Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tamil Mathangal
Tamil Mathangal
Tamil Mathangal
Ebook180 pages34 minutes

Tamil Mathangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மொத்தம் பன்னிரெண்டு தமிழ் மாதங்களைப் பற்றிய பற்பல தகவல்களை நூற்றியெட்டு மூவரி மாலைகளாகத் தொகுத்துள்ளேன். தொடுத்துள்ளேன். படிக்கப்படிக்க ஆவலைத் தூண்டும். படித்து இன்புற்று பயனுற வேண்டுகிறேன்.

Languageதமிழ்
Release dateJan 20, 2024
ISBN6580162310639
Tamil Mathangal

Read more from Mannai Pasanthy

Related to Tamil Mathangal

Related ebooks

Reviews for Tamil Mathangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tamil Mathangal - Mannai Pasanthy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தமிழ் மாதங்கள்

    Tamil Mathangal

    Author:

    மன்னை பாசந்தி

    Mannai Pasanthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mannai-pasanthy

    பொருளடக்கம்

    அணிந்துரை

    என்னுரை

    தமிழ் மாதம் சித்திரை

    தமிழ் மாதம் வைகாசி

    தமிழ் மாதம் ஆனி

    தமிழ் மாதம் ஆடி

    தமிழ் மாதம் ஆவணி

    தமிழ் மாதம் புரட்டாசி

    தமிழ் மாதம் ஐப்பசி

    தமிழ் மாதம் ர்த்திகை

    தமிழ் மாதம் மார்கழி

    தமிழ் மாதம் தை

    தமிழ் மாதம் மாசி

    தமிழ் மாதம் பங்குனி

    ‘குருவே மாணவனை நினைத்தாலும்

    குருவை மாணவன் நினைத்தாலும்

    மன்னை பாசந்தி

    அணிந்துரை

    இறைவனின் திருவுளம் நமக்கு வழிகாட்டுகிறது. நம்மையெல்லாம் வாழ வைக்கிறது. நம் ஐம்புலன்களையும் ஆறாதாராச் சக்கரங்களையும் நவக்கிரஹங்கள்  இயக்குகின்றன.

    ‘புனரபி ஜனனம் புனரபி மரணம்’ என்கிறார் ஆதிசங்கரர். அத்வைதம் த்வைதம் விஷிஷ்டாத்வைதம் என ஞானிகள் ஆன்மிகப் பாதைகளில் நம்மை ஆற்றுப்படுத்துகிறார்கள்.

    ஞானத்தின் வழியில் மகாப் பெரியவாளின் அநுக்கிரஹம் பெற்றவர் மன்னை பாசந்தி. நல்ல ஞானம் நிறைந்தவர். அடக்கம் அமரருள் உய்க்கும் என்பதற்கு நடமாடும் சான்றானவர்.

    மன்னை பாசந்தியின் படைப்புகள் புத்தகங்கள் யாவும் எளிமையும் ஆழமும் பொருந்தியவை. நல்ல விஷய ஞானம் உடையவர். அதை எளிதில் பிறருக்குப் புரிய வைக்கிறார்.

    கோள்கள் ஒன்பது - ராசிகள் பன்னிரெண்டு - நட்சத்திரங்கள் இருபத்தேழு. இவற்றைக் கூட்டினால் நாற்பத்தெட்டு வரும். இதைத்தான் ஒரு மண்டலம் என பரிகார காலமாக ஜோதிடத்தில் சொல்கிறோம்.

    சந்திராயன் ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானி கோள்களுக்கும் நமது ஜோதிடத்திற்கும் தொடர்பு உள்ளதை நம்புவதாக கூறுகிறார். தேவாரத்தில் ஞானசம்பந்தப் பெருமான் கோளறு பதிகம் பாடி நவக்கிரஹகங்களைத் துதிக்கிறார்

    எண்கள் - ராசிகள் - நட்சத்திரங்கள் - மாதங்கள் - லக்னங்கள் பற்றி கவிதை வடிவில் தருகிறார் மன்னை பாசந்தி. இவருடைய முயற்சி போற்றத்தக்கது. மஹான்களின் கையினால் விருதுகள் வாங்கியிருக்கிறார். வாய் மணக்க சங்கீதம் சாதிக்கிறார். ஒளிவு மறைவில்லாத உண்மையைப் பேசுகிறார்.

    மன்னை பாசந்தியின் படைப்புகள் வாசிக்கத் தக்கவை. போற்றத் தக்கவை. குருவின் ஆசீர்வாதம் இவரை வழி நடத்தும்.

    ஞான மெனும் தேரிலேறி

    நவக்கிரஹ மொழி சொன்னாய்

    கானமெனும் கவி படைத்து

    காலபுருஷ ராசி சொன்னாய்

    வான மெங்கும் நிறைந்துள்ள

    விண்மீனின் ரகசியத்தை

    தானெழுதும் பேறு பெற்ற

    தவப் புதல்வன் வாழியவே!

    வாக்கு சித்தர்

    ஆத்மார்த்த ஜோதிடர்

    டாக்டர் ச.பஞ்சநாதன்

    செல்பேசி : 9444453693

    என்னுரை

    தமிழ் மாதங்கள் மொத்தம் பன்னிரெண்டு. இந்நூலில்

    * சித்திரை

    * வைகாசி

    * ஆனி

    * ஆடி

    * ஆவணி

    * புரட்டாசி

    * ஐப்பசி

    * கார்த்திகை

    * மார்கழி

    * தை

    * மாசி

    * பங்குனி

    மொத்தம் பன்னிரெண்டு தமிழ் மாதங்களைப் பற்றிய பற்பல தகவல்களை நூற்றியெட்டு மூவரி மாலைகளாகத் தொகுத்துள்ளேன். தொடுத்துள்ளேன். படிக்கப்படிக்க ஆவலைத் தூண்டும். படித்து இன்புற்று பயனுற வேண்டுகிறேன்.

