Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indhumathi Muthukkal Pathu
Indhumathi Muthukkal Pathu
Indhumathi Muthukkal Pathu
Ebook149 pages57 minutes

Indhumathi Muthukkal Pathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்துமதியின் முத்துக்கள் பத்து என்ற இந்த நூல் இலக்கிய உலகத்தில் ஒரு கல்வெட்டாக இருக்கும். இன்னாத இவ்வாழ்வில் இனியன காண நாம் ஒவ்வொரு நொடியும் பிரயத்தனப்பட்டு முடியாமல் போய்விடுவதன் சாரமாக வாழ்க்கை நம்மைப் பார்த்து எக்காளமிட்டுச் சிரிக்கிறது. அப்படிப்பட்ட தருணங்களை உற்றுநோக்கி அவற்றை விவரிப்புக்களைத் தாண்டிய பிம்பங்களாய் முந்தானையில் முடிந்து வைத்திருக்கும் விஸ்வரூபத்திற்கு சொந்தக்காரராய் இத்தொகுப்பு இந்துமதி அவர்களை வெளிப்படுத்துகிறது. கதைகளின் களங்கள் பரந்து விரிந்த அனுபவத்தின் திரட்சியையும், அதே நேரத்தில் கடற்கரையில் ஒரு கிளிஞ்சலைக் கண்டுவிட்ட குழைந்தையின் மகிழ்ச்சியையும் உள்ளடக்கியதாக வியாபித்திருக்கிறது.

Languageதமிழ்
Release dateOct 7, 2023
ISBN6580123909403
Indhumathi Muthukkal Pathu

Read more from Indhumathi

Related to Indhumathi Muthukkal Pathu

Related ebooks

Reviews for Indhumathi Muthukkal Pathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indhumathi Muthukkal Pathu - Indhumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இந்துமதி முத்துக்கள் பத்து

    (சிறுகதைகள்)

    Indhumathi Muthukkal Pathu

    (Sirukathaigal)

    Author:

    இந்துமதி

    தொகுப்பு: திலகவதி

    Indhumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indhumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அழுத்தமும், ஆழமும்

    1. குருத்து

    2. ஆமை சமூகமும், ஊமை முயல்களும்

    3. நாளை என்பது இன்னொரு நாளே...

    4. எதிர்பார்ப்புகள்...

    5. முகங்கள்

    6. இளைத்தவர்கள்

    7. ஊர்வலம்

    8. ஒரு கடிகாரத்தைச் சுற்றும் கனமான முட்கள்

    9. கரிப்பு

    10. பாலைவனங்களும் ஈச்சமரமும்...

    11. அது ஒரு கனாக்காலம்

    அழுத்தமும், ஆழமும்

    ஒரு நல்ல சிறுகதை நமக்குள் வெகுநேரம் ரீங்காரமிடுகிறது.

    சிறந்த சிறுகதை, முதல் வரிக்கு முன்பே தொடங்கி, கடைசி முற்றுப்புள்ளிக்குப் பின்பும் நீடிக்கிறது.

    மனத்தைப் பிழியும் சோகங்களால், ஈரமான படைப்புகளே இதயத்தில் எப்போதும் நீடித்து இருக்கின்றன.

    இன்னாத இவ்வாழ்வில் இனியன காண, நாம் ஒவ்வொரு நொடியும் பிரயத்தனப்பட்டு முடியாமல் போய்விடுவதன் சாரமாக வாழ்க்கை நம்மைப் பார்த்து எக்காளமிட்டுச் சிரிக்கிறது.

    அப்படிப்பட்ட தருணங்களை உற்றுநோக்கி, அவற்றை விவரிப்புக்களைத் தாண்டிய பிம்பங்களாய் முந்தானையில் முடிந்து வைத்திருக்கும் விஸ்வரூபத்திற்கு சொந்தக்காரராய் இத்தொகுப்பு இந்துமதி அவர்களை வெளிப்படுத்துகிறது.

