Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ungal Jothidam
Ungal Jothidam
Ungal Jothidam
Ebook603 pages7 hours

Ungal Jothidam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜோதிட ஆர்வமிக்கவர்களுக்கும் ஆரம்பநிலை ஜோதிடம் பயில்பவர்களுக்கும், பயன்படும் வகையில் ஜோதிடத்தின் அடித்தள சாரங்களை விரிவாய் - விளக்கமாய் - எளிதாய் புரியும் வகையில் 'உங்கள் ஜோதிடம்' உள்ளது. 27 நட்சத்திரத்தின் தன்மைகள் மற்றும் பாதவாரியான பலாபலன்கள், 12 பாவங்கள் மற்றும் பாவாதிபதிகளின் தன்மை - ஸ்தானம் ஆதிபத்யம் - ஆட்சி - உச்சம் - நீசம் பற்றிய விரிவான பலன்கள், 9 கிரகங்களின் திசை பலன்கள், பாவ வாயிலான பலன்கள், கிரக சேர்க்கைகளின் பலாபலன்களை விரிவாக விவரித்து 'உங்கள் ஜோதிடமாய்' உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

வணக்கங்களுடன்

ஜானகி மனுவித்யா

Languageதமிழ்
Release dateJul 8, 2023
ISBN6580165609793
Ungal Jothidam

Related to Ungal Jothidam

Related ebooks

Reviews for Ungal Jothidam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ungal Jothidam - Janaki Manuvithyaa

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உங்கள் ஜோதிடம்

    (நுட்பமான ஆய்வுக் கட்டுரைகள்)

    Ungal Jothidam

    Author:

    ஜானகி மனுவித்யா

    Janaki Manuvithyaa
    For more books

    https://www.pustaka.co.in/home/author/janaki-manuvithyaa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    லக்னம்

    லக்ன புள்ளி

    லக்னம் - லக்னாதிபதி ஓர் ஆய்வு

    லக்னம் ஓர் ஆய்வு

    தனபாவம்

    தனாதிபதி 2-ம் இடம்

    தைரிய ஸ்தான அதிபதிகள்

    4-ம் இடம் சுகஸ்தான பலன்கள்

    5-ம் இடம் புத்திர ஸ்தான பலன்கள்

    6-ம் இடம் பிரச்சனைகள்

    7-ம் இடம் பாவ பலங்கள்

    8-ம் இடம் அஷ்டம பாவ பலன்கள்

    9-ம் இடம் பாவம்

    10-ம் இடம் தொழில்

    11-ம் இடம் லாபம்

    12-ம் இடம் விரையம்

    சூரிய திசை

    சந்திர திசை

    செவ்வாய் திசை

    இராகு திசை

    குரு திசை புத்தி பலன்கள்

    சனி திசை திசை புத்தி பலன்கள்

    புதன் திசை புத்தி பலன்கள்

    கேது திசை புத்தி பலன்கள்

    சுக்கிர திசை புத்தி பலன்கள்

    ராசி நட்சத்திர பலன்கள் பரிகாரங்கள்

    மேஷம் - ஓர் ஆய்வு

    ரிஷபம் - ஓர் ஆய்வு

    மிதுனம் - ஓர் ஆய்வு

    கடகம் - ஓர் ஆய்வு

    சிம்மம் - ஓர் ஆய்வு

    கன்னி - ஓர் ஆய்வு

    துலாம் - ஓர் ஆய்வு

    விருச்சிகம் - ஓர் ஆய்வு

    தனுசு - ஓர் ஆய்வு

    மகரம் - ஓர் ஆய்வு

    கும்பம் - ஓர் ஆய்வு

    மீனம் - ஓர் ஆய்வு

    அஸ்வினி

    பரணி

    கார்த்திகை

    ரோகிணி

    மிருகசீர்ஷம்

    திருவாதிரை

    புனர்பூசம்

    பூசம்

    ஆயில்யம்

    மகம்

    பூரம்

    உத்ரம்

    அஸ்தம்

    சித்திரை

    சுவாதி

    விசாகம்

    அனுஷம்

    கேட்டை

    மூலம்

    பூராடம்

    உத்ராடம்

    திருவோணம்

    அவிட்டம்

    சதயம்

    பூரட்டாதி

    உத்திரட்டாதி

    ரேவதி

    லக்னம்

    கொல்லூரில் கோயில் கொண்டிருக்கும் மூகாம்பிகைத் தாயை வணங்குகிறேன். மகரிஷி ஐயா அவர்களையும் வணங்குகிறேன்.

    ஒவ்வொரு ஜாதகரின் சுப, அசுப பலன்களை நவகிரக நிலையைகண்டு கூற லக்னமே முக்கியமானது. லக்னம் என்பது உயிர். ஒவ்வொரு நிமிடத்திற்கும் எழுதப்படும் ஜாதகத்தில் வேறுபாட்டை சுட்டிகாட்டுவது லக்ன புள்ளி மட்டுமே.

    எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்

    நவகிரக கட்டத்தில் லக்னமே பிரதானம்

    லக்னம் பாதிக்கப்பட்டால் ஜாதகரின் உடல்வலு, மனவலு, ஆயுள், ஆரோக்கியம் குறைந்து பிறரின்கீழ் அடிமையாய் இருக்க நேரும்.

    லக்னம் கணிக்கும் முறை

    கிரேதாயுகத்தில், நிக்ஷேக முகூர்த்தமே ஜென்ம லக்னமாக கணிக்கப்பட்டது.

    திரேதாயுகத்தில் ஆதான முகூர்த்தமே ஜென்ம லக்னமாக கணிக்கப்பட்டது.

    துவாபரயுகத்தில் சிரசு உதயமே ஜென்ம லக்னமாக கணிக்கப்பட்டது.

    இந்த கலியுகத்தில் குழந்தையின் ஜனனம் பூமியை எட்டிப் பார்க்கும் வேளையே லக்னமாக கணிக்கப்படுகிறது.

    இரவாகில் - சர லக்னமே பலம். பகலாகில் - ஸ்திர லக்னமே பலம். (சந்தி) மாலை வேளையானால் உபய லக்னமே பலம்.

    12 ராசிகளை போல், 14 வகையான லக்ன கணிதம் உள்ளது.

    I. ஜென்ம லக்னம்

    குழந்தையின் ஜனனம் பூமியை தொடும் நேரத்தை வைத்து கணிக்கப்படுவது ஜென்ம லக்னம்.

