Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vanathai Yaar Vella Koodum
Vanathai Yaar Vella Koodum
Vanathai Yaar Vella Koodum
Ebook237 pages1 hour

Vanathai Yaar Vella Koodum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கார்த்திகா என்ற பெண் தன் தாலிக்கொடி பறிபோனாலும் பராவாயில்லை. தன்னை போன்ற அபலைகளுக்கும் ஆதரவில்லாத நல்லவர்களையும், ஒன்றும் அறியாத அப்பாவி மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கின்றாள். அவ்வாறு பிறருக்கு உதவ வேண்டும் என்ற நிலையில் மற்றவர்களுக்கு கார்த்திகாவால் உதவ முடிந்ததா? தன் கணவனை, காவல்துறையில் ஒப்படைத்து விட்டுதான் மறுவேலை என வீரசபதம் எடுக்கும் கார்த்திகாவின் சபதம் நிறைவேறினதா? இதில் யார் லட்சியம் வெல்லக் கூடும்? காண்போம்

Languageதமிழ்
Release dateSep 28, 2021
ISBN6580132407020
Vanathai Yaar Vella Koodum

Read more from Nc. Mohandoss

Related to Vanathai Yaar Vella Koodum

Related ebooks

Related categories

Reviews for Vanathai Yaar Vella Koodum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vanathai Yaar Vella Koodum - NC. Mohandoss

    https://www.pustaka.co.in

    வானத்தை யார் வெல்லக்கூடும்

    Vanathai Yaar Vella Koodum

    Author:

    என்.சி. மோகன் தாஸ்

    NC. Mohandoss

    For more books

    https://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    வாழ்த்துவது

    எஸ்.வி. சேகர்

    எனக்கு ஆவி கதைகளின்மேல் தனி ஈடுபாடு உண்டு. அவ்வகைகளில் வார இதழ்களில் படித்த சில கதைகளை வைத்து என்.சி. மோகன்தாஸின்மேல் கவனம் திரும்பிற்று.

    அப்புறம் அவரை உன்னிப்பாக கவனிக்கும்போது ஆவி மட்டுமில்லை . க்ரைம், சமூகம், காதல், நகைச்சுவை என எல்லாவற்றிலும் முத்திரை பதித்து வருவதை உணர முடிந்தது.

    சிறுகதைகள் மட்டுமில்லை, நாவல்கள், தொடர்கதைகள் என மோகன்தாஸ் முன்னேறி வருகிறார்.

    இவரது வளர்ச்சி குப்பென பற்றிக்கொள்ளும் நெருப்பாய் இல்லாமல் ஒட்டகம் கூடாரத்திற்குள் நுழைகிற மாதிரி (அப்படின்னா என்ன அர்த்தமாம்...? விளக்கத்திற்கு நேரில் தொடர்பு கொள்ளவும்) சீராக, அதே சமயம் ஸ்டெடியாகவும் இருக்கிறது.

    புத்தக சாம்ராஜ்யத்திலும் என்.சி. மோகன்தாஸ் கோலாட்சிபெற எனது வாழ்த்துக்கள்!

    எஸ்.வி. சேகர்

    அனுராதா ரமணன் வாழ்த்துகிறார்

    என்.சி. மோகன்தாஸின் ஆரம்பகால எழுத்துக்களே என்னை மிகவும் ஈர்த்திருக்கின்றன.

    நான் ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த பத்திரிகையில் அப்போதே இவரது சிறுகதைகளும், தொடரும் வெளியிட்டிருக்கிறேன்.

    க்ரைம் கதைகள் பளிச்சென வெளியே தெரிந்தாலும்கூட எனக்கென்னவோ இவரது கேரள பின்னணி கதைகள்தான் ரொம்பவும் பிடித்திருக்கின்றன. பிடிக்கின்றன.

    இவரது நடை மிக அழகாகவும் சுலபமாகவும் படிப்பதிற்கு சுவாரஸ்யமாகவும் இருக்கின்றது. அனாவசிய வர்ணனை இல்லாத எளிய நடை!

    மோகன்தாஸ், தன் எழுத்தில் இன்னமும்... இன்னமும்கூட பல உத்திகளை கையாண்டு கொண்டிருக்கிறார். அப்படி புது புது உத்திகளை தேடிப் போய்க் கொண்டிருக்காமல் வெகு சீக்கிரத்தில் தனக்கு என்று ஒரு பாணியை வகுத்துக்கொண்டு அதே பாணியில் எழுத வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

    இவர் வகுத்துக்கொள்வார், வாசகர்களின் இதயத்தில் நிச்சயம் இடம்பிடிப்பார் என்கிற நம்பிக்கை எனக்குண்டு. அதற்காக வாழ்த்துகிறேன். பிரார்த்திக்கிறேன்.

