Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poi Mugam
Poi Mugam
Poi Mugam
Ebook135 pages53 minutes

Poi Mugam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒவ்வொரு வாழ்க்கையிலும் ஒரு ஏமாற்றம் வருகிறது. அந்த ஏமாற்றம் தான் பல பாடங்களை கற்றுத் தருகிறது. இக்கதையிலும் மாலினி என்பவள் ஒரு ஏமாற்றத்திற்கு உள்ளாகிறாள். அந்த ஏமாற்றம் என்ன? அதிலிருந்து மீளுகிறாளா? அந்த ஏமாற்றம் கற்றுத் தந்த பாடம் என்ன? இறுதியில் யாருடைய பொய்முகம் வெளிச்சத்துக்கு வந்தது? என்பதை வாசித்த அறிவோம்.

Languageதமிழ்
Release dateDec 21, 2021
ISBN6580125407758
Poi Mugam

Read more from Vaasanthi

Related to Poi Mugam

Related ebooks

Reviews for Poi Mugam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poi Mugam - Vaasanthi

    https://www.pustaka.co.in

    பொய் முகம்

    Poi Mugam

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    முன்னுரை

    சமீபத்தில் ஒரு பெண் எழுத்தாளர் மாநாட்டில் பங்கேற்க நேர்ந்தது. பத்துக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் எழுதும் அறுபது சொச்சம் பெண் எழுத்தாளர்கள் நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகள் கொண்ட ஆண் ஆதிக்க சமூகம், பெண் படைப்பிலக்கியவாதிகளுக்குப் போடும் மறைமுக அடக்குமுறைகளைப் பற்றிப் பேசினார்கள். அந்த அழுத்தங்களே பெண் எழுத்தாளர்களின் நாவைக் (பேனாவை) கட்டுப்படுத்துவது என்று மனம் நொந்தார்கள். அவர்களது பேச்சில் மிகப் பெரிய குற்றச்சாட்டாக ஒலித்த ஒரு விஷயம் முக்கியமான பரிணாமம் கொண்டதாக நான் உணர்ந்தேன். பாலியல் சம்பந்தமான விஷயங்களை, அதைப்பற்றின பாசாங்குத்தனமில்லாத வர்ணனைகளை பெண்கள் எழுத முனைந்தால் சமூகம் அதை இயல்பானதாக ஏற்றுக் கொள்வதில்லை என்பதை, ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர்களைத் தவிர்த்து மற்ற எல்லோரும் ஒரு மனதாக ஒப்புக்கொண்டார்கள். ஆண், பெண் பால் உறவுகளை எழுத ஆணுக்கு மட்டுமே தகுதியோ உரிமையோ இருப்பதாக சமூகம் நினைப்பதை, பெண்களின் அத்தகைய உறவுகளைப் பற்றின படைப்புகளுக்குக் கிடைக்கும் கண்டனத்திலிருந்து புரிந்து கொள்ளலாம் என்றார்கள். வீட்டிற்குள் கணவன், பெற்றோரின் கோபத்தையும் நிராகரிப்பையும் சந்தித்த பெண்கள் அநேகம். விவாகமான, வெளி உறவு வைத்திருக்கும் ஒரு பெண் கதாபாத்திரத்தைச் சித்தரித்தால் கதாசிரியையே அப்படிப்பட்டவள் என்ற கருத்து சுலபமாகப் பரப்பப்படுகிறது. ஆண் எழுதினால் அவனது எழுத்து அவனுடன், அவனது சொந்த வாழ்வுடன் சம்பந்தப்படுத்தப்படுவதில்லை. பெண் எழுதும் எல்லாமே அவளுடைய அந்தரங்க உணர்வுகளுடன் சம்பந்தப்படுத்தப்படுகிறது. அதனாலேயே அவளுக்கு முகமூடி தேவை. புர்கா தேவை. மூடின முத்து லோகம் பெறும். பெண் என்பவள் புதிராகவே இருக்கும் வரைதான் சமூகத்துக்கு நிம்மதி. இயல்பான ப்ரக்ருதியாக அவளைப் பெண் எழுத்தாளர்கள் வெளிப்படுத்தினால் அது நிர்வாண தரிசனம். சமூகம் அனுமதிக்காது.

