுக்கு வரும் நிலைமையை யடைந்திருந்தான். தங்கராஜுப் பிள்ளையிடம் மிக்க நட்புடையவனாகிவிட்டான்.

    அவர்கள் எதிரிலுள்ள மேஜைமேல் ஒரு புத்தகம் இருந்தது. வக்கீல், தந்தையைக் கண்டு பேசவேண்டுமென்ற சாக்கோடு புத்திரியைக் காண வந்தபோது, அவள் அப்புத்தகத்தை யெறிந்து விட்டது போல் தோன்றியது. அதே மேஜைமேல் நட்சத்திரம் என்ற பத்திரிகை கசக்கி யெறியப் பட்டிருந்தது. ஓகோ, இவர்கள் அப்பிரசுரத்தை வாசித்தார்கள் போலும் என்று ஜகதீசன் எண்ணிக் கொண்டான்.

    இந்திராபாய் பரிசாரகனை நோக்கிச் சின்னசாமி யார் அது? என்றாள்.

    சின்னசாமி அம்மா, இவர் பத்திரிகைக்குச் சமாசாரம் அனுப்பும் ஒருவர் என்று கூறிக்கொண்டே ஜகதீசனைச் சற்று வெறுப்பான பார்வையாய் நோக்கிவிட்டு அக்கன்னிகையைப் பார்த்து, அம்மா! தங்கள் தந்தை வீட்டில் இவரைக் கண்டு பேசவும் வெறுப்புடையவராயிருக்கிறார் என்பது தாங்கள் அறிந்த விஷயமே என்று மரியாதையாய்க் கூறினான்.

    ஜகதீசன் விவகாரம் எப்படி யிருக்கிறதென்று தெரிந்து கொண்டான். பெரியசாமிப் பிள்ளை தன்னால் கூடிய வரையில் மரியாதையாகவே நடந்து கொள்பவன் போல் நடிக்க முயன்றான். தான் இந்திராபாயின் உதவியை எதிர்பார்த்தான்; ஆனால் அது தடைபட்டுவிட்டது. இனி அந்தத் திக்கில் உதவி எதிர்பார்ப்பதில் பிரயோசனமில்லையென்று அவன் மனதிற்பட்டது. ஆயினும் இக் கன்னிகை தன்னைக் காண வந்தவர்களின் மனோ பாவத்தையறிய விரும்புவாள் ஆகையால் எதற்கும் முயன்று பார்ப்பதில் ஒரு கெடுதியுமில்லை; பார்ப்போம் என்று கருதி, இந்திராபாயைத் தான் பிறந்தது முதல் அறிந்தவன் போல் துணிகரமாய், ஆனால் மிக்க மரியாதையோடு, அம்மா! நான் உனது தந்தையைப் பார்க்க வேண்டுமென்று இந்தப் பிற்பகல் முழுவதும் முயன்றேன். அது ஒரு முக்கியமான விஷயம் என்றான்.

    இந்திராபாய் இவன் துணிகரத்தைக் கண்டு அதற்காக நகைப்பதா அல்லது இவனை வெளியிற் போகச்சொல்வதா என்று உணரக் கூடாதவளாய் மிக்க வியப்படைந்து சற்று நேரம் தடுமாற்றமடைந்து கடைசியில் நகைத்து நீர் மிக்க தைரியசாலியான வாலிபர் என்றாள். அதே சமயம், தான் வந்ததால், இந்திராபாயுடன் பேசிக் கொண்டிருப்பதற்கு இடையூறாய்விட்டதென்று பெரியசாமிப் பிள்ளை மனச்சோர்வடைந்ததையும் ஜகதீசன் கவனித்தான்.

    நீ மிக்க தைரியசாலியான வாலிபன் என்றதைக் கேட்டதும் ஜகதீசன் ஏன் என்றான். அதைக் கேட்டதும் அக்கன்னிகையின் நகைப்பு மறைந்து போய்விட்டது. களங்க மற்றதும் இரக்கமானதுமாகிய குரலோடு ஏனெனில், என் தந்தை பத்திரிகைக்குச் சமாச்சாரம் அனுப்புவோர் யாரேனும் இனி தம்மைக் காண இங்கு வந்தால் அவர்களை அப்படியே தின்று விடுவேன் என்று சபதம் செய்து கொண்டிருக்கிறார் என்றாள்.

    இம்மொழிகளைக் கேட்ட ஜகதீசன், அத்தகைய நரமாமிச பட்சணி உனக்குத் தந்தையாய் அமைந்திருக்கிறார் என்று நான் நம்பக்கூடவில்லை என்று வேடிக்கையாக இவளிடம் சொல்லலாம் எனக் கருதினான். ஆனால் அச்சமயம் வீதியில் ஒரு வண்டி வந்து சட்டென்று நின்ற சத்தம் கேட்டதும் அனைவர் மனமும் அதிற்சென்றது.