    லக்னம் உணர்த்தும் காரகங்கள்:

    ஆத்மா, ஆயுள், ஆரோக்கியம், அழகு, கவர்ச்சி, வசீகரம், சுக, துக்கம் அனுபவித்தல், பிறந்த இடம், அறிவாற்றல், புகழ், உடல்பலம், இறுதி கால வாழ்க்கை, பதவி இழத்தல், ஏற்ற தாழ்வுகள், அரச தண்டனை, ரோமம், கனவு, மற்றவரிடம் அடிமை வாழ்வு, போன்றவையாகும்.

    ஜென்ம லக்னம் பலம் பெற:

    1) லக்ன புள்ளி விழும் சாரநாதன் லக்னாதிபதிக்கு நண்பனாக இருந்தாலும்,

    2) லக்னம், நட்சத்திரத்திற்கு சாதக தாரையில் அமைந்தாலும்,

    3) லக்னம், ஜென்ம ராசிக்கு கேந்திர, கோணங்களில் அமைந்தாலும்,

    4) லக்னாதிபதியின் சாதக தாரையில் லக்னம் அமைந்தாலும்,

    5) சுப கிரகங்கள், லக்ன சார நாதனையும், லக்னத்தையும், லக்னாதிபதியையும் பார்த்தாலும்,

    6) மற்ற நிலைகளில் லக்ன சாரநாதன் பெறும் பலத்தாலும்,

    7) லக்ன சாரநாதன், லக்னாதிபதியும் ஒருவருக்கொருவர் கோண, கேந்திரத்தில் நிற்பது (அ) லக்ன கேந்திர, கோணத்தில் லக்ன சாரநாதனும், லக்னாதிபதியும் நிற்பது.

    8) லக்னத்தில் குரு, புதன், சுக்கிரன் நிற்பது.

    9) லக்ன சாரநாதன், லக்னாதிபதிக்கு கேந்திர, கோணாதிபதியாவது,

    10) லக்ன சாரநாதன், லக்னத்தில் நின்று உச்சம் பெறுவதும், லக்னத்தின் வலிமையை கூட்டும்.

    உதாரணமாக

    மேஷ லக்னம் - கார்த்திகை 1ல் லக்னம் அமைந்து சூரியன் உச்சம் பெறுவது.

    ரிஷப லக்னம் - ரோகிணியில் லக்னம் அமைந்து சந்திரன் உச்சம் பெறுவது.

    மகர லக்னம் - அவிட்டம், 1, 2ல் லக்னம் அமைந்து செவ்வாய் உச்சம் பெறுவது.

    கடக லக்னம் - புனர்பூசம், 4ல் லக்னம் அமைந்து குரு உச்சம் பெறுவது.

    உதாரணம் 1: ரமண மகரிஷி ஜாதகம்

    1) இந்த ஜாதகத்தில், லக்ன சாரநாதன் செவ்வாய், சுக்கிரனுக்கு நட்பு கிரகமாகிறார்.

    2) ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம், இதற்கு மைத்ர தாரையில் லக்னம் அமைந்து பலம் பெறுகிறது.

    3) ஜென்ம ராசிக்கு கோணத்தில் லக்னம் அமைந்தது சிறப்பு.

    4) லக்னாதிபதி சுக்கிரன் க்ஷேமத்தாரையில் லக்னம் உள்ளது.

    5) லக்ன சாரநாதன் செவ்வாய், லக்ன கேந்திரத்தில் ஆட்சி பெற்று வலுத்துள்ளார்.

    6) லக்ன, ராசிக்கு குரு பார்வை.

    7) லக்ன சாரநாதன் வீட்டில், லக்னாதிபதி சுக்கிரன் நின்றதும், சுக்கிரன் காம காரகனாகி, காலபுருஷ தத்துவப்படி 7ம் அதிபதியும் ஆகி, லக்ன சாரநாதன் செவ்வாய் 7ம் அதிபதியாகி 7ல் நின்று லக்னத்தையும், சுக்கிரனையும் பார்வை செய்ததால், ஆத்மா, உடல் உறுதி பெற்று காமத்தின் வழி ஞானத்தை அடைந்தவர்.

    II. ஆருட லக்னம்

    லக்னத்தில் இருந்து லக்னாதிபதி நின்ற ஸ்தானம் வரை எண்ணி, அந்த எண்ணிக்கையை லக்னாதிபதி நின்ற ஸ்தானத்தில் இருந்து எண்ண வருவது ஆருட லக்னமாம்.

    இதே போன்று ஒவ்வொரு பாவத்திற்கும், அந்த பாவாதிபதிகளின் ஸ்தானம் தொட்டுஎண்ணி, அந்தந்த பாவ பலம் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.

    1) ஜென்ம லக்னத்திற்கு கேந்திர, கோணத்தில் 11ல் ஆருட லக்னம் அமைந்தால் யோகம் கூடும்.

    2) ஆரூட லக்னாதிபதி ஆட்சி, உச்சம் பெற்றாலும் ஆரூட லக்னத்தில் ஆட்சி, உச்ச கிரகம் இருந்தாலும் யோகம் கூடும்.

    3) ஆரூட லக்னத்திற்கு 2, 6, 9ல் ஒரு சுபகிரகம் நிற்பதும் யோகம் செய்யும்.

    4) ஜென்ம லக்னாதிபதியும், ஆரூட லக்னாதிபதியும், 12ம் இடத்து ஆருட லக்னாதிபதியும் இணைந்தால் பதவி பறிபோகும். தன் நிலையில் இருந்து தாழ்ந்து போவர்.

    5) ஜென்ம லக்னம், லக்னாதிபதி வலுவிழந்த நிலையில் இருந்து ஆரூட லக்னமும், லக்னாதிபதியும் பலம் பெற்றால் நற்பலன் விளையும்.

