Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bigg Boss 2 Aishwarya Enum Kuzhanthai Manathin Agavulagam
Bigg Boss 2 Aishwarya Enum Kuzhanthai Manathin Agavulagam
Bigg Boss 2 Aishwarya Enum Kuzhanthai Manathin Agavulagam
Ebook564 pages3 hours

Bigg Boss 2 Aishwarya Enum Kuzhanthai Manathin Agavulagam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.

டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.

குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.

திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124003652
Bigg Boss 2 Aishwarya Enum Kuzhanthai Manathin Agavulagam

Read more from Kulashekar T

Related authors

Related to Bigg Boss 2 Aishwarya Enum Kuzhanthai Manathin Agavulagam

Related ebooks

Reviews for Bigg Boss 2 Aishwarya Enum Kuzhanthai Manathin Agavulagam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bigg Boss 2 Aishwarya Enum Kuzhanthai Manathin Agavulagam - Kulashekar T

    http://www.pustaka.co.in

    பிக்பாஸ் 2

    ஐஸ்வர்யா எனும் குழந்தை மனதின் அகவுலகம்

    Bigg Boss 2

    Aishwarya Enum Kuzhanthai Manathin Agavulagam

    Author:

    குலசேகர். தி

    Kulashekar T

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kulashekar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    எபிசோட் 1

    எபிசோட் 2

    எபிசோட் 3

    எபிசோட் 4

    எபிசோட் 5

    எபிசோட் 6

    எபிசோட் 7

    எபிசோட் 8

    எபிசோட் 9

    எபிசோட் 10

    எபிசோட் 11

    எபிசோட் 12

    எபிசோட் 13

    எபிசோட் 1

    அறிமுகப் படலம்.

    பிக்பாஸ் - 1 சமயத்தில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக ராஜ்மோகன் பதிப்பகத்தில் வெளிவந்தது. அந்த நூலுக்கு நல்ல வரவேற்பும் தோழமைகளும், மக்களும் அளித்ததில் மகிழ்ச்சி.

    அதில் உள்ள சூழலை பின்புலமாக கொண்டு உலகவியல் பார்வையாக விரித்து மனோதத்துவரீதியாக பொருத்தமான சின்னச்சின்ன கதைகளையும் வழி நெடுக இணைத்து உருவாக்கிய முகநூல் பதிவுகள் ஒரு நூலாக உருவெடுக்கும் என அப்போது நினைத்திருக்கவில்லை. தோழமைகள் தந்த ஆதரவே பின்னர் அவை தொகுக்கப்பட்டு, நூலாக வந்ததற்கு காரணம்.

    பிக்பாஸ்-2 பொறுத்தமட்டில் இதுவரையிலான நிகழ்வில் மனிதத்தின் மனதிற்கு நெருக்கமாக தோன்றுகிறவர்கள் ஐஸ்வர்யா, யாசிகா, டேனி, ரித்விகா மற்றும் மகத்.

    அதற்கு அடுத்த வரிசையில் இருப்பவர்கள் சாரிக், மும்தாஜ் மற்றும் ரம்யா.

    தரமற்ற நிலைபாடுகளின் விளிம்பில் நிற்கிறவர்கள் என்றால் அதில் முதலிரண்டு இடங்களை இப்போதைய நிலையில் பொண்ணம்பலம், பாலாஜி பிடிக்கிறார்கள்.

    பொண்ணம்பலம் தன்னின் பழமையோடிப் போன ஆணாதிக்க எண்ணங்கள் இந்த வளர்நிலை சமூகத்தையும், அதன் மகிழ்வையும் நொடியில் பின்தள்ளக்கூடிய மூர்க்கம் கொண்டவை.

    இந்த ஜன சமூகத்தின் சிறிய அடையாளமாகிற குடும்பம் என்று சொல்கிறதை விட குழுவிற்குள் பின்னடைவை தருகிறதாகவும், வடுவோடான காயத்தை ஏற்படுத்துகிறதாகவும் அவரின் செயல்பாடுகள் இருக்கின்றன.

    அவர் ஐஸ்வர்யாவையும், யாசிகாவையும் நோக்கி, தங்களின் தேவைக்காக எதையும் இழக்கத் தயங்காதவர்கள் என்கிற ரகத்திலான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கவை. அதை பிக்பாஸோ, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கமலோ கூட செய்திருக்க வேண்டும். பொண்ணம்பலம் அவர்களை பற்றி அப்படி பேசியது அப்பட்டமாக அவர்களின் உணர்வுகளின் சுதந்திரத்திற்குள் மூக்கை நுழைக்கிற செயல். அது வார்த்தைகளின் வன்முறை. உள்ளே ஒளிந்திருக்கும் அடக்குமுறையின் மூகமூடி. நார்நாராக கிழித்தெறியப்பட்டாக வேண்டிய முகமூடி அது. பெண்ணியம், ஆணியம் தான்டிய மனிதயியம் காக்க வேண்டுமானால் அந்த முகமூடியை துவம்சம் செய்கிற அஸ்திரம் கையில் எடுத்தே ஆக வேண்டும்.

    ஆனால், அந்த அறச்சீற்றத்தை மூன்றாவது வாரத்தில் வெளியேறிய அனந்த் வைத்தியநாதன் செய்திருக்கிறார். இப்போதையே உண்மையான பிக்பாஸாக இந்த அணுகுமுறையின் மூலம் அவர் உயர்ந்திருக்கிறார். பெண்மை போற்றும் தொன்மை சமூகமான தமிழ் சமூகத்தில் தாய்மையை, பெண்மையை இத்தனை இழிவாக கூசாமல் பேசுகிற பெண்ணடிமைத்தனத்தை அடிகோலுகிற ஆணாதிக்க மனோநிலையை அத்தனை எளிதில் கடந்து சென்றுவிட முடியாது.