    2-வது அத்தியாயம்

    இண்டொரு நாட்களுக்குள் இந்திராபாய் முதலியவர்கள் இருக்கும் அறையின் கதவு திறக்கப்பட்டது. வயது முதிர்ந்தவனும் கடுகடுப்பான முகமுடையவனும், நரைத்த உரோமங்களுடையவனுமாகிய ஒரு மனிதன் உள்ளே வந்தான். இந்திராபாய் அவனைக் கண்டதும் மிக்க ஆவலோடு பாய்ந்து போய் அவனை ஆலிங்கனம் செய்து கொண்டு ஆ! அப்பா! எங்கு சென்றிருந்தீர்கள்! நான் உணவு செய்த போது தாங்கள் இல்லாததால் எனக்கு மிக்க அதிருப்தியாயிருந்தது. இப்பயங்கரமான சங்கதி கண்டுபிடிக்கப்பட்டால் நான் மிக்க சந்தோஷமடைவேன். தங்கள் மனதில் என்ன இருக்கிறது. தயவு செய்து கூறும். தங்கள் மனதில் வியாகூலத்தை உண்டாக்கிக் கொண்டிருப்பது என்ன விஷயம்? இப்போது தங்களுக்கு மனவருத்தமளிப்பது என்ன விஷயம்? என்றாள்.

    தங்கராஜுப் பிள்ளை மிக்க மனக்கலக்க மடைந்தவராகவும், திகிலும், வியப்பும், ஐயமுமுடையவராகவும் காணப்பட்டார் என்று ஜகதீசன் உணர்ந்தான். அவர் தன் புத்திரி கூறிய யாவும் கேட்டுக்கொண்டு உடனே விடையளிக்காமல், தடாலென்று அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்து சாய்ந்து கொண்டு பெருமூச்செறிந்தார். இந்திராபாய் தன் தந்தையின் பக்கலில் சென்று குனிந்து மறுபடி தான் முன்பு கேட்ட கேள்விகளையே கேட்டாள்.

    தங்கராஜுப் பிள்ளை மிக்க கஷ்டத்தோடு மெதுவாய்ச் சமாளித்து நிமிர்ந்து உட்கார்ந்து பெரியசாமிப் பிள்ளையை நோக்கி, பெரியசாமி, கடைசியில் அந்த முஷ்டிக் கையைப் பிடித்து விட்டேன் என்றார். அவர் அப்படிக் கூறியதும் இருவரும் ஒருவரையொருவர் மிரட்சியோடு நோக்கினார்கள்.

    தங்கராஜுப் பிள்ளை, ஆம். நான் இப்போது தான் அச்சண்டாளனையெப்படிக் கண்டு பிடிப்பதென்று அறிந்தேன். நாளை இந்நகர் முழுமையும் மிக்க அபூர்வமான அதிசயச் சங்கதியேயெங்கும் பிரஸ்தாபமாக இருக்கும் என்றார்.

    அவ்வாறு கூறி முடிக்கும் சமயம் ஜகதீசனை அவர் பார்த்து விட்டார். உடனே அவர் முகத்தில் உண்டான வெறுப்பையும் கோபத்தையும் கண்டதும் ஜகதீசன் மிக்க மனக்கலக்க மடைந்தான். அதற்குள் தங்கராஜுப் பிள்ளை மிக்க கோபத்தோடு முணுமுணத்துக் கொண்டே கதவை நோக்கிச் சுட்டிக்காட்டினார். அதாவது போ வெளியில் என்று சமிக்கை காட்டினார்.

    ஜகதீசன் தன்னால் கூடிய வரையில் பொது நலத்திற்காகவும் நீதிக்காகவும் நான் இவ்விஷயத்தைப் பற்றி தங்களிடம் பேசவேண்டியிருக்கிறது; ஜனசமூகத்தின் நன்மையை அனுசரித்துத் தாங்கள் நடந்த சங்கதியை எனக்குக் கூற வேண்டியதே ஒழுங்கு என்று வாதித்தான். தங்கராஜுப் பிள்ளை, நான் சமாசாரம் எழுதுவோரிடம் பேசுவதில்லை யென்று பிரதிக்கினை செய்து கொண்டேன். நீ பேசாமல் போய்வரலாம் என்றார். அதன் மேல் ஜகதீசன் எவ்வளவு வாதித்தும் வேண்டிக் கொண்டும் அவர் சம்மதிக்கவே யில்லை. கடைசியில் தட்டென்றெழுந்து பெரியசாமிப் பிள்ளையை அழைத்துக்கொண்டு அருகிலிருந்த புத்தக சாலை அறைக்குள் போய்விட்டார்.

