Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nesangaludan
Nesangaludan
Nesangaludan
Ebook163 pages57 minutes

Nesangaludan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.

டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.

குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.

திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124003221
Nesangaludan

Read more from Kulashekar T

Related authors

Related to Nesangaludan

Related ebooks

Reviews for Nesangaludan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nesangaludan - Kulashekar T

    http://www.pustaka.co.in

    நேசங்களுடன்

    Nesangaludan

    Author:

    தி. குலசேகர்

    T. Kulashekar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kulashekar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பூவதம்

    2. பெண்கோலம்

    3. ஈசல்

    4. அணுகுமுறை

    5. நேசங்களுடன்

    6. ஈரம்

    7. பயணம்

    8. டெலிஃபோன்

    9. அவன் ஏன் அழுதான்?

    10. ஓ... பெண்ணே!

    11. பிரிக்க முடியாத துருவங்கள்

    12. கற்பு

    13. பார்வைகள்

    அறிமுகம்

    ஒரு எழுத்தாளனுக்குச் சுற்றிலும் நிகழும் எந்த ஒரு சிறு சம்பவத்தையும் அனுபவித்து நோக்கும் பார்வை இருக்கும். இருந்தாகவேண்டும். மற்றவர்களின் பார்வையினின்றும் அது வேறுபட்டிருக்கும். அந்த வித்தியாசமான பார்வை குலசேகரிடம் நிறையவே உள்ளது.

    நம் வீடுகளில் தினமுந்தான் சிற்றெறும்புகளைப் பார்க்கிறோம். அதை நாம் பொருட்படுத்துவதில்லை. அற்பமாக எண்ணுகிறோம். நேசங்களுடன் கதையில் வருகிற ரவி கன்னத்தில் கைவைத்துச் சிற்றெறும்புக் கூட்டத்தை ரசிக்கிறான். பக்தர்கள் சிரத்தையோடு தேர் இழுத்துச் செல்கிற மாதிரி அலுங்காமல் பிஸ்கட் துண்டை நகர்த்தின என்கிறார் குலசேகர். 'ஹோலி முபாரக் ஹோ' என்று அறைக்கதவைத் தட்டி வண்ணங்களைப் பூசிவிட்டுப் போகிறார்கள்—அப்போதும் கூட பிஸ்கட்டைத் திருப்பத்திற்கு இட்டுச் செல்லும் எறும்புக்கூட்டம் தான் அவன் கவனத்தில் இருக்கிறது என்கிறார். அதைக் கண்டு வியக்கிறோம்.

    இந்திய நாட்டின் பல மாநிலங்களுக்கிடையிலான கலாச்சாரப் பரிவர்த்தனையை நடைமுறைப்படுத்துபவர்கள் எழுத்தாளர்களே. அந்தந்த மாநிலங்களில் நிலவி வரும் வாழ்க்கை நிலைகளை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துபவர்கள் அவர்களே. இந்தத் தொகுப்பில் பூவதம் இராஜஸ்தானையும் நேசங்களுடன் மராட்டியத்தையும் டெலிஃபோன் ஒரிசாவையும் அப்படி நிறுத்தும் கதைகள். பூவதம் கதையில்,

    ஷேக்கர்... இதுக்குப் பேருதான் சந்தோஷமா? இத்தனை துடிப்பும் சிலிர்ப்பும் கொண்டதா வாழ்க்கை...

    என்று அந்த ராஜஸ்தானத்து ரூபா சொல்வதைப் படிக்கிறபொழுது வைதவ்யத்தின் கொடுமை எந்த அளவு அந்த அபலையைப் பாதித்திருக்கிறது என்பதை இரண்டே வரிகளில் உணர்த்தி விடுகிறார் குலசேகர். சதையும் எலும்புமாக வாழ்ந்த ரூப்கன்வர் பற்றிச் செய்தி ஏடுகளில் வந்தவை நினைவு படுத்தினாலும் அந்தச் செய்தி ஏடுகள் சொல்லாத ரூபாவின் உள்மன யாத்திரையை நம்மைக் காணவைக்கிறது, இந்தக்கதை.

    கணவன் மரித்தபின் மனைவி பொட்டழித்து, பூ விழந்து காட்சி தரும் கோலம் எத்தனை காலம் நீடிக்க முடியும்? அலுவலகத்தில் வேலைக்குச் செல்கிற பெண் தலைனய மழுங்கச் சிதைத்து, வெள்ளைச் சேலை அணிந்து செல்ல முடியுமா? இதைத்தானே பெண்கோலம் கதையில் வருகிற மருமகள் கேட்கிறாள். ஆனால் மிகவும் எரிச்சல் அடைகிறார் மாமியார். அந்த மாமியாருக்கே ஒரு நாள் சமூகம் அந்தக் கொடுமையை இழைக்கிறபோது மாமியாரே விதவை மருமகளுக்குப் பூவாங்கிவரும் புதிய சரித்திரம் சாத்தியமாகிறது. விதவையாய் இருந்தாலும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த இராணி மங்கம்மாள் சர்வாலங்காரம் பூண்டுகொண்டிருந்தாள் என்பது தானே வரலாறு. இப்படிப்பட்ட கதைகள் வரலாற்றின் நல்ல எடுத்துக்காட்டுகளை சமூகத்திற்குப் புரியவைக்கக் கூடியவை.

