Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Panniru Azhwargal
Panniru Azhwargal
Panniru Azhwargal
Ebook186 pages24 minutes

Panniru Azhwargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எண் கணிதத்தில் வகுத்தல் என்பது சிரமம். இலக்கண இலக்கியத்தில் தொகுத்தல் மற்றும் சுருங்கச்சொல்லி விளங்கவைப்பது என்பது வெகு சிரமம். பன்னிரு ஆழ்வார்கள் என்கிற இந்த தொகுப்பு நூலில் ஆழ்வார்களின் மீது பாடல்கள் இயற்றியும் பன்னிரு ஆழ்வார்களின் வாழ்க்கைக் குறிப்புகளை தனித்தனியாக நூற்றியெட்டு மூவரி மாலையாகவும் தொகுத்துள்ளேன். மாணவ மாணவியர்களுக்குப் பரிசாக இந்நூலை அளிக்கலாம். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அன்பளிப்பாகக் கொடுக்கலாம். படிக்கப் படிக்க ஆவலைத் தூண்டும். படித்துப் பயனுற வேண்டுகிறேன்.

Languageதமிழ்
Release dateMar 11, 2023
ISBN6580162309554
Panniru Azhwargal

Read more from Mannai Pasanthy

Related to Panniru Azhwargal

Related ebooks

Reviews for Panniru Azhwargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Panniru Azhwargal - Mannai Pasanthy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பன்னிரு ஆழ்வார்கள்

    Panniru Azhwargal

    Author:

    மன்னை பாசந்தி

    Mannai Pasanthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mannai-pasanthy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆழ்வார்களின் சிறப்புக்கள் மற்றும் பெருமைகள்

    விஷ்ணுசித்தர் என்கிற பெரியாழ்வார்

    கோதை என்கிற ஸ்ரீஆண்டாள்

    ஸ்ரீ பொய்கையாழ்வார்

    பூதத்தாழ்வார் பற்றிய பாடல்

    பேயாழ்வார் பற்றிய பாடல்

    திருமங்கை ஆழ்வார்

    திருப்பாணாழ்வார்

    தொண்டரடிப்பொடி ஆழ்வார்

    திருமழிசை ஆழ்வார்

    குலசேகர ஆழ்வார்

    மதுரகவி ஆழ்வார்

    திருக்குருகூர் மாறன் என்கிற நம்மாழ்வார்

    ஆழ்வார்களின் சிறப்புக்கள் மற்றும் பெருமைகள்

    சமய மறுமலர்ச்சியையும் சமுதாய விழிப்புணர்ச்சியையும் இன்றமிழ் இலக்கிய வளர்ச்சியையும் ஏற்படுத்திய மயர்வற மதிநலம் படைத்த ஆழ்வார்கள் அருளிய ‘தமிழ் வேதம்’ என்று மதிக்கப்படும் மாட்சியுடைய ‘நாலாயிர திவ்ய ப்ரபந்தம்’ ஆகும்.

    திருமாலின் அம்சமாக அவதரித்தவர் பன்னிரு ஆழ்வார்கள்.

    * பன்னிரு ஆழ்வார்களில் பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் மூவரும் முதலாழ்வார்கள் ஆவர்.

    * பன்னிரு ஆழ்வார்களில் ஸ்ரீஆண்டாள் ஒரே ஒரு பெண்ணாழ்வார்.

    * பன்னிரு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வாரைத் தவிர ஏனைய பதினோரு ஆழ்வார்களும் திருமாலைப் போற்றிப் பாடியவர்கள்.

    * திருமாலைப் பாடாத ஒரே ஆழ்வார் மதுரகவி ஆழ்வார்.

    * குருவான நம்மாழ்வாரை மட்டும் பாடி ஆழ்வார்களில் ஒருவரானவர் மதுரகவி ஆவார்.

    * ஒரே ஒரு பதிகம் (பத்து பாடல்கள் மட்டும்) பாடிய ஆழ்வார்கள் இருவர். ஒருவர் திருப்பாணாழ்வார் (அமலனாதிபிரான்) இரண்டாமவர் மதுரகவி ஆழ்வார் (கண்ணிநுண்சிறுத்தாம்பு).

    * ஆயிரம் பாசுரங்களுக்கு மேல் பாடிய ஆழ்வார்கள் ஒருவர் திருமங்கை ஆழ்வார் (1253) இன்னொருவர் நம்மாழ்வார் (1296).

    * மதுரகவி ஆழ்வாரைத் தவிர ஆழ்வார்கள் பதின்மரும் ஆண்டாள் நாச்சியாரும் போற்றிப்பாடிய திவ்யதேசம் திருவரங்கமாகும்.

    * திருவரங்கம் அரங்கனை ஆட்கொண்ட இரு ஆழ்வார்கள் ஸ்ரீஆண்டாள் மற்றும் திருப்பாணாழ்வார்.

