Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jothidam - Puriyatha Puthir
Jothidam - Puriyatha Puthir
Jothidam - Puriyatha Puthir
Ebook549 pages6 hours

Jothidam - Puriyatha Puthir

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

சகலவிதமான சந்தேகப் பார்வைகளுடன்தான் முதலில் நான் ஜோதிடத்தை அணுகினேன். அதில் உண்மை இல்லை என்று தெரிந்திருந்தால் அப்போதே ஜோதிடத்தை விட்டு விலகிச் சென்றிருப்பேன். ஆனால் அணுகிய என்னை அது தன்னுள் ஈர்த்துக் கொண்டது. காரணம் அதில் உண்மை இருந்ததும் அதுவே உண்மையாக இருந்ததும் தான்.

நான் அறிந்த உண்மைகளை என் அனுபவங்களை எனக்குப் பின் வருபவர்களும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று இந்த நூல் வடிவில் ஆவணப்படுத்தியிருக்கிறேன். என்னுடைய அனுபவங்களைப் படிப்பவர்கள் ஜோதிடத்துறையில் நூறு ஆண்டுகள் செலவு செய்ததை போன்ற ஓர் உணர்வைப் பெறலாம். ஒவ்வோர் அனுபவமும் படிப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் என நம்புகிறேன்.

படியுங்கள். உண்மையை நோக்கிய பயணத்தைத் தொடருங்கள்.

- ராஜேஷ்

எல்லா அற்புதங்களையும் அதிசயங்களையும் விஞ்ஞானத்தால் விளக்க முடியும்.

- உளவியல் தந்தை சிக்மண்ட் ஃபிராய்டு

இந்த உலகத்தில் நடப்பது எல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒன்றுதான்.

- விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

நடப்பவை எல்லாம் தற்செயல். தற்செயலை நோக்கியே எல்லா நிகழ்வுகளும் நடக்கின்றன.

- விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

நடப்பவை எல்லாம் திருச்செயல். திருச்செயலை நோக்கியே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

- ஆன்மீகவாதிகள்

Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580131605113
Jothidam - Puriyatha Puthir

Read more from Actor Rajesh

Related to Jothidam - Puriyatha Puthir

Related ebooks

Reviews for Jothidam - Puriyatha Puthir

Rating: 4 out of 5 stars
4/5

7 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    lot of real life incidences and verified by the author. You can watch his experience in you tube videos also

Book preview

Jothidam - Puriyatha Puthir - Actor Rajesh

http://www.pustaka.co.in

ஜோதிடம் - புரியாத புதிர்

('ராணி' வார இதழில் வெளி வந்த தொடரின் தொகுப்பு)

Jothidam - Puriyatha Puthir

Author:

நடிகர் ராஜேஷ்

Actor Rajesh

For more books

http://www.pustaka.co.in/home/author/actorrajesh-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

வாழ்த்துரை - திரு. கலைஞானம்

வாழ்த்துரை - கவிஞர் பிறைசூடன்

ஆராய்ந்தேன், அனுபவப்பட்டேன், ஆதலால் ஏற்றுக் கொண்டேன்

ஜோதிட சாஸ்திரமும் மனித வாழ்க்கையும்

8-வது உலக அதிசயம்

1. உலுக்கிய ஊமை ஜோதிடர்

2. திகைக்க வைத்த குட்டி ஜோதிடன்!

3. சிங்கப்பல் குழந்தைக்கு பலித்த கணிப்பு!

4. புல்லரிக்க வைத்த புகைப்பட ஆரூடம்!

5. உறைய வைத்த ஊமை ஜோதிடர்!

6. எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவுக்கு பலித்த நாடி!

7. வியக்க வைத்த வெற்றிலை ஜோதிடம்!

8. பிரபல நடிகரின் அப்பா சொன்ன தப்பாத ஆரூடம்!

9. கண்முன் பலித்த கணிப்பு!

10. பாடலாசிரியருக்கு அதிர்ச்சி!

11. செட்டிநாட்டுக்காரர் சொன்ன சிலிர்க்கும் ஜோதிடம்!

12. என்னை காலில் விழ வைத்த எட்டையபுரம் அரண்மனை ஜோதிடர்!

13. பெருவிரல் ரேகை ரகசியம்!

14. ஜாதகப்படி தீப்பிடித்த என் வீடு!

15. குருநாதர் மகளுக்கு பலித்த கணிப்பு!

16. ஜாம்பவானைச் சாய்த்த சாமானிய சிரிப்பு!

17. உயிரைக் குடித்த ஜாதக தோஷம்

18. நடுங்க வைத்த நாடி

19. நீதிபதியைப் பிரமிக்க வைத்த ஜோதிடர்!

20. அதிர்ச்சி தந்த ஜோதிடர்!

21. பெண் சொன்ன தப்பாத குறி!

22. ஏடு பார்த்ததில் ஏற்பட்ட வியப்பு

23. ஜோதிடத்தால் ஜோதிடருக்கு வந்த சோதனை!

24. விலகிய திருமணத் தடை! விரட்டிய ஆவித் தொல்லை!

25. மரணத்தைக் கணித்த மாமனிதர்!

26. கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கும் ஜாதகம்!

27. என் தங்கையின் திருமண கணிப்பு!

28. நாடி ஜோதிடத்தில் எம்.ஜி.ஆர். பெயர்?

29. மரண நேரத்தைக் குறித்த பார்த்தசாரதி

30. உண்மையை வரவழைக்கும் வடபழஞ்சி சாமியார்!

31. நண்பன் கொலை! உடலில் புகுந்த ஆவி!!

32. கடவுளா.... ஆவியா?

33. 'அம்மை' என்பது நோயா? தெய்வ காரியமா?

34. உங்களுக்குப் பிள்ளை இல்லை! மனைவிக்குப் பிள்ளை உண்டு!!

35. ஓரையின் அதிசய உண்மைகள்

36. நம்ப முடியாத அதிசயங்கள்!

37. மனைவிக்கு கொள்ளி வைத்த கணவன்

38. ஆவி திடுக்... திடுக்!

39. கனவு - ஆரூடம்: அப்படியே பலித்த அதிசயம்!

40. 105 பவுன் நகையை மீட்க உதவிய வெற்றிலை ஜோதிடம்!

41. செந்தாமரை(க்கு) சொன்னது பலித்தது!

42. ஜோதிடம் வென்றது!

43. அப்படியே பலித்தவை

44. மவுனச் சாமியாரின் மகத்தான ஆற்றல்!

45. நாயின் வாயைக் கட்டிய மந்திரம்!

46. கதி கலக்கிய ஆரூடங்கள்!