    பயணம் கதை நாயகன் கெளதம் புகைபிடித்தல் ஒழிப்பு இயக்கம் நடத்தியதால் சிறைக்குள் தள்ளப்படுகிறான். கைதி ஒருவன் என்ன பண்ணிட்டு உள்ள வந்தீங்க? என்கிறான். கெளதம் அவன் அருகில் சென்றமர்ந்து நிதானத்தோடு சுந்தர்லால் பகுகுணா தெரியுமா? என்று ஆரம்பிக்கிறான் என்று கதை முடிகிறபோது, அந்தப்பயணம் முடியவில்லை. தொடர்கிறது என உணர்த்தி விடுகிறார் ஆசிரியர். ஏனெனில் காடுகளில் மரங்கள் வெட்டப்படுவதில் கீழேயிருந்து மேலே வரை சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் எனும்போது அந்த இயக்கம் நெடிய பயணமாகத்தானே இருக்க முடியும்?.

    படிக்கின்ற வாசகனிடம் சமூகப் பிரக்ஞை ஏற்படுத்தக் கூடிய கதைகள் இவை. இலக்கியம் என்றால் அதற்கொரு அர்த்தமும் நோக்கமும் இருக்க வேண்டுமென்பார் தகழி சிவசங்கரன் பிள்ளை. அந்த அர்த்தத்தையும் நோக்கத்தையும் இந்தப் படைப்பில் நீங்கள் காண முடியும்.

    கவிஞர் மீரா

    வரவேற்புரை

    நிஜங்களைப்பார்க்கக்கூசுகிற இன்றைய சமூகச்சூழலில் உண்மை பிறழாமல் உணர்விற்கு ஓரவஞ்சனையின்றி எழுதுவதற்கே ஒரு மனோவலிமை வேண்டியிருக்கிறது. ஆகவே மனதில் நிஜமென்றுபடுகிற உணர்வுகளை மடங்காமல் எழுத்தாக்குகிறோம் என்கிற வரை மகிழ்ச்சியே.

    இன்றைய வாசகர்கள் எழுத்தாளனுக்கும் ஒருபடி மேலே சென்று படைப்பைப் பல பரிமாணங்களில் சிந்தித்துப் பார்க்கிற தன்மை பெற்றிருக்கிறார்கள். சமூக விழிப்புணர்வில் சிரத்தை கொண்டும், கலைநயத்தோடும் எளிமையோடும் எழுதப்படுகிற படைப்பானது பரவலான வாசகர் மனதில் நிச்சயம் இடம் பிடிக்கும் என்பது என் நம்பிக்கை.

    பெண்கள் தைரியமாக சுதந்திரத்தை ஏற்றுக் கொண்டாக வேண்டிய காலமிது. அறியாமை அகழியிலிருந்து அப்போது தான் விமோசனம். சுதந்திரம் ஏற்பதென்பது கொஞ்சம் கஷ்டமான வேலையென்று தான் சொல்ல வேண்டும். காரணம் இதில் அடுத்த வரைச்சார்ந்திருந்து காலத்தைக்கடத்தாமல் சுயமாய்ச் சிந்தித்து செயலாற்றியாக வேண்டும். படிப்பு, உத்தியோகம் ஆகிய அனைத்து விஷயங்களிலும் ஆண்களைப்போல் போட்டி போட்டு ஜெயித்தாக வேண்டும். வெற்றியடைந்தால் தான் இங்கு மதிப்பு.

    ஒரு சிலர் நினைப்பதுபோல் நவநாகரிக அலங்கரிப்பு மட்டுமே அதன் நோக்கு அல்ல. பலாத்காரம் பண்ணப்பட்ட பெண்ணாய் 'சுதந்திரம்' இன்னும் பெருவாரியாய் ஏற்றுக் கொள்ளப்படாமலே இருக்கிறது.

    ஆண்-பெண் பரஸ்பர நட்புறவென்பது செக்ஸ் சுதந்திரத்தை அடிகோலுவதல்ல, சமூகப் பொறுப்புணர்வும் சுயகட்டுப்பாடும் இருகண்களாய் இருக்கிறபட்சம் ஆண்-பெண் பரஸ்பர நட்பென்பது இயல்பாய் அனுமதிக்கப்பட வேண்டியதில்லையா? ஒருவருக்கொருவர் அனுபவங்களை, உணர்ந்தவைகளை, கேள்விகளை, வரம்புகள் உணர்ந்து பரஸ்பரம் கருத்துப் பரிமாறிக் கொள்ளுதல் என்பது அவசியமில்லையா? ஆரம்பத்தடுமாற்றங்களில் மிரண்டு போனால் வெற்றியின் போராட்டம் மறுதலித்துப் போகாதா? உள்ளது உள்ளபடி யதார்த்த உணர்வுகளை அறிந்து கொள்கிறதினாலும், தேவையில்லாத கற்பனைகளுக்கு இடம் வைக்காததினாலும், தெளிந்த நீரோடையாய் உள்ளத்தில் வக்கிர உணர்வுகள் தேங்க அனுமதிக்காததினாலும் மனோதிடம் வலிமை கொள்ள வழியமைக்கிறதில்லையா? மனதில் அதனால் பொறுப்புணர்ச்சி அதிகரிக்குமே... அது ஆரோக்யமானதில்லையா?