    உதாரணம் 2

    இந்த ஜாதகத்தில் லக்னத்தில் ராகு, லக்ன சாரநாதன் ராகு, ஜென்ம நட்சத்திராதிபதி ராகு, லக்னமும், ராகுவும் எந்த சுப கிரகங்களாலும் பார்க்கப் படவில்லை. இதனால் லக்னாதிபதி சுக்கிரனின் பலத்தை மட்டுமே ராகு ஈர்த்து பலன் கொடுக்கும். ஆனால் சுக்கிரன் பாதக ஸ்தானத்தில் பகைபெற்று வர்க்கோத்தம நிலையில் வலு இழந்து உள்ளார். இதனால் லக்னமும், சாரநாதனும், லக்னாதிபதியும் பலம் குறைந்ததால் ராகு திசை, சுக்கிர புத்தியில் ஜாதகர்க்கு ‘போலியோ அட்டாக்’ வந்து இடது முழங்கால் ஊனமாகி விட்டது. (பிறவி ஊனம் இல்லை) மற்றபடி, ஜாதகர் நல்ல நிலையில் உள்ளார். நகைத் தொழிலில் நிறைய சம்பாதிக்கிறார். ஊனத்தை பொருட்படுத்தாமல் வண்டி ஓட்டுகிறார். ஓவியம் வரைகிறார், லக்னம், லக்னாதிபதி வலுவில்லாத நிலையில் இவருக்கு இத்தனை சிறப்புகள் ஏற்பட காரணம்? இவரது ஆரூட லக்னம் மிதுனம்.

    ஜென்ம லக்னத்திற்கு கோணத்தில் ஆருட லக்னம் அமைந்தது சிறப்பு.

    ஆரூட லக்னாதிபதி புதன், ஆரூட லக்னத்திற்கு 4ல் உச்சம் பெற்றதும் சிறப்பு.

    ஆரூட லக்னத்திற்கு 9ல் சந்திரன், சுக்கிர பார்வை பெற்று நின்றதும், கலைநயமிக்க படைப்புகளை உருவாக்குவதில் தேர்ச்சியை கொடுத்துள்ளன.

    III. கடிகா லக்னம்

    குழந்தை ஜனன உதயாதி நாழிகையை ஒரு நாழிகைக்கு ஒரு லக்னம் வீதம், எந்த மாதத்தில் பிறப்பு ஏற்பட்டதோ அது முதல் எண்ணிக் காணவரும் லக்னமே நாழிகை லக்னம் எனப்படும்.

    IV. ஓரா லக்னம்

    உதயாதி நாழிகையை 2½ நாழிகையால் வகுத்து வரும் ஈவு முந்தைய லக்னத்தையும் மீதி நடைபெறும் லக்னத்தையும் குறிக்கும். நடைபெறும் லக்னத்தில் பிறந்த மாதத்திற்கு உண்டான ராசி முதல் எண்ணிக் காணவரும் ராசியே ஓரா லக்னமாம்.

    V. நாம லக்னம்

    பிறந்த தேதி, மாதம், நேரம் தெரியாதவர்க்கு அவரவர் பெயர் முதல் எழுத்தை வைத்து நட்சத்திரம் கண்டு, அது எந்த ராசியாக வருகிறதோ அதுவே நாம லக்னமாம். (சந்திரன் நின்ற ஸ்தானமே சந்திரா லக்னமாம்)

    VI. பாவ லக்னம்

    பிறந்த கிழமையின் கிரகத்தை முன்வைத்து 5 நாழிகையாக பிரித்து பலன் காண்பது பாவக லக்னமாம்.

    VII. காரக லக்னம்

    லக்னம் முதல் 12ம் பாவம் வரை ஒவ்வொரு பாவத்திற்கும் கூறப்பட்ட காரகங்களுக்கு அந்தந்த ஸ்தானமே காரக லக்னமாம்.

    (ஒரு காரக அதிபதியும், காரக ஸ்தானமும் வலுப்பெற்றால் அந்த காரகம் வலுக்கும்)

    VIII. அம்சா லக்னம்

    ஒரு ராசியை 9-ஆக பிரித்து காண்பது நவாம்சமாம். லக்னம் நின்ற அம்சமே அம்சா லக்னமாம். இராசியில் பலம் பெறாத லக்னமும், லக்னாதிபதியும் அம்சத்தில் பலம் பெற்றால் யோகமே. அனைத்து கிரகங்களும் ராசியைவிட அம்சத்தில் பலம் பெற்றால் யோகபலன் கூடும்.

    IX. திரேக்காண லக்னம்

    ராசியை மூன்றாகப் பிரித்து, ஆண் ராசிக்கு நேராக வைத்தும், பெண் ராசிக்கு 7ம் இடம் முதலாக கணிப்பது திரேக்காண லக்னமாம்.

    X. சீவ லக்னம்

    லக்ன திரிகோண சர ராசியே சீவ லக்னமாம்.

    XI. ஆதிபத்ய லக்னம்

    சுக்கிரன் நின்ற ராசியே ஆதிபத்ய லக்னமாம்.

    XII. தேவ லக்னம்

    சந்திர திரிகோண உபய ராசியே தேவ லக்னமாம்.

    XIII. பிரபல லக்னம்

    லக்னத் திரிகோண ஸ்திர ராசியே பிரப லக்னமாம்.

    XIV. கிரக லக்னம்

    நவகிரகங்களுக்கும் தாம்நின்ற ஸ்தானமே கிரக லக்னமாம்.

    இதில் சீவ லக்னம், பிரபல லக்னம், தேவ லக்னம் ஆகிய மூன்றும், ஜென்ம லக்னத்திற்கு, ராசிக்கு கோணமும், கோணாதிபதிகளும் வலுத்தால் கிடைக்கும் யோகத்தை கூறுகிறது.

    ஜென்ம லக்னம், ஓரா லக்னம், சந்திரா லக்னம், அம்சா லக்னம், திரேக்காண லக்னம், கடிகா லக்னம் ஆகிய 6 லக்னத்தில் ஏதாவது 5 லக்னத்தை ஒரு கிரகம் பார்வைசெய்தால் ராஜ யோகம் செய்யும். சந்திரா லக்னம், திரேக்காண லக்னம், அம்சா லக்னம் இவைகளுக்கு 7ம் இடத்தையும் ஒரு கிரகம் பார்வை செய்தால் அரசு உயர் பதவி கிடைக்கும்.

    மொத்தத்தில் ஜென்ம லக்னமும், ஆரூட லக்னமும் ஜாதகரின் உடல், மன, பண வலுவையும் அவர்க்குள்ள அந்தஸ்து, புகழ், செல்வாக்கு, வளர்ச்சி, வீழ்ச்சியையும் நிர்ணயிக்கும்.

    அம்சா லக்னம், ஜாதகர் பெறப்போகும் முழுமையான யோகத்தை நிர்ணயிக்கும்.

    திரேக்காண லக்னம் ஜாதகரின் இறுதி வாழ்வு, அவரின் மரணம், பதவி இழக்கும் நிலை போன்ற அனைத்தையும் நிர்ணயிக்கும்.