47. சினிமா இயக்குநரை இந்துக் கோயிலுக்கு பரிகாரம் செய்யச் சொன்ன இஸ்லாமியர்!

48. கொலையாளியை போலீசில் சிக்க வைத்த ஏடு

49. வாரிசுகளை இழந்தபின் பெண் பிள்ளை பெற்ற தாய்!

50. சினிமா இயக்குநருக்கு பலித்த துல்லிய ஆரூடம்!

51. 150 பேர்களுடைய நாடியைப் பார்த்த A.S. குமாரின் அனுபவம்

52. ஜோதிடத்தோடு போட்டியிட்டவர்

* ஜோதிடத்தைப் பற்றி மற்றவர்கள்

* மகாபாரதமும் ஜோதிடமும்

வாழ்த்துரை

திரு கலைஞானம்

கதாசிரியர் - தயாரிப்பாளர்

ஆதவன் இல்லாமல் ஒளிபிறப்பதில்லை

ஆராய்வல்லாமல் அறிவு வளர்வதில்லை

காரணமில்லாமல் பூரணமாவதில்லை

கற்றார் அல்லாமல் மற்றவை புரிவதில்லை

பல்கலைகள் பயின்று வாழும் ராஜேஷ்

பெற்றோர் புண்ணியமில்லாமல் வேறில்லை

நண்பர் ராஜேஷ் அவர்கள் ஜோதிடக் கலையை வேண்டி விரும்பி, தோண்டித் துருவி அதன் நுணுக்கங்களை எல்லாம் படித்தும் அனுபவித்தும் அரும்பெரும் முயற்சி எடுத்து வருகிறார் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிய வருகிறது.

ராஜேஷ் அவர்களுக்குச் சொல்லாற்றல், நடிப்பாற்றல், எழுத்தாற்றல், நினைவாற்றல் நிறைவாக இருப்பது யாவரும் அறிந்ததே.

சோதிடக் கலையை மட்டும் சும்மா விடுவாரா என்ன? இறைவன் செயலும், சோதிட இயல்பும் புரியாத புதிர்தான் என்றாலும் நடந்ததைச் சொல்லும் உண்மைக்கு ஒத்திகை தேவையில்லை...

அவர் அறிந்து அனுபவித்த உண்மைகளை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து நமக்கெல்லாம் அரிய சோதிடக் கலையை உணர்த்தி வருகிறார்... பிரமிக்க வைக்கிறார்...

அருமை நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை வாரி வழங்கி மட்டில்லா மகிழ்ச்சி பெறுகிறேன்.

அன்புடன்

கலைஞானம்

*****

வாழ்த்துரை

கவிஞர் பிறைசூடன்

மாதிடம் வேண்டும் சோதிடத்தை ஆய்வு செய்ய. மனதிடம் மிக்க நண்பர் நடிகர் ராஜேஷ் அவர்கள் சோதிடத்தின் தடம் தேடி அலைந்து, சொல்லறியா விஷயங்களை கட்டுரையாக்கி இருக்கிறார். என் முதல் கதாநாயகன் ராஜேஷ். ஆம் நான் அறிமுகமான 'சிறை' படத்தின் நாயகன் அவர்தான். அந்தப் பழக்கத்தில் சோதிடத்தைப் பற்றி அவரிடம் விவாதித்தது என் நெஞ்சில் நிழலாடுகிறது. 'என்னையே பலிகடா ஆக்கி இதைக் கற்றேன்' என்று சுய உரை எழுதுகிறார். ஆசிரியர் பணிபுரிந்த அனுபவத்தால் எதையும் உய்த்துணர்ந்து உறுபொருள் அறிந்து உவகையுடன் உரைக்க வேண்டும் என்ற அவர் ஈடுபாடு புலனாகிறது.

உளவியல் தந்தை சிக்மண்ட் ஃபிராய்டை மீறி சில அற்புதங்களை அதிசயங்களை மெய்ஞானம்தான் விளக்க முடியும் என்பது தெளிவாகிறது. நாடி சோதிடமும், ஊமை சோதிடமும் நம்மை உலுக்குகிறது. நடிகர் சிவக்குமாரின் தந்தை ராக்கைய்யாக் கவுண்டரின் கணிப்பு 'ராக்கெட்' யுகத்திலும் நம்மைப் புல்லரிக்க வைக்கிறது. ரோபோ சங்கரின் தாத்தா சுப்பையா செட்டியாரின் கணிப்பு திகில் மூட்டுகிறது. திரவியம் நாயுடு அவர்களின் கணிப்பு திகைக்க வைக்கிறது. பெருரேகை பார்த்து லக்னம் சொல்பவர்கள் அந்தக் குறிப்பை சமூகப்பார்வைக்கு பதிவு செய்தால் ஆன்மீக இந்தியாவின் அடையாளம் இன்னும் மெருகேறும். வெங்கட் ராமய்யரின் கணிப்பு சாத்தியம்தானா என்று ஆயிரம் கேள்விகளை நம்முள் எழுப்புகிறது.

ஸ்பார்டகஸ் பற்றி நான் படித்தவுடன் நாடி சோதிடத்தின் தெய்வீகத் தன்மை எனக்குத் தெரிந்தது. தன் மரணத்தைக் கணித்த வடிவேல்பிள்ளை போன்ற மாமனிதர்களை இனி என்று காண்பது. கர்ப்பத்திலிருக்கும் குழந்தையின் எதிர்காலத்தைக் கணித்த கோபால அய்யர் இந்த நாட்டின் தலைவிதியைக் கணித்து நல்ல தலைவர்களை அடையாளம் காண்பித்தால் நாடு உருப்படுமே என்ற நப்பாசை தோன்றுகிறது. விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூற்றுப்படி 'நடப்பது எல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது' என்றால் நாட்டைப்பற்றி முன்கூட்டியே கணிப்பதில் தவறு ஒன்றும் இல்லையே.

வடபழஞ்சி சாமியார் கைக்கடிகாரத்தைப் பார்த்து 'இது உன் அப்பாவின் கைக்கடிகாரம்' என்று சொல்ல முடிந்தது ஆச்சர்யமூட்டுகிறது. உடலில் புகுந்த ஆவி பற்றி படித்ததும் உடலில் உதறல் ஏற்பட்டது. பாம்புக்கடிக்கு வேட்டியைக் கிழித்து வைத்தியம் பார்த்தது, தஞ்சை மாவட்டத்தில் என் பள்ளி நாட்களில் அதிசயமாக பேசப்பட்ட செய்தியாகும். வலையப்பட்டி மாட்டு மருத்துவம் எட்டாவது அதிசயமாகத் தோன்றுகிறது. சோதிடர் சுந்தரய்யரின் தியேட்டர் கட்ட முடியாது என்ற கணிப்பு உயிரை ஊடுருவிப் பாய்கிறது. வண்டியூர் கனகராஜின் நாடி போன்றவை மீண்டும் மீண்டும் பதற்றமடைய வைக்கிறது. அமெரிக்கப் பெண் கனவில் என் 'குலகுரு' அகத்திய மாமுனி வந்தது ஜென்ம பந்தத்தை நினைவூட்டுகிறது.