    பொண்ணம்பலத்தை அனந்த் தனக்கு கிடைத்த சக்தியை பயன்படுத்தி சிறையில் ஒரு நாள் போட வைத்தபோது, அனைவரும் கைதட்டுகிறார்கள்.

    அதன் பின்புலத்தை சரியாக உள்வாங்கிக்கொள்ளாத கமல், கூடுதல் நேரம் வாங்கிக்கொண்டு வந்து பொண்ணம்பலத்தின் பக்கம் மென்மையான பார்வை கொண்டு பேசவும், உடனே எங்கே பிக்பாஸ் தங்களுக்கு எதிரான நிலைபாடு எடுத்து விடுவார்களோ என தங்களின் சுயத்தை தள்ளி வைத்துவிட்டு, அனைவரும் செய்கிற நடிப்பு தொழிலை கையில் எடுத்துக்கொண்டு விட்டார்கள்.

    பொண்ணம்பலம் பேசியது தவறு தான் என்றாலும், சிறைச்சாலைக்குள் செல்கிற அளவிற்கு அது மோசமான தவறு அல்ல என்று நொடியில் பிளேட்டை திருப்பி போட்டு, விதிகளை மீறி ரகளையிலும் ஈடுபடத் துவங்கி பொண்ணம்பலத்தின் மீதுள்ள தங்களின் விசுவாசத்தை காட்ட, தர்ணாவில் இறங்குகிற அளவிற்கு சென்றுவிட்டார்கள்.

    அப்போது தான் ஒரு கருப்பு ரோஜாவோ, சிகப்பு ரோஜாவோ தன்னுடைய குழு அங்கத்தினர் களிடமிருந்து வாங்கியிராத ரித்விகா களத்தில் இறங்கி நிலைமையை நாடக தளத்தில் இருநது யதார்த்த தளத்திற்கு கொண்டு வந்து விட்டவர். ரித்விகா எந்த வண்ண ரோஜாவும் வாங்காமலிருந்தது ஒரு வகையில் அவரின் நடுவுநிலைமை மனநிலையின் வெளிப்பாட்டை குறிக்கிற குறியீடாக பார்க்கலாம். உள்ளே வந்த ரித்விகா, பிக்பாஸ் தந்த தண்டனையை ஒரு நாளும் திரும்பப் பெற்றதில்லை. அதனால் பொண்ணம் பலத்தை சிறையில் அடைப்போம். ஒருவர் மாற்றி ஒருவர் என விழித்திருந்து அவருக்கு தேவைப் படுகிற உதவியை செய்யலாம். நாளை பிக்பாஸிடம் அவரின் உடல்நிலை கருதி அவரை விரைந்து விடுதலை செய்வது குறித்து விண்ணப்பம் வைக்கலாம் என ஒரு அதட்டு போடவும் தான் அத்தனை நாடக இரைச்சல்களும் அடக்கியது.

    ஜனனியிடம் தான் செய்வது தான் சரி என்கிற போக்கு இருக்கிறது. மக்கள் அவரை இதுவரை யிலான குழு தலைமைகளில் மிக மோசமான தலைமை என்று தேர்ந்தெடுத்ததும் அதிர்ந்துபோய் விட்டார். அவருக்கு இப்போதும் அதற்கான காரணம் புரியத்தான் இல்லை. குரலை தாழ்த்தி பேசினால் நாகரீகமாக நடந்து கொள்வதாக காட்டிக் கொள்ளலாம். அதற்கு அப்படியான எந்தவொரு அர்த்தமும் இல்லை என்பதே உண்மை. மேலும் அவரிடம் கோபம் முணுக்முணுக்கென எட்டிப்பார்த்துவிடுகிறது.

    கிளாமரான உடல்வாகு இல்லாத இவரே பல சமயங்களில் கிளாமராக தான் உடை உடுத்துகிறார். உடை அவரவர்களின் விருப்பம். அது அவரவர்களின் சுதந்திரம். அதை விமர்சிக்க எவரும் உரிமை இல்லை என்பதே நியதி. இருந்தாலும், அப்படியான ஜனனி துவக்கத்திலேயே ஐஸ்வர்யா கலகலப்பாக இருக்கிறது பொறுக்கமுடியாமல் அவரின் உடையை இன்னும் கொஞ்சம் டீசன்டாக தேர்ந்தெடுத்து போடும்படி பழம் பாட்டியாகி சாத்தான் வேதம் ஓதுகிற வேலை செய்து, ஐஸ்வர்யாவின் மனநிலையில் கல் எறிந்ததோடு, தன் மனதின் அழுக்கையும் அம்மணமாக்கிக் காட்டியது தெரியாமலே அந்த செய்கையின் மூலம் தன்னை உரித்துக் காட்டி விட்டார்.

    தலைமை என்பது ஒரு பொறுப்பு. அது ஒரு அதிகார மையம் தருகிற சுகமல்ல... நம்முடைய ஈகோவிற்கு தீனி போடுவதற்கு கிடைத்திருக்கிற பதவி அல்ல... அனைவரையும் அகம் மற்றும் புற சூழலில் காயப்படாமல் கண்ணியமாய் காக்க வேண்டிய பொறுப்பு அது. டீம் மேட்டுகள் அவருக்கு பாய்சன் என்று பட்டப்பெயர் வைத்திருப்பதில் உண்மை இல்லாமல் இல்லை. அவருக்குள் கில்லர் இன்ஸ்டிங்க்ட் இருக்கிறது. சைலன்ட் கில்லிங் எலிமெண்ட்டும் அவரோடு இருக்கிறது. அவன் இவன் படத்தில் அப்பாவி கான்ஸ்டபிளாக நடித்திருப்பார். அதற்கு அவரின் மெலிந்த தேகம் ஏற்புடையதாகவும் இருக்கும். ஆனால், நிஜத்தில் அப்பாவித்தனத்திற்கும், அவருக்கும் காததூரம் என்பதை பார்க்கிறபோது அதிர்வலை ஏற்படாமல் இல்லை.

