Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyirizhai
Uyirizhai
Uyirizhai
Ebook166 pages1 hour

Uyirizhai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திராவிட இயக்கப் பாரம்பரியத்தில் ஊறிய எனது தந்தை பாவாடை, தாயார் பாக்கியம், என்னை, என் தங்கைகளையெல்லாம் சாதி, மத மூடநம்பிக்கைகளை யெல்லாம் கடந்து வழி காட்டினார்.

கல்லூரியில் படித்த சமயம் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றிய பா. கல்யாணி விழுப்புரத்தில் கலை இலக்கிய அமைப்பு ஒன்றைத் தொடங்கினார். ஒரு ஞாயிற்றுக்கிழமை, இரண்டாம் கூட்டத்தில் பேராசிரியர்கள் கல்யாணி, பழமலய் மற்றும் பாலு. ஞானசூரியன், இரவிகார்த்திகேயன், அன்புசிவம், சொக்கலிங்கம், நான் என ஒரு பத்துப் பேர் கூடி ஒரு கலை இலக்கிய அமைப்பை ஏற்படுத்தினோம்.

புரட்சிகர அரசியலின் பால் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட கல்யாணியின் முன்முயற்சியோடு ‘நெம்புகோல் மக்கள் கலை இலக்கியப் பண்பாட்டு இயக்கம்' என ஆரம்பித்தோம். வாராவாரம் கூடிக் கதை, கவிதை, கட்டுரை எழுதி வந்தவர்களைப் படிக்கச் செய்தும், பத்திரிகைகளில் வந்தவற்றைப் பற்றிய கருத்துக்கணிப்பும் விமர்சனமுமாகக் கூட்டம் நடைபெறும்.

'நெம்புகோல்' என்னும் கையெழுத்துப் பிரதியில் முதலில் ஒரு சில கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். அரசு, அரசும் புரட்சியும், வால்கா முதல் கங்கை வரை, என்ன செய்ய வேண்டும்? குடும்பம் தனிச் சொத்து... இப்படித் தொடங்கி கி.ரா. பிரபஞ்சன், சூரியதீபன், நாஞ்சில் நாடன், இன்குலாப், அப்துல்ரகுமான், வைரமுத்து, மேத்தா. இந்திரன், மீரா, வண்ணநிலவன், வண்ணதாசன், பிரம்மராஜன், செ. கணேசலிங்கன், செ.யோகநாதன், கோ.கேசவன், அ.மார்க்ஸ்... என நீண்ட பட்டியலில் புத்தகங்கள் தேடிப் படிக்க ஆரம்பித்தேன்.

பா. செயப்பிரகாசத்தின் 'காடு’ தொகுப்பை படித்துப் பல இரவுகள் தூங்க முடியவில்லை. அதுமுதல் சிறுகதை எழுத நினைத்து ஒன்றிரண்டு எழுதுவதும், 'நெம்புகோல்' அமைப்பில் வைத்துப் படிப்பதும், பின் சரியில்லாதவற்றை உடனடியாக கிழித்துப் போடுவதும் வழக்கமாக இருந்தது.

ஒடுக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி குறிப்பாக நான் சார்ந்த அடித்தட்டு மக்கள் வாழ்க்கையின் அவலங்களைக் கதையின் கருப்பொருளாக வைத்து மே 81-ல் எழுதத் தொடங்கினேன். எங்கள் தெருக்குடிசைகள் எரிந்தபோது, உடைமைகளோடு எனது பல படைப்புகளும் எரிந்து போயின.

நானும் நண்பனும் ஒரு தற்காலிக வேலை கேட்டுப் பொறியாளரைப் பார்க்க வாடகை சைக்கிளில் போய் வந்து அறுபது பைசாவில் பதினைந்து பைசா கடன் சொல்லிவிட்டு வந்த அவல நிலையை வைத்துச் 'சங்கடம்' என்ற கதையை எழுதினேன். அதைக் கணையாழிக்கு அனுப்பி, ஜூன் 84-ல் அது வெளிவந்ததும் எனக்கு மட்டுமல்ல. 'நெம்பு கோல்’ நண்பர்களுக்கும் சந்தோசம். இரண்டாவது கதையும் ஒரு விதவைப் பிரசவம் என்ற தலைப்பில் மே 85 கணையாழியில் வந்ததும் இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.

