Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tholaithoora Kanavugal
Tholaithoora Kanavugal
Tholaithoora Kanavugal
Ebook191 pages1 hour

Tholaithoora Kanavugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாவம் தர்மேஷ், பம்பாய்க்கு இன்டர்வியூவிற்குப் போனவன், தங்கியிருந்த ஹோட்டல் அறையில், அடுத்த அறைக்கு வந்த தொலைபேசிப் பேச்சைக் கேட்டு விட்டுக் கொதிப்படைகிறான். அவர்களை எதிர்த்துக் கேட்கிறான். குற்றவாளிகளைப் போலீசில் ஒப்படைத்துத் தண்டனைகள் வாங்கித் தரப் போவதாகக் கர்ஜிக்கிறான்.
என்ன ஆயிற்று? இவனே தண்டிக்கப்படுகிறான் - தாக்கப்படுகிறான். பார்ட்னரின் மகன் என்ற காரணத்தால் சண்டாளன் சண்முகம் அவனுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்துப் பைத்தியமாக்கி விடுகிறான். பத்திரமாகத் தர்மேஷை பெற்றோர்களிடமே ஒப்படைத்தும் விடுகிறான்.
உண்மைக் குற்றவாளி உல்லாசமாக உலவிக் கொண்டிருக்க, அப்பாவிகள் எல்லாம் அகப்பட்டுக் கொண்டு, அடி உதைபட்டுச் சித்திரவதைகளை அனுபவிக்கிறார்கள். சட்டத்தால் தண்டிக்க முடியாமல் தப்பித்துக் கொண்டிருந்த சண்முகத்தைக் குரு பலி தீர்த்துப் பகை முடித்துக் கொள்கிறான்.
தர்மேஷ் நல்லவன் - திறமைசாலி - சிந்தூரியின் காதலன். தங்கைகளுக்கும், பாசமுள்ள அண்ணன் - தாய் தந்தைக்கு ஆசைக்கு ஒரு மகன். அவன் கண்ட தொலைதூரத்துக் கனவுகள் - பலித்ததா? பலிக்காமற் போனதா?
Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580132405465
Tholaithoora Kanavugal

Read more from Nc. Mohandoss

Related to Tholaithoora Kanavugal

Related ebooks

Related categories

Reviews for Tholaithoora Kanavugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tholaithoora Kanavugal - NC. Mohandoss

    http://www.pustaka.co.in

    தொலைதூர கனவுகள்

    Tholaithoora Kanavugal

    Author:

    என்.சி. மோகன்தாஸ்

    NC. Mohandoss

    For more books

    http://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    முன்னுரை

    அண்மைக் காலங்களில் சமூக நாவல்களின் ஆதிக்கம் வெகுவாகப் பரவி வருகிறது. குற்றவியல் நாவல்களுக்குக் குறைவேயில்லை. சமூக நீதிகளை நிலைநாட்ட, சாதி - சமயச் சண்டைகளைத் தீர்க்க, நீதியின் கண்கள் நித்திரையில் ஆழ்வதில்லை என்பதை நிரூபிக்கப் பற்பல நாவல்கள் வெளியிடப்படாமலும் இல்லை.

    சாக்கடையில் சந்தனத்தை ஊற்றினால் மணக்கவா செய்யும்? இந்தச் சமுதாயச் சாக்கடையிற் கூடச் சிற்சில காலங்களில், தாமரையும், அல்லியும் மலர்ந்து சற்றே மணம் வீசுவதும் உண்டு.

    இந்தச் சமுதாயத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கும், கொலை, கொள்ளை, சூது, வாது, சுயநல வெறியாட்டங்களைப் பார்த்தாலும், பாராதது போல் இருந்து விடுகிறார்கள். கேட்டாலும், கேட்டறியாதவர்கள் போல் ஒதுங்கிக் கொள்கிறார்கள். காரணம் பயம். பயங்கரவாதப் பாதிப்புக்களை வலுவில் ஏன் ஏற்றுக் கொண்டு இடர்ப்பட வேண்டும் என்ற எண்ணம்.