    அன்புடன்

    அனுராதாரமணன்

    1

    மாமரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் கார்த்திகா ஆடிக்கொண்டிருந்தாள். சங்கிலிகள் சரக் சரக்கென்று கிளையை தேய்த்தன. ஊஞ்சல் உயரே எழும்பும்போது பஞ்சு பறப்பதாய் உணர்ந்தாள். தாழும்போது அது இன்னும் அதிகமாயிற்று.

    அவள் ஸ்கர்ட் அணிந்திருந்தாள். ஆண்பிள்ளைபோல காலர் வைத்த சட்டையில் பதினாறு வயது பொம்மிற்று. முதுகில் பின்னப்படாமல் தோகை!

    கார்த்திகாவிற்கு அந்த வீட்டை ரொம்பவும் பிடித்திருந்தது. பிரமிப்பாகவும்! காம்பவுண்டு, சாமரம் வீசும் தென்னை, பாக்கு என எல்லாமே பிரமிப்பு! பலா மரத்தில் கட்டி கட்டியாய் காய்கள் ஒட்டிக்கொண்டிருந்தன.

    முற்றத்தில் துளசி தளம். நீண்டு பரந்து கிடந்த மணல் பரப்பில் பாய்விரிக்கப்பட்டு பழுப்பாகவும் கொட்டை கொட்டையாகவும் நெல் காய்ந்தது.

    காதுக்கெட்டுகிற தூரத்தில் பாரதபுழா!

    மலைகளிலிருந்து வழித்தெடுத்த மூலிகை ‘வெள்ளம்’ சுற்றுபுறத்தை பசுமையாய் வைத்திருந்தது. எந்நேரமும் சுகந்தம்தரும் காற்று! ஜில்லென நிழல்!

    கேரளம் அவளுக்கு புதுசு. புது அனுபவமும் கூட!

    ஊஞ்சல் மேலேப் போக - போக, இன்னும் கொஞ்சம், என்று மனசும் பாய்ந்தது. உற்சாகம் ஊறிற்று. அது உற்சாகமா, கிளுகிளுப்பா இல்லை ஆரவாரமா என இனம் பிரிக்க முடியாத சந்தோஷ பிரளயம்!

    கார்த்தி... கார்த்தி!

    வாசலிலிருந்து மீனாட்சியம்மாவின் குரல் கேட்க, சடன் பிரேக்கில் பிரளயத்திற்கு அணைபோட்டு, இதோ... வந்துட்டேம்மா! என்று குதித்துத் தளும்பிக் கொண்டு ஓடினாள்.

    மீனாட்சி வெள்ளை முண்டும் ப்ளவுஸும் தரித்து ஈரக் கூந்தலின் நுனியில் துணுக்காய் முடிந்திருந்தாள். நெற்றியில் சந்தனக் குறி! கழுத்துக்கு கீழ் ஒரே சைஸில் தடியாயிருந்தாள். இடுப்பில் டன்லப்! கையில் பூஜை தூக்கு!

    நான்தான் இந்த வீட்டு ஓனர் என்கிற மதர்ப்பு உருவத்தில் தெரிந்தாலும்கூட உள்ளத்தில் மென்மையானவள்.

    கார்த்திகா மூச்சை விழுங்கிக்கொண்டு, என்னாம்மே?

    நாங்க பகவதி தரிசனத்துக்கு போறோம். வீட்டைப் பாத்துக்கோ!

    சரிம்மே.

    நிங்ஙள் வருனில்லே...? என்று ஹாலில் அமர்ந்து மாத்ருபூமி பேப்பரில் இருந்தவரை சற்று அதட்ட, வழுக்கையும், வளமான வயிறுமாயிருந்த புஷ்பாங்க நாயர் இதோ... வந்துட்டேன்! என்று ஓடிவந்தார்.

    காபி குடிச்சுட்டு போகலாமே!

    வேண்டாம். வந்து குடிக்காம்! என்று நடந்தாள். பால்காரன் வந்தால் பாக்கி கேளு!