நடப்பவை எல்லாம் தற்செயலாலா திருச்செயலாலா என்ற அவரின் கேள்வி, விடைதேடச் சொல்கிறது. குருசேத்திரம் முதல் நளவெண்பா வரை இவரின் ஆய்வு இவரின் அறிவுக்கூர்மையை பறைசாற்றுகிறது. பலரைப் பற்றி இவரின் கருத்துகளை பயமின்றி எடுத்துரைத்து இருக்கிறார். தொண்டன் முதல் தலைவன் வரை, சாதாரணன் முதல் ஜப்பான்காரன் வரை, ஆத்திகம் பேசும் தலைவனும் நாடி தேடி ஓடும் கதை நானறிவேன்.

கலைத்துறையில் ஒரு நடிகனாக மட்டும் இல்லாமல் மார்க்சீய சிந்தனையில் தோய்ந்த நடிகர் ராஜேஷ் அவர்கள், விருப்பு வெறுப்பின்றி தான் கண்ட விஷயங்களை துணிவுடன் எடுத்து எழுதியிருக்கிறார். இதனால் உங்கள் மீது விமர்சனம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், வெகுஜனம் நிச்சயம் உங்களைப் பாராட்டும். வரலாறு உங்களைப் பதிவு செய்யும். தேடல் உள்ள மனிதர் நீங்கள். தேடித்தேடி வென்றிருக்கிறீர்கள். இன்னும் பல துறை ஆய்வுகளை மேற்கொண்டு வாழ்விற்கு அர்த்தம் செய்வீர்கள் என்பது நிச்சயம். உங்களைப் போன்ற அறிவாளியோடு நானும் பழகியிருக்கிறேன் என்பது எனக்குக் கிடைத்த பெருமை. உலகமே இந்த நூல் வெளியிடும் நாளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. மேலும், இதை வெறும் கட்டுரையாக இல்லாமல், சம்மந்தப்பட்டவர்களின் வாய்மொழிகளையும் கணிப்புகளையும் வீடியோ ஆடியோவில் பதிவு செய்தால் வரலாற்றுப் பெட்டகமாக மாறும் என்று வாழ்த்தி அமைகிறேன்.

வாழ்க வளமுடன்,

பிறைசூடன்

*****

ஆராய்ந்தேன், அனுபவப்பட்டேன், ஆதலால் ஏற்றுக் கொண்டேன்

ஜோதிடத்தை ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையின் அடிப்படையில் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அச்சவுணர்வின் அடிப்படையிலும் நான் அதை அங்கீகரிக்கவில்லை.

நானே சோதித்துப் பார்த்தேன். வெறும் ஏட்டளவில் மட்டுமல்ல; நேரடியாகக் களமிறங்கியே பரீட்சித்துப் பார்த்தேன்.

மரத்தடியில் இருக்கின்ற ஜோதிடர் முதல் மாளிகையில் இருக்கின்ற ஜோதிடர் வரை எல்லாத் தரப்பிலுமாக என் ஆய்வுக்களம் பரந்து விரிந்திருந்தது.

முதலில் என் ஜாதகத்தை ஆய்வுக்கு உட்படுத்தினேன். பிறகு, என் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், திரையுலகத்தைச் சார்ந்தவர்கள், பெரும்புள்ளிகள், அரசியல்வாதிகள் என்று பலதரப்பட்டவர்களின் ஜாதகங்களையும் சோதித்துப் பார்த்தேன்.

ஆய்வு செய்யச் செய்ய, ஜோதிடம் ஓர் உயர்ந்த கலை, அறிவுத்துறை என்ற உண்மை எனக்குப் புலப்படத் தொடங்கியது. மேலும் மேலும் என் ஆய்வைத் தீவிரப்படுத்தினேன். சராசரி வாழ்விலிருந்து விலகி, வித்தியாசமான வாழ்வை வாழும்படியான சூழ்நிலைக்கு உள்ளான பலருடைய ஜாதகத்தையும் ஆராய்ந்தேன். சிறை சென்றவர்கள், பயங்கரவாதிகள், கொலைகாரர்கள், விலைமாதர்கள், விதவைகள், விவாகரத்து ஆனவர்கள், உடல் ஊனம் கொண்டவர்கள், காலம் கடந்து திருமணம் செய்தவர்கள், கடைசி வரை கல்யாணமே ஆகாமலிருந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தவர்கள், அகாலமரணத்துக்கு உள்ளானவர்கள், தற்கொலை செய்தவர்கள், கொலையானவர்கள், விபத்தில் இறந்தவர்கள், பிறந்தவுடன் இறந்தவர்கள், இறந்தே பிறந்தவர்கள்... இன்னும் இன்னும் பல்வேறு வகைப்பட்டவர்களின் ஜாதகங்களையெல்லாம் அநேக ஜோதிடர்களிடம் காட்டிச் சோதித்துப் பார்த்தேன்.

இந்த சோதனைகளுக்குப் பெரும் வியப்புத்தான் எனக்கு விடையாகக் கிடைத்தது. நான் வியந்தேன், ஆச்சரியத்தில் மூழ்கிப் போனேன் என்பதைத் தவிர, நான் அடைந்த அந்த அனுபவச் சிலிர்ப்பைச் சொல்ல, என்னிடம் வேறு வார்த்தைகள் இல்லை.

இவ்வாறெல்லாம் ஏன் ஆராய்ந்தேன்? இப்படியெல்லாம் ஆராய்ந்து, ஜோதிடம் உண்மைதான் என்று நிரூபிக்க வேண்டிய அவசியத்திலோ கட்டாயத்திலோ நான் இல்லை.

தொழில்முறையில் ஜோதிடத்தை வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு வேண்டுமானால் அந்த அவசியம் இருக்கலாம்.

எனக்கோ ஜோதிடம் தொழில் அல்ல.

அப்படியானால், நான் ஏன் ஜோதிட சாஸ்திரத்தை ஆராய வேண்டும்?

அதற்கு அடிப்படைக் காரணம், இயல்பாக எனக்குள் இருக்கின்ற உண்மைக்கான தேடல்தான். எது உண்மை என்பதைத் தேடுவதில் எனக்குச் சிறுபிள்ளையிலிருந்தே ஓர் ஆர்வம் இருக்கிறது.