    யார், யார் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன என்கிற சுயநலம். எல்லோருமே இப்படி இருந்து விட்டால், இந்தச் சமுதாயத்தின் எதிர்காலந்தான் என்ன? சீர்திருத்தம் என்பதெல்லாம் வெறும் வாய்ப் பேச்சுக்கள்தானா? தர்மத்தின் வாழ்வு தன்னைச் சூது கவ்விக் கொண்டு தான் என்றும் இருக்குமா? பசுத்தோல் போர்த்திய புலிகளுக்கு மக்கள் பயந்து, நடுங்கி, அடிமைப்பட்டுத்தான் வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டுமா? துணிவு என்பது இந்தச் சமுதாயத்திலே மக்கள் தொலைத்து விட்ட ஒன்றா?

    இவைகளுக்கெல்லாம் இந்த தொலைதூரத்துக் கனவுகள் - நாவலிலே, ஆசிரியர் திரு. என்.சி. மோகன்தாஸ் அவர்கள் விடைகளைத் தந்திருக்கிறார்.

    விறுவிறுப்பான எளிய தமிழ் நடை. தடைகளைத் தாண்டிக் குதித்தோடிக் கால்வாய்களில் காலடி வைத்து, வயல்களைப் பசுமையாக்கி வழிந்தோடிக் கடலிலே சங்கமமாகும் நதியைப் போலப் பல்வேறு சமூகச் சீர்கேடுகளைப் படம் பிடித்துக் காட்டி, நீட்டி, இறுதியிலே, நீதியை நிலைநாட்டியிருக்கிறார் நாவலாசிரியர்.

    பேராசை பெரும் நஷ்டம் என்பதற்குச் சாட்சியாகத் திருமதி காமாட்சியை உலவ விட்டிருக்கிறார். யானைக்கும் அடி சறுக்கும். சந்தர்ப்பம் சூழ்நிலைகள், சத்தியநாதன் போன்ற உத்தமர்களைக் கூடக் கொள்ளைக் கூட்டத்துக்குத் துணை போக வைத்து விடுகிறது - படுமோசக்காரர்களுக்குப் பங்காளி ஆக்கி விடுகிறது என்பதை இலை மறை காயாக எடுத்துக் காட்டியிருக்கிறார். நல்லவர்களை, வல்லவர்கள் - நயவஞ்சகர்கள் குண்டு வைத்துக் கொலை செய்து விடுவதைச் சிறப்பாகச் சித்தரித்துக் காட்டுகிறார். சண்முகத்தையும், அவரது கூட்டாளிகளையும், பசுத்தோல் போர்த்திய புலிகளாக உலவவிட்டிருக்கிறார்.

    பாவம் தர்மேஷ், பம்பாய்க்கு இன்டர்வியூவிற்குப் போனவன், தங்கியிருந்த ஹோட்டல் அறையில், அடுத்த அறைக்கு வந்த தொலைபேசிப் பேச்சைக் கேட்டு விட்டுக் கொதிப்படைகிறான். அவர்களை எதிர்த்துக் கேட்கிறான். குற்றவாளிகளைப் போலீசில் ஒப்படைத்துத் தண்டனைகள் வாங்கித் தரப் போவதாகக் கர்ஜிக்கிறான்.

    என்ன ஆயிற்று? இவனே தண்டிக்கப்படுகிறான் - தாக்கப்படுகிறான். பார்ட்னரின் மகன் என்ற காரணத்தால் சண்டாளன் சண்முகம் அவனுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்துப் பைத்தியமாக்கி விடுகிறான். பத்திரமாகத் தர்மேஷை பெற்றோர்களிடமே ஒப்படைத்தும் விடுகிறான்.