    ரம்யா அதிர்ந்து பேசாமல் அடக்கி வாசிக்கிறவராய் இருக்கிறார். இந்த பக்கமும் போகாமல், அந்த பக்கமும் போகாமல் மையமாக நகரப் பார்க்கிறார். மும்தாஜோடு முன்பு மமதி கூடுதல் நெருக்கமாய் இருந்தார். இப்போது ரம்யா. மற்றவர்களை பற்றி அதிகம் குறை சொல்லாமலிருப்பது இவரின் பலம். அதேசமயம், எதிலும் பட்டும்படாமல் ஒதுங்கிக்கொள்வதென்பது பலவீனம்.

    மமதி தமிழ்பெண் இப்படியெல்லாம் உடை உடுத்த மாட்டாள் என்று ராகம் பாடினார். ஆண்கள் சொல்கிறதை பெண்கள் செய்தாக வேண்டும் என்கிற டாஸ்கின் தன்மை புரியாமல், ஆண்கள் கை, கால் பிடித்துவிடச்சொன்னால் அதெல்லாம் ஒரு தமிழ்பெண் செய்ய மாட்டாள் என கொடி பிடித்தார். இங்கே தமிழ் பெண் எங்கிருந்து வந்தார். மத்த பெண்கள் என்ன ஆடை உடுத்தத் தெரியாதவர்களா... இல்லை அத்தனை தூரத்திற்கு அநாகருகமானவர்களா… இதென்ன அரசியல்... மமதியின் குறுகிய அரசியல் எடுபடாததாலேயே அவர் கோபப்படாமல் இப்படியாக போட்ட ஊசிகளின் ரியாக்சனாக முதல் ஆளாய் மக்களால் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

    மும்மாஜ் கண்டிப்பானவராகவும், தான் நினைப்பதை மற்றவர்கள் கேட்க வேண்டுமென்கிற அதிகார தொனியும், தான் செய்வதே சரி என்கிற நம்பிக்கையோடும் செயல்படுகிறபடியால், சமையங்களில் பலரோடும் அவருக்கு உரசல் ஏற்படுகிறது. தன்னுடைய தனிப்பட்ட மதநம்பிக்கைகள் குறித்த சலுகைகளை ஒரு குழுவாய் இயங்குகிறபோது எடுத்து வருவதென்பது உசிதமானதல்ல. இப்படி ஒவ்வொருவரும் அவரவர் சௌகர்யங்களுக்கு ஒவ்வொன்றை கேட்க ஆரம்பித்தால், கதை கந்தலாகிவிடும் என்பது அனுபவஸ்தரான மும்தாஜ் அறியாமலா இருப்பார். மனிதம் என்பது தானே மதமாக இருந்திருக்க முடியும்.

    ஆனாலும், தன்னை மேம்படுத்திக் கொண்டிருப்பவர்களில் மும்தாஜ் ஒருவர் என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. அவர் அசிரத்தையாக டாஸ்குகளில் காட்டிய ஒத்துழையாமை மனப்பான்மையை கணிசமாக மாற்றிக்கொண்டிருக்கிறார் என்பது, போலீஸ், திருடன், உணவு விடுதிகாரர்கள் என மூன்று பிரிவாக பிரிந்து விளையாடுகிற விளையாட்டின் மூலம் நிரூபித்துக் காட்யிருக்கிறார்.

    பாலாஜியிடம் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு இருக்கிறதென்பது அவரின் பலம். இருந்தாலும், பொண்ணம்பலத்திடம் இருக்கிற பிற்போக்கு எண்ணங்கள் இவரிடமும் இருக்கவே இருக்கிறது. பெண்கள் குடும்ப ஆண்களை தவிர பிற ஆண்களோடு பேசக்கூடாது... பழகக்கூடாது என்கிற அவருக்குள்ளான ஆணாதிக்க சமூகத்தின் பிற்போக்கான சிந்தனைகள் புரையோடிப் போயிருக்கத் தான் செய்கிறது. அவர் நேர்மையானவராக தன்னை வெளிப்படுத்திக் கொள்ள நினைக்கிறவராய் நைச்சியமாய் தன்னுடைய இருட்டான பகுதிகளை சௌகர்யமாய் தானே தணிக்கை செய்து கொண்டே வெளிப்படுத்துகிறார்.

    அவருக்கு நித்யாவோடான திருமணம் இரண்டாவது திருமணம் என்பதோ, அவர்களுக்கு இடையில் 16 வயது வித்தியாசம் இருக்கிறது என்பதோ, அவருக்கு முதல் திருமணத்தின் மூலம் 16 வயதில் ஒரு மகன் இருக்கிறது என்கிற விவரமோ இங்கே பிரச்னையே இல்லை. அது சட்டப்படி நடந்த நிகழ்வுகளே. அதில் அவரை பற்றி குறை சொல்ல எதுவுமில்லை.

    ஆனால், அவருக்கு ஏற்கனவே முதல் திருமணம் நடந்து அதில் அவருக்கு பதினாறு வயதில் ஒரு ஆண் குழந்தை உண்டு என்பதை எதற்காக மறைக்க வேண்டும். பூசிகா... பூசிகா என்று சொல்கிறவருக்கு, தன்னுடைய முதல் குழந்தை குழந்தை கிடையாதா... அதை ஏன் மறைக்க வேண்டும். அதன் பிறகு தன்னை உண்மையானவன் என்றும் வெளிப்படையானவன் என்றும், மனதில் படுவதை பேசிவிடக் கூடியவன் என்றும் எப்படி சொல்ல முடிகிறது.