    இப்போது ஜகதீசனும் இந்திராபாயும் மட்டுமே அந்த அறையிலிருந்தார்கள். ஜகதீசன் அங்கு சற்று நேரம் தாமதித்திருக்கலாமென எண்ணினான். ஆனால் இந்திராபாய் அவன் தன் காரியத்தைச் சாதிக்கக்கூடிய ஊக்கத்தையும் சிரத்தையையும் தைரியத்தையும் கண்டு தலையசைத்து. புன்னகையோடு ஜகதீசனுடைய கரத்தைப் பற்றிக் குலுக்கினாள். ஜகதீசன் இனி அங்கு நிற்பதில் பயனில்லை, பேசாமல் போய்விடுவதே மரியாதை யென்று உணர்ந்தான்.

    அதற்குள் புத்தகசாலைக்குள் நுழைந்து தங்கராஜப் பிள்ளையும் பெரியசாமிப் பிள்ளையும் பேசிக் கொள்வது ஜகதீசன் செவிகளில் வீழ்ந்தது. அவன் தான் இருந்த அறையைவிட்டு வெளிப்பட்டு தாழ்வாரத்தின் வழியே செல்லும் போது, புத்தகசாலையில் தாழ்வாரத்தின் பக்கமாக இருந்த சாளரத்தருகில் தன்னை அறியாமலே சற்று நேரம் நின்றான். அதற்குள் உள்ளேயிருப்பவர்கள் பேசும் சங்கதியில் பெரும்பாகத்தை அறிந்து கொண்டான். தங்கராஜுப் பிள்ளை சமீப காலத்தில் தமக்குக் கிடைத்த சங்கதிகளைப் பற்றி பெரிய சாமியிடம் கூறினார்.

    கீழ்க்காணும் விஷயங்களால் அச்சங்திகள் இன்னவையென்று நன்கு விளங்கும்:-

    முஷ்டிக்கரம் என்பவனால் நடந்த கொலைகளாலும் களவுகளாலும் தங்கராஜுப் பிள்ளையின் நிதிக்கு மிக்க தீங்கு நேர்ந்தது. கொலையுண்ட மூவரும் அந்த ஜீவாதார நிதியின் அங்கத்தினர்களே என்று முன்னமே கூறியிருக்கிறோம். இதனால் தங்கராஜுப் பிள்ளை மிக்க வியாகூலமடைந்து அக்கள்ளனை எப்படியாவது பிடிக்க வேண்டுமென்று பல வழிகளில் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார். இரண்டு துப்பறிவோரையும் இதற்காக அமர்த்தியிருந்தார். ஆயினும் அன்று வரையில் எவ்விதமான உளவும் அகப்படவில்லை. அன்று இரவு நிதியின் துப்பறிபவன் ஒருவன் ஒரு ஆளைத் தங்கராஜுப் பிள்ளையிடம் அழைத்து வந்து விட்டு, இந்த ஆளால் நமது காரியம் கைகூடும் என்றான்.

    அழைத்து வரப்பட்ட அம்மனிதன் சிவந்த உரோமமும், வளைந்த தேகமும், குரூரமான பார்வையும் உடையவன். அதோடு நொண்டி ரங்கன் என்றே அவன் அழைக்கப்படுவது. அவன் அந்நகரத்திலுள்ள போக்கிரிகளில் பிரசித்தி பெற்றவர்களில் ஒருவன். முஷ்டிக்கை என்ற கள்ளன் அபூர்வமான சாமார்த்தியம் உடையவனே யெனினும், ஒரு சமயத்தில், தன் வேலைகளில் ஒன்றில் இந்த நொண்டி ரங்கனுடைய உதவியைப் பெறவேண்டி நேர்ந்தது. எப்போது ஒருவன் அவனுக்கு உதவி செய்கிறானோ அப்போது அவன் விஷயங்களைப்பற்றிக் கொஞ்சமேனும் அவனுக்குதவி செய்ய வந்தவன் தெரிந்து கொள்வது இயற்கையே. முஷ்டிக்கை தனக்கு ஒருவன் உதவி செய்ய நேர்ந்தால் அவ்வுதவி முடிந்ததே அவனை யொழித்து விடுவது வழக்கம். ஏனெனில் தன் இரகசியம் அவனிடம் சிக்கியிருக்கிற வரையில் தான் அவனுக்கஞ்சி நடக்க வேண்டும். ஆயினும் இந்தச் சந்தர்ப்பத்தில் முஷ்டிக்கை நொண்டி ரங்கன் தனக்கு உதவி செய்து முடிந்ததே அவனை யொழித்து விடாமல் என்ன காரணத்தாலோ சற்று தாமதம் செய்து விட்டான். தனக்கு உதவி செய்த யார் விஷயத்திலும் அப்படி அவன் தாமதம் செய்ததில்லை.