    உண்மைக் குற்றவாளி உல்லாசமாக உலவிக் கொண்டிருக்க, அப்பாவிகள் எல்லாம் அகப்பட்டுக் கொண்டு, அடி உதைபட்டுச் சித்திரவதைகளை அனுபவிக்கிறார்கள். சட்டத்தால் தண்டிக்க முடியாமல் தப்பித்துக் கொண்டிருந்த சண்முகத்தைக் குரு பலி தீர்த்துப் பகை முடித்துக் கொள்கிறான்.

    தர்மேஷ் நல்லவன் - திறமைசாலி - சிந்தூரியின் காதலன். தங்கைகளுக்கும், பாசமுள்ள அண்ணன் - தாய் தந்தைக்கு ஆசைக்கு ஒரு மகன். அவன் கண்ட தொலைதூரத்துக் கனவுகள் - பலித்ததா? பலிக்காமற் போனதா?

    நாவலைப் படித்து நற்செய்திகளைத் தெரிந்து கொள்ளுங்கள். வாசகர்களில் பற்பல பேர், பிரபலமான நாளிதழான 'தினத்தந்தி'யில் தொடர்கதையாகப் படித்துத் தெரிந்துக் கொண்டிருப்பீர்கள்.

    தெரிந்திருந்தால் என்ன? தேனுக்கு ஒருமுறைதான் இனிப்புண்டு என்று சொல்லி விடவா முடியும். இல்லை தெள்ளு தமிழுக்குச் சுவைகுன்றிப் போய் விட்டது என்று தள்ளிவிடவா முடியும்? தொலை தூரத்துக் கனவுகள் போன்ற நாவல்கள் என்றென்றும் வாசகர்கள் மத்தியில் நிலைத்திருக்க வேண்டும் என்ற நெஞ்சுணர்வால்தான்

    1

    ரேடியோவில் நாதஸ்வரம் முழங்கிக் கொண்டிருந்தது. அதை விட அதிகமாய் காய்கறி வண்டிக்காரன் முழங்கிக் கொண்டு போனான்.

    அந்த வீடு - அடைந்த தெருவிற்குள் இருந்த ஸ்டோர் ஒன்றிற்குள் அடைந்து கிடந்தது. மாடுகள் படுத்திருந்தது போக எஞ்சிய இடங்களில் தெரு முழுக்கச் சாக்கடை! அவற்றில் வாடகையின்றி குடியிருக்கும் கொசுக்கள்!

    பாத்ரூமிற்கு சிலர் குறி வைத்திருக்க, அரசாங்கத்து உத்யோகஸ்தனும் நேர்மையின் வடிவமுமான சத்யநாதன் பைப்படித்துப் பாத்திரங்களை நிரப்பிக் கொண்டிருந்தார்.

    ஈரச் சேலையும், ஈரத் தலையுமாய், கோவிலில் இருந்த குங்குமத்தையெல்லாம் தன் நெற்றியில் சாற்றிக் கொண்டு மந்திரங்களை முணுமுணுத்தபடி காமாட்சி வீட்டிற்குள் பிரவேசித்தாள்.

    அவள் ஐதீகம். ஆனால் பெற்றிருந்ததென்னவோ பொய் தேகம்தான்! இருப்பதை விடுத்துப் பறப்பதைப் பிடிக்கும் குணம். அவளுடைய ஆசைகளுக்கு அளவில்லை.

    எனக்கு விதிச்சது ஒண்டுக் குடித்தனம்தானா...! உங்களுக்குத் துப்பில்லை! என்று தினமும் சத்யநாதனை 'பெண்டு' எடுத்துக் கொண்டிருப்பவள்.

    உள்ளே நுழைந்ததுமே, ஏய்...! பீடைகளா... இன்னுமா தூங்கறீங்க...? எழுந்து போய் ஜலக்கிரீடை பண்ணிட்டு வாங்க!

    எண்ணெயும் முடியும் பிசிறிக் கிடந்த அசுவதியும் பரணியும் பாவாடையும் - சாயம் போன ப்ளவுஸுமாய் எழுந்து தலை சொறிந்தனர்.