அந்த எனது இயல்புதான், என்னை ஜோதிடத் துறையின் உள்ளே பிரவேசிக்கத் தூண்டியது. எவ்வளவு பெரிய சித்தாந்தமாக இருந்தாலும், தத்துவமாக இருந்தாலும், அதில் உண்மையில்லை என்று தெரிந்தால், அது நடைமுறைக்கு ஒத்துவராது என்று தெரிந்தால், அதை அந்தக் கணமே விட்டுவிடக் கூடியவன் நான். என் மனம் உண்மையென்று உணராத ஒன்றை, வீம்புக்காகவாவது விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்ற குணம் ஒரு போதும் எனக்கு இருந்ததில்லை.

சகலவிதமான சந்தேகப் பார்வைகளுடன் தான், முதலில் நான் ஜோதிடத்தை அணுகினேன். அதில் உண்மையில்லை என்று தெரிந்திருந்தால் அப்போதே 180 டிகிரி கோணத்தில் திரும்பி, ஜோதிடத்துக்கு முதுகு காட்டிக் கொண்டு, அதைவிட்டு விலகிச் சென்றிருப்பேன்.

ஆனால், அதை அணுகிய என்னை, அது தன்னுள் ஈர்த்துக் கொண்டது. காரணம், அதில் உண்மை இருந்ததுதான். அதுவே உண்மையாக இருந்ததுதான்.

நான் தந்தை பெரியாரை நன்றாகப் படித்திருக்கிறேன். மேல்நாட்டு நாத்திகர்கள், தத்துவமேதைகள், விஞ்ஞானிகள், புரட்சிவாதிகள் போன்றோரையெல்லாம் வாசித்திருக்கிறேன். குறிப்பாக, பெட்ரண்டு ரஸ்ஸல், இங்கர்சால், எச்.ஜி. வெல்ஸ், சார்லஸ் பிராட்லா, ராபர்ட் டார்வின், ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன், கார்ல்மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாசேதுங், நாஸ்டர் டாம்ஸ், நம் நாட்டில் டாக்டர் கோவூர், ரஷ்யாவின் ரஸ்புட்டீன்... என்று பரந்துபட்ட வாசிப்பு அனுபவம் உடையவன் நான்.

ஆனால், இவர்கள் எல்லோரையும்விட என்னை அதிக வியப்பிற்கு உள்ளாக்குபவர்கள் நம் நாட்டு ஜோதிடர்கள்தான். வெளிநாட்டுக்காரர்களின் சித்தாந்தங்கள், கருத்துகள், தத்துவங்கள் ஆகிய எல்லாவற்றையும் விட என்னை அதிக ஆச்சரியத்தில் ஆழ்த்துவது நம் இந்திய ஜோதிட சாஸ்திரம்தான்.

ஒரு மனிதனுடைய வாழ்வின் முக்காலத்தையும் ஜோதிடம் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டி விடுகிறது என்பதுதான் என் வியப்பிற்கான பிரதான காரணம். தொலைநோக்கி, நுண்ணோக்கி போன்ற விஞ்ஞான சாதனங்களெல்லாம் தருகின்ற ஆச்சர்யத்தைவிடவும், முக்காலங்களையும் நோக்கி, நமக்குத் தெரியப்படுத்துகின்ற ஜோதிட சாஸ்திரம் எனக்குப் பேராச்சரியமாக இருக்கிறது.

இந்த ஆச்சர்ய உணர்வும், எனக்குள் இயல்பாக இருந்த உண்மைக்கான தேடல் உணர்வும்தான் என்னை ஜோதிட ஆய்வை மேற்கொள்ள வைத்தன. இவ்வாறு ஆய்வு செய்து ஜோதிடம் உண்மை என்று உலகுக்கெல்லாம் நிரூபித்துக் காட்டிவிட வேண்டும் என்பது என் நோக்கமல்ல. ஜோதிட நம்பிக்கையில்லாதவர்களையும் ஜோதிட நம்பிக்கையுடையவர்களாக மாற்றிவிட வேண்டும் என்பதும் என் எண்ணமல்ல.

எனக்கு மிக நன்றாகவே தெரியும். ஜோதிடம் உண்மையென்று கண்கூடாகக் கண்ட பிறகும், வீம்புக்காவது விதண்டாவாதத்திற்காவது ஜோதிடத்தைப் பொய்யென்று அடித்துப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு பிரிவினர் எப்போதும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். இவர்கள் மீது நான் குறை கூறவில்லை. இவர்களுடைய ஜாதக அமைப்புத்தான் இவர்களை இத்தகைய இயல்புடையவர்களாக ஆக்கியிருக்கிறது என்பதை நான் மிகத் தெளிவாக உணர்ந்திருக்கிறேன். எனவே, இப்படிப்பட்டவர்களிடம் நான் ஒரு போதும் வாதம் செய்வதில்லை. அவர்களுக்கு உண்மையை உணர்த்த வேண்டுமென்று வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதில்லை.

ஆகவே, இந்தப் புத்தகத்தின் நோக்கம், யாரையாவது திருத்துவதோ மாற்றுவதோ அல்ல. ஒரே நோக்கம், நான் உணர்ந்த உண்மைகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பது மாத்திரம்தான். என் அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது மட்டும்தான்.

இந்தப் பதிவு, எதிர்காலத்தில் ஜோதிடம் பற்றி ஆய்வு மேற்கொள்பவர்களுக்கு எந்த வகையிலாவது உதவக் கூடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நான் அனுபவித்த, பார்த்த, சோதித்த கேள்விப்பட்ட உண்மைகள் என்னோடு மடிந்துவிடக் கூடாது என்று நினைக்கிறேன். நம் மக்களிடம் பதிவு பண்ணும் வழக்கம் அதிகமில்லை. ஆனால், யூதர்களிடம் பதிவு செய்யும் வழக்கம் நிரம்ப உண்டு. என் அனுபவங்களையெல்லாம் பதிவு செய்யும்படி, என் நண்பர் காலம் சென்ற வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் அவர்கள் என்னைக் கேட்டுக் கொண்டார். அதன்படியே 'ராணி' வார இதழில் தொடர்ந்து என் அனுபவங்களை எழுதி வந்தேன். இப்போது அவை நூல் வடிவம் பெற்று, கற்பகம் புத்தகாலயம் வழியாக வெளி வருகிறது.