    நொண்டி ரங்கனுக்கு இப்போது என்ன காரணத்தாலோ முஷ்டிக்கரத்தின் மேல் வஞ்சந் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்று எண்ணம் உண்டாய்விட்டது. அதனால் தங்கராஜுப் பிள்ளையிடம் அவனைப்பற்றி தனக்குத் தெரிந்திருக்கும் உளவுகளை வெளியிட்டு விடுவதென்று துணிந்து விட்டான். துப்பறிபவன் அவனை அழைத்து வந்து தங்கராஜுப் பிள்ளை முன் விட்டு இவனால் நமது காரியம் கைகூடும் என்றதும், தங்கராஜுப் பிள்ளை அவனை நோக்கி, நீ முஷ்டிக்கரத்தைப் பார்த்திருக்கிறாயா? என்றார்.

    நொண்டிரங்கன், அய்யா! நான் அவன் முகத்தைக் கண்டதில்லை. யாருமே கண்டதில்லை. அவன் முன் நின்று பேசியவர்கள் கூட அவன் மாறுவேடத்தைக் கண்டவர்களேயன்றி, அவனுடைய இயற்கை உருவைக் கண்டவர்களல்ல. ஆனால் அவன் இருக்குமிடம் நடமாடுமிடம் முதலிய உளவுகளனைத்தும் இக்கடித உறையிலிருக்கும் கடிதத்தில் குறிக்கப்பட்டிருக்கின்றன. தாங்கள் அவனை நேராய்ப் பிடித்துக் கொள்வதற்குப் போதுமான உளவு இதிலிருக்கிறது என்று கூறி அவர் கரத்தில் ஒரு மாசடைந்த கடித உறையை அளித்தான்.

    கள்ளர்களுக்குள் ஒருவரை யொருவர் காட்டிக் கொடுப்பது பெரிய குற்றமாகும். ஆகையால் நொண்டிரங்கன் மிகத் திகிலோடு தங்கராஜுப் பிள்ளையை நோக்கி, எஜமானே, தயவு செய்து தங்களுக்கு இந்த உளவு எப்படி கிடைத்தது என்பதைப்பற்றி சற்றும் வெளியிடாமலிருக்கப் பிரார்த்திக்கிறேன் என்றான். தங்கராஜுப் பிள்ளை அவ்வாறே வாக்களித்தார்.

    நொண்டி ரங்கன் தங்கராஜுப் பிள்ளையிடம் வாக்குறுதி பெற்றுக்கொண்டு சென்ற இரண்டொரு நிமிடங்களுக்குள், தங்கராஜுப் பிள்ளை தமது மேஜைமேலிருந்த கடிதங்களில் ஒரு கடித உறையிருப்பதைக் கண்டார். அந்த உறையின் மேல் முஷ்டிக்கரத்தின் குறியிட்டிருப்பதைக் கண்டதும் அவர் திடுக்கிட்டு மிக்க வியப்போடும் ஆத்திரத்தோடும் அதைப் பிரித்துப் பார்த்தார். அதில்,

    நொண்டி ரங்கன் கொடுத்த கடித உறையிலுள்ள குறிப்புகளை அடுத்த நாழிகைக்குள் கிழித்தெறிந்துவிடும் என்றிருந்தது. தங்கராஜுப் பிள்ளையின் நாடிகள் அதிர்ந்து விட்டன. அவர் பிரமையும் திகிலுமடைந்து, ஆனால் தைரியத்தைவிடாமல், உடனே வீட்டிற்குச் சென்று இளைப்பாறுவதென்று தீர்மானித்துக் கொண்டார். உடனே தமது வண்டியிலேறி வீட்டெதிரில் வண்டியை விட்டிறங்கி வாயிற் படிக்குள் நுழையும் போது கதவில் ஒரு கடிதம் ஒட்டப்பட்டிருந்ததைக் கண்டார். அதிலும் முஷ்டிக்கரத்தின் குறியிடப்பட்டிருந்தது. அக்கடிதத்தில் பத்திரம்! மறக்க வேண்டாம் என்று மட்டுமே எழுதப்பட்டிருந்தது.

