Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavugal Virpanaikku
Kanavugal Virpanaikku
Kanavugal Virpanaikku
Ebook267 pages1 hour

Kanavugal Virpanaikku

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆணின் மன விகாரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த நாவல் பெண்மையைப் போற்றுகிறது. படிப்பறிவில்லாத அப்பாவிப் பெண்கள் சமூகத்தில் வஞ்சிக்கப்படுவதுண்டு. ஆனால் படித்து, மருத்துவம் பார்க்கும் ஒரு பெண் சமூகத்திலும், சொந்த குடும்பத்திலும் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறாள் என்பதை அறிந்து வியப்பு! துக்கமெழுந்தது. ஆண் ஆதிக்கம் - நிறைந்த உலகில், சிவா போன்ற கயவனையும், அவன் கையில் கிடைத்த பூமாலையாக ப்ரியா போன்ற பெண்ணையும் படைத்து கொஞ்சம் கூட தொய்வில்லாமல் கதையைப் பின்னி வெற்றி கண்டிருக்கிறார். இடையில் கயவனின் கயமைக்கு ப்ரியாவின் தங்கை அனுஷாவும் பலியாவது - கொடுமை. இந்நிலையில் ப்ரியாவின் குடும்பம் முழுக்க ஒவ்வொருவரால் ஏமாற்றப்பட்டிருக்கிறது. ப்ரியாவும் ஏமாற்றப்படுகிறாள். ப்ரியாவை ஏமாற்றியது யார்? எதற்காக ப்ரியா ஏமாற்றப்பட்டாள்? இறுதியில் சிவா - ப்ரியா இவர்களின் மகன் விக்கியின் நிலை என்ன? நாமும் சில சுவாரஸ்யங்களுடன்...

Languageதமிழ்
Release dateJan 8, 2021
ISBN6580132407895
Kanavugal Virpanaikku

Read more from Nc. Mohandoss

Related to Kanavugal Virpanaikku

Related ebooks

Reviews for Kanavugal Virpanaikku

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavugal Virpanaikku - NC. Mohandoss

    https://www.pustaka.co.in

    கனவுகள் விற்பனைக்கு

    Kanavugal Virpanaikku

    Author:

    என்.சி. மோகன் தாஸ்

    NC. Mohandoss

    For more books

    https://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    மதிப்புரை

    கதை எழுதுவதற்கு ஏதேனும் ஒரு செய்தி அல்லது நிகழ்ச்சி அடிப்படையாயிருக்க வேண்டும் - மனித உணர்ச்சிகள், குறைபாடுகள் முரண்பாடுகள் ஆகியவை கதைக் கருவைத் தோற்றுவிக்கின்றன.

    இருபத்தைந்து அத்தியாயங்கள் கொண்ட கனவுகள் விற்பனைக்கு என்ற நாவலுக்குக் கரு எங்கிருந்து கிடைத்தது என்ற தகவல் நண்பர் திரு. என்.சி. மோகன்தாஸ் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ஆண் ஆதிக்கம் - நிறைந்த உலகில், சிவா போன்ற கயவனையும், அவன் கையில் கிடைத்த பூமாலையாக ப்ரியா போன்ற பெண்ணையும் படைத்து, கொஞ்சம் கூட தொய்வில்லாமல் கதையைப் பின்னி வெற்றி கண்டிருக்கிறார். இடையில் கணவனின் கயமைக்கு ப்ரியாவின் தங்கை அனுஷாவும் பலியாவது - கொடுமை -

    கதையைச் சொல்லும் பாணி சிறப்பாக இருக்கிறது. படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

    திரு. மோகன்தாசின் பார்வை பல நோக்குகளில் சென்று ஆராய்ந்து ஒரு நடுத்தரக் குடும்பம் எப்படியிருக்கும் என்பதை நமக்கு ‘விஷுவலாக’ உணரும் வகையில் படம்பிடித்துக் காட்டியுள்ளது.

    ஆணின் மன விகாரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த நாவல் பெண்மையைப் போற்றுகிறது -

    சல சலவென ஓடும் நதியைப் போல இருக்கும் ஆசிரியரின் சொல் நடை இந்த நாவலின் வெற்றிக்கு ஒரு கூடுதல் சக்தியாகும்.