    போங்கடி! போய் குளிச்சிட்டு வாங்க!

    பாத்ரூம் காலியில்லைம்மா!

    எப்படி இருக்கும். கொஞ்சன்னாலும் பொறுப்பிருந்தால் தானே! அஞ்சு மணிக்கு எழுந்து குளிச்சிட்டு ஸ்தோத்திரம் சொல்லிட்டுப் படிங்கோன்னு சொன்னால் கேட்டால்தானே...? அப்புறம் எப்படி சரஸ்வதி நாவில் தங்குவாள்? தருமேஷ் எங்கே...?

    அண்ணன் வெளியே போயிருக்கும்மா...

    அவனைப் பார்த்து கத்துக்குங்கடி புத்திசாலி. சுறுசுறுப்பு. நடத்தையிலும் சரி மார்க்கிலும் சரி சமர்த்து! அவனும் உங்களாட்டம் பீடைகளாயிருந்தால் எம்.எஸ்.ஸி. வரை முடிச்சிருப்பானா....? காலேஜில் மூணாவது ரேங்க் வாங்கியிருப்பானா?

    பரணி முகத்தை திருப்பிக் கொண்டு, ஹூம்! வாங்கி என்ன பிரயோஜனம்? வேலை கிடைச்சபாடில்லையே!

    அங்கே என்னடி முனகறே...ம்? கிடைக்கும். அவனோட நல்ல குணத்திற்குக் கிடைக்காமப் போகாது! வளவளன்னு பேசிக்கிட்டிருக்காமல் போய்க் குளிக்கிற வழியைப் பாருங்க! பொழுது விடிஞ்சு பொழுது போனால் இதுங்களோட தினமும் மாரடிக்க வேண்டியிருக்கு!

    பாலைக் காய்ச்சினாள்... பில்டரில் ஏற்கனவே பலமுறை அலசிச் சக்கையாயிருந்த காபித்தூளில் சுடுநீரை விட்டுக் காபி கலந்து. இப்படி வரீங்களா? என்று குரல் கொடுத்தாள்.

    என்னையா...? இதோ வந்துட்டேன்! சத்யநாதன் தண்ணீர்ப் பாத்திரத்தைத் தூக்கி வந்து வைத்தார்.

    போதுமா...?

    போதும், போதும்! காபியை ஊத்திக்கிட்டு, சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்புங்க!

    எங்கே...?

    அந்த சண்முகமும், காண்ட்ராக்டர் கந்தசாமியும் வரசொன்னாங்க!

    எதுக்காம்?

    மறந்துட்டீங்களா...? அவங்களோட தொழிலில் பார்ட்னராக்கிக் கொள்ளத்தான்!

    வேணாண்டி காபியைப் பருகி முகம் கோணினார். அது, தினசரிக் கோணல்!

    ஏன்?

    அவா சரியில்லை. மோசம். அவங்களோட போக்கு எனக்குச் சுத்தமா பிடிக்கலை!

    அந்த உத்தமனோ...

    பேர்தான் உத்தமன்! பண்றதெல்லாம் அயோக்கியத்தனம்! அவங்க மூணு பேருமே பிராடு!

    அப்படின்னு யார் சொன்னது...?

    யார் சொல்லணும்? எனக்குத் தெரியாதா? தினம் தினம் ஆபீஸ்ல பார்க்கறேனே! ஒரு லட்ச ரூபாய் கான்ட்ராக்டுக்கு ஒன்பது லட்சம் எழுதுவாங்க. இடையில் எதிர்ப்படும் ஆபீசருங்களுக்கு ஒண்ணோ ரெண்டோ வெட்டிட்டு பாக்கியை பாக்கெட்டுல போட்டுக்குவாங்க

    உங்களுக்கு எதுவும் தரமாட்டாளா...?

    யாருக்கு வேணும் அந்தப் பணம்? கிட்டே வராதேன்னுருவேன்!