    அதன் பிறகுதான் தங்கராஜுப் பிள்ளை மிக்க மனக்கலக்கமும் கோபமுமடைந்து ஜகதீசன், இந்திராபாய், பெரியசாமி மூவரும் இருக்கும் அறைக்குள் பிரவேசித்தார். தங்கராஜுப் பிள்ளையாவும் கூறியபின் பெரியசாமிப் பிள்ளை அத்தகைய கள்ளர் மிக்க துணிகரமானவர்கள். தாங்கள் இதில் பிரவேசிக்க வேண்டாம் என்று எவ்வளவோ கூறியும் அவர் கேட்காமல் நொண்டி ரங்கன் கொடுத்த கடித உறையை, முஷ்டிக்கரத்தைப் பற்றிய மற்ற பத்திரங்களோடு தமது இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டார். ஜகதீசன் தங்கராஜுப் பிள்ளையின் வீட்டை விட்டுப் புறப்பட்டதும் நேராய் நட்சத்திர பத்திரிகையின் காரியாலயத்திற்குச் சென்று தான் கண்டறிந்த சங்கதியை எழுதி வைத்துவிட்டு தன் இருப்பிடத்திற்குச் சென்றான்.

    ஜகதீசன் துப்பறியும் நிபுணனாகிய கிருஷ்ணாராவ் வசிக்கும் வீட்டிலேயே வசிக்கிறான். அச்சயம் கிருஷ்ணாராவ் தான் உட்காரும் அறையில் இல்லை. கிருஷ்ணாராவ் இரசாயன ஆராய்ச்சி செய்வதில் மிக்க அக்கறை யுள்ளவனானபடியால் அந்த அறையில் தான் இருப்பானென்று கருதி, ஜகதீசன் நேராய் அந்த அறைக்குச் சென்றான். அப்போது கிருஷ்ணாராவ் மிக்க சிரத்தையோடு ஏதோ இரசாயன ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.

    ஜகதீசன் உள்ளே நுழைந்ததும் கிருஷ்ணாராவ், உனக்கு ஒரு பெரிய விஷயம் கொண்டு வந்திருக்கிறேன். நீ இதுகாறும் கண்டுபிடித்த எல்லாவற்றிலும் பெறிய குற்றம் என்றான்.

    கிருஷ்ணாராவ் சட்டென்று தலை நிமிர்ந்து பார்த்து மறுபடி தன் வேலையைக் கவனிக்கத் தொடங்கினான். ஜகதீசன், ஆம், இது மிக்க சாமர்த்தியமான குற்றம். இதைச் செய்தவன் சாத்திர ஆராய்ச்சியோடு வேலை செய்வதால் எள்ளளவு உளவும் விடாமல் தன் காரியத்தை முடிக்கிறான் என்றான்.

    கிருஷ்ணாராவ் அவனை உற்றுநோக்கி, எத்தகைய குற்றம் செய்வோனும் ஏதேனும் ஒரு அடையாளம் விட்டே செல்கிறான். ஒரு அடையாளமும் அகப்படவில்லை யென்றால், உளவுகளுக்காகத் தேடுவோர் சரியான வழியில் தேடவில்லை யென்பதே அதற்குக் காரணம். ஆம். நீ கூறுகிற அத்தகைய குற்றவாளி யொருவன் இருக்கிறான் என்பது எனக்குத் தெரியும். அவன் இன்னம் பிடிக்கப்படவில்லை. பல்லவராயர் கொலையைப் பற்றிய விஷயத்தில் நான் வரவழைக்கப்பட்டேன். அவர் சர்வ கலாசாலை சங்கத்தில் கூட ஒரு அங்கத்தினராக இருந்தார் அல்லவா? என்றான்.

    தான் கூறும் விஷயம் இன்னதென்று கிருஷ்ணாராவ் அறிந்து கொண்டான் என்பதை உணர்ந்ததும் ஜகதீசன் திடுக்கிட்டு, ஆம், ஆனால் இது விஷயமாய்க் கடைசியில் நடந்த சம்பவம் உனக்குத் தெரியாது என்றான். கிருஷ்ணாராவ், அதென்ன சமாசாரம்? என்று கேட்டான்.

    ஜகதீசன், தங்கராஜுப் பிள்ளை உளவைக் கண்டு பிடித்து விட்டார். நாளைய தினம் அவர் அந்த முஷ்டிக் கரத்தைப் பிடித்து விடுவார் என்றான்.

    கிருஷ்ணாராவ் அம்மொழிகளைக் கேட்டதும் திடுக்கிட்டவன் போல் தட்டென்றெழுந்து, அப்படியா? அவர் எவ்வளவு காலமாக இதை யறிந்திருக்கிறார்? என்றான்.