    இந்நூலுக்கு அணிந்துரை அளித்த எனது ஆறாவது குரு ஆத்மார்த்த குரு ஜோதிட குரு டாக்டர் ச.பஞ்சநாதன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்

    நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் அன்பளிப்பாகவும் மாணவ மாணவியருக்குப் பரிசாகவும் இந்நூலை அளிக்கலாம்.

    தமிழ் மாதங்கள் அட்டவணை

    1. சித்தரை மாதம்

    2. வைகாசி மாதம்

    3. ஆனி மாதம்

    4. ஆடி மாதம்

    5. ஆவணி மாதம்

    6. புரட்டாசி மாதம்

    7. ஐப்பசி மாதம்

    8. கார்த்திகை மாதம்

    9. மார்கழி மாதம்

    10. தை மாதம்

    11. மாசி மாதம்

    12. பங்குனி மாதம்

    தமிழ் மாதம் சித்திரை

    சித்தம் தெளிந்து பார்ப்போம்

    சித்திரை மாதச்சிறப்பினை நாமும்

    சிறப்பான வாழ்வினைப் பெறுவோம்;

    சித்திரை வைகாசி ஆனி ஆடி ஆவணி புரட்டாசி

    ஐப்பசி கார்த்திகை மார்கழி தை மாசி பங்குனி

    தமிழ் மாதங்கள் பன்னிரெண்டு

    தமிழ் மாதங்கள் பன்னிரெண்டு

    முதலாக வரும் மாதம்

    சித்திரை மாதம்

    வெயில் காலம் மேஷ மாதம்

    அக்னி நட்சத்திரம் வரும் காலம்

    சித்திரை மாதம்

    சூரியன் மேஷ ராசியில்

    நுழைந்து சஞ்சரிக்கும் மாதம்

    சித்திரை மாதம்

    ஏப்ரல் பதினான்கு நாள் முதல்

    மே பதினான்கு நாட்கள் வரை

    தமிழ் சித்திரை மாதம்;

    தலை (மேஷம்) மாதம்

    தலை (மேஷம்) ராசி

    சித்திரை மாத

    வருடத்தில் முதல் மாதம்

    வருடப்பிறப்பு மாதம்

    சித்திரை மாதம்

    உயிரினங்கள் வளர்வதற்கு

    முக்கிய அவதாரங்கள் நிகழ்வு

    சித்திரை மாதம்

    சதுர் மஹாயுகம்

    ஆரம்பமே முதல் தேதி

    சித்திரை மாதமே

    சித்திரை மாதம்

    வளர்பிறை துவிதியை

    கிருதயுகம் பிறந்தது

    சித்திரை மாதம்

    வளர்பிறை பஞ்சமி திதி

    கூர்ம கல்பம் பிறந்தது

    சித்திரை மாதம்

    வளர்பிறை சப்தமி

    கங்கை நதி பிறந்தது

    சித்திரை மாதம்

    வளர்பிறை திரயோதசி

    மத்ஸ்ய அவதாரம

    சித்தரை மாதம்

    தேய்பிறை பஞ்சமி

    வராஹ அவதாரம்

    முதல் மாதம் சித்திரை

    முதல் நட்சத்திரம் அஸ்வினி

    முக்கியமான சிறப்பு

    அஸ்வினி தேவர்கள் இரட்டையர்கள்

    அஸ்வினி நட்சத்திர அதிபதிகள்

    சித்திரை மாதச் சிறப்புகள்

    பல கோடி வருடங்கள்

    பயணித்துக் கொண்டிருக்கும்

    சூரிய பகவான்

    சூரிய பகவான் பிறந்தது

    சித்திரை மாதம்

    அஸ்வினி நட்சத்திரம்

    சித்திரை மாதம்

    முதலாம் நாள்

    தமிழ்ப் புத்தாண்டு

    ஒளி பொருந்திய அழகிய மாதம்

    காய்கறி கனிகள் கிடைக்கும் மாதம்

    சித்திரை மாதம்

    மக்களுக்கு மகிழ்ச்சியும்

    பணவரவையும் தந்திடும்

    சித்திரை மாதம்

    கோடை அமாவாசை

    பால்குட அமாவாசை

    சித்திரை அமாவாசை

    சித்தர்களுக்கு உகந்த

    சதுரகரி அமாவாசை

    சித்திரை அமாவாசை

    சித்திரை அமாவாசை

    அடுத்து வரும் திருதியை

    அட்ஷய திருதீயை

    திருமாலின் அவதாரம் பத்து

    ஆறாம் அவதாரம்

    பரசுராம அவதாரம்

    பரசுராமர் அவதரித்த திருநாள்

    சித்திரை திருதீயை நன்னாள்

    அட்சய திருதீயை புனிதநாள்

    சித்திரை மாதம் நவமி நன்னாள்

    அனைவரும் கொண்டாடும் நாள்

    ஸ்ரீராம நவமி திருநாள்

    பாஞ்சாலி மானம் காத்த

    கிருஷ்ண பரமாத்மா

    மகாபாரதம் நிகழ்வு

    பாஞ்சாலிக்கு துகில் அளித்து

    Enjoying the preview?
    Page 1 of 1