Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thithikal - Part 1
Thithikal - Part 1
Thithikal - Part 1
Ebook121 pages21 minutes

Thithikal - Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திதிகளைப் பற்றி பாகம் 1ல் பிரதமை திதி முதல் அஷ்டமி திதி வரை ஒவ்வொன்றுக்கும் 108 மூவரி மாலைகள் தொடுத்துள்ளேன். தொகுத்துள்ளேன்.

Languageதமிழ்
Release dateMar 23, 2024
ISBN6580162310881
Thithikal - Part 1

Read more from Mannai Pasanthy

Related to Thithikal - Part 1

Related ebooks

Reviews for Thithikal - Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thithikal - Part 1 - Mannai Pasanthy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    திதிகள் - பாகம் 1

    Thithikal - Part 1

    Author:

    மன்னை பாசந்தி

    Mannai Pasanthy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mannai-pasanthy

    பொருளடக்கம்

    அணிந்துரை

    என்னுரை

    1. பிரதமை திதி

    2. துவிதியை திதி

    3. திரிதியை திதி

    4. சதுர்த்தி திதி

    5. பஞ்சமி திதி

    6. சஷ்டி திதி

    7. சப்தமி திதி

    8. அஷ்டமி திதி

    அணிந்துரை

    இறைவனின் திருவுளம் நமக்கு வழிகாட்டுகிறது. நம்மையெல்லாம் வாழ வைக்கிறது. நம் ஐம்புலன்களையும் ஆறாதாராச் சக்கரங்களையும் நவக்கிரஹங்கள் இயக்குகின்றன.

    ‘புனரபி ஜனனம் புனரபி மரணம்’ என்கிறார் ஆதிசங்கரர். அத்வைதம் த்வைதம் விசிஷ்டாத்வைதம் என ஞானிகள் ஆன்மிகப் பாதைகளில் நம்மை ஆற்றுப்படுத்துகிறார்கள்.

    ஞானத்தின் வழியில் மகாப் பெரியவாளின் அநுக்கிரஹம் பெற்றவர் மன்னை பாசந்தி. நல்ல ஞானம் நிறைந்தவர். அடக்கம் அமரருள் உய்க்கும் என்பதற்கு நடமாடும் சான்றானவர்.

    மன்னை பாசந்தியின் படைப்புகள் புத்தகங்கள் யாவும் எளிமையும் ஆழமும் பொருந்தியவை. நல்ல விஷய ஞானம் உடையவர். அதை எளிதில் பிறருக்குப் புரிய வைக்கிறார்.

    கோள்கள் ஒன்பது - ராசிகள் பன்னிரெண்டு - நட்சத்திரங்கள் இருபத்தேழு. இவற்றைக் கூட்டினால் நாற்பத்தெட்டு வரும். இதைத்தான் ஒரு மண்டலம் என பரிகார காலமாக ஜோதிடத்தில் சொல்கிறோம்.

    சந்திராயன் ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானி கோள்களுக்கும் நமது ஜோதிடத்திற்கும் தொடர்பு உள்ளதை நம்புவதாக கூறுகிறார். தேவாரத்தில் ஞானசம்பந்தப் பெருமான் கோளறு பதிகம் பாடி நவக்கிரஹகங்களைத் துதிக்கிறார்

    ராசிகள் - நட்சத்திரங்கள் - லக்னங்கள் - மாதங்கள் - நாட்கள் - கிழமைகள் பற்றி கவிதை வடிவில் தருகிறார் மன்னை பாசந்தி. இவருடைய முயற்சி போற்றத்தக்கது. மஹான்களின் கையினால் விருதுகள் வாங்கியிருக்கிறார். வாய் மணக்க சங்கீதம் சாதிக்கிறார். ஒளிவு மறைவில்லாத உண்மையைப் பேசுகிறார்.

    மன்னை பாசந்தியின் படைப்புகள் வாசிக்கத் தக்கவை. போற்றத் தக்கவை. குருவின் ஆசீர்வாதம் இவரை வழி நடத்தும்.

    ஞான மெனும் தேரிலேறி

    நவக்கிரஹ மொழி சொன்னாய்

    கானமெனும் கவி படைத்து

    காலபுருஷ ராசி சொன்னாய்

    வான மெங்கும் நிறைந்துள்ள

    விண்மீனின் ரகசியத்தை

    தானெழுதும் பேறு பெற்ற

    தவப் புதல்வன் வாழியவே!

    வாக்கு சித்தர்

    ஆத்மார்த்த ஜோதிடர்

    டாக்டர் ச.பஞ்சநாதன்

    செல்பேசி : 9444453693

    திதிகள் - பாகம் 1

    1. பிரதமை திதி

    2. துவிதியை திதி

    3. திரிதியை திதி

    4. சதுர்த்தி திதி

    5. பஞ்சமி திதி

    6. சஷ்டி திதி

    7. சப்தமி திதி

    8. அஷ்டமி திதி

    பற்றிய விஷயங்களை நூற்றியெட்டு மூவரி மாலையாகத் தொடுத்துள்ளேன். தொகுத்துள்ளேன்.

    அன்பன் மன்னை பாசந்தி

    என்னுரை

    இலக்கிய மேடைகளிலும் ஆன்மிக விழாக்களிலும் எண் கணிதம் -ராசிகள் - லக்னங்கள் - நட்சத்திரங்கள் - மாதங்கள் - கிழமைகள் -நாட்கள் - திதிகள் பற்றிய பற்பல செய்திகளை சொல்லி கைதட்டல் பெற்றுள்ளேன்

    திதிகளைப் பற்றி பாகம் 1ல் பிரதமை திதி முதல் அஷ்டமி திதி வரை ஒவ்வொன்றுக்கும் 108 மூவரி மாலைகள் தொடுத்துள்ளேன். தொகுத்துள்ளேன்.

    இந்நூலுக்கு அணிந்துரை அளித்த எனது ஆறாவது குரு ஆத்மார்த்த குரு ஜோதிட குரு டாக்டர் ச.பஞ்சநாதன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்

    படிப்பதற்கு சுவாரஸ்யரமாகவும் மிகவும் பிடித்தமாக இருக்கும். வாசகர்கள் படித்து பயனுற வேண்டுகிறேன்.

    இந்நூலை வாங்கிப் படிப்பதோடு மாணவ மாணவியர்களுக்கும் உற்றார் உறவிணர்களுக்கும் நண்பர்களுக்கும் அருகிலுள்ள நூலகத்திற்கும் அன்பளிப்பாகவும் பரிசாகவும் அளித்து மகிழலாம்.

    அன்பன் மன்னை பாசந்தி

    1. பிரதமை திதி

    சந்திரனின் இயக்கத்தை

    அடிப்படையாகக் கொண்டது

    முப்பது திதிகள்

    வளர்பிறை திதிகள் பதினைந்து

    தேய்பிறை திதிகள் பதினைந்து

    திதிகள் மொத்தம் முப்பது

    அமாவாசை அல்லது

    Enjoying the preview?
    Page 1 of 1