    சரிம்மா

    அப்போது பின்பக்கமிருந்து பசு ‘அம்மே...’ என அழைக்க, (மலையாள பசு!) கேட்டை தாழிட்டுவிட்டு குதித்துக்கொண்டு ஓடினாள்.

    கன்றுகுட்டியை கட்டிக்கொண்டு உங்கம்மா கூப்பிடுது போடா கண்ணு! அது வாலை தூக்கிக்கொண்டு துள்ளி தாவிற்று, புல்வெளியில் ஓடிற்று. கம்பி வேலிவரை போய் அவளை ஜெயித்துவிட்ட மாதிரி திரும்பிப் பார்த்தது. சிலிர்த்தது.

    ஏய்... நில்லு நில்லு! என்று கயிற்றுடன் பாய்ந்து பிடித்து, மாட்டிக் கொண்டாயா... வா! மரியாதையாய் வந்துவிடு என்று இழுத்துபோய் தாயிடம் கட்டி இனி நீயாச்சு உன் கன்றாச்சு! சும்மா அம்மா... அம்மான்னு கத்தக்கூடாது! எனக்கு அடுப்பில் வேலையிருக்கு ஆமா!

    வைக்கோல் அள்ளி போட்டுவிட்டு கிணற்றில் நீர் இறைத்து கைகால்களை கழுவிக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.

    புஷ்பாங்க நாயர் சேலத்தில் ரயில்வே சூப்ரண்டன்டாக வேலைபார்த்து, ரிடையரானவர். பூர்வீக தரவாட்டில் அமைதியாய் வாழும் ஆசையுடன் ஊர் திரும்பி ஒரு மாதம்தான் ஆகியிருந்தது.

    கார்த்திகா அனாதை. அவர்களின் வேலைக்காரி! வேலைக்காரி என்பதைவிட சொந்தமில்லாத மகள் என்று கூடச்சொல்லலாம். அவள்மேல் ஏற்பட்டிருந்த அனுதாபத்தினாலோ இல்லை அபிமானத்தினாலோ நீயும் எங்க கூட வந்திரேன் என்று அழைத்து வந்திருந்தனர்.

    அனாதைக்கு எந்த ஊர் என்றால் என்ன? வேலைக்காரிக்கு எங்கு போனாலும் வேலை... வேலை!

    ஆனாலும்கூட இவர்களின்மேல் அளவு கடந்த ஈடுபாடும் பக்தியும் அவளுக்கு ஏற்பட்டிருந்தது. இவர்கள் மற்ற எஜமானர்கள் போலில்லை. வித்யாசமானவர்கள்,

    அவளுக்கு படிப்பில் ஆர்வமிருந்தாலும்கூட ஏழிற்குமேல் தாண்ட முடியவில்லை. தாயை சீக்கு கொண்டுபோக, படிப்பிற்கு வயிறு தடை போட்டது. தாய் வேலை பார்த்த வீட்டிலேயே கடைசியில் ஒண்ட வேண்டியதாயிற்று.

    அங்கு தாக்கு பிடிக்க முடியாமல் வேறு வீடு! அப்புறமும் வேறு வீடு! பல இடம் பார்த்து, பரிதவித்து கடைசியில்தான் இவர்களை வந்தடைந்தாள்.

    வேலைக்காரி என்றாலே தீண்டக்கூடாத வஸ்து! மனித பிறவியே இல்லை -சுதந்திரம் கிடையாது. அடக்கி ஆள்கை, பத்து பாத்திரம்! பழைய சோறு! கிழிந்த துணி!

    அம்மா! எனக்கு வேறு சட்டை இருந்தா கொடுங்க

    எதுக்குடி...!

    இது கிழிஞ்சு போச்சு!

    நீ செஞ்சு கிழிப்பதற்கு இது போதும்! என்று இடிபடுவாள். மறுநாளே, எஜமானன் அந்த கிழிந்த பகுதியால் வசீகரிக்கப்பட்டு ஜொள் விடுவதைப் பார்த்ததும் அவசரமாய் புதுத்துணி மேலே வந்துவிழும்.

    முதல்ல இதைப் போய் உடுத்திகிட்டு வா! இனிமே உடம்பு வெளியே தெரியக்கூடாது, ஆமா!

    ஒரே நாளில் எஜமானிக்கு என்ன நேர்ந்தது - எப்படி மனது மாறிற்று என்று அவளுக்குத் தெரியாது. புரியாது. புரியாத வயசு!