    ஆண்டவனின் அருள் அனைவருக்கும் கிடைக்க ஆண்டவனை வணங்குகிறேன்.

    லக்ன புள்ளி

    நாட்டிற்கு தலைவன் போல், வீட்டிற்கு தந்தை போல், உடலுக்கு தலைபோல் நவக்கிரக கட்டத்தில் லக்னமே பிரதானம். நம்மை இயக்குவது நாம் பிறந்த நேரத்தில் அமையும் லக்ன புள்ளியே ஆகும். 10 மாதத்திற்குமுன் ஜனிக்கும் கரு வளர்ந்து கருப்பாய், சிவப்பாய், ஊனமாய், ஊனமில்லாமல் என்று பல்வேறாய் பிறக்கிறது. பிறந்தவுடன் நாம் கணிக்கும் ஜாதகத்தில் அக்குழந்தை எப்படி பிறந்துள்ளது என்பதை குழந்தையை பார்க்காத ஜோதிடர் கணித்து விடுகிறார். இதில் இறை விளையாட்டு தெள்ளென விளங்குகிறது. கருவில் வளரவைத்து, எந்த நேரத்தில் பிறக்க வைக்க வேண்டுமோ அதில் பிறக்கவைத்து, பிறக்கும் அன்றுள்ள கிரக நிலையில் குழந்தையின் நிலையை உணர்த்த வைக்கும் ஈசன் அடிபணிந்து லக்ன பாவ கட்டுரையை எழுதுகிறேன்.

    லக்ன வகை காரகம்: உடல், வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பம், இறுதி கால வாழ்க்கை, ஓய்வு பெறும் நிலை, பிறந்த இடம், அறிவாற்றல், புகழ், களவு, உடல் பலம், அரசியலில் ஈடுபடும் தகுதி, ஆயுள், ரோமம், உருவத் தோற்றம், மற்றவர்களுக்காக திருடும் நிலை, மற்றவர் பணம், தலை, மூளை, கமிஷன் தொழில், வாழ்வின் ஏற்றம், இறக்கம், மதிப்பு, கௌரவம், பழி, அவமானம், இரண்டாம் மனைவி.

    கால பருவ நிலையில்: சர லக்னங்களான மேஷம், கடகம், துலாம், மகரம், விரைவாய் செயல்படக் கூடியவை. வளர்ச்சி (அ) வீழ்ச்சியை அதி விரைவில் தரும். யோக பலம் பெறும்... சர லக்னம், சர லக்னாதிபதி, ஜாதகரை அதி விரைவில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வார்கள்.

    ஸ்திர லக்னங்களான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் இவை நிதானமாய் செயல்படும். சுப (அ) அசுப பலனை நிறுத்தி, நிதானமாய் முழுமையாய் அனுபவிக்கச் செய்யும். சொத்து, செல்வம் கொடுத்தாலும் பரம்பரைக்கு அனுபவிக்கும் அளவுக்குத் தரும்.

    உபய லக்னங்களான கன்னி, மிதுனம், தனுசு, மீனம் இவைகள் பிரச்சனைகளை வளர்த்து எதையும் அனுபவிக்கவிடாமல் செய்துவிடும். முன் வளர்ச்சி, பின் தாழ்வையும், ஏற்ற இறக்கமான வாழ்வையும் தரும். சுபர்களான குரு, புதன், சுக்கிரன், வளர்பிறை சந்திரன், லக்னத்தில் நிற்பது, பார்ப்பது லக்னத்தில் பலத்தைக் கூட்டும்.

    அழகான உடல், சொகுசான வாழ்வு, மதிப்பு, மரியாதை, செல்வம், செல்வாக்கு எல்லாம் தகும். பாவர்களான சூரியன், சனி, செவ்வாய், ராகு, கேது லக்னத்தில் நிற்பது, பார்ப்பது, ஜாதகர் கடின பிரயாசையில் முன்னேறுவார்கள். தடை, தாமதம், அதிக உழைப்பு, உடல் பலம் குறைதல், அதிக குடும்பப் பொறுப்பு போன்ற கஷ்ட பலனை தருவார்கள். அனைவருமே லக்னாதிபதியாகி லக்னத்தில் நிற்கும் போது லக்ன வகை காரகத்தை உயர்த்தவே செய்வார்கள்.

    லக்னத்தில் சூரியன் நின்றால்: ஜாதகர் மந்தமாய் இருப்பார். சூரியனுக்கு சுபர்களின் சம்பந்தம் கிடைத்தால் நல்வழியில் ஆற்றலை வெளிப்படுத்தி சிறப்பான பலன் தருவார். பாவியுடன் இணைந்தால் ஆற்றலை தீய வழியில் பயன்படுத்துவார். சூரியன் தலையில் இருப்பது உஷ்ண வியாதி, தந்தைக்கு தோஷம், பூர்வீகம் முற்றிலும் அழியும். இவர்கள் தினம் காலை சூரிய வழிபாடு செய்யவும்.

    லக்னத்தில் சந்திரன் நின்றால்: இவர் பலத்துடன் நின்றால் அழகான தோற்றம், அன்பான பேச்சு, சுக வாழ்வு, புகழ் எல்லாம் உண்டாகும். பலவீனமடைந்தால், தோற்றப் பொலிவு குறையும். மூளை, மனம், செயல்திறன் குறையும். தாய் நலம் குறையும். சதா வியாதி பீடிக்கும். இத்தகையோர் பௌர்ணமி தோறும் சந்திர வழிபாடு செய்யவும்.

    லக்னத்தில் செவ்வாய் நின்றால்: சிவந்த நிறம், பலமான உடல் அமைப்பு, மூர்க்க குணம், முரட்டு சுபாவம், புத்தி மந்தம், பிறர்பின் செல்லும் தொண்டர்கள் இவர்களே. சுயமாய் சிந்திக்க மாட்டார்கள். மற்றபடி நாட்டியத்தில் வாழ்வை நடத்துவார்கள். பலவீனமாய் நின்றால் ரத்தம் பாதிக்கும், மூளை பாதிக்கும், தலை அடிபடும், அவமானம், சிறைவாசம் வரும்.