    அதுக்கெல்லாம் யோகம் வேணும்! சாமார்த்தியம் வேணும். அரசாங்கத்துப் பணம்தானே... சாங்ஷன் பண்ணினால் யாருக்கு நஷ்டமாம்!

    நஷ்டம் அரசாங்கத்துக்கு மட்டுமில்லை. எனக்கும் என் மனசாட்சிக்கும் கூட!

    ஆமா! காலம் பூரா இப்படியே பேசிட்டிருங்க. நாங்களும் கோழி கொடாப்பு மாதிரி இந்த வீட்டில்... காமாட்சியின் கண்களில் உடன் கண்ணீர் வழிந்தது.

    மூக்கை உறிஞ்சிக் கொண்டே அவள், என்னவோ பெரிசா மனசாட்சின்னும் நீதி நேர்மைன்னும் பேசறீங்களே...! எந்த ஆபீசுல லஞ்சமில்லாமல் இருக்கு. அரசாங்கத்து சொத்துன்னாவே சாப்பிடறதுக்குன்னு அர்த்தம்! கொஞ்சம் மந்திரி சாப்பிடுவார்... கொஞ்சம் அதிகாரிங்க அப்புறம் மீதியை கான்ட்ராக்ட்காரங்க!

    என்னால் அப்படியெல்லாம் மனசாட்சிக்கு விரோதமாய் வாழ முடியாதுடி! எங்கப்பாவும் அம்மாவும் அப்படி என்னை வளர்க்கலே!

    அம்மா! உங்களை உருப்படாம ஆக்கினதே அந்தக் கிழவிதானே!

    அதான் அடித்து விரட்டி விட்டாயே!

    நானா விரட்டினேன்! வக்கனையாச் சாப்பிட்டுட்டு என்னைப் பத்தி ஸ்டோர் முழுக்கப் போய்க் குற்றம் சொல்லுவா. அதை நான் கேட்டுக் கொண்டிருக்கணுமா... போங்க! இருபத்தி நாலு மணி நேரமும் புருஷனே கதின்னு கிடக்கிற என்னைவிட அவதான் முக்கியம்னா அங்கேயே போயிருங்க! அம்மாவாம் அம்மா! பார்வதியா அவள் பத்திரகாளி! ஏன் நிற்கறீங்க? அடுத்த தெருவில்தானே இருக்காங்க? போங்களேன்!

    இதோ பார் காமாட்சி! நமக்கு எதெது விதிச்சிருக்கோ அதது தான் நிலைக்கும். விதிக்காத எதற்கும் ஆசைப்படக்கூடாது! அது பாவம். அப்படியே ஆசைப்பட்டாலும் அதை அனுபவிக்க முடியாமல் போயிரும்!

    உங்களோட உபதேசத்தை யாரும் இங்கே கேட்கலை. பேசிட்டேயிருக்காமல் அவர்களைப் போய்ப் பாருங்க! வரச் சொன்னாங்களாம்!

    இத்தனை சொல்றேன், புரிஞ்சுக்க மாட்டேங்கறயே, அவங்க மூணு பேரும் அத்தனை நல்லவங்க இல்லை!

    பரவாயில்லை. எனக்கு அது பத்திக் கவலையில்லை. மூணாவது தெருவுல பிளாட் கட்டி விடறாங்களாமே. நமக்கு இனாமாவே ஒண்ணு தரேன்னிருக்காங்க!

    இனாமாவா... ஏன்?... எதுக்கு?

    அதெல்லாம் எனக்குத் தெரிய வேணாம்!

    தெரிஞ்சுக்கணும். அவங்களுக்கு என்னென்னவோ வழியில பணம் வருது. பணத்துக்காக கட்டினவளையேக்கூட கொன்னுப்போட தயங்காதவங்க!

    "இப்படி ஏழ்மையிலும்

    Enjoying the preview?
    Page 1 of 1