    இளம் தம்பதிகளுக்கு எப்போது காதல் வரும், காமம் எழும் எனச் சொல்ல முடியாது. அதற்கு நேரம் காலம் கிடையாது. இடம் பொருள் கிடையாது. ஹால், பாத்ரூம், கிட்சன்! பெட்ரூம் என்று ஒன்று எதற்காக இருக்கிறதோ தெரியவில்லை.

    வீட்டிற்குள் நுழையும் போதெல்லாம் சங்கடம். அவர்களின் சில்மிஷங்களைக் காணக்கூடாது. - கண்டாலும் காணாத பாவம் காட்டவேண்டும்.

    புருஷன்களுக்கு விவஸ்தை கிடையாது. பெண்டாட்டி எத்தனை அழகென்றாலும்கூட திருட்டுப் பார்வை! தரை துடைக்கும்போது கண்களால் கொத்தல்! நைஸாய் இடித்துப்பார்த்தல். (படிவாளா இவள்?)

    சோத்துக்கு இல்லாதவள்தானே, எதிர்க்கமாட்டாள் - பணிவாள் என்கிற அகங்காரம்! கார்த்திகா பணியாமல் போகவே அபாண்டமாய் திருட்டுப்பட்டம் கட்டப்பட்டு வெளியேற்றப்பட்ட அனுபவமும் அவளுக்குண்டு.

    வேலைக்காரி ஒரு ஜந்து. அவளுக்கு ஆசாபாசங்கள் கூடாது. மரக்கட்டை!

    சாகக்கிடக்கும் கிழம் முதல் நேற்று பிறந்த குழந்தைவரை எல்லோருமே எஜமானர்கள். எல்லோருமே அதிகாரம்பண்ணுவர்.

    சதா வாரிக் கொட்டவேண்டும். கழுவிவிட வேண்டும். பெற்றவள் தொடமாட்டாள். சொந்த ரத்தத்தின் கழிவை தொடக்கூடாது கழுவக்கூடாது என்றால் அப்புறம் எதற்கு பெற்றுக்கொள்ள வேண்டும்?

    வேலையெல்லாம் முடித்து அலுப்புடனும் அயர்வுடனும் சாப்பிடும்போது, ‘கார்த்திகா! பாப்பா உக்காந்துட்டா. அள்ளி போட்டிறேன்!' என்பார்கள்.

    ‘சாப்பிட்டதும் போட்டிர்ரேம்மா!’

    ‘அள்ளி போட்டுட்டு அப்புறமா சாப்பிடு. இல்லாட்டி தரையெல்லாம் ஈஸி வெச்சிருவா!’

    அதன் பிறகு சாப்பிடத் தோன்றாது. அனாதையாக்கி விட்டுப்போன தன் தாய் - தந்தையின்மேல் கோபம் எழும். எனக்கெல்லாம் எந்த வேலைக்காரி அள்ளிக் கொட்டினாள்?

    வேறு சந்தர்ப்பத்தில் குழந்தைக்கு ஊட்டும்போது வெறுப்பாய் வரும். சாப்பிட்டது போதும். அப்புறம் நான் சாப்பிடும் போது நேரம் காலம் தெரியாமல் போவாய் என்று தடுக்கத் தோன்றும்.

    வேண்டாம். சாப்பிடட்டும். குழந்தை பாவம்! பெரிசுகளின் நடத்தைக்கு இது என்ன செய்யும்?

    கார்த்திகா ஸ்டவ்வைபற்ற வைத்து ‘புட்டு’ பாத்திரத்தை ஏற்றி வைத்தாள். துவாரம் துவாரமாயிருந்த குழாயில் அரிசிமாவையும் தேங்காய் துருவலையும் செலுத்தி பாத்திரத்தில் பொருத்தினாள்.

    ஆரம்பத்தில் கேரள ஆகாரங்கள் அவளுக்கு சிரிப்பைத் தந்தன. புட்டு, அப்பம்! புழுங்கின நேந்திரம் பழம்! தொட்டுக்கொள்ள கடலையும் அப்பளமும் ராத்திரியில் கஞ்சியும் கப்பை கிழங்கும்! என்ன காம்பினேஷனோ தெரியவில்லை! மாட்டு இறைச்சி! உவ்வே!

    முதல் வாரத்திலேயே மலையாளமும், புட்டு-அப்பமும் தோதுபடாமல் ஓடிவிடலாமா என்றுகூட நினைத்தாள். ஆனால் மீனாட்சியம்மாவையும் புஷ்பாங்க நாயரையும் பிரிந்து போகமுடியாமல் அவர்களின் அன்பும் பாசமும் கட்டிப்போட்டு வைத்திருந்தது.