    மேலும் அவரின் கோபமும், சுடுசொற்களும் தாளமுடியாதவை. கோபம் என்பது இயலாமையின் வெளிப்பாடு. உண்மையை எதிர்கொள்ள முடியாதபோதும், நாம் நினைத்ததையே மற்றவர்கள் நினைக்காத போது, நாம் சரி என நம்புகிறதை மற்றவர்கள் சரி என நம்பாதபோது, அதை எதிர்கொள்ள அவர்களிடம் போதுமான வலுவில்லாதபோது அது கோபமாக வெளிப்படுகிறது. கடுஞ்சொற்களாக, அநாகரீகமான செயல்பாடாக அது தன் அகோர பசிக்கு தீனி போட்டுக் கொள்ள கோபம் என்கிற குறுக்கு வழியை தேர்வு செய்து கொள்கிறது.

    கோபத்தை பற்றி ஒரு கதை முன்பு படித்தது ஞாபகம் வருகிறது. அதில் மூன்று நண்பர்கள். அதில் ஒருவனுக்கு சுட்டுப்போட்டாலும் கோபமே வராது. அதேபோல படிப்பும் சரியாக வராது. சுமார் தான். இரண்டாமவன் பரவாயில்லை ரகம். மூன்றாமவன் சிறப்பாக படிப்பவன். ஒரு முறை மூன்று பேருமாய் சேர்ந்து கோல்மால் செய்து புராஜக்ட் வொர்க் செய்து தருகிறார்கள். அதில் மூன்றாமவன் மட்டும் மாட்டிக் கொள்கிறான். உடனே தேவையே இல்லாமல் முதலாமவனையும் சேர்த்து மாட்டி விட்டுவிடுகிறான். அப்போதும் முதலாமவன் கோபம் எதுவும் படுவதில்லை. புன்னகையோடே அதை எதிர்கொள்கிறான். கல்லூரி முடிந்து அவர்கள் தங்கள்தங்கள் பாதையில் பயணிக்கிறார்கள். இருபது வருடத்திற்கு பிறகு சந்திக்கிறார்கள். அப்போது இரண்டாமவனும், மூன்றாமவனும் ஒரு பெரிய நிறுவனத்தில் மேனேஜராக இருப்பதாக முதலாமவனிடம் தெரிவித்துவிட்டு, முதலாமவனை நீ என்ன செய்கிறாய் என்று கேட்கிறார்கள். அவர்கள் வேலை செய்கிற நிறுவனம் தன்னுடையது தான் என்கிறான் முதலாமவன். முதலாமவனின் இந்த அக, புற உயர்விற்கான காரணம் கோபப்படத் தெரியாமையே.

    தெளிவற்ற, புரிதலற்ற இன்னொரு நகைச்சுவை பாத்திரம் தான் சென்றாயன். ஒரு விசயம் சட்டென இவருக்கு பிடிபடுவதில்லை. வாழை மட்டையாகவே இருக்கிறார். ஒரு முறை டீம் லீடருக்கான போட்டி இவருக்கும் வைஷ்ணவிக்கும் இடையே நடக்கிறது. அப்போது பிக்பாஸ் உங்கள் இருவரில் யார் அதிகம் பேரை கட்டிப்பிடிக்க வைக்கிறீர்களோ அவர்கள் தான் லீடர். மேலும், இந்த விசயத்தை குழுவின் மற்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமலேயே நிறைவேற்ற வேண்டும் என்றும் சொல்லி அனுப்புகிறார்.

    அதன்படி சென்றாயன் ஒவ்வொருவராக சென்று தான் ஒற்றை ஆளாக காலையில் டாய்லெட், பாத்ரூமை சுத்தம் செய்தேன். பாராட்டு கிடையாதா... வெறும் கை குலுக்கல் தானா என்று கேட்டுகேட்டு ஒருவர் பின் ஒருவர் என பலரையும் சாதுர்யமாய் தன்னை கட்டிப்பிடிக்க வைக்கிறார். ஆனாலும், இந்த விளையாட்டை யூகித்த மகத் அது பற்றி கேட்க, அந்த விளையாட்டின் விதிகளை மீறி விளையாட்டை பற்றி தெரிவித்து, தான் நிறைய பேரை கட்டிப்பிடிக்க வைத்திருந்தாலும், அந்த போட்டியில் இருந்து பரிதாபகரமாக வெளியேற நேர்கிறது.

    மேலும், நித்யாவிடம் அடிக்கடி பாலாஜியோடு சேர்ந்து வாழும்படியும், பாலாஜி அசிங்கமாக திட்டுவதையோ, அடிப்பதையோ, மதுவிற்கு அடிமையாக இருப்பதையோ பெரிய விசயமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இல்லையென்றால் உன் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்கிறார். நித்யா தன்னால் அவரின் குடைச்சலை, சந்தேக புத்தியை தாங்க முடியவில்லை. தான் சம்பாதிக்கிறேன். சொந்த காலில் நிற்கிறேன். என் வாழ்க்கை என் சந்தோஷம் என்று அவர் சொல்கிறபோது, அதெல்லாம் சரிப்படாது என மறுதலிக்கிறார். தெளிவற்ற சென்றாயனின் ஆலோசனையை நிராகரிக்க தெரியாத நித்யாவிடமும் குழப்பம் இல்லாமல் இல்லை. அதனால் தான் அவரால் அந்த உரையாடலில் சென்றாயனை நிறுத்த சொல்லி, கடந்து போக முடியவில்லை.