    ஜகதீசன், சுமார் இரண்டு மூன்று மணி நேரத்திற்குள்ளாகத்தான் அவருக்கு அந்த உளவுகள் கிடைத்திருக்கின்றன என்றான்.

    கிருஷ்ணாராவ் ஜகதீசனை யுற்று நோக்கி, அப்படியாயின் தங்கராஜுப் பிள்ளை மடிந்தார் என்று கூறிக் கொண்டே தன் எதிரிலிருந்த இரசாயனக் கருவிகளை யெல்லாம் அப்புறம் தள்ளிவிட்டு வெளியில் புறப்பட மிக்க துரிதமாக உடையணியத் தொடங்கினான்.

    ஜகதீசன், நீ கூறியது நடவாத காரியம் என்றான்.

    கிருஷ்ணாராவ் அவன் மொழிகளைக் கவனியாமல், ஜகதீசன்! புறப்படு சீக்கிரம். உளவுகள் மறைந்துவிடுமுன் நான் துரிதமாகச் செல்ல வேண்டும் என்றான்.

    கிருஷ்ணாராவ் கூறியது மிக்க யோசனையில்லா ஆத்திரப்பேச்சு என்று ஜகதீசன் மனதிற்பட்டது. ஆயினும் கிருஷ்ணாராவின் சாமர்த்தியம், குணம் முதலியவற்றைக் கவனிக்கும் போது அவன் மனதில் ஒருவிதப் பீதியும் மிக்க சந்தேகமும் உண்டாயின.

    உடனே அவர்கள் இருவரும் ஒரு வண்டியிலேறிக் கொண்டு தங்கராஜுப் பிள்ளையின் வீட்டெதிரில் சென்று வண்டியைவிட்டிறங்கும் போது இரவு இரண்டு மணிக்கு மேலாயிற்று. கிருஷ்ணாராவ் ஆத்திரத்தோடு கதவைத் தட்டினான். வேலைக்காரனாகிய சின்னசாமி தூக்கக் கண்ணோடு வந்து கதவைத் திறந்தான். உடனே ஜகதீசனைக் கண்டதும் கதவை மூடிவிடப்போனான்.

    ஆனால் கிருஷ்ணாராவ் தந்திரமாய்ச் சட்டென்று ஒரு காலை வாயிற்படியின் உட்பக்கம் வைத்துவிட்டு, உன் எஜமானாகிய தங்கராஜுப் பிள்ளை இங்கே இருக்கிறார்? நலமாக இருக்கிறாரா? என்று கேட்டான்.

    சின்னசாமி, சந்தேகமின்றி நலமாகத்தான் இருக்கிறார். படுக்கையறையில் இருக்கிறார் என்றான்.

    அதே விநாடி ஒருவிதத் தாழ்ந்த சத்தம் இவர்கள் செவியில் வீழ்ந்தது. அது சரியாக மனிதரால் உண்டாக்கப்பட்ட சத்தமா என்று தெரியவில்லை. இராக்காலத்தில் கலவரத்தோடிருக்கும் நமது புத்திக்கு அப்படிப் புலப்படுகிறதோவென்று அவர்கள் கருதினார்கள். கிருஷ்ணாராவ், உஸ்! கேட்கிறதா பாருங்கள் என்றான். அவன் மட்டுமே கலங்காத சாந்த மனதோடிருக்கிறான். சின்னசாமியின் முகம் வெளுத்து விட்டது. அச்சத்தம் புத்தகசாலையிலிருந்து வந்தது போல் தோன்றியதால் சின்னசாமி மிரட்சியான பார்வையோடும் நடுக்கத்தோடும் சென்று அக்கதவருகில் நின்று கூப்பிட்டுப் பார்த்தான். ஒரு பதிலும் வரவில்லை. உடனே கதவைத் திறந்தான்.

    தங்கராஜுப் பிள்ளையின் வீட்டிலிருக்கும் புத்தக சாலை ஒரு பெரிய அறை. அந்த அறையின் நடுவில் செம்மரத்தில் செய்த ஒரு பெரிய அழகிய மேஜையிருந்தது. தீபம் நன்றாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அம்மேஜையின் ஒரு கோடியில் பேசும் எந்திரம் (டெலிபோன்) வைக்கப்பட்டிருந்தது. மேஜையின் அதே கோடியில் கீழே தங்கராஜுப் பிள்ளை அசைவற்று விழுந்து கிடந்தார். அவர் முகம் மிக்க விகாரமடைந்திருந்ததோடு பயங்கரமாகவும் இருந்தது. அவரிடம் மிக்க அன்புடைய நாய் அச்சமயம் வெளியிலிருந்து ஓடிவந்ததும் பயத்தோடு அவர் தேகத்தை முகர்ந்து பார்த்ததும் கோரமாக அழத் தொடங்கியது. தன் எஜமான் இறந்து போனார் என்று அந்த நாய் அறிந்து கொண்டது.

