Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Hindu Pandigaigalum Samayal Muraigalum!
Hindu Pandigaigalum Samayal Muraigalum!
Hindu Pandigaigalum Samayal Muraigalum!
Ebook115 pages31 minutes

Hindu Pandigaigalum Samayal Muraigalum!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எந்த இந்துப் பண்டிகையாக இருந்தாலும், இறை பூஜையின்போது பூஜிக்க மலர்கள் பெரும் முக்கியத்துவம் போல், தெய்வத்திற்கு நைவைத்தியம் அல்லது படையல் செய்வது நமது முன்னோர்கள் காலத்திலிருந்து இன்று வரை வழிவழியாக தொடர்கிறது.

அகில இந்திய அளவில் தீபாவளி, பொங்கல், ஓணம், ஹோலி, தமிழ், தெலுங்கு வருடப்பிறப்பு, வரலட்சுமி நோன்பு, நவராத்திரி போன்ற பல பண்டிகைகள் நம் மக்களால் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவது போலவே, இந்துமத நம்பிக்கை கொண்ட பலர் வெளிநாடுகளில் வசித்தாலும், அவர்கள் அந்த பண்டிகைகளை மறக்காமல் இன்றும் கொண்டாடி வருகிறார்கள்.

பொதுவாக பண்டிகைகள் நம் மக்களிடையே ஒருமைபாட்டையும், உறவு முறைகளின் இலக்கணத்தையும் வளர்க்க உதவுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இவ்வாறு கொண்டாடப்படும் பண்டிகைகளில் இடம்பெறும் முக்கிய நைவேத்திய அல்லது படையல் உணவு வகைகளை எப்படி தயாரிக்க வேண்டும், எம்முறையில் செய்தால், அவைகளில் ருசியும், மணமும் கூடும் என்பதை எவரும் அறிய முறையில் இந்நூல் அமைந்துள்ளது.

Languageதமிழ்
Release dateSep 9, 2023
ISBN6580167009906
Hindu Pandigaigalum Samayal Muraigalum!

Related to Hindu Pandigaigalum Samayal Muraigalum!

Related ebooks

Reviews for Hindu Pandigaigalum Samayal Muraigalum!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Hindu Pandigaigalum Samayal Muraigalum! - Geetha Subramanian

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இந்துப் பண்டிகைகளும் சமையல் முறைகளும்!

    Hindu Pandigaigalum Samayal Muraigalum!

    Author:

    கீதா சுப்பிரமணியன்

    Geetha Subramanian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/geetha-subramanian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    I. பண்டிகை நாட்கள்

    1. சித்திரைவிஷூ (வருஷப் பிறப்பு)

    2. ஆடிமாதப் பிறப்பு ஆடி

    3. ஆடி 18 - பதினெட்டாம் பெருக்கு

    4. ஆடி வெள்ளி, செவ்வாய்

    5. ஆடிப்பூரம், ஆண்டாள் தேர்

    6. ஆவணி அவிட்டம்

    7. விநாயகர் சதுர்த்தி

    8. ஸ்ரீ ஜெயந்தி - கிருஷ்ணன் பிறப்பு

    9. நவராத்திரி, ஸரஸ்வதி பூஜை

    10. தீபாவளி - நரகாசுரன் ஞாபக தினம்

    11. திருக்கார்த்திகை

    12. மார்கழி மாதம்

    13. தை மாதப் பிறப்பு

    14. மாசி பங்குனி கூடும் வேளை

    15. பங்குனி உத்திரம் - ஸ்ரீ ஆண்டாளுக்கு கல்யாணம்

    II. இதர தினங்களில்

    16. கலந்த சாத வகைகள்

    17. புட்டு

    18. தறிமீது வகைகள்

    19. பொடி வகைகள்

    20. குழம்பு வகைகள்

    21. கூட்டு வகைகள் - பொரிச்ச கூட்டு

    22. மசியல் வகைகள்

    23. ரஸ வகைகள்

    24. தொகையல் வகைகள்

    25. பச்சடி வகைகள்

    26. உப்புமா வகைகள்

    27. கொழுக்கட்டை வகைகள்

    28. களி வகைகள்

    29. இனிப்பு வகைகள்

    30. பட்சண வகைகள்

    III. பண்டிகைக்கான சில துதிகள்

    31. ஸ்ரீ கணேச கவசம்

    32. கந்தர் அனுபூதி

    33. ஸ்ரீ அபிராமி ஸ்தோத்ரம்

    34. ஸ்ரீராஜராஜேச்’வர்யஷ்டகம்

    35. ஸரஸ்வதீ ஸ்தோத்ரம்

    36. வேங்கடேச’ ஸ்தோத்ரம்

    37. ஸ்ரீ ரங்கநாதாஷ்டகம்

    38. லிங்காஷ்டகம்

    39. ஸ்ரீஆண்டாள் அருளிய வாரணமாயிரம்!