    இவருக்கு விசயத்தின் ஆழம் புரியாமலேயே பல சமயம் பல விசயங்களில் சொதப்பலாக முடிவெடுக்கிறார். இருந்தாலும், இவருக்குள் இருக்கிற ஒருவிதமான வெள்ளந்திதனம் இவருக்கு பலம்.

    வைஷ்ணவிக்கு ஓட்டை வாய். நாக்கில் சனி. தன்னை நியாயப்படுத்துவதற்காக நிறைய பேசுகிறார். அந்த பேச்சு சுவையற்றதாகவும், மற்றவர்களுக்கு கொட்டாவி வரவழைப்பதாகவும் இருக்கிறது... தான் மேற்கொள்கிற நகாசுகளை அடுத்தவர்கள் பண்ணுகிறபோது அதை நகைச்சுவையாக கையாள சமயங்களில் தெரியாமல் சீரியஸாக எடுத்துக் கொள்கிறார். யோசிக்காமல் பொய் விடுகிறார். புரணி பேசாமல் அவரால் உயிர் வாழ முடியாது என்பதால், ஏற்படுகிற சிக்கல்கள் அவை. அதேசமயம் அவர் பிக்பாஸ் குழுவிற்கு தலைமை பொறுப்பேற்றபோது, முடிந்தவரை ஜனநாயகபூர்வமாகவே செயல்பட்டிருக்கிறார்.

    நித்யாவிடம் குறைந்தபட்ச நேர்மையும், நாகரீகமும் இருந்தாலும், ஒரு சட்டகத்திற்குள் நின்றுகொண்டு நெகிழ்வுதன்மையற்று இயங்கக்கூடிய நபராக இருக்கிறார். எப்போதும் தன்னின் நியாயங்கள் பற்றி மட்டுமே கவலைப்படுகிறவராக இருக்கிறார். பிறருக்கும் அதுபோலான நியாயங்கள் இருக்கும் என்றும், அதன் பக்கம் நின்று யோசித்தால் நமக்கு தென்படுகிற உண்மைகளின் பக்கங்கள் மாறுபடக்கூடும் என்கிற பார்வை அவரிடம் இல்லை. மேலும் பாலாஜியோடு அவருக்கு இருந்த ஊடல் திடீரென காணாமல் போய்விடுகிறது. திடீரென வந்து ஒட்டிக் கொள்கிறது. அதன் பின்புலம் பற்றி நாம் யோசிக்க தேவையில்லை என்றாலும், இப்போதைய சூழ்நிலையில் சாரமற்ற கதாபாத்திரங்களில் ஒன்றாகவே, அதை பார்க்க முடிகிறது.

    சாரிக் டீன்ஏஜ் நபரின் இயல்போடு இருக்கிறார். அவரிடம் ஜோடனை இல்லை. அவருக்கு கலகல பட்டாசாய் ஐஸ்வர்யா இருப்பதை பார்த்ததும் காதல் வந்துவிட்டதில் வியப்பில்லை. அம்மா செல்லமாக வளர்ந்திருப்பவர், இளம் வயதிலேயே தன் மொத்த குடும்பத்தையும் தன் உழைப்பின் மூலம் தாங்கிப்பிடிக்கிற ஐஸ்வர்யாவின் தாய்மை பண்பு பிடித்துப் போயிருப்பதில் வியப்பில்லை. அதே சமயம், இது ஒரு குழு. இது ஒரு விளையாட்டு. இதை விளையாட்டுத்தனமாக மட்டுமே எடுத்துக்கொள்ளாமல், தேவைப்படுகிறபோது உருத்தோடும், உத்வேகத்தோடும் எடுத்துக்கொண்டு முனைப்போடு தன்னின் ஆக்கசக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்கிற எண்ணமில்லாமல், பிக்னிக் வந்திருக்கிற மனநிலையோடே உலவுகிறார். போகப்போக மாற்றங்கள் ஏற்படலாம். புரணி பேசுகிற பண்பு இவரிடம் இல்லை. மென்மையானவராக இருக்கிறார். எளிதில் காதல் வயப்படக்கூடியவராக இருக்கிறார். எளிதில் உடைந்து போய் அழுது விடுகிறார். தெளிவோடும், கம்பீரத்தோடும் காதலை அணுகுகிறவராக அவர், இனி வரும் நாட்களில் தன்னை மேம்படுத்திக் கொள்கிறாரா என்பதை பொறுத்திருந்து அவதானிக்கலாம்.

    மகத் துவக்கத்தில் அரட்டை மன்னனாக மட்டுமே தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தவர், சமீபங்களில் சில கவனிக்கத்தக்க ஏற்றங்களை வெளிப்படுத்துகிறார். யாசிகாவுடன் நெருக்கமாக இருப்பதே தன்னுடைய பிரதான செயல்பாடு என ஆரம்பித்தவருக்கு, ஒரு கட்டத்தில் யாசிகாவே லகான் போட, அவரும் சுதாரித்துக்கொண்டு தன் பாதைக்கு திரும்பிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

    நித்தியா துவக்கத்தில் பாலாஜி மேலிருந்த கோபத்தில் ஒரு முறை காரட்டோடு, வெங்காயம் சேர்த்து சமையல் செய்ய மாட்டேன். கிச்சன் டிப்பார்ட்மெண்ட் இன்சார்ஜ் நான். இதில் யாரும் தலையிட வேண்டியதில்லை என்று ஒரே பிடியாக இருந்ததை மனதில் வைத்துக்கொண்டு, சமயம் கிடைக்கிறபோதெல்லாம் அனைவரிடமும் கமல் உட்பட சிரித்துக்கொண்டே போட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தவர், ஒரு கட்டத்தில், இடைக்கால தலைவர் பொறுப்பை கள்ளன், போலீஸ், உணவு விடுதி விளையாட்டின்போது தானே வழியவந்து எடுத்துக்கொண்டதோடு, அந்த விளையாட்டு தனக்கு சௌகர்யப்படவில்லை என்கிற ஆதங்கத்தோடு ஜனனி ஒதுங்கிக்கொள்ள நினைத்தபோது ஸ்போர்டிவாக பேசி மறுபடி கலந்து கொள்ள செய்தபோது, வழிய வந்து நித்யாவை முதன்முறையாக மகத் பாராட்டியது ஆரோக்கியமானவொரு மாற்றம்.

