Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pannirendu Rasigal
Pannirendu Rasigal
Pannirendu Rasigal
Ebook177 pages33 minutes

Pannirendu Rasigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இலக்கிய மேடைகளிலும் ஆன்மிக விழாக்களிலும் எண் கணிதம் - ராசிகள் - லக்னங்கள் - நட்சத்திரங்கள் - மாதங்கள் - நாட்கள் பற்றிய பற்பல செய்திகளை சொல்லி கைதட்டல் பெற்றுள்ளேன். பன்னிரெண்டு ராசிகளைப் பற்றி ஒவ்வொன்றுக்கும் 108 மூவரி மாலைகள் தொடுத்துள்ளேன். தொகுத்துள்ளேன்.

Languageதமிழ்
Release dateMar 9, 2024
ISBN6580162310821
Pannirendu Rasigal

Read more from Mannai Pasanthy

Related to Pannirendu Rasigal

Related ebooks

Reviews for Pannirendu Rasigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pannirendu Rasigal - Mannai Pasanthy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பன்னிரெண்டு ராசிகள்

    Pannirendu Rasigal

    Author:

    மன்னை பாசந்தி

    Mannai Pasanthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mannai-pasanthy

    பொருளடக்கம்

    அணிந்துரை

    என்னுரை

    1. மேஷ ராசி

    2. ரிஷப ராசி

    3. மிதுன ராசி

    4. கடக ராசி

    5. சிம்ம ராசி

    6. கன்னி ராசி

    7. துலா ராசி

    8. விருச்சிக ராசி

    9. தனுசு ராசி

    10. மகர ராசி

    11. கும்ப ராசி

    12. மீன ராசி

    அணிந்துரை

    இறைவனின் திருவுளம் நமக்கு வழிகாட்டுகிறது. நம்மையெல்லாம் வாழ வைக்கிறது. நம் ஐம்புலன்களையும் ஆறாதாராச் சக்கரங்களையும் நவக்கிரஹங்கள் இயக்குகின்றன.

    ‘புனரபி ஜனனம் புனரபி மரணம்’ என்கிறார் ஆதிசங்கரர். அத்வைதம் த்வைதம் விசிஷ்டாத்வைதம் என ஞானிகள் ஆன்மிகப் பாதைகளில் நம்மை ஆற்றுப்படுத்துகிறார்கள்.

    ஞானத்தின் வழியில் மகாப் பெரியவாளின் அநுக்கிரஹம் பெற்றவர் மன்னை பாசந்தி. நல்ல ஞானம் நிறைந்தவர். அடக்கம் அமரருள் உய்க்கும் என்பதற்கு நடமாடும் சான்றானவர்.

    மன்னை பாசந்தியின் படைப்புகள் புத்தகங்கள் யாவும் எளிமையும் ஆழமும் பொருந்தியவை. நல்ல விஷய ஞானம் உடையவர். அதை எளிதில் பிறருக்குப் புரிய வைக்கிறார்.

    கோள்கள் ஒன்பது - ராசிகள் பன்னிரெண்டு - நட்சத்திரங்கள் இருபத்தேழு. இவற்றைக் கூட்டினால் நாற்பத்தெட்டு வரும். இதைத்தான் ஒரு மண்டலம் என பரிகார காலமாக ஜோதிடத்தில் சொல்கிறோம்.

    சந்திராயன் ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானி கோள்களுக்கும் நமது ஜோதிடத்திற்கும் தொடர்பு உள்ளதை நம்புவதாக கூறுகிறார். தேவாரத்தில் ஞானசம்பந்தப் பெருமான் கோளறு பதிகம் பாடி நவக்கிரஹகங்களைத் துதிக்கிறார்

    ராசிகள் - நட்சத்திரங்கள் - லக்னங்கள் - மாதங்கள் - நாட்கள் பற்றி கவிதை வடிவில் தருகிறார் மன்னை பாசந்தி. இவருடைய முயற்சி போற்றத்தக்கது. மஹான்களின் கையினால் விருதுகள் வாங்கியிருக்கிறார். வாய் மணக்க சங்கீதம் சாதிக்கிறார். ஒளிவு மறைவில்லாத உண்மையைப் பேசுகிறார்.

    மன்னை பாசந்தியின் படைப்புகள் வாசிக்கத் தக்கவை. போற்றத் தக்கவை. குருவின் ஆசீர்வாதம் இவரை வழி நடத்தும்.

    ஞான மெனும் தேரிலேறி

    நவக்கிரஹ மொழி சொன்னாய்

    கானமெனும் கவி படைத்து

    காலபுருஷ ராசி சொன்னாய்

    வான மெங்கும் நிறைந்துள்ள

    விண்மீனின் ரகசியத்தை

    தானெழுதும் பேறு பெற்ற

    தவப் புதல்வன் வாழியவே!

    வாக்கு சித்தர்

    ஆத்மார்த்த ஜோதிடர்

    டாக்டர் ச.பஞ்சநாதன்

    செல்பேசி: 9444453693

    என்னுரை

    இலக்கிய மேடைகளிலும் ஆன்மிக விழாக்களிலும் எண் கணிதம் -ராசிகள் - லக்னங்கள் - நட்சத்திரங்கள் - மாதங்கள் - நாட்கள் பற்றிய பற்பல செய்திகளை சொல்லி கைதட்டல் பெற்றுள்ளேன்

    பன்னிரெண்டு ராசிகளைப் பற்றி ஒவ்வொன்றுக்கும் 108 மூவரி மாலைகள் தொடுத்துள்ளேன். தொகுத்துள்ளேன்

    இந்நூலுக்கு அணிந்துரை அளித்த எனது ஆறாவது குரு ஆத்மார்த்த குரு ஜோதிட குரு டாக்டர் ச.பஞ்சநாதன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்

    படிப்பதற்கு சுவாரஸ்யரமாகவும் மிகவும் பிடித்தமாக இருக்கும். வாசகர்கள் படித்து பயனுற வேண்டுகிறேன்.

    உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மாணவ மாணவியருக்கும் அருகில் உள்ள நூலகத்திற்கும் பரிசாகவும் அன்பளிப்பாகவும் இந்நூலை அளித்து மகிழலாம்.

    மன்னை பாசந்தி

    1. மேஷ ராசி

    பன்னிரெண்டு ராசிகள்

    முதலாம் ராசி

    மேஷம் ராசி

    அஸ்வினி பரணி நான்கு பாதங்கள்

    கார்த்திகை முதலாம் பாதம்

    மேஷ ராசி நட்சத்திரங்கள்

    கால புருஷனின்

    தலைபாகம் குறிக்கும்

    மேஷ ராசி

    பன்னிரெண்டு ராசிகளில்

    முதல் சர ராசி

    மேஷ ராசி

    மேஷ ராசிக்கு

    நட்பு ராசிகள்

    மிதுனம் சிம்மம் தனுசு கும்பம்

    மேஷ ராசிக்கு

    பகை ராசிகள்

    கடகம் கன்னி மகரம்

    மேஷ ராசிக்கு

    சமமான ராசிகள்

    ரிஷபம் துலாம் விருச்சிகம்

    செவ்வாய் பகவான்

    அதிபதியாக ஆட்சி புரியும்

    மேஷ ராசி

    செவ்வாயின் தாக்கம்

    அதிகம் கொண்டது

    மேஷ ராசி

    எப்போதும் ஒளிவு மறைவின்றி

    மனம் திறந்து பேசும் வல்லமை

    மேஷ ராசிக்காரர்கள்

    இடைய10றுகள் எதுவாயினும்

    பொறுமையுடன் தாங்கிக்கொள்ளும்

    மேஷ ராசிக்காரர்கள்

    அன்பும் பாசம் கொண்டோரிடம்

    பிரதிபலன் பாராது உதவும்

    மேஷ ராசிக்காரர்கள்

    நல்ல வாக்கு வண்மை

    நல்வாக்கு சாதுர்யம் மிகுந்த

    மேஷ ராசியினர்

    கம்பீரமான தோற்றம்

    நடுத்தர உயரம்

    மேஷ ராசியில் பிறந்தோர்

    தீர்க்கமான ஆயுள்

    தெய்வ பக்தி கொண்ட

    மேஷ ராசியினர்

    நினைத்ததை உடனே சாதிக்கும்

    துடிப்பு கொண்டவர்கள்

    மேஷ ராசிக்காரர்கள்

    மற்றவர்கள் பார்வைக்கு

    வெகுளிகளாக காட்சி அளிக்கும்

    மேஷ ராசியினர்

    அடிக்கடி பொறுமை இழக்கும்

    பற்பல பிரச்சனைகள் சந்திக்கும்

    மேஷ ராசிக்காரர்கள்

    உடன் பிறந்தோரிடம்

    அதிக அன்புடன் இருக்கும்

    மேஷ ராசியில் பிறந்தோர்

    அறிவு பலத்தால் இவர்களே

    முதல்வராக இருப்பர்

    மேஷ ராசியில் பிறந்தவர்கள்

    கலைகளில் அதிக நாட்டம்

    நகைச்சுவை உணர்வு அதிகம்

    மேஷ ராசிக்காரர்கள்

    பழமைகளை அதிகம் விரும்பும்

    முன்னோர்களை அதிகம் நேசிக்கும்

    மேஷ ராசியினர்

    பிறந்த மண்ணை நேசிக்கும்

    மண் சார்ந்தவைகள் பிடிக்கும்

    மேஷ ராசிக்காரர்கள்

    பல விஷயங்களை கிரகிக்கும்

    கற்றுக்கொள்ளும் வேகம் அதிகம்

    மேஷ ராசியினர்

    சரித்திர சாதனை படைக்கும்

    முன்கோபம் அதிகம் வந்திடும்

    மேஷ ராசிக்காரர்கள்

    மன அமைதியை இழக்கும்

    பிறர் கவனத்தை ஈர்க்கும்

    மேஷ ராசியினர்

    படித்த படிப்பு ஒன்றாக இருக்கும்

    செய்யும் வேலை வேறாகயிருக்கும்

    மேஷ ராசியினர்

    அஸ்வினி நட்சத்திரம்

    முதலாம் பாதம் மேஷ ராசி

    நவாம்ச அதிபதி செவ்வாய்

    சுய உழைப்பே மூலதனமாகும்

    நட்புக்கு இலக்கணமாகத் திகழும்

    அஸ்வினி முதலாம் பாதம்

    ஏற்ற இறக்கங்களை சந்திக்கும்

    ஏற்றமுடன் குறையின்றி வாழும்

    அஸ்வினி முதலாம் பாதம்

    அஸ்வினி நட்சத்திரம்

    இரண்டாம் பாதம் மேஷ ராசி

    நவாம்ச அதிபதி சுக்கிரன்

    சிறுவயதிலேயே வீடு வாகன யோகம்

    பெற்றோர்களிடம் அதிகப் பாசம்

    அஸ்வினி இரண்டாம் பாதம்

    எப்போதும் முகம் ப்ரகாசமாயிருக்கும்

    எல்லாம் தெரிய பிள்ளைகளை வளர்க்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1