    40. நவக்கிரக கோயில்களும் நவக்கிரக ஸ்தோத்திரமும்

    41. நவக்கிரக காயத்திரி மந்திரங்கள்

    42. ஹனுமன் நமஸ்கார

    I. பண்டிகை நாட்கள்

    1. சித்திரைவிஷூ (வருஷப் பிறப்பு)

    காலையில் கனிகாணுதல் நல்லது

    முதல் நாள் இரவு, விளக்கில் குங்குமம் இட்டு, எண்ணைத் திரி போட்டு வைத்து பழங்கள், ஒரு தட்டில் அரிசி, பருப்பு, மஞ்சள், புஷ்பம் வைத்து மற்றொரு தட்டில் ஏதாவது தங்கநகை, நிறைய பணமும், காசும் வைத்து விடிந்ததும் பல்தேய்த்து விளக்கு ஏத்தி குழந்தைகள், மற்றும் பெரியவர்கள் பெருமாளை ஸேவித்து, என்றும் இதுபோல மனம் நிறைந்து சந்தோஷமாக இருக்கணும் என்று பெருமாளை பிரார்த்தித்துக்கொள்ளவும். உள்ளன்புடன் பெருமாள் அனுக்ரஹம் வேணுமென்று பிரார்த்தித்தால் அதன்படியே கிடைக்கும். இது என் அனுபவம்.

    அன்று 5 விதமான சுவையும், அதாவது புளிப்பு, உப்பு, கசப்பு, இனிப்பு, காரம், மாங்காய் பச்சடி பண்ணி, வேப்பம்பூ தாளித்து பண்ணுவது விஷு பண்டிகையின் விசேஷம்.

    வருஷப் பிறப்பு - பண்டிகை நாட்கள்

    1. பருப்பு, கண்ணமுது, பண்ணி பெருமாளுக்கு அபிஷேகம் பண்ணி சாப்பிடுதல்.

    2. ஆடிமாதப் பிறப்பு ஆடி

    பாதாம்கீர்

    1 பிடி அரிசி, 1 பிடி பாதாம் ஊறவைத்து பாதாம் தோல்நீக்கி இரண்டையும் நைஸாக மிக்ஸியில் அரைத்து, 1 டம்ளர் பாலும், 1 டம்ளர் தண்ணீரும் கலந்து கொதிக்க வைத்து சர்க்கரை போட்டு முந்திரி, திராட்சை நெய்யில் வறுத்துப்போட்டு பண்ணவேண்டும்.

    தேங்காய் பாயசம்:

    1 மூடி தேங்காயும், 1 பிடி ஊறிய அரிசியும் மிக்ஸியில் நைசாக அரைத்து தண்ணீரில் கலக்கி கொதிக்க வைத்து, பால்விட்டு ஏலக்காய் பொடி போட்டு, முந்திரி, திராட்சை நெய்யில் பொரித்துப் போட்டு, சர்க்கரை போட்டு கரைந்தபின் இறக்கி வைக்கவும்.

    இதில் ஏதாவது ஒன்று

    வடை, பாக்கித் தளிகை (சமையல்) எல்லாம் இஷ்டப்படி செய்யலாம்.

    3. ஆடி 18 - பதினெட்டாம் பெருக்கு

    ஜூன் 1 ம் தேதி காவேரியில் ஜலம் திறப்பார்கள். ஆகஸ்டில் ஆடி மாதம் வரும். காவேரிக்கு மசக்கை என்று 4 வகை சாதம் கலந்து காவேரி அல்லது ஓடும் நதி ஜலத்தில் கொஞ்சம் மஞ்சள் கரைத்து குங்குமம், வெத்திலை, பாக்கு, புஷ்பம் வைத்து பூப்போட்டு காவேரிக்கு பூஜை பண்ணுவதாக மனதில் நினைத்துக்கொண்டு சாதங்கள் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக் கரைத்து,

    Enjoying the preview?
    Page 1 of 1