    கனவுகள் விற்பனைக்கு என்னும் இந்த அருமையான நாவல் விற்பனையில் முதலிடம் பெற இதயம் நிறைந்து வாழ்த்துகிறேன்.

    ஏ. நடராஜன்

    முன்னாள் இயக்குநர்

    சென்னைத் தொலைக்காட்சி

    கதைக்கு முன்...

    ‘வாரமலர்’ இதழில் ‘யார் அந்த நிலவு’ உண்மைத் தொடர் எழுதும்போது பெண் மருத்துவர் ஒருவர், ‘என் வாழ்க்கையிலும் மிக மோசமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அவற்றை வைத்து நாவல் படைக்க முடியுமா - எழுதியனுப்பட்டுமா?’ என்று கேட்டிருந்தார்.

    அனுப்பச் சொல்லியிருந்தேன். பக்கம் பக்கமாய் எழுதியனுப்பியிருந்தார். மலைத்துப் போனேன்.

    படிப்பறிவில்லாத அப்பாவிப் பெண்கள் சமூகத்தில் வஞ்சிக்கப்படுவதுண்டு; ஆனால் படித்து, மருத்துவம் பார்க்கும் ஒரு பெண் சமூகத்திலும், சொந்தக் குடும்பத்திலும் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்து வியப்பு! துக்கமெழுந்தது.

    இதுமாதிரி இன்னும் எத்தனை ஆயிரம் பெண்களோ?

    ஐம்பது வருட சுதந்திரத்தை கொண்டாடுகிறோம். இந்த மாதிரி அபலைகளின் கண்களை எப்போதுதான் திறக்கப் போகிறோமோ தெரியவில்லை.

    வழக்கம் போல ஊரும் பெயர்களும் கற்பனை.

    இந்தக் கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் உலவிக் கொண்டிருப்பதால், உண்மையில் இக்கதைக்கு என்ன முடிவு என்பது தெரியவில்லை.

    ஆனால், ஒரு முடிவு தந்தாக வேண்டுமே! முடிவை மட்டும் இங்கே கற்பனை செய்ய வேண்டியிருக்கிறது.

    அந்தப் பொறுப்பையும், வாய்ப்பையும் வாசகர்களுக்கு கொடுக்க பொறுப்பாசிரியர் சம்மதித்தார்.

    பதினாறு அத்தியாயங்கள் வந்ததும் கதையின் தன்மையும், கேரக்டர்களின் குணாதிசயங்களும் புரிந்து முடிவை எப்படி அமைக்கலாம் என வாசகர்கள் எழுதியனுப்பிய பெரும்பான்மையான கருத்துக்கள் படி கதையின் முடிவு அமைக்கப்பட்டது.

    நன்றி!

    அன்புடன்

    என். சி. மோகன்தாஸ்

    1

    ப்ரியா! அங்க என்னடி பண்ணிண்டு இருக்கே... பைப்புல ஜலம் விடறானான்னு பாரு!

    ப்ளவுஸ் தச்சிண்டு இருக்கேன்... இதோ பாக்கறேம்மா...

    சுப்புலட்சுமி ஜன்னல் வழி தெருவை எட்டிப் பார்க்க அங்கே குடங்கள் அணிவகுத்திருப்பது தெரிந்தது. அக்ரஹார வாசல்களில் வண்ணக் கோலங்கள்! ரேடியோக்களில் ‘பட்டு! உன் சேலை நன்னாருக்கே... எங்கே எடுத்தாய்?’ என்று காலங்கார்த்தாலேயே விளம்பரங்கள்.!

    சுப்புலட்சுமி பொறுமையிழந்து முழங்காலை பிடித்தபடி எழுந்து, வர வர இவளுக்கு பொறுப்பில்லாமப் போச்சு! என்று முனகினாள்.

    அவளுக்கு ஆடிக் காற்றில் பறந்துவிடும் தேகம். உதிர்ந்து போன குடுமி. ஒட்டின கன்னம்!