    லக்னத்தில் புதன் நின்றால்: பலம் பெற்றால் கருத்த நிறம், சுருண்ட முடி, சிறிய கண்கள், புத்திசாலிகள், வேகமாய் செயல்படக் கூடியவர்கள். சந்தேக குணம், உயர் கல்வியில், வியாபாரத்தில் உயர்வடைவர். சூதாட்டத்திலும், லாட்டரி, ரேஸ் போன்ற நிலையிலும் உயர்வடைவர். பலவீனமாய் இருத்தல் மேற்கூறிய நிலையில் கெடுபலன் தரும். வீரியம் பாதிக்கும்.

    லக்னத்தில் குரு நின்றால்: பலமான குரு தலையில் நின்றால் சகல தோஷ நிவர்த்தி, குருவுக்கு திக் பலம் லக்னம். எனவே லக்ன வகை காரகம் எல்லா வகையிலும் சிறப்பு பெறும். பலவீனமான, நசமான, பாவிகளால் பாதிக்கப்பட்ட குரு நின்றால் கெட்ட பெயர், பழி, அவமானம், அவப்புகழ் வரும்.

    லக்னத்தில் சுக்கிரன் நின்றால்: கருத்த நிறம், அழகான தோற்றம், சுருண்ட முடி, சகல தோஷ நிவர்த்தி, கலைகளில் ஒன்று கைகூடி வரும். கஞ்சத்தனம், மென்மையான உடல், கொடிய குணம், எதையும் எளிதில் கற்றுக்கொள்ளும் திறன், சுபமான களத்திர வாழ்வும் அமையும். பலவீனமாய் நின்றால் கெடுபலன் நடக்கும்.

    லக்னத்தில் சனி நின்றால்: பலம் பெற்றால் போராட்டமான வாழ்வு, தலைமை பதவி, பணம் குறைவு, கௌரவம் அதிகம். சிலேத்தும நோய்கள், கோப குணம், பிறர்க்கு உதவும் மனம் அமையும். கல்வி குறையும். அனுபவ அறிவால் உயர்வர். பலவீனமானால் நீசத் தனமான பேச்சு, செயல், காசநோய் பாதிப்பு, மூளை பாதிப்பு, நரம்பு தளர்ச்சி, உடல் நலம் குறைவு, பழி, அவமானம், குடும்பம் பிரிதல், சிறைவாசம், வெளி நாட்டு வாசம் அமையும்.

    லக்னத்தில் ராகு நின்றால்: பலத்துடன் நின்றால், பரந்த அறிவு, அழகு, அந்நிய நாட்டில் வாழும் நிலை, அரசியல், விஞ்ஞானம், சினிமா, வியாபாரம் போன்ற அனைத்திலும் உயர்நிலை பெறும் யோகம் தரும். பலவீனமான ராகு லக்னத்தில் நின்றால் அங்கத்தில் மச்சம், மரு, ஊனம் போன்ற குறைகள் ஏற்படும். விஷ பயம் தரும். தீய பழக்க - வழக்கங்கள், கெட்ட பெயர் நிலைக்கும்.

    லக்னத்தில் கேது நின்றால்: பலத்துடன் நின்றால் நல்ல ஆத்ம பலம், மவுனமான சுபாவம், கருத்த நிறம், அழகில்லா தோற்றம், எதிலும் தடை வந்து பின் சுப பலன். நுட்பமான துறையில் ஈடுபாடு, வித்தியாசமான குணம், நடைமுறைக்கு ஒவ்வா செயல்பாடுகள் கொண்டவர்கள். பலவீனமான கேது தலையில் நிற்பது மிகக் கொடிய பலன் செய்யும். படிப்பு குறையும். மூளை நோய் தோன்றும். காரக பலன் முற்றிலும் கெடும்.

    லக்ன புள்ளி எந்த சாரத்தில் உள்ளதோ அந்த சாரநாதன் பலம் பெற்றால் மேற்கூறிய பலன்களை விருத்தி செய்வார்கள். லக்ன பலத்தை அறியும்போது, லக்னாதிபதி, லக்னம் நின்ற அதிபதி லக்னத்தில் நின்றவர். பார்த்தவர் நிலையை முழுதும் ஆராய்ந்து லக்ன பலனை நிர்ணயிக்க வேண்டும்.

    லக்னாதிபதி லக்னத்தில் நின்றால்: நல்ல உடல் பலம், செயல் திறன், சுய முன்னேற்ற திறன், குடும்பத்தில் தலைமை இடம், அதிக பொறுப்பு, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் எல்லாம் சுபமாய்கிட்டும். இறுதி கால வாழ்வு சிறப்பாய் இருக்கும்.

    லக்னாதிபதி 2ல் நின்றால்: காரகம் எல்லாம் சுப விருத்தி பெரும் குடும்ப பொறுப்பு முழுதும் ஜாதகர் ஏற்பார். கல்வியால், வாக்கால், சிறப்பு பெறுவர். 2ம் அதிபதி லக்னத்தில் நின்றால் 2மிட காரக பலன் ஒன்று, இரண்டு கெடும்.

    லக்னாதிபதி 3ல் நின்றால்: தைரியம் கூடும், பூர்வீக தனம் நிலைக்காது. சுய தனமே நிலைக்கும். எத்துறையிலும் முன்னிலை பெற்று புகழ் பெறுவர். சகோதர ஆதரவு, நட்பு பலம் கூடும்.

    3ம் அதிபதி லக்னத்தில் நின்றால்: 3க்கு லாபம் லக்னமாவதால் 1,3 இட காரக பலன் சுப விருத்தியே அடையும். ஆயுள் கூடும். அனைவரையும் அடக்கி ஆளும்திறன் அமையும்.

    லக்னாதிபதி 4ல் நின்றால்: சுக லாபம் பெருகும். தாய், வீடு, வாகன யோகம் கூடும். உயர்கல்வி பெறுவர். சர லக்னமாயின் குடும்பம், ஊர், நாடுவிட்டு வேறிடம் சென்று புதிய சிறப்பான வாழ்வு பெறுவர். சுபர் வீடாயின் புதையல் தனம் கிட்டும்.

    4ம் அதிபதி லக்னத்தில் நின்றால்: 4மிட காரகம் முற்றிலும் சிறப்பு பெறும். ஜாதகர் சுப வாழ்வு வாழ்வர்.

    5ம் இடத்தில் லக்னாதிபதி நின்றால்: கோணத்தில் நிற்கும் லக்னாதிபதி சுபராயின் மேலான ராஜயோக பலனை எளிமையான வழியிலும், பாவராயின் ராஜயோக பலனை சற்று கடினமான வழியிலும் தரும். நிறைந்த பிதுர் சொத்து இருக்கும். 5ம் அதிபதி லக்னத்தில் நின்றாலும் மேற்கூறிய சுப பலன் விருத்தியாகவே செய்யும்.