இந்தப் புத்தகத்தைப் பார்க்கின்ற சிலர், என்னைக் கேலி செய்யலாம். என்னுடைய அறிவு இவ்வளவுதானா? என்று அவர்களது அளவுகோலில் அளந்து பார்த்து, 'நடிகர் ராஜேஷ் ஜோதிடச் சாக்கடையில் விழுந்து, மூடநம்பிக்கைச் சேற்றில் மூழ்கி விட்டார்' என்று விமர்சனம் செய்யலாம். இன்னும் வெவ்வேறுவிதமாக என்மீது புழுதி வாரித் தூற்றலாம்.

ஆனால், அவற்றையெல்லாம் நான் பொருட்படுத்தப் போவதில்லை.

என்னைப் பொறுத்தவரை, என் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் இந்நூலை ஆக்கியிருக்கிறேன். என் வாழ்க்கையில் நடந்தவற்றை, பார்த்தவற்றை, கேட்டவற்றை, அனுபவித்தவற்றை மிகைப்படுத்தல் இல்லாமல், கற்பனையோ பொய்யோ கடுகளவும் கலக்காமல் அப்படியே பதிவு செய்திருக்கிறேன்.

நம் மத்தியில் ஒரு மாயையான மனநிலை தோற்றுவிக்கப்படுகிறது. அதாவது, ஜோதிடத்தை நம்புகிறவர்கள் அறிவிலிகள், தன்னம்பிக்கையில்லாத கோழைகள் என்ற கருத்து மேடைகள் தோறும் பரப்பப்படுகிறது. தோல்வி அடைந்தவர்கள், தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொளவதற்காகக் கண்டுபிடித்ததுதான் ஜோதிடம் என்ற ஒரு கருத்தும் உருவாக்கப்பட்டிருக்கிறது. வயதாகி நாடி தளர்ந்தவர்கள் நாடுவது தான் ஜோதிடம்; இளைஞர்களுக்கு அது தேவையில்லாதது என்பதும் சிலருடைய எண்ணமாக இருக்கிறது.

இவ்வாறாக, ஜோதிடத்தைப் பற்றிப் பல்வேறு எதிர்மறையான அபிப்பிராயங்கள் உள்ளன. இப்படி எதிர்க்கருத்துக் கூறுபவர்களெல்லாம் ஜோதிட சாஸ்திரம் பற்றிச் சிறிதளவு கூட ஆரயாமல் பேசி வருகின்றனர். ஜோதிடம் சார்ந்த எந்தப் புத்தகத்தையும் படிக்காமல், எந்தவித ஆய்விலும் ஈடுபடாமல், ஜோதிடம் என்றாலே பொய்தான் என்று வாதம் செய்கிறார்கள்.

சிலர், சில ஜோதிடர்களிடம் ஜோதிடம் கேட்டு, அவர்கள் கூறிய பலன்கள் நடக்காமல் போனதனால், 'ஜோதிடம் பொய்; நான் என் அனுபவத்தில் கண்டறிந்துவிட்டேன்' என்று கூறலாம்.

நியாயப்படி அவர்கள், 'ஜோதிடர் சாயில்லை' என்றுதான் கூற வேண்டும். மாறாக, 'ஜோதிடமே தவறானது' என்று கூறுகிறார்கள்.

ஜோதிடத்துறையில் மட்டும், அந்தத் துறையைச் சார்ந்தவர்கள் செய்யும் தவறு அந்தத் துறையின் மீதே ஏற்றிக் கூறப்படுகிறது. ஓரிரு ஜோதிடரின் கணிப்பு தவறிவிட்டால், ஜோதிடக் கணிப்பு எல்லாமே தவறக் கூடியதுதான் என்று பேச ஆரம்பித்து விடுகிறார்கள்.

மருத்துவத்துறையிலும் தவறு செய்யும் மருத்துவர்கள் பலர் இருக்கவே செய்கிறார்கள், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீதுதான் குற்றம் சுமத்தப்படுமே தவிர, மருத்துவத்துறையே தவறானது என்று யாரும் விமர்சனம் செய்வதில்லை.

அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற மருத்துவர்களில் சிலர் ஒரு நோயாளிக்கு, இடப்பக்க மூளைக்குப் பதில் வலப்பக்க மூளையை அறுவைச் சிகிச்சை செய்துள்ளனர். அது சாதாரணமாகச் செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சை அல்ல, நவீன விஞ்ஞானக் கருவிகளின் உதவியுடன் செய்யப்பட்ட சிறப்புச் சிகிச்சை அது. அறுவைச் சிகிச்சை நிகழ்வுகளையெல்லாம் துல்லியமாக டி.வி. பார்ப்பதுபோல் எதிரே திரையில் பார்த்துக் கொண்டே செய்யப்பட்ட உயர்ரகச் சிகிச்சை அது. நோயாளியோ தமிழ்நாட்டைச் சார்ந்தவர். எனவே, ஒரே பெயர், ஒத்த பெயர் என்ற அடிப்படையில் பெயர் குழப்பம் ஏற்படுவதற்கோ, அதனால் ஒருவருக்குச் செய்ய வேண்டிய சிகிச்சை இன்னொருவருக்கு என்று மாறுவதற்கோ வாய்ப்பு இல்லவே இல்லை. இருப்பினும் மருத்துவர்கள் தவறு செய்திருக்கிறார்கள்.

இப்படி மருத்துவத்துறையில் மட்டுமல்ல, பல்வேறு துறைகளிலும் அன்றாடம் தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நான் ஏற்கெனவே சொன்னது போல், அப்படிப்பட்ட தவறுகளெல்லாம் அவற்றோடு சம்பந்தப்பட்ட நபர்களின் மீது சுமத்தப்படுமேயல்லாமல், அந்தத் தவறுகளுக்காக, சம்பந்தப்பட்ட துறைகளின் மீது களங்கம் கற்பிக்கப்படுவதில்லை.

ஆனால், ஜோதிடத்துறையில் மட்டும் ஜோதிடர் தவறு செய்தால் ஜோதிடத்துறையையே கேலி செய்கிறார்கள்; கேவலப்படுத்துகிறார்கள். போலி ஜோதிடர்களும், விஷயஞானம் இல்லாத அரைகுறை ஜோதிடர்களும் இருக்கவே செய்கிறார்கள். அதை நாம் மறுக்க முடியாது.

எல்லாத் துறைகளிலும் போலிகளும், தகுதியற்றவர்களும் தரமற்றவர்களும் இருக்கவே செய்வார்கள். அதற்கு ஜோதிடத்துறை மட்டும் விதிவிலக்கா என்ன?

எனவே, அத்தகைய போலிகளையும், திறமையற்றவர்களையும் பார்த்து. ஜோதிடத்தின்மீதே தவறான அபிப்பிராயம் கொள்வது, அவசர முடிவாகவே இருக்கும். அறிவின் தெளிவாக நிச்சயம் இருக்காது.