    இருண்டு, தட்டு முட்டு சாமான்களுடனிருந்த அறைக்குள் எட்டிப் பார்த்து, ப்ளவுஸ்க்கு இப்போ என்னடி அவசரம்? என்று கத்தினாள்.

    முதுகில் துண்டு போர்த்தியிருந்த ப்ரியா. இதோ பார்த்தியா? என்று ப்ளவுஸின் கக்கப் பகுதியில் விரல்விட்டு காட்டி புன்னகைத்தாள்.

    இதைப் போட்டுண்டு போனா அவ்வளோதான்! அப்புறம் தெரு பசங்க துரத்த ஆரம்பிச்சிருவா!

    சுடிதார் போடேன்.

    இருக்கறதே ஒண்ணு! அதுவும் நைஞ்சு போணுமா?

    தண்ணி நின்னு போகும்!

    இதோ ஆச்சு! என்று ஊசியையும், நூலையும் ஓடவிட்டாள்.

    அவ்ளோ அவசரம்னா அனுஷாவை அனுப்பேன்.

    அவ பாவம் - குழந்தேடி!

    ஆமா - குழந்தை! இந்தக் கார்த்திகை வந்தா பதினாலு பிறக்கறது! மணி ஏழாறது. இன்னும் தூங்கறதைப் பாரேன்! என்று ஒரு மூலையில் குறுக்கி படுத்திருந்த தங்கையை பிடித்து உலுக்கி, ஏ... எழுந்திரு! என்றாள் ப்ரியா.

    அவளை ஏண்டி வம்புக்கு இழுக்கறே?...

    அவளைத் தொட்டா உடனே கண் கலங்கிடுமே! உனக்கு அவதானே செல்லப்புத்ரி.

    சீ ஏண்டி இப்படி பிரிச்சு பேசறே? எனக்கு நீயும், அவளும் ஒண்ணுதான்!

    க்கும்! என்று ப்ரியா நூலை பல்லால் கடித்து விடுவிடுத்து ஊசியை நூல்கண்டில் செருகினாள். துண்டை ஒதுக்கிவிட்டு ப்ளவுசைப் போட அது பம்மென்று இறுக்கிற்று.

    அவள் ப்ளஸ் டூ! பதினாறு.

    பதினாறும் பெற்ற வனப்பு! ஈர கேசம் சுதந்திரமாய் அவளது முதுகில் படர்ந்திருந்தது. கழுத்தோரம் முடியிலிருந்து சொட்டின முத்துக்கள் பிரகாசித்தன ப்ரியா அவற்றை ஒற்றி முடியை ஒதுக்கி, ரசம் உதிர்ந்த கண்ணாடியின் முன் நின்று பொட்டு வைத்துக் கொண்டாள். தாவணி! முடியை அள்ளி ரப்பர் பேன்டில் அடக்கி, சமையல் கட்டிற்குப் போய் பிளாஸ்டிக் குடம் எடுத்துக் கொண்டு தெருவில் இறங்கினாள்.

    ***

    "அம்மா! காபி எங்கே?"

    அனுஷா, இடுப்பை விட்டு நழுவியிருந்த பாவாடையை இழுத்து விட்டபடி கேட்டாள்.

    நீ போய் பல் தேய்ச்சுட்டு வா!

    அவள் எழுந்து சோம்பல் முறித்தாள். முகத்தில் வழிந்த எண்ணெய் பிசுக்கை துடைத்துக் கொண்டு, பாயை சுருட்டி பரண் மேல் செருகினாள். அம்மா! என் கண்ணாடி எங்கே?

    டேபில் மேல இருக்கு பார்! முதல்ல கண்ணாடியை எடுத்து மாட்டு!

    தடிமனாயிருந்த மூக்கு கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டு, அம்மா, பேஸ்ட் எங்கே?

    ஏண்டி - ஒனக்கு ஒவ்வொண்ணும் நானே எடுத்து தரணுமா... அங்கேதான் இருக்கும் பார்!

    அவள் பல் விளக்கி, முடியை அலங்கோலமாய் அள்ளி செருகிக் கொண்டு காபி டம்ளருடன் அமர்ந்தபோது வாசலில் நிழல் தெரிந்தது.