    சின்னசாமி மற்ற வேலைக்காரரைக் கூவியழைத்தான். உடனே படுக்கையுடையோடிருந்த மற்ற வேலைக்காரர்களெல்லாம் அங்கு வந்து குழுமினார்கள். அச்சமயம் பெருங்குழப்பம் உண்டாய்விட்டது.

    திடீரென்று பெரிய போர்வை அணிந்திருந்த ஒரு பெண் உள்ளே பாய்ந்து வந்ததும் அங்கிருந்த மற்ற எவரையும் கவனிக்காதவள் போல் நேராய்க் கீழே விழுந்து கிடக்கும் தங்கராஜுப் பிள்ளையினருகிற் சென்று அவர் மேல் விழுந்து அய்யோ தந்தையே! தந்தையே! அய்யோ கடவுளே! இறந்து விட்டாரே என்று மனமுடைந்து கதறியழுதாள்.

    ஆனால் இந்திராபாய். மிக்க கஷ்டத்தோடு தன் துயரையடக்கிக் கொண்டு சற்று மனோ தைரியமடைந்து சின்னசாமி! பெரியசாமிப் பிள்ளையை உடனே வரும்படி கூறு என்றாள்...

    சின்னசாமி யுடனே பேசும் எந்திரத்தருகில் சென்று பெரியசாமிப் பிள்ளையோடு பேசியதில், பெரியசாமிப் பிள்ளை அச்சமயந்தான் தன் வீட்டில் தன் உடைகளைக் களைந்து படுக்கையுடையணியும் தருவாயில் இருப்பதாகவும் உடனே வருவதாகக் கூறியதாவும் தெரிந்தது. அதற்குள் இந்திராபாய் வீட்டிலேயே வசிக்கும் அவள் அத்தையாகிய ஜீவாம்பாள் என்ற மூதாட்டி வந்து இந்திராபாய்க்குத் தேறுதல் கூற முயன்றாள்.

    கிருஷ்ணாராவ், இந்திராபாய், ஜகதீசன் மூவரும் சவத்தைத் தூக்கி மஞ்சத்தின் மேல் கிடத்தினார்கள். அதன் பிறகு கிருஷ்ணாராவும் ஜகதீசனும் சற்று எட்டச்சென்று நின்ற போது ஜகதீசன், இதென்ன சம்பவம்? இதென்ன இயற்கையாய் நேர்ந்ததா அல்லது ஏதேனும் ஆபத்துண்டாயிற்றா! அல்லது கொலையா? என்று கிருஷ்ணாராவைக் குசுகுசு வென்று கேட்டான்.

    அவ்வாறு கேட்கும் போது கொலையா என்ற வார்த்தை அவன் தொண்டையிலேயே சிக்கிக்கொண்டது. ஏனெனில் அச்சமயம் கிருஷ்ணாராவ் முன்பு வீட்டில் கூறிய வார்த்தைகள் அவன் நினைவிற்கு வந்ததும், இது கொலையாகவே இருக்கும் காரணம் என்ன? தங்கராஜுப் பிள்ளையிடம் நொண்டி ரங்கன் கொடுத்த உளவுகள் அடங்கிய கடிதத்தைக் கைப்பற்றவோ என்று அவன் மனதில் சிந்தனை உண்டாயிற்று.

    கிருஷ்ணாராவ் ஜகதீசன் கேள்விக்கு ஒரு பதிலும் கூறாமல், பேசாமல் சவத்தினருகிற் சென்று உட்கார்ந்து அதைச் சோதித்துப் பார்த்துவிட்டு எழுந்தான். அச்சமயம் அவன் முகத்தில் ஒரு அபூர்வமான பார்வை உண்டாயிருந்தது. அவன் ஜகதீசனருகில் வந்து மிக்க மெதுவாய் விபரீதம். தங்கராஜுப் பிள்ளை வழக்கம்போல் மேஜையருகில் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருந்தார். அச்சமயம் பேசும் எந்திரத்தில் யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டிருக்க வேண்டும். இவர் எழுந்து அதனருகிற் சென்றிருக்கிறார். இதோ பார் இவர் காலை இந்தப் புத்தகத்தின்மேல் வைத்திருக்கிறார். இவர் எந்திரத்தினருகிற் சென்று செவியில் வைத்துக் கேட்கும் குழலை (ரிசீவர்) எடுத்துச் செவியில் வைத்ததே மின்சார சக்தி அக்குழல் மூலமாக வந்து காதில் தாக்கியிருக்கிறது. அந்த உஷ்ணத்தால் தீய்ந்த காயம் இருக்கிறது என்றான்.