    சில சமயங்களில் காவல் அதிகாரியாக இருந்தபோது பொறுமையிழந்து யூனிஃபாமை கழற்றி வைத்துவிட்டு, பின் நிதானத்திற்கு வந்து மறுபடி உடையை மாட்டிக்கொண்டு டியூட்டி பார்க்க ஆரம்பித்தபோது, அதை தன்னுடைய தவறு என வெளிப்படையாக ஒத்துக்கொள்ள அவரால் முடிகிறது.

    அந்த விளையாட்டின் போது பாலாஜியோடு ஒரு சமயம் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் மாறிமாறி ஒருமையில் கத்தியபடி கோபத்தின் உச்சிக்கு சென்றார்கள். ஆனாலும், சில நிமிடங்களில் நிதானத்திற்கு வந்த மகத் தானே முதலில் பாலாஜியிடம் போய் மன்னிப்பு கேட்டதோடு, வயதில் பெரியவரான உங்களை ஒருமையில் திட்டியிருக்கக்கூடாது. காலில் வேண்டுமானாலும் விழுகிறேன். மன்னித்து, மறந்து விடுங்கள் என்று கேட்க முடிந்திருக்கிறது. விருமாண்டியில் வருகிற அந்த வசனம் தான் இங்கே நினைவிற்கு வருவதை தடுக்க முடியவில்லை. ‘மன்னிக்க தெரிஞ்சவன் மனுசன்... மன்னிப்பு கேக்க தெரிஞ்சவன் பெரிய மனுசன்’

    கலகல பட்டாசு என்றால் அது ஓவியாவை ஒத்திருக்கிற ஐஸ்வர்யாவும், யாசிகாவும் தான். இரண்டு பேரும் இயற்கையாகவே குணாதிசயங்களில் ஒத்திருப்பவர்கள். இவர்கள் புரணி பேசுவதில்லை. சூழ்நிலைக்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்கிறவர்களாய் இருக்கிறார்கள். ஈகோ பெரிதாக தென்படவில்லை. வளர்ந்த குழந்தைகள். லைட் ஹார்ட்டட் மனிதர்கள். இயல்பாய், குதூகலமாய், கொண்டாட்டமாய் நிகழ் கணங்களை அணுக யத்தனிக்கிறவர்கள்.

    அவர்கள் இருவரும் காலையில் எழுப்பும் பாடல் கேட்டு எழும்போது அந்த முகங்களில் அன்றலரும் தாமரையின் கமகம மலர்ச்சியை, நிரந்தரமாய் ஒட்டியிருக்கிற புன்னகையின் குதூகலிப்பை, ஒரு சேர பார்க்க முடிகிறது. அந்த குதூகலத்தோடு அவர்கள் போடுகிற ஆட்டம், உடனே அதை பார்க்கிறவர்களின் மனதிலும் அப்படியே பச்சக்கென போய் ஒட்டிக்கொள்கிறது.

    எழுப்பும் பாடலின் போது ஐஸ்வர்யா மலர்ச்சியோடு மெலிதான கவிதாபுன்னகையோடு ஒரு குழந்தையின் குதூகலத்தோடு எழுந்திருக்கிற அழகிற்குள் ஆழமான சேதி இருக்கிறது. அது தான் நிகழ் காலத்தில் வாழ்கிற வரம். அது குழந்தைமையின் வரம். குழந்தைமையை தக்க வைத்திருக்கிற மனதினருக்கு அது புரியும். எத்தனை பெரிய துயரம் ஏற்பட்டாலும் அவர்கள் குழந்தையை போல எளிதில் அதை மறந்து கடந்து நிகழ் காலத்திற்கு வெகுவிரைவிலேயே வந்துவிடுவார்கள். அப்படிப்பட்டவர்களின் நனவுலகம், மட்டுமல்ல. கனவுலகமும் மகிழ்வு ததும்புவதாகவே இருக்கும். அப்படி அவர்கள் மகிழ்வோடிருப்பதாலேயே அவர்களின் கனவுகளில் வரும் குதூகல பரவசிப்பே, காலையில் எழும்போது அவர்களின் முகங்களில் உணர்வின் காட்சி படிமங்களை வரைந்து விடுகிறது. அவர்கள் வெளிப்படுத்துகிற குதூகலம் அவர்களை சுற்றியிருக்கிற அன்பான ஆன்மங்களையும் நிறைக்கிற மாயம் செய்கிறது.

    கவலையாக, சிடுசிடுப்பாக, அயர்ச்சியாக, எரிச்சலோடு எழுகிறவர்களையும் இந்த காட்சிகளின் போது பார்க்கலாம். அவர்கள் உடல் சுகத்தை பிரதானமாக நினைத்து, மனசுகத்தை இரண்டாம் தரத்திற்கு தள்ளி வைக்கக்கூடியவர்களாக இருக்க வாய்ப்புண்டு. அவர்களின் பிரதான விசயம் மனதின் மகிழ்ச்சி என்றாகிறபோது தான், முகங்களில் மகிழ்ச்சி ரேகைகளை அவர்கள் எழும்போது பார்க்க முடியும்.