    எட்டிப் பார்க்க, நான்காம் வீட்டில் குடியிருக்கும் டீச்சர்!

    உள்ளே வாங்க டீச்சர்! என்று சட்டை பொத்தானை போட்டுக் கொண்டு காபியை மறைத்து வைத்தாள்.

    இவ்ளோ நேரம் தூங்கினாயா... டூ பேட்! உங்கக்கா எங்கே!

    தண்ணிக்குப் போயிருக்கா!

    ஏன் நீ போறதில்லையா...?

    ம்கூம். என்று அனுஷா தோளை குலுக்கினாள். அம்மா விடமாட்டா!

    ஏன்?

    சுப்புலட்சுமி சமையல் கட்டிலிருந்து, இவளுக்கு. குடம் தூக்க முடியறதில்லை. அதனாலதான்!

    அப்போது ப்ரியா குடத்துடன் உள்ளே பிரவேசித்தாள். அவளது இடுப்பும், பாவாடையும் நனைந்திருந்தன. மரியாதை நிமித்தம் தாவணியை இழுத்துவிட்டுக் கொண்டு, நீங்க வந்து ரொம்ப நேரமாச்சா டீச்சர்?

    இல்லே. இப்போதான்! மார்க் ஷீட் வந்திருக்காமே... தெரியாதா உனக்கு?

    ப்ரெண்டு கூட சொன்னா டீச்சர். போகணும்!

    மேலே என்ன படிக்கிறதா உத்தேசம்?

    ப்ரியா தயக்கத்துடன் தாயை பார்த்து டாக்டருக்கு!

    டாக்டராகி?

    உலகத்துல ஆருக்குமே ஹார்ட் அட்டாக் வராம பார்த்துக்கணும்!

    ஏன் ஹார்ட் அட்டாக்குன்னா அத்தனை பயமா?

    ஆமா டீச்சர்! எங்கப்பா அதனாலதான் செத்துப் போனார். அப்படி தானேம்மா?

    அப்படின்னுதான் சொன்னா!

    சொன்னான்னா என்ன அர்த்தம்?

    சுப்புலட்சுமி அதற்கு பதில் சொல்லவில்லை. ப்ரியா காலி குடத்தை வைத்துவிட்டு, ஹார்ட் அட்டாக் இல்லேன்னா அப்புறம் வேறு என்னவாம்?

    ப்ரியா! அதெல்லாம் நோக்கு ஏன்? நாழியறது பார்! நீ டிரஸ் பண்ணிண்டு கிளம்பு!

    ப்ரியா! உனக்கு வேண்டிய அப்ளிகேஷனையெல்லாம் வாங்கி வெச்சிருக்கேன். நாளைக்கு மார்க் ஷீட்டை எடுத்து வா. பில் அப் பண்ணி போட்டிடலாம்!

    ***

    டீச்சர் கிளம்பிப் போனதும், சுப்புலட்சுமி, பூஜை அலமாரியின் முன்னில் அமர்ந்து மாலையுடனிருந்த கணவனின் படத்தை வெறிக்க ஆரம்பித்தாள்.

    ‘ஏண்ணா! எங்களை தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டேளே... இது நியாயமா? எங்களை எத்தனை சொகுசாய் வெச்சிருந்தேள்! எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சம்பாதிச்சேள்! மும்பையில பங்களா! பிசினஸ்! பணம்! காசு! புகழ்! அதெல்லாம் இப்போ வெறும் கனவா தெரியறது. உங்க பொண்ணு கஷ்டம் தெரியாம குதிக்கிறா! நடக்கிற காரியமா? அவளுக்கு எப்படி புரிய வைப்பேன். ஒங்க சம்பாத்தியத்தை யாரெல்லாமோ அனுபவிக்கிறா. கேக்க நாதியில்லே. எங்களால கிட்டே நெருங்க முடியலே. எல்லாம் விதி!

    ‘விதியில்லை - சதி! வஞ்சகம்! நா அப்பாவின்னும், பிழைக்கத் தெரியாதவன்னும் சொல்லி திட்டிண்டேயிருப்பேள்! கடைசியில் நீங்களும் அப்படிதானே! இந்த லோகத்துல சம்பாதிச்சா மாத்திரம் போறாது. அதை பாதுகாத்தும் வெச்சுக்கணும். நீங்க வெக்கலியே! வெச்சுட்டுப் போனதையும் என்னால காப்பாத்திக்க முடியலியே...’