    அப்புறம் மெல்ல மெல்ல தன் நாக்கை அவற்றிற்கு பழக்கப்படுத்திக் கொண்டாள்.

    வாசலில் சைக்கிள் வண்டியின் சப்தம் கேட்க இதோ... வந்துட்டேன்! என்று ஏற்கனவே கறந்து வைத்திருந்த பாலை தூக்கிக்கொண்டு ஓடினாள்.

    பால்காரர்கள் எல்லோருமே ஒரே ஜாதிதான் போலிருக்கிறது. ஒரே பாணி முண்டாசு. பனியன்! முறுகலாய் மீசை! கண்களில் குறும்பு!

    எத்தரை லிட்டர் உண்டு...?

    நீயே அளந்து பார்த்துக்கொள்! - என்று பாத்திரத்தை நீட்டினாள்.

    அவன் பாலையும் அவளது மார்பையும் ஒரே சமயத்தில் அளந்து.

    ஆறு

    அம்மா பாக்கி வாங்கி வைக்கச் சொன்னாங்க!

    பாக்கி... நாளை! அவன் சொல்லிக் கொண்டே பறந்து போனான்.

    அடுப்பிற்குவந்து ஆவி கிளப்பின குழாயை இறக்கி ‘ஸ்ஸ்ஸ்ஆ’ என்று விரலை சூப்பினாள். குச்சி எடுத்து புட்டை தள்ளி பாத்திரத்தில் உருட்டினாள். மின்னலடிக்கும் வெண்மையில் புட்டு கமகமத்தது.

    மறுபடியும் அரிசிமாவை நிறைத்துவிட்டு, குக்கரிலிருந்து நேந்திரம் பழத்தை சொதசொதப்புடன் வெளியேற்றினபோது தெருவில் ஆட்டோவின் ஓசை கேட்டது. அது நெருங்கி நெருங்கி, கேட்டை ணங்கென்று திறந்து கொண்டு உள்ளே பிரவேசித்து அடங்கிப்போக, யாராய் இருக்கும் என்று யோசித்தபடி ஸ்கர்ட்டை சரிபண்ணிக்கொண்டு ஜன்னல் வழி ஊடுருவினாள்.

    முப்பது வயது இளைஞன் ஒருவன் ஆட்டோவை அனுப்பிவிட்டு சக்கரம் பொருத்தியிருந்த தளர்வான பெரிய பேக்கை தோளில் சார்த்திக் கொண்டு உள்ளே பிரவேசிக்க அவளுக்கு படபடப்பாய் இருந்தது.

    அவனை முன்பின் பரிச்சயமில்லை. இதற்கு முன்பு பார்த்ததுகூட இல்லை. அவனுடைய மீசையும் பின்கழுத்தை ஆக்ரமித்திருந்த முடியும் பயமுறுத்தின.

    உள்ளே நுழைந்தவன் திருதிருவென விழித்தபடி முடியை படரவிட்டு பம்மி நிற்கும் கார்த்திகாவை பார்த்ததும் ஒரு கணம் தடுமாறி, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்னகைத்தான்.

    அந்த புன்னகையே அவளுக்கு பிடிக்கவில்லை. அதில் விஷமம் கலந்த மாதிரி உணர்ந்தாள். இவன் நல்லவனில்லை

    மோசக்காரன் - ஜாக்கிரதை ஜாக்கிரதை! என்று உள் மனது எச்சரித்தது.

    ஆன்டி இல்லை...?

    பகவதி கோவிலுக்கு!

    சரி, ஒரு கிளாஸ் காபி எடுக்கு! என்று அலட்சியமாய் சொல்லிவிட்டு அறை ஒன்றிற்குள் நுழைந்து டிரஸ் மாற்றினான். அவள் அப்படியே நிற்க, சீக்கிரம் போய் காபி போட்டு வா!

    அந்த அதிகாரம் அவளுக்கு எரிச்சலைதந்தது. இவன் யாரோ எவரோ! வந்தவுடனேயே அதட்டுகிறான். பார்வையும் சரியில்லை. யாரென்று எப்படி கேட்பது? ஆரம்பத்திலேயே அவன் பேரில் நல்ல அபிப்ராயம் எழவில்லை. யோசனையுடன் டிகாஷனை ஃபில்டர் பண்ணிக்

    Enjoying the preview?
    Page 1 of 1