ஜோதிடம் போன்றவற்றைப் பொய்யென்று கூறுவதும், அவற்றை முற்றிலும் மறுதலிப்பதும்தான் பகுத்தறிவு என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பகுத்தறிவு என்றால் ஒன்றைப் பற்றி ஆழமாக அலசி ஆராய்ந்து அதன் பின் ஒரு முடிவுக்கு வருவது என்று பொருள். அப்படி எந்தவிதமான ஆய்வும் செய்யாமல், ஜோதிடம் என்பது ஹம்பக், மோசடி, ஏமாற்றுவித்தை என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் சொல்வது எப்படிப் பகுத்தறிவாக இருக்க முடியும்?

நம் நாட்டில் பலர், வெளியே இப்படிப் பகுத்தறிவு வேஷம் போட்டுக் கொண்டு, திரைமறைவில் ஜோதிடம் பார்த்து, பரிகாரம், பூஜை, யாகம் என்றெல்லாம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

எனக்கு அப்படிப் போலியான பகுத்தறிவு முகமூடியை அணிவதற்கு விருப்பமில்லை. என் பகுத்தறிவுக்கு ஜோதிடம் உண்மையென்று விளங்குகிறது. எனவே, அதன் சார்பாக நான் பேசுகிறேன்.

ஜோதிடத்தில் பல வகைகள் உண்டு. நாடி ஜோதிடம், பிறந்த நாள், நட்சத்திரம், தேதி வைத்துப் பார்க்கும் ஜோதிடம், முகம் பார்த்துச் சொல்லும் ஜோதிடம், புகைப்படத்தைப் பார்த்துச் சொல்லும் ஜோதிடம், எண்கணிதம், வந்த நேரத்தை வைத்துச் சொல்லும் பிரசன்ன ஜோதிடம், வெற்றிலை ஜோதிடம், கைவிரல் ஜோதிடம், கட்டைவிரல் ஜோதிடம்... என்று பல வகைகள். இவற்றைப் பற்றிய என் அனுபவங்களையும் பிறர் அனுபவங்களையும் இந்நூலில் கூறியுள்ளேன். இவை மட்டுமல்லாமல், சில விசித்திர சாமியார்கள் நிகழ்த்திய அதிசயங்கள், இன்னும் மாறுபட்ட அற்புத சம்பவங்கள் போன்றவற்றையும் பதிவு செய்திருக்கிறேன்.

1960ஆம் ஆண்டிலிருந்து, ஜோதிடத்தையும் மனித வாழ்வையும் இணைத்துப் பார்த்து நான் ஆய்வு செய்யத் தொடங்கிவிட்டேன். அதற்கு முன் எங்கள் குடும்பத்தில் ஜாதகப்படி நடந்த விஷயங்களை எங்கள் தாத்தா, பாட்டி மற்றும் ஊரில் உள்ள பெரியவர்களிடமிருந்து சேகரித்தேன். என்னிடம் பத்தாயிரம் வருடத்துப் பஞ்சாங்கம் இருக்கிறது. ரஷ்ய விஞ்ஞானி ஒருவரால் கணிக்கப்பட்டது அது. எந்த வருடம் பிறந்தவராக இருந்தாலும், அந்தப் பஞ்சாங்கத்தைப் பயன்படுத்தி ஜாதகம் கணித்து விடலாம். அதைக் கொண்டு ஜாதகம் கணித்து, பலருடைய வாழ்க்கைச் சம்பவங்களை ஒப்பு நோக்கியுள்ளேன்.

1985-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்துதான் ஜோதிட சம்பந்தமான புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். அந்த அறிவையும் வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களையும் வைத்து ஆராய்ந்தேன். அவற்றைப் பார்த்தபோது, 95 சதவீதம் எல்லாமே ஜோதிடப்படியே நடக்கின்றன என்பதைக் கண்கூடாக உணர்ந்தேன்.

எது நடக்குமோ அது நடந்தே தீரும். அதுவும் ஜாதகப்படியே நடக்கும். எதிர்காலத்தில் நாம் என்னென்ன செய்ய வேண்டுமோ, எப்படியெப்படி இயங்க வேண்டுமோ, நமக்கு ஏதேது நடக்க வேண்டுமோ அவை அனைத்தும் ஒரு 'சாப்ட்வேர்' போல, நாம் பிறக்கும்போதே நம்முடைய மூளைக்குள் பதிவு செய்யப்பட்டு விடுகின்றன. அந்த அடிப்படையில்தான் நம் வாழ்க்கை முழுக்க அமைகிறது. ஜாதகம் என்பது அந்தப் பதிவைத் தெரிந்து கொள்வதற்கான ஒரு கருவியாக உதவுகிறது.

நம்மால் எதையும் மாற்றி அமைக்க முடியாது. இன்பமோ துன்பமோ, லாபமோ நஷ்டமோ நாம் அனுபவிக்க வேண்டியதை அனுபவித்தேதான் ஆக வேண்டும். என்னைப் பொறுத்த வரையில் வாஸ்து, பெயர் மாற்றம், எண்கணிதம், ராசிக்கற்கள், அட்சய திருதியையில் தங்கம் வாங்குதல், நல்ல நேரம், கெட்ட நேரம், கோயிலுக்குச் செல்லுதல், பிரார்த்தனை செய்தல், திருமணத்துக்கு ஜாதகப் பொருத்தம் பார்த்தல், தாயத்துக் கட்டுதல் போன்ற இவற்றிலெல்லாம் எனக்குக் கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லை.

நல்ல நேரம், கெட்ட நேரம் என்று நான் எந்த விஷயத்திற்கும் பார்ப்பதில்லை. என்னுடைய திருமணத்தில் ஜாதகப் பொருத்தம் பார்க்கவில்லை. என் மகளின் கல்யாணத்தையும் ஜாதகப் பொருத்தம் பார்த்துச் செய்து வைக்கவில்லை. இன்னார்க்கு இன்னார்தான் அமைவார்கள் என்பதில் அதிக நம்பிக்கையுடையவன். விவாகத்திற்கு முகூர்த்தநாள், முகூர்த்த நேரம் கூடப் பார்க்கவில்லை. யாரும் செய்யத் துணியாத ஒன்றை நான் செய்தேன். என்னுடைய ஜென்ம நட்சத்திரத்தில் நான் தாலி கட்டினேன். அதனால் நான் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. என்னுடைய ஜாதக அமைப்பின் படியே நான் வாழ்ந்து கொண்டும் வளர்ந்து கொண்டும் இருக்கிறேன்.