    * பன்னிரு ஆழ்வார்கள் பாடிய ப்ரபந்தங்களின் தொகுப்பே ‘நாலாயிர திவ்யப்ரபந்தம்’ ஆகும்

    விஷ்ணுசித்தர் என்கிற பெரியாழ்வார்

    பல்லவி

    திரு வில்லிபுத்தூரில் அவதரித்த ஆழ்வார்

    திருமகளாய் ஆண்டாளைப் பெற்ற பெரியாழ்வார் (திரு)

    அநுபல்லவி

    திருவரங்கனுக்கு ஆண்டாளை மனமுடித்த ஆழ்வார்

    திருவரங்கனுக்கே மாமனாரான பெரியாழ்வார் (திரு)

    சரணம்

    ஆனியில் சோதியில் அவதரித்த ஆழ்வார்

    ஆனை மீதேறி நகர்வலம் வந்த ஆழ்வார்

    ஆகாயத்தில் பெருமாளை தரிசித்த ஆழ்வார்

    ஆச்சர்யமான பல்லாண்டு பாடிய பெரியாழ்வார் (திரு)

    பன்னிரு ஆழ்வார்கள்

    பக்தியில் சிறந்தவர்

    விஷ்ணு சித்தர்

    வைணவ நெறி

    சிறந்து விளங்கிய

    ஆழ்வார்

    தமிழகத்தில்

    திருவில்லிபுத்தூர்

    திரு அவதாரம்

    ஒன்பதாம் நூற்றாண்டு

    குரோதன ஆண்டு

    விஷ்ணுசித்தர் ஜனனம்

    கலி நாற்பத்தேழாம் வருடம்

    உருத்ரோதன (குரோதன) வருடம்

    விஷ்ணுசித்தர் அவதாரம்

    ஆனி மாதம்

    சுவாதி (சோதி) நட்சத்திரம்

    விஷ்ணுசித்தர் திருவவதாரம்

    சுக்ல பக்ஷம் ஏகாதசி

    ஞாயிற்றுக்கிழமை

    விஷ்ணுசித்தர் சுபஜனனம்

    வேதியர் குல தம்பதி

    முகுந்தாசார்யர் பதுமவல்லிஅம்மை

    ஆண்மகவாக விஷ்ணுசித்தர்

    அந்தணர் குலத்தில்

    திருஅவதாரம் செய்தவர்

    விஷ்ணுசித்தர்

    திருமாலின் அம்சம்

    கருடனின் அம்சம்

    விஷ்ணு சித்தர்

    கருவிலேயே வடபத்ரசாயி

    நிர்ஹேதுக கிருபையால்

    பிறந்த விஷ்ணுசித்தர்

    பெற்றேர்களிடம் கேட்டறிந்த

    கண்ணபிரான் கதைகள்

    விஷ்ணுசித்தர்

    வடபெருங்கோயிலுடையான்

    ஆபார பக்தி

    விஷ்ணுசித்தர்

    மாலன் கைங்கர்யமே

    மனதிற்குகந்த கைங்கர்யம்

    என்றுணர்ந்த விஷ்ணுசித்தர்

    மாலை சூடும் கைங்கர்யமே

    மாலனுக்கு செய்யும் கைங்கர்யம்

    என்றுணர்ந்த விஷ்ணுசித்தர்

    நந்தவனம் அமைத்து

    பூமாலை கட்டி மகிழும்

    விஷ்ணுசித்தர்

    திருவில்லிபுத்தூர்

    வடபத்ரசாயி திருக்கோயில்

    பூமாலை தொடுக்கும் பணி

    அன்றலர்ந்த மலர்களைத்

    தொடுத்து பூமாலையாக

    பெருமாளுக்கு சாற்றும் பணி

    பாமாலை பாடிக்கொண்டே

    பூமாலை தொடுக்கும் பணி

    பெரியாழ்வார்

    பாமாலை பூமாலை

    விஷ்ணுவுக்கு சாற்றிய

    விஷ்ணு சித்தர்

    ஸ்ரீவல்லபதேவ பாண்டியன்

    நகரசோதனை வரும் சமயம்

    வீதி திண்னையில் வேதியர்

    ‘நல்ல வார்த்தை சொல்’

    வேதியரைப் பார்த்து வினவிய

    வல்லபதேவப் பாண்டிய மன்னன்

    மழைக்காலத்துக்காக

    எட்டு மாதங்கள் முயற்சிசெய்

    பதிலுரைத்த வேதியர்

    இரவு நேரத்திற்காக

    பகலில் முயற்சி செய்

    பகன்ற வேதியர்

    மறுமைக்காக

    இம்மையில் முயற்சி செய்

    உரைத்த வேதியர்

    கிழப்பருவத்திற்காக

    வாலிபப்பருவத்தில் முயற்சி செய்

    சொன்ன வேதியர்

    செல்வநம்பி அந்தணரிடம்

    இதற்கு

    Enjoying the preview?
    Page 1 of 1