    கதைகளின் களங்கள் பரந்து விரிந்த அனுபவத்தின் திரட்சியையும், அதே நேரத்தில் கடற்கரையில் ஒரு கிளிஞ்சலைக் கண்டுவிட்ட குழந்தையின் மகிழ்ச்சியையும் உள்ளடக்கியதாக வியாபித்திருக்கிறது.

    கதைகளையும், புதினங்களையும் வாசிப்பது நம்மை இன்னும் மேன்மையானவராகவும், நம் வாழ்க்கை எவ்வளவோ சௌகரியமானது என்ற எண்ணம் கொண்டவராகவும் மாற்றவல்லது.

    அவருடைய ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ புதினத்தைக் கல்லூரியிலிருந்த காலத்தில் படித்தேன். அதன் தாக்கம் இன்றும் கால்களை என்னைத் தூய்மையாக வைத்திருக்கப் பழக்கியிருக்கிறது.

    இந்தத் தொகுப்பில் ஒட்டுமொத்த வன்மமும் வெளிப்பட மானுடம் ஒரு அவகாசத்திற்குக் காத்திருக்கிறது என்பதை உணர்த்தும் ‘குருத்து’ என்ற கதை வெகுநேரம் நெஞ்சை அமுக்குகிறது. குஷ்வந்த் சிங்கின் ‘டெல்லி’ நாவலின் இறுதிக் காட்சி நினைவுக்கு வருகிறது. அப்பாவிகளின்மீது நாம் காட்டும் குரோதத்திற்குக் காரணங்களே இல்லை. நாம் கடைவாயில் தேக்கி வைத்திருக்கும் வெறுப்பை உமிழத் தருணம் பார்த்துக் காத்திருக்கிறோம். சில நேரங்களில் இளகிய மனம் படைத்தவர்களும், கையைப் பிசைந்து கொண்டு தம்மை மற்றும் காப்பாற்றிக்கொள்ள யத்தனிக்கிறார்கள். ஆனால், வாழ்நாள் முழுவதும் கேமோவின் ‘ஃபால்’ போல அது குற்ற உணர்வை ஏற்படுத்தாதா! நாம் எத்தனை முறை இப்படிப்பட்ட நிகழ்வுகளைத் தாண்டிப் பயணப்பட்டிருக்கிறோம். வெகுநேரம் நான் யோசித்துக்கொண்டே இருக்க நேர்ந்தது.

    ஏழைப் பெண்ணொருத்தி மருத்துவரிடம் செல்லும் இடத்தில் சந்திக்கும் புறக்கணிப்பை, இன்றைய சமூகம் வென்றுவிட்டது என்று மகிழ்ச்சி கொள்ளலாம். சில கதைகளை காலம் வென்றெடுப்பதும், அந்தப் படைப்புக்கான வெற்றியே! அதைப் போலவே வேலைக்காரர்களின் துயரமும் இன்றைய சமூக மாற்றங்களிலும், பொருளாதார வளர்ச்சியிலும் பெருமளவு குறைந்திருக்கிறது என்பதை இக்கதை எழுதப்பட்ட காலத்திற்கும், இன்றைய சூழலுக்குமான வளர்ச்சியாக நாம் பார்க்கலாம்.

    திருமணம் அறிவுத்தேடல் மிகுந்த பெண்களையும், எப்படி சாமானியமானவர்களாக மாற்றி விடுகிறது என்பதை ‘நாளை என்பது இன்னொரு நாளே’ என்ற கதை பேசுகிறது. படிப்பு, ஆர்வம், இலக்கு ஆகிய அனைத்தையுமே குழந்தை வளர்ப்பு என்ற ஒற்றைச் செயலில் தொலைத்து மீளப்பெற முடியாமலேயே போய்விடுகிற பல அறிவு ஜீவிகளை நானறிவேன்.