    ஜகதீசன், எதற்காகக் கொல்லவேண்டும்? என்றான்.

    கிருஷ்ணாராவ், இவருடைய ஜேபிகள் சோதிக்கப்பட்டிருக் கின்றனவென்று நன்றாய்த் தெரிகிறது. பொருள் எதுவும் களவு போகவில்லை. ஆனால் மேஜைமேல் இருக்கும் பொருட்கள் இருக்கிற நிலைமையை நோக்க அவசரத்தோடு சோதனை செய்யப்பட்டிருக்கிற தென்று தெரிகிறது என்றான்.

    அச்சமயம் கதவு திறக்கப்பட்டது, பெரியசாமிப் பிள்ளை உள்ளே பாய்ந்து வந்தான். அவன் சவத்தின் அருகிற் சென்று அதை உற்று நோக்கிய பின் தன் மனக்கலக்கத்தை தைரியசாலிபோல் அடக்கிக் கொண்டு இந்திராபாயை நோக்கித் தாழ்ந்த குரலால், இது முஷ்டிக்கரத்தின் செய்கை. அவனைத் தண்டனையடையச் செய்வதே இனி என் வாழ் நாட்களின் கடமையாகும் என்றான். இந்திராபாய், என் ஆபத்து காலத்தில் நீயே எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறுவது போல் அவன் முகத்தை உற்று நோக்கிப் பேசமுடியாமல் அவன் கரத்தைப்பற்றி குலுக்கினாள்.

    இதற்கிடையில் யாவரையும் விட்டு எட்டச் சென்றிருந்த கிருஷ்ணாராவ் டெலிபோன் எந்திரத்தை மிக்க ஜாக்கிரதையாய்ச் சோதித்துக் கொண்டிருந்தான். அவன் தனக்குத்தானே, அவன் மிக்க சாமர்த்தியமான கள்ளன். அவன் விரற்சட்டைகளை அணிந்து கொண்டிருக்க வேண்டும். ஒரு விரற்குறிகூட இல்லை. இங்கே முக்கியமாயில்லை என்று பற்களைக் கடித்தபடி தனக்குள்ளாகவே கூறிக்கொண்டான்.

    நொண்டி ரங்கன் தங்கராஜுப் பிள்ளையிடம் முஷ்டிக் கரத்தைப் பிடிக்கக்கூடிய உளவுகளை அளித்துவிட்டு அதற்காகக் கூலி பெற்றுக்கொண்டு அவரை விட்டுச் சென்றதும் நேராய்த் தான் மறைந்து வசிக்கும் ஹோட்டலுக்குச் சென்றான். கையில் தாராளமாகப் பணமிருந்தால் குடிக்க யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வது அவனுடைய சுபாவம். மேலும் இப்போது தான் ஒருவனைக் காட்டிக் கொடுத்து பணம் சம்பாதித்த எண்ணம் தன் மனதில் உறுத்தாமல் மறைய வேண்டுமாதலால் தாராளமாய்க் குடிக்கத் தொடங்கினான். குடிவெறியால் அவன் கண்கள் மயங்கிவிட்டன. ஆகையால் அச்சமயம் உள்ளே வந்த மனிதர்களில் ஒருவன் ஒருவரிடமும் பேசாமல் சாராயம் விற்கப்படும் இடத்தருகிற் சென்று உட்கார்ந்ததை அவன் கவனிக்கவில்லை. நொண்டி ரங்கன் அதற்குள்ளாகவே நன்றாய்க் குடித்திருந்ததால் தனக்குப் புதிதாகக் கிடைத்த சினேகர்கள் எங்கு சென்றாலும் அங்கு சென்று அவர்கள் கூடவே உட்கார்ந்திருந்தான். நாம் கூறிய மனிதனும் இவன் செல்லும் இடத்தினருகிலேயே சென்று உட்கார்ந்து கொண்டிருந்தான்.

    கடைசியில் நொண்டி ரங்கன் அதைவிட்டுப் புறப்பட்டு அவ்வீதியைக் கடந்து இருள் சூழ்ந்த ஒரு சந்தில் பிரவேசித்தான். அச்சந்தில் மூன்று

    Enjoying the preview?
    Page 1 of 1