    லக்னாதிபதி 6ல் நின்றால்: இந்நிலை மட்டும் மிகமிக மோசமான நிலையாகும். 6ம் இட சம்பந்தப்படும் லக்னாதிபதி...

    நோய், கடன், வழக்கு, பிரச்சனை, துரோகம், சோரம் போன்ற அத்தனை வழியிலும் தன் தன்மைக்கேற்ப 6மிடம், 6ம் அதிபதியின் தன்மைக்கேற்ப கெடுபலனை, பிரச்சனைகளை உருவாக்கவே செய்வார்கள். சுபர் பார்வை சேர்க்கை சற்று கெடு பலனை குறைக்குமே தவிர முற்றிலும் தடை செய்யாது. எனவே லக்னாதிபதி 6ல் லக்னத்தில் நிற்பது இருவரும் சார பரிவர்த்தனை பெறுவதும் பிரச்சனைகளை தோற்றுவிக்கவே செய்யும். இதில் 1, 6 இடம் ஒன்றுக்கொன்று ஷஷ்டாஷ்டகம் பெறுவதால் மிக கொடிய பலனே நடக்கும்.

    லக்னாதிபதி 7ல் நின்றால்: ஜாதகரிடம் சகோதரத்துவம் கூடுதலாய் இருக்கும். நட்பு, மனைவி, கூட்டுத் தொழில் வகையில் சிறப்பான பலன் அடைவர்.

    7ம் அதிபதி 7ல் நின்றால்: மேற்கூறிய பலன் சிறப்பு பெறும், கணவன், மனைவிக்குள் ஒற்றுமை கூடும். இதில் உபய லக்னங்களுக்கு மேற்கூறிய சுப பலன் முரண்படும்.

    லக்னாதிபதி 8ல் நின்றால்: ஆயுள் கூடும், ஆனால் செயல்திறன் குறையும், முன்னேற்றம் குறையும், முன்னேற்றம் தடைபடும், நோய், கண்டம், பணக் கஷ்டம் வாட்டும். எண்ணம் சுத்தமாய் இருக்காது.

    8ம் அதிபதி லக்னத்தில் நின்றால்: நோய் கூடும், சொத்துக்கள் அழியும், ஸ்தான சலனம் ஏற்படும், தொழில் சலனம் ஏற்படும். ஆயுள் கூடும். ரண வேதனை அடைவார் ஜாதகர்.

    லக்னாதிபதி 9ல் நின்றால்: பிதுர் வகையில் சிறப்பான பலன் ஏற்படும், அயல்நாட்டில் பணி அமைந்து அங்கேயே வாழ நேரும், அனைத்து பாக்கியங்களும் கிட்டும்.

    9ம் அதிபதி லக்னத்தில் நின்றாலும்: சுப பலளே விருத்தியாகும். எளிமையான வழியில் தாய், தந்தை, முன்னோர் சேர்த்த சொத்தை வைத்து வாழ நேரும். இதில் ஸ்திர லக்னங்களுக்கு மேற்கூறிய சுப பலன் முரண்படும்.

    லக்னாதிபதி 10ல் நின்றால்: அரச பதவி கிட்டும், உயர் வாழ்வு, நல்ல தொழில், ஒழுக்கம், தம்மை சேர்ந்தவரை அரவணைக்கும் திறன், தலைவராகும் முழு தகுதியுடையவர்கள்.

    10ம் அதிபதி 1ல் நிற்பதும்: 1, 10 இடகாரக வலுவை கூட்டவே செய்யும். இளமையில் வறுமை, கஷ்டம், பூர்வீகத்தனம் அழித்து ஜாதகரின் சுய முன்னேற்ற திறனால் பெரும் பொருள் சேர்ப்பார்.

    11ம் அதிபதி 11ல் நின்றால்: லாபம் கூடும், மூத்த சகோதரம் நட்பு நிலை மேம்படும், எண்ணியது யாவும் நிறைவேறும். லக்ன வகை காரகம் சுப விருத்தியாகும்.

    11ம் அதிபதி லக்னத்தில் நின்றால்: லாபம் முழுவதையும் ஜாதகர் விரயம் செய்து விடுவார். அதாவது அதன் பயனை அனுபவித்து தீர்த்து விடுவார். இதில் சர லக்னங்களுக்கு மேற்கூறிய சுப பலன் முரண்படும்.

    12ம் அதிபதி லக்னத்தில் நின்றால்: 12ம் இடகாரக பலன் ஓங்கும். அதாவது விரையம் கூடும். நல்ல தூக்கம், சுக சௌகர்யம், அடுத்தவர் உழைப்பால் வாழும் நிலை, அனைத்தும் இருந்து எதையுமே அனுபவிக்க முடியாமை போன்ற பலன் செயல்படும்.

    சில ஜாதகங்கள்: - உதாரணம்:

    நடிகர் கமலஹாசன்,

    லக்னாதிபதி குரு 5ல் உச்சம், 5ம் அதிபதி சந்திரன் லக்னத்தில், அழகான தோற்றம், சற்று மட்டமான உயரம், சிவந்த நிறம், புத்தி ஸ்தானமான 5ல் குரு உச்சமடைவதால் முழுமையான ஈடுபாட்டுடன், சிறப்பான செயல்திறனால் புகழ் பெற்றுக்கொண்டு இருப்பவர். லக்னாதிபதி லக்னத்தை உச்சம் பெற்று பார்ப்பது சிறப்பு. மனோ காரகனையும் பார்த்த நிலையில் நவரசங்களை முகத்தில் கொண்டுவந்து சிறப்பான நடிப்பை வெளிக்காட்ட முடிகிறது.

    உதாரணம் 2:

    மகாத்மா காந்தி ஜாதகம்

    லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி. 8ம் அதிபதியும் ஆன இவர் 6க்குடைய குரு சாரம் பெற்றதால் வாழ்வு முழுவதையும் போராட்டத்தில் செலவிட்டவர். 2, 7 அதிபதி லக்னத்தில் நின்றது... அனைவரையும் அரவணைத்து சென்று இந்தியாவை தம் பக்கம் ஈர்க்க உதவியது. 9, 12 அதிபதி லக்னத்தில் நின்றது... தம்முடைய அனைத்து உழைப்பு, நேரம் அனைத்தையும் நாட்டிற்காக செலவிட்டதை குறிக்கிறது. இது சந்திரனுக்கு 3ம் இடமாய் அமைந்ததால் விடாமுயற்சியால் சுதந்திரம் பெற்றுத்தந்தவர். புகழ் பெற்றவர்.