    இப்படிப்பட்ட எண்ணங்களின் சரித்திர சமூகவியல் பின்னணியின் ஆராய்ச்சி நமக்குத் தேவையில்லை. உலகமெங்கும் இலக்கிய தளத்தில், தந்தை வழி சமுதாய மதிப்பீடுகளின் தாக்கம் அதிகமுள்ள சமூகங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் மாறுபட்ட அளவுகோல்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் பெண் எழுத்தாளர்கள் இதை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கற்பு நிலையை ஆணிற்கும் பெண்ணிற்கும் பொதுவில் வைப்போம் என்றான் பாரதி. ஏனென்றால் பாலியல் உணர்வுகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்யாசமில்லை. ஆனால் இதை பகிரங்கமாக ஏற்க பெண்களுக்கே சங்கடமேற்படுவது மரபுகளின் சுமையினால்தான். பெண் என்பவள் இயல்பு வாழ்க்கையில் எப்படிப்பட்ட கீழ் நிலையில் இருந்தாலும், தாயாக, சக்தியின் சொரூபமாக சித்தரிக்கப்படும் இலக்கிய மரபில், பெண்ணுக்கும் பாலியல் உணர்வுகள் உண்டு, அவை இயற்கையானவை என்கிற சித்தரிப்பு அவளை பலவீனமானவளாகக் காட்டும் என்றோ, அல்லது சதையும் ரத்தமும் கொண்ட மனுஷியாக வெளிப்படுத்திவிடும் என்ற பயமோ நமது இலக்கியங்களை சாயம் பூசி வருகிறது. அதனாலேயே நமது காவிய நாயகிகள் அசாதாரணமானவர்களாக, கற்பனை வடிவம் மட்டுமே கொண்டவர்களாக இருக்கிறார்கள். பெண்ணின் ஆதார உணர்வுகளை வேண்டுமென்றே புரிந்து கொள்ள மறுக்கும் போக்கே, அவளை மதிக்கத் தெரியாத சமூகமாகப் பரிணமிக்கிறது. ஆணின் சரீர சுகத்துக்கு மட்டுமே பெண் என்பதும், இன விருத்திக்கு மட்டுமே பெண்ணுக்கு உடல் சேர்க்கை அவசியப்படுகிறது என்பதும் கேள்விக்குரியதாகி வெகு காலமாகி விட்டது. ஆனால் இன்னமும் அந்த உணர்வுகளை சொற்களில் விவரிக்கத் தயங்க வைக்கும் மனக் கூச்சத்திலிருந்து விடுவித்துக் கொள்வது என்பது பெண் எழுத்தாளர்கள் சந்திக்கும் உண்மையான சவால்.

    இந்தத் தொகுப்பில் இருக்கும் மூன்று நாவல்கள் - பொய்முகம், நிழலாட்டம், குற்றவாளி ஆகிய மூன்றும் வெவ்வேறு களங்கள் கொண்டவை. ஆனால் மூன்றும் பெண்ணின் பாலியல் உணர்வுகளைப் பற்றியவை. அவற்றின் அழுத்தங்கள், அவை ஏற்படுத்தும் முடிச்சுகள், சமூக எதிர்பார்ப்பின் சுமைகள் பற்றியவை.

    பொய்முகம் வெளிவந்தபோது, வாசகர்கள் தெரிவிக்காத எதிர்ப்பை பல ஆண் எழுத்தாளர்களும் பெண் எழுத்தாளர்களும் கடுமையாகத் தெரிவித்ததைக் கண்டு அன்று அதிர்ச்சி ஏற்பட்டது. ‘குற்றவாளி’ வெளிவந்தபோதும் மரபுச் சிந்தனையிலிருந்து விடுபட முடியாத பலருக்கு அதன் கருத்துக்கள் அதிர்ச்சியைத் தந்தன. எந்தப் பெண்ணிய சித்தாந்தத்தையும் முன் வைக்கும் எண்ணத்துடன் இந்தப் புதினங்களை நான் எழுதவில்லை. நான் பெண் என்ற காரணத்தால் பெண் சார்ந்த விஷயங்கள் என்னைக் கவருகின்றன. ஆழமாகச் சலனப்படுத்துகின்றன. அவற்றிற்கான காரண காரியங்களை பெண்ணிய சிந்தனைகளால் அறிவார்த்தமாக ஆராயும் போது பல புதிய தரிசனங்கள் கிடைப்பது உண்மை. புதிய தரிசனத்தில் புதிய மொழி பிறக்கும், விலங்குகள் அறுபட்டதுபோல. பெண் என்பவள் மாயை இல்லை. அவளைப் போர்த்தியிருக்கும் முகமூடி கிழித்தெறியப்பட வேண்டும் என்று நான் பார்த்துப் பழகிய, நெருக்கமாக உணர்ந்த பெண்களின் கதைகளைப் பாசாங்குத்தனமில்லாமல் சொல்ல நினைத்த முயற்சியே இவை.