    பணமுடையில் இருக்கும் ஒருவன் கடன் வாங்கியவரின் மரணத்தின்போது அழக்கூட முடியாமல் சொந்த சோகத்தில் கரைந்து போவதையும், அப்பணத்தில் கொஞ்சம் மகன் மூலம் திரும்பக் கிடைத்ததும், உடைந்துபோய் அழுகிற கணேசனின் பாத்திரம் அழுத்தமானது. மிகவும் நுட்பமான படைப்பு. மனிதத்தை சுயநலம் தள்ளிப்போடும் உண்மை நம்மைச் சுடுகிறது.

    கோபத்தை திசை திருப்பி வெளியிடுவது பற்றிய மன இயல் ரீதியான கதை ‘இளைத்தவர்கள்’. அரசியல் ரீதியாக நடத்தப்படுகிற ஊர்வலங்கள் சிலருக்கு எப்படிப்பட்ட இன்னல்களை இழைக்கும் என்பதை உணர்த்தும் கதை ‘ஊர்வலம்’

    இந்தத் தொகுப்பில் நான் மிகவும் நேசித்த கதைகள் ‘முகங்கள்’ என்பதும் ‘கரிப்பு’ என்பதுமான இரண்டு மகத்தான படைப்புகள். கால்கள் மூலமே மனிதர்களைப் புரிந்துகொண்டு, பணமிருந்தாலும் செருப்புக்கடை வைத்துப் பார்த்துக்கொண்டு மகிழும் கக்கதண்டங்களை உபயோகிக்கும் ஒரு பெண். அவளுடைய உணர்வுகளைப் படம் பிடிக்கும் கதை. இறுதியில் அவளுடைய இயல்பை வெளிப்படுத்தும்போது மனத்தில் கருணையும், வருத்தமும் பொங்கிப் பிரவாகமெடுக்கிறது. ‘அவளுக்குக் கால்கள்தான் முகம். பாதங்கள்தான் முகம்’ என்ற முடிப்புடன் நீளும் அக்கதை, ஆழமான உள்ளுணர்வின் வெளிப்பாடு. கால்களற்றவன் ஏக்கத்துடன் அத்தனைக் கால்களையும் பார்ப்பதும், அவற்றுக்கு செருப்பு சேர்க்க விரும்புவதும் உயர்ந்த வெளிப்பாடுடைய இதயத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

    மிகவும் பொருட்செலவில் எழுப்பப்பட்ட பல கோயில்களின் இன்றைய நிலைமையும், அவற்றை பூசனை செய்து பாதுகாக்கும் மனிதர்களின் வறுமையும் வெளிப்படும் கதை கரிப்பு. கண்ணீர் உப்புக் கரிக்கத்தானே செய்யும். வீட்டுக்கு வந்தவர்கள் மிச்சம் வைத்த உப்புமாவை விரும்பித் தரும் பட்டரின் மனைவியும், அவற்றிற்காகப் போட்டி போட்டு கையேந்தும் குழந்தைகளின் பரிதாபமும், நம் ஒட்டுமொத்த ஆன்மீக உணர்வையே மறுதரிசனம் செய்ய வைக்கிறது.

    இந்துமதி அவர்களின் இக்கதைகள் வெறும் கற்பனையானவையல்ல. இவற்றில் தெறிக்கும் உண்மையும், சோகமும் அவர் பார்த்தவற்றின் சாரம் என்பதும், அவற்றை சிறிதும் மிகையின்றி மெருகேற்றித் தந்திருக்கும் அவரது கலை வெளிப்பாடு என்பதும் நம்மை சிலிர்க்க வைக்கிறது. வெகுநேரம் நாம் வாழும் வாழ்க்கைக்காக இயற்கைக்கு நன்றி சொல்ல வைக்கிறது.

    வெ. இறையன்பு

    1. குருத்து

    அம்மா மீண்டும் வேலைக்குப் போக ஆரம்பித்ததில், பல்பீருக்கு நிறைய சங்கடங்கள் இருந்தன. அம்மா வேலைக்குப் போவதை நிறுத்தின முதல் மூன்று மாதங்களும், அடுத்து ஆஸ்பத்திரிக்குப் போய் இருந்த பத்து நாட்களும், தம்பிப் பாப்பாவோடு திரும்பி வந்து, வீட்டில் இருந்த இந்த இரண்டு மாதங்களும் பல்பீர் மிகுந்த சந்தோஷத்தோடு காணப்பட்டான்.