    (லக்னாதிபதி 3ம் அதிபதி சாரம் புகழ் பெறும் அமைப்பு)

    உதாரணம் 3:

    இந்த ஜாதகர் பிறவியிலேயே கால் ஊனம் ஆனவர். 1, 5, 9ல் சூரி, குரு, ராகு, செவ், சனி இல்லை. இது கருவிலேயே ஊனமான நிலையை உணர்த்துகிறது.

    லக்னாதிபதி 12ல், 12ம் அதிபதி 12ல், 6ம் அதிபதி 12ல்.

    கால புருஷ 12ம் அதிபதி குரு பார்வை, குரி லக்ன பாதாதியும்கூட. இதுவே முழங்காலுக்கு கீழ் உறுப்பு பாதிப்பு அடையக்காரணமாகியது. லக்னாதிபதி 12ம் இட சம்பந்தம் அடைவதால் பிறர் உதவி இல்லாமல் வாழ முடியாத நிலை. 6ம் அதிபதியுடன் இணைந்ததால் வாழ்நாள் முழுவதும் வேதனை. மேலும் 6ம் இடம் புதன்+சனி சம்பந்தம் இருந்தால் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றுமே தீராது. எனவே நிரந்தர ஊனம்.

    ஆண்டவனின் அருள் அனைவருக்கும் கிடைக்க ஆண்டவனை வணங்குகிறேன்.

    லக்னம் - லக்னாதிபதி ஓர் ஆய்வு

    நாட்டிற்குத் தலைவன் போல், வீட்டிற்குத் தந்தை போல், உடலுக்குத் தலை போல் நவகிரக கட்டத்தில் லக்னமே பிரதானம். நம்மை இயக்குவது நாம் பிறந்த நேரத்தில் அமையும் லக்னப் புள்ளியே ஆகும்.

    10 மாதத்திற்குமுன் ஜனிக்கும் கரு வளர்ந்து கருப்பாய், சிவப்பாய், ஊனமாய், ஊனமில்லாமல் என்று பல்வேறாய் பிறக்கிறது. பிறந்தவுடன் நாம் கணிக்கும் ஜாதகத்தில் அக்குழந்தை எப்படிப் பிறந்துள்ளது? என்று குழந்தையைப் பார்க்காத ஜோதிடர் கணித்துவிடுகிறார். இதில்தான் இறைவனின் விளையாட்டு தெள்ளென விளங்குகிறது. கருவில் வளர வைத்து எந்த நேரத்தில் பிறக்க வைக்க வேண்டுமோ அதில் பிறக்க வைத்து பிறக்கும் அன்றுள்ள கிரக நிலையில் குழந்தையின் நிலையை உணர்த்த வைக்கும் உமை, ஈசன் அடி பணிந்து லக்ன - லக்னாதிபதி பலன் எழுதுகிறேன்.

    சென்ற இதழில் பல்வேறு லக்னம் பற்றிப் பார்த்தோம். நாம் பிறந்த நேரத்தில் விழும் லக்னப் புள்ளியே நம்மை இயக்கும். அந்த லக்னம், லக்னாதிபதி பற்றி விரிவாய் பார்ப்போம்.

    லக்ன வகைக் காரகம்: உடல், வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பம், இறுதிகால வாழ்வு, ஓய்வு பெறும் நிலை, பிறந்த இடம், அறிவாற்றல், புகழ், கனவு, உடல் பலம், அரசியலில் ஈடுபடும் தகுதி, ஆயுள், ரோமம், உருவத் தோற்றம், மற்றவர்க்காக திருடும் நிலை, பிறர் பணம், தலை, மூளை, கமிஷன் தொழில், வாழ்வில் ஏற்றம் இறக்கம், மதிப்பு, கௌரவம், பழி, அவமானம், 2ம் மனைவி, மனைவியின் இறப்பு இவையெல்லாம் லக்ன வகைக் காரகங்களாகும்.

    கால புருஷ நிலையில்: சர லக்னங்களான மேஷம், கடகம், துலாம், மகரம் விரைவாய் செயல்படக் கூடியவை. வளர்ச்சி அல்லது வீழ்ச்சியை அதி விரைவில் தரும், யோகம் பலம் பெறும். சர லக்னம், சர லக்னாதிபதி பலம் பெற்றால் ஜாதகர் அதி விரைவில் உயர்ந்த நிலைக்குச் சென்று விடுவார்.

    ஸ்திர லக்னங்களான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் இவை நிதானமாய் செயல்படும் லக்னமாகும். சுப, அசுப பலனை நிறுத்தி நிதானமாய் முழுமையாய்த் தரும். அனுபவிக்கச் செய்யும். சொத்து, செல்வம் கொடுத்தாலும் பரம்பரைக்கு அனுபவிக்கும் அளவுக்கு ஸ்திரமாய் தரும்.

    உபய லக்னங்களான கன்னி, மிதுனம், தனுசு, மீனம் இவைகள் பிரச்சனைகளை வளர்த்து அதையும் அனுபவிக்கவிடாமல் செய்து விடும். முன் வளர்ச்சி, பின் தாழ்வையும், ஏற்ற இறக்கமான வாழ்வையும் தரும்.

    சுபர்களான குரு, புதன், சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன் லக்னத்தில் நிற்பது, பார்ப்பது லக்ன பலத்தைக் கூட்டவே செய்யும். அழகான உடல், சொகுசான வாழ்வு, மதிப்பு, மரியாதை, செல்வ, செல்வாக்கு எல்லாம் தரும். பாவர்களான சூரியன், சனி, செவ்வாய், ராகு, கேது லக்னத்தில் நிற்பது, பார்ப்பது ஜாதகர் கடினப் பிரயாசையில் முன்னேறுவார். தடை, தாமதம், அதிக உழைப்பு, உடல் பலம் குறைதல், அதிக குடும்பப் பொறுப்பு போன்ற கஷ்ட பலனைத் தருவார்கள். அனைவருமே லக்னாதிபதியாகி லக்னத்தில் நிற்கும்போது லக்ன வகைக் காரகத்தை உயர்த்தவே செய்வார்கள். கேந்திர, கோணாதிபதியான லக்னாதிபதி மட்டுமே ஒவ்வொரு ஜாதகத்திற்கும் முழு முதல் யோகாதிபதி ஆவார். எனவே லக்னமும், லக்னாதிபதியும் பலம் பெற்றுவிட்டால் ஜாதகர் எல்லா வித வெற்றிகளையும், யோகங்களையும் அடைவார். ஆட்சி, உச்சம், பரிவர்த்தனை லக்ன வர்கோத்தமம், சுபர் பார்வை, சேர்க்கை பெறும் லக்னாதிபதி திறமையை வளர்த்து ஜாதகரை உயர்த்திவிடுவார்.