    ‘உடற்பசி ஆணுக்குதான் உண்டா என்ன’ என்று கேட்பவள் பொய்முகத்தின் கதாநாயகி மாலினி. திருமணம் செய்து கொள்வதாக நம்பியிருந்த காதலன் கிருஷ்ணன் அவளை ஏமாற்றிவிட்டு வேறொருத்தியைக் கல்யாணம் செய்து கொண்டபோது அவனது துரோகமே மன்னிக்க முடியாததாகத் தோன்றுகிறது. அவனுடன் அவள் உடலுறவு கொண்டிருந்ததை நினைத்து எந்த குற்ற உணர்வும் ஏற்படுவதில்லை. அவன் அவளை உபயோகித்துக் கொண்டான் என்கிற எண்ணமும் இல்லை ‘அவனுடைய சிநேகிதத்தை நான் பூரணமாக அனுபவித்தேன் என்று சொல்வதில் எனக்குக் கூச்சமில்லை’ என்கிறாள். ஆனால் ‘கற்பெனப்படுவது சொல் திறம்பாமை’ என்ற மதிப்பீட்டுக்குத் தீவிரமாகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறாள். அதனாலேயே அவளுடைய திருமணமான தங்கை ரோஹிணி ‘எக்ஸைட்மென்ட்’ வேணும் என்று அலைவதும், ஊருக்கு வந்த கிருஷ்ணனுடன் உடலுறவு கொள்வதும், சந்தர்ப்பத்தின் தாக்குதல் அது என்று லேசாகச் சொல்வதும் அதிர்ச்சி ஏற்படுத்துகிறது. மாலினி நம்பும் மதிப்பீடே ஸ்ரீகாந்திடம் தன்னைப் பற்றின முழு விவரங்களையும் ஒளிவு மறை வில்லாமல் சொல்ல வைக்கிறது. இன்றைய பெண் ஒரு சுயம்பு அல்ல. மாலினி சொல்கிறாள் - பாட்டியின் ‘ஜீன்’ எனக்குள் இருக்கிறது. என்னுடையதை என் பேத்தி சுமப்பாள். இந்த மரபுக் கீற்று ஒரு தொடர் சங்கிலி. பல்லாயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன் ஜனித்த பெண்ணின் பண்புகள் என்னுள் இருக்கின்றன. அவளுடைய சோகமும் சந்தோஷமும் பலமும் பலவீனமும் என்னையும் என் வம்சத்தையும் பிணைக்கின்றன."

    ‘நிழலாட்டம்’ முற்றிலும் மாறுபட்ட கதை. ஆனால் பெண்ணின் பாலியல் உணர்வும் வெளியில் சொல்லமுடியாத மனப்போராட்டமுமே அடித்தளம். குணசீலம் கோவிலில் மன நோயைத் தீர்த்துக் கொள்ள அழைத்துவரப்பட்ட பெண்களின், அவர்களது தாய்மார்களின் முகமூடிகளைக் களைய வைக்கும் ஸ்தலம். தாயின் கையைக் கடிக்கிற மீனாட்சி, தலைவாரி பூ முடித்த அன்னையை வெறுக்கிற இராசாத்தி, எண்ணியவனை கைப்பிடிக்க முடியாமற் போனதால் மதி இழந்த சம்பா, வறுமையை தாங்க முடியாத தந்தையால், பைத்தியம் எனப்படும் பாப்பா, எல்லாரும் ஒருவருக்கொருவரால் புரிந்து கொள்ளப்படாததினால் மனநோய்க்கு ஆளானவர்கள், சத்திரத்தைப் பார்த்துக் கொள்ளும் காமுப் பாட்டிக்கு எல்லாம் புரிகிறது. ஆதாரப் பிரச்னை என்ன என்று அறிய விருப்பமில்லாமல் ‘பெருமாள் சரி செய்து விடுவான்’ என்ற அவர்களது அறிவீனத்தைக் கண்டு கோபம் வருகிறது. ‘பெருமாளுடைய சக்தியை சோதிக்கிற எண்ணத்தோட இங்கே உட்காரக்கூடாது.’ என்று சொல்லும் விவேகம் அவளுக்கு உண்டு. பிரச்னையெல்லாம் சுலபமா தீர்ந்துடணும்னு எல்லாருக்கும் ஆசைடீ

    Enjoying the preview?
    Page 1 of 1