ஏதோ ஒரு விதிக்கு உட்பட்டு மனிதன் இயங்குகிறான். பரிகாரங்கள். பூஜை புனஸ்காரங்கள் போன்றவற்றின் மூலமாக, அந்த விதியை மீறி மனிதனால் செயல்பட முடியாது என்பது, என் ஆய்விலும் அனுபவத்திலும் நான் கண்ட உண்மை.

'இந்த உலகத்தில் நடப்பவையெல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒன்றுதான்' என்று விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கூறியதை. ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் நிரூபணம் செய்து கொண்டேயிருக்கிறது. அதை மனிதர்கள் பலர் உணராமல் இருக்கலாம். ஆனால், வாழ்வை உற்று நோக்குபவர்களுக்கு, 'எல்லாமே முன்பே தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன' என்ற உண்மை நிச்சயம் புலப்படும்.

'மனிதனுடைய நாள்களும், தலையில் உள்ள முடிகளும் எண்ணப்பட்டிருக்கின்றன' என்று பைபிள் கூறுவதையும் -

'நீ சாப்பிடும் கோதுமையில் கூட உன் பெயர் எழுதப்பட்டிருக்கிறது' என்று குரான் சொல்வதையும் -

'அனைத்தும் முன்பே தீர்மானிக்கப்பட்டவை' என்பதற்கான நிரூபண வாசகங்களாகவே நான் பார்க்கிறேன்.

எல்லாமே விதியின் அடிப்படையில் என்றால், ஒருவன் தவறு செய்வதுகூட அந்த விதியின் தூண்டுதலால்தான் என்றாகிறது. எனவே தான் ஞானிகள், பிறர் தவறு செய்தாலும்கூட அவர்கள் மீது கோபம் கொள்ளாதிருக்கிறார்கள்.

பிதாவே இவர்களை மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கின்றனர் என்ற இயேசு கிறிஸ்துவின் வாக்கியத்தில், இந்த விதி பற்றிய ஞானம் பளிச்சிடுவது தெரிகிறது.

அவர் முன்னமே, 'உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்' என்று சீடர்களிடம் கூறியதும் -

பீட்டரைப் பார்த்து, 'சேவல் இரண்டு முறை கூவுவதற்குள், நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்' என்று சொன்னதும் -

பின்பு, அவர் உரைத்தபடியே இவை நடைபெற்றதும் -

'எல்லாமே முன்பே தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன' என்பதற்கான நிரூபண நிகழ்வுகளே.

மகாபாரதத்தில் துர்வாச மகரிஷி, ஒரு வருடம் தமக்குப் பணிவிடை செய்த குந்திதேவிக்கு, அவளுடைய எதிர்காலத்தை உணர்ந்து ஒரு மந்திர உபதேசம் செய்கிறார்.

அந்த மந்திரத்தால்தான் அவள் பின்னால் தருமன், பீமன், அருச்சுனன் ஆகியோரை ஈன்றெடுக்க முடிந்தது. அதற்கு முன்னால், திருமணம் ஆகுமுன்பே அவள் அந்த மந்திரத்தைப் பரீட்சித்துப் பார்த்துக் கர்ணனை ஈன்றெடுக்கிறாள். இவையெல்லாம் விதி வகுத்த செயல்கள்தான். எனவே, குந்தியைக் குறை கூறுவதோ, சூரியபகவானைக் குற்றம் சுமத்துவதோ, கர்ணன் மீது பரிதாபப்படுவதோ, எல்லாமே அறியாமையின் வெளிப்பாடுகள் தான். இவற்றையெல்லாம் ஞானிகள் உணர்ந்திருப்பதால் எந்த உணர்வுக்கும் அவர்கள் இடம் கொடுப்பதில்லை.

ஆனால், சாதாரண சராசரி மனிதர்கள் அந்த உண்மையை உணராதிருப்பதனால், உணர்ச்சிப் போராட்டங்களில் சிக்கித் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த விதி என்னவென்று கண்டுபிடிப்பதுதான் ஜோதிட சாஸ்திரம். அவரவர்கள் திறமையைப் பொறுத்து தோராயமாகச் சில ஜோதிடர்கள் பலன் சொல்கிறார்கள். சில ஜோதிடர்களோ மிகத் துல்லியமாகப் பலன் கூறுகிறார்கள்.

என் தாத்தாவின் காலத்திலும், என் பெற்றோரின் காலத்திலும் பல ஜோதிடர்கள் உலகமே வியக்கும் வண்ணம் திறமையும் அனுபவமும் அறிவும் படைத்தவர்களாக இருந்தனர். என் காலத்திலும் அப்படி அபூர்வத் திறமை படைத்த ஜோதிடர்கள் சிலரை நான் சந்தித்திருக்கிறேன். இப்படிப்பட்ட அசாத்திய திறன் படைத்த ஜோதிடர்கள் பலர், தங்களுக்கென்று வாரிசுகளோ சிஷ்யர்களோ இல்லாமல் மறைந்துவிட்டார்கள். அவர்களுக்கென்று எந்தவிதமான வரலாற்றுப் பதிவோ, ஆதாரங்களோ, ஆவணங்களோ வைக்காமல் போய்விட்டார்கள்.

நான் அறிந்த உண்மைகளை, என் அனுபவங்களை எனக்குப் பின் வருபவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவற்றை புத்தக வடிவில் ஆவணப்படுத்தியிருக்கிறேன்.

என்னுடைய அனுபவங்களைப் படிப்பவர்கள், ஜோதிடத்துறையில் நூறு ஆண்டுகள் செலவு செய்ததைப் போன்ற ஓர் உணர்வைப் பெறலாம். ஒவ்வோர் அனுபவமும் படிப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் என நம்புகிறேன்.

படியுங்கள். உண்மையை நோக்கிய பயணத்தைத் தொடருங்கள்!

அன்புடன்

ராஜேஷ்

*****

ஜோதிட சாஸ்திரமும் மனித வாழ்க்கையும்

ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் எட்டுவகைகள் உண்டு என்று கூறுகிறார்கள்.

கையில் உள்ள ரேகைகளைப் பார்த்துச் சொல்கின்ற கைரேகை ஜோதிடம்.

பிறந்த நேரத்தை அடிப்படையாக வைத்துக் கணிக்கப்படுகின்ற ஜாதகக் கட்டங்களை ஆராய்ந்து சொல்லப்படுகின்ற ஜோதிடம்.

ஓலைச்சுவடியிலிருந்து எடுத்துச் சொல்லப்படுகின்ற நாடி ஜோதிடம்.