    அப்படியான மகிழ்ச்சி ரேகைகளை எப்போதும் பார்க்க முடிகிறதென்றால் அது ஐஸ்வர்யா டீமிடம் தான் என்பதை சந்தேகமில்லாமல் சொல்லலாம்.

    இவர்களோடு சேர்ந்து எல்லோரையும் தன்னுடைய காயப்படுத்தாத கலாய்ப்புகளால் கலகலப்பாக்குகிற மற்றொருவர் டேனி. அப்பா என்கிற பிம்பம் குறித்த அவரிடமிருக்கிற அபிமானம், மரியாதை அவர் மீதும் ஒருவித மரியாதை கொள்ள வைக்கிறது. எல்லா விசயங்களிலும் தலையிடுகிறார். பாரபட்சமில்லாமல் அந்த பிரச்னைகளை தீர்த்து வைக்க யத்தனிக்கிறார். போட்டிகளில் முழுஈடுபாட்டோடு கலந்து கொள்கிறார்.

    இப்போது தான் இருக்கிற 14 பேரின் ஆதார குணாதிசியங்கள் வெளிப்பட்டிருக்கிறது. இனி அங்கே ஏற்படுகிற சூழ்நிலைகளுக்கேற்ப அவை எப்படியான மாற்றங்களை மேற்கொள்கிற தென்பதை, இனிவரும் பதிவுகளின் வாயிலாக தொடர்ந்து அவதானிக்கலாம்.

    இந்த கட்டுரையின் தொடர்ச்சியை வாராவாரம் அமேசான் டாட் காமிலும் படிக்கலாம்.

    *****

    எபிசோட் 2

    ஆழம் பயணிக்க அனுமதிக்க விடாமல் நமது சமூகத்தில் தோற்றங்களின் மாயை தடை விரிக்கிறது. அதனால் நமதான பார்வை மேம்போக்காக, மேலோட்டமாகவே தங்கி விட நேர்ந்து விடுகிறது.

    அதை பிக்பாஸ் 2 நிகழ்விற்குள் பயணித்து தரிசிப்பதற்கு முன்னால் ஒரு சில உதாரணங்கள் முன்னோட்டமாய் இங்கே பார்க்கலாம். ஆதார் கார்ட் என்று ஒரு மலையாளப்படம் வர இருக்கிறது. இந்த படத்தை கேள்விப்படாதவர்கள் கூட, ப்ரியா வாரியரை கேள்விப்பட்டிருப்பீர்கள். ப்ரியா வாரியரை கேள்விப்படாதவர்கள் கூட அவரின் வகுப்பறை கண் சிமிட்டலோடான அந்த புன்னகையை சிந்தி கிரக்கமாய் பார்க்கிற அந்த பெண்ணை மறந்திருக்க மாட்டீர்கள்.

    அந்த டீசர் ஆதார் கார்ட் படத்தின் டீஸர் தான். அந்த டீஸர் வெளியாகும்வரை அது அதில் நடித்திருந்த ப்ரியா வாரியரை அத்தனை பிரபலமாக்கும் என அவர் உட்பட யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. யாசகம் கேட்டுக்கொண்டு சாலையில் திரிந்திருக்கிற ஒரு இளம்பெண்ணை யானை மாலை இட்டு சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் நொடியில் அரசியாக்குகிற அதிசயம் போலவே அதுவும் நடந்தேறியது. நொடியில் இந்தியாவெங்கும் பிரியா வாரியர் ஒற்றை கண் சிமிட்டலில் அத்தனை பிரபலமாகி விட்டார்.

    அந்த பிரபலம் எந்தவித முனைப்போ, எத்தனிப்போ இல்லாமலே பிரியாவிற்கு அத்தனை புகழை கொண்டு வந்து தட்டிவிட்டது. அதை வைத்துக்கொண்டு அவர் தான் என்ன செய்வார்?? அடுத்த நொடிகளின் ஆச்சர்யம். எந்தவித உழைப்போ, படிப்படியான வளர்ச்சியோ இல்லாமலே கொட்டப்பட்ட புகழ். அந்த புகழ் மேலோட்டமான தோற்றத்தின் செய்கைக்கு கிடைத்த வெகுமானம். தோற்றம் கடந்து ஆன்மம் தொடுகிற ஞானம் அல்ல இது. தோற்றத்திலிருந்து தோற்றத்திற்குள்ளேயே ஒடுங்கிப்போகிற மாய சாகசம்.

    அப்படியாக லெகுவில் கிடைக்கிற புகழை வைத்துக்கொண்டு அவரால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. உண்மையில் அந்த படத்தில் அவர் இரண்டாவது நாயகி தான். படமும் எடுத்து முடிக்கப்பட்டாகிவிட்டிருந்த நிலையில், இப்போது அவரை பிரதானப்படுத்தி புதிய காட்சிகளை சேர்த்து அந்த படத்தை ஒரு வழி பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். படத்தை மட்டுமல்ல ப்ரியா வாரியரின் மனத்தையும் அது படுத்தாமல் விட்டு வைத்துவிடவில்லை.

    அவருக்குள் ஏகப்பட்ட கற்பனைகள் இப்போதே... அதன் விளைவாய் தன் தோற்றத்தை மேலும் வசீகரப்படுத்த திட்டமிட்டு, தன்னுடைய சற்றே பெரிதாய் இருந்த நாசியை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சிறிதாக மாற்றிக் கொள்கிற முயற்சியில் இறங்கிவிட்டார்.

    எது அவரை அப்படி செய்யத் தூண்டுகிறது. இன்னும் ஒரு படம் கூட வரவில்லை. ஆனாலும், மிதமிஞ்சிய அடையாளம், அங்கீகாரம் தருகிற போதையில் ஏற்படும் கிரக்கம் தான் அத்தனைக்கும் காரணம்.