ஆசிரியர் பொறுப்பேற்று ‘மனஓசை'யை அக்.83 மாணவர் சிறப்பிதழாக வெளிக்கொண்டு வந்தேன். 'தோழமை' என்றொரு கலை இலக்கிய இதழை ஆசிரியர் குழுவிலிருந்து ஆறு இதழ்கள் கொண்டு வந்தேன்.

அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் தலித் இலக்கியக் கருத்தாக்கங்கள் உருவான நேரத்தில் எனது முதல் சிறுகதைத் தொகுப்பு 'நந்தனார் தெரு' (டிச.91) வெளிவந்தபோது பலரின் கவனத்தைத் திசை திருப்பியதை என்னுடைய எழுத்தின் முதல் வெற்றியாகக் கருதினேன்.

புரட்சிகர வட்டாரமல்லாது தி.க.சி. வே.சபாநாயகம் போன்ற பலர் முற்போக்கு வட்டாரங்களிலிருந்து விமர்சனமும் கருத்துகளும் தெரிவித்தார்கள். 'வதைபடும் வாழ்வு' (டிச.94), 'தாய் மண்' (டிச.96) என அடுத்தடுத்துப் புத்தகங்கள் வெளிவந்தன.

'தினமணி சுட’ரில் (6.8.94) 'நம்பிக்கை நட்சத்திரம்' என நான் அறிமுகப்படுத்தப்பட்டேன். 'தலித் இலக்கியம்: புதிதாய் ஒரு குரல்' என்னும் தலைப்பிட்ட 31.12.94 தினமணி சுடரில் ‘சோறு' என்ற எனது கதை வெளிவந்தது. 'இந்தியாடுடே', 'புதிய பார்வை', 'அரங்கேற்றம்', 'செம்மலர்', 'தாமரை' என்று பல இதழ்களில் பரவலாக எழுதினேன்.

நூற்றுக்கு மேற்பட்ட கதைகள் எழுதியிருந்தாலும், பரிசுகள், விருதுகள் எனப் பெற்றிருந்தாலும், சாகித்ய அகாதெமி சென்னையில் கதை வாசிக்கப்பட்டு தொகுக்கப்பட்டாலும், சாகித்ய அகாதெமியால் (புது தில்லி) கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டாலும், ‘இன்தாம்' இன்டர்நெட் வரை கதை வெளிவந்தாலும் ஆரம்பகால அந்தச் 'சங்கடம்' சிறுகதையில் நிச அனுபவம் கதையாகி நின்றதை மறக்க முடியவில்லை

பேராசியர் கல்யாணியால் ஊக்கம் பெற்றவர்கள் நிறையபேர் உண்டு. அவரது அரசியல், கலை இலக்கிய மாணவனாக உருப்பெற்று அவரது கனவெனும் விதை துளிர்த்துச் செழித்து மரமாகிப் பூத்துக் காய்த்துக் கனியும் சூழலில் அந்தச் 'சங்கடம் 'மட்டுமல்ல, எந்தச் சங்கடத்தையும் இலக்கியரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டும் என்கிற லட்சியமே தினமும் என்முன் தெரிகிறது.

1.10.2000-தினமணி கதிர்
- விழி. பா. இதயவேந்தன்

Languageதமிழ்
Release dateOct 4, 2019
ISBN6580127404620
Uyirizhai

Read more from Vizhi Pa. Idhayaventhan

Related to Uyirizhai

Related ebooks

Reviews for Uyirizhai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyirizhai - Vizhi Pa. Idhayaventhan

    http://www.pustaka.co.in

    உயிரிழை

    (சிறுகதைகள்)

    Uyirizhai

    (Short Stories)

    Author:

    விழி பா. இதயவேந்தன்

    Vizhi Pa. Idhayaventhan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vizhi-pa-idhayaventhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசை

    நகராத வாழ்வு

    மணல் வண்டி

    தனிமையிலான அவள்

    விழுது

    இன்னொரு மனசு

    உயிரிழை

    நிறம்

    உள்ளீடற்ற உலகம்

    கறியும் சோறும்

    சொல்

    ஆச்சி

    சந்தேகம்

    தாத்தா செய்த துரோகம்

    துன்ப வெள்ளம்

    கருவாகி

    கதையாகி நின்று

    களம் அமைத்துக் கொடுத்த

    என்

    சனங்களுக்கு...

    *****

    கல்யாணி கையால் போட்ட விதை...