    நீசம், வக்ரம், அஸ்தமனம், மறைவு பெறும் லக்னாதிபதி நோயாலும், திறமையின்மையாலும், எதிரியாலும் தவறான நடவடிக்கையாலும் ஜாதகர் கஷ்டபடுவார். ஒழுக்கக் குறைவு, அவமானம், தீய எண்ணங்களையும் பலவீனமான லக்னாதிபதி தருவார்.

    லக்னத்தில் சூரியன் நின்றால்:

    ஜாதகர் மந்தமாய் இருப்பார். சூரியனுக்கு சுபர்களின் சம்பந்தம் கிடைத்தால் நல்வழியில் ஆற்றலை வெளிப்படுத்தி சிறப்பான பலன் தருவார். பாவியுடன் இணைந்தால் ஆற்றலை தீயவழியில் பயன்படுத்துவார். சூரியன் தலையில் இருப்பது உஷ்ண வியாதி, தந்தைக்கு தோஷம், பூர்வீகம் முற்றிலும் அழியும். இவர்கள் தினம் காலை சூரியவழிபாடு செய்யவும்.

    லக்னத்தில் சந்திரன் நின்றால்:

    சந்திரன் பலத்துடன் நின்றால் அழகான தோற்றம், அன்பான பேச்சு, சுக வாழ்வு, புகழ் எல்லாம் உண்டாகும். பலவீனம் அடைந்தால் தோற்றப் பொலிவு குறையும். தாய் நலம் குறையும். சதா வியாதி பீடிக்கும். இத்தகையோர் சந்திர வழிபாடு செய்யவும்.

    லக்னத்தில் செவ்வாய் நின்றால்:

    சிவந்த நிறம், பலமான உடல் அமைப்பு, மூர்க்க குணம், முரட்டு சுபாவம், புத்தி மந்தம், பிறர்பின் செல்லும் தொண்டர்கள், இவர்களே சுயமாய் சிந்திக்க மாட்டார்கள். மற்றப்படி தாட்டியத்தில் வாழ்வை நடத்துவார்கள். பலவீனமாய் நின்றால் ரத்தம் பாதிக்கும். மூளை பாதிக்கும். தலையில் அடிபடும். அவமானம். சிறை வாசம் வரும்.

    லக்னத்தில் புதன் நின்றால்:

    லக்னத்தில் பலம் பெற்றால் கருத்த நிறம், சுருண்ட முடி, சிறிய கண்கள், புத்தி சாலிகள், வேகமாய் செயல்படக் கூடியவர்கள். சந்தேக குணம். உயர் கல்வியில் வியாபாரத்தில் உயர்வடைவர். சூதாட்டத்திலும், லாட்டரி, ரேஸ், ஷேர் போன்ற நிலையிலும் உயர்வடைவர். பலவீனமாய் இருந்தால் மேற்கூறிய விஷயங்கள் கெடுபலன் தரும். வீர்யமும் பாதிக்கும்.

    லக்னத்தில் குரு நின்றால்:

    பலமான குரு தலையில் நின்றால் சகல தோஷ நிவர்த்தி. குருவிற்கு திக் பலம் லக்னம்தான். எனவே லக்ன வகைக் காரகம் எல்லா வகையிலும் சிறப்பு பெறும். பலவீனமான, நீசமான, பாவிகளால் பாதிக்கப்பட்ட குரு லக்னத்தில் நின்றால் கெட்ட பெயர், பழி, அவமானம், அவப்புகழ் வரும்.

    லக்னத்தில் சுக்கிரன் நின்றால்:

    கருத்த நிறம், அழகான தோற்றம், சுருண்ட முடி, சகல தோஷ நிவர்த்தி, கலைகளில் ஒன்று கை வருதல், கஞ்சத்தனம், மென்மையான உடல், கொடிய குணம், எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும் திறன், சுகமான களஸ்திர வாழ்வு அமையும். பலவீனமானால் மேற்கூறிய விஷயங்களில் கெடு பலன்கள் நடக்கும்.

    லக்னத்தில் சனி நின்றால்:

    லக்னத்தில் சனி பலம் பெற்றால் போராட்டமான வாழ்வு, தலைமைப் பதவி, பணம் குறைவு, கௌரவம் அதிகம், சிலேத்தும நோய்கள், கோப குணம், பிறர்க்கு உதவும் மனம் அமையும். கல்வி குறையும். அனுபவ அறிவால் உயர்வர். பலவீனமானால் நீசத் தனமான பேச்சு, செயல், காச நோய் பாதிப்பு, மூளை பாதிப்பு, நரம்புத் தளர்ச்சி, உடல் மெலிதல், வீண் பழி, அவமானம், குடும்பம் பிரிதல், சிறைவாசம், வெளிநாட்டு வாசம் அமையும்.

    லக்னத்தில் ராகு நின்றால்:

    பலத்துடன் நின்றால் பரந்த அறிவு, அழகு, அன்னிய நாட்டில் வாழும் நிலை, அரசியல், விஞ்ஞானம், சினிமா, வியாபாரம் போன்ற அனைத்திலும் உயர்நிலை பெறுவர். பலவீனமாய் லக்னத்தில் நிற்கும் ராகு உடம்பில் மச்சம், மரு, ஊனம் போன்ற குறைகள் ஏற்படும். விஷ பயம் தரும். தீய பழக்கவழக்கங்கள், கெட்ட பெயர் நிலைக்கும்.

    லக்னத்தில் கேது நின்றால்:

    பலத்துடன் நின்றால் நல்ல ஆத்ம பலம், மௌனமான சுபாவம், கருத்த நிறம், அழகில்லா தோற்றம்,

    Enjoying the preview?
    Page 1 of 1