    முகம் ஆரோக்கியமாக இருந்தது. அதற்குக் காரணம் வீட்டுப் பொறுப்பில் நிறையக் குறைந்தன. சில்லறை சில்லறையாகச் செய்யும் வேலைகள் குறைந்தன. முக்கியமாய்ச் சாயந்தர நேரங்களில் விளையாடப் போக முடிந்தது. சுவர்களில் கரிக்கோடால் ஸ்டம்புகள் கீறி, ரப்பர் பந்து கிரிக்கெட் விளையாட முடிந்தது. தினமும் அதிக ரன் எடுப்பவன் பல்பீர்தான்.

    அம்மா அலுவலகத்திற்குப் போக ஆரம்பித்துவிட்டால், தினம் அவனால் விளையாடப் போக முடியாது. அம்மா அலுவலகத்திலிருந்து களைத்துப் போய் வருவாள். அதற்குள் இரவுக்குச் சப்பாத்தியும், சப்ஜியும் பண்ணி வைத்துவிடுவான். இல்லாவிட்டால், அம்மா ஏழு மணிக்கு மேல் வந்து சிரமப்பட நேரிடும்.

    அம்மா வீட்டில் இருந்தால் இவனுக்குக் கவலை இல்லை. அப்போது வெறும் வீட்டு வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும். அதில் இவனுக்குக் கஷ்டம் ஒன்றும் இல்லை. அலுவலகத்திற்குப் போய், வீட்டிலும் வேலை செய்ய நேர்ந்தால்தான் இவனுக்குக் கஷ்டமாக இருக்கிறது. ‘பாவம் அம்மா’ என்று தோன்றுகிறது. கூட உதவி செய்யாவிடில், குற்ற உணர்ச்சி குறுகுறுக்கிறது.

    அம்மா அலுவலகத்திற்குப் போகிற சந்தர்ப்பங்களில் இவனும் அதிகாலையில் அம்மாவுடனேயே எழுந்திருக்க வேண்டும். அந்த டில்லிக் குளிருக்குக் கைகால்கள் விறைத்துப் போகும். உடம்பு முழுவதும் கம்பளியால் இறுக மூடியிருந்தாலும் கைவிரல்கள் கெட்டிக்கும், உதடுகள் வெடித்துக் காது மடல்கள் ஐஸ் கட்டி ஆகும். ஆனாலும், இவன் அம்மாவுடன் எழுந்திருப்பதை நிறுத்தமாட்டான். அவளுக்கு உதவுவதைத் தவிர்க்கமாட்டான். காலையில் எழுந்ததும், முதல் வேலையாகக் குளியல் அறையிலிருந்து பிளாஸ்டிக் வாளிகளில் தண்ணீர் கொண்டுவந்து வைப்பான். ஒரு பெரிய மரப் பீப்பாய் நிறையத் தண்ணீர் நிரப்புவான். அதற்குள் அம்மா டீ போட்டுத் தருவாள். அதை அம்மாவும், அவனுமாக அந்தச் சின்ன சமையலறைக்குள்ளேயே உட்கார்ந்து சுவைத்துக் குடிப்பார்கள்.

    ஒரு வருடத்திற்கு முன்பு வரை அப்பா இருந்தபோது, மூன்று பேருமாக உட்கார்ந்து தேனீர் அருந்துவார்கள். தேனீர் அருந்தின பின் அப்பா செல்லமாக அணைத்து முத்தமிட்டு, பல்பீர் பேட்டா, தூ ஸோஜாவ்... என்று சொல்லி அவனை மீண்டும் படுக்க வைத்து ரஜாயி போர்த்துத் தூங்க வைப்பார். அவர் அம்மாவிற்கு உதவியாகத் தண்ணீர் பிடிப்பது,

    Enjoying the preview?
    Page 1 of 1