    திராவிட இயக்கப் பாரம்பரியத்தில் ஊறிய எனது தந்தை பாவாடை, தாயார் பாக்கியம், என்னை, என் தங்கைகளையெல்லாம் சாதி, மத மூடநம்பிக்கைகளை யெல்லாம் கடந்து வழி காட்டினார்.

    கல்லூரியில் படித்த சமயம் (1980-1983) இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றிய பா. கல்யாணி விழுப்புரத்தில் கலை இலக்கிய அமைப்பு ஒன்றைத் தொடங்கினார். ஒரு ஞாயிற்றுக்கிழமை, இரண்டாம் கூட்டத்தில் (பிப்.1381) பேராசிரியர்கள் கல்யாணி, பழமலய் மற்றும் பாலு. ஞானசூரியன், இரவிகார்த்திகேயன், அன்புசிவம், சொக்கலிங்கம், நான் என ஒரு பத்துப் பேர் கூடி ஒரு கலை இலக்கிய அமைப்பை ஏற்படுத்தினோம்.

    முற்போக்குப் புரட்சிகர அரசியல், கலை இலக்கியங்கள் சூடு பிடித்த நேரம். புரட்சிகர அரசியலின் பால் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட கல்யாணியின் முன்முயற்சியோடு ‘நெம்புகோல் மக்கள் கலை இலக்கியப் பண்பாட்டு இயக்கம்' என ஆரம்பித்தோம். மாதம் ஒரு முறை, மாதம் இரு முறை. அப்புறம் வாராவாரம் கூடிக் கதை, கவிதை, கட்டுரை எழுதி வந்தவர்களைப் படிக்கச் செய்தும், பத்திரிகைகளில் வந்தவற்றைப் பற்றிய கருத்துக்கணிப்பும் விமர்சனமுமாகக் கூட்டம் நடைபெறும். மு.ராமசாமியிடம் நிச நாடகப் பயிற்சியும் பெற்றோம்.

    விழி, அன்பன் என்ற பெயரில் நண்பர் அன்புசிவம் நிறையக் கவிதைகள் எழுதுவார். அதன் பாதிப்பாக நானும் கவிதைகள் எழுதத் தொடங்கி, 'செம்புனல் தெறிக்கட்டும்...’ எனக் கவிதைத் தொகுப்பு எழுதி வெளியிட மனதின்றி வைத்துள்ளேன்.

    'நெம்புகோல்' என்னும் கையெழுத்துப் பிரதியில் முதலில் ஒரு சில கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். அரசு, அரசும் புரட்சியும், வால்கா முதல் கங்கை வரை, என்ன செய்ய வேண்டும்? குடும்பம் தனிச் சொத்து... இப்படித் தொடங்கி கி.ரா. பிரபஞ்சன், சூரியதீபன், நாஞ்சில் நாடன், இன்குலாப், அப்துல்ரகுமான், வைரமுத்து, மேத்தா. இந்திரன், மீரா, வண்ணநிலவன், வண்ணதாசன், பிரம்மராஜன், செ. கணேசலிங்கன், செ.யோகநாதன், கோ.கேசவன், அ.மார்க்ஸ்... என நீண்ட பட்டியலில் புத்தகங்கள் தேடிப் படிக்க ஆரம்பித்தேன்.

    பா. செயப்பிரகாசத்தின் 'காடு’ தொகுப்பை படித்துப் பல இரவுகள் தூங்க முடியவில்லை. அதுமுதல் சிறுகதை எழுத நினைத்து ஒன்றிரண்டு எழுதுவதும், 'நெம்புகோல்' அமைப்பில் வைத்துப் படிப்பதும், பின் சரியில்லாதவற்றை உடனடியாக கிழித்துப் போடுவதும் வழக்கமாக இருந்தது.

    ஒடுக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி குறிப்பாக நான் சார்ந்த அடித்தட்டு மக்கள் வாழ்க்கையின் அவலங்களைக் கதையின் கருப்பொருளாக வைத்து மே 81-ல் எழுதத் தொடங்கினேன். எங்கள் தெருக்குடிசைகள் எரிந்தபோது, உடைமைகளோடு எனது பல படைப்புகளும் எரிந்து போயின.