    ஒன்றை மறந்து விடுகிறார்கள். இயல்பில் எல்லாமே செய்து வைத்தது போல இருப்பதல்ல அழகு. அது புறமாக இருந்தாலும் சரி... அகமாக இருந்தாலும் சரி... கான்ட்ராஸ்ட் தான் வசீகரம். எளிமையாக சொல்வதென்றால் இருளின் பின்புலத்தில் தான் பௌர்ணமி நிலவு எடுப்பாய் இருக்கும். அழகு என்பதே அந்த கான்ட்ராஸ்ட் தான். எல்லாமே செதுக்கி வைத்தாற்போல் மாற்றப்பட்டால், பகலில் உதிக்கிற நிலவாய் அடையாளப்படாமலே போய்விடும்.

    சிம்ரனுக்கு ஏன் அவர் வைத்துக்கொண்ட செயற்கை உதட்டு மச்சம் அத்தனை வசீகரமாய் தோன்றியது. பளிச்சென இருக்கிற முகத்தில் ஒரு சின்ன குறையாக அது வருகிறபோதே வசீகரம் எடுப்பாகிறது.

    உண்மையில் பிரியா வாரியரின் வடிவழகிற்கே அவரின் சற்றே பெரிதான நாசி தான் காரணம் என்பது அவர் அறிந்திருக்கவில்லை. காலம் பலவற்றை இழந்த பிறகே அது குறித்து அந்த இழப்பின் அழகை உணரக்கூடிய சக்தியை தருகிறது. இருக்கும்போது உணரப்படாத தரிசனத்தை, அதை இழந்த பிறகே உணரத் தருகிறது.

    இதை அறியாதவர்கள் பலர். மைக்கேல் ஜாக்சன், ஸ்ரீதேவி முதலானவர்கள் இப்படி தான் தங்களை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு தங்களின் அங்கங்களை படாதபாடு படுத்தி அதை சிதைத்தே விட்டவர்கள்.

    இது தனிமனித பிரச்னை அல்ல... இந்த சமூகத்தின் பிரச்னை... இந்த சமூகத்தின் பார்வை மக்களின் மனங்களில் தோற்றத்தை பிரதானப்படுத்தி முன்னெடுக்கிற மாய அரசியலின் நிர்பந்தம். அதற்கு பலியாகிற எண்ணிலடங்காதவர்களில் அவர்களும் மூவர்.

    என்னுடைய கல்லூரி காலங்களில் ஒரு திரைப்பட இயக்குநராக வேண்டும் என நினைக்கவில்லை. ஒரு நடிகராக வேண்டும் என்றே முதலில் தோன்றியது. உடனே முகத்தை திருத்துகிறேன் என்று தொண்டை, பற்களில் பல இந்த வகை சிகிச்சை மேற்கொண்டிருக்கிறன். அப்போது என்னுடைய நண்பரும், அந்த துறை வல்லுநருமான மருத்துவரை சந்தித்தபோது எதற்காக தேவையில்லாமல் இத்தனை சர்ஜரி. இதெல்லாம் உங்களுக்கு தேவையேயில்லையே. உங்கள் பல்வரிசை எப்போதுமே சரியாகத் தானே இருந்திருக்கிறது. எதற்காக இந்த விதர்த்தங்கள் என்று அறிவுறுத்தினார்.

    அதன் பிறகே அது குறித்த ஞானம் பிடிபட்டது. பட்டு தெரிந்து கொண்ட கதை அது. படாமலே தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்காகவே இந்த பதிவு.

    பூக்களை பார்க்கிறதோடு நிற்காமல் வாசத்தின் ஆழத்திற்கு பயணிக்க பழகினால் அதன் பேரழகில் பூவின் வடிவழகு சிறுத்து தோன்ற ஆரம்பித்துவிடும். தோற்றத்திற்காக சதா மெனக்கிடுகிறவர்கள், அகத்திற்காக மெனக்கெட துவங்கி விடுவார்கள்.

    இந்த பிக்பாஸ் குழுவிற்குள் இடம் பெற்றிருக்கிறவர்கள் இப்படியாக புறம் சார்ந்த விசயங்களில் மேலோட்டமாக கவனிப்பை செழுத்தாமல், அகம் சார்ந்து உள்ளே பயணிக்க துவங்கினால் அறியாத பல வெளிச்சங்களை தரிசிக்கலாம் என்பதற்காகவே இதனை இங்கே குறிப்பிடுகிறேன். தோற்றத்திலிருந்து ஆன்மத்திற்குள் பார்வையை ஆழப்படுத்தி பார்க்க பழகுகிறபோது வானத்தையும் தொட்டுவிட முடியும் தான்.

    நேற்றைய நிகழ்வில் திருடர்கள், காவல் அதிகாரிகள், உணவு விடுதியாளர்கள் என பிரித்துக்கொண்டு விளையாடப்பட்ட விளையாட்டில் திருடர்களாக விளையாடிய ஐஸ்வர்யா, யாசிகா, டேனி சிறப்பாக விளையாடியதாக பிக்பாஸ் சொல்லி, அவர்களுக்கு சிறப்பு போனஸ் பாயிண்ட் வழங்கி, அதில் அவர்கள் மட்டுமே சிறப்பு விருந்திற்கான உணவுகள் பெற்றுக் கொள்ள அனுமதித்தார். அதை அவர்கள் வேறு எவரோடும் பங்கிட கூடாது. அப்படி செய்தால் அவர்களுக்கான பாயிண்டுகள் குறையும் என ஒரு உள்குத்தை அதோடு சேர்த்தே தந்தார்.

    Enjoying the preview?
    Page 1 of 1