    சந்தர்ப்பம், சூழ்நிலை, யதார்த்தப் பார்வையின்றியிருக்கிற சில சித்தாந்தங்களின் மிதமிஞ்சிய இறுக்கம் போன்ற மனித நிலைபாடுகளை நிர்மாணிக்கிற காரணிகளைக் கடந்து பார்க்கையில் உலகிலுள்ள அத்தனை மனிதர்களும் நல்லவர்களே. ஒரு நபருக்கு கண் எதிரே விபத்தொன்று நிகழ்கிறது... எல்லோரும் பதைத்துப்போய் உதவுகிறோம். விபத்துக்குள்ளானவருக்கு பிடிக்காத ஒருவரும் அந்த இடத்தில் இருக்கிறார். விபத்தைக் கண்ணுற்ற ‘அந்த நொடியில்' அவர் மனதும் பதைத்துப்போகிறது. அதுதான் மனிதநேயம். எங்கும் விரவியிருக்கிற நித்யம். யதார்த்தத்தில் யாரும் ஹீரோவுமில்லை. வில்லனுமில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப எல்லோரிலும் எல்லாம் கலந்தே வெளிப்படுகிறது.

    நிஜத்தை நேசிப்பவர்கள் ஒரு வகையில் தனிமைப் படுத்தப்படுவார்கள் என்பது கசப்பான நிஜம். பாரதியின் தாகத்தை செல்லம்மாக்களினால் அப்போது உணர முடியவில்லை. அதனால்தான் புரட்சிக்கவியின் தர்மபத்தினி கூட பாரதி இறந்ததும் தலைமழித்துக் கொண்டார். உண்மை எப்போதுமே கொஞ்சம் தாமதமாகத்தானே எடுபடும். ஆனால் எடுபடும்.

    சமூகம் யாரையும் சட்டை செய்யாமல் தன்னிச்சையாய் தன்னில் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு தான் வந்திருக்கிறது. அதன் பின்னணியில் சமூக பிரக்ஞையுள்ள, சித்தம் விழித்துக்கொண்ட நல்ல இதயங்கள் பல அஸ்திவாரங்களாய்ப் புதைபட்டிருக்கின்றன. எனினும் மனிதநேயம் மென்மேலும் ஜீவன் கொள்ள மீண்டும் உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவைகள் அவைகள். இதற்கான வலிகளைத் தாங்கிக்கொள்வதென்பது சிரமமா? பிரசவ வேதனைக்கு ஒப்பான அந்த வலியை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்... அது சுகம் என்பது... பொதுமை பூசப்பட்ட நோக்கு அதில் குழுமியிருப்பதால். பின் விதியென்று ஒன்று உண்டா? ஆம். உண்டு. அது மனிதர்களால் அமைக்கப்பட்ட சமூக விதி. மாறுதலை கருக்கொண்டிருக்கிற விதி. அதனால் தான் பாரதி அழைக்கிறான் 'இனியொரு விதி செய்வோம்' என்று.

    நேசங்களுடன்,

    டி.குலசேகர்.

    1

    பூவதம்

    ராஜஸ்தான் போனதும் சாகப்போகிறேன் என்கிற விஷயம் கனவிலும் நினையாத ஒன்று.

    வேலைக்காக அழைப்பைப் பார்த்ததும்மனதில் அப்படியொரு குதியாட்டம்... நடக்கப்போவதறியாமல்.

    பிழைப்பதற்காக போன இடத்தில் இங்கு அரைகுறையாய்க் கற்றுவைத்திருந்த ஹிந்தி அற்புதமாய்க் கை கொடுத்தது. பெரும்பாலும் ராஜஸ்தானியில் பேசினார்கள். பரவலாக ஓரளவு ஹிந்தியும் தெரிந்திருந்ததில் சமாளிக்கமுடிந்தது.

    ராஜஸ்தான் சிலிண்டர்ஸ் அண்ட் கன்டெய்னர்ஸ் லிமிடெடில் மெக்கானிகல் டெக்னிஷியன். சம்பளம் இரண்டாயிரம் என்றதும் பறந்து வந்துவிட்டேன்.

    கம்பெனி இருந்தது கிழக்கு ராஜஸ்தானில் பிவாரிக்கு அருகில், ஒருமணிநேரப் பயணம். பிவாரி டவுனா கிராமமா என்று தீர்மானிப்பது சற்று

    Enjoying the preview?
    Page 1 of 1