    ***

    "அம்மா!"

    ப்ரியா குதித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடி வந்தாள். அந்த துள்ளல் அவளது ரவிக்கையிலுமிருந்தது. கண்களில் குதூகலம். மகிழ்ச்சி!

    அம்மா! உடனே பாயாசம் வை! டீச்சர் வீட்டுக்குப் போகணும்! என்று மார்க் ஷீட்டை நீட்டினாள். ஹை... ஹை! தொன்னூத்தைஞ்சு பர்சென்ட்ம்மா! இதோ பார்... பயாலஜில சென்ட்டம்! என்று நர்த்தனம் பண்ணினாள்.

    அப்பாட்ட வெச்சு நமஸ்காரம் பண்ணிக்கோடி!

    ***

    பத்திரிகைகளுக்கு ப்ரியாவின் படம் எப்படி கிடைத்ததோ தெரியவில்லை. அன்று மாலை பதிப்பிலேயே வெளியிட்டிருந்தனர். அவள் பயாலஜியில் சென்ட்டம் என்கிற விபரமும், மற்ற பாடங்களில் முதல் மார்க் வாங்கியிருந்தவர்களும் பேப்பரில் அணிவகுத்திருந்தனர்.

    மறுநாளே நிருபர்கள் அவர்கள் வீட்டில் ஆஜர். ப்ரியாவுக்கு ஆச்சரியம். கூச்சம்!

    மாமி! பொண்ணோட சேர்ந்து நில்லுங்க. படம் எடுத்து, பேட்டியும் வெளியிடணும்!

    சுப்புலட்சுமி என்னை விட்டிருங்கோ, என்று ஒதுங்கினாள். ஆனால் அவர்கள் விடுவதாயில்லை.

    ப்ரியாவுக்கு பெருமிதம் பிடிபடவில்லை. எப்படி படித்தாய், உன் லட்சியம் என்ன? என்றெல்லாம் நிருபர்கள் கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டனர்.

    உங்கப்பா பத்தி சொல்ல முடியுமா?

    அத அம்மாட்டதான் கேட்கணும்!

    சுப்புலட்சுமி, வேணாம், அவரை பத்தி எழுத வேணாம்! என்று கண்கலங்கினாள்.

    ஏன் மாமி?

    எழுதி ஆகப்போறதென்னவாம்! போனதெல்லாம் போகட்டும்! அநாவசியமா பழசையெல்லாம் கிளறாதீங்கோ ப்ளீஸ்...

    ***

    மறுநாளே அவர்களது படமும், மேட்டரும் வெளியாயிற்று. அதில் ‘வறுமை படிப்புக்கு எதிரியல்ல!’ என்று தலைப்பிட்டு, ப்ரியா ஆரம்பம் முதல் மெரிட் ஸ்காலர்ஷிப்பில் படித்த விபரங்களை, வாங்கின பரிசுகள், மெடல்கள் பற்றி எழுதியிருந்தனர்.

    அதன் பின்பு தெரு முழுக்க அவளை பெருமையாய் பேசிற்று. பொறாமையில் சிலுப்பிற்று. ‘நீயும்தான் இருக்கியே... தண்டச் சோறு!’ என்று தங்கள் வீட்டு பசங்களை இடித்தது.

    அந்த பத்திரிகை செய்தியால் அவர்களுக்கு நன்மை விளைந்ததோ இல்லையோ - ஆனால், மிகப் பெரிய தீமை ஒன்று நிகழ அது தூண்டுகோலாக அமைந்தது உண்மை.

    ***

    மூன்றாம் நாள். இரவு.

    அக்கம் பக்க வீடுகளில் தனியார் ‘டி.வி’கள் விளம்பரங்களையும், இடையிடையே நிகழ்ச்சிகளையும் விளம்பிக்கொண்டிருக்க இவர்கள் வீட்டில் பழுப்பு நிற பல்பு! கொசுக்களின் ரீங்காரம்!