    நானும் நண்பனும் ஒரு தற்காலிக வேலை கேட்டுப் பொறியாளரைப் பார்க்க வாடகை சைக்கிளில் போய் வந்து அறுபது பைசாவில் பதினைந்து பைசா கடன் சொல்லிவிட்டு வந்த அவல நிலையை வைத்துச் 'சங்கடம்' என்ற கதையை எழுதினேன். அதைக் கணையாழிக்கு அனுப்பி, ஜூன் 84-ல் அது வெளிவந்ததும் எனக்கு மட்டுமல்ல. 'நெம்பு கோல்’ நண்பர்களுக்கும் சந்தோசம். இரண்டாவது கதையும் ஒரு விதவைப் பிரசவம் என்ற தலைப்பில் மே 85 கணையாழியில் வந்ததும் இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.

    எழுத்தின் மீது பிடிப்பும் நம்பிக்கையும் ஏற்பட்ட போது தொடர்ந்து பல சிற்றிதழ்களைத் தேடிப் பிடித்தேன். சில இதழ்களில் எழுதினேன். ஆசிரியர் பொறுப்பேற்று ‘மனஓசை'யை அக்.83 மாணவர் சிறப்பிதழாக வெளிக்கொண்டு வந்தேன். 'தோழமை' என்றொரு கலை இலக்கிய இதழை ஆசிரியர் குழுவிலிருந்து ஆறு இதழ்கள் கொண்டு வந்தேன்.

    அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் தலித் இலக்கியக் கருத்தாக்கங்கள் உருவான நேரத்தில் எனது முதல் சிறுகதைத் தொகுப்பு 'நந்தனார் தெரு' (டிச.91) வெளிவந்தபோது பலரின் கவனத்தைத் திசை திருப்பியதை என்னுடைய எழுத்தின் முதல் வெற்றியாகக் கருதினேன்.

    புரட்சிகர வட்டாரமல்லாது தி.க.சி. வே.சபாநாயகம் போன்ற பலர் முற்போக்கு வட்டாரங்களிலிருந்து விமர்சனமும் கருத்துகளும் தெரிவித்தார்கள். 'வதைபடும் வாழ்வு' (டிச.94), 'தாய் மண்' (டிச.96) என அடுத்தடுத்துப் புத்தகங்கள் வெளிவந்தன.

    'தினமணி சுட’ரில் (6.8.94) 'நம்பிக்கை நட்சத்திரம்' என நான் அறிமுகப்படுத்தப்பட்டேன். 'தலித் இலக்கியம்: புதிதாய் ஒரு குரல்' என்னும் தலைப்பிட்ட 31.12.94 தினமணி சுடரில் ‘சோறு' என்ற எனது கதை வெளிவந்தது. 'இந்தியாடுடே', 'புதிய பார்வை', 'அரங்கேற்றம்', 'செம்மலர்', 'தாமரை' என்று பல இதழ்களில் பரவலாக எழுதினேன்.

    நூற்றுக்கு மேற்பட்ட கதைகள் எழுதியிருந்தாலும், பரிசுகள், விருதுகள் எனப் பெற்றிருந்தாலும், சாகித்ய அகாதெமி சென்னையில் கதை வாசிக்கப்பட்டு தொகுக்கப்பட்டாலும், சாகித்ய அகாதெமியால் (புது தில்லி) கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டாலும், ‘இன்தாம்' இன்டர்நெட் வரை கதை வெளிவந்தாலும் ஆரம்பகால அந்தச் 'சங்கடம்' சிறுகதையில் நிச அனுபவம் கதையாகி நின்றதை மறக்க முடியவில்லை

    பேராசியர் கல்யாணியால் ஊக்கம் பெற்றவர்கள் நிறையபேர் உண்டு. அவரது அரசியல், கலை இலக்கிய மாணவனாக உருப்பெற்று அவரது கனவெனும் விதை துளிர்த்துச் செழித்து மரமாகிப் பூத்துக் காய்த்துக் கனியும் சூழலில் அந்தச் 'சங்கடம் 'மட்டுமல்ல, எந்தச் சங்கடத்தையும் இலக்கியரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டும் என்கிற லட்சியமே தினமும் என்முன் தெரிகிறது.

    1.10.2000-தினமணி கதிர்

    - விழி. பா. இதயவேந்தன்

    *****

    "... என்னை உருவாக்கியவர்களில் ஒருவர் பேராசிரியர் நா. வானமாமலை; புடம் போட்டத் தங்கம்!