ஜோதிடம் பார்க்க வந்த நேரத்தை வைத்துச் சொல்லப்படுகின்ற பிரசன்ன ஜோதிடம், வெற்றிலை ஜோதிடம் போன்றவை.

முகத்தைப் பார்த்துச் சொல்லப்படும் முகக்குறி சாஸ்திரம், சாமுத்திரிகா லட்சண சாஸ்திரம் போன்றவை.

எண்கணிதம் என்று சொல்லப்படுகின்ற நியூமராலஜி.

வீடுகளுக்குப் பார்க்கப்படுகின்ற வாஸ்து சாஸ்திரம்.

ஔஷத காண்டம் என்னும் மருத்துவ காண்டம்.

இவ்வாறு மொத்தம் எட்டு வகைகள். வேறு சில வகையான ஜோதிடங்கள் கூட இருக்கலாம். ஆனால், அவையெல்லாம் ஏதாவது ஒரு விதத்தில் இந்த எட்டு வகைக்குள் அடங்கிவிடும்.

இந்த எட்டு வகையிலும் திறமை பெற்ற பலர் உண்டு. இவர்களுக்குள் எப்போதும் ஒருவிதமான போட்டி இருந்து கொண்டேயிருக்கிறது. கைரேகை நிபுணர், ஜாதகத்தை வைத்துப் பார்க்கின்ற ஜோதிடத்தைவிடக் கைரேகை ஜோதிடம்தான் துல்லியமானது. சிறப்பானது என்று கூறுவார். ஜாதகம் பார்க்கும் ஜோதிட வல்லுநரோ, கைரேகை ஜோதிடத்தைவிட ஜாதகக் கட்டம் பார்த்துச் சொல்லும் ஜோதிடம் தான் நுணுக்கமானது; மேன்மையானது என்று சொல்லுவார்.

இவ்விதமாக ஒவ்வொரு வகையினரும் மற்றொரு வகையினருடன் போட்டியாக இருப்பதை நடைமுறையில் நாம் காண முடிகிறது.

இந்த எட்டுவகையினரும் ஒன்றுபட்டு ஒரு மனிதனுடைய வாழ்வைக் கணிப்பார்களேயானால், முக்காலத்தையும் 100% துல்லியமாகச் சொல்லிவிட முடியும்.

அப்படியொரு நிலை, இனிமேலாவது வரவேண்டும் என்பதுதான் என்னுடைய அவா. முதலில், ஜோதிடர்கள் ஒன்றுபட்டு, தங்களுக்குள் உள்ள முரண்பாடுகளுக்குத் தீர்வு கண்டுவிட்டால், ஜோதிடத்திற்கு எதிராகப் பேசுபவர்களின் வாய், தானாக அடைத்துக் கொள்ளும்.

100% அளவிற்கு மனிதனுடைய எதிர்காலத்தைத் துல்லியமாகக் கணித்துக் கூறிவிடுகின்ற ஜோதிடர்கள் முற்காலத்தில் பலர் இருந்திருக்கிறார்கள். இப்போதும் சிலர் இருக்கவே செய்கிறார்கள்.

முற்ற முழுக்க ஒரு மனிதனுடைய எதிர்காலத்தைக் கணித்துக் கூறிவிட முடிகிறது என்றால், என்ன பொருள்?

மனித வாழ்க்கையின் அத்தனை சம்பவங்களும் முன்னமே தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது என்பதுதான் அதன் பொருள். எல்லாமே விதியின் அடிப்படையில் தான் நடைபெறுகின்றன; நம்மால் எதையும் மாற்ற முடியாது என்பதுதான் அதன் அர்த்தம்.

விதியா? விதி என்பது வீணர்களின் பேச்சு; மதியற்றவர்களின் மடத்தனமான வாதம் என்று சிலர் ஆர்ப்பரிக்கலாம்.

விதி என்று ஒன்று இருப்பது உண்மைதான்; ஆனால், அதை நம் மதியால் மாற்றிக் கொள்ள முடியும் என்று வேறு சிலர் விதி - மதி ஆகிய இருதரப்புக்கும் ஆதரவாகப் பேசலாம்.

இன்னும் சிலரோ, 'விதி என்ற ஒன்று இருப்பது நிஜம்தான்; அதை நம் மதியால் வெல்ல முடியாது. ஆனால், இறைவழிபாட்டின் மூலம் அதை மாற்றிக் கொள்ள முடியும்' என்று கூறலாம்.

என்னைப் பொறுத்தவரை, விதி என்ற ஒன்று இருப்பது மறுக்க முடியாத நிஜம். அதை மாற்ற முடியாது என்பதும் அதே அளவு நிஜம்.

இந்த முடிவிற்கு, ஏதோ ஒரு புத்தகத்தையோ மதநூலையோ படித்ததனால் நான் வரவில்லை. ஒரு பெரியவர் சொன்னார். அதனால் அது அப்படித்தான் இருக்க வேண்டும் என்பது மாதிரியான நம்பிக்கையின் அடிப்படையிலும் நான் இந்த முடிவிற்கு வரவில்லை.

இது - என் அனுபவத்தால் நான் கண்ட முடிவு. பலருடைய வாழ்வையும் உற்றுநோக்கியதால் எனக்குள் நான் பெற்ற தெளிவு.

எதைப்பற்றியும் கேள்வி கேளுங்கள். கேள்விதான் உங்களை உண்மையை நோக்கி நகர்த்திச் செல்லும் என்றார் சாக்ரடீஸ்.

நான் கேள்விகள் கேட்டேன். எனக்குள்ளேயே அந்த வினாக்களைத் தொடுத்தேன்.

ஒன்றிரண்டு அல்ல, பல ஆண்டுகள் ஆயிரக்கணக்கான கேள்விகள்.

இந்தக் கேள்விகள் என்னை எத்தனையோ இரவுகள் உறங்கவிடாமல் செய்திருக்கின்றன. உலகியல் வாழ்வில் ஒரு சராசரி மனிதனாக என்னை இயங்கவிடாமல் ஆக்கியிருக்கின்றன.

என்னைக் குடைத்தெடுத்த கேள்விகள் சிலவற்றை இங்கே பட்டியலிடுகின்றேன்.

இந்த உலகம் படைக்கப்பட்டதுமல்ல; அழியப்போவதுமல்ல; ஆனால், உருவம் மட்டும் மாறக்கூடியது என்றார் விஞ்ஞானி ஆல்பட் ஐன்ஸ்டீன். அப்படி இருக்கும் பொழுது இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்டது என்று மதவாதிகள் கூறுவது எப்படி பொருந்தும்?

பூமியில் உயிர் தோன்றி 65 கோடி ஆண்டுகள்

Enjoying the preview?
Page 1 of 1