    அனுஷா! என் பேனாவை எடுத்தியா நீ? என்று ப்ரியா கேட்க, ஆமா எடுத்தேன்!

    எதுக்குடி எடுத்தே? யாரை கேட்டுட்டு? என்று ப்ரியா அவளது காதைப் பிடித்து திருக, அவள் சிணுங்க, மரியாதையாய் கொடுத்திரு! இல்லேன்னா பொட்டைகண்ணு மாதிரி, பொட்டை காதுமாக்கிருவேன்!

    அம்மா! இவளைப் பாரு. என்னை பொட்டைக் கண்ணுங்கிறா!

    சனியன்களா... உங்க சண்டையை ஆரம்பிச்சுட்டீங்களா...? என்று சுப்புலட்சுமி ஸ்கேலை ஓங்கினபோது,

    வாசலில் அத்தே! என்கிற குரல்.

    அவள் எட்டிப் பார்த்து ஆரு...? என்று புருவத்தை உயர்த்தினாள்.

    நா சிவாத்தே. சிவராஜ்!

    எந்த சிவா?

    அத்தே! நிஜமாலுமே என்னை தெரியலியா இல்லே, மனசுல வைராக்கியம் வெச்சண்டு அப்படி கேட்கறேளா? நா உங்க அண்ணா பையன்!

    உடன் அவளது முகத்தில் இறுக்கம். கண்களில் அனலுடன், ஏம்ப்பா - அன்னைக்கு பண்ணினதெல்லாம் பத்தாதுன்னு திரும்பவும் எங்களை அழிக்க வந்துட்டேளா? போ வெளியே!

    அத்தே! அன்னைக்கு ஏதோ ஒரு உந்துதல்ல அப்படி நடந்துண்டாலும், அப்புறமா அம்மா அதை நினைச்சு நினைச்சு ரொம்பவே வருத்தப்பட்டா! உங்களை சந்திச்சு மன்னிப்பு கேட்கவும் தயாரா இருந்தா. ஆனா, நீங்கதான் எடம் தரலே. இப்போ இந்த பத்திரிகையை பார்த்ததும்தான் உங்க விலாசமே தெரிஞ்சது. அத்தே! நடந்ததுக்கெல்லாம் பரிகாரம் தேடத்தான் நா வந்திருக்கேன்!

    எங்களுக்கு எந்த பரிகாரமும் வேணாம்! நீ மொதல்ல வெளியே போ! ஏய்... ப்ரியா என்ன இங்கே வேடிக்கை? உள்ளே போ! என்று சுப்புலட்சுமி கதவை அடித்து சாத்தினாள்.

    ***

    அன்று ராத்திரி முழுக்க ப்ரியாவுக்கு தூக்கமில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று நல்ல மார்க் வாங்கிவிட்ட ஆர்ப்பரிப்பு. துக்கம் மட்டுமில்லை, சந்தோஷம் அதிகமாகிவிட்டாலும் தூக்கம் பிரச்னைதான்!

    அடுத்தது அந்த சிவா!

    சாது சந்தினியான அம்மாவின் அந்த ஆவேசத்தை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. அந்த ஆவேசத்திற்கு காரணம் அறிந்தால்தான் தூக்கம் வரும் போல் இருந்தது.

    மெல்ல அவளிடம் போய், யாரும்மா அந்த சிவா?

    உனக்கு ஏன் அதெல்லாம்? அவனோட பேச்சை எடுக்காதே! என்று சுப்பு எரிந்து விழுந்தாள்.

    சரி, அவனை விட்டிடலாம். அப்பா விஷயத்தை பேசலாமில்லே? அவரோட சாவுக்கு ஹார்ட் அட்டாக் காரணமில்லேன்னு சொன்னாயே... அது நிஜமா?

    ஆமாம்.

    அப்புறம்?

    கொலை!

    2

    மொட்டு மலராகும் – அது

    மணத்திற்கா இல்லை - மரணத்திற்கா?

    வீசும் தென்றல் பேசுவது

    வாசமா இல்லை பாசமா?

    புயலில் சிதைவது

    வீடா இல்லை

    Enjoying the preview?
    Page 1 of 1