    அவரைப் போலவே, தங்களுக்குக் கிடைத்திருப்பவர், பேராசிரியர் பா. கல்யாணி...!"

    - தி. க. சிவசங்கரன்

    *****

    ஆசை

    சூரியன் சாய்ந்து வானம் அரசல் புரசலாக வெளிறிக் கிடந்தது. பொழுது ஓய்ந்து முடிந்தது. தெருவில் மின் கம்பங்கள் மூன்றும் அசையாமல் நின்றிருந்தது. நடுக்கம்பத்தில் விளக்கு பளிச் பளிச்சென்று மின்னிக் கொண்டிருந்தது. மற்ற இரண்டு கம்பங்களில் நமக்கேன் வம்பு என்று விளக்குகள் எரியவே இல்லை.

    சுப்பிரமணி வீடு தாண்டிதான் முனுசாமி வீடு இருந்தது. முனுசாமிக்கு அடுத்து சுந்தர்ராஜீ, காமாட்சி, பலராமன் வீடு என்று சிறு சிறு குடிசையாக ஒட்டிக் கிடந்தது. முனுசாமி வீட்டு வாசலில் மினுக்கும் அந்த மின்கம்பத்தின் அருகில் பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருந்தனர் குழந்தைகள்.

    அம்மாவையும் காணவில்லை. அப்பாவும் இன்னும் வரவில்லை. ஊருக்குள் வாங்கி வந்த அழுக்குத் துணிகள் மூட்டையாக திண்ணை மேல் கிடந்தது. கட்டம் போட்ட போர்வைக்குள் அழுக்குத் துணிகள் இறுகிக் கிடந்தன. முடிச்சுக்கிடையில் ஒன்றிரண்டு துணிகள் நீட்டிக் கொண்டிருந்தன.

    மற்றொன்றில் துவைத்த துணிகள் தேய்ப்பதற்காக மூட்டைக் கட்டி மூலையில் கிடந்தது. காலையில் எழுந்ததும் அப்பா சித்தேரிக்கு அடிக்கு மூட்டைகளுடன் கிளம்பி விடுவார். அம்மாவும் பின்னாடியே தூக்குவாளியில் நீராகாரத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவாள்.

    இரவுக் கஞ்சியைக் காலையில் குடித்தது போக, நீராகாரம் மட்டும் அம்மா, அப்பாவிற்குப் போகும். அருகிலுள்ள சித்தேரியில் தான் துணி துவைப்பார்கள். சித்தேரி காய்ந்தால் கடும் வெயிலில் கால் கடுக்க நடப்பார்கள். சாலாமேடு ஏரி பெரிய ஏரி. அப்பாவிற்குப் பின்னால் அம்மாவும் பெரியவள் புவனாவும் ஆளுக்கொரு மூட்டையாக சுமந்து செல்வார்கள்.

    துணிமூட்டையின் கனம் பின்னால் இழுக்க கூன் விழுந்த அப்பா வளைந்து தாங்கியபடி முன்னே செல்வார். கண்கள் நிமிர்ந்து பார்க்க முடியாதபடி மண்பாதையை வெறித்துச் செல்லும். மேல் சட்டையில்லாமல் வெயில் சுரீரென மேனரியில் பட்டுத் தெறிக்கும். முடி எண்ணெயின்றி காய்ந்து காற்றில் பறக்கும். அம்மா சும்மாவாக முடியை இழுத்துக் கொண்டையாக சுருட்டிக் கொள்வாள்.

    சாலாமேடு ஏரியும் வற்றிவிட்டால் அப்புறம் ரெட்டியார் வீட்டு மோட்டார் கொட்டாயில்தான் துணி துவைப்பார்கள். சலசலவென நீர் ஓடும் அந்த வாய்க்கால் பாதையில் இடையே வழி மரித்து வரப்பிற்கு மேல் ஒரு பாறாங்கல்லைப் போட்டு வைத்திருந்தார்கள். அம்மாவும் அப்பாவும் மாறி மாறி அடித்து துவைத்துப் போடுவார்கள்.

    காயவைப்பதும் காய்ந்தபின் மடித்து வைப்பதும்தான் புவனாவிற்கு வேலை. எந்தத் துணியை எப்படி மடித்து வைக்க வேண்டும் என்பது அப்பா புவனாவிற்கு சிறுவயது முதற்

    Enjoying the preview?
    Page 1 of 1